Pages

Thursday, August 5, 2010

தேடல்....05.08.2010!
கூட்ட நெரிசல் இல்லாத பழமையான பெரிய கோவிலின் ஒரு மூலையில் கண்களை மூடி அமர்ந்திருந்தேன்....! சுற்றும் முற்றும் அவ்வப்போது கடந்து செல்லும் ஓரிரு காலடித்தடங்களுக்குச் சொந்தமான முகங்கள் என்னை உற்று நோக்குமோ என்று ஒரு நிமிடம் கண்விழித்து பார்க்கத் தூண்டிய மனதினை அடக்கி மீண்டும் என்னுள் கவனத்தை செலுத்தினேன்.....

மிகப்பழைமையான யாரோ ஒரு மன்னன் கட்டிய கோவில் அது என்று புத்தகத்தில் படித்தபின் நேரே வந்து ஒரு மூலையில் அமர்ந்துவிட்டேன்..இப்போது அந்த மன்னன் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தான்...ஓ....பாண்டியரே...இவ்வளவு பெரிய கோவில் ஏன் கட்டினீர்....கடவுள் பிரமாண்டமனவன் என்று எடுத்தியம்பவோ? இல்லை சிற்பக்கலையில் இருந்த விருப்பமோ இல்லை உமது அந்தப்புரத்து தேவியரிடம் உமது பராக்கிரமத்தை காட்டும் யுத்தியோ இல்லை காலம் கடந்தும் உம்மை சிந்தையில் வைத்து மக்கள் புகழ வேண்டும் என்று நினித்தீரோ, இல்லை உமக்கு இறை மீது பிடிப்பு அதிகமோ? ஆமாம் அதுவென்ன மன்னர்களெல்லாம் பெரும்பாலும் சிவனுக்கே கோவில் கட்டியிருக்கிறீர்?

கற்பனைகள் செய்த மன்னனை கண்முன் கொண்டுவந்த மனம் புறத்தில் யாரோ ஒருவர் தேவாரம் ஓத மன்னனை பட்டென்று விட்டுவிட்டு தேவாரம் பாடும் மனிதனைப் பற்றியும் விவரித்துப் பார்த்து தேவாரம் சொல்லும் அவரின் உருக்கத்தின் வழியே மெல்ல பயணித்து இறைவனை நினைவில் கொண்டு வந்தது. யார் இறைவன்?

சிவனா? சிவலிங்கமா? ஏன் சிவன் கோவிலில் அதிக கூட்டம் இருப்பதில்லை? பிரதோச காலத்தில் மட்டும் கூட்டம் கூடி போற்றிப் பாடுகிறதே....பிரதோசம் கொண்டாடும் மாலை வேளையில் நந்தி தேவரிடம் வேண்டினால் சிவனிடம் இருந்து எல்லா விதமான வரமும் கிடைக்கும் என்று கூட்டம் கூடுகிறதே....ஆக கடவுளாக இருந்தாலும் கொடுத்தால்தான் கூட்டமா.....என்று மனம் வேகமாய் பயணித்து என்னுள் செய்திகள் சொல்ல...சட்டென்று திசை திரும்பி வேறு ஒருவரின் குரலை கவனமாய் உற்று கவனித்தது மனது......

யாரோ இறைவனிடம் வேண்டுதல் செய்து கொண்டிருந்தார்கள். ஆண்டவா! பரம் பொருளே எனக்கு இது வேண்டும், அது வேண்டும், என் தொழில் நல்லபடியாக வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை நிபந்தனைகளாய் பட்டியலிட்டு கடவுளை நிர்ப்பந்தம் செய்து கொண்டிருந்தார் அதாவது கடவுளுக்கே கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்தார்.

என் மனம் என்னிடம் கேட்டது பரம் பொருள்தானே...எல்லாம் அறிந்த இறைவனுக்குத் தெரியாதா இவருக்கு என்ன தேவையென்று...இவர் போய் அமைதியாய் பக்தியோடு நின்றால் போதாதா? ஏன் படைத்தவனுக்கே கட்டளைகள் அல்லது விளக்கங்கள்??? மனது கேட்ட கேள்வியை வாங்கிக் கொண்டு அதை அடக்கினேன்.மெல்ல மிகவும் கஷ்டப்பட்டு உள்ளே திரும்பினேன்........கண்கள் மூடி இருந்தது. மூச்சு கொஞ்சம் முன்னுக்குப் பின் முரணாக இருந்தது. எந்த ஒரு ஆசனத்திலும் அமராமல் என்னை இறுக்காமல் தூணில் சாய்ந்து இருந்தேன். மெல்ல மூச்சு சீரானது....ஒரு அமைதியை மெல்ல யாரோ என் தலைக்கு மேல் இருந்து ஊற்றி விடுவது போல...ஒரு பாட்டிலை நிரப்பும் திரவம் போல...என்னுள் நிரம்பியது ஒரு நிசப்தம்....

நானிருந்தேன்...ஆனால் நான் இல்லை. அதாவது நான் என்னும் உணர்வு இருந்தது. நான் இந்த மாதிரி, இந்த பெயர், இந்த பதவி, இன்னாரின் மகன், உறவினன் , இந்த மதம், இந்த சாதி, என்று கன்மேந்திரியங்களின் தொடர்பினால் ஏற்பட்ட அந்த நானில்லை. ஞானேந்திரியங்களோடு கூடிய ஒரு வித சூட்சும நிலையில் சுடராய் உடல் என்ற இருப்பையும் உணர்ந்து எங்கும் பறக்காமால் கொள்ளாமால் ஆடாமல் அசையாமல் நிலையாய் எரியும் ஒரு சுடரை ஒத்த நிலையில் கூடவும் குறையவும் செய்யாத மத்திம நிலையில் பந்தப்பட ஒன்றுமில்லாமல்....வெறுமனே இருந்தேன். மூச்சின் வேகம் சீராக இருந்தது.

அப்போது என்னுள் எந்த கடவுளரின் படமும், சிலையும் இல்லை. நிசப்தம் என்னுள் நிரம்பி வழிந்த பேரமைதியில் திளைத்திருந்தேன். இதன் சாயலை.......வெடித்து சிதறி என்னை தொலைக்கும் கூடலின் உச்சத்தில் உணர்ந்திருக்கிறேன். அது கண நேரம் காட்டிக்கொடுக்கும் இந்த பேரமதியை இன்னும் சொல்லப்போனால் கண நேரத்தில் நான் தொலைந்து போன அந்த உன்னதத்தை உணரத்தான் காமமும் படைக்கப்பட்டதோ? இதை உணரவேண்டும் என்றுதானா மானுடத்திற்கு இதன் மீது இப்படி ஒரு ஈர்ப்பு. மனம் மீண்டும் அந்த நிலையை காமத்த்தின் உச்சத்தோடு தொடர்பு படுத்தி காமம் பற்றிய சிந்தனையின் மூலம் ஒரு மெல்லிய இடைவெளியை ஏற்படுத்தி அந்த மெல்லிய இடைவெளியில் வெளியே வர முயற்சித்ததை உணர்ந்தேன்.

மனதுக்கு செயலற்று இருப்பது பிடிக்காது என்று படித்திருக்கிறேன் இன்று உணர்கிறேன். மீண்டும் மனதை அதட்டி உள் செலுத்தினேன்....இப்போது உள்ளிருக்கும் சிவனைப் பற்றி சிந்தித்தது மனது நான் பின் தொடர்ந்தேன்.

சிவ வழிபாடு வழிபாட்டின் உச்சம்.....சிலையாய் வழிபட்டு, வழிபட்டு கடையிசில் உருவம் இல்லை என்று கற்பிக்க உருவமும் அருவமும் இல்லாத ஒன்றை சிவலிங்கம் என்று கூறி வழிபட்டு,மீண்டு ஒரு முறை இறைவன் என்பவன் தனித்தவனில்லை என்றுணர்த்துவதற்காக இறைவனை மலையென்றும், நெருப்பென்றும், நீரென்றும், ஆகாசமென்றும், காற்றென்றும் சொல்லி உருவக்கொள்கையை உடைக்கச் செய்து கடைசியில் சிதம்பர ரகசியம் என்று வெட்டவெளியை சுட்டிக் காட்டி எல்லாம் சேர்ந்தது இறை என்று சூட்சுமமாய் சொல்லி உணர வைக்க எத்தனை படி நிலைகள்? எத்தனை கடவுளர்கள்? எத்தனை கட்டுக் கதைகள் எத்தனை பயமுறுத்தல்கள்? கடைதேறி கோடியில் ஒருவர் வருவார்....அப்படி வருபவரும் இதை விளம்பரப்படுத்தும் ஆசையும் அற்று... இருந்ததனை இருந்தது போல இருந்துகாட்டி மெளன குருவாய் தட்சிணா மூர்த்தி தத்துவம் போல போதனைகளை எல்லாம் மெளனத்தில் சொல்லிவிட்டு மாய்ந்து போவார். இதை மிகைப்படுத்தி சிலர் காவியுடை உடுத்தி கள்ள வேசமிட்டு அறியாமையில் இருக்கும் மக்களை சீர்கேட்டிலும் விட்டு விடுவார்.

சிவம் என்றால் எதுவமற்றது ஆனால் எதுவமற்றது என்பதால் ஒன்றுமில்லாதது என்று அர்த்தம் இல்லை. பூரணமான ஆதி பிரம்மம் என்ற பிரபஞ்சம் தான் சிவம். சிவம் என்ற சொல்லின் அர்த்தம் இயங்கா நிலையில் இருக்கும் ஆதி நிலை என்று அர்த்தம். இந்த சிவத்தில் சக்தி மறை பொருளாய் இருந்தது. அதனால்தான் இயங்கும் சிவம் சக்தி அதாவது எனர்ஜி ஆனது. இயங்காத சக்தி சிவம். பிரபஞ்சத்தில் முதல் அசைவு எங்கே இருந்து ஆரம்பித்தது....இயக்கமற்ற ஒரு சூன்யத்திலிருந்து அந்த சூன்யம் சூன்யமாய் இருந்துகொண்டே இயக்கத்தை நடத்தியது....இயக்கத்திற்கு காரணம் வெற்றிடம்...! வெற்றிடம் சிவன்....அது இயங்க ஆரம்பித்தால் சக்தி....

எவ்வளவு நேரம் என்று கணிக்க முடியவில்லை. வெறுமனே இருந்ததில் சுகமும் ஒரு விதமாக அதை லயித்து கிடந்தேன். இடையிடையே மனம் செய்த சேட்டைகளை ரசித்த படியே.ஒரு வித ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்ற ஒரு ஓசையினூடே பயணத்துக் கொண்டே அந்த ஓசையாகவே அதிர்வுகளாகவே இருந்தேன்....

கோவில் நடை சாத்தப் போறோம்டா அம்பி....எழுந்திரு...கோவில் ஊழியரின் சப்தம் என் காதுக்குள் ஊடுறுவி...மூளைக்குள் சென்று மூளையிலிருந்து உடனே கட்டளை வர உடலின் பாகங்கள் வெளியே எட்டிப்பார்க்க...மெல்ல கண்கள் விழித்து மெளனமாய் கோவில் விட்டு வெளி நோக்கி நடக்க ஆரம்பித்தேன். ஒரு வித கூர்மையும் அழுத்தமும் இருந்தது எனது இருப்பில் மனம் சுருண்டு ஒரு ஓராமாய் இன்னும் பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்தது.

உச்சி வெயிலின் ராஜாங்கத்தில் பரபரப்பாய் இருந்தது உலகம்......!


தேவா. S

38 comments:

விஜய் said...

படிக்கும் எங்களையும் உங்களோடு பயணிக்க வைப்பதில் நீங்கள் மிகச்சிறந்த கில்லாடி என இன்னுமொருமுறை நிரூபித்து இருக்கிறீர்கள் அண்ணா, கூர்மையான ஆன்மிகம் சார்ந்த எழுத்துக்கள் இப்படி தான் இருக்கவேண்டும் என்பதை உங்கள் எழுத்துக்களில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது அண்ணா,மௌனம் நம்மை தொடும்பொழுது தான் உலகத்தின் மிகசிறந்த சத்தங்களை உணரமுடியும் என்பதை தெளிவாய் விளக்கி உள்ளீர்கள்.

உங்கள் எழுத்து எங்களை தொடுகிறது மௌனமாய் ஆழ்ந்து வாசிக்கும் பொழுது, மிக அருமையான பதிவாய் அமைகிறது.நீங்கள் தருணத்தை விளக்க பயன்படுத்தும் வார்த்தைகள் ஆழமாய் வாசிக்கும்பொழுது மட்டுமே உணரபடுகிறது ஆன்மீகத்தை போல...

மீண்டும் ஒரு கலக்கல் பதிவு
வாழ்த்துக்கள் அண்ணா

LK said...

//கடவுள் பிரமாண்டமனவன் என்று எடுத்தியம்பவோ? இல்லை சிற்பக்கலையில் இருந்த விருப்பமோ இல்லை//

இது இரண்டும்தான்

//அதுவென்ன மன்னர்களெல்லாம் பெரும்பாலும் சிவனுக்கே கோவில் கட்டியிருக்கிறீர்?/

திருமாலுக்கும் உண்டு. ஆனால் அந்தக் காலத்தில் தமிழ் மன்னர்கள் பெரும்பாலும் சிவ வெளிப்பாடு செய்பவர்களே .

//அதாவது கடவுளுக்கே கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்தார்.//

படைத்தவனுக்குத் தெரியாதா எப்பொழுது என்ன தர வேண்டும் என்று.

// எத்தனை கட்டுக் கதைகள் எத்தனை பயமுறுத்தல்கள்?//

கட்டுக் கதைகள் அல்ல... பெரும்பாலான கதைகளுக்கு ஆதாரம் உள்ளது என்பதை மறக்க வேண்டாம்

கனிமொழி said...

பாலகுமரனின் 'தோழனோடு' கை பிடித்து நடந்த ஒரு உணர்வு...
ஏன் இப்படி என்று சொல்லதெரியல தேவா...

Go on dheva....

சௌந்தர் said...

//அதுவென்ன மன்னர்களெல்லாம் பெரும்பாலும் சிவனுக்கே கோவில் கட்டியிருக்கிறீர்?/

திருமாலுக்கும் உண்டு. ஆனால் அந்தக் காலத்தில் தமிழ் மன்னர்கள் பெரும்பாலும் சிவ வெளிப்பாடு செய்பவர்களே//

@LK இங்கேயும் இந்த பிரச்னை வந்து விட்டதா சரி சரி

LK said...

//@LK இங்கேயும் இந்த பிரச்னை வந்து விட்டதா சரி ச/
amam amam

சௌந்தர் said...

@LK அப்போ ஹரியும் சிவனும் ஒன்று சொல்வார்கள் அது என்ன?

LK said...

atharku thani pathive podalam thambi

வெறும்பய said...

சௌந்தர் said...

@LK அப்போ ஹரியும் சிவனும் ஒன்று சொல்வார்கள் அது என்ன? ///கதை திசை திரும்புற மாதிரி இருக்கு...

ஜீவன்பென்னி said...

இந்த கட்டுரையை எழுதும் போது எத்தனை முறை உங்கள் மனது இதை விட்டு வெளியே சென்றதோ!!!!!!

அனைத்தும் உள் அர்த்தத்தோடே படைக்கப்பட்டுள்ளது. ஏன் எளிமையாக படைக்கப்படவில்லை என்ற கேள்வி தோன்றுகிறது. பதிலும் கிடைத்தது இத்துனை ஆழமான விசயங்களை வெளிப்படையாக சொல்லிவிட்டு சென்றிருந்தால் மனிதனுக்கு அதுவும் ஒன்றாக ஆகிப்போயிருக்கக்கூடும். உண்மையான தேடலே அதன் ஆதியை நோக்கி இழுத்துச் செல்லும் என்ற கரு இதில் தெளிவாக புலப்படுகிறது.

dheva said...

//இந்த கட்டுரையை எழுதும் போது எத்தனை முறை உங்கள் மனது இதை விட்டு வெளியே சென்றதோ!!!!!! //

ஜீவன் பென்னி....@ எழுத்தின் ஓட்டத்தில் இருக்கும் பின்புலத்தை ஆராயும் செயல்விடுத்து எழுதியவனனைப் பற்றி ஆராயும் போது எழுத்தில் மறைந்திருக்கும் உண்மைகளை நீங்கள் விளங்கினீர்களா என்பதில் எனக்கு ஐயமே!

இரண்டாவதாக எதுவும் உள் அர்த்தத்தோடு படைக்கப்படவில்லை...எல்லாம் எளிமையாகவும் எதார்த்தமாகவுமே உள்ளது விளங்கிக் கொள்ள இயலாமல் சிக்கலாக்கி வைத்திருப்பது நமது மனம் மட்டுமே.......சரியா தம்பி...!

விடுத‌லைவீரா said...

இயற்கையாக நமது புவிக்கு சக்தி இருக்கின்றதே தவிற கடவுள் என்று ஒன்றும்
கிடையாது,
அப்படியே இருக்கின்றது என்று யாராவது சொன்னால் அவர்களை விட முட்டாள் யாரும்
கிடையாது,
கடவுள் உண்டு என்று முட்டாள்கள் கல்லை வணங்கும் காஞ்சிபுரத்தில் கோயில் சன்னிதானத்தில் சச்சிதானந்தம் நடத்தியது என்ன

கடவுள் உண்டு என்று முட்டாள்கள் வணங்கும் கல்வன் நித்தியாணந்தத்தின் நிலை என்ன?

அவர்தான் கடவுள் என்று முட்டாள்கள் வணங்கிய சங்கராச்சியார் செய்தது என்ன?
குறை தீர்க்கும் கடவுள் என்று முட்டாள்கள் வணங்கிய கல்கி சாமியார்கள் செய்தது
என்ன?
சாமி யார் என்ற கேள்வி பலபேர்களிடம் உள்ளது,

இன்றுள்ள மக்கள் சமுதாயம் எப்படி இருக்கிறது. ஒரு பக்கத்தில் கோடீஸ்வரர்களுக்கு பிரபுக்கள் என்ற பட்டம் சூட்டி வைத்துக்கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கத்தில் உடல் மெலிந்து, கண் குழிவிழுந்து, ஓடு தாங்கி நிற்கும் மக்களுக்கு பிச்சைகாரர்கள் என்ற பட்டம் சூட்டி வைத்துகொண்டிருகிறது. ஒரு பக்கம் பண பலம் கொண்ட சோம்பலையும், மற்றொரு பக்கம், பண பலம் இல்லாத பஞ்சமுற்ற தொழிலையும் வைத்துக்கொண்டிருகிறது. ஒரு பக்கம் உண்மைக்கு கிழிந்து போன கந்தை தந்தும், மற்றொரு பக்கம் மூடநம்பிக்கைக்கு பட்டும், அணிகலன்களும், பொன்முடியும் அணிவித்து அதை நாளுக்கு நாள் வளர்த்துக் கொண்டு வருகிறது. இவைகள் ஒழியும் காலத்தை நாங்கள் மிக விரைவில் மிக மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். அந்த காலத்தை காண எங்களால் முடிந்த முயற்சிகளை எடுத்துக் கொள்கிறோம்.
உங்களின் குழந்தைகளுக்கு மூட நம்பிக்கை என்ற நஞ்சு கலக்காதீர்கள். அறிவு அமுதை ஊட்டுங்கள். வாலிபர்கள் இந்த அறிவு அமுதை கண்மூடி வழக்கங்களை பின்பற்றும் பழமை விரும்பிகளுக்கு அளியுங்கள். இவ்விதம் ஒவ்வொரு தனி மனிதனும், செய்யவேண்டும். இதை விட நாம் இந்த காலத்தில் செய்ய வேண்டிய முக்கிய வேலை கிடையாது. ஆகவே அறிவாளியை உலகெல்லாம்,மூலை முடுக்களிலெல்லாம் பரப்புங்கள்! இதை உங்கள் உயர்ந்த கடமை என்ற கருத்துடன் பணியாற்றுவதன் மூலம் அறியாமை நிரம்பிய, அர்த்தமற்ற கட்டுப்பாடுகள் நிரம்பிய, மூடத்தனம் நிரம்பிய, கண்மூடித்தனங்கள் நிரம்பிய உலகை சீர்திருத்துங்கள். அறிவு, ஆராய்ச்சி,அனுபவம் என்னும் இம்மூன்றையும் மறவாதீர்கள். உரிமையுடன் வாழுங்கள்!.
கடவுளை மறந்து,
மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்

LK said...

@விடுதலை வீரா

யாரோ ஓரிருவர் செய்த தவறுக்காக எதுவும் இல்லை என்று ஆகி விடாது ..கடவுளே இல்லை என்னும் திங்களில் கூட நீங்கள் சொல்பவை உண்டு.. அது ஏன்???

//பண பலம் கொண்ட சோம்பலையும், மற்றொரு பக்கம், பண பலம் இல்லாத பஞ்சமுற்ற தொழிலையும் வைத்துக்கொண்டிருகிறது.///

இதற்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம் நண்பரே??? இது தவறான பொருளாதார கொள்கைகளின் விளைவே அன்றி கடவுள் காரணம் அல்ல. எதையும் சிந்தித்து சொல்லுங்கள். (உங்கள் பாணியில் சொல்வதானால் பகுத்தறிவுடன் செயல்படுங்கள் )

விடுத‌லைவீரா said...

இந்து மத்தின் கோயில்களில் உள்ள சிற்பங்கள் பூராவும், அந்தக் காலத்து நீலப்படங்களாக இருக்கிறது. பலனா லாட்ஜிகளில் கூட அந்த மாதிரி படங்கள் இருக்க வாய்ப்பில்லை. கோயில்கள் முழுவதும் அந்தக் காலத்து பலான லாட்ஜ் மாதிரிதான் இருந்திருக்கு நண்பர் LK அவர்களே!
களவாணித்தனம் மற்றும் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டாலும், ‘தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன் தெருவிலே பெண்களுக்கொ யாத தொல்லை’ என்று கடவுள் கண்ணனின் பொறுக்கித் தனம்.“கிருஷ்ணனுடைய அநாகரிகமான அநேக காரியங்களுள் மிகக் கேவலமானது என்னவெனில் அவன் இராதா என்ற கோபியருடன் கொண்ட முறைகெட்ட வாழ்க்கையாகும். கிருஷ்ணன் இராதாவுடன் கொண்டிருந்த தொடர்பினைப் பற்றிப் பிரம்ம வர்த்த புராணத்தில் வருணிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.”

“இராதாவோ ஏற்கனவே மணமானவள். முறைப்படி மணந்த ருக்மணியை கைவிட்டுவிட்டு வேறொருத்தன் மனைவியான இராதாவுடன் கிருஷ்ணன் வாழ்க்கை நடத்துகிறான்.”
சகமேட்டுமேனிக்கு பல பெண்களோடு உறவு கொண்ட, கொலைபோன்ற கிரிமினல் குற்றங்களுக்காக சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்ந்து படித்திருக்க வேண்டிய கிருஷ்ணனையும் தெய்வமாகத் தொழுகிறார்கள்.
நிர்வாணமாக்கி ஊர்ப் பெண்கள் மானத்தை எல்லாம் வாங்கிய கிருஷ்ணன், மகாபாரதத்தில் பாஞ்சாலியின் மானம் காக்க உடைகொடுத்ததானம்! அதுசரி இனி என்ன பதில் சொல்லி கிருஷ்ணனின் ‘மானம்’ காப்பார்கள் பக்தர்கள்.

ஒழுக்கம் குறித்து தனிவாழ்க்கையில் அதிகம் பேசுகிற இந்துக்கள், தங்களின் கடவுள் பொறுக்கியாக இருந்தாலும் அதனை பூரிப்போடு ஏற்றுக் கொள்கிறார்கள். இந்துக்களின் இறைவழிபாட்டில் இருக்கிற இந்த முரண்பாடை அவர்கள் புரிந்து கொள்வதுமில்லை..

dheva said...

ஆக

..மேலே உள்ள...கட்டுரையை யாரும் படிக்கலேன்னு விளங்கிக்கொண்டேன்...!

ப.செல்வக்குமார் said...

கடவுளே ..!!
எப்பத்தான் இவர் தேடல் முடியுமோ ..???

dheva said...

செல்வகுமார்....@ தம்பி..ஒரே ஒரு கேள்வி.. கட்டுரை புரியலையா? இலை நீ படிக்கலையா?

ப.செல்வக்குமார் said...

///அப்படியே இருக்கின்றது என்று யாராவது சொன்னால் அவர்களை விட முட்டாள் யாரும்
கிடையாது,///
கடவுளை நம்பும் முட்டாள்கள் அப்படின்னு ஏதேனும் பட்டியல் தயாரிக்கப்பட்டால் அதில் முதலில் எனது பெயரை எழுதிக்கொள்ளுங்கள்.
///கடவுள் உண்டு என்று முட்டாள்கள் கல்லை வணங்கும் காஞ்சிபுரத்தில் கோயில் சன்னிதானத்தில் சச்சிதானந்தம் நடத்தியது என்ன///
தமிழ்நாட்டுல இருந்து ஒருத்தன் வெளியூர் போய் திருடினா தமிழ்நாட்டுல இருக்கறவங்க எல்லோரும் திருடர்கள் தானே ..!! உங்கள் கருத்து அருமை ..!!

LK said...

@விடுதலை வீரா
இதற்குப் பெயர்தான் அரை வேக்காட்டுத் தனம் என்பது..படித்து பொருள் விளங்க வேண்டும். மேலோட்டமாக பதித்தால் இப்படித் தான். ராதா என்பது ஜீவாத்மா , கிருஷ்ணன் என்பது பரமாத்மா. இங்கு ராதை என்பது நாம் அனைவரும. ஜீவாத்மாவாகிய நாம், பரமாத்மாகிய கடவுளுடன் கலக்கவேண்டும் என்பதே அதன் பொருள். ( கலத்தல் என்பது உங்கள் அகராதியில் வேறு பொருள். அதை நினைத்து குழப்பிக் கொள்ளவேண்டாம். இங்கு அந்த அர்த்தத்தில் நான் சொல்ல வில்லை) . நன்கு விஷயம் அறிந்தவிரிடம் பாகவதம் அர்த்தம் கேளுங்கள்.. பிறகு விவாதிப்போம்

விடுத‌லைவீரா said...

கைலாயத்தில் சிவன் பார்வதி திருமணமாம்! (கடவுளுக்குக் கூட கல்யாணமா? பேஷ்! பேஷ்!!) கடவுள் கல்யாணம் என்றால், சும்மாவா! முப்பத்து முக்கோடி தேவர்களும், அட்ட திக்கு பாலர்களும், ரிஷிகளும் திரண்டுவிடமாட்டார்களா? அதனால் பாரத்தால் வடபுலம் தாழ்ந்தது; தென்புலம் உயர்ந்துவிட்டது. இந்தத் தராசுத் தட்டை நிமிர்த்த சிவன் ஏதாவது வழிகாண வேண்டுமே ஏனெனில் அவன்தானே எல்லா வற்றிற்குமான சகல அதிகாரங்களையும் படைத்த பொறுப்பாளி?

அகத்தியன் என்ற குள்ள முனிவனை (இவன் கும்பத்தில் பிறந்தவனாம் அது ஓர் ஆபாசக்கதை அதை எழுத ஆரம்பித்தால் காவிரியிலிருந்து பிரியும் கொள்ளிடம் போல வளர்ந்துகொண்டே போகும்!!) தென்புலம் அனுப்பி பூமியைச் சமன் செய்யக் கட்டளையிட்டானாம் சிவன்.

சிவனைக் கல்யாணம் கட்டிக் கொள்ள ஒற்றைக்காலில் தவமிருந்த பார்வதி தேவியாரின் கையில் ஒரு மாலை தயாராக (ரெடியாக) இருந்தது. அந்த மாலையை ஒரு பெண்ணாக்கி, அதனை அகத்திய முனிவனிடம் அளித்தாளாம் பார்வதி.

அகத்திய முனிவனோ அந்தப் பெண்ணைத் தம் கமண்டலத்தில் அடக்கி வைத்தி ருந்தான் (என்ன, தலையைச் சுற்றுகிறதா? புராணம் என்றால் அப்படித்தான் நம்பித்தான் தொலையவேண்டும் இல்லாவிட்டால் நீங்கள் நாத்திகர்கள்).

அகத்திய முனிவன் தென்னாடு வந்த போது, அவன் கமண்டலத்தில் இருந்த தண்ணீர் கொஞ்சம் வழிந்துவிட்டது வழிந்த அந்தத் தண்ணீர்தான் காவிரியாம்! (இதைக் கண்டுபிடித்த கொலம்பசுக்கு பாரத ரத்னா பட்டம் கூடக் கொடுக்கலாம் அல்லவா!).

கமண்டலத்தில் மீதியிருந்த தண்ணீரை தான் வசித்த பொதிகை மலையில் அகத்தியன் கொண்டுபோய்விட, அதுதான் தாமிரபரணி ஆகிவிட்டதாம்!

காவிரி பிறப்பு இப்படியெல்லாம் இருக்கும் போது, கருநாடகத்துக்காரனோடு நாம் சண்டை பிடித்துக்கொண்டிருப்பது வீண் வேலைதானோ!

சிவபெருமான் மனைவி கொடுத்து, பின் அகத்திய முனிவனின் கமண்டலத்திலிருந்து விழுந்த தண்ணீர்தான் காவிரி என்கிறபோது, அதனைத் தடை செய்ய யாருக்கு அதிகாரம்?

இதுபற்றி நீதிமன்றம் செல்வானேன்?

அதுசரி, அகத்தியன் விட்ட இந்தக் கரடியான காவிரித்தாய் இந்த ஆடி 18 இல் கரை புரண்டு ஓடவேண்டுமே ஏன் ஓடவில்லை?

எல்லாம் கப்சாதானே??

விடுத‌லைவீரா said...

விநாயகருக்கு 1008 குடம் நீர் அபிஷேகமாம் -அடஅற்பப் பதர்களே?

தொடர்ந்து மழை பெய்து பவானி சாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க வேண்டும் எனக் கோரி, அணைமேல் இருக்கும் விநாயகருக்கு 1008 குடம் நீர் அபிஷேகம் செய்தனர் விவசாயிகள் என்று ஒரு செய்தி கசிந்துள்ளது.

இதனைப் படிக்கும்பொழுது நியாயமாக என்ன தோன்றவேண்டும்? விநாயகன் நினைத்தால் அணைக்கு அதிக தண்ணீரை வரவழைக்க முடியும் என்பதுதானே?

விநாயகனுக்கு அந்தச் சக்தியிருப்பது உண்மையென்றால், மக்களுக்குத் தேவை யான இன்றியமையாததான தண்ணீரைக் கொடுப்பதைவிட அந்த அழுக்குருண் டைக்கு வேறு என்ன வேலை? வேறு என்ன வெட்டி முறிக்கிறார்?

கல்லினுள் தேரைக்கும் கடவுள்தான் படியளக்கிறார் என்று ஒரு பக்கத்தில் அரட்டைக் கச்சேரி நடத்திக் கொண்டு திரிகிறார்கள். அப்படியானால், மக்களுக்குத் தண்ணீர் மிகவும் தேவை என்பதை அறிய மாட்டாத அறிவிலியா அந்த ஆண்டவன்?

அவனுக்குத் தெரியாததா? அட, அற்பப் பதர்களே? அவனின்றி ஓரணுவும் அசையாது தெரியுமா? என்று எதிர்கேள்வி வைக்கப்படுமேயானால், தெரிந்திருந்தும் மக்களுக்குத் தேவையான தண்ணீரை அவன் கொடுக்க மறுத்தால், அவனைவிட மக்கள் விரோதி பொறுப்பற்றவன் ஒருவன் இருக்கத் தான் முடியுமா? என்ற கேள்வி எழாதா?

இதில் கருணையே உருவானவன் என்கிற அடைமொழி வேறு. கருணையே உருவானவன் என்றால், அவன் என்ன செய்ய வேண்டும்? காலம் கருதி மக்களுக்கு எது எது தேவையோ அவற்றையெல்லாம் கார்மேக மழையெனக் கொட்டோ கொட்டென்று கொட்ட வைக்கவேண்டாமா அந்தக் கரிமுகன்?

ஆக்குதல், காத்தல், அழித்தல் எல்லாம் வேறு கடவுள்களின் துறைகள் - அவற்றிற்கும், விநாயகனுக்கும் சம்பந்தா சம்பந்தம் இல்லை என்று சொல்லித் தப்பிக்கப் பார்க்கலாம்.

அப்படியென்றால் பவானி சாகருக்கு அதிக தண்ணீர் வர வேண்டும் என்று அணைமேல் இருக்கும் விநாயகனுக்கு 1008 குடம் தண்ணீர் அபிஷேகம் செய்தது பக்தர் களின் முட்டாள்தனம் என்று ஒப்புக்கொள்ள வேண்டுமே!

பல நாமகரணங்கள் இருந்தாலும், ஆண்டவன் ஒருவனே என்று ஓதுவது என்னாயிற்று என்று அடுத்த கேள்வி எழுமே!

புவிவெப்பம் பருவ மாறுதல்பற்றி எல்லாம் உரக்கப் பேசிக்கொண்டு இருக்கும் ஒரு காலகட்டத்தில், விக்னேசுவரனான விநாயகன்தான் இவற்றிற்கெல்லாம் தீர்வு காண்பான் என்று கருதுகிறவர்களை என்ன சொல்ல?

பக்தி வந்தால் புத்தி போகும் என்ற வாசகம்தான் அடிக்கடி நினைவூட்டப்பட வேண்டியிருக்கிறது.

இராமசாமி கண்ணண் said...

தேடல் சுகம் :)

LK said...

@விடுதலை வீரா
முதலில் காப்பி பேஸ்ட் செய்வதை நிறுத்தி விட்டு உங்கள் சொந்த எழுத்தை எழுதுங்கள் .. பிறகு விவாதிப்போம்

விடுத‌லைவீரா said...

@LK
என்ன..கடவுள் இப்படி கேவலப்படுகிறானே என்ற வருத்தமா? இது எல்லாம் உண்மைதானே? படித்ததும் மனசுக்குள் சுருக் என்று குத்துகிறதா? ஆதாரத்துடன் சொல்ல வேண்டிய இருக்கிறது. அதான் தேடி எடுத்து சில ...........பேருக்கு சொல்ல வேண்டி இருக்கிறது.. என்ன செய்ய.இல்லாத கடவுளை நம்புறகிறவர்களுக்கு அதை பற்றி விளக்கம் தரவேண்டி இருக்கே..அது தான் இப்படி செய்யவேண்டி இருக்கு. முடிந்தால் உங்கள் ஆதரத்துடன் எனக்கு விளக்கம் கொடுங்கள். இரண்டு வரியில் என்ன குறளா எழுதுறீங்க )LK ..தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும்..சரியா

LK said...

படித்தல் புரிந்து கொள்ள முடியாது உங்களால். இரண்டு வரியில் பல விஷயங்களை சொல்லி இருக்கிறார் திருவள்ளுவர் .. நீங்க அவரை கேவலப் படுத்துகிறீர்கள்

கே.ஆர்.பி.செந்தில் said...

தேடல்கள் இவை அனைத்தையும் தொட்டுதான் செல்லும். எல்லாம் கடந்து உள் சென்று தேட கடவுளை காணலாம் என்பது சித்தர் வாக்கு..
உங்கள் தேடலும் அது போலவே..

காமத்தின் சுவர்களை உடைத்துக் கொண்டுதான் அனைத்தும் வரும், பிரதோஷ நாட்களில் வரும் கூட்டம், கொடுக்கல் வாங்கல் போல் எதிர்பார்த்து வருபவை..
தேடல் உள்ளவனுக்கு தேடல் மட்டுமே ..

மிக அருமையான கட்டுரை... கை பிடித்து அழைத்து சென்றமைக்கு நன்றி ...

dheva said...

கே.ஆர்.பி செந்தில்....@ தேடலின் வேரினை எட்டிப் பிடித்து எழுத்தின் சாரத்தை விளங்கியமைக்கு நன்றி செந்தில்...படைத்ததின் அர்த்தம் உங்களின் புரிதலில் பாப விமோசனம் அடைந்தது தோழர்....!

சௌந்தர் said...

என் மனம் என்னிடம் கேட்டது பரம் பொருள்தானே...எல்லாம் அறிந்த இறைவனுக்குத் தெரியாதா இவருக்கு என்ன தேவையென்று...இவர் போய் அமைதியாய் பக்தியோடு நின்றால் போதாதா?//

அப்போ நின்றால் தான் அவருக்கு தெரியுமா.... இல்லை என்றால் பரம்பொருள் எதுவும் செய்ய மாட்டாரா

dheva said...

செளந்தர்...@ ஒவ்வொரு கட்டுரையும் எழுதிவிட்டு யாரிடமும் கேள்விகள் எழ வில்லையே....என்ற வருத்தத்தின் உச்சத்தில் இருந்த எனக்கு...ஆறுதல் பரிசாய் உன்னுடைய கேள்வி....

ஒரு கமெண்டில் என்னை வாழ்த்துவதற்காகவா நான் எழுதுகிறேன் அல்ல தம்பி....அல்ல...இது போன்ற கேள்விகள் குறைந்த பட்சம் பல இடங்களில் கேட்கப்பட்டிருக்க வேண்டும். கேள்வி கேட்காததிற்கு இரண்டு காரணங்கள் ஒன்று ஏற்கெனவே விசயம் விளங்கியிருக்க வேண்டும் அல்லது புரியமால் தனது தெரியாமையை வெளிக்காட்டினால் கெளரவக் குறைச்சல் என்ற எண்ணமாயிருக்க வேண்டும்..

உன் கேள்வியின் சாரம் உன்னை எங்கோ கொண்டு நிறுத்தி கேட்கவைத்திருக்குறது. முதலில் கட்டுரையை வாசித்தற்கு நன்றி.


உருவ வழிபாடு என்பது மனதில் தனக்குத்தானே வலுவூட்டிக்கொள்ள முடியாதவர்க்காக ஏற்படுத்தப்பட்ட விசயம். மன வலிவுள்ளவர்..... நம்மை சுற்றி இருக்கும் எல்லாம் பிரம்மம் அல்லது இறை அல்லது இயற்கையின் சக்தி...என்று நினைப்பவர்கள் கோவிலுக்கே வரவேண்டிய அவசியம் இல்லை ஆனால் மேல் மட்டமாக அந்த் வல்லமை இருப்பது போல கற்பனை செய்யாம்ல் நிஜமாகவே உனக்கு அந்த வல்லமை இருக்கவேண்டும்.

கோவில் ஒரு பயிற்சி செய்யும் இடம். ஒவ்வொன்றுக்கு ஒரு இடம் வைத்திருக்கிறோம் அல்லவா..ஆபீஸ் ரூம், டைனிங் ஹால், கிச்சன் என்று...கோவில் உன்னை நீ உற்றுப் பார்ப்பதற்காக உம்மா வா என்றால் வரமாட்டாய் என்று அங்கே கடவுள் இருக்கிறது என்று பொடி வைத்து கூப்பிடுகிறார்கள். கடவுள் கோவிலில் மட்டுமா இருக்கிறார்? என்று நீ எப்போது கேள்வி கேட்பாய்..கோவில் இருந்தால்தானே.....எல்லாமாய் இருக்கும் ஒன்று எப்படி ஒரு இடத்தில் இருக்கும்?

மனம் என்ற விசத்தை உணரத்தான் கோவில் அந்த பக்குவம் உனக்கு இருக்கிறது அடுத்த உயிரின் வலி தெரிகிறது என்றால்... நீ இருக்கும் இடத்தில் உன் உள்ளே நோக்கி வல்லமையை அதிகரித்துக் கொள்....கோவிலுக்கு போகவேண்டும் என்ற அவசியம் கூட இல்லை.

கோவில் ஒரு ஒழுக்கத்திற்கு மனோபக்குவத்திறுகு கொண்டு வரும். இயல்பிலேயே அது இருந்தால்....கோவிலுக்கே வரவேண்டாம்.

உண்மையிலேயே உன்னைப்போல யாரவது கேள்வி கேட்கவேண்டும் என்று ஒரு புரிதலோடுதான் அந்த வரி ம்ட்டும் அல்ல நிறைய வரிகளைப் போட்டு வைத்தேன்....ஆனால் யாருக்கும் கேட்க தோணவில்லை.

சௌந்தர் said...

இந்த விளக்கம் மிகவும் தெளிவாக இருந்தது.....அண்ணா...

வானம்பாடிகள் said...

/நான் தொலைந்து போன அந்த உன்னதத்தை உணரத்தான் காமமும் படைக்கப்பட்டதோ?/

நல்ல சங்கீதத்தின் ஒரு ஸ்வரத்தில், ஒரு சின்ன இடைவெளியில், பிரசவ ஆஸ்பத்திரி வலிக்கதறலின் அடங்கலோடு தொடங்கும் சிசுவின் அழுகையில், ஏதோ நினைவில் பயணிக்கையில் நினைவு நிகழ்வாயிருந்தபோது உணராத ஓர் பரவச நொடியின் அடையாளத்தில், சோம்நாத் கோவிலின் ஆராதனையில் டமருவும் தாளமும் உச்சகதியில் இருக்க தீபாராதனை மெதுவே மெதுவே நடக்கையில் மின்னல் போல வந்து போகும் பேரமைதி. அதில் முழுகிக்கிடக்கவே தேடல். நுண்னொடி நொடியாகி, நிமிடமாகி,மணியாகி, நாளாகி காலம் கடந்திடின் சிவனுள் நாம் நம்முள் சிவன். இதில் எதைக் கண்டாலும் சலனமடங்கும். லபிக்குமா? அதற்காக தேடாமல் முடியுமா?ம்ம். பரவசத்தை வடித்துக் கொடுத்த வார்த்தைகள். ஸ்லோகம் போல்.

சிந்திப்பவன் said...

திரு தேவா சார்,

மிகச் சிறந்த பதிவு சார்,அருமையான,ஆழமானக் கருத்துக்கள் பல சொல்லப்பட்டுள்ளதால் அவ்வளவு எளிதாக இதை என்னால் கிரகிக்க முடியவில்லை சார்.


///சிவ வழிபாடு வழிபாட்டின் உச்சம்.....சிலையாய் வழிபட்டு, வழிபட்டு கடையிசில் உருவம் இல்லை என்று கற்பிக்க உருவமும் அருவமும் இல்லாத ஒன்றை சிவலிங்கம் என்று கூறி வழிபட்டு,///

என்று மிக அருமையாக சிவ லிங்கத் தத்துவத்தை போகிற போக்கில் சொல்லியிருக்கிறீர்கள்.

///சிவம் என்றால் எதுவமற்றது ஆனால் எதுவமற்றது என்பதால் ஒன்றுமில்லாதது என்று அர்த்தம் இல்லை. பூரணமான ஆதி பிரம்மம் என்ற பிரபஞ்சம் தான் சிவம். சிவம் என்ற சொல்லின் அர்த்தம் இயங்கா நிலையில் இருக்கும் ஆதி நிலை என்று அர்த்தம். இந்த சிவத்தில் சக்தி மறை பொருளாய் இருந்தது. அதனால்தான் இயங்கும் சிவம் சக்தி அதாவது எனர்ஜி ஆனது. இயங்காத சக்தி சிவம்.///

மிக அருமையான விளக்கம் சார்,

///பிரபஞ்சத்தில் முதல் அசைவு எங்கே இருந்து ஆரம்பித்தது....இயக்கமற்ற ஒரு சூன்யத்திலிருந்து அந்த சூன்யம் சூன்யமாய் இருந்துகொண்டே இயக்கத்தை நடத்தியது...///

தோன்றா நிலையிலிருந்த ஆதி பிரபஞ்சத்தின் முதல் அசைவு எப்படி எங்கே ஆரம்பித்தது?அந்த முதல் அசைவினால் உருவான அதிர்வின் காரமாக அழுத்தம் அதிகரித்து அதுவே பெரு வெடிப்பிற்கு (big bang ) காரணமாக இருக்கலாம்.சரிதானே?

dheva said...

வானம்பாடிகள் பாலா...@ முதலில் நமஸ்காரங்கள் அண்ணா....

கட்டுரையின் போக்கு விளங்க முடியவில்லை என்ற விமர்சனங்களை விலக்கி வர இருக்கும் காதலனுக்காக காத்திருக்கும் காதலிக்கு ...வந்த காதலனாய் உங்களின் கருத்து.....மீண்டும் ஒருமுறை உள் நோக்கி பயணிக்கிறேன்......

உங்களை நமஸ்கரிக்கிறேன். அண்ணா!

dheva said...

சிந்திப்பவன்...@

தொடர்ச்சியாய் விளங்கியமைக்கு நன்றி தம்பி...! நமஸ்காரங்கள்!

ஜெயந்தி said...

தேடல் நிறைந்ததே வாழ்க்கை. கார்ல் மார்க்ஸ், பெரியார், விவேகானந்தர், வள்ளலார், புத்தர், ஏசு எல்லோரும் ஏதோ ஒரு தேடலோடே வாழ்ந்தவர்கள். நீங்களும் தேடுங்கள்.

வழிப்போக்கன் said...

nice thoughts

ஜெய்லானி said...

ஏதோ சீரியசா பேசிக்கிறீங்கன்னு மட்டும் புரியுது . ஆனா அதான் என்னன்னு புரியல..!!

தேனம்மை லெக்ஷ்மணன் said...

சூன்யத்தில் ஆரம்பித்து சூன்யத்தில் முடிவதான இந்தக் கருத்துக்கள் எல்லாம் ...அசத்துறீங்க தேவா,

Karthick Chidambaram said...

நிறையவே தேடுறீங்க தேவா. கடவுள் பற்றி இன்னும் எனக்கு தெளிவில்லை. எனவே நான் அதிகம் அது பற்றி பேச விரும்பவில்லை.
ஆனால் நான் கடவுள் மறுப்பாளன் இல்லை.