Skip to main content

சிறகு....!























இட வலம்....மேல் கீழ்
கோணல் நேர்.. கிறுக்கல்
இஷ்டங்களின் படி...
விசிறியடிக்கும் தூரிகைகளின்
வீச்சில்...வந்து விழும்...
வகை வகையான...ஓவியங்களின்
கலைந்த காட்சிகள் எல்லாம்
எப்போதும் எள்ளி நகைக்கின்றன
ஒழுங்குகளின் இறுக்கதிலிருக்கும்
அறியாமை முடிச்சுகளை பார்த்து...!

கலைத்து போடலின் ...
உச்சத்தில்..வெளிப்பட்ட
என் ஒவியத்தின் அழகில்
வெட்கி ஓடுகிறது...அழுத்தமாய்
மனதில் இருந்த
கட்டுப்பாட்டு அழுக்குகள்...!

கலைந்து கிடக்கும்
ஓவியத்தின் தடங்களில்
உயிர்ப்பாய் நிறைந்திருக்கும்
வரைமுரையற்ற வர்ணங்களின்
கூடல்களின் நிறைவுகளில்
மெலிதாய் வெளிப்பட்டுக் கிடக்கிறது
ஒரு எல்லைகளற்ற....ஆனந்தம்!

கலைந்ததின் ஆட்சியில்
செத்துப் போன விதிமுறைகளை
புறம்தள்ளி நகர்ந்து விட்டு...
சலனமின்றி கடக்கிறேன்...
இரைச்சலின் எல்லைகளை
ஒழுங்கற்றதுகளின் சிறகுகளோடு...!...!


தேவா. S

Comments

எப்போதும் விதிமுறைகளோடு ஒரு இறுக்கத்தோடு வாழாமல் அவ்வப்போது.. சுதந்திர வானில் சிறகடித்து பறப்போம் வானத்தின் எல்லை வரை...
மாப்பு கவிதை டாப்பு.... ஓவரா ரூல்ஸ் பாக்காம ஜாலியா சந்தேஷ்மா இரு சொல்ர... ரைட்டு...
என்னது மறுபடியும் கவிதையா?
Unknown said…
மிகவும் நேர்த்தியான கவிதை... படதேர்வும் அருமை...
vinthaimanithan said…
//மிகவும் நேர்த்தியான கவிதை... படதேர்வும் அருமை... //

அண்ணன் முந்திகிட்டார்!

ஒழுங்கற்றதன் அழகு... எப்போதும் அதன் மாய அழகின் ஈர்ப்பு..... சட்டங்களில் அடைபட்ட மனிதர்களுக்கு ஜீரணிக்கவும், கற்பனை செய்யவும் கடினம்தான்...

//சலனமின்றி கடக்கிறேன்...
இரைச்சலின் எல்லைகளை
ஒழுங்கற்றதுகளின் சிறகுகளோடு...!...! //

நடக்கவே திராணியற்றவர்களுக்கு சிறகு கிடைத்தால் எப்படி? தோள்களில் தினவும், மனங்களில் வலுவும் வேண்டும்...

வரிகளின் ஈர்ப்பில்.... தேன்குடத்து ஈயாக...!
வினோ said…
/ ஒரு எல்லைகளற்ற....ஆனந்தம்! /

இதுவே வேண்டும்.. வானில் சிறைகள் இல்ல பறக்க வேண்டும்..
எனக்கும் இப்படியான வாழ்க்கைதான் பிடிக்கும்.
pinkyrose said…
இப்போ என்ன சொல்ல வரிங்க??
டேய் மாப்பு... உலகத்துல இருக்கிற எல்லாரையும் ஒரே ஒருநாள் மட்டும் அந்த கட்டுப்பாட்டு அழுக்குகள் இல்லாம அதன் போக்கிலேயே வாழச்சொன்னா என்ன ஆகும்னு யோசிச்சு பார்த்தியா? அம்புட்டுத்தேன்... ஹிஹி
//இட வலம்....மேல் கீழ்//- ஐ குறுக்கெழுத்துப்போட்டி

//கோணல் நேர்.. கிறுக்கல்
இஷ்டங்களின் படி...// - ட்ராயிங் க்ளாஸ்

//வெட்கி ஓடுகிறது...அழுத்தமாய்
மனதில் இருந்த
கட்டுப்பாட்டு அழுக்குகள்...!//

அப்போ மனசை கழுவணும்னா ஓவியம் வரைஞ்சா போதும்ன்னு சொல்றீங்க?

//கலைந்ததின் ஆட்சியில்
செத்துப் போன விதிமுறைகளை//

ஹிஹிஹி 356வது பிரிவு இங்கயுமா பயன்படுது பங்காளி ?

இப்படிக்கு கவிதை புரியவில்லை என்றால் கும்முவோர்கள் சங்கம்
jothi said…
மனதை வெறுமையாய் வைத்தால் வானமே எல்லை,..

.

கவிதையில் வார்த்தைகள் மிக நேர்த்தியாய் வந்துவிழுகின்றன.. நல்ல கவிதை
Anonymous said…
சிறகின் வலிமை தெரியாது
பறக்கும் திசை தெரியாது
ஆயினும் பறக்கிறேன்
சிறகு விரித்தபடி..
நீளும் எல்லைகள் நினைக்காமல்...
VELU.G said…
அனைத்தையும் அனுபவித்து செய்தால் மிகவும் சந்தோஷமாக வாழலாம்
அருமையான வார்த்தை முடிச்சிகள்... அங்கங்கே அவிழ்த்துவிட்டார்போல சிக்கலின்றி சிற்பமாய் கிடக்கிறது... அழகுங்க தேவா..

//ஒழுங்குகளின் இறுக்கதிலிருக்கும்
அறியாமை முடிச்சுகளை பார்த்து...!//

யப்பா...
Chitra said…
ஒழுங்குகளின் இறுக்கதிலிருக்கும்
அறியாமை முடிச்சுகளை பார்த்து...!

...... கவிதை வரிகளில் ஆக்கிரமித்து கொண்டு இருக்கும் கருத்துக்கள், பிரமிக்க வைக்கின்றன. :-)
@தேவா

மாப்ஸ் மணி 2.45 AM..... எனக்கு தூக்கம் வரலை நீ வந்து கவிதை எழுது நான் விளக்கவுரை எழுதறேன்...
மிக அருமையான வார்த்தை விளையாடல். சில சமயம் விதிகள் மீறப் படவேண்டியவையே ... படம் ரொம்ப நல்லா இருக்கு பாஸ்
பிரியமிக்க தேவா.., மிக அழகான ஆழப்பொதிந்த கருத்துகளை கவிதையாக்கி இருக்கும் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
கலைத்து போடலின் ...
உச்சத்தில்..வெளிப்பட்ட
என் ஒவியத்தின் அழகில்
வெட்கி ஓடுகிறது...அழுத்தமாய்
மனதில் இருந்த
கட்டுப்பாட்டு அழுக்குகள்...!
அழகு..!
கலைந்ததின் ஆட்சியில்
செத்துப் போன விதிமுறைகளை
புறம்தள்ளி நகர்ந்து விட்டு...
சலனமின்றி கடக்கிறேன்...
இரைச்சலின் எல்லைகளை
ஒழுங்கற்றதுகளின் சிறகுகளோடு...!...!
சிறப்பு..!!
Anonymous said…
அருமையான வரிகள் சிறப்பான நடை...ரொம்ப நல்லாருக்குங்க..வாழ்த்துக்கள்
பத்மா said…
அருமை தேவா

ஒழுக்கம் இறுக்கமில்லை ... bench mark தான் இறுக்கம் .
/////கலைத்து போடலின் ...
உச்சத்தில்..வெளிப்பட்ட
என் ஒவியத்தின் அழகில்
வெட்கி ஓடுகிறது...அழுத்தமாய்
மனதில் இருந்த
கட்டுப்பாட்டு அழுக்குகள்...! /////

கட்டுப்பாட்டு அழுக்குகள் கலைந்து ஓடியதால்...
வரைந்த ஓவியம், இப்போது கண்ணைக் கவரும் வண்ணம்...!!!
ரொம்ப அழகா இருக்குங்க... :-))

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த