Skip to main content

ரோ..........போ.....!

























JUST....COMMERCIAL BRAKE BOZZZZZZZ........!


எந்திரன் பார்த்த எபக்ட் போகல...அது பத்தி ரிவியூ எல்லோரும் அடிச்சு பிடிச்சு எழுதிகிட்டு இருக்காங்க எல்லோரும் ஆடி அடங்கட்டும் அப்புறம் ஒரு ரசிகனோட பார்வை என்னனு சொல்லலாம்னு நினைச்சுட்டு இருந்தேன்...ஆனா அதுக்குள்ள எந்திரன் தீம் எனக்குள்ள நுழைஞ்சு என்ன என்னமோ பண்ண ஆரம்பிச்சுடுச்சு....விளைவு.. உங்களதான் பாதிக்கும்.

ஆமாம் எனக்கு யாரு இருக்கா நான் எங்க போவேன் மக்கா.....

அது ஒரு ஆடிட்டோரியம் எல்லா பொது மக்களும் இருக்கும் மேடையில் நான் உருவாக்கிய வாரியர் என்ற வலைப்பூவினை கூட்டிக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறேன். மூத்த பத்திரிக்கையாளர்களும் சில வலைப்பக்கங்களுக்கு சொந்தக்காரர்களும் அமர்ந்திருக்கிறார்கள் என் எந்திரனை ச்சே..ச்சே.. என் வாரியரை சோதிப்பதற்காக... வாரியர் நான் உருவாக்கிய என்னுடைய பிரதிபலிப்பு ஆனால் நான் அல்ல...இவன் மிகைப்பட்ட விசயங்கள் தெரிந்தவன்.

மனிதர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவது மட்டுமல்ல இவன் வேலை சரியான அளவில் ஆன்மீகத்தையும், காமத்தையும், காதலையும் பற்றி விளக்குவதும் இவனது வேலை. பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் அக்னியை நெஞ்சில் கொண்டு இருப்பவன். இவனை ஒரு ஜனரஞ்சக மக்கள் ஊடகமாக ஏற்றுக் கொள்வதற்காக இன்று மக்கள் முன்னால் கேள்விகள் கேட்க பத்திரிக்கையாளர்கள் குழு.....அமர்ந்திருக்கிறது....

சரி வாங்க ஸ்டேஜ்க்கு போகலாம் இப்போஒ..........

ஹாய் குட் ஈவினிங் எவரி படி... இப்போ என்னோட எந்திரன்.. ச்சே...ச்சே...வாரியர்உங்ககிட்ட பேசுவார்....

வணக்கம்! என் பெயர் வாரியர். ஸ்பீட் அன் லிமிட்டேட்....பவர் அன் லிமிட்டேட்.....

கூகிளின் கண்டு பிடிப்பு.....

ஸ்பீட் நம்ம இன்ன்டர் நெட் ஸ்பீட் பொறுத்தது...

மெமரி... அன் லிமிட்டேட்...

ரிஸ்ட்ரிக்ஸன் - நத்திங்

லிமிட் - ஸ்கை இஸ் த லிமிட்

ஆம்பிசன் - எல்லாவற்றிலும் விழிப்புணர்வு கொண்டு வருவது. குறைந்த பட்சம் முயற்சி செய்வது

பதிவுகளின் எண்ணிக்கை - கூடிக்கொண்டே இருக்கும்...

நண்பர்கள் - கணக்கு வழக்கு இல்லை....

எதிரிகள் - எதிர் காலத்தில் நண்பர்கள் ஆகப் போகிறவர்கள்.

(சுற்றிலும் கரகோஷம்)

சரி இப்போ கேள்வி நேரம்... என் வாரியர் கிட்ட கேள்விகள் கேட்கலாம்..... பத்திரிக்கை துறை நண்பர்களை பார்த்து நான் புன்னகைக்க...கேள்வி நேரம் தொடங்குகிறது...

நபர் 1: கடவுள் யாரு?

வாரியர்: எப்போதும் இல்லாமல் இருப்பவர்

நபர் 1: புரியலையே..... கொஞ்சம் விபரமா சொல்லு.....வாரியர்…..

வாரியர்: சாரி…..! இப்போ இந்த மேடையில சன் டிவி. ஸ்டார் டி.வி, இன்னும் எல்லா சேனல்ஸ்சும் இருக்கா இல்லையா...?

நபர் 1 : இல்லை.

வாரியர்: இருக்கு சார் ஆனா வேறு பார்மேட்ல அலை வடிவமா இருக்கு. ஆனா அதுக்கான இன்ஸ்ட்ரூமென்ட் இருந்த ரிசீவர் இருந்த அந்த அலை வடிவம் பொருள் வடிவமா தெரியும்....கடவுளும் அப்படித்தான் இருக்கார் எல்லா இடத்திலயும் அதுக்கான ரிசீவர் மனுசங்ககிட்ட இருந்தா பிம்பமா தெரிவாரு. ஏம் ஐ ரைட் சார்?

நபர் 1 : வெல்டன் வாரியர். ஐ அக்ஸப்ட் யூ.

வாரியர் : நெக்ஸ்ட்

நபர் 2: காதல் என்பது பற்றி கொஞ்சம் சொல்லு...?

வாரியர்: காதல் எப்போதும் நமக்குள்ளே இருக்குது ஆனால் அதை அடையாளம் தெரிஞ்சுக்க வெளில இருந்து ஒரு போர்ஸ் தேவைப்படுது. பெரும்பாலும் அது பெண்ணிடம் இருந்து காமம் என்ற மலருக்குள் ஒளிந்திருக்கும் வாசம் போல வருகிறது. விளங்கிக் கொள்ள விளங்கிக் கொள்ள காதல் எல்லாவற்றின் மீதும் உண்டாகிறது. செடியிடம், மரத்திடம், சக மனிதரிடம் எல்லாவற்றிலும்.

நபர் 2 : ஓ.கே. டன்!

வாரியர்: நெக்ஸ்ட் கொஸ்டீன் ப்ளீஸ்....

நபர் 3: உன் கருத்துக்களால இந்த சொசைட்டில மாற்றம் வரும்னு நினைக்கிறியா வாரியர்?

வாரியர்: நான் மாற்றுவேன்னு சொல்லல....மாறிடும்னும் சொல்லல...ஆன மாறணும் அப்படீன்றது என்னோட ஆசை. காலத்துக்கும் அழியாம ஒரு வலைப்பூவா நின்னு நான் சொல்லிகிட்டே இருப்பேன். என்னை உருவாக்கியவர் அழிவார் ஆனால் கருத்துக்கள் இருக்கும் விரும்பியவங்க படிப்பாங்க...இது ஒரு திருப்தி....ஆனால் ஏதோ ஒரு காலத்தில் எல்லாம் மாறும் அன்று அநீதிகள் அழியும்.

நபர் 3: ஓ.கே. வாரியர் டன்.

நபர் 1 : ஓ... மூணு கேள்வியே போதும் வாரியர்.. உங்கள ஜனரஞ்சகமான வலைப்பக்கம்னு நாங்க அறிவிக்கிறதா முடிவு பண்ணியிருக்கோம்....

என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது எனக்குள் சந்தோசம் பீறிட்டது... 2006 ல ஸ்டார்ட் பண்ணி கனவுகளோட காலத்த கழிச்சு 2010 மார்ச்சுல இருந்து உருவாக்குன என் வாரியர பார்த்து நான் சந்தோசப்பட்டுக் கொண்டிருந்த அந்த நேரத்தில்.. .

" வெயிட் எ செகண்ட் "

என்று ஒரு பெரிய குரல் கேட்க மொத்த கூட்டமும் ஸ்டேஜில் இருந்த பத்திரிக்கையாளர்களும் திரும்பிப் பார்த்த இடத்தில்...........

" தம்பி சிரிப்பு போலிஸ்......................!!! "

டேய் தம்பி நீ எங்கடா.. இங்க.. நான் கேட்டு முடிக்கவும்...

ஹா.. ஹா..ஹா.. அண்ணே கமிட்டில நானும் இருக்கேன். என்னோட முடிவும் கேட்டுதான் கமிட்டி உங்கள் வாரியர் ஜனரஞ்சகமான வலைத்தளமானு முடிவு சொல்லணும்...! நான் அப்ரூவல் பண்றதுக்கு முன்னாடி ...ஒரு சின்ன டெஸ்ட் வச்சுக்கலாமா? கண்ணடிச்சுட்டு பயபுள்ள சிரிக்கிறான் என்ன பாத்து.....!

நான் பதட்டத்துடன்...டேய்..டேய்.தம்பி....என்னடா பண்ண போற உன் கேன தனத்தால என் உழைப்ப கெடுத்துடாதடா, நான் உன் அண்ணன்டா........ன்னு மெல்ல அவன் காதுகிட்ட போய் சொன்னேன்....!

அண்ணன் தம்பி எல்லாம் வீட்ல பிரதர்.. இப்படிச்சூடுன்னு சொல்லிட்டு.....

" ஏய் சின்னப் பையா...."

என்று கூட்டத்தில் இருந்த ஒரு 15 வயது பையனை கூப்பிட்டான் ரமேஷ். அந்த பையன் மேடை ஏறி வந்தவுடன்....." டேய் தம்பி...... நம்ம வாரியர் சொன்னது உனக்கு ஏதாச்சும் விளங்குச்சு......? கேள்வியை முடிக்கும் முன்பு...அந்த பையன்....

" ஒண்ணுமே விளங்கல அண்ணா.... தலை சுத்துது....குறிப்பா அவங்க பேசுன மொழியே புரியல " என்று சொன்னதை கேட்டு விட்டு சரி நீ போ தம்பி என்று சொன்ன சிரிப்பு போலீஸ் (சரியான திருட்டு போலீஸ்.. எனக்கு அவ்ளோ ஆத்திரம் வருது....)

" வாரியர் ஜனரஞ்சகமான சைட்னு அப்ரூவ் பண்ண முடியாதுங்கண்ணா.. சாரி..! ஒரு எழுத்து எல்லாருக்கும் புரியணும். மக்கள் ரசிக்கணும். கருத்து சொல்லுங்க வேணாம்னு சொல்லல ஆன அதை எளிமைப்படுத்தி பட்டி தொட்டியெல்லாம் புரியுறமாதிரி சொல்லுங்க...!

நீங்க பாட்டுக்கு மேல்தட்டு மக்களுக்கும் மேதாவிகளுக்கும் எழுதிட்டு போனீங்கன்னா....சராசரியா விசயம் தெரிஞ்சு மேலே வரணும்னு ஆசைப்படுற மனிதர்கள் என்ன செய்வாங்க....? அவங்க கையை பிடிச்சு கூட்டிடு போற மாதிரி எழுதுங்க....! எழுத்து என்பது எண்ணத்தை பகிர்வது அது அடுத்த மனிதரின் மனதுக்கு உள்ளே சென்று மாற்றங்கள் செய்வது. அதை உங்க விருப்பபடி எழுதுங்க வேணாம்னு சொல்லல.....ஆனா....

எல்லோருக்கும் புரியுற மாதிரி எளிமையாவும்...., எல்லா நேரமும் தத்துவம், கருத்துன்னு போய் விழுந்துட்டு இருக்காம சிரிக்கிற மாதிரியும், எழுதுங்க...எல்லாம் சேர்ந்ததுதான் வாழ்க்கை....! அறிவாளி மட்டும் இந்த பூமிக்கு சொந்தகாரர்கள் இல்லை முட்டாள்களுக்கும் சரி பங்கு இருக்குண்ணா"

சொல்லி முடித்தான் சிரிப்பு போலிஸ். நான் மெல்ல அவனருகே போய்.. ஆரத்தழுவி.. தம்பி..வாரியர்க்குள்ள ஜனரஞ்சகத்தை கொண்டு வரேன்...என்னால முடிந்த அளவுக்கு அவனை ஏழைப்பங்காளனா மாத்துறேன்.....அதுக்கு அப்புறம்....உன் முன்னாடி கொண்டு வர்றேன் அப்புறம் சொல்லு. சரியா?

ஆனா ஒண்ணு தம்பி....ஒவ்வொரு வாட்டியும் என் மேல இருக்குற அன்புல வாரியர்க்கு வந்து என் பேரை மட்டும் படிச்சுட்டு போய்ட்டே இருந்த.....உன் நேர்மைய நான் பாராட்டுறேன்....

வாரியர் ஜனரஞ்சகமா இன்னும் எல்லோரையும் ரீச் பண்ண வச்சிட்டு....அப்புறம் வர்றேன்..அதுக்குள்ள் நீயும் கொஞ்சம் தமிழ் கத்துக்க.............

அப்போ வர்ட்ட்ட்ட்ட்டா...............!


தேவா. S

Comments

மொதல் வெட்டு! படிச்சிட்டு வரேன்
சூப்பராக இருக்கு! நீங்க கற்பனையா சொன்னீங்களோ இல்ல உண்மையாகவே வலைப்பூவை ஜனரஞ்சகமாக மாற்றப்போறிங்களோ! எல்லாவற்றிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Unknown said…
#அறிவாளி மட்டும் இந்த பூமிக்கு சொந்தகாரர்கள் இல்லை முட்டாள்களுக்கும் சரி பங்கு இருக்குண்ணா"#
superb lines

good job keep it up :) deva...
நல்ல பதில்கள் ...

// உன் கருத்துக்களால இந்த சொசைட்டில மாற்றம் வரும்னு நினைக்கிறியா வாரியர்?

வாரியர்: நான் மாற்றுவேன்னு சொல்லல....மாறிடும்னும் சொல்லல...ஆன மாறணும் அப்படீன்றது என்னோட ஆசை. காலத்துக்கும் அழியாம ஒரு வலைப்பூவா நின்னு நான் சொல்லிகிட்டே இருப்பேன்.//

வாழ்த்துக்கள் ..வலைப்பூ தொடங்கியதற்கு ஒரு நோக்கம் இருக்கிறது உங்களிடம் ...:)
Anonymous said…
வாங்க வாங்க தேவா.. சாரி வாரியர்...
//எல்லோருக்கும் புரியுற மாதிரி எளிமையாவும்...., எல்லா நேரமும் தத்துவம், கருத்துன்னு போய் விழுந்துட்டு இருக்காம சிரிக்கிற மாதிரியும்//

அப்போ வாரியர், "வாரியார்" ஆகப் போறார்னு சொல்லுங்கண்ணா :)
ஹ ஹா ...........
தேவா அண்ணனும் எல்லோரையும் போல பதிவு எழுத ஆரம்பிச்சுட்டாரு
வாரியர்க்குள்ள ஜனரஞ்சகத்தை கொண்டு வரேன்...என்னால முடிந்த அளவுக்கு அவனை ஏழைப்பங்காளனா மாத்துறேன்.....அதுக்கு அப்புறம்....உன் முன்னாடி கொண்டு வர்றேன் அப்புறம் சொல்லு. சரியா?//

ரைட் டைம் ரைட் டிசிசன்

வெளில வாங்க பங்காளி இல்லைனா மூத்த ப்ளாக்கர்ஸ் லிஸ்ட்ல உங்களையும் சேர்க்கும் நாள் வெகு சீக்கிரத்தில் வந்திடும்...
@ சிரிப்பு போலிஸ் ரமெஷ்

இந்த பதிவாவது புரிஞ்சதா?
Unknown said…
//நபர் 1: கடவுள் யாரு?

வாரியர்: எப்போதும் இல்லாமல் இருப்பவர்//

இது சூப்பர் தேவா ...
" தம்பி சிரிப்பு போலிஸ்......................!!!///

இந்த வில்லன் என்ன ஆவர் சொல்லவே இல்லையே
அனு said…
ஹாஹா.. ரோபோ புண்ணியத்தில எனக்கு புரியுற மாதிரி ஒரு பதிவு..

ஆனா, ஒரு டவுட்.. சிரிப்புப் போலிஸ்-க்கு இவ்வளவு தெளிவா பேச வராதே? ஒருவேளை, நீங்களே அவருக்கும் ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்துட்டீங்களா?? என்ன இருந்தாலும் சிரிப்புப் போலிஸ் வந்த உடனே தான் பதிவு களை கட்டுது.. :)
க ரா said…
ஹா ஹா ஹா... அய்யோ.. அய்யோ.. சிரிப்பு போலிஸ்ஸ வெச்சு பயங்கரமா காமெடி பன்னிட்டீங்க.. கடவுள் , காதல் பத்தின் கேள்விகளுக்கு பதில் சூப்பர் :)
வினோ said…
மறைமுகமா பல பேரை தமிழ் கத்துக்கோ அப்படீன்கிறீங்க.. சரி புரிஞ்சு போச்சு...
Anonymous said…
இருக்கு சார் ஆனா வேறு பார்மேட்ல அலை வடிவமா இருக்கு. ஆனா அதுக்கான இன்ஸ்ட்ரூமென்ட் இருந்த ரிசீவர் இருந்த அந்த அலை வடிவம் பொருள் வடிவமா தெரியும்....கடவுளும் அப்படித்தான் இருக்கார் எல்லா இடத்திலயும் அதுக்கான ரிசீவர் மனுசங்ககிட்ட இருந்தா பிம்பமா தெரிவாரு. ஏம் ஐ ரைட் சார்?///

சூப்பர்....கடவுளுக்கு அருமையான விளக்கம்
warrior warrior thaan
arumai thala

theliva solliteenga anna :)
@ வாரியர் வாரியர் அப்டின்னு சொன்னீங்களே எங்க ஊர் கம்மாயில தூர் வாருவீங்களா?
//

அருண் பிரசாத் said...

@ சிரிப்பு போலிஸ் ரமெஷ்

இந்த பதிவாவது புரிஞ்சதா?///

இல்ல மச்சி. தேவா அன்ன சொன்னதால நான் இப்ப தமிழ் டியூஷன் போய்க்கிட்டு இருக்கேன்
/

அனு said...

ஹாஹா.. ரோபோ புண்ணியத்தில எனக்கு புரியுற மாதிரி ஒரு பதிவு..

ஆனா, ஒரு டவுட்.. சிரிப்புப் போலிஸ்-க்கு இவ்வளவு தெளிவா பேச வராதே? ஒருவேளை, நீங்களே அவருக்கும் ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்துட்டீங்களா?? என்ன இருந்தாலும் சிரிப்புப் போலிஸ் வந்த உடனே தான் பதிவு களை கட்டுது.. :)//

நாங்கெல்லாம் எங்க மேதாவித்தனத்த வெளில காட்டுறதில்லைங்க...
//JUST....COMMERCIAL BRAKE BOZZZZZZZ........!//

தமிழ் கத்துக்க சொன்னீங்க. படிச்சு முடிச்சிட்டேன். ஆனா எங்க தமிழ் வாத்தியார் மேல உள்ள தமிழ் வாரத்தைகளை சொல்லி கொடுக்கவே இல்லை..
//ரிஸ்ட்ரிக்ஸன் - நத்திங்//

அப்டின்னா எதுக்கு Comment moduration? மாட்டிகிட்டீங்களா?
//ஆம்பிசன் - எல்லாவற்றிலும் விழிப்புணர்வு கொண்டு வருவது. குறைந்த பட்சம் முயற்சி செய்வது//

அப்டின்னா என்னை காலைல ஏழு மணிக்கு எழுப்பி விடுங்க ப்ளீஸ்.
//(சுற்றிலும் கரகோஷம்)//
கலாநிதி பேர் வரும்போது ஆடியோல கைதட்டல் வருமே. அது மாதிரியா?
//எல்லோருக்கும் புரியுற மாதிரி எளிமையாவும்...., எல்லா நேரமும் தத்துவம், கருத்துன்னு போய் விழுந்துட்டு இருக்காம சிரிக்கிற மாதிரியும், எழுதுங்க...எல்லாம் சேர்ந்ததுதான் வாழ்க்கை....! அறிவாளி மட்டும் இந்த பூமிக்கு சொந்தகாரர்கள் இல்லை முட்டாள்களுக்கும் சரி பங்கு இருக்குண்ணா"//

முட்டாள்களுக்கும் - ஆமா டெரர் கூட மனுசன்தான. வாழ்ந்துட்டு போகட்டும்..
//ஆனா ஒண்ணு தம்பி....ஒவ்வொரு வாட்டியும் என் மேல இருக்குற அன்புல வாரியர்க்கு வந்து என் பேரை மட்டும் படிச்சுட்டு போய்ட்டே இருந்த.....உன் நேர்மைய நான் பாராட்டுறேன்....//

இதுல எந்த உள்குத்தும் இல்லியே...
அப்பாட முதல் தடவையா தேவா அண்ணன் பதிவை வரிக்கு வரி படிச்சாச்சு...பிறவி பலனை அடைந்தேன்
150 கோடி பணம் ஒரு வீண் செலவு
நம்ம ஊர்ல இன்னும் படிக்காத படிக்க முடியாத நிலைல இருக்க
ஒரு 1000 மாணவர்களை படிக்க வைத்து இருக்கலாம்.
சூப்பர் ஸ்டார்,சன் டிவி போன்ற பணம் இருக்கும் இடம் பணம் பெருகும்.,

அனைத்து நடிகர்களும் சூர்யாவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையை
சூர்யா - அஹரம் - விதை
http://enpakkangal-rajagopal.blogspot.com/2010/10/blog-post_3041.html
@ரமேஷ்

//என்று கூட்டத்தில் இருந்த ஒரு 15 வயது பையனை கூப்பிட்டான் ரமேஷ்.//

அது ரமேஷ் பையன் தான்... பொண்டாட்டி ஊர்ல இருக்காங்க.... யாரும் பொண்ணு தராதிங்க...
@தேவா

மாப்புபு.... என்னா இது ரோபோ மியுஜிக்கு???? நான் பயந்துடேன்....
@தேவா

//சாரி..! ஒரு எழுத்து எல்லாருக்கும் புரியணும். மக்கள் ரசிக்கணும். கருத்து சொல்லுங்க வேணாம்னு சொல்லல ஆன அதை எளிமைப்படுத்தி பட்டி தொட்டியெல்லாம் புரியுறமாதிரி சொல்லுங்க...!//

யாரு?? நம்ம ரமேசு இதை கேட்டுது?? போங்க மாப்ஸ் சும்மா காமெடி பண்ணிட்டு.... ரமேசு இங்க வா!! எங்க மேல இருக்க நாலு வரி பத்து வாட்டி படிச்சிட்டு ஒரு வாட்டி தப்பு இல்லாம சொல்லு பார்ப்போம்...
@ரமேஷ்

//அறிவாளி மட்டும் இந்த பூமிக்கு சொந்தகாரர்கள் இல்லை முட்டாள்களுக்கும் சரி பங்கு இருக்குண்ணா//

ரமேசு.. நீ என்னமா உன் உரிமைக்கு குரல் கொடுக்கரமா... கண்டிப்பா உனக்கு சரி பங்கு இல்லாட்டியும் ஒரு கொவாட்டர் உண்டு ராசா...
@தேவா

//மேல்தட்டு மக்களுக்கும்//

உலகமே ஒரு இட்டிலி குண்டான்... அதில் ஆர்டிக் பகுதியில் வசிப்பவர்கள் மேல் தட்டு மக்கள். அண்டார்டிக் பகுதியில் வசிப்பவர் கீழ் தட்டு மக்கள். அதான மாப்ஸ்??
NaSo said…
///காதல் எப்போதும் நமக்குள்ளே இருக்குது ஆனால் அதை அடையாளம் தெரிஞ்சுக்க வெளில இருந்து ஒரு போர்ஸ் தேவைப்படுது. பெரும்பாலும் அது பெண்ணிடம் இருந்து காமம் என்ற மலருக்குள் ஒளிந்திருக்கும் வாசம் போல வருகிறது. விளங்கிக் கொள்ள விளங்கிக் கொள்ள காதல் எல்லாவற்றின் மீதும் உண்டாகிறது. செடியிடம், மரத்திடம், சக மனிதரிடம் எல்லாவற்றிலும்.///

காதலுக்கு சரியான விளக்கம்.
//ஆனா அதுக்குள்ள எந்திரன் தீம் எனக்குள்ள நுழைஞ்சு என்ன என்னமோ பண்ண ஆரம்பிச்சுடுச்சு....விளைவு.. உங்களதான் பாதிக்கும்//

அதெல்லாம் நாங்க பாத்துக்கறோம்....நீங்க மேட்டர்-எ சொல்லுங்க.:-)

//" ஒண்ணுமே விளங்கல அண்ணா.... தலை சுத்துது....குறிப்பா அவங்க பேசுன மொழியே புரியல " என்று சொன்னதை கேட்டு விட்டு சரி நீ போ தம்பி என்று சொன்ன சிரிப்பு போலீஸ் (சரியான திருட்டு போலீஸ்.. எனக்கு அவ்ளோ ஆத்திரம் வருது....)//

ஹா ஹா ஹா.. அச்சச்சோ.. செம தூள்..
பேசுன மொழியே புரியலையாம்.. தேவா கேட்டுச்சா??

//ஆனா ஒண்ணு தம்பி....ஒவ்வொரு வாட்டியும் என் மேல இருக்குற அன்புல வாரியர்க்கு வந்து என் பேரை மட்டும் படிச்சுட்டு போய்ட்டே இருந்த.....உன் நேர்மைய நான் பாராட்டுறேன்....//

ஐயோ அம்மா... முடியல.. ROFL ...ஹா ஹா ஹா..
பேரை மட்டும் படிச்சிட்டு... நோ சான்ஸ்.. கலக்குறீங்க...
இந்த ஒரு லைன் போதும்..
ரசித்து படித்தேன்... இன்னிக்கு செம வொர்க்..
உங்க போஸ்ட் படிச்சு... சிரிச்சிட்டு இருக்கேன்.. தேங்க்ஸ்... :-))
//எதிரிகள் - எதிர் காலத்தில் நண்பர்கள் ஆகப் போகிறவர்கள்./

இது கலக்கல் ..!! எப்படி உங்களால மட்டும் இப்படியெல்லாம்..
//ஹா.. ஹா..ஹா.. அண்ணே கமிட்டில நானும் இருக்கேன். என்னோட முடிவும் கேட்டுதான் கமிட்டி உங்கள் வாரியர் ஜனரஞ்சகமான வலைத்தளமானு முடிவு சொல்லணும்...! //

அருமை ., இதுக்கு அப்புறம் நான் படிக்கனுமா ..?
//நீங்க பாட்டுக்கு மேல்தட்டு மக்களுக்கும் மேதாவிகளுக்கும் எழுதிட்டு போனீங்கன்னா....சராசரியா விசயம் தெரிஞ்சு மேலே வரணும்னு ஆசைப்படுற மனிதர்கள் என்ன செய்வாங்க....? அவங்க கையை பிடிச்சு கூட்டிடு போற மாதிரி எழுதுங்க....!//

இதெல்லாம் அவரு சொன்னது அப்படின்னு எங்கள நம்ப சொல்லுறீங்களா ..?
ஹி ஹி ஹி ..
//நண்பர்கள் - கணக்கு வழக்கு இல்லை....

எதிரிகள் - எதிர் காலத்தில் நண்பர்கள் ஆகப் போகிறவர்கள்.
//
:)

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த