Skip to main content

ப்ளாச்சுலன்னா..ப்ளாச்சுல...!














ப்ளாச்சுலன்னா..ப்லாச்சுலன்னா தேனு மாதிரி இனிக்குமுன்னா..யாக்கா வாங்கி டேஸ்ட் பாருங்கக்கா...பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லும் பேருந்துகள் சில மணிகள் நின்று கிளம்பும் . சில பேருந்துகள் நிலையம் உள்ளே வந்து ஒரு சுற்று சுற்றி சில நிமிடத்திலேயே சென்று விடும்.

அந்த பேருந்து நிலையத்தில் மாற்றுப் பேருந்துக்காக ஒரு உச்சி 12 மணி கோடை வெயிலின் உக்கிரத்தை தாங்கியபடி நான் அமர்ந்திருந்தேன் . காத்திருந்த பொழுதில் என் பார்வை அடிக்கடி தடுக்கி விழுந்தது இந்தச் சிறுவனின் மீது. எனது கண்ணேட்டதில் 10 தாண்டியிருக்காது வயது. கருத்த தேகமும், படிய வாரின தலையும்...பட்டனுக்கு மாற்றாய் ஊக்கு போட்டு மூடியிருந்த சட்டையும், ஊதா நிற வெளுத்த கால் சட்டையும்..அவனின் குடும்பத்தின் பின்புலத்தை மெதுவாய் போதித்தன.


பம்பரமாய் வியாபரம் செய்வதும், கூடவே விற்கும் சக வியாபரிகளை விட தன்னை முன்னிறுத்தி தன்னுடைய பலாச்சுளைகளை விற்க பட்ட பிரயத்தனமும் அவனின் பொருளாதார தேவையை கண்முன் கொண்டு வந்து நிறுத்தின. சிலர் வாங்கினர்.... சிலர் வாங்கி பணம் கொடுத்து சில்லறை வாங்கும் முன் பேருந்துகள் நகரத் தொடங்கின...! பையன் ஓடோடி சென்று சில்லறை கொடுத்துக் கொண்டும்... வீசிய சில்லறைகளை பொறுக்கிக் கொண்டும் தனது வியாபரத்தை நகர்த்திக் கொண்டு இருந்தான்.

கொஞ்ச நேரம் பேருந்துகள் வரவில்லை அந்த நேரத்தில் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகளிடம் தன்னுடைய வியாபாரத்தை செய்ய முயன்று கொண்டிருந்தான். எனக்கு சற்று தொலைவில் ஒரு மத்திய வயது கொண்ட ஒருவர் நின்று கொண்டிருந்தார்...அண்ணா....ப்ளாச்சுலன்னா.... பாக்கெட் பத்து ரூவான்னா...அவன் கூவலை கேட்காமல் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதர் சட்டென்று திரும்பி...ஏம்பா படிக்கிற வயசுல... இப்படி யாவாரம் பண்றே...வீட்ல சொல்லி படிக்கிற வேலய பாரு.....

" நீ படிக்க வைக்கிறியான்னா... அப்டியே நான் படிச்சா வ்வுட்ல உள்ளவங்க...எப்டி சாப்பிடுறது...."

செவுட்டில் அறைந்த மாதிரி கேட்டுவிட்டு நகர்ந்து என்னிடம் வந்தான்...ப்ளாச்சுலன்னா...தேனாட்டம் இருக்குனா..வீட்டுக்கு வாங்கிட்டு போண்ணா..அண்ணா ப்ளாச்சுலன்னா....

உக்காரு தம்பி.... டீ சாப்டிறியா..! அத்தெல்லாம் வேணண்னா.. ப்ளீஸ்னா வாங்கிக்கன்னா....வியாபரத்தில் குறியாயிருந்தான் தம்பி....! சரிப்பா ஒரு பாக்கெட் கொடுன்னு வாங்கி விட்டு.... கொடுத்த சில்லறையை பர்சில் திணித்துக் கொண்டிருந்த போது....சரேலன்று சிமின்ட் பெஞ்சில் என் பக்கத்தில் அமர்ந்தான்...தம்பி!
எந்த ஊருண்ணா உனக்கு.... என் கேள்விக்கான பதில் கிடைத்ததும்...எனக்கு இங்கதானா பக்கதுல 3 கிலோமீட்டர் உள்ள கிராமாம்.

ஏம்பா படிக்கலியா நீ? கேள்வி கேட்டு முடியும் முன் இல்லண்ணா...வீட்டு சூழ் நிலைனா.. எங்க அப்பாரு ஊருல விவசயம் தான் ரெண்டு அக்கா ஒரு தங்கச்சின்னா எனக்கு. ஒரு அக்கா கண்ணாலம் செஞ்சு குடுத்த்துட்டோம்..அத்துக்கே இருந்த கொஞ்ச நிலத்த அப்பாரு வித்துதான் பண்ணி வச்சாரு. அத்த ஏண்ணா கேக்குற... குடும்பத்துல பிரச்சினை அப்பாரும் அம்மாவும் கஷ்டப்படுறப்பா இஸ்கூலுக்கு போறத்துக்க்கு புடிக்கலணா ..இங்க மொத்த கமிசன் யாவரம் பண்ற முதலாளிகிட வேல காலைல ஏழு மணிக்கு வருவேன்... சாமான் எடுத்து வித்தா எனக்கு கமிசன் துட்டு கிடைக்கும்..சீசனுக்கேத்த மாதிரி ...இப்போ ப்ளாச்சுசுல... !நல்லாருக்காணா? தேனு மாறி இருக்கும்...பேச்சுக்கிடையிலும் மார்கெட்டிங்க் செய்யும் உத்தி பழக்கத்தில் பற்றியிருந்ததை கண்டு வியந்தேன்.....!

ஏம்பா...சட்டப்படி தப்பாச்சே...சின்னப்பசங்க வேல செய்யக்கூடாதுன்னு கவர்மென்ட் சொல்லியிருகே.... நீ ஓடுற பஸ்ஸில ஏர்ற இறங்குற...யாராச்சும் பார்த்த பிரச்சினைதானப்பா.....

" அக்கா கண்ணாலத்துக்கு துட்டு இல்லேன்னு அம்மாவும் அப்பாரும் ராத்திரி புல்லா அழுதாங்க....சோறு போடுற நிலத்த வித்து கட்டிகுடுத்திட்டு..... மிதி இருக்குற அஞ்சு வவுத்த கழுவ இன்னா பண்றது...அப்பாரு அம்மாவும் கட்டட வேலைகி போகுதுங்க.... ஒரு நேரம் வேல இருக்கு ஒரு நேரம் இல்ல....எரியுற ரென்டு மஞ்ச பல்புக்கும் ஒரு ஓட்ட ரேடியோ பொட்டிக்கும் வர்ற கரன்ட் கூட கட்ட காசில்ல...அட மழ பேஞ்சா ஊத்துது வீடு அதுக்கு மாத்து கூற போட....ஒக்காந்தி ஒக்காந்தி பேசுறோம் வருசம் ஒண்ணாச்சி இன்னும் போடல....!

இன்னாணா கவர்மென்டு....அப்பாரு சைக்கிள் கட வெக்க எல்லா கர போட்டு கட்ன ஆளுகளையும் பாத்து பாத்து பேங்கு பேங்கா அலைஞ்சு என்னவோ டாகுமென்டாமெ அது எல்லாம் கொடுத்து பாத்தாரு. என்னமோ குறையுதுண்ணு ஒண்ணும் குடுக்கமாட்டேன்னு சொல்லீட்டங்க...இன்னாணா கவர்மென்ண்டு....எங்களுக்கு எல்லாம் பசிக்கும்னு கவர்மென்டுக்கு தெரியாதாணா.......கரண்டு இல்லாத வூட்டுக்கு எல்லாம் டி.வி பொட்டி கொடுக்குறாங்கணா..... ஹா...ஹா...ஹா... வாய் விட்டு சிரித்தான் அந்த பையன். நிறய வூட்டல என்ன மாறி பசங்க வேலக்கி போலேன்னா வீட்ல எல்லாருமே பட்னிதான்...."

பட படவென்று பொரிந்த பையன் ஒரு பேருந்து வந்தவுடன் ஓடிப் போய் விட்டான் தன்னுடைய வயிற்றுப்பிழைப்புக்காக...! எனக்கும் பேருந்து வந்த அவசரத்தில் ஓடிப்போய் ஏறிவிட்டேன்...இருக்கையில் அமர்ந்த பின்னும் "ப்ளாச்சுலான்னா...ப்ளாச்சுல" என்ற வார்த்தைகள் உரக்க ஒலித்துக் கொண்டு இருந்தது....அட...அவசரத்தில் பேர் கூட கேட்கவில்லையே....என்பதும் நியாபகம் வந்தது...

நம்மில் எத்தனையோ பேர்கள் பேருந்தில் செல்லும் போதும், பேருந்து நிலையத்திலும், இரயில்வே நிலையத்திலும் இது போன்ற ஏராளமான மனிதர்களை கண்டிருப்போம்...பெரும்பாலும் இவர்கள் முதாலளிகளாய் இருப்பதில்லை....ஒரு கமிசன் பேசிஸ் சிறு வியாபாரிகள்..! எப்போதும் பெரிய பெரிய கடைகளில்தான் வாங்குவேன் என்றில்லாமல் உறவினர் வீடுகளுக்கும் நண்பர்களை காணச்செல்லும் போதும்...இவர்களுக்கும் வியாபாரம் கொடுங்கள்....அது ஏதொ ஒரு கஸ்டப்படும் குடும்பத்திற்கோ அல்லது மனிதர்களுக்கோ போய் சேரலாம்.

அவரு..ஒரு முறுக்கு வியாபாரியாய், பழ வியாபாரியாய், வெள்ளரிக்காய் விற்பவராய், பூ விற்கும் பாட்டியாய், அல்லது இந்தப் பையன் போல் பலாச்சுளை வியாபாரியாக இருக்கலாம்....

வாய்ப்பளியுங்களேன்...அவர்களும் வாழட்டும்...!

நான் சென்ற பேருந்து வேகமாய் சென்றது.... செவுட்டில் அறைந்தது.....ஜன்னலோரக் காற்றும்


"நீ படிக்க வைக்கிறியான்னா... அப்டியே நான் படிச்சா வ்வுட்ல உள்ளவங்க...எப்டி சாப்பிடுறது...."

...என்று அந்த சிறுவன் கேட்ட கேள்வியும்......!


பின் குறிப்பு: வலைச்சர ஆபிசுக்கு பெர்மிசன் போட்டுட்டு வந்தேங்க....வர்ட்டா....


தேவா. S

Comments

நிரந்தரமான தீர்வுக்கு மட்டும் வழி இதுவரைக்கு இல்ல.
விஜய் said…
யதார்த்தத்தை எல்லோர் மனசுலயும் பதிச்சு இருக்கீங்க அண்ணா , முடிவு தெரிய வேண்டும் என்பதற்காக கொளுத்தி எறியப்பட்ட தீ அண்ணா இது, நிச்சயம் எரித்துவிட்டு தான் திரும்பும்...வீசுவது நமது கடமை ,என்றாவது நாம் வீசிய நெருப்பு பற்றி எறியும் ....அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா ..
க ரா said…
அருமயான கதை. யதார்த்தம். இவங்களுக்கு ஒரு விடிவுகாலம் வரனும்னா கவர்ன்மெண்டால மட்டும் முடியாது(ஏன்னா அவங்களுக்கு வேற வேலை நிரய இருக்கு). நம்மளும் எதுனாச்சும் பண்ணனும்.
நீ படிக்க வைக்கிறியான்னா... அப்டியே நான் படிச்சா வ்வுட்ல உள்ளவங்க...எப்டி சாப்பிடுறது//

சரியான கேள்வி...
///ண்டு இல்லாத வூட்டுக்கு எல்லாம் டி.வி பொட்டி கொடுக்குறாங்கணா..... ஹா...ஹா...ஹா...சார் //

moonil araium unmai
Chitra said…
தேனாய் இருக்கும் பலாச்சுளையில் ....... அந்த சிறுவனை போன்ற நிஜங்கள் படும் வேதனைகள் ....... நம் கையாலாகாத மனதில் தேளாய் கொட்டுகிறது.....
////ண்டு இல்லாத வூட்டுக்கு எல்லாம் டி.வி பொட்டி கொடுக்குறாங்கணா..... ஹா...ஹா...ஹா...//

உருப்படாத கவர்மெண்ட் கொடுக்கும் உருப்படாத இலவசங்கள். எது முக்கியமோ அதை கொடுக்காம டிவியை கொடுக்கறானுங்க...

மக்கள் பணத்திலேருந்து மக்களுக்கு கொடுத்துட்டு அதை இலவசம்னு வேற சொல்லுறானுங்க... வெட்கம் கெட்ட அதை வாங்கிட்டு ஓட்டுவேற போடுறாங்க.... எத்தனை ஆட்சிமாறினாலும்... இது போன்ற சிறுவர்கள் எண்ணிகை மட்டும் குறையாது....
மாம்ஸ் ரெண்டு ஓட்டுப்போட்டுருக்கேன்... எனக்கு இலவசமா என்னதரப்போறீங்க....:))
S Maharajan said…
அருமயான கதை.
S Maharajan said…
அருமயான கதை.
நிஜம்மாக கரண்ட் இல்லாத வீட்டுகு கிடைக்கும் பெட்டிகள் எல்லாம் 1500க்கும்1700க்கும் வெளியேவிற்பனையாகிறது.. சரியாகக்கேட்டிருக்கிறான்..
அருமையான நெகிழவைத்த கதை.. ஒவ்வொருவரியும் நெஞ்சில் பதிந்தது. இந்த கதையில் வரும் சிறுவன்போல எத்தனைஎத்தனையோ சிறுவர்களின் கதி.. ரொம்ப அருமையான கருத்துக்கள். நன்றி தேவா.
ஹேமா said…
யதார்த்தத்தை அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள் தேவா.தீர்வு !
Anonymous said…
வெகு நெரம் மனம் கனமாய் இருந்தது
தெரிந்தது இது இன்னும் தெரியாதது எத்தனையோ..!!
Deepa said…
//எங்களுக்கு எல்லாம் பசிக்கும்னு கவர்மென்டுக்கு தெரியாதாணா.......// :((


Heartrending...
மனதைத் தொட்ட பதிவு. இவர்களின் விடிவுகாலம் மட்டும் இன்னும் கேள்விக்குறியாய்..... அரசியல்வாதிகள் கவனிப்பார்களா?
இந்தமாதிரி காட்சிகளை ஒவ்வொரு பேருந்து நிலையங்களிலும் பார்க்கலாம் என்றாலும், விழுப்புரம், திண்டிவனம், பண்ரூட்டி போன்ற இடங்களில் அதிகமாய் பார்க்கமுடியும்... வாழ்க்கையில் வறுமையது சுருட்டிக்கொண்டது எத்தனை பிஞ்சிகளை... பாருங்கள் வேதனைதான்...
நண்பரே,

எதார்த்தத்தை ப்திவு செய்துள்ளீர்கள்.
நீங்கள் பார்த்த அந்த பையன் பிற்காலத்தில்
வணிகத்தில் பெரிய ஆளாகி அவர்கள் வீட்டு
வறுமை ஒழிய வேண்டுவோம்...

அன்புடன்,
மறத்தமிழன்.
மாப்ள, நீ ஒவ்வொரு விஷயத்தையும் எவ்வளவு நுணுக்கமா கவனிக்கிறன்றது அப்பட்டமா தெரியுது..

இதெல்லாம் நானும் பார்த்திருக்கேன், யோசிச்சிருக்கேன்...

ஆனால், நீ எழுதுற எழுத்துக்கு முன்னாடி என் யோசனையெல்லாம் வீண் அப்படின்னு தோணுது..

ஏன்னா, அதுக்கும் நீயே ஒரு தீர்வையும் எழுதீருக்க பாரு...! அங்கதாண்ட நீ நிக்கிற மாப்ஸ்.. சபாஷ்!
Unknown said…
siruvanin vazhkaium andha pala sulaiyai pola inimaiyagum ungal theervu nijamanal
சத்தியமா அப்படியே சிலிர்க்க வச்சிருக்கீங்க அண்ணா...
VELU.G said…
//
எப்போதும் பெரிய பெரிய கடைகளில்தான் வாங்குவேன் என்றில்லாமல் உறவினர் வீடுகளுக்கும் நண்பர்களை காணச்செல்லும் போதும்...இவர்களுக்கும் வியாபாரம் கொடுங்கள்....அது ஏதொ ஒரு கஸ்டப்படும் குடும்பத்திற்கோ அல்லது மனிதர்களுக்கோ போய் சேரலாம்.
//

கண்டிப்பாக செய்யலாம்

மிக அருமை
dheva said…
தம்பி ஜீவன் பென்னி
தம்பி விஜய்
தம்பி இராமசாமி கண்ணன்
தம்பி செளந்தர்
நண்பர் ள்K
தோழி சித்ரா
தோழர் நேசமித்திரன்
நண்பர் பலாபட்டறை சங்கர்
நண்பர் மமதி
மாப்ஸ்... நாஞ்சிலு- இருய்யா..உன்ன நேர்ல வச்சிக்கிறேன்.
நண்பர் மகராஜன்
தோழி முத்து லட்சுமி
நண்பர் ஸ்டார்ஜன்
தோழி ஹேமா...
நண்பர் ஜெய்லானி
நண்பர் தீபா
நண்பர் வெங்கட் நாகராஜ்
நண்பர் மறத்தமிழன்
மாப்ஸ் சிறுகுடி ராமு....!
நன்பர் சத்யா
நண்பர் வேலு
தம்பி செல்வகுமர்

அனைவருக்கும் எனது நன்றி கலந்த நமஸ்காரங்கள்!
//நம்மில் எத்தனையோ பேர்கள் பேருந்தில் செல்லும் போதும், பேருந்து நிலையத்திலும், இரயில்வே நிலையத்திலும் இது போன்ற ஏராளமான மனிதர்களை கண்டிருப்போம்...பெரும்பாலும் இவர்கள் முதாலளிகளாய் இருப்பதில்லை....ஒரு கமிசன் பேசிஸ் சிறு வியாபாரிகள்..! எப்போதும் பெரிய பெரிய கடைகளில்தான் வாங்குவேன் என்றில்லாமல் உறவினர் வீடுகளுக்கும் நண்பர்களை காணச்செல்லும் போதும்...இவர்களுக்கும் வியாபாரம் கொடுங்கள்....அது ஏதொ ஒரு கஸ்டப்படும் குடும்பத்திற்கோ அல்லது மனிதர்களுக்கோ போய் சேரலாம்.//
இது எல்லோராலும் செய்ய முடிந்த உதவி.
<a href="http://vivasaayi.blogspot.com/2010/06/june-28-2010.html>போன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்(சிபஎபா)</a>, இந்த இடுகைய சேர்த்திருக்கேன்.
pudugaithendral said…
அருமையான கதை.
sali said…
அட நம்மூர் தேவாவின் பிளாக்கா.... எழுத்து நடை இயல்பாக இருக்கிறது.தொடர்ந்து எழுதுங்கள்.எழுத்து உங்கள் வசப்படும்

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த