Skip to main content

ஆன்மாவின்....பயணம்!


















என்னை யாரும் தேடாதீர்கள் பத்து நாளில் நானே திரும்பி வருவேன் பயம் வேண்டாம் என்று எழுதி கடிதத்தை டி.வி பெட்டிக்கு அருகே வைக்கும் போது மணி..2.00 அதிகாலை. உறவுகள் எல்லாம் அடுத்த நாளை எதிர்கொள்ளப்போகும் அயர்ச்சியான ஒரு தூக்கத்திலிருந்த போது...என்னுடைய தோள்பையுடன் மெல்ல கதவு திறந்து வெளி வரண்டா திறந்து மெயின் காம்போண்ட் தாண்ட்டி... வெறுமனே... அடிமேல் அடி வைத்து நடந்து கொண்டிருந்தேன்.

நிசப்தம் அறிய வேண்டுமென்றால் அதிகாலையில் எழுங்கள்...! அதிகாலையில் எழுவது எல்லா வகையிலும் நல்லது என்றுதான் எல்லா சமயங்களும் (மதம்னு எழுத பிடிக்காமதான் எழுதுறேன்...வேற அர்த்தம் எடுத்துக்காதீங்க) அதிகாலை எழுதலை ஒவ்வொரு காரணம் சொல்லி வற்புறுத்தி வந்திருக்கிறது. அறிவியல் அதிகாலையில் ஆக்ஸிஜன் ததும்பி எங்கும் பிராணன் (ஆக்சிஜன் தன) நிறைந்திருக்கும் என்றும் சொல்கிறது. இது எல்லாம் கடந்து...அந்த ஒரு அமைதி பின் ட்ராப் சைலன்ட் என்று ஆங்கிலத்தில் சொல்வோமே...அந்த ஒரு நிசப்தம் உங்களோடு மெளன மொழியில் ஏதேதோ பேசி உங்களை மகிழ்விக்கும், கிச்சு கிச்சு மூட்டும் (யாரெல்லாம் அதிகாலைக்கு நண்பர்களோ அவர்களிடம் கேட்டுப்பாருங்கள் சந்தேகம் இருந்தால்).

எனது செருப்பு சத்தமும், பஞ்சாயத்துப்போர்டு தெருவிளக்கான ட்யூப் லைட் சத்தமும் (சோக்ல பிரச்சனைனா...ஒரு முனகல் கொடுக்குமே அது)...ஆள் அரவமற்ற சாலையில், எங்கிருந்தோ வந்த ஒரு நாயின் ஓலமும் எனக்கு துணையாக வந்தன. அந்த மார்கழி மாதக் குளிர் ஏகாந்தமாய் நெஞ்சு நிறைத்த சுகத்தில் மெல்ல நடந்து கொண்டிருந்தேன்....வீட்டு வாசலில் படுத்திருந்த யாருடைய குறட்டைச் சத்தமோ காற்றில் மிதந்து வந்து பயமுறுத்தியதில் ஏதோ ஒரு வீட்டின் கைகுழந்தை வீறிட்டதை உணர முடிந்தது.

தெருமுனை திரும்பியவுடன்...வேலண்ணன் டீக்கடை உள்ளே லைட் எரிந்து கொண்டிருந்தது...இன்னும் கொஞ்ச நேரத்தில் கடை திறப்பதற்கான முஸ்தீபுகளில் இருந்தார் வேலண்ணன். நான் மெல்ல கடை இருந்த திசைக்கு எதிர் திசையில் இருந்த சிறிய பிள்ளையார் கோவிலின் அருகே இருட்டில் வசதியாய் யாரும் பார்க்கதபடி நின்று கொண்டேன்....! ஆயிரத்தெட்டு கேள்விகள் அவசியம் இல்லாமல் இந்த மனிதர்கள் கேட்பார்கள். எந்த சம்பந்தமும் இன்றி அடுத்தவன் விசயத்தை ஆராய்வதில் மனிதர்களுக்கு ஒரு தனி பிரியம்.

மணி இப்போ 2:25 ஆயிடுச்சு..இன்னும் ஒரு 20 நிமிசத்துல பக்கத்தில் உள்ள ஒரு பட்டணத்தை இணைக்கும் ஒரு பேருந்து வரும். காத்திருப்போம் என்று கோவில் சுவற்றின் மீது ஒரு கை ஊண்டி நின்று கொண்டிருந்தேன். அட கோவில் பக்கதுல செருப்பு காலோட நிக்கிறமே...என்று ஒரு எண்ணம்...! சரி சரி சாமி உள்ளதானே இருக்கு... நாம சைடுலதானே நிக்கிறோம்.....னு மறு எண்ணம் சமாதானம் செய்தது. வழிபாட்டுத்தலங்கள் என்று சொல்லக் கூடிய கோவில்கள் இல்லாத ஊரே கிடையாது.

கோவில்னு மொட்டையா சொல்லக் கூடாது பொதுவா வழிபாட்டுத்தலங்கள் என்றாலே....உலகம் முழுதும் இருக்கும் ஒரு விசயமா போச்சு. எந்த சமயமாக வேன்டுமானால் இருக்கட்டும், அமெரிக்காவா இருக்கட்டும், ஐரோப்பாவா இருக்கட்டும், அரபு நாடா இருக்கட்டும் ஏதோ ஒரு விதத்துல ஒரு வழிபாடு செய்றாங்க....! எப்போது தோன்யறிது கடவுள்? அதுவும் பாராபட்சம் இல்லாம எல்லா நாட்லேயும் பின்பற்றுறாங்களே அல்லது எதையோ ஒண்ணு இருக்குண்ணு நம்புறாங்களே? இந்த ஒற்றுமை எப்படி நைஜிரியாவுல இருக்கிறவனுக்கும், நாகர்கோவில்ல இருக்கவனுக்கும் ஒன்ணா வந்துச்சு....?

ஏதோ ஒரு சாமிய சொல்லிகிட்டு இன்னிக்கு உலகம் பூரா வழிபாட்டுத்தலங்கள் இருக்கே....எப்படி? நம்ம ஊர்ல மூட நம்பிக்கையை எதித்தாங்க ஒத்துக்குறேன்.. மனுசன பிரிச்சு வச்சு பெரிய பாலிடிக்ஸ் பன்ணி சாதி வந்துச்சுன்னு சொல்றத ஏத்துக்க முடியுது. நாம தான் நம்ம நாட்ல முட்டாள் தனமா கடவுள் இல்லேன்னு சொல்றோம் அப்டீன்றத ஒரு வாதத்துக்காக ஒத்துக்குவோம்......அப்புறம்....

இஸ்ரேல்ல ஏன் சாமி இருக்குன்றான்? அரபு நாடுகள்ள.. கூட வழிபாடும் வழிபாட்டுத்தலங்கள் இருக்கு...ஜப்பான், சைனா, அமெரிக்க, செளத் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா எப்படி?....எப்படி? எல்லா இடத்துலயும் மனுசன் ஒரு கோவிலோ, மசூதியோ, அல்லது சர்சோ வேணும்னு ஒண்னா நினைச்சான்....? எந்த முதல் மனிதன் இதைக் கற்பித்தான்.......? தொடர்பு கொள்ளவே முடியாத தேசங்களில் எல்லாம் ஒத்துமையா இருக்கிர ஒரே விசயம் கடவுள்....! மனித ஆழ் மனதிலேயே இதுக்கு ஏதாச்சும் ஒரு மேட்டர் இருக்கா....?

அடா...அடா... பேருந்து வந்துடுச்சுங்க....யாரும் பாக்குறதுக்கு முன்னாலே ஏறணும்.... வர்ட்டா.........அட... எங்க போறனா....அதுக்குத்தானே இந்த தொடரே (தொடரா....தலை சுத்தி நீங்க விழுறது தெரியுது........ஒரு ...... சோட குடிச்சிட்டு தெம்பா எந்திரிங்க பாஸ்...அடுத்த பதிவு படிக்க...)


(பயணம் தொடரும்...)


தேவா. S

Comments

நல்ல தொடக்கம்!... நிஜமாகவே அதிகாலை நேரத்தில் வெளியே வரும் தென்றல் காற்றின் சுகம் அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்.
உங்க ஒவ்ஒரு பதிவும் நல்ல இருக்கு அண்ணா நாங்கள் பல நல்ல விஷயம் தெரிந்து கொள்கிறோம்
Unknown said…
எலாவற்றையும் பிரிப்பது கடவுள் நம்பிக்கையே .. பகுத்தறிவு பரவலாக எல்லா நாடுகளிலும் உண்டு அவர்களை FREE THINKER என அழைப்பார்கள்.

Bertrand Russell எழுதிய Why I am Not a Christian படித்து இருகிறீர்களா?

இருந்தாலும் சுவாரஸ்யமான துவக்கம், வரவேற்கிறேன்
dheva said…
புத்தக அறிமுகத்திற்கு நன்றி செந்தில்....ஓரிரு நாட்களில் எப்படியாவது வாங்கி படிக்கிறேன்....!

கடவுள்ன்ற விசயம் பரவலா எப்படி தோற்றுவிக்கப்பட்டது? அல்லது தோன்றியதுன்ற கோணத்தில் பார்க்கிறேன்....!
விஜய் said…
அண்ணா , கதை சூடு பிடிக்கிறப்ப தண்ணிய ஊற்றி அணைக்கிற மாதிரி முடிப்பதே உங்க பழக்கமா போய்டுச்சு, ஒரு இரசிகன காக்க வைக்கறதே உங்களுக்கு வேலையா போய்டுச்சு ..சரி நாங்க காத்து இருக்கிறோம் ..ரொம்ப அருமையான எழுத்து நடை அண்ணா .....

அழகா உங்க எழுத்து மேலே எங்களை பயணிக்க வைக்கிற அழகே தனி தாங்க அண்ணா....

காத்து இருக்கிறோம் கன்னத்தில் கைவைச்சு ...
//நைஜிரியாவுல இருக்கிறவனுக்கும், நாகர்கோவில்ல இருக்கவனுக்கும் ஒன்ணா வந்துச்சு....?//

மாம்சு இது ரைமிங்கா இருக்குன்னு எழுதனதா... இல்ல ஏதாச்சும் உள்குத்து இருக்கா???



மாம்சு நீஙக பேசமா மெகா சீரியல் எடுக்கப்போயிரலாம்...அதுக்குள்ள எல்லாத்தகுதியும் இருக்கு...
வேணும்னா... மெட்டி ஒலி திருமுருகன்கிட்ட சிபாரிசு பண்ணிவுடறேன்... தாங்க முடில...
// சௌந்தர் said...
உங்க ஒவ்ஒரு பதிவும் நல்ல இருக்கு அண்ணா நாங்கள் பல நல்ல விஷயம் தெரிந்து கொள்கிறோம் //

அட மக்கா... இந்தப்பதிவுல அப்படி என்ன விசயத்தவே...கண்டீரு.... ஏதோ திருக்குறளுக்கு விளக்கவுரை படிச்ச ரேஞ்சுக்கு பில்டப் குடுக்குறாய்ங்களே....

மாம்சு...என்னாது இது...??? இப்படி உசுப்பேத்திவுடுறாய்ங்க...
தேவா அண்ணே வண்டி ரெடியாகிடுச்சு, கிளம்பிடுச்சு,இப்போ போய்கிட்டு இருக்கு. இது எங்க போய் முடியுமோ தெரியாது. அதே நேரத்துல எங்க ஸ்டார்ட் ஆச்சுன்னும் தெரியாது
This comment has been removed by the author.
This comment has been removed by the author.
VELU.G said…
நல்லா ஆரம்பிச்சிருக்கிறீங்க

வாழ்த்துக்கள்
அட மக்கா... இந்தப்பதிவுல அப்படி என்ன விசயத்தவே...கண்டீரு.... ஏதோ திருக்குறளுக்கு விளக்கவுரை படிச்ச ரேஞ்சுக்கு பில்டப் குடுக்குறாய்ங்களே....

அதையும் ஒரு நாளு நம்ம அண்ணே எழுதுவாறு அதுக்கான் முன்னோட்டம் தான். என்னண்ணே நான் சொல்லுறது சரியா?
நாஞ்சில் பிரதாப் @@
அட மக்கா... இந்தப்பதிவுல அப்படி என்ன விசயத்தவே...கண்டீரு.... ஏதோ திருக்குறளுக்கு விளக்கவுரை படிச்ச ரேஞ்சுக்கு பில்டப் குடுக்குறாய்ங்களே//

அட இது அறிவாளி களுக்கு தான் புரியும் இது சொன்ன புரியாது ஒரு பதிவு போட்ட அதை எப்படி விளக்கமா போடனும் தெரிஞ்சு கிட்டேன்


தெருமுனை திரும்பியவுடன்...வேலண்ணன் டீக்கடை இதை படிக்கும் போது அவர் ஞபகம் சக்தி எப்படி இருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்

ட்யூப் லைட் சத்தமும் (சோக்ல பிரச்சனைனா...ஒரு முனகல் கொடுக்குமே அது)எப்படி விளக்கம் தரவேண்டும் தெரிந்து கொண்டேன்
மாம்சு... புரியுது... கொடி புடிக்க ஆளுங்களை சேர்க்கறிஙகன்னு தெரியுது... நெக்ஸ்ட்டு மீட் பண்றேன்...
vasu balaji said…
நல்ல சிந்தனை. தொடருங்கள்
//அதையும் ஒரு நாளு நம்ம அண்ணே எழுதுவாறு அதுக்கான் முன்னோட்டம் தான். என்னண்ணே நான் சொல்லுறது சரியா? //

மாம்சு இன்னுமா இந்த ஊரு உங்களை நம்புது.... நம்பட்டும்..நம்பட்டும்... நமக்குத்தானே உண்மைதெரியும்...
Anonymous said…
தேவா தொடக்கமே நல்லா இருக்கு .

.".மதம்னு எழுத பிடிக்காமதான் எழுதுறேன்...வேற அர்த்தம் எடுத்துக்காதீங்க)"ஏன் சார் மதம் ,ஜாதி என்று சொல்லி எல்லோரேயும் பிரித்து பார்கரிங்க ?ஜாதி மதம் எல்லாம் நாம பிறக்கும்போது கேட்டு வாங்கி தான் பிறகிறோமா???

நான் எதா தப்பா எழுதி உங்க மனதுக்கு கஷ்டம் உண்டாகினா மன்னிக்கணம் ..

பாக்கி தொடர் க்கு வெய்டிங் ..
dheva said…
நாஞ்சிலு...... நாகர்கோவில்னு சொன்னவுடன குத்துதோ.....உன் ஞாபகம்தான்யா எனக்கு எப்பவுமே....அதான் போட்டேன்..


மாப்பு நம்ம தம்பிக எல்லாம் கோவக்காரய்ங்க....சாக்கிரதைப்பு....!
dheva said…
நன்றி தம்பி..ஜீவன் பென்னி
நன்றி தம்பி... விஜய்
நன்றி தம்பி...செளந்தர்
நன்றி வெங்கட்
பாமரன் அண்ணா...@ நன்றிகள்னா..!
dheva said…
வேலு....@ நன்றி நண்பரே..!
Jeyamaran said…
*//@நாஞ்சில் பிரதாப்
மாம்சு... புரியுது... கொடி புடிக்க ஆளுங்களை சேர்க்கறிஙகன்னு தெரியுது... நெக்ஸ்ட்டு மீட் பண்றேன்... //*
சார் இந்தபதிவில் அப்படி என்ன குறை கண்டீர் சௌந்தர் கொடி பிடிக்கவில்லை உண்மைய தான்
சொன்னார்
நாஞ்சில் பிரதாப்@@@
தேவா அண்ணன் சொன்ன போதும் சைதாபேட்டை திருவொற்றியூர்,மதுரை இருந்து ஆள் வரும் உங்க வீட்டுக்கு
க ரா said…
நல்லா இருக்குன்னா. தொடருங்க.
அனு said…
திரும்பவும் ஒரு தொடரா?? எனக்கு அந்த அளவுக்கு பொறுமை எல்லாம் இல்ல.. சீக்கிரம் பதிவ போடுங்க..

ம்ம்.. அதிகாலை ரொம்ப நல்லா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன்.. இதுவரை அனுபவம் இல்லை.. என்னைக்காவது ஒரு நாள் கட்டாயம் ட்ரை பண்றேன் :)
இப்பவே கண்ணை கட்டுதே !!! தொடராஆஆஆஆ ..

:-)))

படிக்க நாங்க ரெடி...ஸ்டாட் மியூஸிக்
Chitra said…
எல்லா இடத்துலயும் மனுசன் ஒரு கோவிலோ, மசூதியோ, அல்லது சர்சோ வேணும்னு ஒண்னா நினைச்சான்....? எந்த முதல் மனிதன் இதைக் கற்பித்தான்.......? தொடர்பு கொள்ளவே முடியாத தேசங்களில் எல்லாம் ஒத்துமையா இருக்கிர ஒரே விசயம் கடவுள்....! மனித ஆழ் மனதிலேயே இதுக்கு ஏதாச்சும் ஒரு மேட்டர் இருக்கா....?



...... தேவா..... நிறைய யோசிக்கிறீங்க..... நிறைய எழுதுறீங்க.... நிறைய தொடர் போடறீங்க..... எங்கேயோ போயிட்டீங்க, மக்கா! நீங்க சீக்கிரம் புத்தகம் வெளியிட போறீங்கனு நினைக்கிறேன்.... அத்தனை மேட்டர் வச்சுருக்கிற மாதிரி தெரியுதே....
ஹேமா said…
தேவா...ஆரம்பமே அசத்தல்.
த்ரில் கதையா இருக்குமோ !
ஐரோப்பா வந்ததிலிருந்து காலைப் பொழுதைக் கண்டே ரொம்பக் காலமாச்சு .
Mahi_Granny said…
அதிகாலை விவரிப்பு அருமை. சீக்கிரம் வந்து மீதியையும் சொல்லுங்க .
//அட கோவில் பக்கதுல செருப்பு காலோட நிக்கிறமே...என்று ஒரு எண்ணம்...! சரி சரி சாமி உள்ளதானே இருக்கு... நாம சைடுலதானே நிக்கிறோம்.....னு மறு எண்ணம் சமாதானம் செய்தது. //

அட! மாப்பு.. எம்புட்டு தடவ நானும் இந்தமாதிரி நெனச்சிருக்கேன் தெரியுமா...?! ஆனா இப்ப எல்லாமே மாறிப்போச்சு...(எனக்குள்ளதான்!)
///நம்ம ஊர்ல மூட நம்பிக்கையை எதித்தாங்க ஒத்துக்குறேன்.. மனுசன பிரிச்சு வச்சு பெரிய பாலிடிக்ஸ் பன்ணி சாதி வந்துச்சுன்னு சொல்றத ஏத்துக்க முடியுது. நாம தான் நம்ம நாட்ல முட்டாள் தனமா கடவுள் இல்லேன்னு சொல்றோம் அப்டீன்றத ஒரு வாதத்துக்காக ஒத்துக்குவோம்......///

அப்டிபோடு அருவாள... ரொம்பச்சரியா சொன்ன மாப்ள!!!
///தொடர்பு கொள்ளவே முடியாத தேசங்களில் எல்லாம் ஒத்துமையா இருக்கிர ஒரே விசயம் கடவுள்....!///

நூத்துக்கு நூறு உண்மை...

///மனித ஆழ் மனதிலேயே இதுக்கு ஏதாச்சும் ஒரு மேட்டர் இருக்கா....?///

கண்டிப்பா இருக்கு. (உனக்கு தெரியாததுமாதிரி கேக்குறியே மாப்ஸ்..!
ஓ.. வாசகர்களுக்காகவா? புரியுது... புரியுது...
//மாம்சு நீஙக பேசமா மெகா சீரியல் எடுக்கப்போயிரலாம்...அதுக்குள்ள எல்லாத்தகுதியும் இருக்கு...
வேணும்னா... மெட்டி ஒலி திருமுருகன்கிட்ட சிபாரிசு பண்ணிவுடறேன்...//

நம்ம நாஞ்சில் பிரதாப்பு சூப்பரா சொன்னாரு.... அத நான் வழிமொழிகிறேன்...
ஆனா அவரு கடேசியா "தாங்க முடியல"ன்னு சொன்னதுதான் என்னாலா தாங்கிக்க முடியல மாப்ஸ்...
//மாம்சு நீஙக பேசமா மெகா சீரியல் எடுக்கப்போயிரலாம்...அதுக்குள்ள எல்லாத்தகுதியும் இருக்கு...
வேணும்னா... மெட்டி ஒலி திருமுருகன்கிட்ட சிபாரிசு பண்ணிவுடறேன்...//

நம்ம நாஞ்சில் பிரதாப்பு சூப்பரா சொன்னாரு.... அத நான் வழிமொழிகிறேன்...
ஆனா அவரு கடேசியா "தாங்க முடியல"ன்னு சொன்னதுதான் என்னாலா தாங்கிக்க முடியல மாப்ஸ்...
நல்லா ஆரம்பிச்சிருக்கிறீங்க !
புத்த மதம் இந்தியாவில் தோன்றி இன்று இந்தியாவில் மற்ற உலக நாடுகளில் உள்ளது. அதுபோல எல்லாக்காலங்களிலும் உலக மக்கள் ஒரு தொடர்புடனே இருந்துள்ளனர்.
சத்தியமா ஒண்ணும் சொல்ல முடியலை அண்ணா .. எப்படித்தான் உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் சிந்தனை வருதோ ..!! பட்டய கிளப்புறீங்க .. நானும் அடிக்கடி யோசிப்பேன் .. ஆனா அப்படியே விட்டுருவேன் .. தொடர்ந்து எழுதுங்க ....!!
//// ஆயிரத்தெட்டு கேள்விகள் அவசியம் இல்லாமல் இந்த மனிதர்கள் கேட்பார்கள். எந்த சம்பந்தமும் இன்றி அடுத்தவன் விசயத்தை ஆராய்வதில் மனிதர்களுக்கு ஒரு தனி பிரியம்.///

உண்மையான வார்த்தைகள் அண்ணா ...!!!
///அட மக்கா... இந்தப்பதிவுல அப்படி என்ன விசயத்தவே...கண்டீரு.... ஏதோ திருக்குறளுக்கு விளக்கவுரை படிச்ச ரேஞ்சுக்கு பில்டப் குடுக்குறாய்ங்களே....

மாம்சு...என்னாது இது...??? இப்படி உசுப்பேத்திவுடுறாய்ங்க..////

என்னை இருந்தாலும் உங்க அளவுக்கு முடியாதுங்க ..!!
நீங்க திருக்குறளுக்கு எழுதின எல்லா உரையையும் படிச்சுட்டு வந்ததாக கேள்விப்பட்டேன் ...!!
dheva said…
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி!
veeramanikandan said…
nice narration... simple things and complex combinations... kalai velaya ivvalavu alaga solla mudiyuma???
veeramanikandan said…
காலை நேரத்தை இவ்வளவு அழகாக காட்ட முடியுமா... முடியும் என்கிறார் தேவா... பாலைவனத்தில் வேலைப்பளுவில் அமர்ந்து கொண்டு ஊரில் பனி தெறிக்கும் மார்கழி மாதத்து காலை பற்றி எழுதுவதும் ஒரு கலையே... nice narration deva anna...
படிகட்டிலே நிக்காதிங்க உள்ள போங்க....

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

அவள்....!

அந்த கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவன் சுரேஷ். கல்லூரியில் சேர்ந்த ஆரம்பத்திலிருந்த கூச்சம் எல்லாம் போய் விட்டது அவனுக்கு. இப்பொதைய நாட்கள் நண்பர்கள், பாடம், கல்லூரி என்று கலை கட்ட ஆரம்பித்து விட்டது. +2 முடித்து கல்லூரியில் சேரும் எல்லா மாணவர்களுக்குமே வாழ்வின் அடுத்த நிலையான கல்லூரி வாழ்க்கை ஒரு சந்தோசமான விசயம்தான். வாழ்வின் அடுத்த கட்டம் ஒரு பள்ளி என்ற கட்டுண்ட நிலையில் இருந்து கொஞ்சம் சுதந்திரமான மரியாதை கிடைக்க கூடிய தான் பட்டம் பயில்கிறோம் என்ற ஒரு மமதையுடன் கூடிய சந்தோசம் என்று களை கட்டும் நாட்கள் அவை. அப்போதுதான் தலை முடியின் அலங்காரம் மாறும். சட்டை பேண்டின் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்படும். ஒரு சில நோட்டு புத்தகங்கள் கூடியிருக்கும் நண்பர்கள் கூட்டம் என்றும் ஒரு வித மிடுக்கு இருக்கும் அதுவும் இருபாலர் பயிலும் கல்லூரி என்றால் சொல்லவே தேவையில்லை. மேலே சொன்ன எல்லாம் இரு மடங்கு ஆகும். இந்த வாலிப களேபரத்தில் கல்லூரியும் படிக்கும் பாடமும் மைக்ரோ லெவலிலும் இன்ன பிற விசயங்கள் மேக்ரோ லெவலிலும் இருக்கும். இப்படிபட்ட ஒரு நியதிக்கு சுரேஷ் மட்டும் என்ன விதிவிலக்கா? கல்லூரி மாணவன் என...