Skip to main content

காசி.....பதிவுத் தொடர்...முடிவு!













படைக்கப்பட்டது
முதல் சுழன்று கொண்டிருக்கும் பூமியும், பழக்கப்பட்டதின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் மனித மனமும் நிற்கும் கணத்தில்தான்.....எல்லா ரகசியங்களும் தெரியவரும். ஒரு நாள் பூமி நிற்கும் அல்லது நொறுங்கும் அல்லது..கரைந்து போகும்.....! மனித மனமும் கூட.. நீங்கள் தீர்மானித்தால் இந்தக் கணமே.....

காசி அண்ணணின் மிரட்டல் தொடருகிறது......

இதுவரை

இனி....


கடவுள் ஏன் இருக்க வேண்டும் என்ற கேள்வியும் காசி அண்ணனின் மிரட்டலும் எனக்குள் ஏற்பட்ட பயமும்...அந்த மார்கழி குளிரிலும் எனக்கு வியர்த்ததும் எழுத்துகளுக்குள் வராமல் முரண்டு பிடிக்கின்றன...! ஆனால் யோசித்தேன்... எதற்கு கடவுள் இருக்க வேண்டும்......ம்ம்ம்ம்ம்...பட்டென்று சொன்னேன்...

"நம்மள எல்லாம் காப்பாத்துறதுக்குண்ணே....அப்புறம்...கெட்டவங்கள அழிக்கிறதுக்குண்ணே...."

உன்னை எத்தனை தடவை காப்பாத்தி இருக்கார்? எத்தன தடவை நீ கடவுள்தான் காப்பாத்தினார்னு உணர்ந்து இருக்க? கெட்டவங்கள அழிக்கன்னா இருக்குற கெட்டவங்கள எல்லாம் ஏன் இன்னும் கடவுள் அழிக்கல? அடுத்தடுத்த கேள்விகளில் திணறிய என்னை மேலும் பேசவிட வில்லை காசி அண்ணன்.....

வடக்கு தெருவில இருக்குற மாரியம்மாவுக்கு ரெண்டு நாளா சுரம் நடவுக்கு போகாம வீட்லயே படுத்து கிடக்குறா....அவ புருசன் கிடய (ஆட்டுக் கிடை) ஓட்டிக்கிட்டு தஞ்சாவூரு பக்கம் போயிருக்கான். பச்ச புள்ளக்காரி 8 மாச புள்ளய வச்சுகிட்டு பாலு வாங்க கூட காசில்லாம... சுரத்துல முனகிட்டு கிடக்குறா....அடுப்பு பத்தவச்சு ரெண்டு நாளாச்சி...ரசுக்கு ரொட்டியும் வர காப்பியுமா குடிச்சிட்டு புள்ளக்கியும் வரகாப்பிய கொடுத்துகிட்டிறுக்கிறா பாவி மனிசி....ரெண்டு குடம் தண்ணி எடுத்து வைக்கலாமுனு போனேன்... துடிச்சி போயிட்டென்....! கையில இருந்த 50 ரூவா காச அவகிட்ட குடுத்துட்டு....அழுகுற புள்ளக்கி...பாலு வாங்கலாம்னு கோவிலுக்கு பின் வழியா.. கடவீதிக்கு வந்தேன்... கோவில்ல சாயங்கால பூஜை பாலாபிஷேகம் கடவுளுக்கு நடக்குது ஊத்துன பாலு சிலைல பட்டு கறுப்பு வெளுப்பும் எண்ணெயுமா ஊத்திகிட்டு இருக்கு......


சாமிக்கு பண்ணனும்னு ஆசை இருந்தா கோவிலுக்குள்ளேயே ஒரு தொட்டி வச்சு... பால ஊத்தி வைக்கப்படாதா? இல்லாத போன ஏழை பாழைங்களுக்கு கொடுக்கப்படாதா? ஏண்டா இப்படி விரையம் பண்ணுறீகன்னு ஒரே கோவம்....கோவில் முன்னால வந்து நின்னு கத்து கத்துன்னு கத்தினேன்....ஏன்டா..சாமியாடா கேட்டுச்சு பாலு வேணும்ன்னு....மனுசப்பயவுள்ள குடிக்க பாலு இல்லாமா வரக்காப்பி குடிச்சி வயிறு ஒட்டிபோயி கிடக்குது...எதுக்குடா...... இப்படி அநியாயம் பண்றீங்கன்னு....கேட்டேன்....


கூப்பிடுங்கடா.. ஒங்க சாமிகள.. நான் கேக்குறேன்..என்ன கொன்னாலும் பரவாயில்லேனு கத்தினேன்....!லூசுப்பய கத்துறான்னு முதுகுல ரெண்டு மொத்து மொத்தி என்ன புடிச்சு கீழே தள்ளிவிட்டாய்ங்க...கை சிராப்புண்டு போச்சி.. ரெண்டு நாளாய் கையில் ஆறாமல் இருந்த ரணத்தை காசியண்ணன் காட்டியது.....!கையிலிருந்த ரணத்தைப் பார்த்து என் மனசு வலித்தது.


அப்பு...இவெங்க சொல்ற சாமி எல்லாம் வராது. இது வரைக்கும் எங்கணயும் வந்ததில்ல
வரவும் வராது. அவன் அவன் மனதிருப்திக்கி ஒவ்வொரு சாமியா உண்டாக்கி வச்சிகிட்டய்ங்க....சாமி சாமின்னு இவென் சாமிக்கி காட்டுற கரிசனத்த...கொஞ்சமாச்சும் மனுசப் பய மேல காட்டலாமா இல்லையா? எனக்கு அவர் பேசிக் கொண்டிருப்பதின் ஆழமும் அர்த்தமும் ஏதோ ஒரு வேகத்தில் மெதுவாய் விளங்க ஆரம்பித்தது....அதனால் என்னுடைய கேட்கும் ஆர்வம் அதிகரித்து இருந்தது.....! மெல்ல தன்னை உலுப்பி அசைந்து எழுந்து கொண்டிருந்தது பூமி. வெளிச்சம் மெதுவாய் படர்ந்து கொண்டிருந்தது...வெளியிலும் எனக்குள்ளும்...!


மனுசன் முதல்ல தனக்குள்ள நிம்மதிய தேடணும்... நிம்மதின்னு ஒண்ணு தனியா எங்கேயோ இருந்து வராது. நாம செய்யுற வேலைல இருந்துதான் எல்லா விசயமும் தொடருது...எது செஞ்சாலும் நமக்கே தெரியும் இது நல்லது கெட்டதுன்னு.....! நாம செய்ற நல்லது கெட்டதுக்கும் நமக்கும் சம்பந்தம் இருக்குப்பு... "புரியலையேண்ணே..... நான் தலையை சொறிந்தேன்...."


அப்பு...இப்போ நீங்க பலசரக்கு கடைக்கி போறீக..பலசரக்குக்கடைகாரன் கிட்ட சண்டை போடுறீக....அவன் என்ன செய்வே தெரியுமா? மத்தியான சோத்துக்கு வீட்டுக்கு போயி பொஞ்சாதிகிட்ட கோவத்த காமிப்பான்.... ... அவ பொஞ்சாதி என்ன பண்ணும்....புள்ளய இழுத்து போட்டு அடிச்சி அது கோவத்த காமிக்கும்.....! வெளில வெளையாடுற பய உங்க வீட்டு பயல இழுத்து போட்டு அடிப்பான்.. உங்க வீட்டுப்பய..வீட்டுல வந்து சோறு சாப்பிட மாட்டேன்னு அது சரி யில்ல இது சரியில்லன்னு வீட்டுல சண்டை போடுவேன்....இத பாத்து உங்காத்தாளுக்கு கோவம் வரும்.....உங்க தம்பிய ரெண்டு மாத்து மாத்திட்டு....உங்கப்பாகிட்ட எரிஞ்சு விழும்...உங்கப்பா என்ன செய்வாரு...எங்கயாச்சும் போய்ட்டு நீ லேட்ட வருவ இல்லா ஏதாச்சும் சாதாரணமா செஞ்சு இருப்ப.... அவரு இருக்குற கோவத்துல உம்மேல எரிஞ்சு விழுவாரு......

பலசரக்கு கடைகாரங்கிட்ட நீ கொடுத்தது.... உனக்கு திரும்பி வந்துச்சுன்னு..உனக்குத் தெரியாது. தெரியவும் நியாயம் இல்ல....ஆனா...ஏதோ ஒரு ரூபத்துல நமக்கு கிடக்கிறது எல்லாமெ.... நாம கொடுத்ததுதான். ஒரு உதாரணம்தேன் நான் சொன்னது ஆன நிசத்துல நாமதேன் நமக்கு நல்லது கெட்டது எல்லாம் செஞ்சுக்கிறது எல்லாமே! இப்ப சொல்லு யாரு கடவுளு....? எங்கே இருக்கு ஒரு கடவுளு....? கேள்வியோடு சேர்த்து ஒரு கத்திப் பார்வையையும் எனக்குள் பாய்ச்சினார்.

"ஏண்னே அப்பன்னா சாமியே இல்லையாண்ணே....?"

பயத்தோடு தைரியத்தை வரவழைத்துக் கொன்டு கேட்டேன்...சாமின்னு ஒண்ணு தனியா இல்லப்பா....எல்லா கோயிலுக்கும் சாமிங்கதான் போகுது....இதுகளே சாமிய தேடினா எப்படி சாமி கிடைக்கிம்! கடைசிவரை சாமிய கண்டுபிடிக்க முடியாது ஏன் தெரியுமா சாமிஎல்லாருக்கும் இங்க இருக்கு... அவர் உறக்க நெஞ்ச தட்டிக் காமிக்கவும்.... நான் வெளிறத்தொடங்கினேன்.

எவனுக்கும் தான் யாருன்னு சிந்திக்கத் தெரியாதுப்பா....! எல்லா பயபுள்ளையும் அடுத்தவன பத்திதான் நினைக்கும்...! காசி ஏன் இப்படி இருகான்னு ஊருல இருக்கிற பயபுள்ள பூரா நினைக்கிறாய்ங்க...அவங்கே ஏன் இப்படி இருக்காய்ங்கன்னு நினைக்கிறது இல்ல.....


ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு மாறி.... நான்...உன்ன மாறி இருக்கணும்னு ஆசைப்பட்ட நான் கஸ்டப்படுவேன்... நீ என்ன மாறி இருக்கணும்னு நினச்சா நீ கஸ்டப்படுவே.....விழுந்த மண்ணுகேத்த மாறி மொளைக்கிது செடி....! புகுந்த கருவுக்கு ஏத்த மாதிரி அமையுது ஒவ்வொருத்தன் வாழ்க்கை...! இதுல எதுக்கு அடுத்தவன பத்தின ஆராய்ச்சி....உன் கூடு.. உன் உசுரு...இத உத்து உத்து பாரு...சாமி தெரியும் ஹா.....ஹா......ஹா....பிரமாண்டமாய் காசி அண்னன் சிரிச்சதுல....அரசமரத்தடியில தூங்கிக் கிட்டு இருந்த ஒரு நாயும், மரத்து மேல இருந்த சில பறவைகளும்...பயந்து ஓடிப்போச்சு.....


" டேய்..கிறுக்குப்பலே...... என்னடா சட்டய கூட போடாமா மாரநாட்டையா பேரன் கிட்ட உக்காந்து சிரிச்சிகிட்டு இருக்க....காலங்காத்தால...! வெரசா வாடா...கடைக்கி தண்ணி மோக்கனும்!" டீக்கடை மணி அண்ணன் காசி அண்ணனை விரட்டினார்......" ஏம்ப்பு கிறுக்கு பய கூட காலைலயே என்ன பேச்சு...உங்களயும் லூசாக்கிப் புடுவான்....சூதானமா இருங்கப்பு....." என்று என்னை நோக்கியும் சிரிப்போடு வார்த்தைகளை வீசினார் டீக்கடை மணி அண்ணன்....!

காசி அண்ணே டீக்கடகாரு பின்னால போயிருச்சு.....! நான் எழுந்து மெல்ல நடக்கத்தொடங்கினேன் வீடு நோக்கி மெதுவாய்...." ஏண்டா கோயிலுக்கு வரல..." யாரோ ஒரு நண்பன் கேட்டது காதில் விழுந்தை புத்தி வாங்கிக் கொள்ளவில்லை........!


"காசியண்ணே......!.....காசியண்ணே......காசியண்ணே...." அனிச்சையாய் மனம் சொல்லிக் கொண்டிருந்தது.

"லூசுப்பயலே....எங்கடா..போய்ட்ட...." யாரோ யாரிடமோ சப்தமாய் பேசிக் கொண்டிருந்தார்கள்...

பொழுது நன்றாக விடிந்திருந்தது.....வெயிலின் வெளிச்சம் வெளியே நன்றாக பரவியிருந்தது.... வீடு நோக்கி மெல்ல நான் நடந்து கொண்டிருந்தேன்.......!



தேவா. S






Comments

வாவ்...
அருமை...

நல்லா எழுதியிருக்கீங்க பாஸ்...
காசியண்ணனும் தேவா அண்ணனும் ஒன்னுன்னு மட்டும் புரிஞ்சுடிச்சு.
சாமீ கும்பிடுங்கள். சாமீ சாமீ என்று இருக்க வேண்டாம். அன்னதானம் போடுவதால் சில குடும்பத்துக்கு நல்லது
VELU.G said…
நல்லாயிருக்குங்க தேவா
Chitra said…
ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு மாறி.... நான்...உன்ன மாறி இருக்கணும்னு ஆசைப்பட்ட நான் கஸ்டப்படுவேன்... நீ என்ன மாறி இருக்கணும்னு நினச்சா நீ கஸ்டப்படுவே.....விழுந்த மண்ணுகேத்த மாறி மொளைக்கிது செடி....! புகுந்த கருவுக்கு ஏத்த மாதிரி அமையுது ஒவ்வொருத்தன் வாழ்க்கை...! இதுல எதுக்கு அடுத்தவன பத்தின ஆராய்ச்சி....உன் கூடு.. உன் உசுரு...இத உத்து உத்து பாரு...சாமி தெரியும் ஹா.....ஹா......ஹா....பிரமாண்டமாய் காசி அண்னன் சிரிச்சதுல....அரசமரத்தடியில தூங்கிக் கிட்டு இருந்த ஒரு நாயும், மரத்து மேல இருந்த சில பறவைகளும்...பயந்து ஓடிப்போச்சு.....

..... தேவா..... சூப்பர்! உங்கள் எழுத்து நடை - கருத்துக்களை சொல்லும் விதம் - எல்லாம் அம்சமா வந்திருக்குது.... பாராட்டுக்கள்!
உங்க எழுத்து ரொம்ப ஆழமா இருக்கு. அப்டியே உள்ள எங்கேயோ போகுது. மனச உலுக்குது. எப்டிங்க இப்படியெல்லாம் எழுதறீங்க.
க ரா said…
சூப்பரா இருக்குன்னே. கலக்கறீங்க
S Maharajan said…
//அப்பு...இவெங்க சொல்ற சாமி எல்லாம் வராது. இது வரைக்கும் எங்கணயும் வந்ததில்ல
வரவும் வராது. அவன் அவன் மனதிருப்திக்கி ஒவ்வொரு சாமியா உண்டாக்கி வச்சிகிட்டய்ங்க....சாமி சாமின்னு இவென் சாமிக்கி காட்டுற கரிசனத்த...கொஞ்சமாச்சும் மனுசப் பய மேல காட்டலாமா இல்லையா?//

arumai dheva
manithan mel manithan konjam karisanam kattinnale pothum

gyamana kelvi?
aana pathi?????????????????????????????????????????????????????????????
Paleo God said…
//ஜீவன்பென்னி said...
காசியண்ணனும் தேவா அண்ணனும் ஒன்னுன்னு மட்டும் புரிஞ்சுடிச்சு//

சரமாரியா ரிப்பீட்டு!! :)))

--

அருமை தேவா சித்ராஜி எடுத்துக்காட்டி இருக்கும் வரிகளே நானும் சொல்ல விரும்பியது!
SASIKUMAR said…
காசியண்ணே,தேவாண்ணே......!தேவாண்ணே......!
Feros said…
"நம்மள எல்லாம் காப்பாத்துறதுக்குண்ணே....அப்புறம்...கெட்டவங்கள அழிக்கிறதுக்குண்ணே...."

நல்லாயிருக்குங்க...
அனு said…
காசியண்ணே சொல்றதும் கரெக்ட் தானே..

ரொம்ப heavyயான விசயத்த ஈசியா சொல்லிட்டீங்க.. நல்லா யோசிக்கிறீங்கப்பு...
கதை ரொம்ப நல்லாருக்கு.. முதலிலிருந்து கடைசிவரை விறுவிறுப்பாக செல்கிறது. தொடருங்கள் தேவா..
"நான்...உன்ன மாறி இருக்கணும்னு ஆசைப்பட்ட நான் கஸ்டப்படுவேன்... நீ என்ன மாறி இருக்கணும்னு நினச்சா நீ கஸ்டப்படுவே.....விழுந்த மண்ணுகேத்த மாறி மொளைக்கிது செடி....! புகுந்த கருவுக்கு ஏத்த மாதிரி அமையுது ஒவ்வொருத்தன் வாழ்க்கை...! இதுல எதுக்கு அடுத்தவன பத்தின ஆராய்ச்சி....?"
‍‍ ..... மாப்ள .... இந்த வாக்கிய‌த்தை எல்லோரும் பின்ப‌ற்றினாலே எந்த பிர‌ச்ச‌னையும் இல்லை. என்னை ரொம்ப‌ சிந்திக்க‌ வைத்த‌து உன‌து எழுத்து. வாழ்த்துக்க‌ள் மாப்ஸ்!!!!
அருமையான நடை..!!
ஹேமா said…
தேவா....அருமை அருமை.
விதங்களில் இதே கருத்தைப் பலர் சொல்லியிருந்தாலும்
நீங்கள் சொல்லியிருக்கும் விதம்
மனதில் ஆழப் பதிகிறது.
காசி அண்ணனை மறக்கவே முடியாது.
மாப்ள, இந்த பால் வீணாகுற(!) மேட்டரைப்பத்தி நானும் ரொம்ப நாளா யோசிச்சுக்கிட்டிரு(ந்தேன்)க்கேன்... அதுக்குக்கூட ஒரு தீர்வ எழுதீருக்க!! தெளிவான சிந்தனைவாதிதான் நீ... சூப்பரப்பு..
காசி அண்ணன் வெகுளித்தனமாய் பேசுவதாக ஊரார்கள் நினைத்திருந்தாலும் அவர் சொன்னது தான் உண்மை. அதை ஏற்றுக்கொள்ள எத்தனை பேருக்கு தைரியம் வரும். தேவாதான் ஏற்றுக்கொண்டாரா என்பதையும் விளக்கி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏன் என்றால் பல பேருக்கு முன் உதாரணமாக நீங்களே இருந்திருக்கலாம்.. அப்பறம் பொங்கல் கிடைத்திருக்கும் ஆனால் பார்வதி என்ன ஆச்சு... அருமையான கட்டுரை வாழ்த்துக்கள் தேவா.
விஜய் said…
அண்ணா கலக்குறீங்க....உங்க பதிவுல நீங்க தான் ஹீரோவா வரீங்க...சொல்ல வந்தத அழகா சொல்லி முடிப்பதுல நீங்க தான் அண்ணா முதல்...படிச்சு முடிக்கும்போது "அட" முடிஞ்சுடுச்சா அப்டின்னு பீல் பண்ண வைக்குறீங்க ...வாழ்த்துக்கள்
Unknown said…
கடவுள் என்பது புரிதல், அல்லது உணர்வு. தனக்குள் இருப்பது என இங்கு நிறைய குழப்பங்கள் உண்டு, அதனாலேயே குருவை மாற்றக் கூடாது என்பார்கள்,
நாம் கடவுளைத் தேடுவதைவிட வாழ்கையை ரசிப்பதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.. பொதுவாக நமக்கு ஒரு ஆறுதல், அல்லது பிடிமானம் தேவைப் படும்போது கடவுள் தேவைபடுகிறது.

காசி நல்ல பெயர் தேர்வு..
எல்லா கோயிலுக்கும் சாமிங்கதான் போகுது....இதுகளே சாமிய தேடினா எப்படி சாமி கிடைக்கிம்! கடைசிவரை சாமிய கண்டுபிடிக்க முடியாது ஏன் தெரியுமா சாமிஎல்லாருக்கும் இங்க இருக்கு... அவர் உறக்க நெஞ்ச தட்டிக் காமிக்கவும்.... //

அருமை தேவா.. ஆம் கடவுள் நம் அனைவரிடத்தும்தான் இருக்கார்..
மிகவும் அருமையான கருத்துக்கள்!! நன்றி நண்பரே!!
சத்தியமா கலக்கிருக்கீங்க அண்ணா ... எனக்கு என்ன சொல்லறதுன்னே தெரியலை .. என்னால எல்லாம் இந்த அளவுக்கு எழுத முடியாது ...
dheva said…
அகல்விளக்கு ராஜா @ நன்றி பாஸ்

ஜிவன் பென்னீ..@ உண்மைகளை தோலுரிக்கும் முயற்சியா? நன்றி தம்பி!

செளந்தர்....@ உண்மைதான் தம்பி!

வேலு....@ நன்றி நண்பரே!

சித்ரா...@ நன்றிங்க...உங்களின் ஊக்கம்தான்...!

ஜெயந்தி....@ நன்றி தோழி !

இராமசாமி கண்ணன்..@ நன்றி தம்பி!

மகராஜன்...@ நன்றி தோழரே...!

பலா பட்டறை..சங்கர்..@ நன்றி பாஸ்!

சசிகுமார்..@ நன்றிங்க...!

அனு...@ நன்றி தோழி!

ஸ்டார்ஜன்...@ நன்றி நண்பரே...!

ஜெரால்ட் வில்சன்....@ நன்றி மாப்ஸ்!

ஜெய்லானி...@ நன்றி!

ஹேமா....@ நன்றி தோழி!

விடுதலை வீரா....@ கட்டுரையிலேயே....உங்களுக்குக்கு பதில் இருக்கிறத்

விஜய்....@ நன்றிட் தம்பி!

கே.ஆர்.பி. செந்தில்...@ நன்றி தோழர்!

தென்னம்மை லட்சுமணன்..@ நன்றி தோழி!

லைஃப் ஸ்டைல் மாடிஃபிகேசன்...@ நன்றி தோழர்! (முதல் வருகைக்கு நன்றி!)

செல்வகுமார்....@ நன்றி தம்பி!

அப்பாவி தங்கமணி....@ ரொம்ப நன்றிங்க...!
தேவன் said…
// அப்பு...இவெங்க சொல்ற சாமி எல்லாம் வராது. இது வரைக்கும் எங்கணயும் வந்ததில்ல வரவும் வராது. அவன் அவன் மனதிருப்திக்கி ஒவ்வொரு சாமியா உண்டாக்கி வச்சிகிட்டய்ங்க....சாமி சாமின்னு இவென் சாமிக்கி காட்டுற கரிசனத்த...கொஞ்சமாச்சும் மனுசப் பய மேல காட்டலாமா இல்லையா? ///

உங்க கருத்தும் பார்வையும் சரிதான் அண்ணே, உங்க கருத்தடி பலம் நெறஞ்சதுதான்... அதுக்கு ஒரு சல்யூட்...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த