Pages

Wednesday, July 28, 2010

சாதியே...உன்னை வெறுக்கிறேன்...பதிவுத் தொடர் முடிவு....!
இதுவரை

பாகம்I
பாகம்II
பாகம்III

இனி...


அக்னி குஞ்சொன்று கண்டேன் -
அதை ஆங்கோர் காட்டில் பொந்தில் வைத்தேன்...
வெந்து தணிந்தது காடு; தழல் வீரத்தில் ...
குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

கொட்டும் மழையில் நனைய வேண்டுமா? கொடும் தீயில் இறங்க வேண்டுமா? நெஞ்சுக்குள் கைவிட்டு..எமது துடிக்கும் இதயம் பிய்த்து... வீசி எறியவேண்டுமா....?எம்மிடம் ஆயுதம் இல்லாத போதும்.....யாம் இரு கைகள் இழந்து கால்கள் இழந்து முடமாய் தெருவோரத்தில் வெறும் பிண்டமாய் கிடந்த போதிலும்...

உரக்க கத்துவோம்....அண்டம் நடு நடுங்க... அகிலமெல்லாம் கிடு கிடுங்க....ஆழி பேரலை வந்து எல்லாம் அடித்துப் போக.....

" சாதியே.... நீ செத்துப் போ "

உரக்க கத்தி... கத்தி ....எமது குரல்வளைகள் அறுபட்டு குருதியை மண்ணுக்கு கொடுத்து...மாண்டு போவேனும் போவோம்....!

ஒரு போதும் சாதியைக் கைக்கொண்டு வாழ்வெய்தோம்.

எங்கே அந்த முண்டாசுக் கவிஞன்?சாதிகள் இல்லையென்று பாடிவிட்டு, பதினோரு பேரே மொத்தத்தில் வந்து உம்மை தீயிலிட்டு போனதுடன் போய்விடுவாயா நீ......எழுந்து வா...! என் இளைஞர் கூட்டத்தில் நெஞ்சினில் நிறைந்து நில்...! நீ பழகச் சொன்ன ரெளத்ரம் எதற்கு என்று கேட்கிறதே...இன்னும் அறியாமல் ஒரு கூட்டம்...செவிட்டில் அறைந்தார் போல மனதினில் ஆழ விழு.....ரெளத்ரத்தால் சாதியை ஒழிக்க ஒரு போர்ப்பரணி பாடச் சொல்....!

ஓ..யாரது என் சட்டை பிடித்து இழுப்பது....கணியன் பூங்குன்றனாரா....? வாருங்கள் ஐயா...!இன்னுமொருமுறை உரக்கச் சொல்லுங்கள் ...ஒன்றே குலம் என்று.. ஒருவனே தேவனென்ற கூற்று பற்றி எமக்கு கவலையில்லை....! ஒராயிரம் பேர் சாதியில்லை என்று சொல்லிச் சென்ற பின்னும்....இன்னும் எம்மக்களைப் பிடித்துக்கொண்டு.....ஆட்டுவிக்கிறதே சாதி...? அதான் திமிரடக்க தினவெடுத்து நிற்கிறதே எம் தோள்கள்....

வில்லெடுத்து...அம்பெடுத்து...
போரிட்டுக் கொல்வோம்..
நீ..மனிதனெனினும். தெய்வமெனினும்
அல்லையேல் அசுரனெனும் விலங்கெனினும்
உறுதியாய்....!

மறைந்திருந்து எம்மக்கள்...
மனிதில் ஒழிந்திருந்து சீறும் கோழையே...
ஏய்...சாதியே....! வரலாற்றின்..அநீதியே....
சங்கறுப்போம்...உன் கருவறுப்போம்...
காத்திரு கவனமாய்...
எமது காலத்திற்கும்...உன் மரணத்திற்கும்!


சரி இனி...எமது தோழர்கள் கூறிய கூற்றினை கொஞ்சம் உற்று நோக்குவோம்...அவர்களின் உயரிய பொறுப்புணர்ச்சிக்கு நன்றி கூறியபடியே....
தோழர் ஜெயதேவா தாஸ் கூறியது.....

" ஜாதியின் பெயரில் மக்களை அடக்கி ஆண்டதும், அவர்களை தீண்டத் தகாதவர்கள் என்றும், மேல் சாதியினருக்கு நிகரானவர்கள் அல்ல என்றும் அவமானப் படுத்தும் வகையில் நடத்தியதெல்லாம் நிச்சயம் தவறுதான். ஆனால் ஜாதியே வேண்டாம் என்று ஏற்றுக் கொள்ள எல்லோரும் தயாரா? இட ஒதுக்கீட்டை இழக்கத் தாயாரா? இட ஒதுக்கீடு இருக்கும் போதே 2% உள்ள "அவா இவா"-க்கள் 98% சதவிகித மத்திய அரசுப் பணிகளை ஆக்கிரமித்துள்ளனர், இதை நீக்கி விட்டால் சுத்தம், பள்ளி கால்லூரிகளிலோ, வேலை வாய்ப்பிலோ ஒன்றும் மிஞ்சாது. அங்குதான் இடிக்கிறது. "


எல்லாம் தவறென்றால் தோழரே ....அந்த தீமை யாருக்கு வேண்டும்? இது அசிங்கம் என்று அறிந்த பின் அதற்கு அங்கீகாரம் எதற்கு? இட ஒதுக்கீடு ஒரு காலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களை மேலே கொண்டு வர உதவிருக்கலாம்...., ஆனால் உண்மையான இட ஒதுக்கீடு எதன் அடிப்படையில் வரவேண்டும்...? இல்லாத பொய்யான சாதியைக் கொண்டா....?

ஆண் பெண் கூடிக்கலந்து ஜனிக்கும் உயிரின் எந்த இடத்தில் சாதி நிர்ணயம் செய்யப்படுகிறது...விந்திலா? அண்டத்திலா? கருவிலா? சூத்திரமே இல்லாத மனிதனை சூத்திரன் என்றும், இன்னபிறவென்றும் பிரிக்கும் சாதியை கற்பித்தது...யார்? மனிதன் தானே...? மனிதனால் உருவாக்கப்பட்டதை மனிதன் அழிக்க முடியாதா?

உண்மையான இட ஒதுக்கீடு பொருளாதாரத்தை வைத்தும் மனிதர்களின் வாழும் சூழலைப் பொறுத்தும் அவர்களின் வாழ்க்கை தடைகளை வைத்தும் வரக்கூடாதா? சாதி என்ற பேயை...இன்னும் அரசியல் கட்சிகள் கைக்கொண்டிருப்பதும், இட ஒதுக்கீடு என்ற ஒரு மாயை உருவாக்கி இருப்பதும்....வாக்குகள் பெற்று அவர்கள் ஆள்வதற்குதானே....அன்றி மக்களின் மீதுள்ள கருணையினால் அல்ல...! அப்படியிருந்தால் நிர்ணயம் செய்யப்படவேண்டியது இட ஒதுக்கீடு அல்ல. சாதியே இல்லாமல் செய்யும் சட்டத் திருத்தம்.

வசதியான பிற்படுத்தப்பட்டவர் என்று சொல்லக்கூடியவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் ஏழையான முற்படுத்தப்பட்டவர் என்று சொல்லக்கூடியவருக்கு கிடைக்காமல் போவதில் என்ன தருமம் இருக்கிறது.

பொருளாதாரத்தையும் வாழ்க்கைச் சூழ் நிலையையும் சரியாக கணக்கீடு செய்து கொண்டு வரப்படுவதுதான் இட ஒதுக்கீடு....! அப்படிப்பட்ட ஒன்று இதுவரை வரவில்லை....? என்னுடைய ஆதாரக்கேள்வியான...மனிதன் வாழ்வதற்கு சாதி தேவையா..? இல்லை என்ற பின் மேல் சாதி என்ன கீழ் சாதி என்ன?

தோழர் ஸ்மார்ட் என்பவர் கூறியது...


" எல்லாம் சரி ஒழிக்கப்பட வேண்டியது சாதிதான்.
1) ஆனால் இதில் பெரியார் பெயர் எப்படி வந்தது. அவருக்கும் சாதி ஒழிப்புக்கும் அவ்வளவாக சம்மந்தமில்லையே!
2) நீங்கள் குறிப்பிடும் படி ஒரு சமுகத்தை திட்டச் சொல்லி எந்த சாஸ்த்திரமும் சொல்லாத பொது அதை எதற்கு எரிக்கணும்? ஒரே குழப்பமாயிருக்கே! யார் அப்படி பேசிகிறார்களோ அவர்களை எதிர்ப்பதைவிட்டு சம்மந்தமில்லாமல் வேரயாரையோ எதிர்ப்பதாகத் தெரிகிறது.

பி.கு. பெரியார் ஒரு தனிப்பட்ட ஜாதியை ஒழிக்கத் தான் பாடுபட்டாரே ஒழிய சாதி ஒழிக்க அல்ல "

தீண்டாமை ஒழிக்க பாடுபட்ட பெரியார், கருவறை நுழைவுப் போராட்டம் நடத்திய பெரியார்....சாதியே வேண்டாம் என்று சொன்ன பெரியார்...எப்படி சாதியைப் எதிர்க்கவில்லை என்று சொல்லமுடியும்? என்னைப் பொறுத்த வரை உங்களின் இந்தக் கேள்விக்கு....பெரியாரின் தொண்டர்கள் சரியான புள்ளி விவரத்தோடு பதிலளிக்கக்கூடும்.

இன்னும்...தீவிரமாய் ....சாஸ்திரங்கள் அதன் முலங்கள் என்று நாம் ஆராய்ந்து கொண்டு அதில் இருந்து பதில் பெற முயல்வதைவிட.....சாதி இருப்பதின் அவசியம் என்ன? என்று தான் நான் சிந்திக்கிறேன்.

மனிதன் அறிவால் வேறுபடலாம், குணத்தால் வேறுபடலாம், உடையால் வேறுபடலாம்...ஆனால் பிறப்பால் வேறுபட்டவன் என்று சொல்வது.....முரண்பாடாய் இருக்கிறதே? நான் இன்னார் வீட்டில் பிறந்த உயர் சாதி என்று சொல்லக்கூடிய மடையானாய் இருந்தால் எனக்கு ஒரு மரியாதையும், நான் கீழ் சாதி என்று சொல்ல கூடிய வீட்டில் பிறந்தால் கிடைக்காத மரியாதையும் இந்த சமுதாயத்தின் கற்பிதத்தில் இருந்து நீங்க வேண்டும்.

என் உக்கிரத்தினை எழுத்துக்கள் மூலம் கொண்டு சேர்க்க ஒரு சிறு முயற்சி செய்துள்ளேன்......! என் அறிவும் , நினைவும் மட்டுப்பட்டது....ஒரு கணம் உங்களுக்கு கிடைக்குமெனில் சிந்தியுங்கள்...தோழர்களே....

வாழ்வில் மனிதன் மனிதனாய் வாழ எதற்கு நமக்கு சாதி..?


எம் இளைஞர் கூட்டம் தயாராக இருக்கிறது சாதி அரக்கனை ஒழிக்க....பத்து நூறாகும்... நூறு ஆயிரமாகும் ஆயிரம் லட்சமாய் கோடியாய் மாறும்.... நாங்கள் கேட்பது எல்லாம் ஒன்றுதான்...அது சமூக நல இயக்கமாயிருந்தாலும் சரி....அல்லது அரசியல் கட்சிகளாய் இருந்தாலும் சரி....

" ஒன்று எம்மை தலைமை தாங்கி வழி நடத்துங்கள்.....இல்லை... எம்மை பின்பற்றுங்கள்....வெறுமனே.....எங்களின் எரிமலையை ஒத்த பயணத்தை மறைத்துக் கொண்டு நிற்காதீர்கள்..."

" EITHER LEAD .. OR ….FOLLOW OTHER WISE..GET OUT FROM THE WAY! "

இந்த தொடர் முடிந்தது...ஆனால் அக்னி தொடர்ந்து எரியட்டும்... நியாயமானவர்களின் நெஞ்சில்!தேவா. S

61 comments:

அருண் பிரசாத் said...

வழக்கம் போல தேவா Touch. தீப்பொறிய போட்டுடீங்க, கண்டிப்பாக எரியும்

சிறுகுடி ராமு said...

அக்னி நிச்சயம் தொடர்ந்து எரிந்துகொண்டு தான் இருக்கும் மாப்ஸ்...

ஆனால், தொடரை பொசுக்கென்று முடித்தாற்போல் உள்ளது. இன்னும் சில மாதங்கள் / வருடங்கள் தொடர்ந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.

LK said...

/ பதினான்கு பேரே மொத்தத்தில் வந்ந்து உம்மை தீயிலிட்டு போனதுடன் போய்விடுவாயா நீ......//

boss only 4 peruthan vanthaanga

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

சாதிகள் இல்லையடி பாப்பா_ குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.

சே.குமார் said...

//இந்த தொடர் முடிந்தது...ஆனால் அக்னி தொடர்ந்து எரியட்டும்... நியாயமானவர்களின் நெஞ்சில்!//


தீப்பொறிய போட்டுடீங்க, கண்டிப்பாக எரியும்

VELU.G said...

மிக அருமையான பதிவு நண்பரே

அக்னி தொடர்ந்து எரியட்டும்...

ப.செல்வக்குமார் said...

///வசதியான பிற்படுத்தப்பட்டவர் என்று சொல்லக்கூடியவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் ஏழையான முற்படுத்தப்பட்டவர் என்று சொல்லக்கூடியவருக்கு கிடைக்காமல் போவதில் என்ன தருமம் இருக்கிறது.////

இதுதான் தற்பொழு நடந்து கொண்டிருக்கிறது அண்ணா ..!! இதை நீங்கள் சொல்லாமலிருந்தால் நான் சொல்லலாமென்றிருந்தேன்..!!

//நான் கீழ் சாதி என்று சொல்ல கூடிய வீட்டில் பிறந்தால் கிடைக்காத மரியாதையும் இந்த சமுதாயத்தின் கற்பிதத்தில் இருந்து நீங்க வேண்டும்.///

இந்தக் கொடுமை எப்பொழுது நீங்கப்போகிறதோ ..!!

சௌந்தர் said...

இந்த தொடர் முடிந்தது.. இன்னும் எழுதுங்கள் அண்ணா சாதி பற்றி எழுதுவது முடிய கூடாது....தொடர்ந்து எழுதுங்கள்

Anonymous said...

இத்தொடரை படித்த நியாயமானவர்களின் நெஞ்சில் நிங்கள் கொளுத்தி விட்ட அக்னி தொடர்ந்து எரியும் தேவா

Riyas said...

வேண்டாமே சாதிகள் இனியும்..

மனிதன் என்ற ஒரு சாதிக்குள் வாழப்பழகுவோம்..

ஜீவன்பென்னி said...

உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் சரி. உக்கிரமாக எழுதியுள்ளீர்கள்.

இறுதி ஊர்வலத்தில் 14 பேர்தாங்க வந்தாங்க.

கே.ஆர்.பி.செந்தில் said...

பொருளாதார ஏற்றமே சாதிகளை ஒழிக்கும்

jothi said...

"ஆண் பெண் கூடிக்கலந்து ஜனிக்கும் உயிரின் எந்த இடத்தில் சாதி நிர்ணயம் செய்யப்படுகிறது...விந்திலா? அண்டத்திலா? கருவிலா? சூத்திரமே இல்லாத மனிதனை சூத்திரன் என்றும், இன்னபிறவென்றும் பிரிக்கும் சாதியை கற்பித்தது...யார்? மனிதன் தானே...? மனிதனால் உருவாக்கப்பட்டதை மனிதன் அழிக்க முடியாதா?"

இந்த வரிகளின் ஆழத்தை புரிந்து, உணர்ந்து, மனிதர்கள் மனிதர்களாக நடந்தால் சாதியம் எங்கே? என்று தேடலாம்.......

நல்லதோர் பகிர்வு........வாழ்க மானுடம்........

Anonymous said...

அது சரி அண்ணாத்தே. நீங்க என்ன சாதி ?

Anonymous said...

”எங்கே அந்த முண்டாசுக் கவிஞன்?சாதிகள் இல்லையென்று பாடிவிட்டு, பதினோரு பேரே மொத்தத்தில் வந்து உம்மை தீயிலிட்டு போனதுடன் போய்விடுவாயா நீ......எழுந்து வா...! என் இளைஞர் கூட்டத்தில் நெஞ்சினில் நிறைந்து நில்...! நீ பழகச் சொன்ன ரெளத்ரம் எதற்கு என்று கேட்கிறதே...இன்னும் அறியாமல் ஒரு கூட்டம்...செவிட்டில் அறைந்தார் போல மனதினில் ஆழ விழு.....ரெளத்ரத்தால் சாதியை ஒழிக்க ஒரு போர்ப்பரணி பாடச் சொல்....!


அண்ணாத்தே முண்டாசுக்கவிஞன் நன்னா ஆச்சாரக்குடும்பத்து பார்ப்பனப்பையனப்பாத்துதா தான் மவளுக்கு கலியாணம் பண்ணிவச்சா தெரியுமோ?

போர்ப்பரணி பாடுறது ஈசி. செய்றதெ கஷ்டமில்ல தெரியுமோ?

Anonymous said...

’’ஓ..யாரது என் சட்டை பிடித்து இழுப்பது....கணியன் பூங்குன்றனாரா....? வாருங்கள் ஐயா...!இன்னுமொருமுறை உரக்கச் சொல்லுங்கள் ...ஒன்றே குலம் என்று.. ஒருவனே தேவனென்ற கூற்று பற்றி எமக்கு கவலையில்லை....! ’’

அண்ணாத்தே அவா கணியன் பூங்குன்றனாரில்லே. அவா திருமூலராக்கும். அவாதா சொன்னா: ஒன்றே குலம் ஒருவனே தேவன்.

உடனே வழக்கம்போல ஏமாந்திராதேள். அவா சொன்னது, சிவபெருமாளை. சிவந்தான் அந்த ஒரு தெய்வம்.

எல்லாம் பொடி வச்சுதான் எழுதுவாங்க. கபக்குன்னு புடிச்சிடாதேள்.

கணியன் எழுதியது:

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’

இப்படிச்சொல்லி வெளிநாட்டிலே போய் புழைச்சுக்கலாம். அங்கே ரெண்டு கொடுத்தா ஓடிவந்துடிவீங்க. இல்லையா? உங்க நாட்டைச்செழுமைப்படுத்துங்கள்.

‘என்ன இல்லை இந்த திருநாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?’

அப்படின்னு உங்க ஆளு சொன்னானில்லையோ?

Anonymous said...

”நான் இன்னார் வீட்டில் பிறந்த உயர் சாதி என்று சொல்லக்கூடிய மடையானாய் இருந்தால் எனக்கு ஒரு மரியாதையும், நான் கீழ் சாதி என்று சொல்ல கூடிய வீட்டில் பிறந்தால் கிடைக்காத மரியாதையும் இந்த சமுதாயத்தின் கற்பிதத்தில் இருந்து நீங்க வேண்டும்.


அண்ணாத்தே...யார் யாருக்கு மரியாதை கொடுக்கிறதுன்கிறதல கன்பூசன் இருக்குது.

அவன் இவனை கீழ்சாதின்னா இவன் ஏன் ‘ஆமாம் சாமி’ன்னான்?

அவன் தான் மேல் சாதின்னா இவன் ஏன் ‘ஆமாம் சாமின்னான்?

மத்தவாகிட்ட மரியாதை தேடிப்போறதுக்கு முன்னாலா, அண்ணாத்தே, நீர் உம்மை மரியாதை பண்ணிக்கொண்டிருந்தீரா?

செல்ப் ரெஸ்பெடுன்னு இங்கிலீசுக்காரன் சொல்லுவான்னா? அது உமக்கு உண்டா? இல்லியே. அப்போ பார்ப்பா மேல் சாதின்னுகிறான்னு நீன் ஏன் அழுவிறீரு? சொல்லுமா?

ஒழுங்கா படிச்சி நல்ல வேளைக்குப்போயி டீசண்டா இரு. எல்லா உம்மை மேல்சாதின்னு சொல்லாமல் கைகட்டி இருப்பான்.

வெறும்பய said...

Anonymous said...

அது சரி அண்ணாத்தே. நீங்க என்ன சாதி ?

//

இங்கேயும் வந்திட்டியா...பிரச்சனைய கிளப்புறதுக்கு...

ப.செல்வக்குமார் said...

நீங்க சொல்லுற அதே முண்டாசுக் கவிஞன் தான் கீழ் ஜாதி என்று அந்தக் காலத்தில் சொல்லப் பட்டவர்களுக்கு பிராமணப் பட்டம் செய்வித்தான் என்பதை மறக்க வேண்டாம்.. அதை விட நீங்கள் உங்கள் பெயரைத் தெரிவித்து விவாதத்திற்கு வந்தால் நலம்.. நாங்களும் அவர் மட்டுமே பாட வேண்டும் என்று கூறவில்லை .. நீங்கள் கூடப் பாடலாம்.. பாடுவதோடு நிறுத்தாமல் செயலிலும் காட்ட வேண்டும் ..!!

jothi said...

//Anonymous said...
அது சரி அண்ணாத்தே. நீங்க என்ன சாதி ?//

நாம என்ன கத்தினாலும் 'அறியாதவர்கள்' என்று ஒரு சாதி இருக்கிறது, அதை சேர்ந்தவர் போல நீங்கள்.

வரலாறு சரியாக தெரியாமல் பேசுபவர்களுக்கு என்ன சொல்லி புரிய வைப்பது...?

பாரதியாரின் வாழ்க்கை வரலாறை நன்றாக படித்துவிட்டு வாருங்கள்.நானும் இன்னொரு முறை படித்துவிட்டு வருகிறேன் . நன்றி

அருண் பிரசாத் said...

இந்த மாதிரி முக்காடு போட்டு வருபவர்களை Consider பண்ணுவதை விட Ignore பண்ணுவது உத்தமம்.

பெயருடன் வந்தால் விவாதிக்க நான் ரெடி. மொட்டை கடுதாசிக்கு பதில் போடமுடியாது

விஜய் said...

பெயர் சொல்ல பயந்து, பின்னூட்டம் இடும் பொழுதே தெரிகிறது, சமுதாயத்தில் தவறாய் வளர்ந்துவிட்ட, வளர்ந்து கொண்டு வரும் விஷ செடிகளில் நீயும் ஒருவன் என்று,

நீ இங்கே சொல்ல முயல்வது என்னவென்றே ஒரே வரியில் சொல்லிவிடலாம்,சாதிகள் அழிக்க முடியாத ஒன்று என்று சொல்லும் ஜாதி வெறி பிடிச்ச கூட்டத்துல பிறந்தவன் நீ என்று புரிகிறது, தன் இனம் தலை கவிழ்ந்து கீழ் இனம் மேல வரகூடாது என்று கீழ்த்தரமான விஷ எண்ணம் உள்ள விஷ செடியாக தான் நீ இருக்க வேண்டும்,ஒன்று மட்டும் புரிந்துகொள் சாதியை மாற்ற முடியாது என்று வெட்டி பேச்சு பேசிவிட்டு, குறட்டைவிட்டு தூங்கிசெல்லும் யாருக்கும் பயனில்லா போகும் உன்னை போன்ற ஊதாரிகள் இல்லை, தன்னால் முடிந்ததை எழுத்தால் சொல்வது மட்டும் இல்லை, தானும் கடைபிடிக்கும் சராசரி மனிதம் உள்ளவர்கள் ..

எழுதும் முன் யோசித்துகோள், பெயர் சொல்லி எழுத பழகலாம், உன்னிடம் நிரடியாக வாதாடும் தைரியம் எங்களுக்கு இருக்கிறது , உனக்கும் இருந்தால் அடுத்த முறை பெயருடன் வா.

Anonymous said...

"நீங்க சொல்லுற அதே முண்டாசுக் கவிஞன் தான் கீழ் ஜாதி என்று அந்தக் காலத்தில் சொல்லப் பட்டவர்களுக்கு பிராமணப் பட்டம் செய்வித்தான் என்பதை மறக்க வேண்டாம்.. "

செல்வாஜி!

நானெல்லாம் அதை மறக்கிற ஆளு.

ஏன் கீழ்ஜாதிகளை பிராமணன்களாக்கினான்?

அதுதான் இங்கே வேரியரின் பதிவின் சாராம்மாக்கும்.

வேரியர் என்னா சொல்றார்னா, அல்லது கொதிக்கிறார்னா, பொறப்பிலே, போறப்பிலேல்லாம் சாதியிருக்கா? இல்லியே? விந்திலா இருக்கா? இல்லியா? ஆம்பிளை பொம்பிளை சேந்துக்குவா? புள்ளை பெத்துக்குவா? பேபி ‘ஆங்..நான் இன்னா சாதின்னு சொல்லிக்குனு பொறக்குமா? இல்லியே.

அப்பிடின்னு அண்ணாத்தை இங்கே பதிவு போட்டிருக்கா. நான் ஜல்லியடித்துக்கொண்ட்ருக்கே.

செல்வாஜி படிச்ச மாதி இல்லியே.

முண்டாசுக்கவிப்பய பூணுல் கீழ்ஜாதிக்கு போட்டு அவனை உசத்திறா!

அடங்கொய்யாலே. இது தெரீயிலியா?

கீழ்ஜாதிப்பயலுவ ஈனப்பயலுவ பொறப்பிலேங்கிறே.

அதை மாத்திப்பிடலாம் அவாளுக்கெல்லாம் பிராமணனாக்கு.

பிராமணன் பொறப்பிலே மேல்ஜாதி. அவனை ஏன் மாத்தனும்கிறான் இந்த முண்டாசுப்பய.

நல்லா ஏமாத்திட்ட.. செல்வாஜி காதுல பூ.

வேரியர் சொல்வதும் முண்டாசு செய்த்தும் ஒன்னுக்கொன்னு வேறப்பா.

இது மட்டுமா முண்டாசு செய்தது?

‘ஈனப்பறையரேயினும் அவர் எம்முடன் வாழ்பவரன்றோ?’

எப்படி போட்டு எழுதுறா பாரு. அவனுக்கு யார் ஈனப்பிறவின்னு தெரியுது.

செல்வாஜிக்கு தெரியுதா? இங்கே ஜால்ராத்தட்றவாக்கெல்லாம் தெரியுதா?

Anonymous said...

'உன்னிடம் நிரடியாக வாதாடும் தைரியம் எங்களுக்கு இருக்கிறது , உனக்கும் இருந்தால் அடுத்த முறை பெயருடன் வா. '

விஜய்ஜி!

தெகிரியம்லா எதுக்கு? குப்பேலே கொண்டு போடு. ஒரு பைசா பொறாது.

கண்ணைத்தொறந்து பாத்தா லோகம் தெரியும்.

பாத்தே எழுதிறே. அம்புட்டுதான்.

என்னா தெரியிது?

கூலி வாங்கிறான், குடிச்சிட்டு வீட்டுக்கு வாறான்..பொண்டாட்டியைப்போட்டு உதைக்கிறான். அவா லோ..லோ ஊரைக்கூட்றா.

புள்ளைகள் ஸ்கூலுக்குப்போச்சா. படிச்சிச்சா. என்னுன்னு அவனுக்கு கவலையில்லை.

பொண்டாட்டியும் பொறுக்குவா. அஞ்சி. பத்துக்கு. எவளுக்கு ஒரு புருசன் கிடையாது, எவனுக்கும் ஒரு பொண்டாட்டின்னு கிடையாது. ஒரே வைப்பாளன் வைப்பாடிதான் சேரியிலே.

‘ஈனப்பறயன்’ன்னு எங்காளு சரியாத்தான் சொன்னாரு.

உங்களுக்கு எப்படிய்யா மருவாதி தரமுடியும்?

நானும் நீயும் ஒன்னா?

நீங்க சரியாயிருந்தா, லோகம் உங்களை மதிக்கும். மேல் ஜாதி, கீழ் ஜாதியெல்லாம் வராது.

ப.செல்வக்குமார் said...

//எப்படி போட்டு எழுதுறா பாரு. அவனுக்கு யார் ஈனப்பிறவின்னு தெரியுது.///
அதுவும் சரிதான் .. ஆனா நீங்கதானே அவங்கள தொடக்கூடாது அப்படிங்கிறீங்க .. உங்க மேல முட்டக்கூடாது அப்படிங்கறீங்க .. சரி அப்படி இருக்கறவங்கள பிராமனராக்கி உங்க கூட உட்கார வைக்கலாம்னு தான் பிராமணப் பட்டம் கொடுத்தாங்க ..!! சரி உங்க பேர போட்டு எழுதுங்க ..!! உங்கள் வாதமும் கவனிக்கப் படவேண்டியதே ...!!

Anonymous said...

“பாரதியாரின் வாழ்க்கை வரலாறை நன்றாக படித்துவிட்டு வாருங்கள்.நானும் இன்னொரு முறை படித்துவிட்டு வருகிறேன் . நன்றி ”


ஜோதி!

நான் நெறைய தடவை படிச்சிருக்கே. நீங்க இன்னொரு முறை படிங்க.

கவிதைகளைப்படித்து ஏமாந்துவிடாமல், கட்டுரைகளையும், அவரைப்பற்றி பிறர் சொன்னதையும் எழுதியதையும் படிக்க்க்கோருகிறேன்.

Bad luck. ஏன்னா ஏமாற்றம் காத்திருக்கில்லியோ!

Anonymous said...

I have just glanced at the profiles of the members who responded to my Tamil wacky messages.

Their average the age of 20s. Fledglings!

My concluding remarks to them - I dont care in what way they take them - are -

Just dont waste your time over the issue of castes. If you are an SC/ST/OBC, grab the reservation benefit; and get on to the wagon of good education and good job, that will lead you to better life. Bring up your children fully self-respecting and bold. Give them three Cs: Communication, Commitment and Courage.

In the next generation, you will create men and women who will face any other on equal footing.

Caste by birth is a political and social fiction created by Brahmins and today, it is more political. It was given a religious sanction by brahmins only because all of us were Hindus and brainwashed to believe the words of brahmins.

Change religion if you still believe Hindu religion clings to the old theory of caste. If you dont like other religions, remain a non-beleiver, or have a personal religion.

Dont believe the Tamil poets, writers and philsophers. Everyone is a cheat. Trust yourself and your judgement. Indeed, there may be some one who will be wiser in public interest. You can seek his counsel if need be.

ULTIMATELY IT IS YOU WHO MATTERS. IF YOU RESPECT YOURSELF, NO NEED TO HARANGUE OR CRY ABOUT CASTE.

Good luck.

தமிழ்லே வேணுமின்னாகா எழுதுறேன்

சௌந்தர் said...

Anonymous said...சார் முதல் உங்க பெயரை சொல்லுங்க எதுக்கு சார் பயம்....

Anonymous said...

’’ஆனா நீங்கதானே அவங்கள தொடக்கூடாது அப்படிங்கிறீங்க .. உங்க மேல முட்டக்கூடாது அப்படிங்கறீங்க .. ’’

அப்பா தம்பி. எவனோ ஒருத்தன் கிட்ட வராதேன்னா. உனக்கு ரோசமில்லையா.

நீ ஏன் கிட்ட வராதேன்னு நீ ஏன் சொல்லல ?

வால்பையன் said...

//இட ஒதுக்கீடு ஒரு காலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களை மேலே கொண்டு வர உதவிருக்கலாம்...., ஆனால் உண்மையான இட ஒதுக்கீடு எதன் அடிப்படையில் வரவேண்டும்...? இல்லாத பொய்யான சாதியைக் கொண்டா....?//சரியான கேள்வி!

dheva said...
This comment has been removed by the author.
dheva said...

Dear Anonymous commenter!

Its really great pleasure to receive your messages....where i can see some kind of concern about the socitey....!

I was actullay awaiting and deeply montoring your comments where i believed it will lead to the great orating...but i unfortunately i couldn't see that.

I really welcome your views not only from you anyone who wants to discuss or debate the concepts but onthhing i dont understand that whyu should you come and comment with out name.

I confess with your statmen that the people who all are replying to you are young genarations but still you failed see their guts that they are coming with their own names.


You can still continue your debate but Iam so sorry if you are again posting the anonymous comments i can't release that.

Anyway thank you verymuch for you part..and really you are still welcom if you are coming with you identity.

Gr8 day (தமிழ்ல வேணும்னா சொல்லுங்க எழுதுறேன்...)

dheva said...

நண்பர்களே... மன்னிக்கவும்...ஒரு சில கமெண்ஸ் மட்டறுக்காமால் வெளியிட்டுள்ளேன்....எல்லோரின் எண்ணம் எப்படி இருக்கிறது என்பது உலகம் அறியவேண்டும்...! அவ்வளவுதான்...!

வானம்பாடிகள் said...

பொறி பறக்குது தேவா. சரிதான். ஆனால் சாத்தியமா?

dheva said...

பாலான்ணே...@ நன்றிண்ணே....!

நீங்க...தசாவதாரம் பாத்தீங்களாண்ணே....! கமல் சொல்லுவார். கடைசி சீன்ல....

"கடவுள் இல்லேண்ணு நான் சொல்லல....ஆனா இருந்தா நல்லா இருக்கும்னு" அதே மாதிரி மாத்த முடியுமன்னு தெரியலிங்க அண்ணா...ஆனா மாறினா நல்லா இருக்கும்னு தோணுது...!

dheva said...

கே.ஆர்.பி. செந்தில் சொன்ன ஒரு கருத்துல உண்மை இருக்கு. பொருளாதார ஏற்றம் சாதியினை மறைக்கும் அல்லது ஒழிக்கும்னு...

" பணம் வந்தால்...பத்தும் பறக்கும்..." யார்கிட்ட பணம் இருக்கோ அதை மதிக்கிற சொசைட்டி இது....

உண்மைதான் செந்தில்!

அருண் பிரசாத் said...

தேவாண்ணா எதுக்கு இவனுங்களுக்குலாம் பதில் சொல்லிட்டு இருக்கீங்க. கோழைகள்.

கழுகுல பார்க்க சொல்லுங்க. அது விவாதம், சும்மா சொல்லிட்டு ஒளிஞ்சுக்கிறது பேடித்தனம்

கனிமொழி said...

ரொம்ப நல்லா இருக்கு 'படித்தவர்கள்' செய்யும் சாதி(சதி) வாதம்...
நமக்கும் அறியாமையில் இருகின்றவர்களுக்கும் என்ன வித்யாசமோ தெரியலைங்க...
இப்படியும் பெயர் சொல்ல விருப்பம் இல்லாமல், சக மனிதனைப்பற்றி அதுவும் சாதியின் போர்வையில் இப்படி இழிவாய் பேசறவங்களும் இருக்காங்க என்பதை நினைச்சாவே அசிங்கமா இருக்கு...
நமக்கெல்லாம் ஆறறிவு வீண்...

மனிதனை, மனிதனாய் பார்ப்போம்...

நேரம் இருப்பின் 'தீண்டாத வசந்தம்' என்கிற நாவல் படிச்சு பாருங்க தேவா...

dheva said...

அருண் பிரசாத்....@ உண்மைதான் தம்பி....ஆரோக்கியாமான விவாதங்கள் தீர்வை நோக்கி நகர்ந்துகிட்டு இருக்கு ஆனால் விதண்டாவாதங்கள் முகமூடி இட்டு தனிமனித தாக்குதலில் ஈடுபடுது!

dheva said...

கனிமொழி..@ வருகைக்கு நன்றி தோழி...!


நீங்கள் மட்டுமல்ல...இன்னும் இந்த தளத்திற்கு வரும் அனைவரும் படிக்கவேண்டும் அது ஒரு விதமான புரிதலை உண்டாக்கும் என்று மட்டறுத்தாமல் கருத்துக்களை வெளியிட்டுள்ளேன்...!

கண்டிப்பாக படிக்கிறேன் தோழி!

ஹேமா said...

தேவா...உங்கள் மனத்தீயை அள்ளி விரவி விட்டிருக்கீங்க.எரிஞ்சு அணைக்கணும் மனசில இருக்கிற அசிங்கங்களை !

ஹேமா said...

தேவா...உங்கள் மனத்தீயை அள்ளி விரவி விட்டிருக்கீங்க.எரிஞ்சு அணைக்கணும் மனசில இருக்கிற அசிங்கங்களை !

Chitra said...

எல்லாம் தவறென்றால் தோழரே ....அந்த தீமை யாருக்கு வேண்டும்? இது அசிங்கம் என்று அறிந்த பின் அதற்கு அங்கீகாரம் எதற்கு? இட ஒதுக்கீடு ஒரு காலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களை மேலே கொண்டு வர உதவிருக்கலாம்...., ஆனால் உண்மையான இட ஒதுக்கீடு எதன் அடிப்படையில் வரவேண்டும்...? இல்லாத பொய்யான சாதியைக் கொண்டா....?


..... அரசியல் அமைப்பில், பிள்ளையையும் கிள்ளி விட்டு விட்டு, தொட்டிலையும் ஆட்டி விட்டு கொள்வார்கள்..... பிறகு எப்படி ஜாதி உணர்வு, மக்களிடையே குறையும்? மறையும்?

இராமசாமி கண்ணண் said...

எல்லாம் சரிதான்.. முதல்ல நாட்டுல உள்ள அரசியல்வா(வியா)திகளை ஒளிங்க.. சாதி தன்னால் ஒழியும்.. எல்லோருக்கும் கல்வி, நல்ல வேலை, நியாயமான சம்பளம், சுகாதாரமான சூழ்நிலை இதெல்லாம் இருந்துச்சுன்னா கட்டாயமா சாதி ஒழியும்...

Anonymous said...

perla ennathaan irukkoo theriyala. perai vaichu enna pannappooreenga? perillaamal waan ezhuthittaa en karuthu maarumaa? sollunga.

What is your dominant point here ? You want castes to be abolished, dont you ?

My repeat question to you: Why should they be ?

Suppose everyone has a caste and no one teases the other; and all of us are leading our lives peacefully, then what is the problem ? Why do you dislike to be named as that caste person ? Why does another in another caste does not mind being called as that caste person ?

This is because the former fellow belongs to the so called low caste and feels ashamed to be identified with his caste in open society, whereas the latter fellow does not mind that identity of his caste as he belongs to the so called upper caste. Whether he feels proud of the assocation with his caste or not, is a different issue: but he does not feel ashamed to be associated with his caste like you.

You got it? All arises from the association of your caste with certain mindset in public ?

Now, come to my point. If the public does not associate your caste with certain negative thinking, will you mind if you are called with that identity ? Definitely not.

Your problem is not with caste per se. But with the association.

Come now to the prevalent society and ancient society. The latter society had the association as the Hindu religion was dominant and exercised its power over people. The Brahmins created both positive and negative associations. Now that society of brahmins is dead. The assocations no longer remain acceptable to society. People do any jobs of their choice.

However, the castes continue to be invoked only POLITICALLY. If, as someone has said, if politics finds caste factor useless, it will discard it.

Therefore, it is not caste but the present trend of political society that need to be changed.

Kulasai sekar.

Come on. You want my name. I have given it. Argue with me. Come on. Say what is wrong with my caste and yours? Where do you feel the pain ?

Anonymous said...

Chitra

Why is it asingam? Why should jaathi unarvu kuraiya veendum? What is bad about one liking one's caste people? If it is bad, is not bad also to like one's family, one's city, one's language, one's school, one's country, one's state. one's religion etc.?

The whole thinking is wrong from top to bottom.

Dont discuss the castes along with reservations: because it will lead to wrong conclusion. Because, castes were there before reservations; and will be there after reservations.

The question why castes are bad and why should they be abolished, reservations or no reservations?

Could anyone answer me?

Kulasai sekar

Kulasai sekar

Anonymous said...

இல்லாத பொய்யான சாதியைக் கொண்டா....?


Such statement comes from immature thinking. Tell me what is caste? Tell me how do you say it is a lie? Tell me how do you say it does not exist?

If you find answers to these questions, you will see your statement is false.

Kulasai sekar.

I have also written my comments in RV blog on jemohan's caste based opinion on a Tamil feature film.

dheva said...

Welcome Mr. Kulasai Sekar (as you said).....

I really appreciate health arguments in my blog since you said your name.....parellaly i have responsibilities to you answer you questions.......

Before heading to your quiries...could you please tell my...one thing...


why the caste is required? is that mandatory for human living?

I wish you can answer in tamil and lead this debate in healthy way.

Thanks a lot Boss!

dheva said...

Requesting you to comment on tamil is for everyones understanding...

still you are not comfort on that..carry on as you like!

Anonymous said...

We hate a thing only if it harms us, or some one else, or the society as a whole.

We dont hate the thing if it does not harm anyone. We just dont mind it being there.

We like the thing if it brings happiness and good to us or anyone, or to the society as a whole.

So, where is the hub, dear friends ?

It is in its nature of being.

Kulasai sekar

Anonymous said...

At the moment, I have no facility in typing in Tamil. Perhaps tomorrow yes.

Anonymous said...

I will answer you in Tamil tomorrow. Now, I would point out that we are travelling in two different paths.

You: castes to be abolished.

Me: Why should they be? Further, for them to be abolished, they ought to bring unhappiness to the possessor of caste idenitity.

So, I am discussing theory, right now. What I discuss practice, we will see face to face. Ok?

dheva said...

I haven't received your answer sekar,

how does the caste is matter to live as normal human being?

dheva said...

Sekar,

Look at the reason wy am sayin that we dont required caste... all because of the cause it broughts... !

its my thought....while am saying caste its not only in between FC and BC but all...

FC thinks they are higher than BC, BC thinks they are higer than MBC and the MBC thinks they are higher than SC nd ST


In total i found that cate is nothing...and why should we keep on get going with this?

To live we need good knoledge, education,money kindness and humanity...

wht this cate is staying here for?

I dont know Boss why we need cate?

if you can ..pls expand it.. ! incase i conviniced with your thoughts.. why not... ? i will accept you and change my policy...

i really find any mean for these cates...


be with me...let move or debate in right direction and nothing is there to angry we both each..as

u too my frined!

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

மகிழ்ச்சியான மனிதனாக வாழ்வதற்கு சாதிகள் தேவை இல்லை . விழிப்புணர்வை தூண்டும் சிறந்த பதிவு வாழ்த்துக்கள் தேவா

விடுத‌லைவீரா said...

வணக்கம் தேவா..
சாதியை தூக்கிபிடித்து ஆடும் சில துரோகிகள் உங்கள் கட்டுரைக்கு எதிராக அவர்கள் கருத்தை தைரியத்துடன் முகம் கொடுத்து எதிர்க்க முடியாமல் மறைந்து இருந்து சொற்போர் புரிகிறார். நாம் ஒரு போதும் புறமுதுகு பார்த்து பேசி பழகாத தமிழர்கள். நாம் தோழர்கள் அனைவருக்கும் அவர் சரியான பதில் சொல்லவில்லை. இவரை போன்றவர்களை இனி அனுமதிக்காதீர்கள். யாருக்கும் ஒரு கட்டுரை பற்றி விமர்சிக்க உரிமை உண்டு. ஆனால் பெயர் இல்லதவர்களுக்கு அனுமதி இல்லை. முடிந்தால் நேரடியாக பேசட்டும்...

தோழர் ஸ்மார்ட் என்பவர் கூறியது...

" எல்லாம் சரி ஒழிக்கப்பட வேண்டியது சாதிதான்.
1) ஆனால் இதில் பெரியார் பெயர் எப்படி வந்தது. அவருக்கும் சாதி ஒழிப்புக்கும் அவ்வளவாக சம்மந்தமில்லையே!
@..
காங்கிரசிலிருந்து பெரியார் வெளியேறியபோது,‘ ராஜாஜி, சத்தியமூர்த்தி அய்யர் போன்றவர்கள் கடவுள் நம்பிக்கையாளர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் இருவரைப்போலவே காங்கிரசும் தீவிரமான பக்தர்கள் நிரம்பிய கட்சியாக இருக்கிறது; கடவுள் இல்லை, இல்லேவே இல்லை; அதனால் நான் கட்சியை விட்டுபோகிறேன்’ என்று சொல்லி வெளியேறவில்லை.

ராஜாஜி, சத்தியமூர்த்தி அய்யர் உட்பட்ட ஒட்டுமொத்தக் காங்கிரசும் சாதிவெறி கட்சியாக இருக்கிறது என்பதினால்தான் பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினார். சாதி ஒழிப்புற்காகத்தான் தனி இயக்கமும் கண்டார். இறைநம்பிக்கை கொண்ட நீதிக்கட்சி தலைவர்களை அவர் ஆதரித்ததும் அதன் பொருட்டே.

நீதிக்கட்சி தலைவர்களின் இறைநம்பிக்கையில் தலையிடமால் அவர்களின் சாதி உணர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தன் பெயருkகு பின்னால் சாதி பெயரை போட்டுக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தியதும் அதனால்தான்.
பெரியாரின் கருத்துக்களில் முதன்மையானது சாதி ஒழிப்பு தான். சாதி ஒழிப்பு வழியாகத்தான் பெரியார் கடவுள் மறுப்புக்குள் வருகிறார். அதன் பிறகு கடவுள் இல்லை என்பதை அறிவியல் ரீதியாக புரிந்து கொண்டு முழுமையான பகுத்தறிவாளராக திகழ்ந்தார்.
ஆக, பெரியாரின் அடிப்படை நோக்கம் சாதிஒழிப்புதான்.

ஜெயந்தி said...

நீங்கள் சொல்லும் சாதியற்ற சமூகம் என்பது மிகச் சரியான ஒன்றுதான். அதை நான் வரவேற்கிறேன். ஆனால் அந்தக்காலம் வரும்வரை நம்முடன் இன்னும் தீண்டப்படாதவர்களாகவே பீ அள்ளிக்கொண்டு, கீழான வேலைகள் செய்துகொண்டு வாழும் மக்களும் மேலே வரவேண்டும் என்று நான் நினைக்கிறேன். இட ஒதுக்கீட்டில் அவர்கள் இடத்தை எட்டக்கூட முடியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களைப் பற்றியும் சற்று சிந்திக்கலாம்தானே?

வில்சன் said...

அந்த காலத்தில் அவரவர் பார்க்கும் வேலை நிமித்தம் பெயர் வைத்து அதை ஜாதியென்றான். இப்பொழுது அனைவரும் அனைத்துத் தொழிலும் செய்கிறார்கள். எனவே, ஜாதிகளை எல்லாம் நீக்கி விடலாம்.

jothi said...

தேவா,

மகிழ்சிகரமான கருத்து விவாதத்தை தொடங்கயுளிர்கள்....., படித்த விவரம் அறிந்த சாதியபற்றி நமக்குள்ளே பல கருத்து வேறுபாடுகள் இருக்கும் போது சாதி (தீ) என்ற அமைப்பு எப்படி ஒழியும் என்று நினைகிறீர்கள் ?.......! செந்தில் சொன்னது போல் ஒருவன் பொருளாதாரதில் நிறைந்து உயர்வடைந்தால் மட்டுமே சக மனிதர்களால் முதலில் மனிதனாக மதிக்கபடுவன்.............. பொருளாதரத்தில் நிறைவடைந்த மனிதன் சாதியை பற்றி சிந்திக்கமாட்டான் என்பது என்கருத்து..

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

rk guru said...

சாதி நமக்கு பேதி....