Pages

Tuesday, July 13, 2010

தேடல்.....13.07.2010!
உங்களைப் பார்த்தால் நாத்திகர் போலத் தெரிகிறதே? சமீபத்தில் ஒரு நண்பர் என்னிடம் கேட்ட கேள்வி இது. நான் நாத்திகனா? இல்லை என்னை நாத்திகனாக நீங்கள் நினைக்கிறீர்களா? இது நான் அவரிடம் கேட்ட கேள்வி. அவர் சொன்னார் உங்களின் எழுத்துக்களைப் பார்த்தால் நீங்கள் கடவுள் இல்லை என்று சொல்வது போல எனக்குத் தோன்றியது அதுதான் கேட்டேன் என்று சொன்னார். அது அவரின் தீர்மானிப்பு அல்லது நண்பரின் மூளை அவருக்கு ஏற்படுத்திய சவுகரியம் அதை என் மீது திணித்து சரி என்று உணரும் பட்சத்தில் தமது தீர்மானிப்புக்கு இரை கிடைக்க செய்யும் முயற்சிதான் இந்தக் கேள்வி. நான் எப்படி இன்னொருவரின் அனுமானத்திற்கும் எதிர்பார்ப்புக்கும் பதில் சொல்வது.

இது ஒரு வகை என்றால்....இன்னொரு சகோதரர் என்னிடம் வேறொரு நாள் வந்து நீங்கல் கடுமையான ஆன்மீகவாதி போலத் தெரிகிறதே....சிவபுராணம் பற்றிச் சொல்கிறீர்கள், கோவில் எதற்கு என்று சொல்கிறீர்கள், சிவவாக்கியர் பற்றி பேசுகிறீர்கள் ம்ம்ம்ம் எப்படி மூட நம்பிக்கைகளுக்குள் விழுந்து இப்படி போலியை நம்புகிறீர்கள்....பகுத்தறிவு ஒன்று இருக்கிறது அதை உங்களைப் போன்றவர்களே...விட்டு விட்டால் என்ன அர்த்தம்....? என்று கேட்டார். மறுபடியும் இதுவும் அனுமானம் அல்லது அவரின் தீர்மானத்தை சரி என்று உறுதி செய்ய மனது எடுக்கும் முயற்சி...சரியா?

வாழ்க்கையை வாழ....குறைந்த பட்சம் மனிதனாக இருந்தால் போதாதா? ஒன்று கடவுள் ஆதரிப்பாளாரக இருந்து அதைப் பற்றி தத்துவங்கள் பயின்று....கடவுள் இருக்கிறார் என்று உறுதி செய்ய ஒராயிரம் புராண உதாரணங்கள் மற்றும் கதைகள், நம்பிக்கைகள்...என்று எல்லாம் தெரிந்து எல்லாவற்றுக்கும் கடவுள் மேல் பாரமிட்டு....தங்களை தாமே அறிந்து கொள்ளாமல் வேறு எவர் பின்னோ ஓட வேண்டும். அதிர்ஷ்டவசமாக நூற்றில் ஒருவர் தன்னைப் பின் தொடர்பவர்களை நல்வழிப் படுத்தி உள் நோக்கி அவர்களை சிந்திக்க வைத்து தான் யார் என்று முதலில் ஆராயச் சொல்லி எந்த வித கட்டணமும் இன்றி வழி நடத்துதலை செய்து விடும் அற்புதமான ஆசிரியர் ஆக இருக்கிறார்.

மீதமுள்ள 99 பேரும் தன்னுடைய புலமையை, கற்றறிந்த நூல்களின் தத்துவங்களைச் சொல்லி மக்களை மயக்கி தன்னை ஒரு மிகப்பெரிய சக்தியாய் காட்டிக் கொண்டு, பிரச்சினைகளுக்கு நடுவே நகரும் சாமானிய மக்களிடம் ஒரு மிகப் பெரிய வசீகரத்தை உண்டாக்கிக் கொண்டு தங்களின் அறிவுத் திறனால், சொற்பழிவாற்றும் திறனால் மிகப்பெரிய மாயையை உண்டாக்கி தங்களின் வாழ்க்கையை சுபிட்சமாக ஆக்கிக் கொள்கின்றனர்.

சுமார் ஒரு லட்சம் பேர் போய் ஒரு சாமியாரிடம் குறைகள் சொல்லி ஆசிர்வாதம் கேட்கும் போது ஒரு ஆயிரம் பேரின் பிரச்சினை ஆட்டோமேடிக்காக அவரவரின் சூழலுக்கும் திறனுக்கும் ஏற்ப தீர்ந்து விடுகிறது. பிரச்சினை எங்கு ஆரம்பிக்கின்றது என்றால் இந்த ஆயிரம் பேரிடம் இருந்துதான்...ஆமாம் இந்த ஆயிரம் பேரும் தான் கடவுளாய் நம்பும் சாமியார்தான் தீர்த்து வைத்ததாய் நம்பத்தொடங்குகிறார்கள்,..இந்த ஆயிரம்பேர்தான் டி.வியிலும் பத்திரிகைகளிலும் பேட்டி கொடுத்து அந்த தனிப்பட நபரின் துதி பாடுகிறார்கள். இந்த ஆயிரம் பேர் மேலும் பல்லாயிரக்கணாகான ஆட்களை அவர்கள் பின்பற்றும் சாமியாரிடம் இழுக்கிறார்கள்.

ஆனால் நிஜத்தில் கடவுள்தன்மையை விட்டும், வாழ்க்கையை விட்டும் வேறெங்கோ சென்று விடுகிறார்கள். கடவுள் பக்தி என்ற போர்வையில் உண்டியலில் காசு போடுபவர்கள் தெருவில் பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கும், வறியவர்களுக்கும், முதியவர்களுக்கும் ஒன்றும் கொடுப்பதில்லை. தியானம் கற்கவும், யோகா செய்யவும் லட்சங்களில் செலவு செய்பவர்கள் எத்தனையோ ஏழைக் குழந்தைகளுக்கு கல்விச் செலவினை ஏற்கலாம்....இது இது...இந்த இடத்தில்தான் கடவுள் பெயர் சொல்லிக் கொண்டு கடவுளுக்கு எதிராக செயல்படுவதாக எனக்குப் படுகிறது.

உங்கள் கடவுள் இருக்கிறார் என்றே வைத்துக் கொள்வோம்...அவர் பணக்காரர்களை அதிக பணம் செலுத்தினால் ஸ்பெசல் தரிசனம் செய்ய அனுமதித்து வறுமையான மக்களை பின்னே கூட்டத்தில் நிற்க வைத்து தரிசனம் செய்தால் அவர் நியாயமானவரா? நீங்களே சொல்லுங்கள்.... ! கடவுள் ஒருக்காலும் அப்படி இருக்க முடியாது அப்படி இருந்தால் அவர் கடவுளாக இருக்க முடியாது...... அதானால் தான் மிகைப்பட்டவர்க்ள் நம்பிக் கொண்டிருக்கும் அல்லது பின்பற்றிக்கொண்டிருப்பது தங்கள் மனதின் நிர்ணயத்தையும், சுயகருத்துக்களையுமேயென்றி கடவுளை அல்ல.....

யோகாவும், தியானமும் இந்தியாவின் பூர்வாங்க சொத்து....இதை படித்து அறிந்து கற்றவர்கள் ஏதோ ஒரு நியாயமான கட்டணம் கேட்டால் பரவயில்லை....சிவசூத்ரம் கற்க...லட்சங்களில் காசு...???? எப்படி மனிதர்களே இவர்களோடு ஒத்துப் போகிறீர்கள்....? கடவுள் என்று இருந்தால்..அவரின் கோபம் முதலில் தன்னை பின்பற்றுகிறேன் என்று சொல்லிக் கொண்டு அவரின் பெயரை கெடுக்கும், அரசியல் செய்யும் ஆத்திகர்களை அழிப்பதில்தான் இருக்கும்....

கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவர்கள் ஆராய்ச்சியிலும் தேடலிலும் இருக்கிறார்கள் என்றுதான் சொல்வேன்...இறுதி உண்மை பற்றி அறியும் மிகுந்த வேட்டையோடு தேடுகிறார்கள் ஆனால் என்ன ஒன்று ...ரொம்ப உக்கிராமாக தேடுகிறார்கள்.....அந்த உக்கிரத்தில் அவர்களின் சாடல்கள் எல்லாம் மூட நம்பிக்கைகளை பின்பற்றும் மனிதர்ள் மீது ஆக்ரோஷமாய் பாய்கிறது....அவர்கள் வழிபடும் கடவுள் மீது இன்னும் ஆக்ரோஷமாய் பாய்கிறது. பல நேரங்களில் அவர்களின் தேடல் மட்டுப்படும் அளவிற்கு இவர்களும் கருத்துக்களை சுமந்து கொண்டு கடவுள் மறுப்பு என்று மட்டுப்பட்டு விடுகின்றனர்...இப்படி மட்டுப்படும் போது பிரபஞ்ச ஆராய்ச்சி அல்லது தேடலுக்கு புறமாகி விடுகிறார்கள். ஆனால் பல வகையிலும் சத்தியத்திற்கு அருகில் இருக்கிறார்கள் என்றுதான் சொல்வேன்......

இன்னும் சொல்லப்போனால்..... நாத்திகனாகவும்...அல்லது ஆத்திகனாகவும் இருப்பதை விட்டு விட்டு...குறைந்த பட்சம் மனிதர்களாக இருந்து சகமனிதனை நேசித்து....சக ஜீவராசிகளை நேசித்து ஒவ்வொரு உயிருக்கும், வெளிப்பாட்டுக்கும் ஒரு மதிப்பு கொடுத்து....இயல்பாய் சுவாசிப்பது போல எதார்த்த வாழ்வு வாழ்வது.....எவ்வளவு அழகானது....

ஆமாம்..... நான் ஆத்திகனுமில்லை... நாத்திகனுமில்லை......சக உயிர்களை மதிக்கத் தெரிந்த...வாழ்க்கையை வாழும் சாதாரண மனிதன்!

பின் குறிப்பு: நண்பர் கே.ஆர்.பி செந்தில் " எனது ஆன்மிகப் பயணம்" என்ற பெயரில் தொடர் பதிவு கேட்டிருந்தார். அடுத்த பதிவில் அது பற்றி எழுதுகிறேன்.

தேவா. S

Photo Courtesy: Ms. Ramya pilai

29 comments:

விஜய் said...

உண்மையை தேடிக்கொண்டு இருக்கும் அனைவருக்கும் இது ஒரு புரிதலையும், தெளிதலையும் ஏற்படுத்தி இருக்கும், மிக அருமையான பதிவு அண்ணா,


ஏழையின் அழுகைல எப்படிங்க , சிரிப்பும், சந்தோசமும் பிறக்கும், கண்ணை திறந்து பாருங்க உங்களுக்கு பக்கத்துல அத்தனை பேர் அழும்போதும் எப்படி உங்களோட சிரிப்பு சத்தம் உங்களுக்கு கேட்கும், முதலின் அழுபவர் கலையும்,வாழக்கையை தேடுபவரையும் தேற்றுங்கள் , நிச்சயம் நீங்கள் சிரிக்கும் சத்தம் உங்களுக்கு கேட்கும் மனதளவில் சந்தோசமாய்...

அருமையான பதிவு...வழக்கம் போல ஆணியடித்தாற்போல் வாசகனின் நெஞ்சில் உங்கள் பதிவுகள் ......

LK said...

athellam pogatum.. eppa todargalai mudipeenga. atha sollunga

விஜய் said...

உண்மையை தேடிக்கொண்டு இருக்கும் அனைவருக்கும் இது ஒரு புரிதலையும், தெளிதலையும் ஏற்படுத்தி இருக்கும், மிக அருமையான பதிவு அண்ணா,


ஏழையின் அழுகைல எப்படிங்க , சிரிப்பும், சந்தோசமும் பிறக்கும், கண்ணை திறந்து பாருங்க உங்களுக்கு பக்கத்துல அத்தனை பேர் அழும்போதும் எப்படி உங்களோட சிரிப்பு சத்தம் உங்களுக்கு கேட்கும், முதலின் அழுபவர் கலையும்,வாழக்கையை தேடுபவரையும் தேற்றுங்கள் , நிச்சயம் நீங்கள் சிரிக்கும் சத்தம் உங்களுக்கு கேட்கும் மனதளவில் சந்தோசமாய்...

அருமையான பதிவு...வழக்கம் போல ஆணியடித்தாற்போல் வாசகனின் நெஞ்சில் உங்கள் பதிவுகள் ......

ஜீவன்பென்னி said...

ஐயா இந்தப்பதிவு பதிவு விளங்கிடுச்சே. ஜாலி ஜாலி...//சக உயிர்களை மதிக்கத் தெரிந்த...வாழ்க்கையை வாழும் சாதாரண மனிதன்!// அடிநாதமே இதுதான. ஆனா ஒரு விசயம் அறிஞ்சவுக்கும், தெரிஞ்சவனுக்கும், புரிஞ்சவனுக்கும் உணர்ந்தவனுக்கும் நெறைய வித்தியாசம் இருக்கு.

விஜய் said...

உண்மையை தேடிக்கொண்டு இருக்கும் அனைவருக்கும் இது ஒரு புரிதலையும், தெளிதலையும் ஏற்படுத்தி இருக்கும், மிக அருமையான பதிவு அண்ணா, ஏழையின் அழுகைல எப்படிங்க , சிரிப்பும், சந்தோசமும் பிறக்கும், கண்ணை திறந்து பாருங்க உங்களுக்கு பக்கத்துல அத்தனை பேர் அழும்போதும் எப்படி உங்களோட சிரிப்பு சத்தம் உங்களுக்கு கேட்கும், முதலின் அழுபவர் கலையும்,வாழக்கையை தேடுபவரையும் தேற்றுங்கள் , நிச்சயம் நீங்கள் சிரிக்கும் சத்தம் உங்களுக்கு கேட்கும் மனதளவில் சந்தோசமாய்...

அருமையான பதிவு...வழக்கம் போல ஆணியடித்தாற்போல் வாசகனின் நெஞ்சில் உங்கள் பதிவுகள் ......

அருண் பிரசாத் said...

அருமை, Standing Applause.

//ஆயிரம் பேரின் பிரச்சினை ஆட்டோமேடிக்காக அவரவரின் சூழலுக்கும் திறனுக்கும் ஏற்ப தீர்ந்து விடுகிறது//

இன்னொரு 1000 பேர் சாமியார்கள் Set up செய்து மேடை ஏற்றுகிறார்கள்

சௌந்தர் said...

நான் ஆத்திகனுமில்லை... நாத்திகனுமில்லை......சக உயிர்களை மதிக்கத் தெரிந்த...வாழ்க்கையை வாழும் சாதாரண மனிதன்!//
சரியா சொன்னிங்க அண்ணா. நீங்கள் சாதாரண மனிதன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கடவுளை பத்தி தப்பா எழுதினா மிரட்டல் கடிதம் வருதாமே. உண்மையா?

Kousalya said...

//இன்னும் சொல்லப்போனால்..... நாத்திகனாகவும்...அல்லது ஆத்திகனாகவும் இருப்பதை விட்டு விட்டு...குறைந்த பட்சம் மனிதர்களாக இருந்து சகமனிதனை நேசித்து....சக ஜீவராசிகளை நேசித்து ஒவ்வொரு உயிருக்கும், வெளிப்பாட்டுக்கும் ஒரு மதிப்பு கொடுத்து....இயல்பாய் சுவாசிப்பது போல எதார்த்த வாழ்வு வாழ்வது.....எவ்வளவு அழகானது....//

mika arumai...

ப.செல்வக்குமார் said...

//உங்கள் கடவுள் இருக்கிறார் என்றே வைத்துக் கொள்வோம்...அவர் பணக்காரர்களை அதிக பணம் செலுத்தினால் ஸ்பெசல் தரிசனம் செய்ய அனுமதித்து வறுமையான மக்களை பின்னே கூட்டத்தில் நிற்க வைத்து தரிசனம் செய்தால் அவர் நியாயமானவரா? நீங்களே சொல்லுங்கள்.... !//

கடவுள் எப்போதுமே அப்படி சொன்னது கிடையாது .. எல்லாம் மனிதர்களாகத்தான் செய்கிறார்கள்..!

//ஆமாம்..... நான் ஆத்திகனுமில்லை... நாத்திகனுமில்லை......சக உயிர்களை மதிக்கத் தெரிந்த...வாழ்க்கையை வாழும் சாதாரண மனிதன்!//

உண்மை அண்ணா .. உங்கள் பதிவுகளில் நான் புரிந்து கொண்டேன்..

கடவுள் பற்றிய எனது கருத்து

*.கடவுள் இல்லை என்று நம்புவர்கள் பற்றி நான் ஒன்றும் கூற விரும்பவில்லை. அவர்களுக்கு அதில் நம்பிக்கை இல்லை.
*.எனக்கு நம்பிக்கை இருக்கிறது.கடவுள் என்ற ஒன்று இருப்பதை நான் உணர்கிறேன்.
*.அப்படினா கடவுள் என்ற ஒன்றை எனக்கு காட்டு என்று நம்பிக்கை இல்லாதவர் கூறலாம் ; அனால் அவர்களுக்கு கடவுளை காட்ட வேண்டியது எனது வேலை இல்லை.
*.அப்படிஎன்றால் கடவுளை நம்பாதவர்களை கடவுள் ஏதும் செய்ய மாட்டாரா..? என்று நீங்கள் கேட்கலாம். தன்னை நம்பாதவர்களை கடவுள் தண்டிப்பதற்கு அவர் மனிதர் அல்ல.
*.கடவுள் தான் நம்மை படைத்தார் என்றால் அனைவரையும் அறிவாளியாக , பணக்காரர்களாக படித்திருக்கலாம் அல்லவா..? என்று நீங்கள் கேட்கலாம்; அப்படி படைத்திருந்தால் உலகில் சாதனையாளர் என்று நாம் கூறும் பலர் உருவாகியிருக்க மாட்டார்கள்.
*.உண்மையிலேயே பணக்காரர்களோ அறிவாளிகளோ யாராக இருப்பினும் அவர்கள் பெயர் புகழ் அனைத்தும் இருக்கும் வரை மட்டுமே. வரலாற்றில் இடம் பிடித்தாலும் அதுவே. ஒரு பெரிய அறிவியல் அறிஞரை உலகம் நினைத்திருந்தாலும் அப்படி உலகம் நினைத்திருப்பதால் அந்த இறந்து போன அறிஞருக்கு என்ன பயன்...? வரலாறு படைத்து பேரும் புகழும் படிப்பதால் அந்த மனிதருக்கு கிடைக்கப்போவது என்ன..? அல்லது எதையும் செய்யாமல் இறந்த மனிதருக்கு கிடைக்காமல் போனது தான் என்ன ..? ஆகவே நாம் பெரிய மனிதர் என்று சொல்வது அனைத்தும் இந்த உடலை பற்றித்தானே..
*.என்னை பொறுத்த வரை கடவுளை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் அவரவர் விருப்பம். இதில் கடவுளை காட்டுகிறேன் என்று சிலர் கூறும் வார்த்தைகளை நம்பி மக்கள் ஏமாறாமல் இருக்கவே கடவுள் மறுப்பு கொள்கையாளர்களை எனக்கு பிடிக்கிறது ...

ஜீவன்பென்னி said...

//ஒரு பெரிய அறிவியல் அறிஞரை உலகம் நினைத்திருந்தாலும் அப்படி உலகம் நினைத்திருப்பதால் அந்த இறந்து போன அறிஞருக்கு என்ன பயன்...? வரலாறு படைத்து பேரும் புகழும் படிப்பதால் அந்த மனிதருக்கு கிடைக்கப்போவது என்ன..? அல்லது எதையும் செய்யாமல் இறந்த மனிதருக்கு கிடைக்காமல் போனது தான் என்ன ..? ஆகவே நாம் பெரிய மனிதர் என்று சொல்வது அனைத்தும் இந்த உடலை பற்றித்தானே..// இங்க புரியலயே என்னா சொல்லவாரீங்க இப்போ.

றமேஸ்-Ramesh said...

////இன்னும் சொல்லப்போனால்..... நாத்திகனாகவும்...அல்லது ஆத்திகனாகவும் இருப்பதை விட்டு விட்டு...குறைந்த பட்சம் மனிதர்களாக இருந்து சகமனிதனை நேசித்து....சக ஜீவராசிகளை நேசித்து ஒவ்வொரு உயிருக்கும், வெளிப்பாட்டுக்கும் ஒரு மதிப்பு கொடுத்து....இயல்பாய் சுவாசிப்பது போல எதார்த்த வாழ்வு வாழ்வது.....எவ்வளவு அழகானது....////

இதுவே பிடிச்சது அவசிமானது. கடவுள் இல்லை கடவுள் நம்பிக்கை உண்டு. மதம் கொண்டு மதம் கொள்ளவேண்டாம்
மனம் கொண்டு வளர்க

ப.செல்வக்குமார் said...

@ ஜீவன்பென்னி
////ஒரு பெரிய அறிவியல் அறிஞரை உலகம் நினைத்திருந்தாலும் அப்படி உலகம் நினைத்திருப்பதால் அந்த இறந்து போன அறிஞருக்கு என்ன பயன்...? வரலாறு படைத்து பேரும் புகழும் படிப்பதால் அந்த மனிதருக்கு கிடைக்கப்போவது என்ன..? அல்லது எதையும் செய்யாமல் இறந்த மனிதருக்கு கிடைக்காமல் போனது தான் என்ன ..? ஆகவே நாம் பெரிய மனிதர் என்று சொல்வது அனைத்தும் இந்த உடலை பற்றித்தானே..// இங்க புரியலயே என்னா சொல்லவாரீங்க இப்போ////
கடவுள் ஏன் அனைவரையும் பணக்காரர்களாகவோ அறிவாளிகளாகவோ படைத்திருக்க கூடாது என்ற கேள்விக்கான பதிலாக கூறியிருந்தேன் ..

தனி காட்டு ராஜா said...

இப்படி எல்லாம் பதிவு எழுதுனா சாமிகிட்ட சொல்லி புடுவேன் .......

வில்சன் said...

எனது ஓட்டு ப. செல்வகுமாருக்கே. இறைவன் என்பவன் காற்றைப் போன்றவன். முடிந்தால் உணர்ந்து கொள்ளுங்கள். நாத்திகம் பேசுவது ஒரு வகைளில் ஈசி. அதாவது தனி மனித தாக்குதல் இருக்காது. ஆனால் ஆத்திகம் பேசும்போது இந்த தாக்குதல் அதிகம் இருக்கும். இதனாலே பலர் வெளியில் நாத்திக போர்வையில் உலா வருகின்றனர்.

இராமசாமி கண்ணண் said...

//ஆமாம்..... நான் ஆத்திகனுமில்லை... நாத்திகனுமில்லை......சக உயிர்களை மதிக்கத் தெரிந்த...வாழ்க்கையை வாழும் சாதாரண மனிதன்!//

அம்புட்டுத்தான் வாழ்க்கை. இப்படி வாழ்ந்தா போதும். :)

வானம்பாடிகள் said...

//ஆமாம்..... நான் ஆத்திகனுமில்லை... நாத்திகனுமில்லை......சக உயிர்களை மதிக்கத் தெரிந்த...வாழ்க்கையை வாழும் சாதாரண மனிதன்!//

ஒன்னு பார்த்தீங்களா. ஆத்திகமும் நாத்திகமும் சொல்றதும் இதேதானே.

அருண் பிரசாத் said...

கடவுள் இருக்கிறாரோ இல்லையோ. ஆனால் நம்மை மீறிய சக்தி ஒன்று கண்டிப்பாய் இருக்கிறது. அதை சிலர் இயற்க்கை எனலாம், சிலர் தற்செயல் எனலாம், நான் அதை கடவுள் என்கிறேன். அது அவர் அவர் விருப்பம். இதில் கடவுளை நம்புகிறவன் பைத்தியகாரன் என்பதோ, ராமர் எந்த கல்லூரியில் படித்து பாலம் கட்டினார் என கேட்பதோ தேவையற்றது.

எனக்கு பிடித்ததை நான் சாப்பிடுகிறேன். உங்களுக்கு பிடிக்காது என்பதற்காக கத்திரிக்காய் சாப்பிடுபவன் எல்லாம் முட்டாள் என சொல்வது சரியல்ல.

சக மனிதரின் உணர்வுக்கு மதிப்பு கொடுப்போம்

Jey said...

///இன்னும் சொல்லப்போனால்..... நாத்திகனாகவும்...அல்லது ஆத்திகனாகவும் இருப்பதை விட்டு விட்டு...குறைந்த பட்சம் மனிதர்களாக இருந்து சகமனிதனை நேசித்து....சக ஜீவராசிகளை நேசித்து ஒவ்வொரு உயிருக்கும், வெளிப்பாட்டுக்கும் ஒரு மதிப்பு கொடுத்து....இயல்பாய் சுவாசிப்பது போல எதார்த்த வாழ்வு வாழ்வது.....எவ்வளவு அழகானது....//

எல்லாரும் இப்படி இருந்துவிட்டால், எல்லா பிரச்சினைகளுக்கும் நல்ல முடுவு கிடைத்துவிடும்.

அழகான கருத்து செறிந்த பதிவு.
நன்றி தேவா.

Jey said...

அருண் பிரசாத் said...
கடவுள் இருக்கிறாரோ இல்லையோ. ஆனால் நம்மை மீறிய சக்தி ஒன்று கண்டிப்பாய் இருக்கிறது. அதை சிலர் இயற்க்கை எனலாம், சிலர் தற்செயல் எனலாம், நான் அதை கடவுள் என்கிறேன். அது அவர் அவர் விருப்பம். இதில் கடவுளை நம்புகிறவன் பைத்தியகாரன் என்பதோ, ராமர் எந்த கல்லூரியில் படித்து பாலம் கட்டினார் என கேட்பதோ தேவையற்றது.

எனக்கு பிடித்ததை நான் சாப்பிடுகிறேன். உங்களுக்கு பிடிக்காது என்பதற்காக கத்திரிக்காய் சாப்பிடுபவன் எல்லாம் முட்டாள் என சொல்வது சரியல்ல.

சக மனிதரின் உணர்வுக்கு மதிப்பு கொடுப்போம்////

இதுவும் நல்லாதான் இருக்கு:)

ஜெயந்தி said...

//உங்கள் கடவுள் இருக்கிறார் என்றே வைத்துக் கொள்வோம்...அவர் பணக்காரர்களை அதிக பணம் செலுத்தினால் ஸ்பெசல் தரிசனம் செய்ய அனுமதித்து வறுமையான மக்களை பின்னே கூட்டத்தில் நிற்க வைத்து தரிசனம் செய்தால் அவர் நியாயமானவரா? நீங்களே சொல்லுங்கள்.... ! கடவுள் ஒருக்காலும் அப்படி இருக்க முடியாது அப்படி இருந்தால் அவர் கடவுளாக இருக்க முடியாது...... அதானால் தான் மிகைப்பட்டவர்க்ள் நம்பிக் கொண்டிருக்கும் அல்லது பின்பற்றிக்கொண்டிருப்பது தங்கள் மனதின் நிர்ணயத்தையும், சுயகருத்துக்களையுமேயென்றி கடவுளை அல்ல.....//
வழக்கம்போல் கருத்துக்கள் அருமை.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//ஆமாம்..... நான் ஆத்திகனுமில்லை... நாத்திகனுமில்லை......சக உயிர்களை மதிக்கத் தெரிந்த...வாழ்க்கையை வாழும் சாதாரண மனிதன்!//


இதுதான் புரிதலின் உச்சம் . ஆனால் இதுபோன்ற வார்த்தைகள் இன்னும் வாசிப்பதுடன் மட்டுமே நின்று போவதால்தான் நம்மைபோன்றவர்கள் மீண்டும் மீண்டும் எழுதிகொண்டிருகிறோம் என்று நினைக்கிறன் . பகிர்வுக்கு நன்றி நண்பரே .

Anonymous said...

கடவுள் மறுப்பு கொண்டவர்களின் நிலையை பற்றிய உங்கள் கருத்து நிதர்சன உண்மை விளக்கிறது. தேடலில் காணப்படும் நிங்கள் கடவுள் நம்பிக்கை உடையவர் என்பது உங்கள் எழுத்தில் காணப்படுகிறது.அது வரவேற்கதக்கது

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

படமும் கருத்துகளும் ரொம்ப நெருக்கமா இருக்குங்க தேவா! :))

வால்பையன் said...

//கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவர்கள் ஆராய்ச்சியிலும் தேடலிலும் இருக்கிறார்கள் என்றுதான் சொல்வேன்...இறுதி உண்மை பற்றி அறியும் மிகுந்த வேட்டையோடு தேடுகிறார்கள் ஆனால் என்ன ஒன்று ...ரொம்ப உக்கிராமாக தேடுகிறார்கள்.....அந்த உக்கிரத்தில் அவர்களின் சாடல்கள் எல்லாம் மூட நம்பிக்கைகளை பின்பற்றும் மனிதர்ள் மீது ஆக்ரோஷமாய் பாய்கிறது.//


உண்மை தான் தல!

கே.ஆர்.பி.செந்தில் said...

கை குடுங்கள் தேவா...

இதைத்தான் எல்லோரும் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.. ஆத்திகனாக இருப்பது சுகம் என்றால்... நாத்திகனாக இருப்பது அவஸ்த்தை..
கற்பனை வாழ்க்கை ஆத்திகம்... சுடும் நிஜம் நாத்திகம்... தேடல் மிகுந்தவனே நாத்திகனாக மறுக்கிறான்..
முதன்மையானவர்களில் புத்தன் முக்கியமானவன்... இன்று புத்தனையே கடவுளாக்கிவிட்டோம்... யார் கண்டது எதிர்காலத்தில் பெரியாரையும் கடவுளாகலாம்..

எல்லாமே பலரின் அறியாமையை பயன்படுத்தி சிலரின் பிழைப்புக்கான வழிமுறைகள்...

ரோஸ்விக் said...

//இன்னும் சொல்லப்போனால்..... நாத்திகனாகவும்...அல்லது ஆத்திகனாகவும் இருப்பதை விட்டு விட்டு...குறைந்த பட்சம் மனிதர்களாக இருந்து சகமனிதனை நேசித்து....சக ஜீவராசிகளை நேசித்து ஒவ்வொரு உயிருக்கும், வெளிப்பாட்டுக்கும் ஒரு மதிப்பு கொடுத்து....இயல்பாய் சுவாசிப்பது போல எதார்த்த வாழ்வு வாழ்வது.....எவ்வளவு அழகானது....

ஆமாம்..... நான் ஆத்திகனுமில்லை... நாத்திகனுமில்லை......சக உயிர்களை மதிக்கத் தெரிந்த...வாழ்க்கையை வாழும் சாதாரண மனிதன்!

//

அருமை தேவா!

மதவெறியோடு என்னை அணுகும் நண்பர்களை, நானும் வார்த்தைகளில் மிருகவெறி கொண்டு தாக்குவதுண்டு. அதுவும் எனக்கு மிக நெருங்கியவர்கள் என்றால்... இன்னும் அதிக வெறியோடு... :-)

Gayathri said...

அருமை..அதுவும்
"ஆமாம்..... நான் ஆத்திகனுமில்லை... நாத்திகனுமில்லை......சக உயிர்களை மதிக்கத் தெரிந்த...வாழ்க்கையை வாழும் சாதாரண மனிதன்!"

எதார்த்தமாய் அழகாய் சொல்லி இருக்கிரீகள்.

rk guru said...

///கடவுள் ஒருக்காலும் அப்படி இருக்க முடியாது அப்படி இருந்தால் அவர் கடவுளாக இருக்க முடியாது...... ///

Good punch....congrats