Pages

Tuesday, August 24, 2010

அட....!தாம்பரத்திலிருந்து நந்தனம் நோக்கி நான் திரும்பிக் கொண்டிருந்த சென்னை மாநகரின் ஒரு பரபரப்பு மாலை. சந்தித்து விட்டு வந்த கம்பெனி கொடுத்த நம்பிக்கையில் அடுத்த வாரம் வரப்போகும் கெஸ்ட்ஸால் நான் வேலை செய்யும் 4 நட்சத்திர ஹோட்டல் ரூம்ஸ் எல்லாம் 15 நாள் தொடர்ந்து சோல்ட் அவுட் ஆகும்...எம்.டியின் தொலைபேசி பாரட்டு என்று ஒருவித குதுகலிப்பில்...இருந்தேன் நான்.

வேகமாய் அடித்து என் தலை கலைத்துப் போட்டு கொஞ்சலாய் காதல் மொழி பேசிய காற்றோடு உறவாடிக் கொண்டு...மெல்ல ஆக்ஸிலேட்டரை முறுக்கியதில் என் பைக் பறந்த போது நேரம் மாலை 5.

தாம்பரம்...சானிடோரியம்.....குரோம்பேட்டை......தாண்டி....பல்லாவரம் தொடுவதற்கு முன்னால் எனது இடப் பக்கமாக முளைக்க ஆரம்பித்து இருந்த கையேந்தி பவன் வண்டிகள் இரவு வியாபரத்துக்கான முஸ்தீபுகளிலும், சுண்டல் வண்டிகளின் சுறு சுறுப்பிலும், மாலை நேர வீடு திரும்பலில் மகிழ்ச்சியாயிருந்த மனிதர்களும் பள்ளி விட்டு வீடு திரும்புகளும் பிள்ளைகள், ஆட்ட்டோகளின் அவசரம், பைக், பேருந்துகள் என்று மதிய வெயிலில் களைத்து போயிருந்த சென்னை நகரம் மாலைக் குளுமையில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தது. ஒரு ஒயின் ஷாப்பில் கூட்டம் சேரத்தொடங்கியிருந்தது......

அப்போதுதன் சட்டென கவனித்தேன்....அந்த இரண்டு பேரை....

" ஏய்...இன்னாடா..." என்று கெட்டவர் கோபமாய் இருந்தார் என்பதை நெஞ்சு வரை ஏறியிருந்த அவரின் லுங்கி.....சொல்லாமல் சொன்னது.... வண்டியில் ஸ்லோவா போய்ட்டு பாத்துட்டு இருந்த நான்... ஏதோ ஒரு சுவாரஸ்யத்தில் வண்டியை ஒரு டீசன்டான தூரத்தில் நிறுத்தி ஸ்டாண்ட் போட்டு சீட்டில் வசதியாய் அமர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.....

" இன்னாட சவுண்டு...." சட்டை போட்டிருந்தவரை நோக்கி பனியன் போட்டிருந்தவரின் ரிப்ளை இது..

ஹேய்....****தா (சென்னை நகரின் பிரபல வார்த்தை) இன்னடா டாபரு.... .....இது சட்டை

யார்றா டாபரு....அட்சேன்...மூஞ்சி பிஞ்சிடும் **** தா.... கஸ்மாலம்...ஓசிக்குடி குடிச்சிட்டு..இன்னா கூவுற பேமானி.... ஏய்.... குத்துவது போல சட்டை போட்டவரின் அருகே கையை கொண்டு செல்கிறார் பனியன்....

...அட்சிருவிய்ய...இன்னா நம்மகிட்டயேவா....இதோட...ஓய்...பனியனின் நெஞ்சைப் பிடித்து தள்ளியது சட்டை....

யேய்..துட்ட குர்றா...சும்மா இன்னா சீனு போட்டிகினு கீறா மேல கைய வைச்ச....****தா பேஜராயிடுவ....சட்டையை நோக்கி மறுபடி கையை ஓங்கியது பனியன் அடி விழுந்திடுமோ என்று நான் துணுக்குற்றுப் போகும் அளவிற்கு முகத்தின் பக்கம் வெகு அருகில் போனது கை......

சுற்றி நகர்ந்து கொண்டிருக்கும் மனிதர்களில் மிகைப்பட்டவர்களுக்கும் அவர்களைப் பற்றி கவலையில்லை. இவர்களுக்கும் சுற்றியிருந்தவர்கள் பற்றி அக்கறை இல்லை. ஏதோ ஒரு ஒயின் ஷாப்பில் கொடுக்கல் வாங்கலில் எற்பட்ட சண்டையாயிருக்க வேண்டும் என்று அனுமானித்த என் மனமோ எப்படியும் ஒரு சண்டையை வன்முறையை பார்த்து விட்டு போக வேண்டும் என்ற ஆசையில் இருந்தது....ஆமாம் அப்போ அப்படி ஒரு மனோ நிலை.......அட....இருங்க...இருங்க... சண்டை சூடு பிடிக்குது.....

சட்டை உறுமியது....ஏய்....கம்முனு போய்கினே இரு...ஏதாச்சும் பேசுன அட்ச்சே கொன்னுடுவேன்....அப்பீட்டாய்டுவ...ஹுக் கூம்....கிட்ட தட்ட பனியனின் மூக்கு உடைந்து விடுமோ என்று பயந்து நான் உற்று கவனித்த இடம் அது...ச்சே....இந்த தடவயும் அடி விழலயே.....ம்ம்ம்ம்..எப்ப அடிச்சிக்குவய்ங்க....என் எதிர்பார்ப்பு இது..

பாத்தியா.... நம்ம கைலயே ராங்கு காமிக்கிறியே நைனா.....பிசாத்து பையன் நீ....மருவாத அவ்ளோதான்...சடாரென்று இடுப்பிலிருந்து எதையோ உறுவியது பனியன்...

அட....கத்தி.... நான் பயந்தே போய்ட்டேன்.....அட என்னடா இது சண்டைய வேடிக்கை பாக்கலாம்னு ஓரமா ஒதுங்கினா...ஒரு கொலைக்கு சாட்சியா ஆயிடுவோமோ.....மெல்ல பயந்த படி மணி பார்த்தேன்.....6:30...அட ஒரு மணி நேரம் ஆச்சா....மெல்ல அவர்களைப் பார்த்தேன்...பயந்தபடி....

பனியனின் கத்தியை எதிர்பார்க்காத சட்டை கத்தியது இன்னா பெரிய பருப்பா நீயி....பார்றா தம்மதுண்டு பையன் கையில பொருள வச்சிகினு.....மேல டச் பண்ணா இன்னா ஆவும் தெர்மா.... நம்ம கைலயும் புள்ளைங்க கீறானுகோ...போன போட்டா...வந்து உன்ன உண்டு இல்லேன்னு ஆக்கிடுவனுகோ....கலீஜாயிடுவ....****தா...கிட்டே போய் ஓங்கி ஒரு தள்ளு தள்ளினார் பனியனை..

தடுமாறி கீழே விழப் போன பனியன் ஓடி வந்து கத்தியால் குத்துவது போல பாவ்லா பண்ணி....இன்னொரு தபா மேலகைய வெச்சா....மவனே..............உள்ள உசுரு கீதுல்ல உசுரு அது அப்பீட்டயிடும்.......சோமாறி கையித...கம்னு போய்க்கினே இரு.......சத்தமாய் கத்திக் கொண்டிருந்தது...பனியன்....

அப்போதுதான் அது சரலென்று நடந்தது...அந்த பக்கமாய் வந்த ஒரு போலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இவர்களை கவனித்து விட்டார்.....மெல்ல கிட்ட போய்...ரெண்டு பேரையும் கூப்பிட்டர்....பனியனின் கத்தியும் சட்டையின் நெஞ்சு வரை இருந்த லுங்கியும் போன இடம் தெரியவில்லை.....

ரொம்ப பவ்யமாய் வணக்கம் சொன்ன அவர்களைப் பார்த்தவுடன் என்னால் சிரிப்பை அடக்க முடியாமல் போனதாற்கு காரணம் இவ்வளவு நேரம் அவர்கள் காட்டிய ஆக்ரோசம்...எங்கே பறந்து போனது என்ற எண்ணம்தான்....

ரெண்டு பேரையும் பக்கத்தில் கூப்பிட்ட கான்ஸ்டபில் கையிலிருந்த தடியால் ஆளுக்கு ஒன்று அவர்களின் பின்புறத்தில் ஓங்கி ஒன்று போட்டு விரட்ட...பனியனும் சட்டையும் ஆளுக்கொரு பக்கத்தில் பின்புறத்தை தேய்த்துக்கொண்டு ஓடியதை இப்போதும் மறக்க முடியவில்லை......

சுமார் ஒரு மணி நேரம் ஒருத்தரை ஒருத்தர் ஒரு அடி கூட விழாமல் அவர்கள் போட்டுக் கொண்டிருந்த வாய் தகறாரோடு முடிந்த அல்லது முடித்து வைக்கப்பட்ட....அந்த சண்டையின் பின்புலத்திலிருந்த... டாஸ்மாக் மீதும் அதை வருமானத்துக்காக மூலை முடுக்கெல்லம் திறந்து வைத்திருக்கும் அரசின் மீதும் அப்போது எனக்கு கோபம் வரவில்லை. ஒரு அடி கூட அடிச்சுக்காம என் ஒரு மணி நேர எதிர்பார்ப்பு வீணாப்போச்சே....ஒரு வேளை இந்த போலிஸ்காரர் வரலேண்ணா என் எதிர்பார்ப்பு ஜெயித்திருக்குமோ...கடுப்பை கிக்கரை உதைத்து பைக்கை கிளப்புவதில் காட்டினேன்...

ஒரு பக்கம் போலிஸ்காரர்களை பற்றி நினைத்தாலும் பாவமாய்தான் இருந்தது... நல்ல வெயிலில் ரோட்டின் நடுவே நின்று போக்குவரத்தை கவனிப்பதிலும், மனிதர்களின் அத்துமீறல்களைச் சமாளிப்பதில் இருந்து....எல்லா கொலை, கொள்ளை, குண்டு வெடிப்பு, வன்முறை என்று எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டு மனிதர்களின் அமைதியான வாழ்க்கைக்கு பொறுப்பேற்று 24 மணி நேரமும் உழைத்து அரசியல்வாதிகளால் பந்தாடப்படும் ஒரு ஜாதி....ம்ம்ம்ம் என்ன செய்வது....?

என் வண்டியின் வேகம் அதிகமானது.....பல்லாவரம், திரிசூல், பழவந்தங்கல், கத்திபாரா..கிண்டி........ நகர்ந்து கொண்டிருந்தேன்.... நான்....

ஆமா..... நீங்க என்ன பாஸ் என் கூட இவ்ளோ நேரம் சண்டைய நீங்களுமா வேடிக்கை பார்த்தீங்க....... நீங்களும்....ஏமாந்திட்டீங்களா? சரி..சரி....கவலைப்படாதீங்க....அடுத்த வாரம் கொருக்குப் பேட்டை பக்கம் போறேன் மறக்காம வந்துடுங்க...அந்த பக்கம் நல்லா அடிச்சிக்குவாங்களாம்......


அப்போ வர்ட்டா.....தேவா. S

22 comments:

sandhya said...

அட ரொம்ப இன்டரஸ்டிங்கா போன அந்த சண்டை கத்திக்குத்தில் முடியும் ன்னு தான் நானும் நினைத்தேன் ச்சே சரி நீங்க தான் சொன்னிங்களை சொருக்குபேட்டை பக்கம் போக போறேன் என்று அதாவது உருப்படியா சொல்லுங்க ஹூம்

Mohamed Faaique said...

என்ன அன்ன புது ஸ்டைல்'எ காமெடி'யும் கலந்து எழுதியிருக்கீங்க ..... நல்லாயிருக்கு...
அடுத்த வாரம் வரை காத்திருப்போம்.

mkr said...

கடைசியில் ஏமாந்தாச்சு.(நமக்கு இந்த மாதிரி அனுபவம் உண்டு)கொருக்கு பேட்டையிலாவது ஏதாவது நடந்துச்சா

dheva said...

Mohamed Faaique said...@ அடுத்த வாரமா...சும்மா ஒரு பீட்ல சொன்னதுப்பா தொடர் எல்லாம் இல்லை...ஹா..ஹா..ஹா...

வானம்பாடிகள் said...

ம்கும். மெட்ராஸ்ல கீரி பாம்பு சண்டையும் இந்த உதார் சண்டையும் டச் பண்ணதா வரலாறே இல்லை. சென்னையில் வாய்சண்டை என்பது ஒரு கலை தெரியுமோ?:))

கே.ஆர்.பி.செந்தில் said...

அட....!

சிவராஜன் said...

En intha kola veri...

வெறும்பய said...

இதெல்லாம் சென்னையில சகஜமப்பா... இப்படி எவ்வளவு வாய் உதார் பார்த்து ஏமாந்திருப்போம்..

Jey said...

//.இந்த தடவயும் அடி விழலயே.....ம்ம்ம்ம்..எப்ப அடிச்சிக்குவய்ங்க....என் எதிர்பார்ப்பு இது..//

//.ஒரு வேளை இந்த போலிஸ்காரர் வரலேண்ணா என் எதிர்பார்ப்பு ஜெயித்திருக்குமோ...கடுப்பை கிக்கரை உதைத்து பைக்கை கிளப்புவதில் காட்டினேன்...///

பங்காளி நல்லா இருலே..., ஆனாலும் மெட்ராஸ் பாஸயை துபாய்லேர்ந்து பொளந்து கட்டிருக்குரே...சூப்பரு...

Jey said...

//Your comment will be visible after approval.//

இது ஒன்னுதான் நமக்கு பிடிக்காத ஒன்னு...., தெவை இல்லீன தூக்கி விட்டுரு பங்காளி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இது ஒன்னுதான் நமக்கு பிடிக்காத ஒன்னு...., தெவை இல்லீன தூக்கி விட்டுரு பங்காளி ///

எல்லாம் உங்களை மாதிரி அனானிகளுக்கு பயந்துதான் அப்பு...

சௌந்தர் said...

இங்க இந்த மாதிரி சண்டைகள் நிறைய நடக்கும் சரி அடுத்த வாரம் எங்க வீட்டு பக்கம் வாங்க ஹா ஹா

சுல்தான் said...

உம் பின்னாலயே இரண்டு பேர் இன்னாமா அடிச்சிகிட்டாங்க. அந்த பக்கம் திரும்பாம உல்டா சைடுல முழிச்சிட்டிருந்தது நீ தானா. நல்லா ஏமாந்திட்ட பா.

அஹமது இர்ஷாத் said...

வானம்பாடிகள் said...
சென்னையில் வாய்சண்டை என்பது ஒரு கலை தெரியுமோ?:))//

கண்டிப்பா.. தேவா சென்னையில் இதெல்லாம் ஜுஜுபி ..

Shameer said...

SUPERAA KEETHU...

Tamilulagam said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

அருண் பிரசாத் said...

ரூட்டுலாம் கரெக்ட்டா சொல்லுறீங்க, கண்டக்டரா இருந்தீங்களோ

அருண் பிரசாத் said...

தல, நீ வூட்டுக்கு போ, அங்க வேற 2 தயவலிங்க வரிஞ்சி கட்டிகினு நிக்குதுங்க. நான் இருந்து ரத்தத்தை பாத்துட்டு வந்துடறேன்.

விஜய் said...

அருமையா சொல்லி இருக்கீங்க அண்ணா,

கொஞ்சம் நேரம் மது கடைக்கு முன்னாடி நின்னா போதும் அண்ணா , இந்த மாதிரி நிறையா பார்க்கலாம் ,

குடிப்பதற்கு ஒவ்வொருத்தருக்கும் ஒரு காரணம் வைச்சு இருக்கிறாங்க, பள்ளி படிக்கிற பையனுக்கு ,ஆசிரியர் அடிக்றாங்க, கல்லூரி படிகிற பையனுக்கு, காதலி கூட சண்டைன்னு, குடும்பஸ்தனுக்கு கடன் தொல்லை அப்டின்னு, வயசானவங்களுக்கு தன் பிள்ளைகள் மரியாதை கொடுக்கல அப்டின்னு ...

TERROR-PANDIYAN(VAS) said...

தேவா... வாழ்த்துகள்.... உங்களுக்கு இல்ல எனக்கு. முதல் முறை உங்க பதிவு எனக்கு புரிஞ்சி இருக்கு.... என்னா ஒரு எழுத்து நடை. என்ன ஒரு தமிழ்.. அருமை அருமை...இலக்கணம் மிகுந்த சண்டை காட்சி..

Chitra said...

ஒரு பக்கம் போலிஸ்காரர்களை பற்றி நினைத்தாலும் பாவமாய்தான் இருந்தது... நல்ல வெயிலில் ரோட்டின் நடுவே நின்று போக்குவரத்தை கவனிப்பதிலும், மனிதர்களின் அத்துமீறல்களைச் சமாளிப்பதில் இருந்து....எல்லா கொலை, கொள்ளை, குண்டு வெடிப்பு, வன்முறை என்று எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டு மனிதர்களின் அமைதியான வாழ்க்கைக்கு பொறுப்பேற்று 24 மணி நேரமும் உழைத்து அரசியல்வாதிகளால் பந்தாடப்படும் ஒரு ஜாதி....ம்ம்ம்ம் என்ன செய்வது....?


......கடமையை செய்ய விடாமல், மத்த எல்லாத்தையும் செய்ய வேண்டும் என்ற நிலை..... ம்ம்ம்ம்.....

மறத்தமிழன் said...

தேவா,

சும்மா உதார் விடுரவங்க நிறையபேர் சென்னையிலுண்டு.

காளையார்கோயில் பக்கம் இருந்து வந்த நீங்க இதுக்கெல்லாம்

டர் ஆகலாமா?

அப்புறம்..நீங்க பைக்ல வரும்போது பழவந்தாங்கல் வந்திருக்காதே...

பல்லாவரம்,திரிசூலம்,மீனம்பாக்கம்,கத்திப்பாரா,கிண்டி வழியெ வந்திருப்பிங்க..

ஏன்னா நேட்டிவிட்டி முக்கியம்ல‌...ரைட்டா...


அன்புடன்,
மறத்தமிழன்.