
போர்க்களம் போலத்தான் வாழ்க்கையும் எல்லா பிரச்சினைகளையும் எதிர்கொண்டு, எதிர்கொண்டு அடிவாங்கி,அடி கொடுத்து, அழுது,சிரித்து எல்லா பாவங்களோடும் நகரவேண்டியதாயிருக்கிறது. எப்போதும் கடந்த காலத்தை எண்ணி சந்தோஷப்படும் மனம்.. ஏன் நிகழ்காலத்தில் நிற்க மறுகிக்கிறது...? மேலும்...ஏன் எதிர்காலத்தை எண்ணிப் பயப்படுகிறது என்று...புரியாமல் எதற்காகவோ நொந்து எதற்காகவோ சந்தொஷப்பட்டு நகர்ந்து கொண்டிருக்கிறோம்...!
சாதி பற்றி எழுதவேண்டும் என்று சாந்தமான மனோ நிலையில் முடிவு செய்து எழுதலாம் என்று அமர்ந்தால்.....காதலாய் கவிதைகள் வந்து விழுகிறது....உற்று...உற்று நோக்கினால் என்னையே ஏளனம் செய்து சிரிக்கிறது என் மனோ நிலை! அதானால்தான் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது! இன்று ஒரு இறுக்கம் என்னைச் சூழ....இறுக்கத்தில் சாதிக்கு எதிரான சீற்றம் என்னை மீறி....வெளிப்பட...
இதோ....
இதுவரை
பாகம்I
பாகம்I I
இனி...
மனித வரலாற்றின் மிகப்பெரிய அபத்தம் அல்லது சதி இந்த சாதி! நூற்றாண்டுகள் ஆகியும் இன்னும் ஒரு தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு தொற்று நோய் சாதி.....! ஆமாம் அந்த தொற்று நோயின் விளைவு காமாட்சி அண்ணனை சட்டையை கழற்ற வைத்திருந்தது....! நீங்க ஏண்ணே சட்டைய கழட்டுறீங்க...?என்ற கேள்விக்கு...அவர் அளித்த பதில் இன்னும் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது...ஆமாம்...யாரோ ஒருவர் அந்த ஊரில் இறந்துவிட அன்று இவர் சட்டையோடு வயலுக்குச் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது எதிரே வந்த மேல் சாதி என்று எண்ணிக்கொண்டும் சொல்லிக் கொண்டும் திரிகிற- ஒருவர்...ஏன்டா..ஊர்ல இழவு விழுந்து கிடக்குது.... நீ சட்டையப் போட்டுகிட்டு சந்தோசம் கொண்டடுறியோன்னு கேட்டு...காறித் துப்பி..அடித்ததை கண்ணீரை மறைத்துக் கொண்டு...மெல்லிய குரலில் சொல்லி விட்டு ..என்னை விட்டுத்தள்ளி வேகமாய் நடக்க ஆரம்பித்தார்.....
விக்கித்துப் போய்... நான் மாமா வீடு நோக்கி சென்று கொண்டிருந்தேன்...பாதி பேர் சட்டையில்லாமலும்...மீதி பேர் சட்டையுடனும் தெருவில் நடந்து கொண்டிருந்ததையும் நான் கவனிக்கத் தவறவில்லை... ! வீட்டுக்குள் நுழைந்த என்னை வரவேற்ற அத்தையும் அவர்களது பிள்ளைகளையும் பார்த்து மெலிதாய் சிரித்து வைத்த நான் முதலில் கேட்ட கேள்வி...மாமா எங்க போய்ட்டாரு?ன்னு கேட்டேன்...? அந்த இறந்த வீட்டுக்கு சென்றதாக அறிந்து கொண்டேன்......காத்திருந்தேன்...! அந்த ஊர் பெரிய மனிதரில் ஒருவர்தானெ என்ன சொல்வார் என்று பார்ப்போம் என்று....சில உக்கிரமான கேள்விகளுடன்...
எதுக்கு மாமா? காமாட்சி அண்ணன் மட்டும் சட்டையை கழட்டணும்....? சரி துக்கம்னு சொன்னா எல்லோருக்கும் தானே....ஒரு லாஜிக்கா இருக்கணும்னா. .ஊர்ல இருக்க எல்லோரும் கழட்ட வேண்டியதுதானே.....? குளித்து விட்டு வந்த மாமாவை குளுமை அடங்கும் முன் உஷ்ணப்படுத்தினேன்....! முறுக்கிய மீசைகள் எல்லாம் மிரட்டத்தான் வேண்டுமா? சத்தியம் பேசாதா? வெள்ளைச் சட்டைகளும் வேட்டிகளும் தெருமுனைகளில் வீராப்பு பேசவும்....புஜபலம் காட்டவும்...மேடைகளில் முழங்கவும் தான? நீதி, அனீதி பற்றியெல்லாம் பேசாதா?
" அப்பு....இது காலம் காலமா பழகி போன ஒண்ணு....அவுக இப்படித்தேன் இருக்கணும்னு பெரியவுக சொல்லியிருக்காக...சட்டைய கழட்டணும்னு யாரும் சொல்லல அவுகளாத்தேன் செய்யுறாக...மரிவாதைப்பு...அம்புட்டுதேன்ன்னு சொல்லி விட்டு... நீங்க இன்னும் சாப்பிடலையன்னு..போய் சாப்பிடுங்கன்னு சொல்லிட்டு அவர் .. வேகமாக... ஏய் தம்பிக்கு சப்பாடு கொண்டு வா என்று அத்தைக்கு கட்டளையிட்டதிலிருந்து அவருக்கு இந்த பேச்சில் அக்கறை இல்லை என்று புரிந்து விட்டது.
அதுக்கப்புறம் நான் விருந்து சாப்பிட்டது...ஊர் சுத்துனது எல்லாம் இப்போ விசயம் இல்லை... ஆன...எனக்குள்ள " வேக வேகமா ஒரு வித பதட்டத்தோட காமாட்சியண்னன் சட்டையை கழட்டியது " இன்னும் மறக்க முடியல.....
ஒரு நாள் ஒரு நாள் வெயில்ல ஊர சுத்திட்டு...வந்தப்ப..பேச்சம்மை அக்கா வீடு பக்கமா இருக்கேன்னு அங்க போயி ….”பேச்சம்மை அக்காவிடம் ஒரு சொம்பு தண்ணி கொடுங்கக்கா...இந்த பக்கமா வந்தேன் ஒரே தாகமா இருக்குன்னு கேட்ட பின் அந்த அக்காவின் முகத்தில் நான் பார்த்தது ஒரு நூற்றாண்டு ஆச்சர்யத்துடன் கூடிய அதிர்ச்சியும் மலர்ச்சியும்....." !
எங்க வீட்ல எல்லாம் குடிப்பீகளா"ன்னு அவுங்க கேட்டப்ப என்னடா இது மனுசப் பொறப்புன்னு தோணுச்சி..." ஏங்க்கா நீங்க என்ன விசமா கொடுக்கப் போறீக? தண்ணிதானக்கா என்று கேட்டதற்கு பேச்சம்மை அக்கா பத்து தடவ சொம்ப கழுவிட்டு தொடச்சிட்டு பாத்து பாத்து மூணு தடவ தண்ணிய கீழே ஊத்திப்புட்டு.." தும்பு (தூசி) கிடந்துச்சி தம்பி"னு சொல்லிகிட்டு தண்ணிய கொடுத்தப்ப அவுங்களுக்கு ஒரு சந்தோசம் இருந்துச்சு பாருங்க...என்னோட முதுகு தண்டு சில்லிட்டுப் போச்சு.....
நம்ம வீட்ல குடிக்கிற தண்ணி இவ்ளோ சுத்தமா இருக்குமான்னு நானே கேள்வி கேட்டு கிட்டு... நான் குடிச்ச தண்ணீல வயிறு மட்டு நிறையல...என் மனசும்தான்....! இன்னும் எத்தனை... எத்தனையோ சாதிக் கொடுமைகளை பற்றி ரொம்ப விலாவாரியா நான் சொல்லிகிட்டே போறதுல அர்த்தம் இல்ல பாஸ்....! அப்படி சொன்னா அது உணர்ச்சிய தூண்டுமே தவிர நாம் எல்லோரும் மனிதர்கள் என்ற உணர்வினை தூண்டாது.....!
கொடியன் குளத்தில் நடந்த பிரச்சினையையும்..., தீண்டாமை காரணமா ரெண்டு கிளாசுல டீ குடுத்ததையும்...பேசி பேசி... நகர்ந்துகொண்டே இருக்கிறது வாழ்க்கை......! சாதியே இல்லாத திராவிட இனத்தின் தொடர்ச்சியில் எந்த இடத்தில் சாதி என்ற சதி வலை பின்னப்பட்டது என்று விவாதிப்பதும்....வரலாற்றுப் பிழைகளை பிரித்தெடுத்துப் பார்ப்பதும் கட்டுரையின் இலக்கல்ல....
ஆனால்...எதை சொல்ல நினைத்தேனோ....எது நமது இலக்கோ அதற்கான உந்து சக்தியாய் இரண்டு பின்னூட்டங்கள் யரோ இரு தோழர்களால் இடப்பட்டு இருக்கின்றன....
அந்த பின்னூட்டங்களை கையில் எடுத்து கொண்டு....மீண்டும் ஆக்கப்பூர்வமாக நமது இலக்கு நோக்கி டாப் கியரில் பயணிப்போம் தோழர்களே....
பின்னூட்டம் 1
K.ஜெயதேவா தாஸ் கூறியது.....
" ஜாதியின் பெயரில் மக்களை அடக்கி ஆண்டதும், அவர்களை தீண்டத் தகாதவர்கள் என்றும், மேல் சாதியினருக்கு நிகரானவர்கள் அல்ல என்றும் அவமானப் படுத்தும் வகையில் நடத்தியதெல்லாம் நிச்சயம் தவறுதான். ஆனால் ஜாதியே வேண்டாம் என்று ஏற்றுக் கொள்ள எல்லோரும் தயாரா? இட ஒதுக்கீட்டை இழக்கத் தாயாரா? இட ஒதுக்கீடு இருக்கும் போதே 2% உள்ள "அவா இவா"-க்கள் 98% சதவிகித மத்திய அரசுப் பணிகளை ஆக்கிரமித்துள்ளனர், இதை நீக்கி விட்டால் சுத்தம், பள்ளி கால்லூரிகளிலோ, வேலை வாய்ப்பிலோ ஒன்றும் மிஞ்சாது. அங்குதான் இடிக்கிறது. "
பின்னூட்டம் 2
ஸ்மார்ட் என்பவர் கூறியது...
" எல்லாம் சரி ஒழிக்கப்பட வேண்டியது சாதிதான்.
1) ஆனால் இதில் பெரியார் பெயர் எப்படி வந்தது. அவருக்கும் சாதி ஒழிப்புக்கும் அவ்வளவாக சம்மந்தமில்லையே!
2) நீங்கள் குறிப்பிடும் படி ஒரு சமுகத்தை திட்டச் சொல்லி எந்த சாஸ்த்திரமும் சொல்லாத பொது அதை எதற்கு எரிக்கணும்? ஒரே குழப்பமாயிருக்கே! யார் அப்படி பேசிகிறார்களோ அவர்களை எதிர்ப்பதைவிட்டு சம்மந்தமில்லாமல் வேரயாரையோ எதிர்ப்பதாகத் தெரிகிறது.
பி.கு. பெரியார் ஒரு தனிப்பட்ட ஜாதியை ஒழிக்கத் தான் பாடுபட்டாரே ஒழிய சாதி ஒழிக்க அல்ல "
இவர்களின் பின்னூட்டங்கள்தான் நாம் பயணிக்க வேண்டிய..விவாதிக்க வேண்டிய இலக்கு....! அரோக்கியமான விவாத களமாக, அறிவுசார் களமாக இது சென்று கொண்டிருக்கிறது என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் அதே தருணத்தில்..மேலும், மெலும் சிந்தனையைத் தூண்டச் செய்யும் அளவிற்கு பின்னூட்டமிட்ட தோழர்களுக்கு நன்றி சொல்லி....அடுத்த பதிவில் கிட்டதட்ட நமது இலக்கினை ஏக தேசமாக நெருங்கி விடுவோம் என்ற உறுதியோடு... காலஙகள் தாண்டி புரையோடுப் போயிருக்கும் ஒரு விசயம் ...அன்போடு காத்திருங்கள்...அடுத்த பதிவிலே... நிறைவினை எட்டுவோம் என்ற உறுதியோடு....இப்பொது தற்காலிகமாக நிறுத்துகிறென்!
(நெருப்பு....இன்னும் பரவும்)
தேவா. S
Comments
தோழர் ஸ்மார்ட் அவர்களுக்கு...எல்லாம் சரி ஒழிக்கப்பட வேண்டியது சாதிதான்
1) ஆனால் இதில் பெரியார் பெயர் எப்படி வந்தது. அவருக்கும் சாதி ஒழிப்புக்கும் அவ்வளவாக சம்மந்தமில்லையே! இது உங்களின் கேள்வி.
தோழர் அவர்களே கேள்வி கேட்பது சுலபம்தான். சரி நீங்களே சொல்லுங்கள்.வேறு யார் யாரல்லாம் சாதியை ஒழிக்க போராடினார்கள் என்று?
உங்களுக்கு சில உதாரணங்கள்:
1957-ல் என்ன வசதிகள் இருந்திருக்க முடியும்? பெரியார் சாதி ஒழிப்பு போராட்டத்திற்கு வாருங்கள் என 20 நாட்கள் இடைவெளியிலே தஞ்சாவூரிலே மாநாடு போட்டு அறிவிக்கின்றார். அந்த 20 நாளிலே சட்டமன்றம் கூடி விவாதித்து 3 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை என அறிவித்து பயமுறுத்திய நிலையிலேகூட 10000 பேர் சட்டத்தை எரித்தார்கள்.
1970ல் தந்தை பெரியார் தமிழகத்தில் கோயில்களில் நடக்கும் சாதி ரீதியான கொடுமைகளை கண்டித்து கருவரை நுழைவு கிளர்ச்சி போராட்டம் தமிழகம் முழுக்க நடைபெறும் என அறிவித்தார். அப்போது முதல்வராகயிருந்த மு.கருணாநிதி, அய்யாவை எங்களது அரசு கைது செய்ய முடியாது. அதனால் அவரின் கோரிக்கை சட்டமாக்கப்படும் என்றார்.
சாதி ஒழிப்பில் மற்றவர்களுக்கும் பெரியாருக்கும் உள்ள வேறுபாடு
23.10.1961- அன்று காரைக்குடியில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு- "விடுதலை" 04.11.1961. நூல்:-"பெரியார் களஞ்சியம்" தொகுதி - 15-(ஜாதி-தீண்டாமை: பாகம்
http://www.tamilankural.com/publ/1-1-0-52
ஜாதி பற்றி பேசுவோர் அவர்கள் பையனுக்கு பொண்ணுக்கு வேறு சாதியில் கல்யாணம் செய்ய வேண்டும்,
..... நேரில் இருந்து பேசி கொள்ளும் விதத்தில் இருக்கும் உங்கள் எழுத்து நடையும், சம்பவ விவரிப்புகளும், கருத்து செறிவும் உங்களை இன்னும் பாராட்ட வைக்கிறது.... வாழ்த்துக்கள்!
//எங்க வீட்ல எல்லாம் குடிப்பீகளா"ன்னு அவுங்க கேட்டப்ப என்னடா இது மனுசப் பொறப்புன்னு தோணுச்சி..." ஏங்க்கா நீங்க என்ன விசமா கொடுக்கப் போறீக? தண்ணிதானக்கா என்று கேட்டதற்கு பேச்சம்மை அக்கா பத்து தடவ சொம்ப கழுவிட்டு தொடச்சிட்டு பாத்து பாத்து மூணு தடவ தண்ணிய கீழே ஊத்திப்புட்டு.." தும்பு (தூசி) கிடந்துச்சி தம்பி"னு சொல்லிகிட்டு தண்ணிய கொடுத்தப்ப அவுங்களுக்கு ஒரு சந்தோசம் இருந்துச்சு பாருங்க..//
இந்த வரிகள் மிக அழகா இருக்கிறது..ஜாதி இல்லைனா எப்படி இருக்கும் என்பதை மேல கூறிய வரிகளில் அழகாய் எடுத்து சென்று இருக்கிறீர் அண்ணா வாழ்த்துக்கள்,
இந்த பதிவின் இறுதியை படிக்க அவ்வளவு ஆர்வமாய் இருக்கிறது ,
நீங்க கலக்குங்க அன்ன, நான் முன்னையே சொன்ன மாதிரி நீங்க ஜாக்கி ஜான் , நான் ஜேடன்..சரியா அண்ணா
இன்னொரு விடயம்- தமிழ் நாட்டில் காலேஜ் எனப்படும் கல்லூரிகளில் சேர்வதற்கே உயர் குல மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நிலை இன்னமும் காணப்படுவதாக அறிந்தேன். அப்படியான அடி முட்டாள் தன, பகுத்தறிவற்ற் ஒரு சில அரசியல்வாதிகளினதும். காலேஜ் நிர்வாகத்தினரதும், கோயில் நிர்வாகங்களினதும் சாதியம் பற்றிய கொள்கைப் பிடிப்புக்கள் இறுக்கமாக இருக்கும் வரை இச் சாதியத்தை இல்லாது ஒழிக்க முடியாது என்பது எனது கருத்து. படித்தவர்கள், இலத்திரனியல் ஊடகங்களைக் கையாளும் அறிவாளிகள் போன்றோர் ஒன்றிணைந்து பிரச்சாரங்களைச் செய்தால் தான் இத்தகைய கீழ்த்தரமான கொள்கைகளை இல்லாது ஒழிக்க முடியும்!
இதிலை வாற பெரியவங்களைப் பற்றிய மூட்ட நம்பிக்கை, பெரியவங்கள் சொன்னாங்கள் என்கிற மூட நம்பிக்கை தான் சமூகத்தில் புரையோடிப் போயுள்ள சாதி வெறிக்குக் காரணமாக உள்ளது.
இந்தியாவில் சாதிப் பாகுபாடுகள் இல்லை என்று சொல்பவர்களுக்காக நண்பர் கிருத்திகன் குமாரசாமியின் வலைப் பதிவில் இருந்து ஒரு லிங்கினைத் தருகிறேன். அனைவரும் கண்டிப்பாகப் பாருங்கள்.
http://kiruthikan.blogspot.com/2010_05_01_archive.html
இது தான் இந்தியா ஒளிர்கிறது என்பதன் மறுவடிவம்!
http://kiruthikan.blogspot.com/2010_05_01_archive.html
நாம் எம்மால் முடிந்தளவு மாற்றுவோம்...
Rule the World
நன்றி.
///பெரியார் ஒரு தனிப்பட்ட ஜாதியை ஒழிக்கத் தான் பாடுபட்டாரே ஒழிய சாதி ஒழிக்க அல்ல///
இன்றைக்குப் பெரியார் பெயரைச் சொல்லிக்கொண்டு அராஜகம் செய்கிறவர்கள் பெரியாருக்கு நல்ல பெயரைத்தான் வாங்கிக்கொடுத்திருக்கிறார்கள் (சாதியை ஒழிக்க போராடிய தாடிக்காரக் கிழவனை சாதிவெறிபிடித்த தாடிக்காரக் கிழவன் என்று எல்லோரும் நினைக்கும்படி ஆக்கியது இந்த பெரியாரிஸ்ட் கும்பல்தான். திருந்துவார்களா இன்றைய போலிப் பெரியாரிஸ்டுகள்?
உண்மைதான்
சமூகத்தை கும்பிடிறேங்க. தப்பா எடுத்திட்டு என்னை வெட்டிபுடாதீக.
இப்படிக்கு
தங்கள் அடிமை
பள்ளமாரிலே ஒருத்தங்க
இரண்டாவதாக.....சாதியே இருக்க கூடாது என்ற நோக்கில் எழுதிய கட்டுரைகு சாதிச் சாயத்தோடு ஒரு கருத்து சொல்வதின் பிண்னனி என்ன? கட்டுரையின் எல்லா பாகங்களையும் படியுங்கள் நண்பரே....!
வாழ்த்துக்கள்!
//சமூகத்தை கும்பிடிறேங்க. தப்பா எடுத்திட்டு என்னை வெட்டிபுடாதீக.
இப்படிக்கு
தங்கள் அடிமை
பள்ளமாரிலே ஒருத்தங்க// படிச்சுட்டுத்தான் வேண்டும்னே கமெண்ட் பண்ணியிருப்பாய்ங்க.
இந்த கொசுத்தொல்லைங்க தாங்க முடியல. எங்கயாச்சும் இவிங்க அரிப்ப தீத்துக்கலண்ணா தூக்கம் வராது போல.
சாதிங்கற ஒன்னு வளருவதே உங்களை மாதிரி இருக்குற ஒரு சில
விஷ செடியால தான், இந்த விஷ செடிய வெட்டி எரிய யோசிக்கிறது தான் எங்க பலவீனம் என நீ நினைத்தால் அது உங்க முட்டாள் தனத்த காட்டுது அப்பு ..
என் தேசத்துக்காக உங்களை மாதிரி விஷ செடிய கலை எடுக்கவும்
தயங்க மாட்டோம் அப்பு..
எழுத்துளையே இவ்வளவு தீ எரிய வைக்ரவங்க நாங்க...
கொஞ்சம் கமெண்ட்ஸ் போடறதுக்கு முன்னாடி யோசிசுக்கப்பு ...
நல்லவேளை, ஜாதி பற்றி பேசினால் பெயர் கெட்டுவிடுமுனு நினைச்சி முக்காடு போட்டுட்டு வந்து ஜாதி கேட்டு இருகாருயா.
பரவாயில்லை, அந்த பயம் இருந்தா போதும், இந்தியா சீக்கிரம் முன்னேறிடும்
நீங்க என்ன சாதி சார்? பாக்க தேவமார் மாதிரி இருக்கீக. பயமாயிருக்கு.
சமூகத்தை கும்பிடிறேங்க. தப்பா எடுத்திட்டு என்னை வெட்டிபுடாதீக.
இப்படிக்கு
தங்கள் அடிமை
பள்ளமாரிலே ஒருத்தங்க//
தைரியம் இருந்தா உங்களோட உண்மையான பேர போட்டு பின்னோட்டம் போட்டிருக்கணும் .. இப்படி எதுக்கு ..?
ஓ. .. உங்களுக்கு இன்னும் பேரே வெக்கலையா ..? அதுக்குள்ளவே உங்களுக்கு என்ன ஜாதின்னு சொல்லி அத பத்தி எழுத சொல்லீட்டாங்களா ..? சரியான காமெடி பீசுங்க நீங்க .. ஜாதி இல்லப்பா , அது வேண்டாம் அப்படின்னா , அதெல்லாம் முடியாது எங்க ஆத்தா வையும் எனக்கு ஜாதி வேணும் அப்படின்னு சொன்னா என்ன பண்ணுறது ..
//தப்பா எடுத்திட்டு என்னை வெட்டிபுடாதீக.//
இப்படி பயப்படாம எல்லோரும் ஒத்துமையா வாழணும்னு தான் நாங்க ஆசை படுறோம் ..
ஆனா நீங்க எப்படி எழுதினாலும் நாங்க அதைய கிண்டல் பண்ணுவோம்னா பண்ணுங்க .. நாங்க இதுக்கெல்லாம் பயப்பட மாட்டோம்.. எங்களோட இலக்க நோக்கி நாங்க போயட்டேதான் இருப்போம்..!
நன்றாக எழுதியிருக்கிங்க..
தொடரட்டும் உங்கள் முயற்சி..
வாழ்த்துக்கள் !