Pages

Saturday, May 1, 2010

எச்சில் பொழுதுகள்...!
எச்சில் பொழுதுகளாய்...
விடிகிறது...எமது
இலவச வாழ்க்கை!
வாக்களிக்கும்...
பொழுதுகளிலாவது..
மூன்று வேளை
உண்ண..எண்ணி..
கை நீட்டச்...சொல்கிறது மனம்!

கும்பிட்டு...கும்பிட்டு...
அழிந்து போனது..
எமது ரேகைகள்.....
'வாழ்க' விற்கும்...
'ஒழிக' விற்கும்...
இடையில்...ஒளிந்து
விளையாடிகொண்டிருக்கிறது...
எமது வாழ்க்கை!

கல்விக்காக...செல்லாமல்..
உணவிற்காக
பள்ளி செல்லும்...
எமது குழந்தைகள்!
அடுப்பெரிக்க...விறகே.. இல்லாத...
வீடுகளில் எல்லாம்...
இலவச அரிசி...
என்ன புரட்சி...செய்து விடமுடியும்!

கருப்பு வெள்ளை...
வாழ்க்கையின்
பிரச்சினைகளை
வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி
எப்படி தீர்க்கும்?
கறை வேஷ்டிகளால்....
கரை தட்டி...நிற்கிறது...
எம் வாழ்க்கை...!
எங்கே இருக்கிறாய்? மகாத்மா....
மீண்டும் வா...
தொடங்கி....வை...
இரண்டாவது சுதந்திர போரை!


எம்மக்கள் பிரச்சினைகள் எப்போதுமே வீரியம் கொண்டு வெளி வந்ததே இல்லை! கோடை ஆரம்பம் ஆகி விட்டது....மின்சாரம் இல்லாமல் எத்தனை வீடுகளில் கைக்குழந்தைகளும், பெண்களும் ஆண்களும் சிரமத்திற்கு ஆளாகிப் போயிருக்கிறார்கள்! வெயிலின் உச்சத்தில் இருக்கும் வேலூர் போன்ற நகரங்களில் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் மின்சாரத்தடை இருக்கிறது என்று அம்மக்களிடம் கேட்டுப் பாருங்கள்.

நிரந்தரமாய் எம்மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்ல ஏன் அரசாங்கம் முன் வருவதில்லை. எல்லா வீடுகளிலும் தொலைக் காட்சிப் பெட்டி கொடுத்தாயிற்று என்று சொல்கிறீர்களா...? அடிப்படை வசதிகளான உண்ண உணவு ... உடுக்க உடை...இருக்க இடம் இதிலேயே ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் போது இலவச தொலைக்காட்சி திட்டங்கள் என்ன பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துவிடப் போகிறது... BBC யையும் CNNனையுமா பார்க்கப் போகிறார்கள் மக்கள்......மானட மயிலாடவும்...சாமியார்களின்....வீடியோக்களையும் பார்த்து இன்னும் சீரழியப் போகிறார்கள்.

தயவுசெய்து இலவசங்கள் கொடுப்பதை நிறுத்திவிட்டு.... பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை கொடுங்கள். வேலை இல்லை என்று சொல்வதை விட... வேலை வாய்ப்பினை உருவாக்கலாமே..! அரசு அமைப்புகள் எல்லாம் காலை 10 மணிக்கு ஆரம்பித்து மாலை 6 மணிக்கு முடிந்து விடுகின்றன..... இதை மாற்றி...சிப்ட் முறையில் இயக்கலாமே? ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களையும்....வருமான வரித்துறையும்.. இன்ன பிற நிறுவனங்களையும் பகல் மற்றும் இரவு நேர சிப்ட் ஆக்கினால்.. வேலை இல்லாதவர்களுக்கு வேலையும் கிடைக்கும் தேங்கி நிற்கும் வேலைகளும் விரைந்து நடக்குமே? நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளே...எத்தனையோ லட்சம் என்கிறார்களே...இரவு பகலாய் நீதிமன்றங்களை இயங்க விட்டால் எத்தனை வழக்கறிஞர்கள் வேலை பெறுவார்கள் எத்தனை வழக்குகள் தீரும்? கணக்கிட்டுப் பாருங்கள்....

காவலர்கள் எப்படி பணி செய்கிறார்களோ அதே முறையில் அரசு இயந்திரம் தனது எல்லா பணிகளையும் முடுக்கிவிட்டல் உற்பத்தி திறனும் கூடும் வேலை வாய்ப்பும் அதிகரிக்கு....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா....ஏதோ என் அறிவுக்கு எட்டியதை ஒரு ஆதங்கத்தில் சொல்லி விட்டேன் ...இதில் எந்த அளவுக்கு உண்மையிருக்கிறது... எப்படி செயல் படுத்தலாம் என்று சிந்தித்துப் பாருங்கள்.. எம் மக்களே!


இலவசமாய் ஏதாவது அரசாங்கம் கொடுக்கிறது என்றால்.. உங்களுக்குத் தெரியாமலேயே வேறு வகையில் உங்கள் குரல்வளை கடி படப் போகிறது என்று அர்த்தம்.....பொருளாதாய இந்த உலகில் எதுவுமே இலவசம் இல்லை நண்பர்களே.....வேறு வகையில் நாம் தான் அதை ஈடு செய்யவேண்டும் என்பதை மறந்துவிட வேண்டாம்!

இலவசங்களை புறக்கணிப்போம்! வாழ்வின் அடிப்படி உரிமைகளை பெறுவோம்!


தேவா. S

4 comments:

மதுரை சரவணன் said...

//கல்விக்காக...செல்லாமல்..
உணவிற்காக
பள்ளி செல்லும்...
எமது குழந்தைகள்!
அடுப்பெரிக்க...விறகே.. இல்லாத...
வீடுகளில் எல்லாம்...
இலவச அரிசி...
என்ன புரட்சி...செய்து விடமுடியும்!//
good thought.

Chitra said...

///கருப்பு வெள்ளை...
வாழ்க்கையின்
பிரச்சினைகளை
வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி
எப்படி தீர்க்கும்?////


..... good question. It is a sad situation. :-(

ஈரோடு கதிர் said...

//என்ன புரட்சி...செய்து விடமுடியும்!//

நம்மாள பலகாரம் கூட செய்ய முடியறதில்லீங்க... அதக்கூட ரெடிமேடா வாங்குறோம்

lcnathan said...

INGKE AALUKKU ORU BOTTLE VISHAM INAAM YENTRAAL ''ANNE!!NAMMALAI MARANTHDAATHEENGKA !RENDU BOTTLE YENAKKU VENUMNEYY !! YENDRU ILVASA PITCHAIKKU NAMMALAI THAYAAR PANNI VITTATHU YAAR??? VOTTU PORUKKIKAL THAANE??!!!!