Skip to main content

புல் தானாகவே வளருகிறது....!















எழுத ஆரம்பிப்பதெல்லாம் உணர்வு நிலையில் இருந்து வருவதாலும் அதற்காக கற்பனைக்குதிரையை நான் தட்டிவிட வேண்டும் என்ற அவசியமின்மையாலும் மேலும் மிகைப்பட்ட நிகழ்வுகளின படிப்பினைகளை பகிரவேண்டும் என்ற ஆசையினாலும் பெரும்பாலும் ஒரு கட்டுரை, ஒரு கருத்து என்று தேங்கிக் கிடக்கும் நீரைப் போல என்னால் இருக்க முடிவதில்லை மாறக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஆற்றினைப் போல என் தேடல் போய்க்கொண்டே இருக்கிறது.

" புல் தானாகவே வளர்கிறது...? என்று ஒரு ஓஷோவின் புத்தகத்தை மேய்ந்து கொண்டிருந்த பொழுது மேல் மனது என்னிடம் புத்தகத்தை உடனே மூடச்சொன்னது. ஏன் என்ற கேள்விக்கு உடனடி பதிலாக புல் தானாகவே தான் வளரும்..இதில் என்ன பெரிய கருத்து இருக்கிறது? என்று என்னை திருப்பிக்கேட்டது மனது.

புத்தகத்தை மூடி விட்டு அதன் அட்டைப்படத்தை பார்த்து கொண்டே இருந்தேன்....

"புல் தானாகவே வளருகிறது "

தலைப்போடு சேர்ந்து அட்டை காற்றில் ஆடியது. புல் தானாக வளருவதில் என்ன இருக்கிறது? ஆச்சர்யம்....? புல்லின் செயல்பாட்டை புறக்காரணிகள் நேரடியாக மாற்ற இயலுமா? ?

கடுமையான வெயிலின் தாக்கம் இருந்தால் நீர் வரத்து இன்றி புல் கருகத் தொடங்கும்....வெயில் புறக்காரணி... மாற்றம் புல்லின் உள்ளே...!அதாவது புல் தானாகவே கருகத் தொடங்குகிறது ஹா..ஹா...ஹா அதாவது புல்லினை கருகவைக்கும் மூலக்கூறுகள் ஏற்கனவே அதனுள் இருந்தன....அதிக பட்ச சூரிய ஒளியினால் அவை செயல் படத்தொடங்குகின்றன. சரியா?

பசுமையாய் வளர்ந்த போது அது கருகும் தன்மை மறைந்திருந்ததேயன்றி இல்லாமலில்லை. இதே கூற்றின் படிதான் புல் தானகவே வளர்கிறது என்பதும் எந்த அணுக்கள் தூண்டப்படுகின்றனவோ...அதன் போக்கில் நிகழ்கிறது நிகழ்வு....!தானாக நிகழ்வதில் புறத்தின் பங்கும் இருக்கிறது என்பது மறை பொருள்.

மனிதர்களின் வாழ்க்கை கூட அப்படித்தான்..... தானாக நிகழ்கிறது என்று நினைத்தாலும் புறத்திலிருக்கும் பொருட்கள் அல்லது மனிதர்களைப் பொறுத்துதான் வளர்வதும் கருகுவதும். உண்மையில் எல்லா காரணிகளும் நமக்குள் மறை பொருளாய் இருக்கும் பட்சத்தில் புற விசை எதைத் தூண்டுகிறது என்பதை பொறுத்துதான் இயல்புகள் தீர்மானமாகின்றன.

ஜீன்களின் பதிந்துள்ள நம்து மூததையர்களின் குணங்களுடன் புறம் கடும் சண்டையிட்டு....சண்டையிட்டு கடைசியில் வென்றே விடுகிறது புறத்தில் ஏற்படும் அனுபங்கள். பரிணாம வளர்ச்சியின் பல கட்டங்கள் புறச்சூழலினால் ஏற்பட்டவைதான்....!

அடா...அடா.. புத்தகத்தையே படிக்கவில்லை அதற்குள் எத்தனை அனுமானங்கள்....என்று கேட்கிறீர்களா? நீங்களும் இந்த பயிற்சியை மேற்கொள்ளுங்கள்...எந்த புத்தகத்தையும் வாசிப்பதற்கு முன் அதை ஒரு விழிப்புணர்வு நிலையோடு கையிலெடுங்கள்...கொஞ்ச நேரம் புத்தகத்தின் இருப்பை உணருங்கள்...! ஒரு சில நிமிடங்கள் அதன் தலைப்பை பாருங்கள்....இப்போது கண்களை மூடுங்கள்....காதலாய் புத்தகத்தை உங்களின் நெஞ்சோடு சாய்த்துக் கொள்ளுங்கள்.........இப்போது உங்களின் அனுமானிப்பைத் தொடங்குகள்.....

கதையோ கட்டுரையோ.. அதன் போக்கு எங்கு செல்லும்...என்று தலைப்போடு சம்பந்தபடுத்தி ஊர்ஜிதம் செய்யுங்கள்...! ஆரம்பத்தில் கடினமாயும் இலக்கு தவறவும் செய்யும் அந்த மாதிரி நேரங்களில் ஓரிரு பக்கங்களை வாசித்து விட்டு பின் அதன் போக்கில் அனுமானிக்கத் தொடங்கலாம்.... நாளடைவில் ஆச்சர்யமாய் தலைப்பை வைத்தே கட்டுரையின் போக்கை தீர்மானித்து விடலாம்....

இதை புத்தகத்துக்கு மட்டும் நான் சொல்லவில்லை, இப்படி அனுமானிக்க தொடங்கும்போது நாளடைவில் நமது மூளையின் செல்களில் இந்த திறன் இயல்பாகவே அதிகரித்து....சந்திக்கும் மனிதர்களின் முக பாவங்களையும்...அசைவுகளையும், உச்சரிக்கும் வார்த்தைகளின் ஏற்ற இறக்கங்களையும்...அலையும் கண்களின் வேகத்தினையும் கணித்து கணித்து மனிதர்களின் சுபாவங்களையும் எண்ணங்களையும் அனுமானிக்கும் திறன் எளிதாக நமக்கு கிடைத்து விடுகிறது......

பத்திரகிரியாரின் மெஞ்ஞான புலம்பலில் கூட...

" ஆங்காரம் உள்ளடக்கிய ஐம்புலனைச் சுட்டறுத்து...தூங்காமால் தூங்கிச் சுகம் பெறும் காலம் எப்போது? " என்று சொல்லியிறுப்பார்.....

தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவதை விட்டு விடுவோம்..அதற்கு தனிக்கட்டுரை சமைக்க வேண்டும். ஐம்புலனைக் கூட சுட்டறுக்க வேண்டாம்....ஒவ்வொரு புலனையும் ஒரு நாள் அடக்கிப் பாருங்கள்.... மற்றைய புலன்கள் கூர்மையாய் வேலை செய்யும்....

மெளனாமாய் இருக்கும் நேரங்களில் காதுகள் கூர்மையாகும்..கண்களின் பார்வை வீச்சு...தீர்க்கமாகும். ஆமாம் எந்த விசயத்தையும் நாம் யாரிடமும் கேட்காமல் புரிந்துகொள்ள முயலும் போது மற்ற புலன்கள் மூலமே நாம் தீர்வினை எட்ட முயல்வோம். இப்படித்தான்...காற்றின் வேகத்தையும் கனத்தையும் ஈரப்பதத்தையும் வைத்து நம் முன்னோர்கள் பருவ நிலைகளை கணித்தனர். வெயிலின் உக்கிரத்தை வைத்து அந்த வருட வேளாண்மையைத் தீர்மானித்தனர்.

ஆனால்...இந்த நவீன காலத்தில் எல்லா சக்திகளும் கொண்ட நாம்...அவற்றை ஊக்குவிக்க அல்லது செயல் பட வைக்க சரியான புறக்காரணிகள் இல்லாமலும் நம்முடைய புலன்களை அலையவிட்டும் அவற்றின் கூர்மையினை அறியாமலும்....அழுது புலம்பி திரிந்து கொண்டிருக்கிறோம்...

சக்தி இருக்கிறது நமக்குள்ளே....வேண்டியதெல்லாம்...சரியான புறக்காரணியும் அதை புரிந்து கொள்ளும் மனோபக்குவமும்தான்...

முடியாது என்றால்.....அது முடியாது...! முடியும் என்றால் முடியும்.... இப்போது சொல்லுங்கள்....

புல் தானாகவே தானே வளருகிறது??


தேவா. S

Comments

Jey said…
//பசுமையாய் வளர்ந்த போது அது கருகும் தன்மை மறைந்திருந்ததேயன்றி இல்லாமலில்லை. இதே கூற்றின் படிதான் புல் தானகவே வளர்கிறது என்பதும் எந்த அணுக்கள் தூண்டப்படுகின்றனவோ...அதன் போக்கில் நிகழ்கிறது நிகழ்வு....!தானாக நிகழ்வதில் புறத்தின் பங்கும் இருக்கிறது என்பது மறை பொருள்.///

//உண்மையில் எல்லா காரணிகளும் நமக்குள் மறை பொருளாய் இருக்கும் பட்சத்தில் புற விசை எதைத் தூண்டுகிறது என்பதை பொறுத்துதான் இயல்புகள் தீர்மானமாகின்றன.//

அருமையான வரிகள். உண்மை.
புல் தானாகவே தானே வளருகிறது??// இனி மேல் சொல்வோம்.....


...காதலாய் புத்தகத்தை உங்களின் நெஞ்சோடு சாய்த்துக் கொள்ளுங்கள்........///

நீங்க புத்தகத்தின் மீது வைத்துள்ள காதல் புரிகிறது...
//.இப்போது கண்களை மூடுங்கள்....காதலாய் புத்தகத்தை உங்களின் நெஞ்சோடு சாய்த்துக் கொள்ளுங்கள்.........இப்போது உங்களின் அனுமானிப்பைத் தொடங்குகள்.....//


க்கொர்...க்கொர்... அட யாருய்யா அது தூங்குகிறவனை தட்டி எழுப்புவது..!!
dheva said…
ஜெய்லானி...@ உங்க அலும்புக்கு அளவே இல்லாம போச்சு....தேடிப் புடிச்சி சார்ஜாவுல வந்து வெட்டுறனா இல்லையா பாருங்க....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
//எந்த புத்தகத்தையும் வாசிப்பதற்கு முன் அதை ஒரு விழிப்புணர்வு நிலையோடு கையிலெடுங்கள்...கொஞ்ச நேரம் புத்தகத்தின் இருப்பை உணருங்கள்...! ஒரு சில நிமிடங்கள் அதன் தலைப்பை பாருங்கள்....இப்போது கண்களை மூடுங்கள்....காதலாய் புத்தகத்தை உங்களின் நெஞ்சோடு சாய்த்துக் கொள்ளுங்கள்.........இப்போது உங்களின் அனுமானிப்பைத் தொடங்குகள்.....//

அட இதுவும் நல்லாதான் இருக்கு, செய்து பாத்துடுவோம்
நமக்கு இதெல்லாம் தெரியாது .. புத்தகம் கிடைச்சா படிப்பேன். பிடிச்ச ரசிப்பேன் அவ்வளவுதான் .. நீங்க எதோ பெரிய அளவுல யோசிக்கறீங்க.. தத்துவஞானி ஆகிட்டு வரீங்க. நடத்துங்க
This comment has been removed by the author.
இந்த கட்டுரையின் மறைபொருள் யாம் அறியேன் பராபரமே.
Unknown said…
நல்சிந்தனை. வாழ்த்துக்கள்.
Admin said…
எப்படி உங்களால மட்டும் இப்படி எழுத முடியிது. தொடர்ந்தும் கலக்குங்க..
Admin said…
எப்படி உங்களால மட்டும் இப்படி முடியிது. தொடர்ந்து கலக்குங்க..
SEKAR70 said…
அமெரிக்க ஜனாதிபதியாயிருந்த ஆபிரகாம் லிங்கன் ஒருமுறை, சேற்றில் விழுந்து உயிருக்குத் தத்தளித்துக் கொண்டிருந்த பன்றி ஒன்றைத் தூக்கியெடுத்துக் காப்பாற்றினார். அப்போது அவரது உடை, உடல் முழுவதும் சேறாகிவிட்டன. அதைக் கண்ட சிலர் “ஜனாதிபதியான நீங்கள் இந்த அற்பப் பன்றியைக் காப்பாற்றுவதற்காகச் சேற்றைப் பூசிக் கொண்டீர்களே?” என்று கேட்கவே, அவர் “அந்தப் பன்றியின் துயரம் நீங்குவது ஒரு பக்கம் இருக்கட்டும். அதற்காகக்கூட அல்ல நான் இச்செயலில் ஈடுபட்டது! பின்னர் ஏனென்றால் அது படும் கஷ்டத்தைப் பார்க்க என் மனம் சகிக்க முடியாத வேதனை யடைந்தது. என் வேதனையினின்றும் விடுபட்டு, என் மனம் சாந்தி பெறவே நான் இப்படிச் செய்தேன்!” என்றார். அவர் கூறியதே அனுபவ உண்மை. சகல விதமான பரநல சேவைகளிலும் மறைவாகப் பொதிந்து கிடப்பது இந்தத் தன் திருப்தியே! தனது சுகமே! இதை மறுக்க வழியில்லை
ஆப்பு எங்கேயும் இல்ல.. அது நம்மக்கிட்டேயேதான் இருக்கு.. நாம தேடிப்போயி உக்காருகிறோம் இல்ல பங்காளி.. :))

புல்லைபோல தான் நம் வாழ்க்கையும் என்பதை அழகாக சொல்லிருக்கீங்க தேவா.. நல்ல கட்டுரை..

நண்பர்கள் தின வாழ்த்துகள்.
ஆப்பு எங்கேயும் இல்ல.. அது நம்மக்கிட்டேயேதான் இருக்கு.. நாம தேடிப்போயி உக்காருகிறோம் இல்ல பங்காளி.. :))

புல்லைபோல தான் நம் வாழ்க்கையும் என்பதை அழகாக சொல்லிருக்கீங்க தேவா.. நல்ல கட்டுரை..

நண்பர்கள் தின வாழ்த்துகள்.
முடியாது என்றால்.....அது முடியாது...! முடியும் என்றால் முடியும்....///

நல்ல சிந்தனை அண்ணா...
வளரட்டும் .. வளரட்டும்
தேவா அருமையான கட்டுரை ....
//ஒவ்வொரு புலனையும் ஒரு நாள் அடக்கிப் பாருங்கள்.... மற்றைய புலன்கள் கூர்மையாய் வேலை செய்யும்....//
எப்ப செஞ்சீங்க இந்த ஆராய்ச்சி ? இத பத்தி தனி கட்டுரை வருமா ?
//ஆப்பு எங்கேயும் இல்ல.. அது நம்மக்கிட்டேயேதான் இருக்கு.. நாம தேடிப்போயி உக்காருகிறோம் இல்ல பங்காளி.. :)) //

செம உள் குத்தால்ல இருக்கு யாரை சொல்றீங்க ஸ்டார்ஜன் ..? தேவா கோர்ட்டில தைரியமா சொல்லுங்க ..யார் அது யாருக்கு வச்சது யார் போய் உட்கார்ந்தது ஹி..ஹி...
dheva said…
ஜெய்லானி.........ஒரு முடிவோடதன் இருக்கீங்க போல இருக்கு....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
//மனிதர்களின் வாழ்க்கை கூட அப்படித்தான்..... தானாக நிகழ்கிறது என்று நினைத்தாலும் புறத்திலிருக்கும் பொருட்கள் அல்லது மனிதர்களைப் பொறுத்துதான் வளர்வதும் கருகுவதும். உண்மையில் எல்லா காரணிகளும் நமக்குள் மறை பொருளாய் இருக்கும் பட்சத்தில் புற விசை எதைத் தூண்டுகிறது என்பதை பொறுத்துதான் இயல்புகள் தீர்மானமாகின்றன.//
ஒவ்வொரு மனிதனின் பேச்சு, செயல், நடத்தை எல்லாத்துக்கும் காரணம் இதுதான்.

நீங்கள் சொல்வது போல் சிந்தித்தால் நிச்சயம் அறிவு வளர்ச்சியடையும்.
//பசுமையாய் வளர்ந்த போது அது கருகும் தன்மை மறைந்திருந்ததேயன்றி இல்லாமலில்லை.//

லாஜிக் இடிக்குதே. புறச்சூழ்நிலை சாதகமாக இருந்தால் வளர்கிற தன்மை ஊக்கம் பெற்று வளர்தல் நிகழ்கிறது. புறம் பாதகமாகும் போது வளர்ச்சி தடைப்படுகிறது அதனாலால் கருகிவிடுது.

எந்த உயிர் அனுவிலும் (ஜீன்ஸ்) அழிவதற்கான செய்திகள் மறைந்தோ வெளிப்படையாகவோ இருப்பதில்லை என்றே நான் நினைக்கிறேன்.
க ரா said…
பதிவுலகின் ஒஷோ இனிமே நீங்கதான் :)
Chitra said…
வெயிலின் உக்கிரத்தை வைத்து அந்த வருட வேளாண்மையைத் தீர்மானித்தனர்.

ஆனால்...இந்த நவீன காலத்தில் எல்லா சக்திகளும் கொண்ட நாம்...அவற்றை ஊக்குவிக்க அல்லது செயல் பட வைக்க சரியான புறக்காரணிகள் இல்லாமலும் நம்முடைய புலன்களை அலையவிட்டும் அவற்றின் கூர்மையினை அறியாமலும்....அழுது புலம்பி திரிந்து கொண்டிருக்கிறோம்...


.... உண்மைதான், தேவா. prejudice, ego and lack of focus இருக்கும் வரை எதையும் புரிந்து கொள்ள முடிவதில்லை.
Unknown said…
மிக சிறந்த புத்தகமும், கட்டுரையும் ..
ரொம்ப பிரமாதம்டா மாப்ள..
இந்தப்பதிவு என்னை எங்கோ வேறு ஒரு பரிமாணத்திற்கே கொண்டு சென்றுவிட்டதாகவே நான் நம்புகிறேன். மிக்க நன்றி... வாழ்த்துக்கள்!
அருமையாக இருக்கிறது.

அதுக்காக யாரும் பதிவின் தலைப்பைப் படிச்சிட்டு உள் பொருளை கண் மூடியோசிக்க ஆரம்பிச்சிடபோறாங்க இனிமே :)
dheva said…
//எந்த உயிர் அனுவிலும் (ஜீன்ஸ்) அழிவதற்கான செய்திகள் மறைந்தோ வெளிப்படையாகவோ இருப்பதில்லை என்றே நான் நினைக்கிறேன். //

கேள்விக்கு நன்றி ரிஷபன்.

உள்ளது அழியாது இல்லாதது தோன்றாது இது அறிவியல் சரிதானே...? புல்லுக்கு வெளியில் இருந்த நீர் வரத்து நின்ற பின் புல்லானாது எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலையிலேயே இருந்தால் வேறு இயக்கம் இல்லை என்று சொல்லலாம்....ஆனால்

எதிர்மறை இயக்கம் தொடங்குகிறது.....அந்த எதிர்மறை இயக்கம் வேறு எங்கோ இருந்து புகுத்தப்படவில்லை.....புல்லினுள்ளே இருந்தேதான் நிகழ்கிறது....! அதனால் தான் சொல்கிறேன்.. நேர்மறை இயக்கத்தின் போது இது மறைவாய் இருக்கிறது என்று....

வருகைக்கும் மிக்க நன்றி தோழர்!
dheva said…
கார்திக் சிதம்பரம்....@ உங்கள் கூற்று சரிதான் ...இதற்கு தனிக்கட்டுரை சமைக்கத்தான் வேண்டும்... நேரம் வரும்போது செய்யலாம்!
dheva said…
முத்துலெட்சுமி...@ யோசிக்கலாமே தோழி...தப்பில்லையே...!
dheva said…
இராமசாமி கண்ணன்...@ எதை எழுதினாலும் மாட்டிவிடுறானே தம்பி...ம்ம்ம் எப்படி தப்பிக்கிறது...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
//சக்தி இருக்கிறது நமக்குள்ளே....வேண்டியதெல்லாம்...சரியான புறக்காரணியும் அதை புரிந்து கொள்ளும் மனோபக்குவமும்தான்...//

உண்மைதான்..
dheva said…
சித்ரா...@ கவன சிதறுதலில் மன ஒருமைப்படுதல் தப்பி....இயல்பாக பயன்பட வேண்டிய நமது மூளையின் பயன்பாடு மங்கிப் போயிருக்கிறது.

உதாரணமாக....செல்போனில் மெமரியில் எண்களை பதிந்து விட்டு... டேட்டா கரப்ட் ஆகிவிட்டால் ஒரு நம்பர் கூட நமக்கு தெரியாது...காரணம் மூளையின் அந்த பயன்பாட்டினை நாம் உபோயோகம் செய்யவில்லை..ஆனால் மனித மூளையில் எத்தனையோ ஆயிரம் எண்களை ஸ்டோரேஜ் செய்து வைக்க முடியும்..உதாரணமாக எவ்வளவு பெயரின் பெயர்களை முகத்தோடு நினைவுபடுத்துகிறது மூளை......

It's Lake of focus only....dude!
Kousalya Raj said…
விளக்கம் அருமை. உங்க சிந்தனை உயர்வாக, வித்தியாசமாக இருக்கிறது. நன்றி.
உண்மை அண்ணே

கண்டிப்பா முடியும் என்றால் எதுவும் முடியும் :)
விஜய் said…
வாழ்க்கையின் அடிப்படையை இவ்வளவு அழகாய் விளக்கி இருக்குறீர்கள் அண்ணா, ஒவ்வொரு மனிதனின் நல் குணமும் , தீய குணமும் ,ஏதோ ஒரு வகையில் தன் பெற்றோரிடமிருந்து வந்து இருந்தாலும், அவைகள் புற விசைகளாலும் மாற்ற படுகின்றன ( காரணிகள், நிகழ்வுகள்) என்பதும் உண்மை தான் . ஒரு மனிதன் இன்னும் 25 வருடங்களுக்கு பிறகு எப்படி இருப்பான் என்பதை அவன் இப்பொழுது படிக்கும் புத்தகங்களால் தீர்மானிக்க முடியும், படித்தல் என்பது, கற்றலுக்கான முதல் படி, நீங்கள் சொல்வது போல் அதை விரும்பி, உணர்ந்து, ஒருவித மனத்தில் கற்பனை செய்து படிக்கும்பொழுது அதன் பொருள், மிக இனிமையானதாய் விளங்குவதாய் அமையும் ..

//மெளனாமாய் இருக்கும் நேரங்களில் காதுகள் கூர்மையாகும்..கண்களின் பார்வை வீச்சு...தீர்க்கமாகும். ஆமாம் எந்த விசயத்தையும் நாம் யாரிடமும் கேட்காமல் புரிந்துகொள்ள முயலும் போது மற்ற புலன்கள் மூலமே நாம் தீர்வினை எட்ட முயல்வோம்.//
மிகவும் அருமையா சொல்லி இருக்கீங்க அண்ணா.
எப்பவும் போல இதிலும் கருத்துகளை ஆழமாய் புத்தைத்து வைத்து இருக்கிறீர்கள் ..
///மெளனாமாய் இருக்கும் நேரங்களில் காதுகள் கூர்மையாகும்///
ஆமாம் ..!!
///இப்போது கண்களை மூடுங்கள்....காதலாய் புத்தகத்தை உங்களின் நெஞ்சோடு சாய்த்துக் கொள்ளுங்கள்.///
நான் நிறைய தடவை இப்படி செய்திருக்கிறேன் .. புத்தகத்த எடுத்தவுடனே தூங்கிடுவேன் ..!!
Unknown said…
Always Be a WITNESS
எதார்த்தங்களை சில நேரம் நாம் உற்று நோக்க நேர்ந்தால் அலங்காரங்கள் அனைத்தும் அழகை இழந்துவிடும் என்பது மட்டும் உண்மை
நன்றி பகிர்வுக்கு .
/////////ப.செல்வக்குமார் said...
///மெளனாமாய் இருக்கும் நேரங்களில் காதுகள் கூர்மையாகும்///
ஆமாம் ..!!
///இப்போது கண்களை மூடுங்கள்....காதலாய் புத்தகத்தை உங்களின் நெஞ்சோடு சாய்த்துக் கொள்ளுங்கள்.///
நான் நிறைய தடவை இப்படி செய்திருக்கிறேன் .. புத்தகத்த எடுத்தவுடனே தூங்கிடுவேன் ..!! /////////////


உண்மைதான் என்னைக் கேட்டால் புத்தகங்கள் ஒரு அன்னையின் தலாட்டிற்கு இணையானது . புத்தகங்கள் வாசிக்கும் பல நேரங்களில் எப்பொழுது உறங்கிப்போகிறேன் என்று தெரியாமல் இன்னும் விடை தேடுகிறேன் மற்றொரு புத்தக வாசிப்பின் முந்தைய விழிப்பினில் .!

அறிவை தந்து அன்பாக தாலாட்டும் தாய்மை உணர்வு அனைத்து புத்தகத்திற்கும் உண்டு என்று விழித்துக்கொள்ளும் நேரங்களில் இன்றும் நினைதுகொள்கிறேன்
முதல் புல் தானாகத்தான் வளர்ந்தது, அதன் வேரின் சிறு துளி ஜீனும் அடுத்த புல் வளர போதுமானது, நமது காலில் ஒட்டியிருக்கும் மணல் துகள் போதுமானது அடுத்த புல் வளர!
VELU.G said…
//புல் தானாகவே தானே வளருகிறது??//

ஹஹஹஹஹ ஹ

ஆமாம் ரொம்ப யோசித்து கொண்டே இருந்து ஞானி ஆகிவிடாதீர்கள் தேவா
Anonymous said…
Very interesting article you got there. It helped me a lot and I'm definitely coming back to your site again in the future. Keep up the good work. My www: [url=http://pozyczkanadowod.blog.onet.pl/]pozyczka na dowod[/url]

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த