Skip to main content

விவரிப்பு...!






















விவரித்தல்களில் தோற்றுப்போன
வார்த்தைகளின் தற்கொலைகளில்
பூக்கும் மெளனங்களின் எச்சத்தில்
விளையும் சொல்ல முடியா
உணர்வுகளின் பிளம்புகளில்
பற்றும் தீயின் பரவுதலில்
தகிக்கிறது என் உடம்பு...!

ஒரு நெரிசலில் இருந்து
விடுபட்ட புறப்பாடுகளில்
தேங்கிகிடக்கும் அனுபவங்கள்
கொடுக்கும் விஸ்தாரிப்புகள்
மீண்டும் மீண்டும் என்னை
கீழே இழுக்கும் முயற்சிகளுடனான
போராட்டங்களுக்கு நடுவே
பூக்கும் கனவுகளின் நிஜத்தில்
முளைக்கும் சிறகுகள்..
தூக்கிச் செல்கின்றன...
எட்டப்படாத உயரங்களுக்கு!

எங்கிருந்தோ வேகமாய்
வந்த ஒரு காற்று...
வேகவேகமாய் கலைத்துப்போடும்
மணல்கள் வரையும் ஓவியங்கள்
விதவிதாமாய் கலைதலில்
மறைந்திருக்கு காற்றின்
சந்தோசமும்....ஓவியங்களின் உயிர்ப்பும்
மறக்காமல் கொடுக்கும் உணர்வுகளில்
பற்ற ஏதுமில்லா கொடிபோல
பரவிக் கிடக்கும் எண்ணங்களில்
ஒளிந்து கிடக்கிறது தோற்றுப்போன
ஓராயிரம் விவரித்தல்கள்...!



தேவா. S

Comments

தேவா அண்ணன் ஏதோ பதிவு போட்டிருகீங்கன்னு சொன்னீங்க எங்க ஒன்னுமே புரியல?இதுக்கு தான் தமிழ் ல பதிவ போடுங்கன்னு சொன்ன கேக்றீங்களா?
//ஓராயிரம் விவரித்தல்கள்//
எங்க விவரிச்சிருகீங்க ஒண்ணுமே சொல்லல ?
Chitra said…
விவரித்தல்களில் தோற்றுப்போன
வார்த்தைகளின் தற்கொலைகளில்
பூக்கும் மெளனங்களின் எச்சத்தில்
விளையும் சொல்ல முடியா
உணர்வுகளின் பிளம்புகளில்
பற்றும் தீயின் பரவுதலில்
தகிக்கிறது என் உடம்பு...!


............கவிதை சரளமாக வந்து வார்த்தைகள் அருவியாக கொட்டி இருக்கிறது.... சூப்பர்!
சுத்தம்!



நேத்து கும்முனதுக்கு பழி வாங்கிட்டீங்க. நானும் எப்படியாவது புரிஞ்சிக்கனும் 5 முறை படிச்சிட்டேன், புரியுது ஆனா புரியல
படம் எல்லாம் எங்கேயிருந்து புடிக்கிறீங்க நண்பரே - கவிதையும் அதற்கேற்ற படமும் நன்று. வாழ்த்துக்கள்.
dheva said…
இம்சை..@ ஹா..ஹா..ஹா.. மாட்டுனியா.. அங்கேயே கட... சுத்தி சுத்திவா.. கவிதைய.. .படி.. முடிச்சிட்டு படி.. மறுபடியும் படி.. நான் கேள்வி பதில் கேட்பேன்.. கடைசியா.. புரியாம புரிஞ்சமாதிரி நடிச்சே.. மகனே கொன்னே புடுவேன்..!
என்ன சொல்வது. ரெம்ப நல்லாயிருக்கு என்பதை தவிர. வார்த்தைகள் நன்றாக சலிப்பு தட்டாமல் அழகாக வருகிறது உங்களுக்கு.
dheva said…
சித்ரா.. @ நன்றிங்க..!
சார் சீரியஸ் ஆக கவிதை எழுதி இருக்கார் , என்ன பண்ணலாம் இம்சை அரசன் , அருண் பிரசாத் , சார விட்ருவமா? இல்லை போட்டு தள்ளிருவமா ? டீலா நோ டீலா ?
thiyaa said…
அருமையான பகிர்வு
dheva said…
சித்ரா.. @ நன்றிங்க..!
dheva said…
அருணு...@ தில்லு இருந்தா படிச்சுட்டு மீனிங்க் சொல்லு.. துணைக்கு என் மாப்ஸ் டெரரையும் கூப்பிட்டுக்க....

ஏண்டா கும்முறதுக்கு மட்டும் அலையுறீங்க.. இப்ப பேசு.. ஏய்.. இப்ப பேசு....

டெரரு.. எல்லாம் வரமாட்டான்..அவனுக்கு புத்தி சுவாதீனம் இல்லாம போச்சு...!
//பரவிக் கிடக்கும் எண்ணங்களில்
ஒளிந்து கிடக்கிறது தோற்றுப்போன
ஓராயிரம் விவரித்தல்கள்...!//

எண்ணங்களில் ஒளிந்தால் விவரங்களை யார் கண்டு பிடிப்பது. என் எண்ணம் என்றால் என்க்கு தெரியும், உங்கள் எண்ணம் எனக்கு எப்படி தெரியும்?
dheva said…
தமிழ் உதயம்..@ நன்றி சார்!
dheva said…
தியாவின் பேனா.. @ புரிதலுக்கு நன்றிங்க..!
dheva said…
வெங்கட் நாகராஜ்...@ கூகிள் ஆண்டவர் உதவிதான்...... நண்பரே... ! நன்றிகள்!
//விவரித்தல்களில் தோற்றுப்போன
வார்த்தைகளின் தற்கொலைகளில்
பூக்கும் மெளனங்களின் எச்சத்தில்
விளையும் சொல்ல முடியா
உணர்வுகளின் பிளம்புகளில்
பற்றும் தீயின் பரவுதலில்
தகிக்கிறது என் உடம்பு...!//

ஆபிஸ்ல தப்பு பண்ணிட்டு டேமேஜர் கேட்ட கேள்விக்கு விளக்கம் கொடுக்க முடியாம கேவலமா முழிச்சிட்டு... இப்படி ஒரு பில்டப்பு.....

(ங்கொய்யால யாருகிட்ட...)
Jey said…
தேவா, எங்கள யெல்லாம் பாத்தா பாவமா தெரியலையா???. மனசுல ஈரமே இல்லியா மக்கா?.
dheva said…
அருணு...@ சூரிய உதயத்தை பத்தி நான் விவரிச்ச உனக்கு புரியுமா? நான் சொல்றது நான் பாத்தது... உனக்கு புரியணும்னா நீதானே பாக்கணும்.. அதான் விவரித்தலில் ஒளிந்திருக்கும் கருத்து தோற்றுதானே போகும்...

GOOD .... come up with more.. quries...........thambi...!
தோற்றுப்போன
ஓராயிரம் விவரித்தல்கள்...////

என்ன அண்ணா சொல்றிங்க உங்களுக்கு எவ்வளவு விளக்கம் சொன்னாலும் புரியாது அப்படியா
dheva said…
ஜெய்.. @ பங்காளி.. நேத்து உன் இமெயில வேடிக்கை பாக்க வந்த என்னை அப்பாவின்னு பாக்காம தம்பி அருணு, மாப்ஸ் டெரரு, பருப்பு மோகன், பன்னிக்குட்டி ராம சாமின்னு எல்லாம் கும்மிட்டாய்ங்க...

அதுக்கு பதிலடிதான்.. நீ கவலப்படாத பங்காளி உங்கு தெளிவுரை மெயில் பண்றேன்...!
@அருண்
//எண்ணங்களில் ஒளிந்தால் விவரங்களை யார் கண்டு பிடிப்பது. என் எண்ணம் என்றால் என்க்கு தெரியும், உங்கள் எண்ணம் எனக்கு எப்படி தெரியும்?//

அப்படி இல்லை மச்சி... விவரிக்க முடியாமல் தோத்து போனதால ஒளிஞ்சி இருக்காம்...

(ஆணி புடுங்கிட்டு மதியம் வந்தி நான் எழுதரேன் விளக்கவுரை...)
dheva said…
டெரரு...@ போ மாப்ஸ் போ.. கவிதைய விட்டு ஒரு அடி வெளில வரக்கூடாது....அதுக்கு மீனிங்க் சொல்லிட்டு அப்புறம் கும்மு...!
Jey said…
சரி விடுங்க, புரியலைனா, மட்டமா பாப்பீங்க எதுக்கு நானும் பாராட்டிட்டு போறேன்.

அன்பின் தேவா, கவிதை அருமை, ஒவ்வொருவரியும் தேர்ந்த சிற்பி சிற்பம் செதுக்குவதுபோல், அழகான, ஆழமான, பொருள் செறிந்த வார்த்தைகலை கொண்டு கவிதை வடித்துள்ளீர்கள்.
உங்களால் மட்டும் எப்படி இதுமாதிரியான எளிமையான கவிதைகள் வடிக்க முடிகிறது.

தொடரட்டும் உங்கள் சேவை.

ஆவலுடன் உங்கள் அடுத்த கவிதை பதிவை எதிர்பார்த்து
dheva said…
ஜெய்... @ பங்காளி...உடம்பு தேறிடுச்சுன்னு நினைக்கிறேன்.... உசாரா பேசுறீங்க!
dheva said…
டெரரு.. @ நீ ஆணி புடிங்கிட்டு.. வா.. !
dheva said…
செளந்தர்.. @ நல்லாருக்கு ராஜா உங்க நாடகம்!
எங்க மேக்ஸ் வாத்தியார்கிட்ட கூட கேட்டேன். புரியலைன்னு சொல்லிடாரு..
//விவரித்தல்களில் தோற்றுப்போன
வார்த்தைகளின் தற்கொலைகளில்
பூக்கும் மெளனங்களின் எச்சத்தில்
விளையும் சொல்ல முடியா
உணர்வுகளின் பிளம்புகளில்
பற்றும் தீயின் பரவுதலில்
தகிக்கிறது என் உடம்பு...!//

தோல்வி, விரக்தி பற்றி சொல்லி இருக்கீங்க

//ஒரு நெரிசலில் இருந்து
விடுபட்ட புறப்பாடுகளில்
தேங்கிகிடக்கும் அனுபவங்கள்
கொடுக்கும் விஸ்தாரிப்புகள்
மீண்டும் மீண்டும் என்னை
கீழே இழுக்கும் முயற்சிகளுடனான
போராட்டங்களுக்கு நடுவே
பூக்கும் கனவுகளின் நிஜத்தில்
முளைக்கும் சிறகுகள்..
தூக்கிச் செல்கின்றன...
எட்டப்படாத உயரங்களுக்கு!//

உங்கள் முயற்சி, போராட்டங்கள் மூலம் உங்களை மீட்டு எடுத்ததை சொல்லுறீங்க

//எங்கிருந்தோ வேகமாய்
வந்த ஒரு காற்று...
வேகவேகமாய் கலைத்துப்போடும்
மணல்கள் வரையும் ஓவியங்கள்
விதவிதாமாய் கலைதலில்
மறைந்திருக்கு காற்றின்
சந்தோசமும்....ஓவியங்களின் உயிர்ப்பும்
மறக்காமல் கொடுக்கும் உணர்வுகளில்
பற்ற ஏதுமில்லா கொடிபோல
பரவிக் கிடக்கும் எண்ணங்களில்
ஒளிந்து கிடக்கிறது தோற்றுப்போன
ஓராயிரம் விவரித்தல்கள்...!//

ர்ுந்தாலும் அந்த தோல்விகள் உங்கள் எண்ணங்களில் இருக்கின்றன, அதனால் நீங்க வென்றீர்கள்

ஏதோ, என்னால அவ்வளவு தான் புரிஞ்சிக்க முடிஞ்சது.....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... 12 physics book ஐ கூட இத்தனை முறை படிச்சி இருக்க மாட்டேன். சாச்சுபுட்டீங்களே பாசூஊஊஊஊஊஊ
Arumaiyana varththai prayogam dheva.
kavithaiyil layiththeaan.
dheva said…
அருணு தம்பி.. இவ்ளோ தூரம் முயற்சி பண்ணியிருக்கு.. சரி நானே சொல்றேன்... நீ புரிஞ்சுகிட்டத கம்பேர் பண்ணி பாரு...!

சரி.. அருணு நீ சினிமா புதிர் வச்ச மாதிரி கும்மி அடிச்ச தம்பிங்க எல்லாம் புரிதலை சொல்லட்டும்...அப்புறம் நான் விடை சொல்றேன்.. அருணு சொல்லியிருக்கறது.. தப்பூபூபூ!அவ்வ்வ்வ்வ்!
கவிதை விளக்கம்:

#&*%^#$&* !^%$#&% (&^@#$ )&*&^*(&#
^@&#^*^ 9&^(^^
&^@$#%* (())@*&#*%
&&^@#&*^ *^(@&#( )&@*(#&(&^!^ ^(@^#(@^
@&*(#$^%@ ^@^#$*(^@ &*(^@( (^($#

இதுதான் விளக்கம், புரிஞ்சா எடுத்துக்கோங்க. புரியலைனா 10 முறை படிங்க.

ஆங், என் விளக்கத்தை விட்டு ஒரு அடி வெளிய வரக்கூடாது.
dheva said…
அருணு..@ ஒருத்தன் அவுட்டு..............கீழ்ப்பாக்கமா? ஆம்புலன்ஸ் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்........!
மச்சி, 33 த்டவ படிச்சிட்டேன், இதுக்கே நீ நாலு புல்லு வாங்கி கொடுக்கோனும், தக்காளி அடிச்சதெல்லாம் எறங்கிடிச்சி! சரி சரி, நான் அடுத்த ரவுண்ட வாங்கிட்டு வந்துட்டு மறுபடியும் படிக்க ஆரம்பிக்கிறேன். ங்கொய்யா இன்னிக்கு விடுறதில்ல!

முக்கிய அறிவிப்பு!
இதுல என்ன எழுதியிருக்குன்னு வெளக்கம் சொல்ற பயலுகளுக்கு ஒரு 'பெரிய' பரிசு காத்திருக்கு! (அப்படியாவது என்னன்னு பாப்போம்!)
Anonymous said…
நிஜவுலகில் தீர்க்கமுடியா பிரச்சனைகளை கனவுலகில் கொஞ்சம் இறக்கி வைத்ததுபோல் இருக்கு..
அருமை அண்ணா :)
dheva said…
சிரிப்பு போலிஸ்..@ மேத்ஸ் வாத்தியார்கிட்ட ஏன் போனே... டெரர்கிட்ட போய் கேளு அவன் சொல்லுவான் விளக்கத்த...!
dheva said…
பன்னிக்குட்டி..@ ஹா.. ஹா..ஹா.. இன்னும் நல்லா ஏத்திட்டு வா மச்சி... ! ஏம்பா பரிசு இருக்கம்பா...எல்லோரும் கேட்டுக்கோங்க..!
dheva said…
பாலாஜி சரவணா....@ அப்பாடா ஒரு ஆறுதல் பரிசு.. உன்னோட கமெண்ட்!
@ Balaji
ஏங்க? ஏங்க இப்படி? என்ன எழுதி இருக்கருனு தேவாக்கே புரியல... நீங்கவேற உசுப்பேத்திட்டு... சரி விளக்கம் சொல்லுங்க தேவா தெரிஞ்சுப்பார்
//Balaji saravana said...
நிஜவுலகில் தீர்க்கமுடியா பிரச்சனைகளை கனவுலகில் கொஞ்சம் இறக்கி வைத்ததுபோல் இருக்கு..
அருமை அண்ணா :) //


தக்காளி ஏதோ பெருசா கெடைக்கும்னு சும்மா சவுண்டு கொடுத்துப் பாக்குறியா? பிச்சிபுடுவேன் பிச்சி!
Anonymous said…
என்னது தேவா அண்ணனுக்கு நான் விளக்கம் சொல்லவா?
விளக்கத்துக்கே நான் எப்படிப்பா விளக்கம் கொடுக்கமுடியும்?
ரைட்டு, மீ எஸ்கேப்பு.. எப்பூடி? :)
Anonymous said…
@பன்னிகுட்டி ராமசாமி,
அண்ணே கூட்டத்துல கட்டுச் சோத்த அவுக்காதீங்க :)
நாம தனி உடன்பாடு வச்சுக்குவோம் ( 50 -50 )
என்ன ஓகே தான :)
//Balaji saravana said...
@பன்னிகுட்டி ராமசாமி,
அண்ணே கூட்டத்துல கட்டுச் சோத்த அவுக்காதீங்க :)
நாம தனி உடன்பாடு வச்சுக்குவோம் ( 50 -50 )
என்ன ஓகே தான :) //

அப்பிடிங்கறே? ரைட்டு வுடு, மேட்டர தனியா டீல் பண்ணிக்குவோம்! அப்புறம் வேற எவனாவது வெளக்கம் வெங்காயம்னு வந்தா விட்றாதே ஒரே அமுக்கா அமுக்கி வெய்யி, வந்து மஞ்ச தண்ணிய தெளிச்சி பலி கொடுத்துடுவோம்!
dheva said…
பன்னி, அருணு, டெரரு, இம்சை, செளந்தர், சிரிப்பு போலிசு,பாலாஜி சரவணா & பங்காளி ஜெய்....


எல்லொருக்கும் ஒண்ணு சொல்றேன்... உங்க ஆதங்கம் புரியுது.. இந்த கவிதையின் விளக்கம் நாளைக்கு தனி போஸ்ட்.. (போதுமாப்பா...எல்லாம் ஏன் கொல வெறியோடயே பாக்குறீங்க....அவ்வ்வ்வ்வ்வ்வ்)
@ பன்னி சார்,

என் சார்பாக என் சிஷ்யன் தேவா விரைவில் விளக்கம் தருவார். இந்த சின்ன விஷயத்துக்கெல்லாம் நான் வர முடியாது
தனி போஸ்டா

அய்யோ...
அய்யோ...
அய்யோ...

கொலை பண்ணுறாங்களே!
கொலை பண்ணுறாங்களே!!
//மீண்டும் மீண்டும் என்னை
கீழே இழுக்கும் முயற்சிகளுடனான
போராட்டங்களுக்கு நடுவே
பூக்கும் கனவுகளின் நிஜத்தில்
முளைக்கும் சிறகுகள்..
தூக்கிச் செல்கின்றன...
எட்டப்படாத உயரங்களுக்கு!//

கனவுக்கும், நடைமுறைக்கும் உள்ள இடைவெளியை அழகாக சொல்லியிருக்கீங்க தேவா! வரிகள் எவ்வளவோ முன்பை விட எளிமையா இருக்கு! பாராட்டுக்கள்!
யாரது டாக்டரா?

நீங்க பாதி மயக்கத்துல இருக்கீங்கனு நினைக்கறேன்... எளிமைனுலாம் எழுதறீங்க? முழுசா விளக்கம் கொடுங்க அப்பு! எல்லாத்துக்கும்
ஆனா மத்த பகுதிகள் புரிஞ்சிக்க கோனார் Guide தான் தேவைப் போல இருக்கு! :-))
//நீங்க பாதி மயக்கத்துல இருக்கீங்கனு நினைக்கறேன்... எளிமைனுலாம் எழுதறீங்க? முழுசா விளக்கம் கொடுங்க அப்பு! எல்லாத்துக்கும்//

அருண்! நீங்க என்னை கேட்கறதுக்கு முன்னாடியே நானே மத்த பகுதிகள் புரியலைன்னு தான் ஒத்துக்கிட்டேனே. மத்த பகுதிகளுக்கு கோனார் நோட்ஸை எங்கே போய் தேடணும்னு தெரியலையேப்பா!
/பிளம்புகளில்
பற்றும் தீயின் பரவுதலில்
தகிக்கிறது என் உடம்பு...!//

ஆக மொத்தம் உங்களுக்கு என்னதான் பிரச்சினை ..?
எனக்கு ஒண்ணும் பிரியலை .?!?
வினோ said…
/ எங்கிருந்தோ வேகமாய்
வந்த ஒரு காற்று...
வேகவேகமாய் கலைத்துப்போடும்
மணல்கள் வரையும் ஓவியங்கள்
விதவிதாமாய் கலைதலில்
மறைந்திருக்கு காற்றின்
சந்தோசமும்....ஓவியங்களின் உயிர்ப்பும்
மறக்காமல் கொடுக்கும் உணர்வுகளில்
பற்ற ஏதுமில்லா கொடிபோல
பரவிக் கிடக்கும் எண்ணங்களில்
ஒளிந்து கிடக்கிறது தோற்றுப்போன
ஓராயிரம் விவரித்தல்கள்...! /

தேவா கலக்கல்..

இப்படி தான் வருடும் காற்றுக்கு விவரிக்க முடியாமல் தேங்கி கிடக்கும் நினைவு துகள்களின் எடை கூடிப்போச்சு..
எங்கிருந்தோ வேகமாய்
வந்த ஒரு காற்று...
வேகவேகமாய் கலைத்துப்போடும்
மணல்கள் வரையும் ஓவியங்கள்
விதவிதாமாய் கலைதலில்
மறைந்திருக்கு காற்றின்
சந்தோசமும்...//

அட அற்புதம் தேவா..
வதனமே சந்திர பிம்பமோ..
நாதா நாதி...
லாலாக்கு டோல் டப்பிமா...
ஓமகசீயா...
உட்டாலான்கடி கிரி கிரி

இதுக்கெல்லாம் அர்த்தம் சொல்லுங்க. அப்புறமா தேவா அண்ணன் அவர் பதிவுக்கு விளக்கம் சொல்லுவாரு...
vasu balaji said…
நல்ல கவிதை தேவா. கொஞ்சம் பிழை பாருங்களேன். சாப்பாட்டு நடுவில கல் மாதிரி உறுத்துது. தப்பா எடுத்துக்காதீங்க ப்ளீஸ்.
mkr said…
தேவா சார் நானும் கவிதையை ஆக்கு வேற ஆணி வேற அலசனும் நினைக்கிறென்.முடியல எனக்கு நமக்கு கவிதை பற்றிய ஞானம் கொஞ்சம் கூட இல்லை.ஆனால் நம்ம ஆளு அசத்துறாருன்னு சந்தோசம்.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த