Skip to main content

சுவாசமே...காதலாக...! தொகுப்பு: 4






















வேறு ஏதாவது எழுதலாம் என்று நினைக்கிறேன்.. மீண்டும் மீண்டும் நீயே வந்து இடைமறித்து என் எழுத்துக்களை தகர்க்கிறாய்...! இது நேற்று உன்னிடம் சண்டையிட்டதின் நீட்சியா? இல்லை உன்னை மறக்க நினைக்கும் என்னின் தோல்வியா…? விடையறியாமல் விட்டத்தை நான் பார்த்துக் கொண்டிருந்த பொழுதில் சிம்மாசனமிட்டே என்னுள் அமர்ந்து விட்டாய்...!

உன்னை மறக்க விரும்புகிறேன் என்று உன்னிடம் சொல்லிய அந்த கணத்தில் நான் அப்படி சொல்ல விரும்பாமல் சொல்கிறேன் என்பதை என் கண்கள் உன்னிடம் காட்டியிருக்க வேண்டும்...! என்னை உற்று நோக்கி கண்ணீருடன் சேர்த்து காதலையும் வெளிப்படுத்திவிட்டு... நீ நகர்ந்து விட்டாய்...! உன்னை ஸ்தம்பிக்கச் செய்திருந்த காதல் இப்போது நீ இல்லாத வேளையில் உன் நினைவுகளை அள்ளிக் கொட்டி என்னை மிரட்டிக் கொண்டிருக்கிறது!

மீண்டும் கடைசியாய் உன்னை சந்தித்த அந்த கல்லூரி மாலையில்...உன் மீதான என் அக்கறை குறைவதை நீ வார்த்தை மத்தாப்புகளாய் மாற்றி கோப அக்னியாய் வெடித்து சிதறிய அந்த தருவித்தல்களில் உண்மையில்லை என்று நான் உரைத்து உரைத்து.... என் உரைத்தல் உன் செவி சேராமால் உறைந்து... விழிகளாலும் வார்தைகளாலும் நீ என்னை விளாசிய அந்த கணத்தில்....காதலின் இன்னுமொரு முகம் பார்த்து மிரண்டு போயிருந்தேன் நான்.......!

போராட்டத்தில் என் வார்த்தைகள் தோல்வி கண்டு புறமுதுகிட்டு எனக்குள் பாய்ந்து உன்னை சேமித்து வைத்திருந்த என் இதயத்தை குத்தி கிழித்து குதறியதில் மூர்ச்சையாதலின் அருகாமைக்கு சென்ற நான்......

உன்னை விட்டு விலகியிருக்க விரும்புகிறேன் என்ற ஒற்றை வார்த்தையில் உன் கண்களில் வழிந்த கண்ணீரில் என் காதலை கரைத்து விட்டு.... வீட்டுக்கு வந்தால் நீ விசுவரூபமெடுத்து நிற்கிறாய். நான் உன்னை மறக்க வேண்டும்...சந்தேகத்தில் உன்னிடம் இருந்து கிளைத்த வேர்களை வெட்டி வீழ்த்திய பின்னும் இன்னும் உன் மீதான கோபம் என்னோடு சினேகத்தில் இருந்தது....

காதல் என்பது ஒரு சத்திய பிரமாணம்...அதில்....சந்தோசக் குழந்தைகள் பிறக்க வேண்டும் சந்தேகக் குழந்தைகள் அல்ல...! காதல் என்பது எல்லா சமயத்திலும் நேசித்தல்... தனக்கு பாதகமான நேரத்தில் நிந்தித்தல்....அல்ல....! காதல் கண்ணீரை துடைப்பது அது கண்ணீரை வரவழைக்க அல்ல...! காதல் இல்லாத மனிதர் இல்லை... குழந்தையாய் இருக்கும் போது தாயிடமும், மணமுடித்த பின் கணவன் மனைவியிடமும்... புரிதலில் எல்லா உயிர்களிடத்தும் தோன்றும் ஒரு உணர்வு காதல்.....

பெரும்பாலும் ஒரு பெண்ணுக்கு ஆணையும், ஆணுக்கு பெண்ணையும் கொண்டு காதல் என்ற உணர்வு வருவது எளிது....இந்த எளிமையையில் சிக்கிய மனம் கொடுத்த விஸ்தாரிப்புதான் காதலனும் காதலிகளும், காதல்களும்...... தொடர்ச்சியாக வெறுமையில் இருந்து படையெடுத்து வந்த வார்த்தைகள் நெருப்பு பிழம்புகளை உமிழ்ந்து கொண்டிருந்தன....கூடவே மறக்க நினைத்த உன் நினைவுகள் என்னை சுற்றி நாட்டியம் ஆடிக்கொண்டிருந்தன...!

கனவுக்கும், எதார்த்தத்துக்கும் நடுவே நான் தடுமாறிக் கொண்டிருந்த போது.... இடையில் வந்த குறுஞ்செய்திக்காக........ அலைபேசி கெஞ்ச... கையிலெடுத்த அலைபேசியில் .....வரிவடிவில் நீ...காதலை.....பரவவிட்டிருந்தாய்....! வாசித்து முடித்தவுடன் உன் கோபத்தின் அறியாமையை உணர்த்தி விட்ட வெற்றிக் களிப்பில் இருந்த குறுஞ்செய்தியை ஒரு போல்டருக்குள் தள்ளிவிட்டு....மீண்டும் உன்னை நினைக்க மறுத்து நினைவலைகளை வேறு பக்கம் திருப்ப முயன்ற போது... பாவமாய் வந்து நீ கெஞ்சும் காட்சியில் என்னை பறி கொடுத்து விடுவேனோ என்று பயந்து....அந்த வெள்ளிக்கிழை இரவு பத்து மணிக்கு நான் மொட்டை மாடிக்கு போயிருக்க கூடாதுதான்...

எலி வாய்க்கு பயந்து புலி வாயில் சிக்கியவன் கதையாய்... அந்த நிலவற்ற இரவின் கருமையை கிழித்துக் கொண்டு நிசப்தத்தில் ஊற்றெடுத்து பொங்கிய உன்னோடான சந்தோச நாட்கள்.. எனக்கு சிரிப்பு வந்தது...என்னை நினைத்தே.....

உன்னை நினைக்ககூடாது என்ற எண்ணம் திண்ணமானதின் முதல் வினாடியில் இருந்து கடந்து சென்ற கடைசி வினாடி வரை இடைவிடாது வியாபித்து நின்ற உன் நினைவுகள் வென்று விட்டதாகத்தானே அர்த்தம்.....?

பிரியங்களின் பிறப்பிடம் ஒரு வேளை பிரிவாய்த்தான் இருக்குமோ...? ஊடலில் காதல் இருமடங்காகி விடுகிறதே... அது எப்படி? ஒரு வேளை பிடிக்கவில்லை என்றால் நெருங்கித்தான் பழக வேண்டுமோ? விட்டு விலகக் கூடாதோ?.... எண்ணங்கள் வேகமாக சென்று கொண்டிருந்த போதே.... உன்னை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் திங்கட்கிழமை நோக்கி முன்னேறியது புத்தி...

விடுமுறையான இரண்டு தினங்கள் இருண்ட தினங்கள் தான் ... கை கொட்டி சிரித்தது.. தூரத்தில் இருந்து ஒரு சிறு நட்சத்திரம்...மெல்ல வீசிய காற்று.. மீண்டும் என்னை கலைத்துப் போட... உன்னை காணும் அந்த திங்களில் என்ன செய்வாய்....? கண்ணீருடன்
.. சாரி என்பாயா? இல்லை கவனிக்காதது போல உன்கைகள் பற்றி...என் நேசித்தலை நான் சொல்வேனா? இப்போதே துடிக்கும் இதயம் அப்போது நின்று போய் விடுமோ? என்ற அச்சம் வேறு அறியாமையில் இருந்து கிளைத்தது....

யோசிக்காமல் அலைபேசியை கையிலெடுத்து.... குறுஞ்செய்தியை... டைப் பண்ண ஆரம்பித்தேன்...

"ஐ.. டூ.....லவ்.. யூ....டார்லிங்....!"

மெசேஜ் சென்ட்... என்ற வாக்கியத்தில் செத்துப் போயிருந்த நமது கோபம் பிறக்க வைத்திருந்தது....இன்னும் மிளிர்வான.. உன்னோடான காதலை....!


தேவா. S

Comments

Chitra said…
போராட்டத்தில் என் வார்த்தைகள் தோல்வி கண்டு புறமுதுகிட்டு எனக்குள் பாய்ந்து உன்னை சேமித்து வைத்திருந்த என் இதயத்தை குத்தி கிழித்து குதறியதில் மூர்ச்சையாதலின் அருகாமைக்கு சென்ற நான்......

....simply superb!!!! very nice.
///சந்தோசக் குழந்தைகள் பிறக்க வேண்டும் சந்தேகக் குழந்தைகள் அல்ல.../////

ரொம்ப சந்தேகப் படுகிறார்களோ
அது எப்படி? ஒரு வேளை பிடிக்கவில்லை என்றால் நெருங்கித்தான் பழக வேண்டுமோ? விட்டு விலகக் கூடாதோ?.... /////

ஓஹ அப்போ உங்களுக்கு பிடிக்க வில்லையா அது சரி
dheva said…
செளந்தர்...@ என்ன பண்ணலாம் இவனா? எக்கு தப்பாவே கேள்வி கேக்குறானே....ம்ம்ம்????
@தேவா
//என்ன பண்ணலாம் இவனா? எக்கு தப்பாவே கேள்வி கேக்குறானே....ம்ம்ம்????//

மாப்பு எக்குக்கும் தப்புக்கும் என்ன சம்பந்தம்??
@தேவா
//விடையறியாமல் விட்டத்தை நான் பார்த்துக்//

என் அங்க விடை எழுதி இருக்கா என்ன?
//மறக்க நினைத்த உன் நினைவுகள்//

தப்பு உங்க மேலதான் மாப்ஸ். நீங்க மறக்க முயற்சி செய்து இருக்கனும். அத விட்டு மறக்க நினைத்து இருந்தா எப்படி மறக்க முடியும்.
dheva said…
டெரர்.. இல்லை மாப்ஸ் விட்டத்துல இரு பல்லி இருந்துச்சு அது மேல விழுந்துடுமோன்னு பயந்து பார்த்தென்ன்ன்?
dheva said…
டெரர்.. @ எக்குதப்புன்ன என்னானு.. செளந்தர் கிட்டயே கேளு பயபுள்ள காலையிலயே கொல வெறியோட அலையுது!
dheva said…
டெரர்.. @ மறக்க முடியாதுல மாப்ஸ்...... எப்படி மறக்கறது...அப்போ அப்போ வந்து போறத எப்படி மறக்கறது.. ( ஹயா டெரருகு புரியல)
//போராட்டத்தில் என் வார்த்தைகள் தோல்வி கண்டு புறமுதுகிட்டு எனக்குள் பாய்ந்து உன்னை சேமித்து வைத்திருந்த என் இதயத்தை குத்தி கிழித்து குதறியதில் மூர்ச்சையாதலின் அருகாமைக்கு சென்ற நான்....//

தேவா! அருமையான வரிகள். நல்லா இருக்கு!
@தேவா
//டெரர்.. @ மறக்க முடியாதுல மாப்ஸ்...... எப்படி மறக்கறது...அப்போ அப்போ வந்து போறத எப்படி மறக்கறது.. ( ஹயா டெரருகு புரியல)//

அடுத்த முறை நீ மறக்காம மறக்க முயற்சி பண்ணு மாப்ஸ் கண்டிப்பா மறந்துடலாம். அத விட்டு மறக்க நினைத்து மறக்க முயற்சி பண்ணா நீ மறக்க நினைக்கிற காரியத்த மறந்துடு.

இதைதான் ஒரு சித்தர்

மறப்பார் மறப்பர் நினைவிலும்
நினைப்பார் நினைப்பர் மறந்தலிலும்
மறக்க முடியாமல் நினைப்பார் காதலில் தவிப்பவர்
தவிர்க்க முடியாமல் மறப்பர் புது பிகர் கிடைத்தவர்

அப்படினு சொல்லி இருக்காரு...
விடுமுறையான இரண்டு தினங்கள் இருண்ட தினங்கள் தான் ... கை கொட்டி சிரித்தது.. தூரத்தில் இருந்து ஒரு சிறு நட்சத்திரம்...//

காதல் ஒரே விதமான வலிகளை தான் தருகிறது
Anonymous said…
மிக அருமையான பதிவு அண்ணா!
ஒரே பீலிங்க்ஸ் :)
வினோ said…
நண்பரே, அருமையான பதிவு...
காதல் செய்... சாகும் வரை காதல் செய்... காதலித்தே சாகு!
அருமையான பதிவு நண்பரே...
Unknown said…
ஐ டூ லவ் திஸ் போஸ்ட் ....
காதல் பேய் உங்களை நல்லாத்தான் பிடிச்சிருக்கு.. !!
விடுங்க வீட்டுல அண்ணி கிட்ட சொல்லி ஓட்ட சொல்லிடுவோம் ..
தலைப்பும் பதிவுகளும் அருமை.
//மெசேஜ் சென்ட்... என்ற வாக்கியத்தில் செத்துப் போயிருந்த நமது கோபம் பிறக்க வைத்திருந்தது....இன்னும் மிளிர்வான.. உன்னோடான காதலை....!///

ஹ்ம்ம்.. அட அட அட.. என்னங்க இது? சூப்பர்....
கலக்கலா இருக்கு.. :-)

சில பல கொஸ்டின்ஸ்....
அப்படி என்ன சண்ட போட்டீங்க..?
நீங்க அவ்ளோ சொல்லியும் சமாதானம் பண்ண முடியலயாங்க...?
ச... சனி , ஞாயிறு வேற வந்து சொதப்பிருச்சே....??
சரி...இனி மொட்ட மாடி போக முதல் தின்க் பண்ணிட்டு போங்க தேவா..!
க ரா said…
இது நேற்று உன்னிடம் சண்டையிட்டதின் நீட்சியா?
---
உண்மைய பேசுங்கண்ணே.. நீங்கலாது சண்டைலாம் போடறராது...
ஊடல் இல்லாத காதல் எது தேவா
vinthaimanithan said…
ரசித்தேன்!
வாவ்... என்ன சொல்றதுன்னு தெரியல... படிச்சுட்டு இருக்கறப்ப ச்சே அதுக்குள்ள பதிவு முடிஞ்சு போச்சேன்னு வருத்தமா இருந்தது..

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...