தொலைபேசியின் தொடர்ச்சியான சிணுங்களில் சமையலறையில் மதிய உணவு தயார் செய்து கொண்டிருந்தவள் அப்போதுதான் மணி எத்தனை என்று பார்த்தாள். காலை பதினொரு மணிக்கு யாரு இப்படி விடாம போன் அடிகிறது என்று அலுத்தவளாய்.....ரீசீவரை எடுத்து....." ஹலோ... நான் சுமதி பேசுறேன்....என்று சொல்லிவிட்டு மேற்கொண்டு கேட்டவளுக்கு தலை சுத்தாத குறையாகிவிட்டது. மூச்சு திணறிய படி.... வந்த அழுகையை அடக்கிக் கொண்டு...சரிங்க.... நான் இப்பவே புறப்பட்டு வர்றேன்...எந்த ஆஸ்பிட்டல் சொன்னீங்க....என்று குறித்துக் கொண்டு... போனை தடாலென்று வைத்தவள் ' ஓ ' வென்று அழத்தொடங்கினாள் அந்த 27 வயது சுமதி.
திருமணமான இந்த 6 வருடத்தில் எவ்வளவு அன்யோன்யம் எவ்வளவு புரிதல். பல நேரங்களில் இவனைப் போல் கணவன் கிடைக்க குடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சுமதி நினைக்கும் அளவிற்கு அத்தனை அன்பு. காலையில் அலுவலகம் செல்லும் போது எவ்வளவு துள்ளலாக சென்றான் முரளி...இப்போது பைக் ஆக்ஸிடெண்ட் ஆகி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பகுதியில் இருக்கிறான் என்றால் எப்படி தாங்குவாள் சுமதி. இரண்டு தெரு தள்ளி இருந்த முரளியின் அம்மா, அப்பா, தம்பி மூன்று பேரும் வீட்டுக்குள் நுழைய....அத்தேதேதேதே...... என்று அழுதபடி தனது மாமியாரின் தோளில் சாய்ந்து கதறினாள் சுமதி.
பரபரப்பான நிமிடங்களுக்கு இடையே 4 பேரும் மருத்துவமனையை அடைந்து ஓட்டமும் நடையுமாய் அவசர சிகிச்சைப்பகுதிக்கு வந்தார்கள்...உள்ளே நுழைய முடியாமல் வெளியிலிருந்து பார்த்து கதறத்தொடங்கினார்கள். முரளிக்கு தலையில் பெரிய கட்டிடப்பட்டிருந்தது.... காலிலும் வலது காலும் கையும் பெரிய பெரிய கட்ட்டுகளுடன்...சுமதி ஜீரணிக்க முடியாமல் நின்று கொண்டிருந்தாள். மாலை வரை எதுவும் சொல்ல முடியாது....உயிர் பிழைக்கிறது கொஞ்சம் கஸ்டம்தான் போல ஒரு நர்ஸ் ரகசியாமாய் முரளியின் தம்பியிடம் சொன்னது சுமதியில் காதில் இடியாய் இறங்கியது.
காலத்தின் நிகழ்வுகளை நாம் தாங்கித்தான் ஆக வேண்டும். சந்தோசங்களை வாழ்க்கை கொன்டு வந்து குவிக்கும் போது ஆடுகிறோம்....பிடிக்காத இது போன்ற நிகழ்வுகளைக் கொண்டுவரும் போது எதிர்கொள்ளத் திரணியின்று மண்டியிட்டு கதறுகிறோம். இன்னும் சொல்லப்போனால் கடவுள் நம்பிக்கை வருவது மிகைப்பட்ட பேருக்கு இது போல ஏதோ நிகழும் போது தான். ஒரு பக்கம் பிள்ளையின் நிலை கண்டு விக்கித்துப் போய் கதறும் தாய் தகப்பன்....பெற்று வளர்த்து 32 வயது மகனாய் உருவாக்கி....கடைசியில் உயிர் பிழைப்பானா ? மாட்டானா என்று எதிர்பார்த்து காத்திருப்பது எவ்வளவு பெரிய அவலம். சுமதி ஒரு ஒரத்தில் சுருண்டு கிடந்தாள்....பேசுவதற்கு திரணி இன்றி எப்போது மாலை வரும் எப்போது தன் அருமை கணவன் அபாயகட்டத்தை தாண்டுவானென்று...முரளியின் நினைவில்..தன் மைத்துனன் கொடுத்த காபியைக் கூட குடிக்க மறுத்துவிட்டாள்.
எல்லோரும் எதிர்பார்த்த அந்த மாலை வந்தது.....சீஃப் டாக்டரின் அழைப்பை எதிர்பார்த்து அன்ன ஆகாரம் இல்லாமல் கிடந்த குடும்பத்தினர்... அவர் அழைத்ததும் ஓடோடிப் போய் நின்றார்கள். செருமலோடு டாக்டர் சொன்ன முதல் வார்த்தை...." நேரடியாவே சொல்லி விடுகிறேன் பிழைக்கிறது ரொம்ப கஷ்டம் என்று சொல்லி முடிக்கும் முன் தனது 5 வயது மகளின் முகம் கேட்காமலேயே....சுமதியின் கண் முன் வந்தது....கணவனின் மீதிருந்த காதல் உருமாறி...மிரட்டலாய் ஒரு இறுக்கத்தை நெஞ்சுக்குள் இறக்கியது...அழுகை அடக்க முடியாமல்...வாய்க்கு முந்தானையை வைத்துக் கொண்டு விம்மும் வயதான மாமியாரையும்...அருகில் தள்ளாமல் நின்று கொண்டிருந்த மாமனாரையும் பார்த்து சுமதியின் அடி வயிற்றில் இருந்த ஒன்று ஏதோ ஒன்று வெடித்து நெஞ்சில் ஏறி..." என்னங்க...." என்ற வாக்கியத்தோடு அவளைத் தலையில் அடித்துக் கொண்டு அழச்செய்தது.
கொஞ்சம் தைரியமாய் இருந்த முரளியின் தம்பி.... டாக்டரிடம் தெளிவாய் கொஞ்சம் தைரியமாய் சொன்னான்...டாக்டர் எங்க அண்ணண எப்படியாச்சும் காப்பத்துங்க..என்று சொல்லி முடிப்பதற்குள் இடை மறித்த டாக்டர்..
"தம்பி....கை, கால்ல அடி பட்டு இருக்கு..அது எல்லாம் கூட பிரச்சினை இல்ல....ஆனா தலையில பயங்கர அடிபட்டு இருக்கு இன்னும் பிளீடிங்க் நிக்கவே இல்ல! இன்னைக்கு நைட் முழுதும் பார்ப்போம் இல்லேன்னா ... நாளைக்கு காலைல 9 மணிக்கு தலையில் ஆப்பரேசன் பண்ணியே ஆகணும் ..... என்று அவர் சொல்லும் போது மணி இரவு 8. டாக்டர் தொடர்ந்து பேசினார்...." ஆப்பரேசன் பண்ணலேன்னா உயிர் பிழைக்க சான்ஸ் கண்டிப்பா இல்ல....! பண்ணினா பிழைச்சலும் பிழைக்கலாம் இல்லேன்னா இல்ல... மேலே கையை உயர்த்தி காட் இஸ் கிரேட்....என்று சொல்லி விட்டு வணக்கம் சொல்லி மறைமுகமாய் அவர்களை இடத்தை விட்டு நகரச்சொன்னார்.
ஆளுக்கொரு மூலையில் அமர்ந்திருக்க....சுமதி வெறித்துப் போய் வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள்...தன் கணவர் ஐசியூவில், மகள் பக்கத்து வீட்டு செல்வி அக்கா வீட்டில், தான் இந்த மூலையில்... நேரம் போனது தெரியவில்லை....இரவு 11 மணி அளவில் மைத்துனன் வந்து மறு நாள் காலை ஆப்பரேசனை உறுதிபடுத்தி சென்றான். மிரட்சியாய் அடர்தியாய் ரொம்ப கனமாக அந்த இரவு விடிந்தது. காலை 6 மணிக்கு மாமனார் சொன்னார் " சுமதி நீ வீட்டுக்குப் போய்ட்டு டிரெஸ் மாத்திட்டு பாப்பாவை பாத்துட்டு வாம்மா" என்று....அவர் சொன்னதை மறுக்ககூட சக்தி இல்லை சுமதிக்கு....
9 மணிக்கு ஆப்பரேசன்...சரி வீட்டுக்கு போய்ட்டு வரலாம் என்று கிளம்பினாள். பக்கதிலேயேதான் ஒரு 30 நிமிசத்தில் சென்றடையும் தொலைவில் தான் அவர்கள் வீடு. சுமதி ஆஸ்பிடல் விட்டு கிளம்பும் முன்...தன் ஆசைக்கணவனை பார்த்து விட்டுச் செல்லலாம் என்று நினைத்து வைத்த கோரிக்கை மருத்துவமனையால் நிராகரிக்கப்பட்டது.....!
பக்கத்து வீட்டில் இருந்த மகளை உறக்கதோடு வாங்கித் தோளில் போட்டு....கதவைத் திறந்து வீட்டிற்குள் நுழைந்தவளுக்கு....முரளியின் நினைவுகள் அதிகமாயின....எவ்வளவு கேலி, கிண்டல், காதல் மோகம்.....எதுவுமே குறையில்லாமல் என்னை தீர தீர காதலித்த என் காதலா.....என்னைவிட்டு போய்விடுவாயா....? விசும்பலாய் கண்ணீரை கொட்டின நினைவுகள் மகளை படுக்கையில் போட்டுவிட்டு...தானும் படுக்கையில் கசங்கலாய் சாய்ந்தாள்..... நேரம் ஓடிக் கொண்டிருந்தது.....
தொலைபேசியை எடுத்தவள் ......மூர்ச்சையாகிப் போனாள்..மறுமுனையில் முரளியின் அப்பா அவளது மாமனார் கதறினார்....அம்மா....முரளி நம்மள ஏமாத்திட்டுப் போய்ட்டான்ம்மாமாமமமமமமா......அலறினாள் சுமதி....கடவுளே என்னை இப்படி என்னையும் என் பெண்ணையும் அனாதை ஆக்கிட்டியே... நான் என்ன பன்ணுவேன்...என் தெய்வம் போயிடுச்சே......! எல்லாம் முடிந்து விட்டது துணிப் பொட்டலமாய் வீடு வந்து சேர்ந்தான் முரளி....இறுதி ஊர்வலத்திற்கு எல்லாம் ரெடியாகிக்கொண்டிருந்தது....அழுது அழுது....கதறியபடி...சுமதியும்....என்ன நடந்தது என்று தெரியாமல் அம்மாவைக் கட்டிக் கொன்டு இருந்த 5 வயது மகளும்....எதிர்காலம் கேள்விக்குறியாய்...முரளி போய் சேர்ந்து விட்டான் இவர்கள் நிலைமை.....? வெளியே சேகண்டி மணி அடித்துக் கொண்டிருந்தார்கள் ....தொடர்ந்து அடித்துக்கொண்டிருந்தது சுமதிக்கு தலையில் இறங்கியது.......கத்தினாள்.....அந்த சேகண்டிய அடிக்காதீங்க.....அடிக்காதீங்க..........அடிக்காதிங்க.... நிறுத்துங்க அலறினாள் ...மணி சத்தம் நிற்கவில்லை......
"
"
"
"
"
"
"
"
செல் போன் மணி விடாமல் அடித்துக் கொண்டு இருந்தது....பதறி எழுந்தாள் சுமதி.....ஓஓஒ....தூக்கம் கலைந்தும் கனவிலிருந்து அவள் மீள முடியாத அளவிற்கு அதன் தாக்கம் இருந்தது... போனை எடுத்து ஹலோ சொல்லிவிட்டு மணி பார்த்தாள் 10:25மணி....அண்ணி நான் தான்.........முரளியின் தம்பி பேசினான்...அண்ணி......அண்ணனுக்கு ஆப்பரேசன் முடிஞ்சிருச்சு...இப்போ நல்லாயிருக்கு...இனிமே ஒரு பிரச்சனையும் இல்லன்னு டாக்டர் சொல்லிட்டாரு.....என்று சந்தோசத்தில் குதித்தப்படி சொல்லிவிட்டு நீங்க வாங்க அண்ணி......வேறு ஏதோ மைத்துனன் சொல்ல....காதில் வாங்கியும் ....வாங்கமலும் உடனே மறந்து போனாள் சுமதி.....
சுமதி.....மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தாள் .....குளிக்காமல், வேறு உடை மாற்றாமல்....மகளை அள்ளிக் கொண்டு வெளியே போய் கதவை மூட நினைத்தவள்......சாமி போட்டோ இருந்த இடத்திற்கு திரும்ப ஓடோடி வந்தாள்.....
" கடவுளே.....எங்கள காப்பாதிட்டே...... என் தாலிய காப்பாதிட்ட....அப்பா...அம்மா.. மகமாயி...ஏதேதொ சொன்னாள் " ஆனால் தன் மைத்துனன் போனில் சொன்ன கடைசி வார்த்தை அவளுக்கு ஞாபகம் வரவில்லை........
"அண்ணி.....அண்ணன் ஹெல்மெட் போடாதனாலேதான் இவ்ளோ பிரச்சினையும்.....எப்படியோ உசுர காப்பாதிட்டங்க....முக தாடையெல்லம் உடைஞ்சு போனதால் முகமே மாறி இருக்கு....எப்படியோ பிழைச்சு வந்தாரே அது போதும்....."
போனில் சுமதி கடைசியாய் கேட்ட வார்தைகள் மறந்து விட்டு...ஆட்டோவில் ஏறி ஆஸ்பிடலுக்குப் பறந்தாள்......பூட்டப்பட்ட அவளது வீட்டுக்குள்....சாமி படம் பக்கத்தில் ஆணியில் மாட்டியிருந்த......காலையில் முரளி அணியாமல் சென்ற.....
" ஹெல்மெட்" மெளனமாய் ஆடிக் கொண்டிருந்தது.
மனிதர்களுக்கு பெரும்பாலும் தெரிவதில்லை....எது விபத்து....? எது ஆபத்து என்று..........
திறமை தைரியம் என்ற பெயரில் ஹெல்மெட் அணியாமல் விபத்தை அன்றாடம் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள். தவறு நிகழும் வரை....மெளனமாய் பாக்கெட்டில் இருக்கிறது விபரீதம்....
தவறு நிகழும் போது விபரீதம் விஸ்வரூபம் எடுக்கிறது....!
பைக் ஓட்டுற எல்லோரும் கண்டிப்பா ஹெல்மெட் போடுங்க பாஸ்! ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.........
(ரெண்டு பதிவா போட்டா கோபம் வருதுல்ல...உக்காந்து படிங்க ..பொறுமையா....ஹா...ஹா...ஹா)
தேவா. S
Comments
உங்கள் நினைவிற்கு:
தொடரும் போட்ட கதைய இன்னும் முடிக்கல :)
உங்கள் எழுத்தில் நிறைய வசீகரம் இருக்கு.
வாழ்த்துக்கள்.
//////////
மிகவும் சிந்திக்க தூண்டும் ஒரு செய்தியை சொல்லி இருக்கிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி
டாக்டர் சொன்ன முதல் வார்த்தை...." நேரடியாவே சொல்லி விடுகிறேன் பிழைக்கிறது ரொம்ப கஷ்டம் என்று சொல்லி முடிக்கும் முன் தனது 5 வயது மகளின் முகம் கேட்காமலேயே....சுமதியின் கண் முன் வந்தது....//
திருமணமான 4 வருடங்களில்.....5 வயது மகளா...எப்படி? கொஞ்சம் கவனித்திருக்கலாமே!
கதை என்று எது எழுதியது இல்லை பாஸ் கன்னி முயற்சி...அதனால்தான் எழுத்துப் பிழையை கவனிக்கவில்லை.
மேலும் கதையின் கரு நோக்கிய சிந்தனையில் கவனிக்காமல் விட்டு விட்டேன்.....மன்னிக்கவும்!
மாற்றம் செய்து விட்டேன்...தோழர்! மிக்க நன்றி!
" நான் ஒரு வெண்மேகம்....
நிறமோ...குணமோ எனக்கு கிடையாது...
காற்றடித்த திசையில் நகர்கிறேன்....
கனத்தால்... மழையாகப் பெய்கிறேன்..."
அவ்ளோதான்....மேடம்.....! உங்களின் தொடர்ச்சியான வருகை நிறைய உத்வேகம் குடுக்கிறது. சாதி...மேட்டர்.... நாளைக்கு போட்டுடலாம்....ஹா...ஹா...ஹா!
ஜீவன் பென்னி @ முடிந்த வரை நம்மைச் சுற்றி இருக்கும் உறவுகளை கட்டாயமாய் அணியச் சொல்லணும் தம்பி.
சிவா @ தம்பி ஏன் கண் கலங்குற...அழக்கூடாது..அண்ணன் இருக்கேன்ல....ஹா..ஹா...ஹா!
கார்த்திக் @ உங்களின் ஊக்கம்தான் பாஸ்... ஏதோ எழுதுறேன்... விழிப்புணர்வு ரொம்ப முக்கியம் பாஸ்!
ஜெரால்ட் @ மாப்ஸ் ...என்ன குழப்பம்...! கண்டிப்பாய் ஹெல்மெட் அணியவேண்டும்..!
அனு @ மிக்க நன்றி அனு....! அந்த கதையை (வாழ்க்கையில் நடக்கிற எல்லாம் கதைதானே... ஹா...ஹா...ஹா) நாளைக்கு போட்டுடலாம் ...தோழி...!
மால்குடி @ உங்கள் வாசிப்பில் கூட ரசனை இருக்கிறது நண்பரே..... ! மிக்க நன்றி!
அம்மன் @ மிக்க நன்றி.... தோழர்!
ரியாஸ் @ மிக்க நன்றி!
சித்ரா..... @ உங்க கிட்ட கத்துகிட்டதுதான் தோழி..... ஹா... ஹா...ஹா.. !
விஜய்.... @ நன்றிப்பா...!
கதை செல்லும் விதம் நன்று - ஒரு நீதியினை வைத்து ஒரு கதை. நன்று நன்று.
நல்வாழ்த்துகள் தேவா
நட்புடன் சீனா
...எவ்ளோ பெரிய விஷயத்தை ரெண்டு வரியில் சொல்லிட்டீங்க. நீங்க நீங்க தான்.
சுமதி...... " நான் என்ன பன்ணுவேன்...என் தெய்வம் போயிடுச்சே......" ன்னு கதறிய இடம்.. என் கண்களில் கண்ணீர். பின்னர்.. கொடுத்த இன்ப அதிர்ச்சிக்கு நன்றிங்க.. சப்பாஹ்... ரொம்ப டென்ஷன் ஆயட்டேன்.
அருமையான கதையுடன், கூடுதலாய் அவசியமான கருத்தையும் சொன்ன உங்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்! :)