
இட வலம்....மேல் கீழ்
கோணல் நேர்.. கிறுக்கல்
இஷ்டங்களின் படி...
விசிறியடிக்கும் தூரிகைகளின்
வீச்சில்...வந்து விழும்...
வகை வகையான...ஓவியங்களின்
கலைந்த காட்சிகள் எல்லாம்
எப்போதும் எள்ளி நகைக்கின்றன
ஒழுங்குகளின் இறுக்கதிலிருக்கும்
அறியாமை முடிச்சுகளை பார்த்து...!
கலைத்து போடலின் ...
உச்சத்தில்..வெளிப்பட்ட
என் ஒவியத்தின் அழகில்
வெட்கி ஓடுகிறது...அழுத்தமாய்
மனதில் இருந்த
கட்டுப்பாட்டு அழுக்குகள்...!
கலைந்து கிடக்கும்
ஓவியத்தின் தடங்களில்
உயிர்ப்பாய் நிறைந்திருக்கும்
வரைமுரையற்ற வர்ணங்களின்
கூடல்களின் நிறைவுகளில்
மெலிதாய் வெளிப்பட்டுக் கிடக்கிறது
ஒரு எல்லைகளற்ற....ஆனந்தம்!
கலைந்ததின் ஆட்சியில்
செத்துப் போன விதிமுறைகளை
புறம்தள்ளி நகர்ந்து விட்டு...
சலனமின்றி கடக்கிறேன்...
இரைச்சலின் எல்லைகளை
ஒழுங்கற்றதுகளின் சிறகுகளோடு...!...!
தேவா. S
Comments
அண்ணன் முந்திகிட்டார்!
ஒழுங்கற்றதன் அழகு... எப்போதும் அதன் மாய அழகின் ஈர்ப்பு..... சட்டங்களில் அடைபட்ட மனிதர்களுக்கு ஜீரணிக்கவும், கற்பனை செய்யவும் கடினம்தான்...
//சலனமின்றி கடக்கிறேன்...
இரைச்சலின் எல்லைகளை
ஒழுங்கற்றதுகளின் சிறகுகளோடு...!...! //
நடக்கவே திராணியற்றவர்களுக்கு சிறகு கிடைத்தால் எப்படி? தோள்களில் தினவும், மனங்களில் வலுவும் வேண்டும்...
வரிகளின் ஈர்ப்பில்.... தேன்குடத்து ஈயாக...!
இதுவே வேண்டும்.. வானில் சிறைகள் இல்ல பறக்க வேண்டும்..
//கோணல் நேர்.. கிறுக்கல்
இஷ்டங்களின் படி...// - ட்ராயிங் க்ளாஸ்
//வெட்கி ஓடுகிறது...அழுத்தமாய்
மனதில் இருந்த
கட்டுப்பாட்டு அழுக்குகள்...!//
அப்போ மனசை கழுவணும்னா ஓவியம் வரைஞ்சா போதும்ன்னு சொல்றீங்க?
//கலைந்ததின் ஆட்சியில்
செத்துப் போன விதிமுறைகளை//
ஹிஹிஹி 356வது பிரிவு இங்கயுமா பயன்படுது பங்காளி ?
இப்படிக்கு கவிதை புரியவில்லை என்றால் கும்முவோர்கள் சங்கம்
.
கவிதையில் வார்த்தைகள் மிக நேர்த்தியாய் வந்துவிழுகின்றன.. நல்ல கவிதை
பறக்கும் திசை தெரியாது
ஆயினும் பறக்கிறேன்
சிறகு விரித்தபடி..
நீளும் எல்லைகள் நினைக்காமல்...
//ஒழுங்குகளின் இறுக்கதிலிருக்கும்
அறியாமை முடிச்சுகளை பார்த்து...!//
யப்பா...
அறியாமை முடிச்சுகளை பார்த்து...!
...... கவிதை வரிகளில் ஆக்கிரமித்து கொண்டு இருக்கும் கருத்துக்கள், பிரமிக்க வைக்கின்றன. :-)
மாப்ஸ் மணி 2.45 AM..... எனக்கு தூக்கம் வரலை நீ வந்து கவிதை எழுது நான் விளக்கவுரை எழுதறேன்...
கலைத்து போடலின் ...
உச்சத்தில்..வெளிப்பட்ட
என் ஒவியத்தின் அழகில்
வெட்கி ஓடுகிறது...அழுத்தமாய்
மனதில் இருந்த
கட்டுப்பாட்டு அழுக்குகள்...!
அழகு..!
கலைந்ததின் ஆட்சியில்
செத்துப் போன விதிமுறைகளை
புறம்தள்ளி நகர்ந்து விட்டு...
சலனமின்றி கடக்கிறேன்...
இரைச்சலின் எல்லைகளை
ஒழுங்கற்றதுகளின் சிறகுகளோடு...!...!
சிறப்பு..!!
ஒழுக்கம் இறுக்கமில்லை ... bench mark தான் இறுக்கம் .
உச்சத்தில்..வெளிப்பட்ட
என் ஒவியத்தின் அழகில்
வெட்கி ஓடுகிறது...அழுத்தமாய்
மனதில் இருந்த
கட்டுப்பாட்டு அழுக்குகள்...! /////
கட்டுப்பாட்டு அழுக்குகள் கலைந்து ஓடியதால்...
வரைந்த ஓவியம், இப்போது கண்ணைக் கவரும் வண்ணம்...!!!
ரொம்ப அழகா இருக்குங்க... :-))