Skip to main content

காதல்...!






















NOTHING.....BUT JUST THE NEXT ISSUE....!


பெரிதும் சிறிதுமாய் அவ்வப்போது வந்து ஆக்கிரமித்து கொண்டிருக்கும் கற்பனைகளின் ஓட்டத்தில் என்னின் சுயம் தொடும் முயற்சிகளின் ஓட்டத்துக்கு நடுவே அவ்வப்போது வந்து ஆக்கிரமித்துக் கொள்கிறது காதலென்னும் உணர்வு. உருவமாய் பயிற்றுவிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை தவறாமல் என் இதயம் துளைக்கும் தோட்டாவாய் எண்ணங்களை கிளர்ந்தெளச் செய்யும் கிரியா ஊக்கியாய் இருக்கும் வீரியமான அந்த விசையின் ஆதி முடிச்சு எங்கே போடப்பட்டது அல்லது எப்போது போடப்பட்டது?

ஏதோ ஒரு கணத்தில் என் இதயத்தின் முதல் துடிப்பு ஆரம்பித்த அந்த நொடியில் துளிர்த்திருக்கும் என்ற நம்பிக்கையில்லை...ஏனென்றால்.. என் இதயத்தின் கடைசி துடிப்பில் அது மரித்து விடும் என்ற வாதத்தில் செத்துவிடும் காதல் என்ற உணர்வு..ஆனால் அப்படி அல்ல.. அது எப்போதும் சாகாது...! வெளிச்சத்தில் இருந்தாலும் ஓடி ஒளிந்து இருட்டு தேடும்....ஒளி காணா மனிதன் போல எப்போதும் மறைந்து நின்று விளையாடுவதே பழக்கமாய்ப் போன இந்த காதல் படுத்தும் பாடுகளை...என்னவென்று சொல்வது..?

யாருமற்ற தனிமை என்றால் காதலுக்கு கொள்ளைப் பிரியம்...! ஆமாம் அந்த கணங்களில் தான் என் மனதிலிருந்து சீறிப்பாய்ந்து எண்ணமாய் கிளைத்து ஏதோ ஒன்றை எழுது என்ற உந்துதலை மூளைக்கு அனுப்பி கைகளின் வழியே வந்து வழிவாள் என் காதல் என்னும் என் காதலி....!

எழுத எழுத என்னை ஏங்க வைத்து உலகின் உச்ச இன்பங்களை எல்லாம் காலடியில் போட்டு பொடிப்பொடியாக்கி நானும் அவளும் நடத்தும் கூடல்களில் தெரித்து விழும் வித விதமாய் எமது எழுத்து குழந்தைகள்....! காலம் என்ற ஒன்றை அழித்து விட்டு காதல் என்ற ஒன்றை எல்லா திசையிலும் நிறுவிவிட்டு... என்னை அவள் தழுவுதலும் நான் அவளைத் தழுவுவதும் என்று கடந்து கொண்டிருக்கும் பொழுதுகளில் பரிமாறிக் கொள்ளும் எமது முத்தங்களைத்தான் உலகம் கவிதை என்கிறது.

எமது பால்யத்தில் தாயின் வழியே வந்த அவள், பதின்மத்தில் தொடங்கி பல காலம் பெண்களின் மூலம் வந்து எம்மை ஆக்கிரமித்து வித விதமாய் ஆட்டிவித்தாள்....! ஏதோ ஒரு காலத்தில் கடவுளாய் மாறி பக்தி என்ற வேசமிட்டு....அவள் பயிற்றுவித்துக் கொடுத்ததுதான்....ஸ்லோகம், தியானம், ஞானம் எல்லாமே......

பின்னர் கற்றுக் கொடுத்தவளே அத்து மீறி அத்தனையும் அறுத்துப் போட்ட அதிசயமும் நடந்ததது....! எல்லாமாகி என்னுள் நிறைந்து நின்று கொண்டு இனி காணும் பொருளிலெல்லாம் நான் இருப்பேன் என்று சொல்லாமல் சொல்லி சூட்சுமமாய் என்னுள் மறைந்து கொண்டாள்...

எனக்குள் இருந்து ஒரு நறுமணமாய் வீசி எங்கும் தன்னின் இயல்புகள் பரவச்செய்யும் அவள்...மிகச்சிலரிடம் இருந்தும் என்னை எதிர் கொள்வதும் உண்டு....! அப்போதைய எதிர்கொள்ளலில் அந்த அந்த நபர்களின் நேசமாயும் அது மாறிப்போனதும் உண்டு. அந்த நேசத்தில் மறைந்திருப்பவளும் அவள்தான்.....

வாழ்க்கை துணையிடமிருந்து எப்போதும் வீசிக் கொண்டே இருக்கும் அந்த உணர்வுக்கு பின்னால் சிறிய எதிர்பார்ப்புகள் நிறைந்தும், கட்டுப்பாடுகள் நிறைந்தும் போயிவிடுவதால் அதன் இயல்பில் கொஞ்சம் கலப்போடு வெளிப்பட்டு விடுகிறாள். கலப்பு இருந்தாலும் அதன் ஆளுமை என்னவோ வார்த்தைகளுக்குள் வடிக்கவியாலாதது....

மொத்த எதிர்பார்ப்பும் உருகிப் போகும் முதுமையில் ஒரு பட்டத்து அரசியாய் ஒளிர்வாள் அவள்...!

ஒரு மழை பெய்யும் போது ஓடி வந்து என் நெஞ்சு நிறைப்பாள்! மண்ணிலிருந்து வரும் வாசத்தின் ஊடே எனக்கான காதலையும் சேர்த்து பரப்புவாள்....! மழைத்துளியில் நான் நனையும் நேரம்...காதல் என்ற அவள் என்னைக் கட்டியணைத்து என்னில் கரைந்து இல்லாமால் இருப்பாள்...!

உணர்வான அவளை உணர்ந்த பின் தான் பாரதி பாடியிருக்க வேண்டும் இவள் தான் தலைமை இன்பம் என்று.....

உயிர்ப்போடு என்னோடு இருப்பவள் ஒரு பாடல் கேட்கும்போதும், ஒற்றை நிலவாய் என்னை சில்லென்றூ ரசிக்கும்போதும், ஒரு கவிதையிலும், காத்திருத்தலிலும், நட்பிலும், உறவிலுமாய் என்னை சீராட்டி சீராட்டி... என்னுள் இருக்கும் உந்து சக்தியாய் இருந்து கற்பதருவாய் களங்கமில்லாமல் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறாள்....

பல நேரங்கள் நாங்கள் மணிக்கணக்காய் பேசுவோம்....சில நேரம் மெளனத்தில்...அப்படியே கடந்து செல்வோம்....!

கட்டுப்பாடுகளும், உத்தரவுகளும் இல்லாத நுண்ணுணர்ச்சியாய் என்னுள் நிறைந்து இருக்கும் காதலே....! பிரபஞ்சத்தின் ஆதியே...! என்னின் உடல் மரிப்புக்கு பின்னும் என்னோடு பின்னி பிணைந்து புணர்தலாய் தொடரபோகும் மூல வித்தே....!

உருவங்களின்றி என்னை ஆட்கொண்டிருக்கும்... பாலினம் சாரா...அறிவே! என் சுவாசத்தில் இருக்கும் சீரான அதிர்வே.....! என்னுள் எப்போதும் நிறை...என்னை சுற்றி எல்லாவற்றையும் நிறை....!

கேள்வியும் பதிலுமற்ற..என் கவிதைகளின்..
கருவினுள்...சிசுவாய் இருக்கும்…
ஜடத்தின் அசைவற்ற உணர்வுகள் எதையுமே...
வெளிப்படுத்த முடியா பிண்டமாய்
இருப்பதானால் ..செயலற்றதா என் காதல்....?
...
...
...
...

இல்லை...அது ஜீவனுள்ள குழந்தை...!


தேவா. S

Comments

vinthaimanithan said…
காதலைக் காதலிப்பது நல்ல விஷயம்... எந்த நிபந்தனைகளும் அற்று இருக்கும்! யாரிடம் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.... யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்!

ஆமா... என்ன ஓஷோ ஆட்டுவிக்கிறாரா?!
//இம்சைஅரசன் பாபு.. said...
me the firstuuuuuuuuuuuu
இம்சைஅரசன் பாபு.. said...
irunka padichuttu varen

இம்சைஅரசன் பாபு.. said...
irunga vote pottu varen

படிக்குறதுக்கு முன்னாடியே மூனு கமெண்டா......
எல்லாத்துக்குமான ஆதார ஸ்ருதி......
காதலியை, காதலை எல்லா உருவத்திலும் பார்த்து காதலித்து இருகிறீர்கள்
vinthaimanithan said…
//படிக்குறதுக்கு முன்னாடியே மூனு கமெண்டா...... //
இதுல புதுசா என்ன இருக்கு? நம்ம மக்கள்ஸ் பெரும்பாலும் படிக்காமலே " ஆஹா, ஓஹோ, அற்புதம், சூப்பர்"னு டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் போடுறவங்கதானே?

இல்லன்னா சும்மா கும்மி அடிச்சிட்டு இருப்பாங்க...

அந்தநேரத்துல உருப்படியா ஏதாச்சும் படிக்கலாம்... ஹ்ஹ்ம்ம்ம்ம்!
ஹேமா said…
காதலை அழகாய் மொழிபெயர்த்திருக்கிறீர்கள் தேவா.
Anonymous said…
அண்ணே.. காதல் உணர்ச்சியின் ஒட்டு மொத்த வடிவங்களையும் பட்டியல் போட்டுட்டீங்களே.. அழகு!

//என்னுள் எப்போதும் நிறை...என்னை சுற்றி எல்லாவற்றையும் நிறை....!//

இது "யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" அந்த அர்த்தம் தான அண்ணா?
வினோ said…
/ அது ஜீவனுள்ள குழந்தை...!/

உண்மை அண்ணே...

அருமையான பகிர்வு..
@விந்தைமனிதன்
//இதுல புதுசா என்ன இருக்கு? நம்ம மக்கள்ஸ் பெரும்பாலும் படிக்காமலே " ஆஹா, ஓஹோ, அற்புதம், சூப்பர்"னு டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் போடுறவங்கதானே?

இல்லன்னா சும்மா கும்மி அடிச்சிட்டு இருப்பாங்க...

அந்தநேரத்துல உருப்படியா ஏதாச்சும் படிக்கலாம்... ஹ்ஹ்ம்ம்ம்ம்!//

என் சார் எப்பவும் கோவமா இருக்கிங்க? நீங்க, தேவா எல்லாம் மேதை. நாங்க எல்லாம் சும்மா டைம்பாஸ் படிக்கறவங்க. உங்கள மாதிரி அறிவா எங்களுக்கு விவாதிக்க தெரியாது. ஏதாவது நல்ல பி.டி.ஃப் லிங்க் இருந்தா கொடுங்க கண்டிப்பா படிக்கிறோம்.
thiyaa said…
அருமையாக இருக்கிறது
அது ஜீவனுள்ள குழந்தை... ஜீவனுள்ளாதால் தான் அது குழந்தை.
// இல்லன்னா சும்மா கும்மி அடிச்சிட்டு இருப்பாங்க...
அந்தநேரத்துல உருப்படியா ஏதாச்சும் படிக்கலாம்... ஹ்ஹ்ம்ம்ம்ம்!//

ஆமா terror இவங்க எப்போதுமே இப்படி தான்.நம்ம comments அ படிச்சி
மனசுக்குள்ள சிரிப்பாரு .ஆனா இவங்க ரொம்ப சீரியஸ் அப்திவர் மாதிரி இருப்பங்கோ .அதனால்
நாங்க கோப பட மாட்டோம் ஏன் எங்கள் தல தேவா அண்ணாவே நாம கும்மி அடிக்கிறதே ஒன்னும் சொன்னதில்லை .எங்களுக்கு புரிந்ததை வைத்து கமெண்ட்ஸ் போடுறோம்.மத்தபடி யாரையும் புண்படுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை
dheva said…
//என் சார் எப்பவும் கோவமா இருக்கிங்க? நீங்க, தேவா எல்லாம் மேதை. நாங்க எல்லாம் சும்மா டைம்பாஸ் படிக்கறவங்க. உங்கள மாதிரி அறிவா எங்களுக்கு விவாதிக்க தெரியாது. ஏதாவது நல்ல பி.டி.ஃப் லிங்க் இருந்தா கொடுங்க கண்டிப்பா படிக்கிறோம். //

டெரர்....@ யாரு மாப்ஸ் கோபம்...ச்சே..ச்சே.. விந்தை மனிதன் நம்ம தம்பி மப்ஸ்..ரொம்ப ஜாலியான ஆளு அவர்!...அது சரி என்ன இது மேதை கீதைன்னு எல்லாம் வாரியரவே வாருற.... நீ டெரருதான் மாப்ஸ்!
dheva said…
தமிழ் உதயம் @ ஆமாம்.. சார் சரிதான்....பிண்டமென்று கருதும் மனங்களுக்கு அழுந்தப் பொருள்படும் படி அறிய வேண்டி உபோயோகம் செய்த பதம் தான்.....ஜீவனுள்ள குழந்தை என்று எழுத விளைந்தது...!

நன்றிகள் சார்!
மனதில் தோன்றுவது அனைத்தையும் எளிதில் கொட்டித் தீர்த்து விட முடியாது... யாருமில்லா தனிமைகளில் தோன்றும் உணர்வுகளையும் உணர்சிகளையும் உருவகப்படுத்தி அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் அண்ணா...
//யாருமற்ற தனிமை என்றால் காதலுக்கு கொள்ளைப் பிரியம்...! ஆமாம் அந்த கணங்களில் தான் என் மனதிலிருந்து சீறிப்பாய்ந்து எண்ணமாய் கிளைத்து ஏதோ ஒன்றை எழுது என்ற உந்துதலை மூளைக்கு அனுப்பி கைகளின் வழியே வந்து வழிவாள் என் காதல் என்னும் என் காதலி....!//

இது உண்மைதான் அண்ணா .., தனிமையில் இருக்கும்போது காதல் உணர்வுகள் பொங்கி வழிவது உண்மைதான் ..!!
//பல நேரங்கள் நாங்கள் மணிக்கணக்காய் பேசுவோம்....சில நேரம் மெளனத்தில்...அப்படியே கடந்து செல்வோம்....!//

இதுவும் கலக்கல் அண்ணா ..!!
// உங்கள மாதிரி அறிவா எங்களுக்கு விவாதிக்க தெரியாது. ஏதாவது நல்ல பி.டி.ஃப் லிங்க் இருந்தா கொடுங்க கண்டிப்பா படிக்கிறோம்.
Sept//
எனக்கும் கூட .., இருந்தாலும் அவரும் (வந்தாய் மனிதன்) நல்லவர் அப்படின்னு தேவா அண்ணன் சொன்னதால இதுக்குமேல எனக்கு கமெண்ட் போட தெரியல ..!! ஹி ஹி ஹி..
க ரா said…
கடைசில அந்த கவிதை செம டச் :)
//வெளிச்சத்தில் இருந்தாலும் ஓடி ஒளிந்து இருட்டு தேடும்....ஒளி காணா மனிதன் போல எப்போதும் மறைந்து நின்று விளையாடுவதே பழக்கமாய்ப்//
Nice one.
நல்லா இருக்கு சூப்பர்
அருமையான பகிர்வு..
அன்பு, பாசம் எல்லாத்தையும் காதல் என்ற வார்த்தையால் பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன். சரியா? காதல் இல்லேன்னா உலகமே இல்லை.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த