Pages

Monday, April 26, 2010

எரிமலைகள் வெடிக்கட்டும்.....!
ஈழம் நமது சிந்தனையில் இருந்து நகர்ந்து போய் விட்டதா தமிழினச் சகோதரர்களே....! தனி நாட்டினை பெற்றெடுப்போம் என்ற சிந்தனையை விட....அந்த மண்ணில் தமிழினத்துக்கு நடந்த அநீதி எல்லாம்...உலகக்தமிழர்களின் உள்ளத்தை விட்டு பெயர்ந்து போய் விட்டதா?

தமிழ் நாட்டில் இருக்கும் எம் மக்கள் தினசரி செய்த்தித்தாள் செய்திகளின் பின் செல்லும் ஆட்டு மந்தையாய் மாறி விட்டனரா? எம்மக்களின் இன உணர்வுகளுக்கெல்லாம் அரசியல் சாயங்கள் பூசி ஓட்டுக்காய் கூவி விற்கும் கைப்பாவை ஆகி விட்டனரா? கொதித்தெழுந்திருக்க வேண்டிய ஒரு சமுதாயம்...இன்று எதுவுமே நடவாதது போல...சாமியார்களின் செய்தியிலும்...ஆயிரம் ஊழலோடு நடந்தேறிய விளையாட்டுப் போட்டிகளிலும்... கவனங்கள் திரும்பி விட்ட காரணத்தால்... நடந்து விட்ட அநீதி அழிந்து விடுமா?

எழுத்துலக நண்பர்களும் மற்ற கட்சிசார் ஊடகங்கள் போல வசதியாய் எல்லாவற்றையும் மறந்து விட்டு....ஏதேதோ எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நமது எழுத்தில் இருந்து வெளிவரும் அக்னி உலகைச் சூழ வேண்டாமா?. நம் தாய் தமிழின் வளத்தில் வார்தைகள் வந்து தெறிக்க வேண்டாமா? ஒவ்வொரு தமிழனும் தன் சக தமிழனுக்கு அநீதிகளை எடுத்துக் கூற வேண்டாமா?

ஒரு இயக்கம் ஒரு தலைவன் இத்தோடு முடிந்துவிடுவதில்லை ஒரு இனத்தின் போராட்டமும் லட்சியமும்....! ஈழத்தை வென்றெடுக்க வேண்டும் என்ற எண்ணம் தவறென்று கூறுபவர்கள் தங்களின் மனசாட்சியிடம் கேட்கட்டும் அதில் என்ன தவறென்று....? நம்மில் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மனோ நிலையில் இருந்தால் அவர்களுக்கு மனித உரிமைகள் என்றால் என்ன என்று படிக்கச்சொல்வேன் ...ஏன் தெரியுமா? மனித உரிமைகள் என்றால் என்ன என்று தெரிந்தால்தானே... அது மறுக்கப்படும் போது அல்லது கிடைக்காத போது என்ன மாதிரியான மன நிலைக்கு மனிதன் தள்ளப்படுவான் என்று உணர முடியும்.

தமிழ் நாட்டில் கட்சி நடத்தும் தலைவர்களிடமும்..அதை பின்பற்றும் தொண்டனிடமும் கேட்டுப்பாருங்கள்...மனித உரிமைகள் என்றால் என்ன? உங்களின் கட்சியின் கொள்கை என்ன? எந்த சித்தாந்ததையப்பா நீங்கள் பின் பற்றுகிறீர்கள் என்று...சரியாக எத்தனை பேர் பதில் சொல்வார்கள்? இவர்கள் தான் முட்டாள் தனமாக ஏதோ ஒரு கருத்தை ஆதரித்தோ அல்லது மறுத்தோ பேசி வருகிறார்கள்.

ஈழம் பற்றி பேசுபவனெல்லாம் இவர்களுக்கு புலிகள்..அப்படி என்றால் ஒட்டு மொத்த தமிழினமும் புலிகளா? என்ன பைத்தியக்காரத்தனம் இது..உங்களின் பழிவாங்கல்களுக்கு ஏன் எல்லா தமிழர்களையும் ஒரு போராட்ட இயக்கத்துக்குள் அடைத்துப்பார்க்கிறீர்கள்? ஈழம் வேண்டும் என்பது புதிதாய் ஏதோ தேசத்தை உருவாக்க நினைப்பதாய் எனக்குப்படுகிறது...அது தவறு... இழந்த நாட்டை திரும்ப பெற வேண்டும் என்று தேசத்தை இழந்தவன் நினைப்பதில் என்ன தவறு இருக்கமுடியும்?

இனி எந்தத் தமிழனும் கனவோடு இருக்க வேண்டாம் ...கனலோடு இருங்கள்....! நமது இனம் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறது.... எமது சகோதரிகள் கற்பு சூறை போயிருக்கிறது...எமது இனத்து குழந்தைகள் கருவிலேயே சமாதியாக்கப்படு இருக்கிறார்கள்...வாழ்க்கையை இழந்து இன்று...கப்பல்களில் நடுக்கடலிலும்...இன்ன பிற தேசங்களிலும் கையேந்தி ஆறுதல் தேடி நிற்கிறார்கள்...!

உலகிலுள்ள் இனத்திற்கு எல்லாம் தொன்மையான இனம் இன்று..ஒவ்வொரு நாட்டிலும் துரத்தப் பட்டுக்கொண்டிருக்கிறது.....தாய்த் தமிழன் என்ன செய்கிறான்.....டி.வியில் நித்யானந்தாவின் லீலைகளைப் பார்த்து விட்டு அது பற்றி ஆராய்ச்சி செய்து கொண்ருக்கிறான்....! ஆள்பவர்கள் அடுத்த தேர்தலில் இலவசமாய் எதைக் கொடுத்து மடக்கலாம் என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.....!

கொதிக்கவில்லையா..உங்களின் இரத்தம்......?


(எரிமலை இன்னும் வெடிக்கும்)


தேவா. S


5 comments:

Chitra said...

///இனி எந்தத் தமிழனும் கனவோடு இருக்க வேண்டாம் ...கனலோடு இருங்கள்....! ////


/////கொதிக்கவில்லையா..உங்களின் இரத்தம்......?////

////ஆள்பவர்கள் அடுத்த தேர்தலில் இலவசமாய் எதைக் கொடுத்து மடக்கலாம் என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.....!////


.......அந்த அந்த நேரத்துக்கு உணர்ச்சிகரமாக பேசினாலே போதும் என்ற மனநிலை தான், இன்றைய சமுதாயம். வேதனையான உண்மை.

மாறன் said...

//உலகிலுள்ள் இனத்திற்கு எல்லாம் தொன்மையான இனம் இன்று..ஒவ்வொரு நாட்டிலும் துரத்தப் பட்டுக்கொண்டிருக்கிறது.....தாய்த் தமிழன் என்ன செய்கிறான்.....டி.வியில் நித்யானந்தாவின் லீலைகளைப் பார்த்து விட்டு அது பற்றி ஆராய்ச்சி செய்து கொண்ருக்கிறான்....! ஆள்பவர்கள் அடுத்த தேர்தலில் இலவசமாய் எதைக் கொடுத்து மடக்கலாம் என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.....!///

mmmmmmmmmmmm.....................

விடுத‌லைவீரா said...

இலவசங்களை கொடுத்து மக்களை மடையர்களாகிவிட்டனர். பணத்துக்கும் பதவிக்கும் விருதுக்கும் தன்மானத்தை விட்டு கொடுத்து எழுதுகிறவர்களும், பத்திரிக்கை நடத்துபவர்களும் ஒரு நாள் தமிழீழம் மலர்ந்தது இன்று என எழுதுவைப்போம். அதுவரை தன்மானமுள்ள தமிழர்கள் அனைவரும் போராடாடவேண்டும். எவராலும் நம் பேனாவின் எழுதுக்களை விலைக்கு வாங்க முடியாது. ஒவ்வொரு தமிழனும் எரிமலையாய் வெடிக்க வேண்டும். மலரட்டும் தமிழீழம்..

Kumar said...

excellent thought..fully agree with you

Ananthi said...

//டி.வியில் நித்யானந்தாவின் லீலைகளைப் பார்த்து விட்டு அது பற்றி ஆராய்ச்சி செய்து கொண்ருக்கிறான்....! ஆள்பவர்கள் அடுத்த தேர்தலில் இலவசமாய் எதைக் கொடுத்து மடக்கலாம் என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.....! //

மறுக்க முடியாத உண்மை, தேவா.. தனக்கென்ன என்று இருப்பவர் தான் அதிகம் இந்த பூவுலகில்..!!