Skip to main content

ஒலி....!





















விரிந்து பரந்து இருக்கும் வானம்.... நுரைத்து நுரைத்து அலைகள் வீசும் கடல்.....கண்ணுக்கெட்டிய தூரம் விரியும் நிலம்....ஒரு புள்ளியாய் நான்......! எல்லா பிரமாண்டத்தையும் எனைச் சுற்றி வைத்துக் கொண்டு துரும்பாய் நான் நீந்திக் கொண்டிருக்கிறேன். வாழ்வாற்றில் எட்டும் வரை எட்டி எதை எதையோ பேசி புலம்பி அடித்து செல்லும் கால வெள்ளத்தில் காட்சி மாற்றத்தில் நேற்று பேசியது இன்று மறைந்து இன்று பேசுவது நாளை மறைந்து ஒரு வித தாள கதியில் நடக்கிறது எல்லாம்.

எல்லாம் நிறுத்திப் பார்த்தாலும் ஏதோ ஒரு சப்தம்... நிசப்தத்திலும் கூட ஒரு வித சப்தம்....சப்தம் ஒலி. காற்று ஆக்ரோசமாக கடந்து செல்லும்போது ஒரு ஒலி ஊ....ஊ...ஊ என்று ...., மழை அடித்து பெய்யும்போது ஒரு ஒலி...., இதயம் துடிக்கும் ஓசை ஒரு ஒலி..., எங்கிருந்து பிறக்கிறது இந்த சப்தம்...?

மனித காதுகளுக்கு கேட்கும் ஒலியின் அளவு 20HZ க்கும் 20000 HZக்கும் இடையேதான். எல்லாம் புரிந்து விட்டது என்று கூறும் மனிதர்களால் மேலே சொன்ன அளவிற்கு அப்பால் உள்ள ஒலிகள் கேட்காது. நாம் உணர்ந்தவைக்கும் அப்பால் இந்த பிரபஞ்சமே இருக்கிறது...இந்த பிரபஞ்சத்தில்....20000 HZ க்கும் மேலும் 20க்கு கீழும் சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது....ஆனால்..... நம்மால் கேட்க முடியாது....

உணர முடியாதா ரகசியங்களுக்குள் ஒளிந்திருப்பது என்ன? விடை தெரியா வாழ்க்கையில் நித்தம் தேடல்தானா? உணராததாலேயே இல்லாமல் போய் விடுமா இந்த சப்தங்கள்.... நமக்கு தெரியாது ஆனால் இருக்கிறது. இப்படித்தான் வண்ணங்களும் ஏழு நிறங்களுக்கு அப்பாலும் கோடாணு கோடி நிறங்கள் பிரபஞ்சத்தில் இருக்கத்தான் செய்கின்றன.

தியாக பிரம்மம் தியாகராஜர் இயற்கையில் இயைந்த அனாகத நாதத்திலிருந்து மனிதர்கள் அறிந்திறாத அபூர்வ ராகங்கள் படைத்தது நாம் அறிந்ததே....! படைப்பாளிகளின் மூளை எப்போதும் இன்னோவேசன் எனப்படும் புதிய விசயங்களை எடுக்கும் இடம் எது.....? அங்கிங்கெனாதபடி விரிந்திருக்கும் பிரம்மத்திலிருந்துதானே.....?

வித விதமாய் சுருதி கூடி, குறைந்து, தாளம் அடர்ந்து, தேய்ந்து, எது தான் சப்தத்தின் பிறப்பிடம்......? சலனமில்லா சூன்யம் தானே....? நிசப்ததிலிருந்து எத்தனை ஒலிகள்....
இன்னும் சொல்லப் போனால் ஒலியின் சீரமைக்கப்பட்ட வடிவம் இசை....இசையின் மூலம் ஒலி, ஒலியின் மூலம் சப்தம்....சப்தத்தின் மூலம் நாதம்...

மனித சமுதாயத்தோடு ஒன்றிணைந்தது ஒலி. போருக்கு செல்வதற்கு முன்னே உணர்ச்சியை தூண்டும் வகையில் வாசிக்கப்படும் வாத்தியங்கள், கோவில்களில் வாசிக்கவென்று தனி வாத்தியங்கள், மங்கல காரியங்களுக்கென்று தனி வாத்தியங்கள், அமங்கல காரியங்களுக்கென்று தனி வாத்தியங்கள், எத்தனையோ ராகங்கள் அதற்குள் ஒளிந்திருக்கும் ஸ்வரங்கள்.... ஏன் இவை எல்லாம்..... நம்மை சுற்றியிருக்கின்றன? யார் படைத்தது இவற்றை எல்லாம்....?படைத்தவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது இவை எல்லாம்....?

பள்ளிப்பருவத்தில் கேட்ட ஒரு இசையையும், பருவத்தில் காதலோடு கேட்ட ஒரு இசையையும், எப்போதோ விரக்தியில் கேட்ட ஒரு இசையையும் இப்போது கேட்டாலும் முன்பு கேட்ட அதே சூழ் நிலைக்கு கூட்டிச் செல்கிறதே அது எப்படி? இசையோடு சேர்ந்து சூழலையும் கிரகிக்கிறதா மூளை? அப்படி கிரகித்தால் மூளையின் எந்த பகுதியில் சேருகிறது இந்த சப்தத்தின் உயிர் நாடி?

ஒலி வடிங்களுக்கு என்ன அர்த்தம் என்று நம்மால் விவரிக்க முடியாது. ஒரு தாலாட்டில் உறக்கம் வருவதும், ஒரு ஒப்பாரியில் அழுகை வருவதும் சப்தங்கள் நமக்குள் ஏற்படுத்தும் மாற்றங்கள். நிசப்ததை கவனிக்கும் போது அஉம் என்ற ஒரு வித ஒலி இரைச்சலற்ற இரைச்சலாய் நமக்குள் பரவுவதை உணர முடியும்.

வலி என்றால் அதற்கு ஒரு ஒலி...சந்தோசத்திற்கு ஒரு ஒலி....ஆணவத்துக்கு ஒரு ஒலி, அமைதிக்கு ஒன்று, வன்முறைக்கு ஒன்று, நிறைவுக்கு ஒன்று என்று நம்மை சுற்றி வித விதமாய் பரவியிருக்கும் ஒலி பிறப்பது எங்கிருந்து... காற்றிலிருந்து...... காற்றின் அழுத்தங்கள் ஏறி இறங்க...சப்தம் பிறக்கிறது.

குரல்வளையில் கொடுக்கும் அழுத்தம் ஏற்றம் இறக்கம் சுவாசத்தின் நீளம் குரல்வளையின் தடிமன் எல்லாம் கூடி ஒரு குரலை நிர்ணயிக்கின்றன...இந்த குரலில் இருந்து தான் எத்தனை விதமான சப்தங்கள்...மிருகங்கள் கூட ஒவ்வொரு உணர்விற்கும் ஒவ்வொரு சப்தம் எழுப்புகின்றன என்பது நம் அனைவருக்குமே தெரியும்.

பல தரப்பட்ட ஒலிகள், இசையென்றும், பேச்சென்றும், இரைச்சாலாய் நம்மைச் சுற்றி பின்ணிப் பிணைந்து இருந்தாலும் சில ஒலிக்கள் நல்ல அதிர்வுகளை நமக்குள் ஏற்படுத்துவது என்னவோ மறுக்க முடியாத உண்மைதான்.

நல்ல அதிர்வு என்றால் என்ன.....? " நிலவு தூங்கும் நேரம் இரவு தூங்கிடாதோ.....''இந்த பாடலில் வரிகள் தாண்டிய இசையில் மனம் வன்முறையா கொள்ளும்? அதே போல....தேவதை படத்தில் ஒரு பாடல் வரும்...வாரானே வாரானே வாட்டமுள்ள அரக்கன்....பலர் குடலை உருவி மாலை போடும் " அப்படின்னு ஒரு பாட்டு வரும் அந்த பாடலில் வரிகள் பயமுறுத்துவதை விட இசைக்கருவிகள் மனதுக்குள் பரவி அந்த ஒலி உள்ளே ஒரு கலவரத்தை உருவாக்கும்....

இதே மெத்தட்தான் கோவில்களில் அடிக்கும் உருமி மேளம்....." கையிலே வீச்சருவா பள பளக்க....காலிலே வீரத்தண்டை பள பளக்க" இந்த பாட்டை கேட்கும்போது அதில் உபோயகப்படுத்தப்பட்டு இருக்கும்...இசைக்கருவிகளும் கலவரம் வர வைக்காது மாறாக வீரத்தை ஒரு வித தைரியத்தை தன்னம்பிக்கையை உருவாக்கும்....எல்லாம் சப்தம்...என்னும் இசையின் மூலம் நடக்கும் மாற்றங்கள்.

ஒலி...உள்ளே மாற்றத்தை உண்டு பண்ணுகிறது....ஒலி....அமைதியை கொடுக்கிறது ஒலி....கலவரத்தை உண்டு பண்ணுகிறது......ஒலி என்னும் மின்சாரம் நம்மை எப்படி எப்படியோ ஆட்டுவிக்கிறது. மின்சாரம் என்பது கூட ஒலியின் வடிவம் தான்.

எனக்குள் ஒரு கேள்வி எழுகிறது இப்பொது .....? மந்திரங்கள் என்று சொல்லப்படும் ஒலிகளுக்கு அர்த்தம் கேட்டு அர்த்தம் சொல்லிக் கொண்டு இருக்கின்றானே மனிதன்..... இவையெல்லாம் அர்த்தங்களின்றியே....ஒலியாய்...சப்தமாய்...மனிதனின் உணர்வோடு விளையாடி.....கோபமான மனோ நிலையை சாந்தப்படுத்தவும், தேவையான நேரத்தில் உக்கிரம் ஏற்படுத்தவும்....ஒரு வித ஒத்ததிர்வான ஒலியால் சுமுகமான சூழல் ஏற்படவும், தைரியத்தை கொடுக்கவும் ஒலிகளை கம்போஸ் செய்து மந்திரம் என்று சொல்லி விட்டு போய் விட்டார்களா....?

மனிதன் தன் மட்டுப்பட்ட அறிவால் அதை கற்பனைக் கடவுளர்களொடு சம்பந்தப்படுத்தி அதன் அர்த்தங்களை தேடிக் கொண்டு உணர மறந்து விட்டானா? எனக்கு தெரியவில்லை.....

இந்த ஸ்லோகத்தை சொல்லுப்பா சொல்லுப்பா....எல்லாம் சரியாகும் யாரோ யாருக்கோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்...கேட்பவனை, சொல்பவனை சரி செய்யப்போவது அவனுக்குள் ஏற்படப்போகும் ஒலியின் ஒத்ததிர்வா...இல்லை...ஒன்றும் இல்லையா?


கேள்வியை உங்களிடமே ஒப்படைக்கிறேன்...



தேவா. S

Comments

க ரா said…
இந்த ஸ்லோகத்தை சொல்லுப்பா சொல்லுப்பா....எல்லாம் சரியாகும் யாரோ யாருக்கோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்...கேட்பவனை சொல்பவனை சரி செய்யப்போவது அவனுக்குள் ஏற்படப்போகும் ஒலியின் ஒத்ததிர்வா...இல்லை...ஒன்றும் இல்லையா?
---
சரிதான் நீங்க சொல்றது.. அவர் அவர் உணரும் வரை எவர்க்கும் புரியாது இது.. நான் உணர்ந்து கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன்....
Chitra said…
ஒலி வடிங்களுக்கு என்ன அர்த்தம் என்று நம்மால் விவரிக்க முடியாது. ஒரு தாலாட்டில் உறக்கம் வருவதும், ஒரு ஒப்பாரியில் அழுகை வருவதும் சப்தங்கள் நமக்குள் ஏற்படுத்தும் மாற்றங்கள். நிசப்ததை கவனிக்கும் போது அஉம் என்ற ஒரு வித ஒலி இரைச்சலற்ற இரைச்சலாய் நமக்குள் பரவுவதை உணர முடியும்.

...... தேவா..... சின்ன சின்ன விஷயங்களையும் நீங்கள் ஆராய்ந்து சிந்திப்பதை பார்த்தால், உங்களுக்குள் இருக்கும் ஞானி வெளியே வர துடிப்பது தெரிகிறது.... தொடர்ந்து கலக்குங்க!!!
ஹேமா said…
சிலநேரங்களில் காது கேட்காமலிருந்துவிட்டால் நல்லது தேவா !
நல்ல ஒரு தீர்கமான சிந்தனைகள் தேவா! புது புது தளங்களில் உங்களின் ஆக்கபூர்வமான சிந்தனைகள், தேடுதல்கள் பயணிக்கின்றன.

மந்திரங்களை பற்றி நீங்கள் கூறுவது

// இவையெல்லாம் அர்த்தங்களின்றியே....ஒலியாய்...சப்தமாய்...மனிதனின் உணர்வோடு விளையாடி.....கோபமான மனோ நிலையை சாந்தப்படுத்தவும், தேவையான நேரத்தில் உக்கிரம் ஏற்படுத்தவும்....ஒரு வித ஒத்ததிர்வான ஒலியால் சுமுகமான சூழல் ஏற்படவும், தைரியத்தை கொடுக்கவும் ஒலிகளை கம்போஸ் செய்து மந்திரம் என்று சொல்லி விட்டு போய் விட்டார்களா....?//

அப்படி தான் இருக்கும் தேவா! உங்களின் சிந்தனைகள் வளரட்டும்! வாழ்த்துக்கள் நண்பா!!!
ஒலி.. காதுகளால் மட்டுமே உணரக்கூடிய ஒரு அதிர்வு..வாழ்ந்து பழகியவர்களுக்கு ஒல்யில்லாத ஒரு வாழ்க்கையை நிச்சயமாக கற்பனை கூட செய்து பார்க்க முடியாது..

சில சமயங்களில் ஒலி நம்மை அறியாமைலையே நம்மை ஆட்டி வைப்பதோடு மட்டுமல்லாமல் மாற்றியும் விடுகிறது..வலியுடன் இருக்கும் தருணங்களில் காதுகளில் நுழைந்து இதயம் கலந்து நம்மை வருடி செல்லும் போது உள்ளிருக்கும் வழிகளையும் அள்ளி சென்று விடுகிறது.. பெரும்பாலான ஒலிகள் நம் மனதுக்கு பிடித்து போய் ஒன்றிப் போய் விடுவதால் அவையும் இசையாகவே மாறி விடுகின்றன..

இசையாக வரும் ஒலிகள் கூட நமக்கு சில சமயங்களில் இம்சையாக தோன்றுவதுண்டு.. நமக்கு பிடித்த இசையும் ஒலியும் மற்றவருக்கு பிடிக்காமல் போகலாம்..
Mohamed Faaique said…
உங்க பதிவ அவசரமா வசிக்க முடியல...
மூன்று அல்லது நான்கு முறை வாசித்தால்தான் புரிகிறது..
நல்ல கருத்து செறிவாய் இருக்கிறது...
ம்ம் எத்தனை ஒலிகள் உலகத்துல

நம் கடவுளை துதித்துப் பாடும் பாராயணங்களும்,மந்திரங்களும் வேறு மதத்தவறுக்கு வெறும் சத்தம் தானே :)அவருக்கு எந்தவொரு உணர்வையோ,சக்தியையோ அது வரவழைக்கப் போவதில்லை

அப்ப ஒலி ஒலிக்கும் இடத்திற்கும்,கேட்கும் மனிதர்களுக்கும் ஏற்பதான் அதன் விளைவு ஏற்படுத்துன்னு சொல்லலாம் அல்லவா
Unknown said…
///ஒலி...உள்ளே மாற்றத்தை உண்டு பண்ணுகிறது....ஒலி....அமைதியை கொடுக்கிறது ஒலி....கலவரத்தை உண்டு பண்ணுகிறது......ஒலி என்னும் மின்சாரம் நம்மை எப்படி எப்படியோ ஆட்டுவிக்கிறது. மின்சாரம் என்பது கூட ஒலியின் வடிவம் தான்.///

என்னமா யோசிச்சு எழுதியிருக்கீங்க தேவா.. அருமையா இருக்கு பதிவு..
dheva said…
கடவுள் என்று கொண்டு வரப்பட்ட இடம் மனிதர்களை பயிற்றுவிக்க...எல்லா மதங்களிலிலும் இப்படி சப்தங்கள் இருக்கின்றன....சப்தங்கள் என்று சொல்லக்கூடிய மந்திரங்களில் எந்த வித மாறாக அதை உச்சரிப்பதில் இருந்து ஏற்படும் அதிர்வுகள் ஒரு வித ஒத்ததிர்வு ஏற்பட்டு.... நமக்குள் மாற்றங்களை ஏற்படுத்தும்....


பூம்...பூம்..பூம் என்று சொல்லுக்ங்கள்....ம் என்ற இடத்தில் அழுத்தம் கொடுத்து சொல்லும் போது அடிவயிறு அதிரும் அங்கே இருக்கும் செக்ஷுவல் க்ளாண்ட் அதிரும்....அதிலிருந்து பரவும் அலைகள் உடலில் ஒரு சமச்சீர் நிலையை கொண்டுவரும்...

உங்களுக்கு ஏற்கனவே சொல்லப்பட்ட...மந்திரங்கள் மதம் மூலமாக போதிக்கப்பட்டது....அது இல்லாமல்...வேறு ஏதேனும் வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்து உச்சரிக்கும் போது மனம் அமைதி அடைகிறதா...அதை பின்பற்றுங்கள்....



அம்மா...என்ற சொல் கூட நல்ல அதிர்வுகளை பரப்பும்......எது எப்படி இருந்தாலும் வாங்கும் பாத்திரம் சுத்தமாய் வாங்கிக் கொள்ள வேண்டும்...பயன்பாடு மனிதனின் கையில்தான்...

ஜில் தண்ணி.... உன்னை வரவேற்கிறேன் தம்பி... மிக்க மகிழ்ச்சியோடு...!
Ramesh said…
ஒலி குறித்து அதன் சக்தி குறித்து நானும் நிறைய யோசிச்சிருக்கேன் தேவா..கிட்டத்தட்ட நான் யோசிச்சதை நீங்க எழுத்தாக்கிட்டீங்க...எல்லையில்லா சக்தின்னு நாம சொல்லிக்கறது...நமக்குப் புரியாம இருக்கறது..நம்ம இறப்பு வரைக்கும் இனியும் நமக்கு புரியாதது இதுவாதான் இருக்கும்னு நினைக்கிறேன்...உண்மைல அமைதின்னு எதுவும் கிடையாது..நமக்கு கேட்காது அவ்லோதான் விசயம்...நல்ல பதிவு..
ரொம்ப அருமையான பதிவு. சிறந்த, தெளிவான கருத்துக்களை முன்வைத்துள்ளாய்! இதனைப்படிக்கும்போது ஒரு பெரிய ஞானியின் எழுத்துக்களைப்படிப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்படுகிறது.

ஒலிதான் பிரம்மம். ஒலியிலிருந்து பிறந்ததுதான் இந்தப்பிரபஞ்சம். ஒலியில்லையேல் ஒன்றுமே இல்லை.
உள்நோக்கி ரொம்ப ஆழமாகப்பயணித்துக்கொண்டிருக்கிறாய். வாழ்த்துக்களடா என்னருமை மாப்ஸ்.
Jey said…
தேவா... ஒலியின் புரிதல், தேடல் அருமை....
நம் எண்ணங்கள் கூட ஒரு குறிபிட்ட அலைவரிசையில் வெளிப்படுகிறது..., அந்த அலைவரிசையை... உணரமுடிந்தால் ... அதை கூட ஒலியாக கேட்காலாம்...,

அருமை...
VELU.G said…
//உணர்வோடு விளையாடி.....கோபமான மனோ நிலையை சாந்தப்படுத்தவும், தேவையான நேரத்தில் உக்கிரம் ஏற்படுத்தவும்....ஒரு வித ஒத்ததிர்வான ஒலியால் சுமுகமான சூழல் ஏற்படவும், தைரியத்தை கொடுக்கவும் ஒலிகளை கம்போஸ் செய்து மந்திரம் என்று சொல்லி விட்டு போய் விட்டார்களா....?
//

இருக்கலாம்
VELU.G said…
//மனிதன் தன் மட்டுப்பட்ட அறிவால் அதை கற்பனைக் கடவுளர்களொடு சம்பந்தப்படுத்தி அதன் அர்த்தங்களை தேடிக் கொண்டு உணர மறந்து விட்டானா? எனக்கு தெரியவில்லை.....
//

மட்டுப்பட்ட அறிவை வைத்துக்கொண்டு அதன் அர்த்தங்களை உணர முடியுமா என்ன?
//அப்படி கிரகித்தால் மூளையின் எந்த பகுதியில் சேருகிறது இந்த சப்தத்தின் உயிர் நாடி?//
எப்படி அண்ணா உங்களால மட்டும் இப்படிஎல்லாம் சிந்திக்க முடிகிறது..?
அந்த கேள்விக்கான பதில் என்னிடம் இல்லை .. ஆயினும் இந்த ஒலி தான் என் வாழ்வில் ஒளி ஏற்றப்போகிறது. அந்த நாளுக்காகவே காத்திருக்கிறேன். நான் RJ ஆகும் அந்த நாளுக்காக.
விஜய் said…
அண்ணா, நான் எப்பொழுது படிச்சாலும் உங்க பதிவோட கருத்தைவிட, உங்க எழுத்தோடு திறமைய பார்த்து தான் மிரண்டு போயிருக்கேன், உங்களோட எந்த பதிவ எடுத்துகிட்டாலும் ,அதுல எல்லோரும் புரிஞ்சுக்க தவறிய, மறந்த, புரிசுகமுடியாத ஒன்றை, அழகா வெளி கொண்டு வரீங்க,
நிஜமா இந்த திறமை தான் அண்ணா உங்க பதிவ ஆர்வத்தோட படிக்க , பயணிக்க வைக்குது.இப்போ நீங்க எழுதி இருக்குற பதிவு உண்மை வாழ்க்கையில் அனைவரும் கடந்துபோன ஒன்று தான், ஆனா கவனிக்க தவறியவை, ஆனா உங்க எழுத்து அந்த கவனிக்க தவிரியவையை அழகாய் அதற்கென ஒரு ஹீரோ வேஷம் கொடுத்து அழகு பார்க்குது அண்ணா ...
உங்க எழுத்துகள் எப்பவும் அருமை அண்ணா..
உன்னால மட்டும் எப்படிடா இப்படியெல்லாம் சிந்திக்க முடியுது? அதுவும் தினமும் புது புது சிந்தனைகள்! கலக்கு மாப்ஸ். அவ்வ்வ்வ்வ் . . .

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த