
விவரித்தல்களில் தோற்றுப்போன
வார்த்தைகளின் தற்கொலைகளில்
பூக்கும் மெளனங்களின் எச்சத்தில்
விளையும் சொல்ல முடியா
உணர்வுகளின் பிளம்புகளில்
பற்றும் தீயின் பரவுதலில்
தகிக்கிறது என் உடம்பு...!
ஒரு நெரிசலில் இருந்து
விடுபட்ட புறப்பாடுகளில்
தேங்கிகிடக்கும் அனுபவங்கள்
கொடுக்கும் விஸ்தாரிப்புகள்
மீண்டும் மீண்டும் என்னை
கீழே இழுக்கும் முயற்சிகளுடனான
போராட்டங்களுக்கு நடுவே
பூக்கும் கனவுகளின் நிஜத்தில்
முளைக்கும் சிறகுகள்..
தூக்கிச் செல்கின்றன...
எட்டப்படாத உயரங்களுக்கு!
எங்கிருந்தோ வேகமாய்
வந்த ஒரு காற்று...
வேகவேகமாய் கலைத்துப்போடும்
மணல்கள் வரையும் ஓவியங்கள்
விதவிதாமாய் கலைதலில்
மறைந்திருக்கு காற்றின்
சந்தோசமும்....ஓவியங்களின் உயிர்ப்பும்
மறக்காமல் கொடுக்கும் உணர்வுகளில்
பற்ற ஏதுமில்லா கொடிபோல
பரவிக் கிடக்கும் எண்ணங்களில்
ஒளிந்து கிடக்கிறது தோற்றுப்போன
ஓராயிரம் விவரித்தல்கள்...!
தேவா. S
Comments
எங்க விவரிச்சிருகீங்க ஒண்ணுமே சொல்லல ?
வார்த்தைகளின் தற்கொலைகளில்
பூக்கும் மெளனங்களின் எச்சத்தில்
விளையும் சொல்ல முடியா
உணர்வுகளின் பிளம்புகளில்
பற்றும் தீயின் பரவுதலில்
தகிக்கிறது என் உடம்பு...!
............கவிதை சரளமாக வந்து வார்த்தைகள் அருவியாக கொட்டி இருக்கிறது.... சூப்பர்!
நேத்து கும்முனதுக்கு பழி வாங்கிட்டீங்க. நானும் எப்படியாவது புரிஞ்சிக்கனும் 5 முறை படிச்சிட்டேன், புரியுது ஆனா புரியல
ஏண்டா கும்முறதுக்கு மட்டும் அலையுறீங்க.. இப்ப பேசு.. ஏய்.. இப்ப பேசு....
டெரரு.. எல்லாம் வரமாட்டான்..அவனுக்கு புத்தி சுவாதீனம் இல்லாம போச்சு...!
ஒளிந்து கிடக்கிறது தோற்றுப்போன
ஓராயிரம் விவரித்தல்கள்...!//
எண்ணங்களில் ஒளிந்தால் விவரங்களை யார் கண்டு பிடிப்பது. என் எண்ணம் என்றால் என்க்கு தெரியும், உங்கள் எண்ணம் எனக்கு எப்படி தெரியும்?
வார்த்தைகளின் தற்கொலைகளில்
பூக்கும் மெளனங்களின் எச்சத்தில்
விளையும் சொல்ல முடியா
உணர்வுகளின் பிளம்புகளில்
பற்றும் தீயின் பரவுதலில்
தகிக்கிறது என் உடம்பு...!//
ஆபிஸ்ல தப்பு பண்ணிட்டு டேமேஜர் கேட்ட கேள்விக்கு விளக்கம் கொடுக்க முடியாம கேவலமா முழிச்சிட்டு... இப்படி ஒரு பில்டப்பு.....
(ங்கொய்யால யாருகிட்ட...)
GOOD .... come up with more.. quries...........thambi...!
ஓராயிரம் விவரித்தல்கள்...////
என்ன அண்ணா சொல்றிங்க உங்களுக்கு எவ்வளவு விளக்கம் சொன்னாலும் புரியாது அப்படியா
அதுக்கு பதிலடிதான்.. நீ கவலப்படாத பங்காளி உங்கு தெளிவுரை மெயில் பண்றேன்...!
//எண்ணங்களில் ஒளிந்தால் விவரங்களை யார் கண்டு பிடிப்பது. என் எண்ணம் என்றால் என்க்கு தெரியும், உங்கள் எண்ணம் எனக்கு எப்படி தெரியும்?//
அப்படி இல்லை மச்சி... விவரிக்க முடியாமல் தோத்து போனதால ஒளிஞ்சி இருக்காம்...
(ஆணி புடுங்கிட்டு மதியம் வந்தி நான் எழுதரேன் விளக்கவுரை...)
அன்பின் தேவா, கவிதை அருமை, ஒவ்வொருவரியும் தேர்ந்த சிற்பி சிற்பம் செதுக்குவதுபோல், அழகான, ஆழமான, பொருள் செறிந்த வார்த்தைகலை கொண்டு கவிதை வடித்துள்ளீர்கள்.
உங்களால் மட்டும் எப்படி இதுமாதிரியான எளிமையான கவிதைகள் வடிக்க முடிகிறது.
தொடரட்டும் உங்கள் சேவை.
ஆவலுடன் உங்கள் அடுத்த கவிதை பதிவை எதிர்பார்த்து
வார்த்தைகளின் தற்கொலைகளில்
பூக்கும் மெளனங்களின் எச்சத்தில்
விளையும் சொல்ல முடியா
உணர்வுகளின் பிளம்புகளில்
பற்றும் தீயின் பரவுதலில்
தகிக்கிறது என் உடம்பு...!//
தோல்வி, விரக்தி பற்றி சொல்லி இருக்கீங்க
//ஒரு நெரிசலில் இருந்து
விடுபட்ட புறப்பாடுகளில்
தேங்கிகிடக்கும் அனுபவங்கள்
கொடுக்கும் விஸ்தாரிப்புகள்
மீண்டும் மீண்டும் என்னை
கீழே இழுக்கும் முயற்சிகளுடனான
போராட்டங்களுக்கு நடுவே
பூக்கும் கனவுகளின் நிஜத்தில்
முளைக்கும் சிறகுகள்..
தூக்கிச் செல்கின்றன...
எட்டப்படாத உயரங்களுக்கு!//
உங்கள் முயற்சி, போராட்டங்கள் மூலம் உங்களை மீட்டு எடுத்ததை சொல்லுறீங்க
//எங்கிருந்தோ வேகமாய்
வந்த ஒரு காற்று...
வேகவேகமாய் கலைத்துப்போடும்
மணல்கள் வரையும் ஓவியங்கள்
விதவிதாமாய் கலைதலில்
மறைந்திருக்கு காற்றின்
சந்தோசமும்....ஓவியங்களின் உயிர்ப்பும்
மறக்காமல் கொடுக்கும் உணர்வுகளில்
பற்ற ஏதுமில்லா கொடிபோல
பரவிக் கிடக்கும் எண்ணங்களில்
ஒளிந்து கிடக்கிறது தோற்றுப்போன
ஓராயிரம் விவரித்தல்கள்...!//
ர்ுந்தாலும் அந்த தோல்விகள் உங்கள் எண்ணங்களில் இருக்கின்றன, அதனால் நீங்க வென்றீர்கள்
ஏதோ, என்னால அவ்வளவு தான் புரிஞ்சிக்க முடிஞ்சது.....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... 12 physics book ஐ கூட இத்தனை முறை படிச்சி இருக்க மாட்டேன். சாச்சுபுட்டீங்களே பாசூஊஊஊஊஊஊ
kavithaiyil layiththeaan.
சரி.. அருணு நீ சினிமா புதிர் வச்ச மாதிரி கும்மி அடிச்ச தம்பிங்க எல்லாம் புரிதலை சொல்லட்டும்...அப்புறம் நான் விடை சொல்றேன்.. அருணு சொல்லியிருக்கறது.. தப்பூபூபூ!அவ்வ்வ்வ்வ்!
#&*%^#$&* !^%$#&% (&^@#$ )&*&^*(&#
^@&#^*^ 9&^(^^
&^@$#%* (())@*&#*%
&&^@#&*^ *^(@&#( )&@*(#&(&^!^ ^(@^#(@^
@&*(#$^%@ ^@^#$*(^@ &*(^@( (^($#
இதுதான் விளக்கம், புரிஞ்சா எடுத்துக்கோங்க. புரியலைனா 10 முறை படிங்க.
ஆங், என் விளக்கத்தை விட்டு ஒரு அடி வெளிய வரக்கூடாது.
முக்கிய அறிவிப்பு!
இதுல என்ன எழுதியிருக்குன்னு வெளக்கம் சொல்ற பயலுகளுக்கு ஒரு 'பெரிய' பரிசு காத்திருக்கு! (அப்படியாவது என்னன்னு பாப்போம்!)
அருமை அண்ணா :)
ஏங்க? ஏங்க இப்படி? என்ன எழுதி இருக்கருனு தேவாக்கே புரியல... நீங்கவேற உசுப்பேத்திட்டு... சரி விளக்கம் சொல்லுங்க தேவா தெரிஞ்சுப்பார்
நிஜவுலகில் தீர்க்கமுடியா பிரச்சனைகளை கனவுலகில் கொஞ்சம் இறக்கி வைத்ததுபோல் இருக்கு..
அருமை அண்ணா :) //
தக்காளி ஏதோ பெருசா கெடைக்கும்னு சும்மா சவுண்டு கொடுத்துப் பாக்குறியா? பிச்சிபுடுவேன் பிச்சி!
விளக்கத்துக்கே நான் எப்படிப்பா விளக்கம் கொடுக்கமுடியும்?
ரைட்டு, மீ எஸ்கேப்பு.. எப்பூடி? :)
அண்ணே கூட்டத்துல கட்டுச் சோத்த அவுக்காதீங்க :)
நாம தனி உடன்பாடு வச்சுக்குவோம் ( 50 -50 )
என்ன ஓகே தான :)
@பன்னிகுட்டி ராமசாமி,
அண்ணே கூட்டத்துல கட்டுச் சோத்த அவுக்காதீங்க :)
நாம தனி உடன்பாடு வச்சுக்குவோம் ( 50 -50 )
என்ன ஓகே தான :) //
அப்பிடிங்கறே? ரைட்டு வுடு, மேட்டர தனியா டீல் பண்ணிக்குவோம்! அப்புறம் வேற எவனாவது வெளக்கம் வெங்காயம்னு வந்தா விட்றாதே ஒரே அமுக்கா அமுக்கி வெய்யி, வந்து மஞ்ச தண்ணிய தெளிச்சி பலி கொடுத்துடுவோம்!
எல்லொருக்கும் ஒண்ணு சொல்றேன்... உங்க ஆதங்கம் புரியுது.. இந்த கவிதையின் விளக்கம் நாளைக்கு தனி போஸ்ட்.. (போதுமாப்பா...எல்லாம் ஏன் கொல வெறியோடயே பாக்குறீங்க....அவ்வ்வ்வ்வ்வ்வ்)
என் சார்பாக என் சிஷ்யன் தேவா விரைவில் விளக்கம் தருவார். இந்த சின்ன விஷயத்துக்கெல்லாம் நான் வர முடியாது
அய்யோ...
அய்யோ...
அய்யோ...
கொலை பண்ணுறாங்களே!
கொலை பண்ணுறாங்களே!!
கீழே இழுக்கும் முயற்சிகளுடனான
போராட்டங்களுக்கு நடுவே
பூக்கும் கனவுகளின் நிஜத்தில்
முளைக்கும் சிறகுகள்..
தூக்கிச் செல்கின்றன...
எட்டப்படாத உயரங்களுக்கு!//
கனவுக்கும், நடைமுறைக்கும் உள்ள இடைவெளியை அழகாக சொல்லியிருக்கீங்க தேவா! வரிகள் எவ்வளவோ முன்பை விட எளிமையா இருக்கு! பாராட்டுக்கள்!
நீங்க பாதி மயக்கத்துல இருக்கீங்கனு நினைக்கறேன்... எளிமைனுலாம் எழுதறீங்க? முழுசா விளக்கம் கொடுங்க அப்பு! எல்லாத்துக்கும்
அருண்! நீங்க என்னை கேட்கறதுக்கு முன்னாடியே நானே மத்த பகுதிகள் புரியலைன்னு தான் ஒத்துக்கிட்டேனே. மத்த பகுதிகளுக்கு கோனார் நோட்ஸை எங்கே போய் தேடணும்னு தெரியலையேப்பா!
பற்றும் தீயின் பரவுதலில்
தகிக்கிறது என் உடம்பு...!//
ஆக மொத்தம் உங்களுக்கு என்னதான் பிரச்சினை ..?
எனக்கு ஒண்ணும் பிரியலை .?!?
வந்த ஒரு காற்று...
வேகவேகமாய் கலைத்துப்போடும்
மணல்கள் வரையும் ஓவியங்கள்
விதவிதாமாய் கலைதலில்
மறைந்திருக்கு காற்றின்
சந்தோசமும்....ஓவியங்களின் உயிர்ப்பும்
மறக்காமல் கொடுக்கும் உணர்வுகளில்
பற்ற ஏதுமில்லா கொடிபோல
பரவிக் கிடக்கும் எண்ணங்களில்
ஒளிந்து கிடக்கிறது தோற்றுப்போன
ஓராயிரம் விவரித்தல்கள்...! /
தேவா கலக்கல்..
இப்படி தான் வருடும் காற்றுக்கு விவரிக்க முடியாமல் தேங்கி கிடக்கும் நினைவு துகள்களின் எடை கூடிப்போச்சு..
வந்த ஒரு காற்று...
வேகவேகமாய் கலைத்துப்போடும்
மணல்கள் வரையும் ஓவியங்கள்
விதவிதாமாய் கலைதலில்
மறைந்திருக்கு காற்றின்
சந்தோசமும்...//
அட அற்புதம் தேவா..
நாதா நாதி...
லாலாக்கு டோல் டப்பிமா...
ஓமகசீயா...
உட்டாலான்கடி கிரி கிரி
இதுக்கெல்லாம் அர்த்தம் சொல்லுங்க. அப்புறமா தேவா அண்ணன் அவர் பதிவுக்கு விளக்கம் சொல்லுவாரு...