Pages

Saturday, August 28, 2010

நேசிப்பு...!காதல் என்ற வார்த்தை சரியானதுதான் என்றாலும் அதை கடைசிவரை நான் உபோயோகிக்கப் போவதில்லை. ஏனென்றால் அந்த வார்த்தையோடு தொடர்பு பட்டு ஏகப்பட்ட அத்து மீறல்களும் அசிங்கங்களும் நடந்தேறியாகி விட்டது நமது சமுதாயத்தில். காதல் என்ற வார்த்தைக்கு பின்னால் கிளைத்து வரும் காமம் என்ற வார்த்தையும் அதிலிருந்து தோன்றும் ஓராயிரம் எண்ணங்களையும் மட்டறுக்கவே நான் உபோயோகம் கொள்ளப் போகும் வார்த்தை

" நேசித்தல் "

கருங்கல் போன்ற திடமான நேசிப்பு, மலரின் மென்மை போன்ற நேசிப்பு, காற்றில் பரவும் சுகந்தம் போன்ற நேசிப்பு, சப்தமின்றி வார்த்தையின்றி மெளனத்தில் கரைந்த நேசிப்பு என்று பல தரமாய் இருந்தாலும் பெரும்பாலும் என்ன நிகழ்கிறது? எதிர்பார்த்தலில் நேசிப்பவரின் உணர்வுகளை கொன்று விட்டுதான் தொடங்குகிறது நேசிப்புகள் என்று நாம் உபோயோகம் கொள்ளும் பதம்.

தாய், தந்தை, மகன், மகள், மனைவி, நண்பன், கடவுள், எல்லாம் நேசிப்பிலும் எதிர்பார்ப்புகள் டன் டன்னாக இருப்பது மறுப்பதற்கில்லை. எதிர்ப்பார்ப்பு மனித இயற்கை ஆனால் நமது நேசிப்புகள் நேசிப்பவரை காயப்படுத்துமெனில் அது எப்படி நேசிப்பாகும்...?

இரயில் பயணம் போலதான் மொத்த வாழ்க்கை. நளை இப்பயணத்தை விட்டு விட்டு செல்ல வேண்டும் என்ற மனோ நிலையில்தான் வாழ்க்கை செல்ல வேண்டும். தனியாய்தான் வந்தோம், தனியாய்தான் செல்வோம் ஆட்டமும் கூட்டமும் பாட்டமும் இடையில் வந்தது....இங்கே சந்தோஷித்து இருக்கும் கணங்களையும் துக்ககரமான கணங்களையும் பார்த்துக் கொண்டு எல்லாவற்றையும் கடந்து சென்று எதிலும் எந்த அர்த்தமும் இல்லை என்று உணர்வது ஒரு வரப்பிரசாதம்.

ஒரு நாள் மழை பெய்கிறது ஒரு நாள் வெயிலடிக்கிறது ஏனென்று கேட்பதில்லை நாம்? இயல்புகள் நிகழ்ந்தேறியே ஆகும்....இன்று பெய்த மழைக்கும் நாளை பொய்க்கப்போகும் மழையும் எதையும் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது இல்லை. நாமும் பெரிதாய் அலட்டிக் கொள்வதில்லை.

மனிதர்கள் அத்தனை பேரும் ஒவ்வொரு மாதிரி..ஒவ்வொருவரின் இயல்பும் அவர் அவர் பெற்ற அனுபவத்தை வைத்து மாறித்தான் இருக்கும். இதில் யார் யாரை விமர்சனம் செய்வது? ஒருத்தனுக்கு காபி பிடிக்கும்...இன்னொருவனுக்கு டீ பிடிக்கும் மூன்றவனுக்கும் எதுவுமே பிடிக்காது...ஏன் இப்படி என்று கேட்பதின் பிண்ணணியில் கேட்பவனின் அறியாமைதான் குடியிருக்கும்.

தனிமனித தேவைகள் பிரபஞ்ச நியதிக்கும் ஒரு கூட்டமைப்பு வாழ்வுக்கும் ஊறு விளைவிக்குமெனில் அது தவறென்றும் அப்படி இல்லை என்றால் சரியென்றும் சொல்லிக் கொள்கிறோமே அன்றி உண்மையில் தவறென்றும் சரியென்றும் ஒன்றும் இல்லை. அப்படி என்றால் கொலை செய்வபவனை சரியானவன் என்று சொல்கிறீர்களா? என்று குரலை உயர்த்தி கேட்கிறீர்களா...இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும்....

"எது மிகையாகிறதோ...அது அதுவாகிறது"

என்ற விதிப்படி ஒருவன் செய்த கொலை மிகைப்பட்ட பேரால் ஒத்துக்கொள்ள கூடியதாய் இருந்தால் அது சரி....மிகைப்பட்ட பேர் எதிர்த்தால் இது தவறு. ஒரு ரவுடியை ,ஒரு துஷ்டனை தனியாளாக ஒருவன் கொன்றால் அது கொலை...ஆனால் காவல்துறை சுட்டால் எது என்கவுண்டர். நடந்த செயல் ஒன்றுதான் ஆனால் அதை பார்க்கும் மனோபாவமும் நம்மைச் சுற்றி ஏற்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளும் தான் சரி எது? தவறு எது? என்று நிர்ணயம் செய்கிறதே அன்றி சத்தியத்தில் சரி என்றும் தவறு என்றும் ஒன்றும் இல்லை.

இப்படியாக நகரும் வாழ்கையில் தான் நமக்குள்ளேயே சில நியாய தர்மங்களை வைத்துக் கொண்டு தீர்மானங்களிலேயே கொன்று விடுகிறோம் வாழ்கையின் சந்தோசங்களை. செல்லும் வரை செல்வோம்...உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா...ஓ...கிரேட்...சந்தோசமாயிருங்கள் என்று எந்த காதலன் காதலியாவது, நட்புகளாவது, உறவுகளாவது அல்லது கணவன் மனைவியாவது, இருக்கிறார்களா?.... இருக்கலாம்...100ல் 0.001% மட்டும். நியதிகள் எல்லாம் விதிவிலக்கு ஆகிப் போனதின் அபத்தத்தில் விதிவிலக்குகளே...இப்போதும் ஆளும் நியதியாய் மாறிப் போயிருக்கின்றன.

நீ ஏன் இப்படி இருக்கிறாய் என்று கேட்ட நண்பனிடம் நான் கேட்டேன்..... நான் எதற்கு வேறு ஒருவர் மாதிரி நடிக்கவேண்டும்? அல்லது உனக்கு பிடித்த மாதிரி இருக்கவேண்டும்? நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே இருந்து விட்டுப் போகிறேனே? யாரையும் நான் பின்பற்றுகிறேன் என்று யாரேனும் சொன்னால் அது பெரிய மோசடி....இன்னொருவர் போல இருக்கவேண்டும் என்ற முயற்சிகளில் மிகைப்பட்டு இருக்கப்போவது என்னவோ நடிப்பாகத்தான் இருக்கும். கற்றுக் கொள்ளும் கற்பிதங்ககளில் நமது செயல்கள் செம்மையாவதில் நாம் தான் வெளிப்படவேண்டும் ...இன்னொருவர் வெளிப்பட்டால் அது போலி,

சிக்கல்........என்னவென்றால் நமது விருப்பம் என்ன? பிரபஞ்ச விதி என்று சொல்லக்கூடைய (Universal Law) என்ன என்று தெரியாமல் மிகைப்பட்டவர்கள் குழம்பிப்போய் இருப்பதுதான்.

ஒரு செயலை நான் செய்தேன் என்பது பிரபஞ்ச விதி என்றால் நான் மட்டுமே செய்வேன் என்னால் மட்டுமே முடியும் என்பது பிரபஞ்ச விதிக்கு முரண்பட்டது. உன்னை நேசிக்கிறேன்....ஆனால் என்னை மட்டுமே நீ நேசிக்க வேண்டும் என்பது முரண்பாடு.

என்னை பொறுத்த மட்டில் என் நேசிப்பின் ஆழமும் அதன் அழகும் உண்மையானது எனும் பட்சத்தில் எதிராளியின் மனோ நிலை பற்றி நான் ஏன் ஆராயவேண்டும். எனக்கு நிலவை பிடிக்கும் என்ற என்னுடைய ரசனை எப்போது பிரச்சினையாகிறது என்றால் நிலவு என் வீட்டுக்குள் என்னிடம் மட்டுமே இருக்கவேண்டும் என்று எண்ணும் போது.

மாறிக் கொண்டே இருக்கும் வாழ்க்கைக்கு ஒரு வித அழுத்தம் கொடுத்து எல்லாவற்றையும் பார்க்கும் பொழுதுகளில் ஒருவித இறுக்கமும் மனிதர்களிடம் கோபமும் ஏற்பட்டு விடுகிறது. நேசித்தலுக்குள் எந்தவித திணிப்பையும் செலுத்தாமல்....தவறாய்படும் விசயங்களையும் அக்கறையோடு சொல்லிவிட்டு நான் சொன்னேன் நீ செய்யவில்லை என்றவட்டத்துக்குள்ளும் விழுந்து விடாமல்...சரியான அளவில் வெளிப்படும் ஒரு உணர்வே....எல்லோரையும் வசீகரிக்கும்...வெல்லும்...!

" என் நேசிப்புகளின்
ஆழத்தில்...பெரும்பாலும்
ஒன்றுமிருப்பதில்லை...
வெறுமனே வாங்கிக் கொள்வதிலும்
அப்படியே பிரதிபலிப்பதிலும்
முரண்களின் முடிச்சுகளின்றி....
காற்றில் பறக்கும் இறகு போல
இருக்கிறது என் நேசங்கள்....
என் மரித்தலை பகிங்கரப் படுத்தப் போகும்....
உலகிற்கோ எப்போதும் தெரியாது...
மரிக்காமல் ஜீவிக்கப்போகும்
என் பிரியங்களை பற்றி..! "


தேவா. SPhoto Courtesy: Ms. Ramya Pilai
Article & image copy right @ http://maruthupaandi.blogspot.com


36 comments:

சௌந்தர் said...

நீ ஏன் இப்படி இருக்கிறாய் என்று கேட்ட நண்பனிடம் நான் கேட்டேன்.////

உங்கள் நண்பனுக்கு நல்ல விளக்கம்...

வில்சன் said...

மனிதனில் மனிதம் இன்னும் தொக்கி நிற்ப்பதன் காரணமே இந்த நேசம் தான்.

சிவராஜன் said...

நட்பு , அன்பு , காதல் , பாசம் இவை எல்லாம் காதலின் வெவ்வேறு பரிமாணங்கள் , காதல் இல்லாத உலகில் மனிதர்களை பார்க்க முடியாது ,

நல்ல பதிவு அண்ணா , உண்மைய சொல்லணும் என்றாள் எனக்கு புரிஞ்சது ...

VELU.G said...

//உலகிற்கோ எப்போதும் தெரியாது...
மரிக்காமல் ஜீவிக்கப்போகும்
என் பிரியங்களை பற்றி..! "
//
கலக்கலான வரிகள் தேவா

நேசித்தலையும் நேசிக்கும் மனிதர் நீங்கள்

Jey said...

:)

dheva said...

பங்காளி ஜெய்....@ ஸ்மைலி எதுக்குன்னு எனக்கு தெரிஞ்சே ஆகணும்....????அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

Jey said...

//dheva said...
பங்காளி ஜெய்....@ ஸ்மைலி எதுக்குன்னு எனக்கு தெரிஞ்சே ஆகணும்....????அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!//

”இடுக்கன் வருங்கால் நகுக” கேள்வி பட்டிருக்கீங்களா?..

:)

அருண் பிரசாத் said...

நேசிக்கறது தப்பா? ரைட்டா? அதை சொல்லுங்க

dheva said...

பங்காளி ஜெய்....அருணு தம்பி ஏதோ கேக்குது கொஞ்சம் கவனிங்கப்பு....!

SASIKUMAR said...

sarkkarai katti

என்னது நானு யாரா? said...

///இங்கே சந்தோஷித்து இருக்கும் கணங்களையும் துக்ககரமான கணங்களையும் பார்த்துக் கொண்டு எல்லாவற்றையும் கடந்து சென்று எதிலும் எந்த அர்த்தமும் இல்லை என்று உணர்வது ஒரு வரப்பிரசாதம்.///

நண்பா! மனதை தொட்ட உண்மை வாக்கியங்கள்! வாழ்க நீ!!!

நம் பக்கம் வருக நண்பா!

என்னது நானு யாரா? said...

///நேசித்தலுக்குள் எந்தவித திணிப்பையும் செலுத்தாமல்....தவறாய்படும் விசயங்களையும் அக்கறையோடு சொல்லிவிட்டு நான் சொன்னேன் நீ செய்யவில்லை என்றவட்டத்துக்குள்ளும் விழுந்து விடாமல்..///

மிகவும் சரி Detached Attachment என்று இதை தான் ஆங்கிலத்தில் சொல்கிறார்கள் நண்பா!மூர்க தனமான ஆக்கிரமிப்புக்கள் உறவுகளை சிதைத்து விடுகின்றன.

Jey said...

//அருண் பிரசாத் said...
நேசிக்கறது தப்பா? ரைட்டா? அதை சொல்லுங்க//

அருண், இதுக்கு விளக்கம் வேணும்னா, ஃப்ளைட் பிடிச்சி சென்னை வா, பார்ல உக்காந்து டிஸ்கஸ் பன்னலாம், அப்ப விளக்கமா சொல்லுறேன். டீலா...நோ..டீலா...

தேவா பச்சை குழந்தை அவரை டிஸ்டர்ப் பண்ணாதே பாவம்.

சௌந்தர் said...

தேவா பச்சை குழந்தை அவரை டிஸ்டர்ப் பண்ணாதே பாவம்//

:)

ப.செல்வக்குமார் said...

//என்னை பொறுத்த மட்டில் என் நேசிப்பின் ஆழமும் அதன் அழகும் உண்மையானது எனும் பட்சத்தில் எதிராளியின் மனோ நிலை பற்றி நான் ஏன் ஆராயவேண்டும்.//

ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க அண்ணா ..
சொல்லப்போன உங்க படைப்புகளுக்கு எப்படி பின்னூட்டம் போடுறது அப்படின்னே தெரியல ... சத்தியமா உங்களுக்கு பின்னூட்டம் போடுறதுக்கே நான் இன்னும் நிறைய வளரணும்.

//சரியான அளவில் வெளிப்படும் ஒரு உணர்வே....எல்லோரையும் வசீகரிக்கும்...வெல்லும்...!//
வெல்லும் என்பதை விட எல்லோரையும் நம்மேல் ஒரு பிரியத்தைக் கொடுக்கும்.

இளந்தென்றல் said...

ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க அண்ணா ..
சொல்லப்போன உங்க படைப்புகளுக்கு எப்படி பின்னூட்டம் போடுறது அப்படின்னே தெரியல ... சத்தியமா உங்களுக்கு பின்னூட்டம் போடுறதுக்கே நான் இன்னும் நிறைய வளரணும்.
repeat

முஹம்மட் பஸ்ஹான் (கவிப்பிரியன்) said...

#நமது நேசிப்புகள் நேசிப்பவரை காயப்படுத்துமெனில் அது எப்படி நேசிப்பாகும்...?#
அருமையான வசனம்

நல்லாயிருக்கு :)

ஜெய்லானி said...

//ஏனென்றால் அந்த வார்த்தையோடு தொடர்பு பட்டு ஏகப்பட்ட அத்து மீறல்களும் அசிங்கங்களும் நடந்தேறியாகி விட்டது//


யாருகிட்ட வங்கி கட்டிகிட்டீங்க தேவா.. என்கிட்ட மட்டும் சொல்லுங்க நா.யார்கிட்டயும் சொல்லமாட்டேன் :-)))

ஜெய்லானி said...

//நேசிக்கறது தப்பா? ரைட்டா? அதை சொல்லுங்க //


தப்பே இல்லை அப்புறம் வாங்கி கட்டிகிட்ட பிறகு அழாம சிரிக்க கத்துக்கனும் இப்பிடி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வானம்பாடிகள் said...

a real beauty:) i liked it

Chitra said...

காதல் என்ற வார்த்தை சரியானதுதான் என்றாலும் அதை கடைசிவரை நான் உபோயோகிக்கப் போவதில்லை. ஏனென்றால் அந்த வார்த்தையோடு தொடர்பு பட்டு ஏகப்பட்ட அத்து மீறல்களும் அசிங்கங்களும் நடந்தேறியாகி விட்டது நமது சமுதாயத்தில். காதல் என்ற வார்த்தைக்கு பின்னால் கிளைத்து வரும் காமம் என்ற வார்த்தையும் அதிலிருந்து தோன்றும் ஓராயிரம் எண்ணங்களையும் மட்டறுக்கவே நான் உபோயோகம் கொள்ளப் போகும் வார்த்தை

" நேசித்தல் "


....... ஆஹா..... தேவா..... புது புது அர்த்தங்கள்...... ம்ம்ம்ம்..... கலக்குறீங்க.....

Chitra said...

என் மரித்தலை பகிங்கரப் படுத்தப் போகும்....
உலகிற்கோ எப்போதும் தெரியாது...
மரிக்காமல் ஜீவிக்கப்போகும்
என் பிரியங்களை பற்றி..! "


..... பின்னிட்டீங்க!

பத்மா said...

மரிக்காத ப்ரியம் ...
எவ்ளோ ஆசையா இருக்கு?

பிரியமுடன் ரமேஷ் said...

எதிர்பார்ப்பில்லாத நேசிப்பு என்பது நிச்சயம் இவ்வுலகில் இல்லை...ஒருவர் ஒன்சைடாக எத்தனை ஆண்டுகள் நேசித்துக் கொண்டிருப்பார்....

ஒரு ரவுடியை கொல்லும் விதம் குறித்து நீங்கள் தெரிவித்திருப்பது முற்றிலும் சரியே....உண்மையில் உடையைப் பொருத்தே...இங்கு எதுவும் தீர்மானிக்கப்படுகிறது.....சாதாரண உடையில் செய்தால் கொலை..அங்கீகரிக்கப்பட்ட உடை அணிந்து செய்தால்...தவறுக்கு தண்டனை......நீங்கள் சொல்வது நிச்சயம் சரியே..

நிலவு அனைவருக்கும் பொதுவானது...அதுபோல் நேசிப்பும் அனைவருக்கும் பொதுவானதே...நாம் மரித்தாலும் நம் பிரியங்கள் மரிப்பதில்லை..ஆனால் அதை உணர்வது ஒரு சிலர் மட்டுமே....நல்ல பதிவு....அருமை...

அமைதிச்சாரல் said...

//கற்றுக் கொள்ளும் கற்பிதங்ககளில் நமது செயல்கள் செம்மையாவதில் நாம் தான் வெளிப்படவேண்டும் ...இன்னொருவர் வெளிப்பட்டால் அது போலி,//

சரியா சொன்னீங்க...

பதிவுலகில் பாபு said...

///என்னை பொறுத்த மட்டில் என் நேசிப்பின் ஆழமும் அதன் அழகும் உண்மையானது எனும் பட்சத்தில் எதிராளியின் மனோ நிலை பற்றி நான் ஏன் ஆராயவேண்டும்.///

ஆழமான உண்மை.. நல்ல கருத்துக்களைக் கொண்ட பதிவு..

எஸ்.கே said...

தங்களின் இந்த பதிவை படித்தவுடன் என் மனம் மிகவும் கலங்கி விட்டது சார்.

பொதுவாக நான் நட்புகளை மிகவும் நேசிப்பவன். சிறு வயதில் இருந்தே நண்பர்களை சேர்க்க பிரியப்பட்டேன். என் கல்லூரி படிப்பு முடியும் எத்தனை நண்பர்கள் எனக்கு இருக்கிறார்கள் என நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் உண்மை எனக்கு பிறகுதான் புரிந்தது. நான் அவர்களிடம் கொண்ட நேசத்தை அவர்கள் என்னிடம் காட்டவில்லை. நான் அவர்களை நண்பனாக நினைத்தேன். அவர்கள் என்னை சாதாரணமாக நினைத்து விட்டார்கள் போல. இன்று எனக்கு ஒரு நட்பும் இல்லை. என் உடல்நிலை காரணமாக என்னால் அவர்களை தேட முடியவில்லை. ஆனால் நான் இருக்குமிடம் அவர்கள் அனைவருக்கும் தெரியும். இன்று வரை ஒருவரும் என்னை தேடி வரவில்லை.

என் மரித்தலை பகிங்கரப் படுத்தப் போகும்....
உலகிற்கோ எப்போதும் தெரியாது...
மரிக்காமல் ஜீவிக்கப்போகும்
என் பிரியங்களை பற்றி..!

இந்த வரிகள் எனக்கானவை போலவே தோன்றுகிறது.

வழிப்போக்கன் - யோகேஷ் said...

//
நான் எதற்கு வேறு ஒருவர் மாதிரி நடிக்கவேண்டும்? அல்லது உனக்கு பிடித்த மாதிரி இருக்கவேண்டும்
//
சரிதான்....
காதலும் நேசமும்... அருமை...

வெறும்பய said...

அண்ணா உங்க பதிவுகளுக்கு என்ன பின்னூட்டமிடுறதுன்னே தெரியல..

Mohamed Faaique said...

தாய், தந்தை, மகன், மகள், மனைவி, நண்பன், கடவுள், எல்லாம் நேசிப்பிலும் எதிர்பார்ப்புகள் டன் டன்னாக இருப்பது மறுப்பதற்கில்லை. எதிர்ப்பார்ப்பு மனித இயற்கை ஆனால் நமது நேசிப்புகள் நேசிப்பவரை காயப்படுத்துமெனில் அது எப்படி நேசிப்பாகும்...?
SUPERB...

விந்தைமனிதன் said...

எதிர்பார்ப்புக்களற்ற நேசிப்பைத்தான் ஓஷோ வலியுறுத்துகிறார்... ஆனால் நம்மைப்போன்ற சராசரி மனிதர்களுக்கு எந்த அளவு சாத்தியம் என்றுதான் புரியவில்லை

Mahi_Granny said...

வயசுக்குரிய அல்லது மீறிய பக்குவமா அசத்துறீங்க தேவா. அருமை . வாழ்த்துக்கள் இன்னும் இன்னும் உயர

சிறுகுடி ராமு said...

///எனக்கு நிலவை பிடிக்கும் என்ற என்னுடைய ரசனை எப்போது பிரச்சினையாகிறது என்றால் நிலவு என் வீட்டுக்குள் என்னிடம் மட்டுமே இருக்கவேண்டும் என்று எண்ணும் போது.///

ரொம்பச்சரியா சொன்ன மாப்பு.. அருமை.

ஜெயந்தி said...

அத்தனையும் அருமை. உண்மை.

விஜய் said...

அண்ணா, நேசித்தல பத்தி இதைவிட யாரும் அழகாய் சொல்லிட முடியாதுன்னு நினைகிறேன்,

//உன்னை நேசிக்கிறேன்....ஆனால் என்னை மட்டுமே நீ நேசிக்க வேண்டும் என்பது முரண்பாடு.//
இந்த முரண்பாட்டிலும் தனிமனித சுதந்திரம் இருப்பதாய் உணருகிறேன், இந்த தனிமனித சுதந்திரம் தனக்குள்ளே வைத்துகொள்வது சரியே எப்பொழுதெல்லாம் தன்னோடு மட்டும் சம்பந்த படுத்தியிருக்கும் பொழுது...இன்னொருத்தங்க கூட சம்பந்த பட்டு இருக்கும்பொழுது, அதன் வெளிப்பாடு முரண்பாடாகிறதா ?..


//இப்படியாக நகரும் வாழ்கையில் தான் நமக்குள்ளேயே சில நியாய தர்மங்களை வைத்துக் கொண்டு தீர்மானங்களிலேயே கொன்று விடுகிறோம் வாழ்கையின் சந்தோசங்களை. //

மிக சரியான உண்மை

Shankar M said...

நேசித்தல் என்ற வார்த்தைக்கு நீ கொடுத்த அர்த்தம் அருமை....//உன்னை நேசிக்கிறேன்....ஆனால் என்னை மட்டுமே நீ நேசிக்க வேண்டும் என்பது முரண்பாடு// உண்மை தான். இது நிலவு என்ற உதாரனத்திற்கு சரியாக அமையும்....ஆனால், இது காதலாகாது. நீ கூறியது போல், இது நேசித்தல் அல்லது அன்பு. முரண்கள் நிறைந்தது தான் காதல். இந்த ஒரு இடத்தை தவிர, நீ எழுதிய அனைத்து கருத்துக்களோடும் என் மனம் ஒன்றிவிட்டது...சந்தோஷத்தைப் பற்றி சொன்னது மிக அருமை தோழா...நான் ஏன் மாற வேண்டும் ? :)