Skip to main content

ஆன்மாவின்....பயணம்! பதிவுத் தொடர் பாகம் II















ஆன்மாவின் பயணம் கடந்த மாத இறுதியில் ஆரம்பித்தேன்..... இந்த மாத இறுதியில் இரண்டாம் பாகம்.....! இந்த இடைவெளிக்கு காரணம் எனது ஆன்மாதான்....! ஆமாம் அது பயணப்படும் போதுதான் எழுத முடிகிறது....! இன்று என்ன நினைத்ததோ தெரியாது......என்னை வார்த்தைகளால் நிரப்பி தொடரச்சொன்னது....இதொ தொடர்கிறேன்.....ஆன்மாவின் பயணத்தை....

இதுவரை

பாகம் I

இனி.....


அதிகாலைப் பேருந்து நகர்ந்து கொண்டிருந்திருந்தது. ஜன்னலோரமாய் இருந்த என் மீது பட்ட சீலீர் காற்று என் தேகம் நிறைத்தது. மெல்ல தலை சாய்த்து காற்றின் அன்பினை என்னுள் பரவவிட்டேன். ஒரு வித மெளனம்...என்னுள் நிரம்பி வழிந்தது. காதலோடு இருக்கும் கணங்களும், காதலியோடு இருக்கும் கணங்களும் வேகமாய்த்தான் பறந்து போகின்றன. காற்றுக் காதலியோடு நான் உறாவடிக் கொண்டு இருந்தேன்.... நேரமும் பறந்துதான் போயிருக்கிறது. எப்போது பேருந்து நின்றது என்று தெரியவில்லை...என்னை கட்டிணைத்துக் கொண்டிருந்த காற்று நின்ற அந்தக்கணம் மெல்ல கண்விழித்து பேருந்தில் இருந்து இறங்கினேன்.

இடுப்பில் ஒற்றை நான்கு முழ வேஷ்டி, சுகமான தளர்ந்த நிலையில் ஒரு சட்டை மேனியோடு உறவாடாமல் வெளிக்காற்றோடு உறவாடும் நிலையில், அதிகம் உறுத்தாக ஒரு ரப்பர் செருப்பு. சுமையில்லா ஒரு தோள்பை என்று உடுத்தியிருந்ததும் உள்ளே ஒரு அமைதியைக் கொடுத்தது. பெரும்பாலன நேரங்களில் மனிதர்கள் உடுத்தும் உடை பற்றி ஒரு அக்கறை எடுத்துக்கொள்வது கிடையாது. ஏனோ தானோ என்று உடுத்தி கொள்வது மனதளவில் ஒரு வித மாற்றத்தை உண்டு பண்ணவே செய்கிறது.

நீங்கள் வேண்டுமானால் பளீச் என்று உடுத்திப் பாருங்களேன்...தெளிவாய் ஒரு கம்பீரம் உங்களுக்குள் வரவே செய்யும். கசங்கிய அல்லது அழுக்கான உடையை உடுத்தும் போது ஒரு வித இறுக்கம் நம்மைப் பிடித்துக் கொள்ளும்....இது உடையினால் வந்தது என்று சொல்லமாட்டேன்...ஆனால் உடுத்தியிருக்கும் உடை மனதில் ஒரு விதமான எண்ணத்தை கிளறிவிட்டு அதிலிருந்து ஒரு வித கற்பிதத்தை மூளைக்கு அனுப்பி அதை எண்ணமாக்கி நம்பத் தொடங்கும்...! மனம் மூலம் இயங்கும் மனிதர்களுக்கு உடுத்தும் உடையில் கவனம் தேவை. இதற்குதான் " கந்தையானாலும் கசக்கி கட்டு " என்று கூறியிருப்பார்களோ...?

என்னுடைய உடை என்னை உறுத்தவில்லை, உடுத்தியிருக்கிறேன் அல்லது உடலாய் இருக்கிறேன் என்று எண்ணச் சொல்லவில்லை....காற்றோடு காற்றாய் இருந்தேன்.ஒருவிதமான சுகம் அது. அதை சொல்ல முயல்கிறேன்...அவ்வளவே...விளக்கினேனா இல்லையா என்று தெரியாது...சரி... மேற்கொண்டு நகர்வோம்.

பெரிய பேருந்து நிலையம் அது. இரவு முழுதும் பேருந்துக்காக காத்திருந்தவர்களின் அயற்சி முகங்களும், " விநாயாகனே வினை தீர்ப்பவனே " என்று சப்தமாக டேப் ரிக்காரிடரில் பக்தியை பரவவிட்டு டீ ஆற்றிக் கொண்டிருந்த வியாபாரிகளும் பெட்டிக்கடைகாரர்களும், அதிகாலையிலேயே வேலை நிமித்தம் வெளியூர் செல்ல நின்ற வியாபாரிகளும், குடும்பத்தோடு ஏதோ திருமணத்திற்கோ அல்லது வேறு விசேசத்திற்கோ செல்ல பட்டுபுடவையிலும், மஞ்சள் குளித்து மல்லிகை சூடிய முகங்களும், கும்பகோணம் ஏ.ஆர். ஆர்.பாக்கு கைப்பைகளை கக்கத்திற்கு கொடுத்து நின்று ஒரு பூச்சு கூடுதலாகவே பவுடர் பூசியிருந்த குடும்பத்தலைவர்களும்.....மனிதர்களால் ஓய்வு கெட்டுப்போய் எழுந்து ஓரமாய் நின்ற யாராலும் உரிமைக் கோரப்படாத மாடுகளும் என்று அதிகாலை பஸ் ஸடாண்ட் களை கட்ட ஆரம்பித்த நேரம் அது....


எனக்கென்று ஒரு இலக்கில்லை...! போவதெந்த இடமென்றும் ஒரு கணக்கில்லை....ம்ம்ம்ம்ம் என்ன செய்வது ....எந்த பேருந்து முதலில் நகர்கிறதோ அந்தப் பேருந்து என்று மனம் ஒரு கணக்கு சொன்னது....! அதோ அந்த அரசு பேருந்து நகர தொடங்கி இருக்கிறது....எங்கு போகிறது என்று கேட்காமல் மெல்ல நகர்ந்த பேருந்தில் ஏறி மீண்டும் ஒரு ஜன்னலோர இருக்கையை அந்த கூட்டமில்லா பேருந்து கொடுத்த சந்தோசத்தில் ..... நிதானமாக அமர்ந்தேன்....!

வெளுக்கத்தொடங்கியிருந்தது வானம்......இரவென்ற மாயை அகன்று பகலென்ற மற்றுமொரு மாயைக்குள் உலகம் கற்பிதம் கொண்டு நுழைய தயாராய் இருந்தது.....! நகரம் கடந்து விளை நிலங்கள் இரு புறமும் விரியத் தொடங்கி இருந்தது.....! பசுமையான வயல்கள்.....பரந்து விரிந்து என்னுள் பரவி நானும் பரந்து விரிந்து ஒரு மிகப்பெரிய நிலமானேன்.....

சுகாமாய்த்தானிருக்கிறது ஒரு நிலமாய் நான் மாறிப்போயிருந்ததில்.....என் மேனியெங்கும் பசுமை...கற்களுக்கும் முற்களுக்கும் நானே தாய்....! மெல்ல நகரும் நீர் நிறைந்த வாய்க்கால்கள் என்னை சந்தோசப்படுத்தும் என் பிள்ளைகள்... ஆகா..இந்த மண் புழுக்கள் என் மேனிக்குள் ஊறும் போது சொல்லமுடியா சுகமாய்.. நான் குதுகலித்தேன். என்னுள் இருந்த ஈரத்தை புல் பூண்டுகள் உறிஞ்சி எடுக்கும் போது எல்லாம் நிலை கொள்ள முடியாமல் உல்லாசமாய் திணறினேன். என்னுள் பரவியிருந்த விதைகளை நன்றாக பரவும் படி கொஞ்சம் கிளர்ந்து இடம் விட்டேன்.

காதலாய்...மேலே வானத்தைப் பார்ப்பேன் எப்போதும்.....ஆமாம் அந்தக் காதலில் ஓடோடி வந்து ஒரு மழையாய் என்னைக் கட்டியணைத்து திக்கு முக்காட செய்துவிடுமே அந்த மேகங்கள்.......ம்ம்ம்ம்ம் எங்களின் கூடலில் பிறக்கும் இந்த ஜகம் எங்கும் ஒராயிரம் உயிர்கள்...

ஹலோ.....தம்பி....ஹலோ.....தம்பி....யோவ்.....யோஓவ்.. யாரோ உன்னை உலுக்கிக் கொண்டிருந்ததை மெலிதாய் உணர்ந்தேன்....மிக சத்தமாய் என்னை முதுகில் அடித்து உலுப்பிய பின்னும் என் புறம் இருந்த காட்சிகளும்....அகத்தில் நிலமாய் நான் மாறிப் போயிருந்த உணர்வு நிலையும் மெல்ல கலையத் தொடங்க....

சாந்தமாய் தலை திருப்பினேன்! மீண்டும் அந்த நபர் சப்தமாய்....யோவ்...என்று அதட்டினார்.....



(பயணம் தொடரும்...)


தேவா. S

Comments

அதிகாலை காட்சியை அற்புதமாக கண்முன் நிறுத்திவிட்டீர். கதையின் போக்கும் அற்புதம்...
Unknown said…
நல்பயணம். ஆனா இவ்ளோ தாமதம் வேணாமே!
dheva said…
நன்றி கலா நேசன்.....! உங்களின் கருத்துக்கு செவிகொடுக்கிறேன்...! பெரும்பாலும் புறச்சூழல் எழுத்துக்கு காரணமாக இருப்பதால் இந்த இடைவெளி... நிச்சயமாய் அடுத்த பாகத்தை விரைவாக தருகிறேன் தோழர்! தொடர்ந்து வாருங்கள் மிக்க நன்றி!
dheva said…
தம்பி அருண் பிரசாத்...@ ரொம்ப நன்றிப்பா...காலை நேரத்துல நம்ம ஊர் பஸ்ஸ்டாண்டுகள் இப்படித்கானே இருக்கும்..ஹா..ஹா..ஹா...!
Ramesh said…
ஓ.. நல்ல பயணம்்... தொடருங்கள்
Feros said…
///ஒரு வித மெளனம்...என்னுள் நிரம்பி வழிந்தது. காதலோடு இருக்கும் கணங்களும், காதலியோடு இருக்கும் கணங்களும் வேகமாய்த்தான் பறந்து போகின்றன///

சூப்பரா இருக்கு, அதிலும் காற்றுடன் காதலி ....
கதையின் போக்கும் அற்புதம்...
பயணம் தொடரட்டும் ....
எவ்வளோ பெரிய இடைவெளி முதல் பாகத்த மீண்டும் படிச்சாத்தான் இது புரியும் போல.
dheva said…
றமேஸ்......@ சித்தர்கள் ராஜ்யத்துக்கு சொந்தக்காரர் நீங்கள்... உங்களுக்குத் தெரியாததா... நன்றி தம்பி!
dheva said…
றமேஸ்......@ சித்தர்கள் ராஜ்யத்துக்கு சொந்தக்காரர் நீங்கள்... உங்களுக்குத் தெரியாததா... நன்றி தம்பி!
dheva said…
பெரோஷ்...@ காதல்ல தான் தம்பி விழுந்துடுறீங்க....ஹா...ஹா...ஹா.. நன்றிப்பா!
dheva said…
ஜீவன் பென்னி....@ வாப்பா தம்பி....கோச்சுக்காம படிப்பா...அடுத்த பாகம் சீக்கிரமே கொடுக்குறேன்...!
Jey said…
பயணம் நன்றாக இருக்கிறது. தொடருங்கள், நானும் தொடர்கிறேன்...
அருமையான கதை.. உங்கள் கதையில் நானும் பயணிக்கிறேன்.. நல்லாருக்கு தொடருங்கள் தேவா..
Kousalya Raj said…
இரண்டு பதிவையும் இன்றுதான் படித்தேன்.... வித்தியாசமான கற்பனையை கைகொண்டு கொஞ்சம் ஆன்மிகம், கொஞ்சம் காதல் , இயற்கை விவரிப்பு எல்லாம் கலந்து கட்டி ஒரு பயணம். தொடரட்டும் உங்கள் பயணம்..... வாழ்த்துகள்.
அதி காலை பொழுது இயற்கை காட்சி போல சொல்லி இருப்பது அழகு...

சப்தமாய்....யோவ்...என்று அதட்டினார்..... அடுத்த பதிவு எப்போ அதை கேக்க கூப்பிட்டு இருப்பார் ....
dheva said…
செளந்தர்....@ தம்பிங்க...எல்லாம் கிண்டல் பண்ணிணா எப்படி? மாம மச்சான் தான் கிண்டல் பண்ணனும்.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
dheva said…
ஜெய்.....@ நீங்கதான் ஊக்கம் கொடுக்குறீங்க...உங்களாலதான் பாஸ்... நன்றிகள்!
dheva said…
ஸ்டார்ஜன்...@ கொளுத்தும் சவுதி வெயிலை பொருட்படுத்தாத பங்காளி ஸ்டார்ஜன்......வாழ்க வாழ்க... நன்றி பங்க்ஸ்...! நான் கேட்டதை மறந்துடாதீங்க...!
அன்பின் தேவா

ஆன்மா பயணிக்கிறது - கற்ப்னை கொடி கட்டிப் பறக்கிறது - கண்ணில் கண்ட நிகழ்வுகளை கற்பனை கலந்து எழுதுவது நன்று - காத்திருப்போம் தொடர்சிக்க்காக ...... பின் ஒரு முடிவினிற்கு வருவோம்
க ரா said…
ஏண்ணா இன்னிக்கு வீட்டு வேலை நீங்க்தானா.. திரும்பியும் மனசு எங்கோ போக விரும்புதே அதான் கேட்டேன்...
dheva said…
கெளசல்யா...@ புரிதலுக்கு நன்றிகள் தோழி!
dheva said…
இராமசாமி கண்ணன்...@ நான் தான் ஏற்கெனவே செளந்தர் தம்பிகிட்ட சொன்னதுதான்.....தம்பிங்க எல்லாம் கிண்டல் பண்ணினா நான் என்ன பண்றது....! ஏன் தம்பி..அனுபவமோ.....ஹா..ஹா...ஹா!
dheva said…
சீனா ஐயா....@ மிக்க நன்றிகள் ஐயா!
vasu balaji said…
நன்றாய் போகிறது தேவா:). தொடருங்கள்.
நல்ல பயணம்்... தொடருங்கள்
தல உங்கள் நடை நன்றாக உள்ளது .. ஆனால், கொஞ்சம் இடைவெளியை குறையுங்கள்
Guruji said…
நல்பயணம் கதையின் போக்கும் அற்புதம்

http://ujiladevi.blogspot.com
dheva said…
பாலாண்ணே...@ நன்றிகள் அண்ணா!
dheva said…
வெறும்பய.....@ தம்பு....ரொம்ப டேங்க்ஸ்பா.....என்ன எழுத போற நெக்ஸ்ட் வெயிட்டிங்!
dheva said…
LK.... @ இடைவெளியை குறைச்சிடலாம் பாஸ்....ஹா..ஹா...ஹா..! கொஞ்சம் ஓவராத்தான் போய்ட்டேனோ......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
Unknown said…
பயணத்தில் நானும் இணைகிறேன்...
Mahi_Granny said…
சுகமாய்த்தான் இருக்கிறது . அருமை தேவா
///நீங்கள் வேண்டுமானால் பளீச் என்று உடுத்திப் பாருங்களேன்...தெளிவாய் ஒரு கம்பீரம் உங்களுக்குள் வரவே செய்யும். கசங்கிய அல்லது அழுக்கான உடையை உடுத்தும் போது ஒரு வித இறுக்கம் நம்மைப் பிடித்துக் கொள்ளும்....இது உடையினால் வந்தது என்று சொல்லமாட்டேன்...ஆனால் உடுத்தியிருக்கும் உடை மனதில் ஒரு விதமான எண்ணத்தை கிளறிவிட்டு அதிலிருந்து ஒரு வித கற்பிதத்தை மூளைக்கு அனுப்பி அதை எண்ணமாக்கி நம்பத் தொடங்கும்...! மனம் மூலம் இயங்கும் மனிதர்களுக்கு உடுத்தும் உடையில் கவனம் தேவை. இதற்குதான் " கந்தையானாலும் கசக்கி கட்டு " என்று கூறியிருப்பார்களோ...?////
உண்மை அண்ணா ..!! அருமையான வரிகள் ..!!
சீக்கிரம் தொடருங்கோ ...!!
Chitra said…
காதலாய்...மேலே வானத்தைப் பார்ப்பேன் எப்போதும்.....ஆமாம் அந்தக் காதலில் ஓடோடி வந்து ஒரு மழையாய் என்னைக் கட்டியணைத்து திக்கு முக்காட செய்துவிடுமே அந்த மேகங்கள்.......ம்ம்ம்ம்ம் எங்களின் கூடலில் பிறக்கும் இந்த ஜகம் எங்கும் ஒராயிரம் உயிர்கள்...


...... கவித்துவம் மிக்க வார்த்தைகள்! அர்த்தங்களும் கூட... வாசிக்கும் போதே, காட்சியிலும் கருத்திலும் ஒன்றி விடுகிறோம்.
தேவா, தொடர்ந்து உங்கள் எண்ணங்களையும் புரிதலையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நல்ல தொடர்.
நீங்கள் படங்களை தேர்ந்தெடுக்கும் அழகு எனக்கு மிகவும் பிடித்திருக்கு. தொடருந்தாங்க :)
கலக்குங்க ...
லாங் இண்டர்வல் - நாட் allowed :)
விஜய் said…
/இடுப்பில் ஒற்றை நான்கு முழ வேஷ்டி, சுகமான தளர்ந்த நிலையில் ஒரு சட்டை மேனியோடு உறவாடாமல் வெளிக்காற்றோடு உறவாடும் நிலையில், அதிகம் உறுத்தாக ஒரு ரப்பர் செருப்பு. சுமையில்லா ஒரு தோள்பை என்று உடுத்தியிருந்ததும் உள்ளே ஒரு அமைதியைக் கொடுத்தது.//
எவ்வளவு அழகா கண் முன் நிறுத்தி இருக்கீங்க. அருமைங்க அண்ணா , விட்டுப்போன வாழ்க்கையும் , தேடிப்போன வாழ்க்கையும் , அதன் தருணங்களில் ஏதோ ஒரு வித மன இருக்கத்தையும், சுவாரசத்தையும் நம் கைகளில் விட்டுசெல்கிறது, நாம் எதை தேர்ந்தேடுக்கிரோமோ அதன் பலனை அனுபவிக்கிறோம் ...

மிக்க அருமை அண்ணா...எப்பவும் போல் இந்த பதிவிலும் ஒரு ஈர்ப்பு இருக்கிறது

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

அவள்....!

அந்த கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவன் சுரேஷ். கல்லூரியில் சேர்ந்த ஆரம்பத்திலிருந்த கூச்சம் எல்லாம் போய் விட்டது அவனுக்கு. இப்பொதைய நாட்கள் நண்பர்கள், பாடம், கல்லூரி என்று கலை கட்ட ஆரம்பித்து விட்டது. +2 முடித்து கல்லூரியில் சேரும் எல்லா மாணவர்களுக்குமே வாழ்வின் அடுத்த நிலையான கல்லூரி வாழ்க்கை ஒரு சந்தோசமான விசயம்தான். வாழ்வின் அடுத்த கட்டம் ஒரு பள்ளி என்ற கட்டுண்ட நிலையில் இருந்து கொஞ்சம் சுதந்திரமான மரியாதை கிடைக்க கூடிய தான் பட்டம் பயில்கிறோம் என்ற ஒரு மமதையுடன் கூடிய சந்தோசம் என்று களை கட்டும் நாட்கள் அவை. அப்போதுதான் தலை முடியின் அலங்காரம் மாறும். சட்டை பேண்டின் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்படும். ஒரு சில நோட்டு புத்தகங்கள் கூடியிருக்கும் நண்பர்கள் கூட்டம் என்றும் ஒரு வித மிடுக்கு இருக்கும் அதுவும் இருபாலர் பயிலும் கல்லூரி என்றால் சொல்லவே தேவையில்லை. மேலே சொன்ன எல்லாம் இரு மடங்கு ஆகும். இந்த வாலிப களேபரத்தில் கல்லூரியும் படிக்கும் பாடமும் மைக்ரோ லெவலிலும் இன்ன பிற விசயங்கள் மேக்ரோ லெவலிலும் இருக்கும். இப்படிபட்ட ஒரு நியதிக்கு சுரேஷ் மட்டும் என்ன விதிவிலக்கா? கல்லூரி மாணவன் என...