Skip to main content

நிறம்....!





















உடம்பெல்லாம் ஒரு எரிச்சல் படர்ந்திருக்கிறது. மனம் வெறுமையாய் பேந்த பேந்த என்னையே பார்க்கிறது. வெளியே சென்று சுற்றி சுற்றி அதற்கும் அலுப்பு வந்து விட்டதை உணர முடிந்தது. அப்படியே இரு என்று சொல்லக்கூட தோணவில்லை எனக்கு....ஏதாவது சொன்னால் அந்த இடத்திலிருந்து கிளைத்து விசுவரூபமெடுத்து மீண்டும் ஆட்டம் காட்டும்.

அப்படியே இருக்கட்டும்....என்று தீர்மானித்து விட்டு வெறுமனே விழிகளை விரித்து அங்கும் இங்கும் பார்வை போக… பட்டு எதிரொளித்த பொருட்கள் எல்லாம் வெறுமனே தொடர்பற்று பொருட்களாகவே இருந்தனவன்றி எந்த வித விஸ்தாரிப்பும் இல்லை.

ஆமாம். மனம் ஈடு படவில்லையெனில்....அங்கே விரிவாக்கம் இல்லை. இதில் ஒரு சுகம் இருப்பது தெரிந்தது. எதிரில் வரும் ஆள், குறுக்கே ஓடும் நாய், சாலையில் கடக்கும் ஆட்டோ, பக்கத்தில் டீக்கடையில் இருக்கும் கூட்டம் எல்லாமே..இருந்தன... அவ்வளவே....கண்டேன் அவ்வளவே....! வெற்றுக் கூடுகளாய் காட்சிகள்...

எனக்கும் புறத்தில் இருக்கும் எதுவிற்கும் தொடர்பில்லை. எப்போதுமே இருப்பதில்லை என்பது நிதர்சனம் என்றாலும் மனதின் பரபரப்பில் எல்லாமே நமக்காக நிகழ்வது போலவும், எல்லோருமே நமக்காக வாழ்கிறார்கள் என்று நினைத்துக் கொள்கிறோம்.

உறவுகளும் இன்ன பிற தொடர்புகளும் தேவையின் அடிப்படையில் ஏற்படுபவை. எல்லா உறவுகளும் என்று சொல்லுமிடத்தில் எல்லாமே அடக்கமாகிவிடுகிறது. உண்மையில் இது ஒரு மிகப்பெரிய நாடகம். குடும்பம், பிள்ளை, அம்மா, அப்பா, நண்பன், தெரு, ஊர், நாடு, என்று விரிந்து விரிந்து பரந்து நடக்கும் நாடகம்.

நாடகத்தில் பங்கெடுத்து, நாடகமே காட்சியாகி விட அதை சுற்றி சுழலும் நிகழ்வைத்தான் வாழ்க்கை என்று மனிதர்கள் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். புறகாட்சிகளின் வெறுமையை மனமில்லாமல் உணர மனிதர்களின் பேச்சும் சிரிப்பும், கோபமும் வெறு சாவி கொடுத்த பொம்மையிலிருந்து வெளிப்பட்டு வருவது போன்றே தெரிந்தது.

பக்தியாய் இருப்பவன் ஒரு நடிப்பு என்றால், அதை மறுத்து பேச ஒரு நடிப்பு, வியாபாரம் செய்ய ஒரு நடிப்பு அதை பயிற்றுவிக்க பள்ளிகளும் பாடங்களும் என்று எல்லாவற்றின் மையத்திலும் வயிறும் பசியும் இருக்கிறது. வயிறு நிறைக்கப்பட்டவுடன் அடுத்த தேவைகள் முன்னிலைக்கு வருகின்றன. இப்படி படிப்படியாக ஒவ்வொரு தேவையும் திணிக்கப்பட்டதே அன்றி அடிப்படையில் உணவும் உயிர் வாழ்தலும் அதன் பின்னணியில் கற்பிக்கப்பட்ட மானமும் மட்டுமே இருக்கிறது.

உயிர்வாழும் வேட்கைக்கு அடுத்த மிகப்பெரிய வேட்கையாய் காமம் இருக்கிறது. காமத்திற்காக பொருளீட்டலும், பொருளீட்டலுக்காக தகுதி மேம்படுத்துதலும், அதற்கான போட்டியும், போட்டியின் போது கர்வமும், கர்வத்திலிருந்து கோபமும், கோபத்திலிருந்து வன்முறையும், வன்முறையிலிருந்து எல்லா பிரச்சனைகளும் உருவாகி அடிப்படை தேவையான உயிர் வாழ்தலுக்கு எதிராக போய் விடுகின்றன.

இவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த மனம்....மெல்ல விழித்து எட்டிப்பார்த்தது.. ஏதோ சொல்ல நினைத்தது....சலனமின்றி ஒரு வெறித்தனமான உற்று நோக்கலுக்குப் பிறகு மூலையில் போய் சுருண்டு கொண்டது. இரைச்சலின்றி அந்த பாதாளத்துக்குள் விழுந்து கொண்டிருந்தேன்...அதாள பாதாளம்.... என் மூச்சு சீரானது....

எது இலக்கு என்று தெரியாமல் சென்று கொண்டே இருக்கிறது...வேகமாய் செல்வது போன்ற உணர்வு தடைபட்டு...இயக்கம் இல்லாதது போல உணரப்பட்டது. எது உணர்ந்தது? தெரியவில்லை. இயக்கத்தின் எல்லைகளும் கோட்பாடுகளும் வரையறுத்தலும் இல்லாத போது நகர்தலே இல்லாத மாதிரி இருக்கிறது.

இலக்குகள் இல்லாமல் போனதால் காலம் இல்லை. காலம் இல்லாமல் போனதால் மனம் இல்லை. மனம் இல்லாமல் போனதால் நான் என்ற எண்ணம் இல்லை. நான் இல்லாமல் போனதால் எல்லாவற்றிலும் பரவிருந்ததை அறிய முடிந்தது...அந்த அறிதலை பகிரவும், மகிழவும் ஒன்றுமில்லாமல்...மொத்த இருப்பிலேயே எல்லாம் நிகழ்ந்து கொண்டிருந்தது...... சுவற்றில் சாந்திருந்த ஒரு உராய்வான உணர்வும் இந்த எல்லா உணர்வோடும் சேர்ந்து மெலிதாய் தொடந்து கொண்டிருந்தது.....

யாரோ யாரையோ வேகமாக கூவி அழைக்க......எங்கேயோ போய்க் கொண்டிருந்த..... உணர்வுகள்....குய்யோ முறையோ என்று கதறிக் கொண்டு..உடலுக்குள் பாய..பாய்ந்த வேகத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்க... இதயத்திற்கு தீடீர் என்று பாய்ந்த இரத்தம் அதன் இயக்கத்தை வேகமாக்க.... துடித்து விழித்தேன்....மனம் வேகமாய் வெளிவந்து எங்கிருந்து சப்தம் யார் கத்தியது ? என்னவாயிருக்கும்? எதும் பிரச்சினையா? என்று கேள்விகள் கேட்டு வெளியே பரவத்தொடங்கியது.....

ஆத்மா அடி ஆழத்தில் போய் பதுங்கிக் கொண்டது....சராசரியில் கலந்து நான்... இதோ...என் பெயரோடு கூடிய உறவோடு கூடிய அகங்கார சமுதாய ஓட்டத்தில் மீண்டும் ஓடத் துவங்கிவிட்டேன்....

நிறமே இல்லாத நிதர்சனத்தில் கற்பனையாய் எத்தனை நிறங்கள்.....என்ற கேள்வியோடு நடத்திக் கொண்டிருக்கிறேன் நித்தம் என் ஓட்டங்களை....!


தேவா. S

Comments

sakthi said…
உறவுகளும் இன்ன பிற தொடர்புகளும் தேவையின் அடிப்படையில் ஏற்படுபவை. எல்லா உறவுகளும் என்று சொல்லுமிடத்தில் எல்லாமே அடக்கமாகிவிடுகிறது. உண்மையில் இது ஒரு மிகப்பெரிய நாடகம். குடும்பம், பிள்ளை, அம்மா, அப்பா, நண்பன், தெரு, ஊர், நாடு, என்று விரிந்து விரிந்து பரந்து நடக்கும் நாடகம்.

இப்போது தான் இதை பற்றி சிந்தித்து கொண்டிருந்தேன்

வியக்க வைக்கும் பதிவு தேவ்
@தேவா

நல்லா இருக்கு மாப்ஸ்!
//உயிர்வாழும் வேட்கைக்கு அடுத்த மிகப்பெரிய வேட்கையாய் காமம் இருக்கிறது. காமத்திற்காக பொருளீட்டலும், பொருளீட்டலுக்காக தகுதி மேம்படுத்துதலும், அதற்கான போட்டியும், போட்டியின் போது கர்வமும், கர்வத்திலிருந்து கோபமும், கோபத்திலிருந்து வன்முறையும், வன்முறையிலிருந்து எல்லா பிரச்சனைகளும் உருவாகி அடிப்படை தேவையான உயிர் வாழ்தலுக்கு எதிராக போய் விடுகின்றன//

எனக்கு பிடித்த வரிகள் அண்ணா.நூறு சதவீதம் உண்மை மேல சொன்ன வரிகள் .......................
bogan said…
ஆயுர்வேதத்தில் இதை அருசி என்று சொல்வார்கள்.உடலில் சில பிரச்சினைகள் வரும் முன்பு இது போல் வரலாம்.[பயந்துடாதீங்க]அல்லது ஒரு ஆன்மீகத் தேடலின் தொடக்கமாகக் கூட இருக்கலாம்.கீதையில் அர்ச்சுனனுக்கு நிகழ்ந்தது போல..[ரொம்ப சொரியறேனோ ..ஆன்மீகம் னு ஊட்டிருன்தீன்களே.அதான்]
//பக்தியாய் இருப்பவன் ஒரு நடிப்பு என்றால், அதை மறுத்து பேச ஒரு நடிப்பு, வியாபாரம் செய்ய ஒரு நடிப்பு அதை பயிற்றுவிக்க பள்ளிகளும் பாடங்களும் என்று எல்லாவற்றின் மையத்திலும் வயிறும் பசியும் இருக்கிறது. வயிறு நிறைக்கப்பட்டவுடன் அடுத்த தேவைகள் முன்னிலைக்கு வருகின்றன. இப்படி படிப்படியாக ஒவ்வொரு தேவையும் திணிக்கப்பட்டதே அன்றி அடிப்படையில் உணவும் உயிர் வாழ்தலும் அதன் பின்னணியில் கற்பிக்கப்பட்ட மானமும் மட்டுமே இருக்கிறது.//

நிச்சயம் எல்லாமே நடிப்புதான் அண்ணா ., தான் சொல்வதுதான் உண்மை என்று ஒன்றும் , இல்லை இல்லை அது தவறு என்று மற்றொன்றும் போட்டி போடுவதும் நடிப்பின் வழக்கமாகிப் போனது. நாடக நடிப்பிற்கும் , இங்கே நடக்கும் நடிப்பிற்கும் பெரிதும் வித்தியாசம் கிடையாது .. நாடகம் நடிக்கும் போது தான் நடிக்கிறேன் என்று நினைக்கின்றோம் நமது வாழ்க்கையே ஒரு நடிப்புதான் என்று அறியாமல்.!!
வினோ said…
அண்ணே எதைன்னு எடுத்து இது நல்லா இருக்குன்னு சொல்லறது.. அனைத்தும் அப்படியே உள்வாங்கி அமைதியா உணர முடிகிறது..
நிறம் அப்டின்னா தமிழ்ல கலர் தான?
//உடம்பெல்லாம் ஒரு எரிச்சல் படர்ந்திருக்கிறது. //

இச்கார்ட் use பண்ணுங்க,.
உணவு
உயிர்
காமம்
கர்வம்
கோபம்
வன்முறை

இப்படி கோர்வையாக கொண்டு சென்று மறுபடி உயிர் வாழ்தலுக்கு எதிராக போவதாக சொல்லி இருப்பது அருமை அண்ணா
//யாரோ யாரையோ வேகமாக கூவி அழைக்க......எங்கேயோ போய்க் கொண்டிருந்த..... உணர்வுகள்....குய்யோ முறையோ என்று கதறிக் கொண்டு..உடலுக்குள் பாய..பாய்ந்த வேகத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்க... இதயத்திற்கு தீடீர் என்று பாய்ந்த இரத்தம் அதன் இயக்கத்தை வேகமாக்க.... துடித்து விழித்தேன்....மனம் வேகமாய் வெளிவந்து எங்கிருந்து சப்தம் யார் கத்தியது ? என்னவாயிருக்கும்? எதும் பிரச்சினையா? என்று கேள்விகள் கேட்டு வெளியே பரவத்தொடங்கியது.....//

நான் பாட்டுக்கும் உள்ளார போய்கிட்டிருக்கேன் திடீர்னு வெளியார கூட்டிக்கிட்டு வந்துட்டீங்க உங்களோட சேர்த்து என்னையும்.
உள்முகப் பார்வையில் கிளைக்கும் சொற்கள் எப்போதும் ஒரு வசீகரத்தைக் கொண்டிருக்கின்றன

தனக்குள் நிகழும் தர்க்கமும் தத்துவார்த்தமும் தீர்ந்த பின் கிடைக்கும் ஆழ்ந்த மௌனம் ஒரு குழந்தையின் பசிதீர்ந்த உறக்கத்தைப் போல வாய்க்கக் கூடும்

நன்று வெற்றிடத்தை நிரப்பும் சொற்கள்
அச்சச்சோ நான் முதலில் போட்ட கமெண்ட் எங்க ?:(
எதற்காக எங்கே செல்கிறோம் என தீர்மானமாக தெரியாமல் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. எப்போதாவது இதைப் பற்றி யோசிக்கும்பொழுது குழப்பம்தான் மிஞ்சுகிறது. ஆழ்ந்து யோசித்தால் பயம் கூட ஏற்படுகிறது. மீண்டும் அந்த நிலை புரியா ஓட்டத்திற்குள்ளேயே சென்று விட வேண்டியுள்ளது. காட்டாற்றில் அடித்துச் செல்லும் மரக்கட்டை போல் இலக்குகள் புரியாமல் செல்கிறோம்.
ஆள் பாக்க ஜாலி டைப் மாதிரி இருக்கீங்க ,ஆனா பதிவும் ,கருத்துக்களும் செம சீரியஸ்,வாழ்த்துக்கள் சார்
Kousalya Raj said…
" ஒரு பாதையில் முதல் முறை நடக்கும் போது தான் கல் , முள் எல்லாம் காலை குத்தும் . அதை எடுத்து போட்டுட்டு நடந்தோம் என்றால் அடுத்த தடவை அந்த பாதை நமக்கு அத்தனை சிரமம் தராது "

இப்படியும் வாழ்க்கையை புரிந்து நடந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு வரியிலும் வாழ்க்கை மீதான பிடிப்பும், வெறுப்பும் சமமாக தெரிகிறது

:))
தனிமையில் ஒரு இதமான் அலசல். பாராட்டுக்கள்
இந்த உலகம் ஒரு நாடக மேடை. அதில் நாம் நடிகர்கள்...(ஷேக்ஸ்பியரின் வரிகள்)

வாழ்வின் ஆசைகள் கூட கூட நம்மை நாம் தேடுவது குறைகிறது
இவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த மனம்....மெல்ல விழித்து எட்டிப்பார்த்தது.. ஏதோ சொல்ல நினைத்தது....சலனமின்றி ஒரு வெறித்தனமான உற்று நோக்கலுக்குப் பிறகு மூலையில் போய் சுருண்டு கொண்டது. இரைச்சலின்றி அந்த பாதாளத்துக்குள் விழுந்து கொண்டிருந்தேன்...அதாள பாதாளம்.... என் மூச்சு சீரானது....
தேவா! உங்களுக்கு தெரிந்தோ தெரியாமாலோ உங்களுக்குள் அருமையான ஒரு ஆழ்ந்த தியானம் நடந்துக்கொண்டு இருக்கிறது.

இந்த நிலையை நீங்கள் வளர்க்கவும் விரும்பலாம். அல்லது வேண்டாம் என்றும் விட்டுவிடலாம். ஆனால் அப்படி வேண்டாம் என்று விட்டுவிட்டாலும் அது சிலக் காலத்திற்கு மட்டும் தான் சாத்தியம். மறுபடியும் ஆழ்ந்த நிலைக்கு தானே உங்களைக் கூட்டிப் போகும். உங்கள் மனது நீண்ட, ஆழ்ந்த, அமைதியைக் காணும் வரை ஓயாது. அது மட்டும் உறுதி!

வெளி்யே நடப்பதெல்லாம் ஏதோ வேண்டாத விஷயமாக, உங்களுக்குச் சம்மதமில்லாததாகக் கூடத் தோன்றலாம். ஆன்மீகப் பாதையில் அடி எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் ஆன்மீக பாதை உங்களுக்கு மெய்ஞானத்தை வழங்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.

இதைப்பற்றி எல்லாம் தெரிய வேண்டுமானால் http://dhammaoverground.org சென்றுப் பார்க்கலாம்.
என் கருத்தைப் பற்றி உங்களின் பதிலை அறிய ஆவல்.
"மனம் வெறுமையாய் பேந்த பேந்த என்னையே பார்க்கிறது. வெளியே சென்று சுற்றி சுற்றி அதற்கும் அலுப்பு வந்து விட்டதை உணர முடிந்தது. அப்படியே இரு என்று சொல்லக்கூட தோணவில்லை எனக்கு....ஏதாவது சொன்னால் அந்த இடத்திலிருந்து கிளைத்து விசுவரூபமெடுத்து மீண்டும் ஆட்டம் காட்டும்".
well dheva.,keep, write., and continue the same

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த