Pages

Saturday, July 3, 2010

வலி.....!
நல்லா தலைய கீழே குனிங்கடா...தெருமுனைச் சுவரோரம் ஒளிந்து நின்று கொண்டிருந்த நான்கு பேரையும் தலைமை தாங்கிய சந்துரு கனத்த குரலில் கரடு முரடாய் ஆணையிட்டான். 7 மணி மாலைக்கு அடிபணிந்திருந்த பகலும் குறைந்திருந்த மக்கள் நடமாட்டமும் அது ஒரு சிற்றூர்தான் என்று கட்டியம் கூறிக் கொண்டிருந்தன. இவ்வளவும் சொல்லிவிட்டு அவர்கள் கையில் வைத்திருக்கும் உருட்டுக்கட்டைகள் பற்றி எப்படி சொல்லாமல் விடுவது...? எல்லாமே சவுக்கு கட்டைகள் நேர்த்தியாய் கைகளில் பிடிக்கும் படி யாரோ கலைநயத்தைக் காட்டியிருந்தார்கள்.....

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..... சத்தம் போடாதீங்க...பார்ட்டி வருது....என்ற சந்துருவின் கிசுகிசுப்பான குரல் கேட்ட மற்ற நால்வரும் கூர்மையானார்கள்...மெல்ல தங்களைத் தயார் படுத்திக் கொண்டார்கள்...! முன்னால் நின்றிருந்த சந்துருவின் லுங்கி தொடை வரை ஏறி இருந்ததை சொல்ல மறந்து விட்டேன்...மடித்துக் கட்டிய லுங்கியை சரிபார்த்தபடி....கண்களில் ரெளத்ரத்தைக் கொண்டு வந்து கொண்டிருந்தான் சந்துரு..... வக்கா***..... தமிழகத்தின் பிரபல கெட்ட வார்தையை உதிர்த்த வாய் பற்களையும் சேர்த்து கடிக்கத் தொடங்கியது.... வந்துட்டான்டா...

சந்துருவின் உத்தரவிற்கு பிறகு புலிப்பாய்ச்சல் பாய்ந்த நால்வருடன் சந்துருவும் சேர்ந்து... உருட்டுக்கட்டைகளை உபோயோகம் செய்ததில் மில்லில் வேலை விட்டு திரும்பிக் கொண்டிருந்த மணி அடி வாங்கிக் கத்திக் கொண்டிருந்தான்... இருட்டில் யார்? என்ன என்று புரிந்து கொள்ள முடியாமல் ..யார்ராராரா.. நீங்க என்று மணி போட்ட சப்தம் கூட வெளியே வரவில்லை.

ஊமை அடியாக உருட்டுக்கள் பாய்ந்ததோடு மட்டும் இல்லாமல் கெட்டவார்த்தைகளோடு கூடி...ஆளாட சேக்குற ஆளு....இவுரு ஆளு சேத்து வேலைக்கு போகலேன்னா...என்ன கிழிஞ்சுடப் போகுது....முதலாளியோட **** தலை முடியின் வேறு பெயர் சொல்லி அதை பிடிங்கக் கூட முடியாதுடா என்று சொல்லி கட்டையால் மணியின் காலில் ஓங்கி ஒங்கி அடித்தான் சந்துரு... கோபத்தில் கட்டையை ஓங்கும் போது சந்துருவின் முதுகில் சுரீர் என்று ஏதோ பிடித்ததை அடிக்கும் மும்முரத்தில் கவனிக்கவில்லை அவன்....

மில் முதலாளியை எதிர்த்து கேள்வி கேட்டதற்கான பதிலடி இது என்ற மங்கலான நினைவோடு மயங்கிச் சாய்ந்தான் மணி. சுமார் 20 வது அல்லது 25 நிமிடத்தில் எல்லாம் முடிந்துவிட...சப்தம் கேட்டு யார் யாரோ ஓடிவர....பைக்கில் ஏறிப்பறந்தான் சந்துரு...அந்த 4 பேரும் இரண்டு வண்டிகளில்.. வெவ்வேறு திசைகளில் பறக்க...

சந்துரு வீடு நோக்கி வண்டியை திருப்பினான்....அடித்தவன் பெயர் கூட சரியாக நினைவில் இல்லை சந்துருவிற்கு...! சம்பவம் நடந்த இடத்தில் சந்துருவின் ஆள் ஒருவன் சந்தடி இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தான்....அடிப்பட்டவனின் காயம் எவ்வளவு என்று சந்துருவிடம் வந்து சொல்ல...அதற்கு பிறகு சந்துரு...போய் மீதிப் பணத்தை அந்த மில் முதலாளியிடம் வாங்க வேண்டும்.

அடிதடியை ஒரு தொழிலாய் செய்யும் கூலிகளின் கூட்டத்தில் சந்துருவும் ஒரு பிரஜை. அவனுக்கு தெரிந்ததெல்லாம் வெட்டு, குத்து....யார் எவர் என்ற நியாயம் இவனுக்கு பெரிய விசயம் இல்லை. அடிச்சா காசு வரணும் இல்லேண்ணா வேல சொன்னவனயே போட்டுட்டு வர்ற அளவிற்கு தில்லான 45 வயது இளைஞன் (அப்ப்டிதான் சந்துரு சொல்வது வழக்கம்)....! இப்போது கூட அப்படித்தான்....யாரென்றே தெரியாத மணியின் ஒரு கை மற்றும் காலை உடைக்க வேண்டும்...உயிருக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது ஆனால் அவன் மீண்டும் வேலை செய்யக்கூடாது அந்த அளவிற்கு அடி இருக்கணும்...மினிமம் ஒரு கையும் காலும் உடையணும்..இது தான் டீல்.

வீட்டு வாசலில் பைக்கை ஆஃப் செய்த சந்துரு செல் போனை எடுத்து .....என்ன ஆச்ச்சு...? ஆஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டங்களா...?ம்ம்ம்ம் நினைவு திரும்பலையா....ம்ம்ம்ம்......கையும் காலும் வராதா...எலும்பு பயங்கரமா ஒடைஞ்சு இருக்குன்னு டாட்டர் சொல்றாரா?ம்ம்ம்ம்ம்....சரி எந்த ஆஸ்பிட்டல்...?ம்ம்ம் நீ இடத்தை விட்டு கிளம்பு...காத்தால....வூட்டாண்ட வா.....இணைப்பைத் துண்டித்தான்...!

மீண்டும் டயலினான்.........ஐயாவா........முடிஞ்சுருச்சுங்க...! இப்போதாங்க நம்ம பையன் ஆஸ்பிடல்ல இருந்து போன் பண்ணினான்.....ஆமாங்க...கால்லயும், கையல யும் எலும்பு ஒடைஞ்சு இருக்காமுங்க ...! ஹி...ஹி...ஹி......சரிதானுங்க.. அப்போ பேலன்ஸ் துட்டு....... சரிங்க ஐயா...காலைல வாரேங்க....வச்சிடட்டுங்களா.....! இணைப்பை துண்டித்தான்.....முதுகில் ஏற்கெனவே ஏற்பட்டிருந்த சுரீர் இன்னும் கொஞ்சம் டீட்டெய்லாக பரவியிருந்ததில் கையை தூக்க முடியவில்லை சந்துருவால்......

இரவு 11 மணி தூங்கமுடியாமல் சந்துரு துடித்துக் கொண்டிருந்தான்.... முதுகில் வலி.....வலி....வலி....உயிர் போனது சந்துருவுக்கு....! திடமான கணவன் துடித்துக் கொண்டிருப்பதை பார்த்த மனைவி கோமதியும் கதறி அழுது கொண்டிருந்தாள்....என்னாச்சுங்க...என்ன்னங்க....குறிப்பிட்ட இடைவெளியில் தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டிருந்தாள்.....பக்கத்தில் நின்று கொண்டிருந்க்ட 9 வது படிக்கும் மகளும் 5வது படிக்கும் மகனும் பாவாமய் பார்த்துக் கொண்டிருந்தனர்.....

" இந்த எழவு எடுத்த வேல வேண்டாம்னு எத்தன தடவ சொல்றது என்று பவ்யமாய் அழுது கொண்டே...முதுகினைத் தேய்த்த மனைவியை முறைத்தான் சந்துரு.....சரி சரி போய் படுங்க... நான் பாத்துக்குறேன்...என்று எல்லோரையும் விரட்டிவிட்டான்....!

எல்லோரும் போய் விட்டார்கள்....ஆனால் சந்துருவிற்கு வலி மட்டும் போகவில்லை. கோபத்தில் அவன் ஓங்கி ஓங்கி அடித்ததில் அவனின் முதுகு தசை பிரண்டு ஏதோ எக்குத்தப்பாய் நடந்திருந்தது அவனுக்கு புரியவில்லை. ஏனென்றால் அவனுக்கு அவன் வலியவன்...யாரும் எதுவும் செய்ய முடியாது அவனை....என்று ரொம்ம கூலாக நினைத்துக் கொண்டு இருப்பவன்.....

ம்ம்ம்ம்ம்ம்மாமா.....இப்போது வாய்விட்டே அலறினான். நடு நிசி ஒரு மணி கடந்து இருந்தது. வலி ஒரு வேதனையான விசயம்..! மனிதாரய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இது நிச்சயமாய் வேறுபடுவதில்லை. எல்லோருக்கும் பாராபட்சமாய் ஒரே விதமான வேதனையை கொடுக்கும் சமத்துவவாதி இந்த வலி. வலியின் அதிகரிப்பில் எல்லோருக்கும் ஏற்படுவது உயிர்பயம்... !

நமக்கு ஏதாவது ஆகிவிட்டால்....என்ன ஆகும்....இந்த கோணத்தில் தான் நம்ம சந்துருவும் நினைத்துக் கொண்டிருந்தான்...! நாளை எனக்கு ஏதாவது ஆகிவிட்டால்....என் பொண்டாட்டி புள்ளைங்க.. எப்படி சாப்பிடும்...! எத்தனை பேரை அடிச்ச கை இது....! இது விழுந்து விட்டால்...கற்பனையில் அவனது மனைவி, மகள், மகன் மூன்று பேரும் கிழிந்த உடைகளோடு வேலைக்குப் போவது போலவும்...கஷ்டப்படுவது போலவும்....ஐயோ தாங்க முடியாத முதுகு வலியோடு அவனது எண்ணங்களும் சேர்ந்து கொண்டு தொந்தரவு செய்ய...புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான் சந்துரு…

மணி எத்தனை ஆச்சுன்னே தெரியவில்லை....யோசித்துக் கொண்டே இருந்த சந்துரு விற்கு....கண்களில் நீர் கசிந்தது.....திடீர்னு எழுந்து மெல்ல அமர்ந்தான்......மூளைக்குள் எல்லா பல்பும் பளீச் பளீச் சென்று எரிந்தது..... ! இந்த முதுகு வலிக்கே என்னோட உயிர் போற மாதிரி வலிக்கிதே....சாயங்காலம் யாருண்னே தெரியாத ஒரு பயல அடிச்சமே....கைலயும் கால்லயும் எலும்பு ஒடைஞ்சு கிடக்கானே...அந்த பயலுக்கு எப்படி வலிக்கும்......சிந்திக்க சிந்திக்க...அவனுக்குள் இருந்த மிருகம் மெல்ல இறக்கத்தொடங்கியிருந்தது.....மனிதம் மலரத்தொடங்கி இருந்தது....

எனக்கு வலிச்ச மாதிரிதாண்ணே அவனுக்கும் வலிச்சுருக்கும்....என்னவிட பலமா...ஐயோ...கடவுளே என்ன கொடுமை இது....! அவன் எவ்ளோ கெட்டது செஞ்சாலும் முதல்ல நமக்குச் சம்பந்தம் இல்ல... ரெண்டாவது பேசி சரி பண்ணியிருக்கலாமே.....மனுசங்கதானே.. நாம...! பேசி பேசி எல்லாத்தயும் தீக்க முடியாதா....மகமாயி....என்று ஒரு தெய்வம் பெயர் கத்தியதில் அவனுக்குள் ஏதோ ஒரு பயம் வந்ததைத் தெளிவாக உணரமுடிந்தது.

எனக்கு வலிக்ககூடாது ...என் சொந்தகாரங்களுக்கும் என் உறவுகளுக்கு வலிக்கக் கூடாதுன்னு நெனைக்கிற நான்....சம்பந்தமில்லாத ஒரு மனுசனுக்கு வலிக்கும்னு ஏன் நினைக்கிறது இல்ல?....அவனுக்கும் புள்ள குட்டிக இருக்குமே....பொஞ்சாதி இருக்குமே...அதுக இவன் வேலக்கி போகலேன்னா எப்படி சாப்பிடுங்க...? கசிந்து கொண்டிருந்த அவனின் கண்ணீர்....இப்போது கங்கையாய் பெருக்கெடுத்து ஓடியதில் வலியின் வேதனையும் இருந்தது...!

முதல்ல மனுசன மனுசன் ஏன் அடிக்கணும்....? ஏன் கொல்லணும்? புடிக்கலேன்னா சொல்லி பேசி ...எடுத்து சொல்லி மாத்தலாம்ல.....அப்படியும் மாறலேண்ணா அவன விட்டு விலகி அவன் இல்லேண்னு ஒரு வாழ்க்கை வாழலாம்ல....எப்படி ஒரு மனுசன் இன்னொருத்தன தண்டிக்கிறது.....அவனுக்கும் வலிக்கும்ல.......!எல்லோருக்கும் உடம்புதானே....இந்த... நேரம் ... நான் அடிச்ச ஆளு வலில துடிச்சுட்டு இருப்பானே.....அவனுக்கும் வலிக்குமே......ஓவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்று சத்தம் போட்டு அழுதான் சந்துரு....அதிகாலை உறக்கத்திலிருந்த குடும்பத்தாருக்கு அது கேட்கவில்லை...

யாரையுமே மனசு நோகுறபடி பேசக்கூட கூடாது....புடிக்கலேன்னா ஒதுங்கிக்கணும்...வார்த்தையால கூட அடுத்த மனுசனுக்கும் மனசுல வலி வரக்கூடாது.....

படுக்கையில் இருந்து வேதனையோடு எழுந்த சந்துரு....பீடியை பற்றவைத்தான்....அதிகாலை ஆக்ஸிஜனை அவன் வெளிவிட்ட புகை தொந்திரவு செய்ய ஆரம்பிதிருந்தது....! சட்டையை மாட்டிக் கொண்டு மணி பார்த்தான்....சந்துரு...! மணி பார்த்த 15 நிமிடத்தில் பைக்கை அவன் ஸ்டார்ட் செய்யும் போது மணி அதிகாலை 3:20......

"ஏங்க......எங்க கிளம்பீட்டீங்க...கலைலயே.....ராத்திரி புல்லா வலி வலின்னு துடிச்சீங்க....செத்த வந்து படுங்கங்க...." மனைவியின் சப்தம் கேட்டு திரும்பியவன்.... " இரு புள்ள பக்கத்துல ஆஸ்பிடல் வரை போயிட்டு வந்துடுறேன்....." சப்தமாய் சொல்லிவிட்டு கேட் திறந்து வெளியே வந்து கியர் மாற்றி ஆக்ஸிலேட்டரை முடிக்கினான்.......முதுகில் இருந்த வலி மெல்ல எட்டிபார்த்தது....அதை அவன் மனது அடக்கி சமாதானம் செய்தததில்....வலி தெரியவில்லை சந்துருவிற்கு.......வண்டி பறந்து கொண்டிருந்தது...அதிகாலை நிசப்தத்தை கிழித்தபடி....

கடைசிவரை....அடிபட்டு ஆஸ்பிடலில் கட்டு கட்டி கிடந்த மணியின் மனைவிக்குப் புரியவில்லை...விடியக்காலையில் எதுக்கு லுங்கி கட்டிட்டு ஒரு ஆள் வரவேண்டும்? வந்து மணியைப்பார்த்து கதறியழ வேண்டும்....? யாரு? யாருண்ணு கேட்க கேட்க பதில் சொல்லாமல் கையில் இரண்டு நூறு ரூபாய் கட்டுக்களை கொடுத்துவிட்டு வேகமாய் போகணும்.....? மணியின் நண்பர்கள் என்றும் சொல்லவும் முடியாது.....இதுக்கு முன்னால் பார்த்தது கூட கிடையாது....! குழம்பிக் கொண்டிருந்த மணியின் மனைவி....ஆண்டவா...கையில காசில்லாம....புலம்பிகிட்டு இருந்த் எனக்கு இப்படி ஒரு கருணை காட்டிட்ட....என்று.....ஏதோ ஒரு தெய்வத்திற்கு.... கண்ணீரோடு நன்றி செலுத்திக் கொண்டிருந்தாள்.......


தூரத்தில்....சேவல் கூவியது மெலிதாய் கேட்டது.......பாதித் தூக்கத்தில் கட்டுக்களோடு வலியோடு படுத்திருந்த மணிக்கு........

"கொக்கரக்....கோ......கொக்கரக்...கோ.....கொக்கரக்..கோ....."


தேவா. S

21 comments:

இராமசாமி கண்ணண் said...

நல்லா இருக்குன்னே.

Jey said...

me the 1 st.

padisittu vare.

சௌந்தர் said...

எனக்கு வலிச்ச மாதிரிதாண்ணே அவனுக்கும் வலிச்சுருக்கும். நல்ல வரிகள் நல்லகருத்து அண்ணா

விஜய் said...

வழக்கம் போல இந்த முறையும் கதையோட பயணிக்க வைச்சுட்டீங்க அண்ணா, மனிதம் மிளிர்கிறது உங்க கதைல...ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க....நீங்க கலக்குங்க அண்ணா .....


//முதல்ல மனுசன மனுசன் ஏன் அடிக்கணும்....? ஏன் கொல்லணும்? புடிக்கலேன்னா சொல்லி பேசி ...எடுத்து சொல்லி மாத்தலாம்ல.....அப்படியும் மாறலேண்ணா அவன விட்டு விலகி அவன் இல்லேண்னு ஒரு வாழ்க்கை வாழலாம்ல....எப்படி ஒரு மனுசன் இன்னொருத்தன தண்டிக்கிறது.....அவனுக்கும் வலிக்கும்ல.......//

ரொம்ப அழகான கேள்வி

வாழ்த்துக்கள் அண்ணா ....

ப.செல்வக்குமார் said...

அதுக்குள்ளயா திருந்திட்டாய்ங்க....!!!
சந்துரு ரொம்ப நல்லவனோ....????

சந்ரு said...

கதை நல்லா இருக்கு... ஆனால் நான் அவன் இல்லை

நாஞ்சில் பிரதாப் said...

மாம்சு கதை சூப்பர்... கலக்கல்... பென்டாஸ்டிக்... எக்ஸ்லன்ட்...

(சே...நானும் எத்தனை தடவைதான் படிக்காமலே கமெண்ட் போடறது:)))

ராமசாமி, ஜே.. இவிங்களை நிறுத்தச்சொல்லுங்க நான் நிறுத்தறேன்...

ஜீவன்பென்னி said...

மனுசன மனுசனா வாழவைக்குற வேலைய பயமும் செய்யுது.

இந்த கதையோட ஒன்றிப்போற அளவுக்கு நடையில்லை.(வந்துட்டான்யா கருத்து சொல்லுறதுக்கு. முதல்ல நீ உருப்புடியா ஒரு கதை எழுதுடா டுபுக்கு)

வானம்பாடிகள் said...

நல்லாருக்கு தேவா.

Kousalya said...

//யாரையுமே மனசு நோகுறபடி பேசக்கூட கூடாது....புடிக்கலேன்னா ஒதுங்கிக்கணும்...வார்த்தையால கூட அடுத்த மனுசனுக்கும் மனசுல வலி வரக்கூடாது.....//

உண்மை, கதை நல்லா இருக்கு.

Anonymous said...

நல்லா இருக்கு தேவா எல்லா அடியாளுகளும் இதே போல் மாறினா எவ்ளோ நல்லா இருக்கு இல்லே ...

அருண் பிரசாத் said...

கதையும், சொல்லப்பட்ட விதமும் அருமை அண்ணே

ஜெயந்தி said...

அனைவரும் தன்னைப்போலவே அடுத்தவரை நினைத்தாலே உலகில் குற்றங்களே நிகழாது.

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு மகன்ஸ்! :-)

Mahi_Granny said...

எல்லா அடியாட்களுக்கும் இப்படி ஒரு அனுபவம் கிடைத்து எல்லோரும் நல்லவர்களாகி ,தேவா உங்கள் கற்பனைக்கு என் பாராட்டுக்கள்

rk guru said...

பதிவு நல்ல இருக்கு..தோழரே

வெறும்பய said...

கதையும், சொல்லப்பட்ட விதமும் அருமை

நல்லா இருக்கு

சிறுகுடி ராமு said...

///மணியின் நண்பர்கள் என்றும் சொல்லவும் முடியாது.....இதுக்கு முன்னால் பார்த்தது கூட கிடையாது....! குழம்பிக் கொண்டிருந்த மணியின் மனைவி....ஆண்டவா...கையில காசில்லாம....புலம்பிகிட்டு இருந்த் எனக்கு இப்படி ஒரு கருணை காட்டிட்ட....என்று.....ஏதோ ஒரு தெய்வத்திற்கு.... கண்ணீரோடு நன்றி செலுத்திக் கொண்டிருந்தாள்.......///


ஏன்னு தெரியல, இந்த வரிய படிச்ச உடனே, எனக்கு கண்ணுல இருந்து குபுக்னு தண்ணி கொட்டிருச்சுடா என் மாப்பு... அருமைடா.. வாழ்த்துக்கள்!

dheva said...

இரமாசாமி கண்ணன் @ நன்றி தம்பி

ஜெய்.@ ஹா.. .ஹா... படிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்...!

சந்துரு...@ நன்றி தம்பி!

செளந்தர்..@ நன்றி தம்பி...!

விஜய்...@ நன்றி தம்பி!

செல்வு...@ நன்றிப்பா.. தம்பி!

நாஞ்சில்...@ மறுபடியும்...சொல்றேன்....உன்ன வெட்டாம விடமாட்டேன்...!

ஜீவன் பென்னி...@ எப்படி தம்பி ரஜினி மாதிரி நடை இருந்தா ரசிப்பியோ...! ஹா..ஹா..ஹா..!

கெளசல்யா...@ மிக்க நன்றி தோழி...!

சந்தியா..@ நன்றி தோழி!

ஜெயந்தி...@ நன்றி தோழி!

பாமரன்...@ நன்றி பாலாண்ணே...!

அருண் பிரசாத்...@ நன்றி நண்பரே!

ப.ரா....@ நன்றி சித்தப்பா!

மகி கிரேனி...@ நன்றி தோழர்!

வெறும்பய...@ நன்றி தம்பி!

சிறுகுடி ராமு...@ நன்றி மாப்ஸ்!

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு கதை நண்பரே. பகிர்வுக்கு நன்றி.

Wilson said...

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா கருத்து சொல்வோம்ல!!!! அருமையான கரு. வலியின் வலியை அனைவரும் உணர்ந்தால் இனி எல்லாம் சுகமே. வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரும் நம்மோடுதான் வாழ்ந்தார், சந்துரு மாதிரி உள்ளவர்களும் நம்மோடுதான் வாழ்கிறார்கள்.