
தினம் தினம் நிறைய மனிதர்களை சந்தித்துக் கொண்டே இருப்போம்.ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாய் ஒவ்வொரு விதமான அதிர்வலைகளை பரப்புபவராக இருக்கிறார்கள். சாந்தமாய் கருணையாய்,எல்லா திறன்களையும் உள்ளடக்கி அமைதியாய் பதிலளிக்க கூடியவராய் ஆழ்ந்த அமைதிக்கு சொந்தக்காரராய் அன்பை பகிர்பவராய் சிலர் இருந்து விடுகிறார்கள். பல நேரங்களில் இப்படிப்பட்ட மனிதர்களைச் சந்திக்கும் பொழுது என் மீது எனக்கு ரொம்பவே வெறுப்பு வருகிறது.
முயற்சிகள் செய்பவனாகவும், அகங்காராம் அழியாதவனாகவும், அதிர்ந்த பேச்சுக்கு சொந்தக்காரனாகவும், எல்லாம் எனக்குத் தெரியும் என்று காட்டிக் கொள்பதில் முனைப்பு உள்ளவனாகவும் அப்படிக் காட்டிக் கொள்வதற்காகவே நிறைய பேசுபவனாகவும் பல நேரங்களில் இருந்து விடுகிறேன். எப்படி மாறுவது என்று சிந்திப்பதில் கூட வந்து அமர்ந்து விடும் கர்வத்தை நான் எங்கே போய் கரைப்பது?
சிலரை ரோட்டில் சந்தித்து அவசர வேலைகளுக்கு நடுவே பேசிக் கொண்டே இருப்போம். அந்த மனிதர் நிறைய அன்பினையும் அமைதியையும், சந்தோசத்தையும் நமக்கு பரப்பிக் கொண்டே இருப்பார். நேரம் போவதே தெரியாமல் இன்னும் ஒரு 5 நிமிடம் பேசலாம் என்று எண்ணி எண்ணி நேரத்தை நாம் நீட்டித்துக் கொண்டே இருப்போம். இதற்கு அந்த மனிதரின் ஆழ்ந்த எண்ணமும் நம் மீது உள்ள விருப்பமும் அகந்தையற்ற மனமும்தானே காரணமாக இருக்க முடியும்.
இதற்கு மாறாக சிலரை பார்த்தால்.. அச்சச்சோ.. இவனா இவன் கிட்ட மாட்டின போச்சே என்று அலறி அடித்துக் கொண்டு ஓடுவோம். அப்படியே அவரிடம் மாட்டிக் கொண்டால் அவரின் சுயதம்பட்டம், மற்றும் அகந்தையான பேச்சு என்று எல்லாமே நம்மை எண்ணை சட்டியில் வைத்து பொறிப்பது போல பொறிக்க எப்போடா போவோம் என்று தோணும். இதற்கு காரணம் எதிராளியின் சுயவிமர்சனம்.. ஒரு ஆல் இந்தியா ரேடியோ விளம்பரம் மாதிரி தன்னைப்பற்றி அவர் அடித்துக் கொள்ளும் தம்பட்டத்தில் நம்மை கீழே தள்ளும் முயற்சிகள் இருப்பதுதான்.
வழியில் ஒரு நண்பரை பார்த்திருக்கிறார் மிஸ்டர் எக்ஸ். மிஸ்டர் எக்ஸ் ஹாய் ... ! ஹலோ சொன்னதோடு சரி.. மத்த படி வழியில் சந்தித்த அந்த நபர் விடாமல் ஒரு 1 மணி நேரம் அவரைப்பற்றியும் அவரது வீர தீர பரக்கிரமங்கள் பற்றியும் பேசிக் கொண்டே இருந்து இருக்கிறார். நமது நண்பர் எக்ஸின் காதில் ரத்தம் வராதது ஒன்று தான் குறை. ஒரு மணி நேரம் கழித்து பேசி முடித்த அந்த வழிப்பறி நண்பர்.. ( வழியில் சந்தித்து நமது நேரத்தை பறிப்பவரை இப்படித்தானே அழைக்க முடியும்...அவ்வ்வ்வ்வ்வ்) எல்லாம் பேசி விட்டு சொன்னாராம்.. நான் என்னைப் பற்றி பேசி முடித்துவிட்டேன்.. இனி நீங்கள் என்னைப் பற்றி பேசுங்கள் என்று........????!!!! நம்ம நண்பர் மிஸ்டர் எக்ஸ் தலை சுற்றி மயக்கமே போட்டு விழுந்து விட்டாராம்.
நான், நான் என்று அதிர்ந்து அதிர்ந்து தன்னைப் பற்றி பேசிப் பேசி வெற்றிலைப் போட்டுக் கொள்பவர்களுக்கு அதில் பயங்கர சுகம்... ஆனால் பாவம் கேட்பவர்கள் காதுகள் தான் ரத்த பெருக்கெடுத்து ஓடும்.
உலகம் பரந்து விரிந்தது. இதில் நீங்களும் நானும் வெறும் புள்ளிகள். எப்போ பார்த்தாலும் நம்மை முன்னிலைபடுத்தி வாழும் வாழ்க்கை எல்லோருக்கும் நலம் பயக்காது. எதிரில் காணும் மனிதரின் நலம் விசாரித்தலும் அவர்களின் பிரச்சினைகளை செவி கொடுத்து கேட்டலும் அக்கறையாக பதிலளித்தலும், இயன்ற அளவு அவர்களோடு செய்திகளை பகிர்ந்து கொள்ளுதலும் மேலும் அவர்களின் அனுமதியோடு பேசுதலும் நல்ல பண்பாக இருக்குமென்று நினைக்கிறேன்.
எவ்வளவுதான் பயிற்சி இருந்தாலும் பாழாய்ப்போன இந்த மனசு காலேஜ் கட்டடிசிட்டு தியேட்டர் போயி சினிமா பாக்குற மாதிரி.... நம்மளயே ஏமாத்திட்டு திமிரு பேச்சு பேச ஆரம்பிக்கிது...
இப்போ எல்லாம் செம கோவம் வருது சார் எனக்கு...? நானே மனசப்பாத்து கேள்வி கேட்டுக்குறேன்... என்ன அருகதை இருக்கு உனக்கு? இவ்ளோ மமதை உனக்கு? அப்துல் கலாம் மாதிரி பெரிய பெரிய அறிஞர்கள் எல்லாம் அதிர்ந்து கூட பேசுறது இல்லை. ஆனா நாக்கு இருக்குன்றதாலேயே நீ என்ன வேணா பேசுவியா? நீ பேசுறத ரெக்கார்ட் பண்ணி வச்சு கேட்டுப்பாரு... உனக்கு என்னா தெரியும்னு உனக்கே தெரியும்........
ஆமா சார் இப்டி எல்லாம் பேசி பேசிதான் சரி பண்ணிக்க ட்ரை பண்ணிகிட்டு இருக்கேன்........ ! பெரிய மேதை ஆகலேன்னா கூட பரவயில்லை.... நம்மள பாத்து யாரும் ஓடி ஒளியாம இருந்தா சரிதான்......
இப்போ கூட பாருங்க... உங்கள நிக்க வச்சு போடு போடுன்னு போட்டுகிட்டு இருக்கேன்.....! சாரி சார் தப்பா எடுத்துக்காதீங்க...ஓடி எல்லாம் ஒளிய வேணாம்.... நானே கிளம்புறேன்....!
அப்போ நான் வர்ர்ர்ர்ட்டா!
தேவா. S
Comments
@ டெரர்
மச்சி ஏன் தேவா அண்ணன் சும்மா சும்மா தொல்லை பண்ற. பாரு இங்க வந்து கம்ப்ளைன்ட் கொடுக்குறாரு.
சில நேரங்களின் நம்மளை மீறி வார்த்தைகள் வருகிறது அதை ரெக்கார்ட் பண்ணி கேட்டா உனக்கே தெரியும் ஆமாம் கேட்டு பார்க்கணும் ஒரு ரெக்கார்ட் பிளேயர் வாங்கி தாங்க
ஒவ்வொரு வரியும் உண்மை.
try பண்ணுவோம் ........ சரிபன்னுவோம்
//இதற்கு மாறாக சிலரை பார்த்தால்.. அச்சச்சோ.. இவனா இவன் கிட்ட மாட்டின போச்சே என்று அலறி அடித்துக் கொண்டு ஓடுவோம். அப்படியே அவரிடம் மாட்டிக் கொண்டால் அவரின் சுயதம்பட்டம், மற்றும் அகந்தையான பேச்சு என்று எல்லாமே நம்மை எண்ணை சட்டியில் வைத்து பொறிப்பது போல பொறிக்க எப்போடா போவோம் என்று தோணும்.//
@ டெரர்
மச்சி ஏன் தேவா அண்ணன் சும்மா சும்மா தொல்லை பண்ற. பாரு இங்க வந்து கம்ப்ளைன்ட் கொடுக்குறாரு.
யோவ் ரமேஷ்,தேவா கம்ப்ளைண்ட் பண்றதே உங்களைத்தான்
எல்லோருமே அப்படித்தான் அண்ணா .. நானும் கூட பல சமயங்களில் அவ்வாறு தான் பேசிக்கொண்டிருந்துவிட்டு வீட்டில் திட்டு வாங்குவேன் ..!
அம்பூட்டு நல்லவரா அண்ணா நீங்க ..?
:-)))))))))
ஒய் பிளட்?? சேம் பிளட்!! :-))))
இது சூப்பர் ..........நல்ல இருக்கு .நிறைய பேர் இப்படி தான் அடுத்தவர்களை பேச விடுறதே இல்ல ........மீண்டும் என்றோ ஒரு நாள்.......நான் இந்த விஷத்தை சொன்னேன் நீ பதிலே சொல்ல வில்லை என்பார்கள் ..........கேடு கேட்ட உலகம் அண்ணா.........
:))
எல்லார் பேச்சும் எல்லா சமயத்திலேயும் ஒரே மாதிரி இருக்காது. நம்ம ரியாக்சனும் எல்லா சமயத்திலேயும் ஒரே மாதிரி இருக்காது!!
BY
http://thambivadivazhagan.blogspot.com/
ஹா ஹா ஹா.. இவரை சிட்டி (எந்திரன்) கிட்ட அனுப்புங்க.. தேவா.. சரி பண்ணிருவார்.. :-))
(என்னா பேச்சு.......)
///பெரிய மேதை ஆகலேன்னா கூட பரவயில்லை.... நம்மள பாத்து யாரும் ஓடி ஒளியாம இருந்தா சரிதான்....///
நீங்க இவ்ளோ வெளிப்படையா பேசின பிறகு, ஓடினா நல்லா இருக்காது.. எதுக்கும் ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணிட்டு போறேன்... (எதிலேயும் ஒரு ந்யாயம் இருக்கோணும்....)
Wonderful post. Its hard to figure out why we talk this much na..???
(why blood.......same blood)
As long as, people dont run away from us, the minute they see us, we are not that bad dhevaa.. :-))