Skip to main content

எரிமலைகள் வெடிக்கட்டும் பதிவுத் தொடர் II



















(நான் இணைத்திருக்கும் இந்த புகைப்படம் பற்றி நான் எதுவும் எழுதவில்லை.....! உங்களின் மனசாட்சிகள் ஒரு கட்டுரை எழுதும் தனித்தனியே...இது பற்றி உங்களுக்குள்)



இதுவரை

பாகம் I

இனி....

ரத்தம் கொதிக்கத்தான் செய்கிறது நண்பர்களே.... நம்மை சுற்றி நிகழும் நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தாலே! ஒவ்வொரு பதிவிட்ட பிறகும்... நான் சர்வ நிச்சயமாய் வாக்குகளின் எண்ணிக்கையினை நோக்குவதில்லை...ஆனால் எத்தனை பின்னூட்டங்கள் இட்டுள்ளார்கள் என்பதுதான் எனது முழு கவனத்திலிருக்கும்..ஏன் தெரியுமா?

கட்டுரையின் போக்கு...சரியா அல்லது தவறா அல்லது கட்டுரையில் இல்லாத வெளிப்படுத்த வேண்டிய கருத்துக்கள் இருக்கின்றனவா என்றுணர சரியான பின்னூட்டங்கள் உதவும்....! ஒரு லட்சம் பேர் என்னுடைய வலைப்பூவினுக்குள் நுழைந்து சென்றிருக்கிறார்கள் என்பதை விட...5 பேர் சிந்திக்க வைக்கும் வகையில் பின்னூட்டமிட்டுள்ளார்கள் என்பது ஆரோக்கியமான விசயம்...! நமது கருத்துக்களை தெளிவாக மக்களின் முன் நமது தமிழ்ச்சமுதாயத்தின் முன் வைக்க வேண்டும்...வலுவான இரண்டு கருத்துக்கள்....ஒரு லட்சம் ஓட்டுக்களுக்கு சமம்....என்பது எனது...பார்வை நோக்கு!


உலகத்தில் எந்த மனிதனுக்கு பட்டாலும் வலி...வலிதான் அப்படி இருக்கையில் ஏன் தமிழனுக்கு ஏற்பட்டதற்கு மட்டும் நீங்கள் ஏன் முக்கித்துவம் கொடுக்கிறீர்கள்? இது சமீபத்தில் ஒரு நண்பர் என்னிடம் கேட்ட கேள்வி....

எங்கே மனிதம் நசுக்கப்படுகிறதோ.. எங்கே உரிமைகள் பறிக்கப்படுகிறதோ அது எல்லாம் வன்மையாக எதிர்க்கப்படவேண்டிய ஒன்று...என்பதை மறுப்பதற்கில்லை....! அக்னி பக்கத்து வீட்டில் எரிந்தால் அதன் வெம்மை நமக்கு கூடுதலாக இருக்கும்...அதுவே பக்கத்து ஊரில் இருந்தால்.... அக்னி அணைக்கப்பட வேண்டும் என்ற நமது கருத்தில் மாறுதல் இல்லாவிட்டாலும் வெம்மை நமக்கு தெரிவதில்லை அல்லது உணர்வதில்லை....அது போலத்தான் ஈழத்தில் நடந்த கொடுமையின் வெம்மை நமக்கு கூடுதல்.....அதுமட்டுமல்ல....


எல்லா படைப்பினங்களையும் நாம் உற்று நோக்கினால் அவற்றில் இனம் என்று ஒன்று இருப்பது எல்லோருக்கும் தெரியும்...மனிதனிலும் இனம் எனப்படுவது யாராலும் மாற்றமுடியாத ஒன்று. ஒரு நாள் அதிகாலையில் எழுந்து... 24 மணி நேரத்துக்குள் எந்த நாட்டின் குடியுரிமையை வேண்டுமானாலும் பெற்றுக் கொண்டு அந்த நாட்டின் குடிமகனாக மாறிக்கொள்ளலாம்....எந்த மதத்தினை வேண்டுமானலும் தழுவி அந்த மதத்தினராக மாறிக் கொள்ளலாம்..., எந்த மொழியை வேண்டுமானாலும் கற்று அந்த மொழியில் புலமை பெற்றுக் கொள்ளலாம்.....ஆனால் நமது இனம் என்ற அடையாளத்தை மாற்ற முடியுமா? யாராய் வேண்டுமானாலும் இருங்கள்....ஆனால் எந்த இனம் என்பதற்கான அடையாளத்தை மாற்ற முடியாததுதானே.....

அது என்ன இனம்? என்றுதானே கேட்கிறீர்கள்....


ஒரே காற்றை சுவாசித்து.....ஒரே வகையான தண்ணீரைக் குடித்து.... ஒரு மண்ணில் விளைந்த பொருட்களை உண்டு அந்த மண்ணிற்கு ஏற்றார் போல வளர்ந்து நிற்கிறதே உயிர் அதை மாற்ற முடியுமா.....? காலம் காலமாக அந்த கலாச்சாரம் தாயின் அண்டத்திலும் தந்தையின் விந்தணுவிலும் கலந்து நமது உயிர்களுக்குள் ஊடுருவி இருக்கிறதே....அதை மாற்ற முடியுமா? புறச்சூழ் நிலையின் காரணமாக நமது மேம்போக்கான வெளிப்பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளலாம்...ஆனால் நமது ஜீன்களுக்கு உள்ளே உட்கார்ந்திருக்கும் மரபணுக்களை எப்படி மாற்றுவது? குரோமோசோம்களில் குடியிருக்கும்... குணாதிசயங்களை எப்படியப்பா மாற்றுவது.....?

அதிகபட்ச தத்துவ விளக்கங்களை விடுத்து விட்டு....பாருங்கள், என்னைப் போலவே உடுத்தி...என் மொழி பேசி... என்னைப் போலவே வாழும் எம் மக்கள் தாக்கப்படுகிறார்கள்...கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்னும் போது எம்மை மீறி எமக்குள் ஏற்படும் உணர்வினை சரி என்றும் தவறென்றும் சொல்லவதற்கு யாருக்கும் உரிமையில்லை....! அது இயற்கைக்கு எதிரான செயல் அல்லவா? எமது உணர்வுகளை வெளிப்படுத்துவது சரியென்று விளக்க வேண்டிய ஒரு துரதிருஸ்டமான நிலைமை நமக்கு இப்போது....! ஏன் நாங்கள் ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுக்கிறோம் என்று விளக்காதீர்கள்....? ஏன் சக தமிழர்களே... திராவிடர்களே... நீங்கள் குரல் கொடுக்க வில்லை என்று உரக்க கேளுங்கள்.....? அவர்களின் குரோமோசோம்களில் கோளாறு இருக்கலாம்....அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று!


எமது ஈழத்து சகோதரி ஒருத்தி எழுதியிருக்கிறாள்.....

" கொட்டும் மழை நிறுத்திக்
கொப்பளிக்கும் மின்னல் கட்டி
இழுத்து வாருங்கள் அந்த இடியை
"இத்தால் நாம் அறிவிப்பது என்னவென்றால்"
என்று அறையுங்கள் முரசை
கலையட்டும் இவ்வுலகின் தூக்கம் "
( நன்றி: மயோரா மனோகரராசன்)


ஈழ மண்ணில் எம்மக்களின் வேதனையால் வெம்மி....அடி மனத்திலிருந்து எம் மொழி கொளுந்து விட்டு எரிவது தெரியவில்லையா? என் தமிழினமே....?


(எரிமலை இன்னும் வெடிக்கும்)


தேவா. S

Comments

தம்பி,

அருமையானபதிவு
Chitra said…
புகைப்படமே, மனதை உலுக்குவதாக இருந்தது. பதிவும் தான்.
முகத்திலறையும் கேள்விகள்...

யாருக்கு என்ன நடந்தால் எனக்கென்ன என்ற மனோ நிலையிருந்து வெளியே வரும் வித்தை மறந்து போனது ஏனோ?
//அக்னி அணைக்கப்பட வேண்டும் என்ற நமது கருத்தில் மாறுதல் இல்லாவிட்டாலும் வெம்மை நமக்கு தெரிவதில்லை அல்லது உணர்வதில்லை....அது போலத்தான் ஈழத்தில் நடந்த கொடுமையின் வெம்மை நமக்கு கூடுதல்.....அதுமட்டுமல்ல....//

மிக சரியான உதாரணம்..

எங்கேயோ நம் இனத்து மக்கள் படும் பாட்டை நினைத்து...மனது துடிக்கத்தான் செய்கிறது.
உங்கள் பதிவிலும்.. உங்கள் ரத்தம் கொதிப்பது தெரிகிறது.. எங்கே இருப்பினும்.. நம் இனம் என்ற எண்ணம் வந்து.. கரம் கொடுக்க வேண்டும்..

எனக்கு சிங்கள நண்பர் ஒருவர் உண்டு, அவர் கூற பல விஷயங்கள் கேட்டிருக்கிறேன்.. அச்சுறுத்தும் வகையில் இருந்தது.. கேட்டதும் நம் நெஞ்சே பதறுகிறது..

படத்தை பார்த்ததும்... மனதின் வலி அதிகமாகிறது.. தொடரட்டும் உங்கள் கருத்து வலிமை..

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...