Skip to main content

பிரபஞ்ச பேரியக்கம்...!














எங்கும் வியாபித்தும் எனைச் சுற்றியும் இருக்கும் பிரபஞ்ச பேரியக்கமே...என்னுள்ளும், எனைச் சுற்றியிருக்கும் எல்லா உயிருகளுக்கும் தங்கு தடையின்று, மாசு மருவின்றி..குறைவில்லாமால் சுவாசிக்க விரவியிருக்கும் காற்றே...கனிகளாய், காய்களாய், ஜீவன்களாயும், எம்மையும் எம்மைச் சுற்றியும் பரவியிருக்கும் இருப்பே...

எங்கும் நீக்கமற நிறைந்து எல்லா பொருளிலும் பொருளற்றதிலும் இயங்கிக் கொண்டிருக்கும் அணுக் கூட்டமே...! மையத்தில் ஏதுமற்ற ஒன்றை...சுற்றி வரும் நியூட்ரானே...புரோட்டானே....எலக்ட்ரானே, அணுவாய் நீங்கள் எல்லா பொருளிலும் நீக்கமற நிறைந்து இயங்கி இயங்கி....பேரியக்கமாய் நிகழ்ந்து நிகழ்ந்து...கல்லாய், மண்ணாய், கடலாய், விண்ணாய், இயற்கையாய், சொல்ல முடிந்தன சொல்ல முடியாதன...கண்டன...காணமுடியாதன என்று எல்லம் உள்ளடக்கி எங்கே நகர்ந்து கொண்டிருக்கிறாய்...பேரியக்கமே....?

உன்னை நம்புகிறார் சிலர்....அபத்தம் அபத்தம்...எப்படி நம்புவது...? நம்புவது என்ற வார்த்தை தடம் பொய்யன்றோ....? உண்டான ஒன்றை..காணாமல் அல்லது உணராமல் இருப்பவர்தானே நம்புகின்றனர். ஆமாம்... என் சுவாசிப்பை ஏன் நான் நம்பவேண்டும்...? அது இடையறாது நிகழ்வதுவன்றோ...எமது இருப்பை ஏன் நம்பவேண்டும்? யான் இருப்பது எமக்கு மிகத்தெளிவாய் தெரியுமன்றோ? எமதிருப்பை ஏன் நம்பவேண்டும்...மாறக உணர்த்தானே வேண்டும்...உணரும் பட்சத்தில் அதை ஏன் நான் நிரூபிக்க வேண்டும்....உணர்ந்தேன்.... உணர்ந்தேன்...அந்த ஆனந்த திளைப்பன்றோ...உச்சம்....உச்சத்தில் நின்று விட்டு ஏன் சிற்றின்பம் நோக்கி பாயவேண்டும்....! விளக்கம் கேட்பவரும் உணர்ந்தாலன்றோ அறியமுடியும்...விளக்கம் விவாதம் எல்லாம்...சத்தியத்தை விட்டு தூரவன்றோ கூட்டிச் செல்லும்.

நம்பிக்கையாளார்கள் எல்லாம் உன்னை வெவ்வேறாக எண்ணி தமது கற்பனையில் எதேதோ கொண்டு நம்புகிறார் பிரபஞ்ச பேரியக்கமே உனக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் வெகு தூரம்....உன்னை உணரும் தருணத்தில்...இப்பிரபஞ்சத்தின் பேரியக்கத்தை அறியும் பட்சத்தில், சுற்றியிருக்கும் சக்தி ஓட்டத்தை விளங்கும் நேரத்தில்..... நம்பிக்கை பொடிபட்டுப் போகும்....யாமறிந்ததை...யாம் நம்பத்தேவையில்லை....யாம் அறிவோம்.. என்ற நிலை வருமே...அது வரையில்...

நம்பிக்கையாளர்கள் எல்லம் உனக்குத்தூரமே....

மட்டுப்பட்ட அறிவு எமது அறிவு பிரபஞ்ச பேரியக்கமே....! இரவும் பகலும் பொய்யென்ற அறியாத மனம் கொண்டவர் நாங்கள்! பறக்கும் பூமிப் பந்தின் வேகம் எமக்கு தெரியாது. அதே பூமிப் பந்து சற்றே கொஞ்சம் சாய்ந்து சுற்றுவதால்தான் எமக்கு பருவ நிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன என்ற அறிவும்..ஏன் பூமி சூரியனை சுற்ற வேண்டும்...? ஏன் சூரியன் எல்லாவற்றையும் இழுத்துப் பிடித்து வைக்க வேண்டும் என்பதும் எமக்குத் தெரியாது.


மொத்த பூமியின் 71% நீர் விழுங்கி...மீதமுள்ள...29% சிறிய நிலப்பரப்பில் இருந்து கொண்டுதான் நாங்கள் நாடுகளை பிரித்துக்கொண்டு, சாதிகளை வகுத்துக்கொண்டு, ஆக்கிரமிப்புகளை நடத்திக்கொண்டு..அத்து மீறல்களும் அன்பும் செய்து கொண்டு மனிதம் மனிதம் என்று ஏதேதோ சிந்தாங்கள் எல்லாம் சொல்லிக் கொண்டு கருத்துக்களை பேசி விவாதித்து..எல்லாம் அறிந்தது போல வாழ்க்கையினை நகர்த்திக் கொண்டிருகிறோம்...எங்களால் எப்படி பிரபஞ்சத்தின் மூலமும் சூட்சுமமும் உணரமுடியும்? விடைகாண எம்மின் இருப்பன்றோ முதலிம் யாம் உணர வேண்டும்?

அறிவியல்..அறிவியல்...அறிவியல் என்று சொல்லி ஒவ்வொரு முறையும் எம்மின் உணர்தலின் நுட்பத்தையும் புரிந்து கொள்ளுதலின் சக்தியையும் இழந்து கொண்டுதானிருக்கிறோம் பூமியின் மையத்தில் என்ன உள்ளது என்றும்.. ஆர்டிக் பனிபிரதேசங்களின் என்ன இருக்கிறது என்றும் அறியவே...முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது எமது மூளைகள்..எங்களிடம் போய் பிரபஞ்சமூலம் பற்றிக் கேட்டால் என்ன சொல்வது?

மட்டுப்பட்ட கட்டுபாடு கொண்ட எமது புலன்களின் எல்லையே எமது அறிவு....எமது புலன்கள் தொட முடியா கோடானு கோடி விசயங்களை உன்னுள்ளே வைத்துக்கொண்டு, எம்மையும் உம்முள் அடக்கிக்கொண்டு மெளனாய் எங்கு நகர்ந்து கொண்டிருக்கிறாய் பிரபஞ்ச பேரியக்கமே ? அறிவியல் உன்னின் அருகிலே கூட வரவில்லை...உம்மின் சுட்டு விரல் கூஉட (எடுத்துக் காட்டுக்காக சுட்டு விரல் சொல்கிறேன்....யாரும் கை விரலை கற்பனை செய்யவேன்டாம்?) தொடவில்லை.....விளக்கமுடியா உன்னை பொருளாக்கி இல்லை என்றும்...உருவமாக்கி கடவுள் என்றும்... நித்தம் புலம்பிக் கொண்டு நகர்ந்து கொண்டிருக்கிறோம்........எதை நோக்கியோ...


மக்கள் என்பது மனிதர்களின் கூட்டம்...........தனித்து காட்டமுடியுமா? எப்படி காண்பித்தாலும்....தனி தனியின் கூட்டத்தைதான் காட்ட முடியும்.........!

தோப்பு...என்றால் மரங்களின் கூட்டம்.....தனித்து காட்டமுடியுமா? எப்படி காண்பித்தாலும்...அது தனியின் கூட்டுதான்......

கடவுளைக் கட்டமுடியுமா....? முடியாது....தனியாய் ஒன்றைக் காட்டி இது கடவுள் என்று சொல்லமுடியாது. கடவுள் (பிரபஞ்ச பேரியக்கம்) ஒரு நபரல்ல...தோப்பு போல, மக்கள் போல...எல்லாம் உள்ளடக்கியதின் கூட்டுதான் கடவுள் (பிரபஞ்ச பேரியக்கம்)......

வாழ்க்கையை காட்ட முடியுமா? முடியாது வாழ்வதுதான் வாழ்க்கை....அது போலத்தான் கடவுளும்....அசையும் அசையா எல்லாம் உள்ளடக்கிய ஒரு மிகப்பெரிய

பிரபஞ்ச பேரியக்கமே...உனக்கு பெயரே இல்லை என்பதுதானே....சத்தியம்!

வேறு என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக்கொள்வோம்....ஆனால் அதன் இயல்பும் பொருளும் மாறாமல் மனதில் இருந்தால்...சரிதானே..!

ஆடி ஓடி களைத்து...
எம்மில் எம்மை தொலைத்து...
வயோதிகமெடுத்து
முட்டி வலித்து...
இடுப்பெலும்பு வலிக்க...
ஆசைகள் எல்லாம்
எம்மை பூதங்களாய்...
ஆக்கிரமித்து..
பேசவும், கேட்கவும்...
ஆளின்றி..மூலையிலே
முடங்கி முடங்கி
முனங்கி...முனங்கி...
கற்பனைக் கடவுளர்
எல்லாம் என்னை
அச்சுறுத்த.....மயங்கி...
வியர்த்து....வரப்போகும்
மரணத்துக்காய்... நான் கழிக்கும்
நேரத்திலாவாது ஒழியுமா...
இந்த பாழாய்ப் போன....
பகட்டு மனம்?


தேவா. S

Comments

க ரா said…
//அச்சுறுத்த.....மயங்கி...
வியர்த்து....வரப்போகும்
மரணத்துக்காய்... நான் கழிக்கும்
நேரத்திலாவாது ஒழியுமா...
இந்த பாலாய்ப் போன....
பகட்டு மனம்?//

தெரியலியேன்னா
Jey said…
தேவா, உங்கள் கருத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளீர்கள், மூலத்ததேடும் உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்
விஜய் said…
அண்ணா நீங்க என்ன எழுதி இருக்கீங்க அப்டின்னு புரிஞ்சுக்க இன்னும் ஒரு ஐந்து ,ஆறு முறை படிக்க வேண்டும்,

நிஜமாய் உங்கள் புரிதல் ஏதோ ஒன்றி நோக்கி அழகாய் நகருகிறது, அதை என்னால் உணர மட்டுமே முடிகிறது, அதை உண்மையாய் நம்பும், காணும் பக்குவமும் என்னிடம் வரவில்லை என்று நான் உணருகிறேன்.

உங்களை பின் தொடருகிறேன்,
பார்ப்போம் புரிதல் நடக்கிறதா என்று அண்ணா ?..
||அது தனியின் கூட்டுதான்.||

அடடா!

அசத்தல்
கடைசிக்க் கவிதை மிக அருமை அண்ணா..
This comment has been removed by the author.
கடவுள் எங்கும் இருக்கிறார். அவனின்றி அணுவும் அசையாது. இன்றைய விஞ்ஞான வளர்ச்சி எல்லாம் அவனது சித்தமின்றி கைகூடாது. "கடவுள்" ஒரு அற்புதமான சொல் பிரித்து படித்தால் ஆயிரம் அர்த்தம் வரும். உள்ளத்தை கடந்து உள்ளே பார்த்தால் அதில் தெரியும். அன்பே சிவம், ஏழையின் சிரிப்பில் . . . எனும் தத்துவங்களும் அதுவே.
மண்டையப்போட்டு குடையுது. முழுசா புரிஞ்சா இன்னோரு கமெண்டோட வரேன்.
//கடவுளைக் கட்டமுடியுமா....? முடியாது....தனியாய் ஒன்றைக் காட்டி இது கடவுள் என்று சொல்லமுடியாது. கடவுள் (பிரபஞ்ச பேரியக்கம்) ஒரு நபரல்ல...தோப்பு போல, மக்கள் போல...எல்லாம் உள்ளடக்கியதின் கூட்டுதான் கடவுள் (பிரபஞ்ச பேரியக்கம்)......//
Baha'ism மற்றும் Eckankar ஆகிய மதங்களைப் பற்றி படியுங்கள். உங்களுக்கு உதவக்கூடும். :-)
ஏதோ குழப்பமுன்னு மட்டும் புரியுது..பாஸ்..!!
கருவோடு சேர்ந்த கவிதையும் அருமை .........வாழ்த்துகள்
கட-உள் விளக்கம் அருமை தேவா..

தொடருங்கள்...
சத்தியா எதுவும் புரியல அண்ணா ..
vasu balaji said…
புருஷசூக்தம், ராமகிருஷ்ணமிஷின் பதிப்பு படித்திருக்கிறீர்களா? இத்தகைய சிந்தனைகளுக்கு உரமிடும். எத்தனை முறை படித்தாலும், புதியதாய் ஏதோ ஒன்று புரியும். நன்றாயிருக்கிறது தேவா.
Ramesh said…
நல்லா இருக்கு. வாழ்த்துக்கள். கடைசியில் கவிதை அருமை
நம்பிக்கை, பிரபஞ்சம் இரண்டையும் நல்லாய்த்தான் அலசியுள்ளீர்கள். பதிவிற்கேற்றாற் போல கவிதையும் அருமையாக உள்ளது.
///மொத்த பூமியின் 71% நீர் விழுங்கி...மீதமுள்ள...29% சிறிய நிலப்பரப்பில் இருந்து கொண்டுதான் நாங்கள் நாடுகளை பிரித்துக்கொண்டு, சாதிகளை வகுத்துக்கொண்டு, ஆக்கிரமிப்புகளை நடத்திக்கொண்டு.///
தெய்வமே நீங்க எங்கயோ போயிட்டீங்க ..!!
இவன் எங்க ஊரா இருக்கமாட்டான் போலையே! ரொம்ப அறிவா இருக்கான்... :-)

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த