
எங்கும் வியாபித்தும் எனைச் சுற்றியும் இருக்கும் பிரபஞ்ச பேரியக்கமே...என்னுள்ளும், எனைச் சுற்றியிருக்கும் எல்லா உயிருகளுக்கும் தங்கு தடையின்று, மாசு மருவின்றி..குறைவில்லாமால் சுவாசிக்க விரவியிருக்கும் காற்றே...கனிகளாய், காய்களாய், ஜீவன்களாயும், எம்மையும் எம்மைச் சுற்றியும் பரவியிருக்கும் இருப்பே...
எங்கும் நீக்கமற நிறைந்து எல்லா பொருளிலும் பொருளற்றதிலும் இயங்கிக் கொண்டிருக்கும் அணுக் கூட்டமே...! மையத்தில் ஏதுமற்ற ஒன்றை...சுற்றி வரும் நியூட்ரானே...புரோட்டானே....எலக்ட்ரானே, அணுவாய் நீங்கள் எல்லா பொருளிலும் நீக்கமற நிறைந்து இயங்கி இயங்கி....பேரியக்கமாய் நிகழ்ந்து நிகழ்ந்து...கல்லாய், மண்ணாய், கடலாய், விண்ணாய், இயற்கையாய், சொல்ல முடிந்தன சொல்ல முடியாதன...கண்டன...காணமுடியாதன என்று எல்லம் உள்ளடக்கி எங்கே நகர்ந்து கொண்டிருக்கிறாய்...பேரியக்கமே....?
உன்னை நம்புகிறார் சிலர்....அபத்தம் அபத்தம்...எப்படி நம்புவது...? நம்புவது என்ற வார்த்தை தடம் பொய்யன்றோ....? உண்டான ஒன்றை..காணாமல் அல்லது உணராமல் இருப்பவர்தானே நம்புகின்றனர். ஆமாம்... என் சுவாசிப்பை ஏன் நான் நம்பவேண்டும்...? அது இடையறாது நிகழ்வதுவன்றோ...எமது இருப்பை ஏன் நம்பவேண்டும்? யான் இருப்பது எமக்கு மிகத்தெளிவாய் தெரியுமன்றோ? எமதிருப்பை ஏன் நம்பவேண்டும்...மாறக உணர்த்தானே வேண்டும்...உணரும் பட்சத்தில் அதை ஏன் நான் நிரூபிக்க வேண்டும்....உணர்ந்தேன்.... உணர்ந்தேன்...அந்த ஆனந்த திளைப்பன்றோ...உச்சம்....உச்சத்தில் நின்று விட்டு ஏன் சிற்றின்பம் நோக்கி பாயவேண்டும்....! விளக்கம் கேட்பவரும் உணர்ந்தாலன்றோ அறியமுடியும்...விளக்கம் விவாதம் எல்லாம்...சத்தியத்தை விட்டு தூரவன்றோ கூட்டிச் செல்லும்.
நம்பிக்கையாளார்கள் எல்லாம் உன்னை வெவ்வேறாக எண்ணி தமது கற்பனையில் எதேதோ கொண்டு நம்புகிறார் பிரபஞ்ச பேரியக்கமே உனக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் வெகு தூரம்....உன்னை உணரும் தருணத்தில்...இப்பிரபஞ்சத்தின் பேரியக்கத்தை அறியும் பட்சத்தில், சுற்றியிருக்கும் சக்தி ஓட்டத்தை விளங்கும் நேரத்தில்..... நம்பிக்கை பொடிபட்டுப் போகும்....யாமறிந்ததை...யாம் நம்பத்தேவையில்லை....யாம் அறிவோம்.. என்ற நிலை வருமே...அது வரையில்...
நம்பிக்கையாளர்கள் எல்லம் உனக்குத்தூரமே....
மட்டுப்பட்ட அறிவு எமது அறிவு பிரபஞ்ச பேரியக்கமே....! இரவும் பகலும் பொய்யென்ற அறியாத மனம் கொண்டவர் நாங்கள்! பறக்கும் பூமிப் பந்தின் வேகம் எமக்கு தெரியாது. அதே பூமிப் பந்து சற்றே கொஞ்சம் சாய்ந்து சுற்றுவதால்தான் எமக்கு பருவ நிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன என்ற அறிவும்..ஏன் பூமி சூரியனை சுற்ற வேண்டும்...? ஏன் சூரியன் எல்லாவற்றையும் இழுத்துப் பிடித்து வைக்க வேண்டும் என்பதும் எமக்குத் தெரியாது.
மொத்த பூமியின் 71% நீர் விழுங்கி...மீதமுள்ள...29% சிறிய நிலப்பரப்பில் இருந்து கொண்டுதான் நாங்கள் நாடுகளை பிரித்துக்கொண்டு, சாதிகளை வகுத்துக்கொண்டு, ஆக்கிரமிப்புகளை நடத்திக்கொண்டு..அத்து மீறல்களும் அன்பும் செய்து கொண்டு மனிதம் மனிதம் என்று ஏதேதோ சிந்தாங்கள் எல்லாம் சொல்லிக் கொண்டு கருத்துக்களை பேசி விவாதித்து..எல்லாம் அறிந்தது போல வாழ்க்கையினை நகர்த்திக் கொண்டிருகிறோம்...எங்களால் எப்படி பிரபஞ்சத்தின் மூலமும் சூட்சுமமும் உணரமுடியும்? விடைகாண எம்மின் இருப்பன்றோ முதலிம் யாம் உணர வேண்டும்?
அறிவியல்..அறிவியல்...அறிவியல் என்று சொல்லி ஒவ்வொரு முறையும் எம்மின் உணர்தலின் நுட்பத்தையும் புரிந்து கொள்ளுதலின் சக்தியையும் இழந்து கொண்டுதானிருக்கிறோம் பூமியின் மையத்தில் என்ன உள்ளது என்றும்.. ஆர்டிக் பனிபிரதேசங்களின் என்ன இருக்கிறது என்றும் அறியவே...முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது எமது மூளைகள்..எங்களிடம் போய் பிரபஞ்சமூலம் பற்றிக் கேட்டால் என்ன சொல்வது?
மட்டுப்பட்ட கட்டுபாடு கொண்ட எமது புலன்களின் எல்லையே எமது அறிவு....எமது புலன்கள் தொட முடியா கோடானு கோடி விசயங்களை உன்னுள்ளே வைத்துக்கொண்டு, எம்மையும் உம்முள் அடக்கிக்கொண்டு மெளனாய் எங்கு நகர்ந்து கொண்டிருக்கிறாய் பிரபஞ்ச பேரியக்கமே ? அறிவியல் உன்னின் அருகிலே கூட வரவில்லை...உம்மின் சுட்டு விரல் கூஉட (எடுத்துக் காட்டுக்காக சுட்டு விரல் சொல்கிறேன்....யாரும் கை விரலை கற்பனை செய்யவேன்டாம்?) தொடவில்லை.....விளக்கமுடியா உன்னை பொருளாக்கி இல்லை என்றும்...உருவமாக்கி கடவுள் என்றும்... நித்தம் புலம்பிக் கொண்டு நகர்ந்து கொண்டிருக்கிறோம்........எதை நோக்கியோ...
மக்கள் என்பது மனிதர்களின் கூட்டம்...........தனித்து காட்டமுடியுமா? எப்படி காண்பித்தாலும்....தனி தனியின் கூட்டத்தைதான் காட்ட முடியும்.........!
தோப்பு...என்றால் மரங்களின் கூட்டம்.....தனித்து காட்டமுடியுமா? எப்படி காண்பித்தாலும்...அது தனியின் கூட்டுதான்......
கடவுளைக் கட்டமுடியுமா....? முடியாது....தனியாய் ஒன்றைக் காட்டி இது கடவுள் என்று சொல்லமுடியாது. கடவுள் (பிரபஞ்ச பேரியக்கம்) ஒரு நபரல்ல...தோப்பு போல, மக்கள் போல...எல்லாம் உள்ளடக்கியதின் கூட்டுதான் கடவுள் (பிரபஞ்ச பேரியக்கம்)......
வாழ்க்கையை காட்ட முடியுமா? முடியாது வாழ்வதுதான் வாழ்க்கை....அது போலத்தான் கடவுளும்....அசையும் அசையா எல்லாம் உள்ளடக்கிய ஒரு மிகப்பெரிய
பிரபஞ்ச பேரியக்கமே...உனக்கு பெயரே இல்லை என்பதுதானே....சத்தியம்!
வேறு என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக்கொள்வோம்....ஆனால் அதன் இயல்பும் பொருளும் மாறாமல் மனதில் இருந்தால்...சரிதானே..!
ஆடி ஓடி களைத்து...
எம்மில் எம்மை தொலைத்து...
வயோதிகமெடுத்து
முட்டி வலித்து...
இடுப்பெலும்பு வலிக்க...
ஆசைகள் எல்லாம்
எம்மை பூதங்களாய்...
ஆக்கிரமித்து..
பேசவும், கேட்கவும்...
ஆளின்றி..மூலையிலே
முடங்கி முடங்கி
முனங்கி...முனங்கி...
கற்பனைக் கடவுளர்
எல்லாம் என்னை
அச்சுறுத்த.....மயங்கி...
வியர்த்து....வரப்போகும்
மரணத்துக்காய்... நான் கழிக்கும்
நேரத்திலாவாது ஒழியுமா...
இந்த பாழாய்ப் போன....
பகட்டு மனம்?
தேவா. S
Comments
வியர்த்து....வரப்போகும்
மரணத்துக்காய்... நான் கழிக்கும்
நேரத்திலாவாது ஒழியுமா...
இந்த பாலாய்ப் போன....
பகட்டு மனம்?//
தெரியலியேன்னா
நிஜமாய் உங்கள் புரிதல் ஏதோ ஒன்றி நோக்கி அழகாய் நகருகிறது, அதை என்னால் உணர மட்டுமே முடிகிறது, அதை உண்மையாய் நம்பும், காணும் பக்குவமும் என்னிடம் வரவில்லை என்று நான் உணருகிறேன்.
உங்களை பின் தொடருகிறேன்,
பார்ப்போம் புரிதல் நடக்கிறதா என்று அண்ணா ?..
அடடா!
அசத்தல்
//கடவுளைக் கட்டமுடியுமா....? முடியாது....தனியாய் ஒன்றைக் காட்டி இது கடவுள் என்று சொல்லமுடியாது. கடவுள் (பிரபஞ்ச பேரியக்கம்) ஒரு நபரல்ல...தோப்பு போல, மக்கள் போல...எல்லாம் உள்ளடக்கியதின் கூட்டுதான் கடவுள் (பிரபஞ்ச பேரியக்கம்)......//
தொடருங்கள்...
தெய்வமே நீங்க எங்கயோ போயிட்டீங்க ..!!