Skip to main content

பப்பு....!
























காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா?

மேலே படிங்க....பாஸ்....

பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு.....

சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்...

குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவுங்க அம்மாவ கூப்பிட்டு ஏம்மா இந்த தேங்காய் சட்னி எப்படி வைக்கிறதுன்னு கேட்டான்? எதுக்குடா கேக்குறன்னு அவுங்க அம்மா கேட்டாங்க? பதிவுல போடபோறேன்னு சொன்னதுதான் தாமதம்......போடா போ வெட்டிப்பயலே..ஆபிஸ்ல போய் வேலைய பாருடான்னா...சமையல் குறிப்பு போடப்போறானாம்னு அவுங்க மூஞ்சிய காட்டினாங்க....

பப்புவிற்கு கண்கள் இருண்டே போச்சு....அச்சோ.. நான் பெரிய பதிவராச்சே.....அத காட்டியே ஆகணுமே... ( ஒரு நாதி கூட சீண்டாது அது வேற விசயம்...) என்ன பண்ணலாம்? இந்த நினைப்புலயே...வண்டி ஓட்டிகிட்டு போனவன ரெட் சிக்னல கவனிக்கல....டிராபிக் கான்ஸடபிள் கிட்ட....100 ரூபாய் துட்டு கொடுத்துட்டு... மறுபடியும் பைக் ஸ்டார்ட் பன்ணியவனுக்கு சரி... இந்த லஞ்சம் கொடுக்குறது பத்தி எழுதலாம்னு நினைச்சான்... ஆனா அது பத்தி ஷங்கர் ஏற்கனவே 'இந்தியன்'ல டீட்டெய்ல சொல்லிட்டதால அது பத்தியும் எழுத முடியல....

வீடு புல்லா புக்கு வாங்கி வச்சிருப்பான் பப்பு..ஆனா எடுத்து தொட்டு கூட பாக்க மாட்டான். ஃப்ரியா வலைப்பூவும் தமிழ்ழ டைப் பண்ண சாப்ட்வேறும் கிடைச்சதும் தான் தாமதம்....தென்னைமரமும் அதன் பயன்களும்னு ஸ்கூலுல எழுத சொன்னதையே ஒழுங்கா எழுதாத பப்பு... இன்னிக்கு என்னன்னமோ எழுத ஆரம்பிச்சுட்டான்....

உலகப்பிரச்சினைக்கு எல்லாம் தீர்வு சொல்றதுக்கு இவனுக்கு மெளசும் கீபோர்டும் போதும்னு நினைச்சுகிட்டு...... காஷ்மீர்ல இருந்து கன்னியாகுமரி வரைக்கும் ஏதாவது நடந்த போதும் போஸ்ட் போட்டுடுவான். என்ன ஏது எழுதனும்னு ஒரு வரைமுறை இல்லை...எதாச்சும் எழுதணும்....அதுதான் பப்பு ஸ்டைல்...!

அப்படிப்பட்ட பப்புக்கு அன்னிக்கு பருப்பு வேகாம போச்சு.... ஒரு சாச்சுரேசன் பாயின்ட் வந்து என்ன எழுதறதுன்னு தெரியாமா இதோ ஆபிஸ்ல வந்து வண்டிய நிறுத்துறான் பாருங்க.....ஏற்கனவே 30 நிமிசம் லேட்டுன்னு கூட தெரியல பப்புவிற்கு.....

ஆபிசுக்கு உள்ள போன பப்புவை மேனேஜர் கூப்பிட்டனுப்பினாரு... பப்பு ஸ்டைலா மேனஜர் ரூம்குள்ள போனான்.....ஒரு 20 நிமிசம் கழிச்சு வெளில வந்தான்... அக்கவுண்டண்ட் என்னாச்சுன்னு? கேட்டாரு பப்புகிட்ட... லேட்டா வந்தேன்னு கும்மிட்டாரு மேனேஜர்னு சொன்னவன்..இந்த மேனஜர பத்தி ஒரு பதிவு எழுதி வஞ்சம் தீர்க்க்கணும்னு நினைச்சு சந்தோசப்பட்டான் ஆனா ஒரு வேளை மேனேஜர் போஸ்ட எடுத்து படிச்சா என்னாகும்னு பயந்து அதையும் கைவிட வேண்டியதா போச்சு......

இதே நினைப்புலயே...ஏகப்பட்ட தவறுகளும் வாங்கிக் கட்டிக் கொள்ளுதலும்னு பாப்புவுக்கு நாள் ஓடிட்டே இருந்துச்சே தவிர பதிவு போட ஒரு மேட்டரும் கிடைக்கல...!

நொந்து போன பப்புவிற்கு டக்குனு ஐடியா வந்துச்சு.......சரி....இன்னிக்கு பதிவு போடமுடியாத அளவு ஆணின்னு சொல்லி ஒரு பதிவு போடுவம்னு யோசிச்சு டைப் பண்ணும் போதே.... இம்பார்டண்டா பாஸ் பண்ண வேண்டிய பைலை மேனஜருக்கு பாஸ் பண்ண மறந்துட்டான்......அப்புறம் என்னா....ஏதேதோ பிரச்சினை ஆகி....மறுபடியும் இப்போ ஜெனரல் மேனேஜர் கும்மு கும்ம்ம்னு கும்மிட்டாரு.

நல்லா வாங்கிகட்டிகிட்டு வெளில வந்த பப்புவுக்கு அடுத்த சோதனை.....ஆமாம் அவன் சிஸ்டத்துல கொஞ்சம் நஞ்சம் தேத்தி வச்சிருந்த ஒரு மொக்கை போஸ்டும் சேவ் பண்ணததால....சிஸ்டம் ரீ ஸ்டார்ட் ஆனதுல மறைஞ்சு போச்சு.....

டென்சன் ஆயிட்டான் பப்பு...இந்த லட்சணத்துல....பப்பு வோட இரண்டு ஃப்ரண்ட்ஸ் வேற...என்ன பப்பு....போஸ்ட் என்னாச்சு...னு போன போட்டு கேட்டு வேற உசுப்பேத்தி விட்டுடானுக......(அவனுக வேணும்னே உசுப்பேத்தியது பப்புவிற்கு எப்படி தெரியும்...... நம்ம ஆளுதான் பாப்புலாரிட்டிக்கு அடிமையாச்சே...!!!)

சரி ஏதாச்சும் எழுதணும்னு பிளாக்க ஓப்பன் பண்னிய பப்புவை மேனேஜர் கையும் களவுமா பாத்துட்டு....காட்டு காட்டுனு காட்டிட்டாரு! ஒரு 30 இமெயில்ஸ (ஒரு ரிப்ளை மட்டும் 2 பக்கம் வரும்..அவ்வ்வ்வ்வ்வ்வ்) கொடுத்து.... இன்னும் ஒன் அவர்ல எல்லோருக்கும் போயாகணும்னு கத்திட்டு...போனபோது மணி மாலை 6 .......!

ஆமாங்க...

பப்பு கிட்ட இருந்து போஸ்ட் எதிர்ப்பாக்காதீங்க இன்னிக்கு...பையன் காலைல இருந்து நொந்து நூடுல்ஸ் ஆகி....இப்போ டொக்கு டொக்குனு கீ போர்ட தட்டிகிட்டு உக்காந்து இருக்கான்.....


இனிமே போஸ்ட் போடுவே... போஸ்ட் போடுவே.... பப்பு தலையில அடிச்சிகிற மாதிரியே.....தட்டிகிட்டு இருக்கான் கீ போர்ட...உங்களுக்கு சத்தம் கேக்குதா?

டொக்...டொக்..டொக்.........



தேவா. S

Comments

ஒரு பதிவு போட நீங்க இப்படி எல்லாம் யோசிக்கிறார் இவர்
டென்சன் ஆயிட்டான் பப்பு...இந்த லட்சணத்துல....பப்பு வோட இரண்டு ஃப்ரண்ட்ஸ் வேற...என்ன பப்பு....போஸ்ட் என்னாச்சு...னு போன போட்டு கேட்டு வேற உசுப்பேத்தி விட்டுடானுக......////

ஏம்பா நாஞ்சில் terorr, ஏன் சும்மா தேவாவுக்கு போன் பண்ணி பதிவு போடலையா கேக்குறிங்க
கணேஷ் said…
யாரு அண்ணா அந்த பப்பு....ரெம்ப நல்லவன் போல இருக்கே)))

(சினேகா இல்லையே...))))
தேவ அண்ணா இப்படி பதிவு போட்டா எப்படி ?......உங்க பப்பு இங்கே வேகாது .....................
இனிமே போஸ்ட் போடுவே... போஸ்ட் போடுவே.... பப்பு தலையில அடிச்சிகிற மாதிரியே.....தட்டிகிட்டு இருக்கான் கீ போர்ட...உங்களுக்கு சத்தம் கேக்குதா?////

சரி சரி கடைசியில் பப்பு இப்படி போஸ்ட் போட்டார்
//இனிமே போஸ்ட் போடுவே... போஸ்ட் போடுவே.... பப்பு தலையில அடிச்சிகிற //
கைலேயே அடிசிருகனும் அப்ப தானே கி போர்டு ல கை வைக்கமாட்டான் ....
அத விட்டு போட்டு தலைல அடிச்சி என்ன பயன்
ganesh said...
யாரு அண்ணா அந்த பப்பு....ரெம்ப நல்லவன் போல இருக்கே)))

(சினேகா இல்லையே...)))///

ஏம்பா கணேஷ் என்ன சினேகா வேணும் சொல்றே
dheva said…
ஒரு பதிவ எழுத பப்பு பட்ட கஷ்டங்கள சொன்ன உங்களுக்கு காமெடியா இருக்கா? நிஜமாவே சீரியசான மேட்டர்பா.. நம்புங்க....!
dheva said…
பப்பு பத்தி கதை எழுதினா...சினேகாவ யாருப்பா சீன்ல கொண்டு வர்றது.. கடைசில சினேகா பத்தி எழுதி இருக்கேன்னு கோர்த்து விட்டுடாதீங்க...!
dheva said…
//ganesh said...
யாரு அண்ணா அந்த பப்பு....ரெம்ப நல்லவன் போல இருக்கே)))//

ஆமாம்பா பாவம்...ரொம்ப நல்லவன்..(தம்பி சிரிப்பு போலிஸ் இல்லா இது வேற மாதிரி ரொம்ப நல்லவன்...)
சரி ஏதாச்சும் எழுதணும்னு பிளாக்க ஓப்பன் பண்னிய பப்புவை மேனேஜர் கையும் களவுமா பாத்துட்டு....காட்டு காட்டுனு காட்டிட்டாரு//

காட்டு காட்டுனு ..........என்னத்த காட்டுனாரோ தெரியலேய.தேவ அண்ணா என்ன காண்பிச்சாரு பக்கத்துல தானே நின்னுகீட்டு இருந்தீங்க
dheva said…
இம்சை..@ இது பத்தி தெளிவா டெரர் கிட்ட கேளு.... அவன் சொல்லுவான்...!
Anonymous said…
ரைட்டு... சொந்த அனுபவத்த அப்டியே பதிவாக்கிட்டீங்க அண்ணா.. அவ் :)
dheva said…
பாலாஜி சரவணா @ சொந்த அனுபவமா? சரி... இப்டி சொல்லி ஏன் நான் இத்தனாம் நம்பர் குதிருக்குள்ள இல்லேன்னு எஸ்கேப் ஆகுறா....

ஹா.. ஹா.. ஹா..!
கணேஷ் said…
சௌந்தர் said..

(சினேகா இல்லையே...)))///

ஏம்பா கணேஷ் என்ன சினேகா வேணும் சொல்றே ...

அது என்னமோ..என்ன மாயமோ தெரியல ...இந்த பப்பு பேரை கேட்டாலே எனக்கு சினேகா நினைவுதான் வருது....என்ன செய்ய????))))
என்ன தேவா...
இப்ப்டியெல்லாம் ஆயிடுச்சா நிலமை...
ஆமா மேனேஜர் ரொம்ப திட்டிட்டாரா..?
விடுங்க புனைவா அடுத்த பதிவை அவரைப் பத்தி போட்டு தாக்கிரலாம்...
அப்புறம் அதையே ஒரு தொடர்பதிவாக்கி கலாச்சிடலாம்...
இதுக்கு ஏன் டென்சனாயிக்கிட்டு...?
பத்மா said…
தினம் இத்தனை பதிவு போடும்போதே யோசித்தேன் ..
NOW THE CAT IS OUT ... ஹிஹிஹி
பப்பு = தேவா
ஊன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க அந்த டேமஜரை தூக்கிடலாம்
நிஜமாவே சீரியசான மேட்டர்பா.. நம்புங்க....! ///

நம்பிட்டோம்
//இந்த பப்பு பேரை கேட்டாலே எனக்கு சினேகா நினைவுதான் வருது....என்ன செய்ய????)))) //

அண்ணன் பாவம். வீட்ல அடி வாங்க வைக்காதீங்க தம்பி
Anonymous said…
கூல் டவுன் அண்ணா.. :)
dheva said…
அச்சசோ... எல்லா Catsum avud aahutheey......

ஒரே பப்பு ஊரில் இல்லையடா...?
dheva said…
பப்பு = தேவா........

ஆமாம் ... யாமே.. படைக்கிறோம்.... யாமே.. கும்முகிறோம்.. யாமே.. அழிக்கிறோம்......

அவன் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமமே....( கொஞ்சம் மக்கள் சீரியஸ் இல்லம சிரிக்கட்டுமே.... எல்லா பபுக்களும் மன்னித்தருள வேண்டுகிறேன்...)
dheva said…
பாலாஜி..@ சூடா ஒரு பெப்புசி சொல்லாவா...உனக்கு....!
dheva said…
சே. குமார்.. @ சரியான போட்டி!
dheva said…
எல்.கே....@ ஊம்....!
/கொஞ்சம் மக்கள் சீரியஸ் இல்லம சிரிக்கட்டுமே.... எல்லா பபுக்களும் மன்னித்தருள வேண்டுகிறேன்...///

நடக்கட்டும்
dheva said…
எல்.கே @ ஆமம்.. நடக்கட்டும்.... நடக்கட்டும்!
இந்த பதிவு யாரை பற்றி எழுதினார் எனக்கு நல்லாவே தெரியும் ஆனா அது தேவா இல்லை வேற ஒருத்தர்
dheva said…
//இந்த பதிவு யாரை பற்றி எழுதினார் எனக்கு நல்லாவே தெரியும் ஆனா அது தேவா இல்லை வேற ஒருத்தர் //

செளந்தர்....@ தம்பி.. வில்லங்கத்த விலை குடுத்து வாங்கி டெக்கரேட் பண்ணில்லாயா கூட்டிடு வர்ற.....ஏன்...ஏன்..ஏன் இப்டி....?
லக்க..... லக்க.. லக்க. லக்க.
//வில்லங்கத்த விலை குடுத்து வாங்கி டெக்கரேட் பண்ணில்லாயா கூட்டிடு வர்ற.....ஏன்...ஏன்..ஏன் இப்டி....? //

டெக்கரேட் பண்ணினாதான் உங்க பதிவு நல்ல இருக்கும்
AltF9 Admin said…
kadaisi varaikkum pappuvaala oru pathiva poda mudiyalaiye ... enakke ore feelings sa pochu...
@தேவா
என்னா மாப்பு எல்லாறும் உன் மேல திருப்பிவிட்டு எஸ்கேப் ஆவராங்க போல..... :))
@தேவா
//பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு.....//

இப்படி பல பப்பு இருக்காங்கபா.... இன்னும் கொஞ்சம் பலமா கிழிச்சி இருக்கலாம்....
dheva said…
டெரர்..@ பல பப்பு இருக்காங்களா.....???? நிஜமாவா? நான் சும்மா கதை எழுதினேன் மாப்ஸ்......!
dheva said…
சிவா...@ டேய் பப்பு தம்பி ஒரு போஸ்டாச்சும் போடு பப்பு...!
vinthaimanithan said…
பாவம் பப்புவோட பப்பு வேகல போல! நெறைய பேரு இப்டித்தான் ஆணிய புடுங்கிட்டு இருக்காங்க....

எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான்... பாடுனவன் பாட்டைக் கெடுத்தான்னு ஒரு சொலவடை இருக்கு... நம்ம மக்கள்ஸ்க்கு ரொம்ப பொருந்துற விஷயம்!

எவ்வளவோ விஷயம் இருக்கு. ஒரு மண்ணும் படிக்காம சும்மா கீபோர்ட டார்ச்சர் பண்ணி என்னாவ போவுது? இன்னிக்கு கலையகம் கலை இணையத்தில் மக்கள் இயக்கம் கட்டிய இத்தாலி பதிவர்னு ஒரு போஸ்ட் பண்ணி இருக்கார் பாருங்க... எத்தன பேரு படிச்சாங்க?!

என்னமோ போங்க!
@தேவா
//டெரர்..@ பல பப்பு இருக்காங்களா.....???? நிஜமாவா? நான் சும்மா கதை எழுதினேன் மாப்ஸ்......!//

அவ்வ்வ்வ்வ் அப்போ நான தான் ஒலரிட்டனா... கொஞ்சம் நாள் இரு மாப்ஸ்... ஆத்தா நான் பல்லு விளக்க போறேன் போஸ்டு வரும்....
vinthaimanithan said…
பார்ரா! இப்பத்தான் கவனிக்கிறேன்... கமெண்ட் மாடரேஷன எடுத்தாச்சா! வாழ்த்துக்கள்!
dheva said…
டெரர்...@ நிசமாவா....அம்புட்டு மோசமாவா போயிகிட்டு இருக்கு நிலமை.....?????
@தேவா
//அம்புட்டு மோசமாவா போயிகிட்டு இருக்கு நிலமை.....?????//

சீ..சீ... அம்புட்டு மோசமா இல்லை... அதைவிட மோசமா போய்ட்டு இருக்கு... ப்ளாக் உள்ள கால் வைக்க முடியல மாப்ஸ்... என் ப்ளாக்விட ரொம்ப கேவலமா இருக்கு....
dheva said…
புதிய மனிதா ....சாரி சாரி.. விந்தை மனிதா.. ( எந்திரன் ஃபீவருப்பா) தம்பி... !
dheva said…
டெரரு..@ அதுக்கு இப்போ என்னா பண்றதுங்கோ.....? ...கொஞ்சம் யோசனை சொல்லுங்கோ..!
@தேவா

மாப்ஸ் இந்த பதிவுக்கு யார் யார் ஓட்டு போடலயோ அவங்க எல்லாம் பப்பு... அப்படினு ஒரு லைன் பதிவுல சேர்த்து இருக்கலாம் இல்ல? ஹா ஹா ஹா...
dheva said…
///மாப்ஸ் இந்த பதிவுக்கு யார் யார் ஓட்டு போடலயோ அவங்க எல்லாம் பப்பு... அப்படினு ஒரு லைன் பதிவுல சேர்த்து இருக்கலாம் இல்ல? ஹா ஹா ஹா...///

டெரர்...@ பலே.. .பலே... நமக்கு வாய்த்த மாப்பிள்ளை மிகவும் திறமை சாலி..........!
@தேவா
//டெரரு..@ அதுக்கு இப்போ என்னா பண்றதுங்கோ.....? ...கொஞ்சம் யோசனை சொல்லுங்கோ..!//

ரோசனை சொன்னா புள்ளைங்க எல்லாம் நம்மள பத்தி தப்பா பேசரான் சொல்லி என்ன தீகுளிக்க வச்சிடும்... எழுதரவன் எல்லாம் மொக்கையா இருந்தா பரவாயில்லை எல்லாம் மூளைகாரனுங்க... ஆனா வீனா போறாங்க. அதான் வருத்தம்....
@தேவா

இம்சை பாபு தொடர்ந்து பேசுவார்...
//ரோசனை சொன்னா புள்ளைங்க எல்லாம் நம்மள பத்தி தப்பா பேசரான் சொல்லி என்ன தீகுளிக்க வச்சிடும்... எழுதரவன் எல்லாம் மொக்கையா இருந்தா பரவாயில்லை எல்லாம் மூளைகாரனுங்க... ஆனா வீனா போறாங்க. அதான் வருத்தம்.... //

மக்க நீ ரொம்ப நல்லவன் மக்க ........
என்னையும் நீ மூளைகாரன் ன்னு சொன்னதுக்கு .....

ஆனா வீணா போனான் சொன்னதுக்கு உனக்கு தண்டனை உண்டு மக்க
உன்ன வெள்ளியூர்காரன் blogla எங்க தல terror ன்னு போட்டு உன்ன அடிவாங்க வைக்க போறேன்
//பலே.. .பலே... நமக்கு வாய்த்த மாப்பிள்ளை மிகவும் திறமை சாலி..........! //

மாப்பிள்ளை இருந்த மலை ஏறி பிழைக்கலாம் ன்னு பெரியவங்க சும்மாவா சொன்னங்க தேவா அண்ணா
@இம்சை

நீங்க பிரபல பதிவர் மக்கா... நான் சொன்னது தினம் பதிவு இல்லைனா இரண்டு நாளைக்கு ஒரு மொக்கை பதிவு போடறவங்கள்.

வெள்ளியூர்காரன் ரொம்ப பிஸி.. இப்போ என்ன சொன்னாலும் அந்த பரதேசி வெளிய வராது... :) மனுஷனா அவன்.. உடம்பு பூர நக்கல்...
Unknown said…
important point missing

enakku therinja oru pappu ellathukkum link anuppuvan, vote pannalanna appuram pesamattan......
சொந்த கதை மாதிரியே தெரியுதே....
யாரு.. யாரு...யாருயா.. அது.. அண்ணன் ப்ளாக்ல மைனஸ் ஒட்டு போட்டது... தைரியம் இருந்தா வெளிய வந்து பாரு...
ஒரு பெரிய மனுஷன் கொஞ்ச நாள் ஊர்ல இல்லன்னா அத்தன பேருக்கும் துளிர் விட்டு போச்சு...
வெறும்பய said...
யாரு.. யாரு...யாருயா.. அது.. அண்ணன் ப்ளாக்ல மைனஸ் ஒட்டு போட்டது... தைரியம் இருந்தா வெளிய வந்து பாரு..////

@@@வெறும்பய
அது வெறும்பயனுக்கு தெரியும்
Mahi_Granny said…
சாமிகளிடமிருந்து காமெடியன் எட்டிப் பார்க்கிறார். மகிழ்ச்சி .
///உலகப்பிரச்சினைக்கு எல்லாம் தீர்வு சொல்றதுக்கு இவனுக்கு மெளசும் கீபோர்டும் போதும்னு நினைச்சுகிட்டு......//

ஹா ஹா ஹா... சூப்பர் தேவா.. :-))

///சரி....இன்னிக்கு பதிவு போடமுடியாத அளவு ஆணின்னு சொல்லி ஒரு பதிவு போடுவம்னு யோசிச்சு டைப் பண்ணும் போதே.... ///

ஐயோ முடியலங்க.... ROFL .......:-))))
///பையன் காலைல இருந்து நொந்து நூடுல்ஸ் ஆகி....இப்போ டொக்கு டொக்குனு கீ போர்ட தட்டிகிட்டு உக்காந்து இருக்கான்.....///

அச்சச்சோ.... ஒரு பிரபல பதிவர பதிவ எழுத விடாம...என்ன உலகமடா இது??
டோன்ட் வொர்ரி.. பப்பு.. நாளை எழுதலாம்... :-))))
///இனிமே போஸ்ட் போடுவே... போஸ்ட் போடுவே.... பப்பு தலையில அடிச்சிகிற மாதிரியே.....தட்டிகிட்டு இருக்கான் கீ போர்ட...உங்களுக்கு சத்தம் கேக்குதா////

ஹ்ம்ம் ஹும்ம்ம். இவ்ளோ நடந்த பின்னே இனிமே பப்பு கிட்ட போஸ்ட் கேக்க நாங்க என்ன லூசா...???
எனக்கு இந்த ஒரு சத்தம் தாங்க கேக்குது...
இனிமே பப்புகிட்ட.. போஸ்ட் கேப்பே.... போஸ்ட் கேட்பேன்னு....!!

செம ஜாலி-ஆ இருந்தது தேவா... ரசிச்சு படிச்சேன்.. தேங்க்ஸ் :-))
(பி. கு: பப்புவை ரொம்ப கேட்டதா சொல்லுங்க..தேவா)
@@தேவா
////செளந்தர்....@ தம்பி.. வில்லங்கத்த விலை குடுத்து வாங்கி டெக்கரேட் பண்ணில்லாயா கூட்டிடு வர்ற.....ஏன்...ஏன்..ஏன் இப்டி....? ///

ஹா ஹா ஹா... நோ கமெண்ட்ஸ். :-))))
@@தேவா

//ஒரு பதிவ எழுத பப்பு பட்ட கஷ்டங்கள சொன்ன உங்களுக்கு காமெடியா இருக்கா? நிஜமாவே சீரியசான மேட்டர்பா.. நம்புங்க....! ///

சரி ஓகே.. நம்பிட்டேன்.. நீங்க சொன்ன சரி தான்..
ரைட்ட்டு.. விடுங்க.. :-))
////பலே.. .பலே... நமக்கு வாய்த்த மாப்பிள்ளை மிகவும் திறமை சாலி..........! //
ஹா ஹா ஹா
Unknown said…
ஹா ஹா ஹா.. கலக்கியிருக்கீங்க..
dheva said…
நல்லாதான் போயிட்டிருக்கு... ஒரு பாசமிகு தம்பி தூக்கதுல ஒரு எதிர் ஓட்டு போட்டுடு போனதுதன் நிகழ்சியின் சிறப்பு....

அப்புறம்.. மகி கிரேனி அம்மா.... சாமியார்னு கிட்ட இருந்து காமெடியானு....சொல்லியிப்பது ... கொஞ்சம் கிலி வர வச்சுடுச்சு..(அம்மாவின் ஆசிர்வாதம் எனக்கு எப்பவும் உண்டு)

அதுக்கப்புறம் பார்த்த...பப்புவை எல்லோரும் ரசிப்பதால்....அப்போஅப்போ பப்புவோட லீலைகளா எழுதலாமானு யோசிச்சுட்டு இருக்கேன்...

(யாரோ அரிவாளோட ஓடி வர்றாங்க இப்போ நான் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்!!!)
dheva said…
இன்னொரு விசயம்..@ பப்பு யாரு? பப்பு யாருன்னு இமெயில்ஸ் வந்து குவிஞ்சு கிட்டு இருக்கு....

புள்ளிராஜா ரேஞ்சுக்கு பப்பு வளர்ந்திருவானோனு பயமா இருக்க்கு.....

பப்பு யாரும் இல்லிங்கொ... நானே உருவாக்குன எந்திரன் தான் பப்பு....!
ரைட்டு! நடத்துங்க
Anonymous said…
பட்டைய கிளப்புங்க..

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த