Skip to main content

சாதியே....உன்னை வெறுக்கிறேன்....பதிவுத் தொடர் II !



















நித்தம் நகர்ந்து கொண்டிருக்கிறது....வாழ்க்கை! மறுத்துக்கொண்டும், ஆதரித்துக் கொண்டும்..விமர்சித்துக் கொண்டும்...கொண்டாடிக் கொண்டும் நகர்ந்து கொண்டிருக்கிறது மானுடம். ஒவ்வொரு மூளையும் ஒவ்வொரு சித்தாந்தத்தை பிடித்துக் கொண்டு நகர்ந்து கொண்டிருக்கிறது. தன்னுடைய சித்தாந்தத்துக்கு முரண் பட்டவர்களை பைத்தியம் என்று ஒவ்வொருவறும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்....உண்மையில் எந்த சித்தாந்தமும் இல்லை என்று உணர்ந்தவர்கள் இவர்களை விட்டு தள்ளி இருக்கவே ஆசைப்படுகிறார்கள்.

சாதி... .ஒரு பெருங்கொடிய... நோய்....! வாருங்கள் தோழர்களே....பேசாப் பொருளை பேசத் துணிவோம்!


இதுவரை...

இனி....


பேருந்தினுள் என் தோள் தொட்டு திருப்பியவர் என்னைக் கும்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்தேன்.....! நெகிழ்ச்சியோடு "அண்ணே....காமாட்சி அண்ணே.... நல்லாயிருக்கிங்களா என்று அவரை கேட்டவுடன் " அப்பு நீங்க.. மணி ஆத்தா (என் அம்மா) மயந்தானே (மகன்)? செல்லம் ஐயா தங்கச்சி மயன்....என்று கேட்ட 55 வயது காமாட்சி அண்ணன் சலவைத் தொழில் செய்பவர். நின்று கொண்டிருந்த காமாட்சி அண்ணன் நீண்ட போரட்டத்துக்கும் என்னுடைய கடுமையான வலியுறுத்தலுக்கும் பிறகு அவருடைய சீட்டில் தளர்வற்ற நிலையில் அமர்ந்தார்.


ஆத்தா வந்திருக்காகளா...? நீங்க சும்மாயிருக்கீகளா....பள்ளிக்கூடம் லீவா (காலேஜ்) ...அன்பையும் பாசத்தையும் வார்த்தைகளில் இழைத்து என்னை நோக்கி அனுப்பிக் கொண்டிருந்தார் காமாட்சி அண்ணன். " இருக்கமப்பு....என்று ஒரு வித...வெறுமையுடன்..." அவரின் நலம் பகிர்ந்தார். என்னை தடுத்து எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தார் அப்போது அவரின் முகத்தில் ஒரு பிரகாசம். மண்டை, மக்கு, குட்டி தின்னி, பாம்பு தின்னி... இதுதான் எம்மக்களுக்கு உயர்சாதி என்று சொல்லக் கூடிய.....மனிதர்கள் வைத்து இருக்கும் பெயர்கள். இப்படி கூப்பிடுவதின் மூலம் அவர்களை மனோதத்துவ ரீதியாகவும் அடக்கி விட வேண்டும் என்ற வெறி....என்பது அப்போதை என்னுடைய மூளைக்குள் ஏறவில்லை. பல நேரங்களில் நான் ....ஏய்.. மக்கு இங்கு வாய்யா என்று சிறு வயதில் காமாட்சி அண்ணனை கூப்பிட்ட கேவலமான தருணங்கள் நினைவுக்கு வந்தன.

எல்லாமே.. மிகப்பெரிய மனித சதி.... ! ஒரு விசயம் பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கே ஒரு அவலம் புலப்படும். மனிதர்களின் தனிப்பட்ட தேவைகளை பூர்த்திசெய்ய தொழில் செய்த எல்லோரையும் மதிக்காமல் சக மனிதனே... அவனை தாழ்மைப்படுத்திய அவலம் நடந்தேறியுள்ளது நமக்குத் தெரியவரும். இதன் பிண்ணனியில் இருந்த நீதியை.. சாஸ்திரத்தை... மனிதர்களை.. .ஓராயிரம் முறை கொளுத்தி கொளுத்திய சாம்பலை கோடி முறை கொளுத்தினாலும்....எமக்குத் திருப்தி ஏற்பட போவதில்லை. இவரைத் தொட்டால் தீட்டு என்று சொன்னவர்கள் நாக்குகள் எல்லாம் ஒரே வீச்சில் அறுக்கப்பட்டிருக்க வேண்டும். எந்த ஒரு மனிதன் தான் வாழ சக மனிதனை அடிமைப் படுத்த....இத்தனையும் வகுத்தானோ.... அவனின் மூளையை நெருப்பிலிட்டே பொசுக்கி இருக்க வேண்டும்......


கூட்டலும்....கழித்தலும்....
பெருக்கலும்....வகுத்தலும்
எமக்கான தீர்வே அல்ல....!
கொடுத்தலும் பெறுதலும்...
எம்மை எப்போதும்
வசீகரிக்கப் போவதுமில்லை....
நித்தம் நசுக்கப்பட்டு....
ஒவ்வொரு ஊரின் கோடியிலும்
இருத்தலுக்கும் இல்லாமைக்குமிடையே....
நகர்ந்து கொண்டிருக்கிறது எமது வாழ்வு



பகுத்தறிவு பகலவன் பெரியார் அவர்கள் ஒரு பக்கம் போராடி இந்த சாதித் தீயை அணைத்து கொண்டிருந்த வேளையில் அந்த கொடுந்தீ அணையாமல் இருக்க பெரும்பாலன உயர்சாதி என்று சொல்லக் கூடிய மனிதர்கள் பாடுபட்டும் கொண்டிருந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை. அதனால் தான் முழுமையாக இந்த சாதி மனிதர்களை விட்டுப் இன்னும் போகவில்லை.....! எமது கிராமத்துக்கான பேருந்து நிறுத்தம் வரும் முன் ... எழுந்தே விட்டார்... காமாட்சி அண்ணன்.... எங்கள் ஊர் ஆட்கள் யாராவது பார்த்தால்....

" என்னடா... சவுடால உக்காந்துகிட்டு வர்ற என்று கேட்டுவிடுவார்கள் என்ற பயம் காமாட்சி அண்ணனுக்கு. " அப்பு இந்தாங்க.. உங்க டிக்கட்டு...... யாரும் கேட்டா நான் டிக்கட்டு எடுத்தேன்னு சொல்லிறாதியப்பு...என்று சொல்லிவிட்டு வெற்றிலைக் கறை படிந்த பல் காட்டி.. வெகுளியான மனம் காட்டி சிரித்தார் அந்தப் பெரியவர். ஏன் நீங்க எடுத்தீங்கன்னு சொன்னா என்ன ஆகும்? என்று வெகுளியாய் நான் அவரிடம் கேட்டபோது..... பதில் சொல்லத் தெரியவில்லை... "இல்லப்பு.. நான் டிக்கட்டு எடுத்தேன்னு சொன்னா வைவாக.....(திட்டுவாங்க...) நீங்க ஒண்ணும் சொல்லதீக..."ன்னு சொல்லிக் கோண்டிருந்த போது......

கண்டக்டர்...கத்தினார்... " யாருண்ணே..காய ஓட முக்கு கேட்டது வெரசா (வேகமா) இறங்குங்க... செக்கிங்.. கிக்கிங்க் வந்தா.. நமக்கு ஏழரைய கூட்டீறூவாய்ங்கே..." கண்டக்டரின் குரலுக்கு ஒரு முறைப்போடு இரண்டு மூன்று மீசைகள்... அந்த ஸ்டாப்பிங்கில் இறங்கின... அந்த வாசமான கருவாட்டை எடுத்துக் கொண்டு ரெண்டு அப்பத்தாக்களும் இறங்கினர்.... ! வண்டிய நிறுத்தலேன்ன... தலிய அத்துறுவோம்ல.. சொன்னபடி அவர்கள் நகர.. கண்டக்டரின் விசிலுக்கும்... சற்றே கூட்டம் குறைந்த பேருந்து நகர ஆரம்பித்தது.

அடுத்த 10 வது நிமிடத்தில் எங்கள் ஊர் வந்தது.... நானும் காமாட்சி அண்ணனும் இறங்க... காமாட்சி அன்ணே வரட்டுமான்னே...வீட்டுக்கு வாங்க.. என்று தோளில் கை போட்டேன்.. படக்குன்னு தட்டி விட்டவர்....சுத்தி முத்தியும் பார்த்துவிட்டு வர்றேன்ப்பு....என்று சொல்லி முடிப்பதற்கு முன் டீக்கடை வாசலில் இருந்த மத்திய வயது கொண்ட ஒருவர் சட்டையில்லா உடம்போடு வேகமாய் ஓடிவந்து.. ஏதோ காமாட்சி அண்ணன் காதில் சொல்ல.....அவசரமாய்....சட்டையைக் கழற்றினார்....காமாட்சி அண்ணன்.....


ஏன்ணே.. என்னாச்சு... நான் கலவரமாய் கேட்க ....அவர் காதில் சொன்ன விசயம் எனக்கு திடுக்கிடலை ஏற்படுத்தியது....1997 களுலுமா இப்ப்படி?


(வேறு வழியில்லை... நான் இதைத் தொடர் பதிவாகத்தான் கொண்டு செல்லவேண்டும் .... எத்தனை பதிவுகள் வரும் என்று தெரியவில்லை...... நெருப்பு தீரும் வரை எரியலாம் என்று தீர்மானித்துள்ளேன்.....! ஒரு நூற்றாண்டு அழுக்கு இது.....என்னால் களைய முடியும் என்று நம்பவில்லை.....ஆனால் இதன் கொடுமைகளை சொல்லி மரித்தவன் என்ற திருப்தி கொள்ளும் என் ஆன்மா...)


( நெருப்பு....இன்னும் பரவும்)


தேவா. S

Comments

Unknown said…
மிக தேர்ந்த எழுத்து நடை.. இடையில் கையாளப் பட்ட கவிதை முகத்தில் அறைகிறது..
பாராட்டுக்கள் தேவா..
இதை ஒரு பதிவல் சொல்ல முடியாது...
Riyas said…
//இருத்தலுக்கும் இல்லாமைக்குமிடையே....
நகர்ந்து கொண்டிருக்கிறது எமது வாழ்வு//

மிக அருமையாக சொல்கிறீர்கள்.. அழகான எழத்து நடை தொடர்ந்து படிக்கலாம்.. தொடருங்கள்
நிச்சயம் ஓர் நாள் ஒழியலாம் சாதிக்கொடுமை..
தந்தைபெரியார் இட்ட தீ இன்னும் எரிந்துக்கொண்டுதான் இருக்கிறது. எரிந்துக்கொண்டே இருக்கும். தாங்கள் இட்ட தீயும் அத்துடன் இணைந்து சாதீயை ஒழிக்கட்டும்.
வாழ்த்துக்கள் தோழா...
ஹேமா said…
கவிதையோடு சொல்லியிருக்கும் விதம்
உணர்வோடு நகர்கிறது.
boss todanrhtu eluthungal kadisi pagathil en comment varum
அருமையா இருக்கு.
Feros said…
மிக அருமையாக சொல்கிறீர்கள்,,,,
அருமையா இருக்கு

நெருப்பு....இன்னும் பரவட்டும்...
சாதி இல்லை சா`தீ’
நல்லா எழுதியிருக்கீங்க. தொடருங்கள்.
ஜாதி எந்த மொழியிலும் எனக்கு பிடிக்காத வார்த்தை. அருமையான பதிவு நண்பரே!!
movithan said…
ஜாதிகள் இல்லையடி பாப்பா ....
என்று பாடப்பட்ட நாட்டில் ...............

அவன் அந்தத்தாய் வயிற்றில் பிறந்ததுக்கு கொடுக்கும் விலை கொடூரம்.
//ஒரு நூற்றாண்டு அழுக்கு இது.....என்னால் களைய முடியும் என்று நம்பவில்லை//
நம்பிக்கைதான் வாழ்கை ,எங்களால் முடிந்ததை நாம் விதைப்போம்.

பெரியாரின் படம் கதைக்கு துணைபோகிறது.

வாழ்த்துக்கள்.
dheva said…
கே.ஆர்.பி. செந்தில் @ நன்றி தோழர்

செளந்தர் @ தம்பி ... உண்மைதான்... பேனால் இங்க் இருக்கவரைக்கு எழுதலாம்.. ஹா..ஹ...ஹா!

ரியாஸ் @ நன்றி நண்பரே... குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்ச்சி வரவேண்டும்!

வீரா @ நன்றி வீரா...!


ஹேமா... @ உங்க கவிதை படிச்சுட்டு மிரண்டு போய்ட்டங்க... நன்றி ஹேமா!


கார்த்திக் @ சரி பாஸ் ... மொத்தமா சொல்லுங்க.. ஹா.. ஹா.. ஹா!


ஜெயந்தி....@ நன்றி தோழி!

ஜெய்லானி....@ ஏங்க சார்ஜால இருக்கீங்க... கான்டக்ட் நம்பர் சொல்லுங்க......! நன்றி நண்பரே!


பெரோஸ் @ நன்றி தம்பி!


அம்பிகா.....@ உண்மைதாங்க...!

ரமேஸ் (சிரிப்பு போலி)..... @ நன்றி தம்பி!


மால்குடி....@ தொடர்ச்சியான வருகைக்கு நன்றி தோழர்!
என்ன கொடுமை தேவா இது..!!

நிறைய போடுங்க......!!!
//ஒரு நூற்றாண்டு அழுக்கு இது.....என்னால் களைய முடியும் என்று நம்பவில்லை.....ஆனால் இதன் கொடுமைகளை சொல்லி மரித்தவன் என்ற திருப்தி கொள்ளும் என் ஆன்மா...//

இணைந்தும் தொடர்ந்தும் போராடுவோம் நண்பா!
Mahi_Granny said…
தொடருங்கள் தம்பி. நெருப்பு பரவட்டும்
நல்லா பதிவு பண்ணி இருக்கீங்க உண்மை சம்பவத்தை. வட்டார வழக்கு மாறாம சொல்ற விதம் இன்னும் நல்லா இருக்கு. என்ன ஆச்சு அப்புறம்?
Chitra said…
weekend, I hardly have time to come to the blog "world".

It is an interesting topic. :-)
மிகவும் அழகான, தெளிவான, நேர்த்தியான எழுத்து நடை தேவா.... எதார்த்தத்தை மிக எதார்த்தமாக சொல்கிறாய். வாழ்த்துக்களடா நண்பா...!
எங்கள் ஊரிலும் இதுபோல் எவ்வளவோ நிகழ்ச்சிகள் இன்றும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது...! முற்றுப்புள்ளி வரும்நாளை விரைந்து கொணர்வோமடா..
அன்பன்,
சுப. இராமநாதன், சிங்கப்பூர்
dheva said…
ஜெய்லானி....@ ஹா...ஹா...ஹா ...போட்டுடலாம் ஜெய்லானி...!


கும்மி @ நன்றி தோழர்...! சேரட்டும் நமது கரங்கள்... நமது கோப நெருப்பில் அழிந்தே போகட்டும் சாதி!


மகி @ உங்கள் உற்சாகத்துக்கு நன்றி அண்ணா...!

அப்பாவி தங்கமணி.....@ முதல் வருகைக்கு நன்றி.....காத்திருங்கள் தோழி... ஹா... ஹா..ஹா! சொல்ல வேண்டியது நிறைய இருப்பதால் ஒரு பதிவோடு முடிக்க இயலவில்லை.


சித்ரா.....@ ஆமா.. உங்களதான் காணோமேன்னு பாத்துட்டு இருந்தேன்.. ஒரு வலைச்சரத்தின் ஆசிரியராய் இருப்பாதால் நேரமின்மை ஒரு காரணமாயிருக்குமோன்னு கூட யோசித்தேன். நன்றி தோழி!

சிறுகுடி ராமு @ மாப்பு.... நன்றிடா....!
விஜய் said…
// இவரைத் தொட்டால் தீட்டு என்று சொன்னவர்கள் நாக்குகள் எல்லாம் ஒரே வீச்சில் அறுக்கப்பட்டிருக்க வேண்டும். எந்த ஒரு மனிதன் தான் வாழ சக மனிதனை அடிமைப் படுத்த....இத்தனையும் வகுத்தானோ.... அவனின் மூளையை நெருப்பிலிட்டே பொசுக்கி இருக்க வேண்டும்......//

நிஜமாய் நம்முள் எரிய வேண்டிய நெருப்பு அண்ணா...நம்மால் இதற்கு முடிவு கிடைக்குமா என்று நீங்கள் என்ன வேண்டாம், நீங்கள் கொளுத்தி இருக்கும் நெருப்பு நிச்சயம் பல இளைய இதயங்களில் நெருப்பை மூட்டி இருக்கும், விரைவில் எரியபோகிறது...எழுத்துக்கள் புரட்சியை உண்டாக்கும் என்பதை பிரெஞ்சு, ரஷ்ய புரட்சிகளில் இருந்து அறிய முடியும். ஸ்டாலின்,லெனின் அவர்களும் எழுத தொடங்கும் முன்பு இப்படி நினைத்து இருக்கலாம், ஆனால் அவர்கள் எழுதியவை இன்று.........
Anonymous said…
ஜாதியின் பெயரில் மக்களை அடக்கி ஆண்டதும், அவர்களை தீண்டத் தகாதவர்கள் என்றும், மேல் சாதியினருக்கு நிகரானவர்கள் அல்ல என்றும் அவமானப் படுத்தும் வகையில் நடத்தியதெல்லாம் நிச்சயம் தவறுதான். ஆனால் ஜாதியே வேண்டாம் என்று ஏற்றுக் கொள்ள எல்லோரும் தயாரா? இட ஒதுக்கீட்டை இழக்கத் தாயாரா? இட ஒதுக்கீடு இருக்கும் போதே 2% உள்ள "அவா இவா"-க்கள் 98% சதவிகித மத்திய அரசுப் பணிகளை ஆக்கிரமித்துள்ளனர், இதை நீக்கி விட்டால் சுத்தம், பள்ளி கால்லூரிகளிலோ, வேலை வாய்ப்பிலோ ஒன்றும் மிஞ்சாது. அங்குதான் இடிக்கிறது. K.ஜெயதேவா தாஸ்
Er.L.C.NATHAN said…
mudiyaathu ,jaathikalai ozhikka mudiyaathu! innum 200 varusam aanaalum mudiyaathu.yean entraal jaathikku sangkangkal, idaothukkeedu , ottup pichai, irukkum varai ,mudiyaathu jaathikalai ozhikka mudiyaathu!
டச்சிங்க் பதிவு... மனிதன் தன் சுயநலத்திற்காக உண்டாக்கிய சாதியும் மதமும். இப்போத மனிதனையே ஆட்கொண்டு விட்டது... நானும் வெறுக்கிறேன் இந்த சாதியை...
smart said…
எல்லாம் சரி ஒழிக்கப்பட வேண்டியது சாதிதான்.
1) ஆனால் இதில் பெரியார் பெயர் எப்படி வந்தது. அவருக்கும் சாதி ஒழிப்புக்கும் அவ்வளவாக சம்மந்தமில்லையே!
2) நீங்கள் குறிப்பிடும் படி ஒரு சமுகத்தை திட்டச் சொல்லி எந்த சாஸ்த்திரமும் சொல்லாத பொது அதை எதற்கு எரிக்கணும்? ஒரே குழப்பமாயிருக்கே! யார் அப்படி பேசிகிறார்களோ அவர்களை எதிர்ப்பதைவிட்டு சம்மந்தமில்லாமல் வேரயாரையோ எதிர்ப்பதாகத் தெரிகிறது.

பி.கு. பெரியார் ஒரு தனிப்பட்ட ஜாதியை ஒழிக்கத் தான் பாடுபட்டாரே ஒழிய சாதி ஒழிக்க அல்ல
பாராட்டுகள் தேவா..

சாதி ஒழிப்பில் நானும் முழு அக்கறை கொண்டவள்..

தொடருங்க..


வாழ்த்துகள்..

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த