Skip to main content

இதோ...!
















வார்த்தைகளுக்குள் அர்த்தம் தேடித் தேடி வார்த்தைகள் கொடுக்கும் உணர்வுகள் இழந்து எப்போதும் ஒரு கதை அல்லது கட்டுரை அல்லது ஒரு நிகழ்வு அல்லது ஒரு ஆரம்பம் அல்லது ஒரு முடிவு .. தேடி சுவையான எழுத்துப் பட்சணங்களின் மீது ஆசை கொண்டு இந்த கட்டுரைக்குள் நுழைபவர்களுக்கு .....முதலிலேயே சொல்லிவிடுகிறேன்....

எச்சரிக்கை...!!!!

ஆபத்தான வளைவுகளுக்குள் பயணப்படுவது உங்களுக்கு சிரமமாயிருந்தால்
... இப்போதே திரும்பிச் செல்வது உத்தமம்.

எனக்குள் பற்றி பரவியிருக்கும் இந்த இறுக்கத்தின் மூலம் என்ன? அவ்வப்போது வந்து தொண்டை அடைத்து கண்களில் கண்ணீர் நிறைத்து கலக்கமாய் நெஞ்சை பிசைந்து ஏதோ ஒன்று செய்கிறதே அது என்ன? கருவினில் இருந்த பொழுதுகள் முற்றிலுமாய் மறந்து போனாலும் எப்போதாவது இருளின் ஆளுமைக்குள் நிற்கும் போது சட்டென்று ஏதோ ஒரு அனுபவம் சாட்டையை சரெலென்று சொடுக்கிவிட்டது போல உடம்பு அதிர்கிறதே அது என்ன?

கேள்விகள்...கேள்விகள்...கேள்விகள்...என்று கேள்விகளில் இருந்து ஜனித்த பதில்களின் நுனியில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் அறியாமையின் கொடூர முகம் கண்டு பட்டுப்போன கேள்விகளெல்லாம் என்னை கேலிப்பொருளாய் பார்க்கும் தருணத்தில் எது அபத்தம்? எது சத்தியம்? என்று தெரியாமால் குழப்ப வாசலில் என்னை தொலைத்த பொழுது திறந்த கதவின் பெயர்தான் கடவுளா?

இயல்பாய் நகரும் வாழ்வின் ஓட்டத்தில் இளைப்பாறும் பொழுதுகளில் அர்த்தமற்று தெரியும் ஓட்டங்களின் அதிர்வுகள் எல்லாம் சிதறிய வண்ணங்களாய் என்னைச்சுற்றி பரப்பிய ஓவியங்களில் நான் அமிழ்ந்து இட வலம் மறந்து பின் ஓவியமும் மறைந்து எச்சத்திலிருக்கும் ஒரு ஏகந்த இருப்பின் அமைதியில் சூன்யத்தின் வேர் பிடித்துவிட்டாதாக கருதும் பொழுதுகளில் ஒரு கூட்டமும் ஒரு நெரிசலும், எங்கேயோ அசுர கதியில் பறக்கும் ஒரு லாரியின் ஹாரன் சப்தமும் என்னை சுடு வெயில் கொண்ட பகல் பொழுதுக்குள் தள்ளிவிட்டு....

சட்டென பருமனான வாழ்க்கை ரோலரை என் மீது ஏற்றி இறக்கும் பொழுதினை எதார்த்தம், உண்மை என்று சொல்லி எனக்காக பரிதாபப்படும் சக ஜன கூட்டங்களின் கூற்றுகள் எல்லாம் பொய்யா இல்லை மெய்யா என்று தெரியாமலேயே என் தேகம் நசுங்கிப் போகிறதே?

ஒரு எறும்பிடம் நான் பேசிக் கொண்டிருந்த பேச்சின் சாரத்தில் அந்த சிற்றுயிரின் எண்ணங்கள் என்னவாயிருக்கும் என்று ஆராய முற்பட்ட அந்த கணத்தில் ஏதோ ஒரு பேருண்மையின் அறியப்படாத சூத்திரத்தின் சுவடுகளை சுமந்து கொண்டிருந்த அந்த சிற்றுயிரின் அடர்த்தியில் நான் என்னை மறந்த பொழுதில்.....

....வயிறு முட்ட குடித்து, நெஞ்சு முட்ட உண்டு, கூடுமான வரை காமம் என்ற கடவுளை உடல் போகம் என்ற மாயைக்குள் அடைத்து தீர்ப்பதாய் நினைத்து தீய்ந்து கொண்டிருக்கும் என்னை ஒத்த சக ஆறறிவு பிராணிகளிடமிருந்து நான் வேறுபட்டுத்தானே போகிறேன்?

என் மிச்சமும் சொச்சமும் வெட்ட வெளியின் சத்தியத்தை நிறைக்கத்தான் போகின்றன என்பதை அறிந்தும் இதோ வந்து கலந்து கொள்கிறேன்...என்னை நானே மயங்கச் செய்து......சப்தமிட்டு சிரிக்க....கோபமிட்டு கொக்கரிக்க.. திட்டமிட்டு பொருள் சேர்க்க...வெட்கமின்றி அறியா காமம் செய்ய......இதோ வந்து விட்டேன்...!


தேவா. S



Comments

/// ஆபத்தான வளைவுகளுக்குள் பயணப்படுவது உங்களுக்கு சிரமமிருந்தால்... இப்போதே திரும்பிச் செல்வது உத்தமம்.///

இதுக்கு டிரைவிங் லைசென்ஸ் வேணுமா அண்ணா ..?
//ஒரு எறும்பிடம் நான் பேசிக் கொண்டிருந்த பேச்சின் சாரத்தில் அந்த சிற்றுயிரின் எண்ணங்கள் என்னவாயிருக்கும் என்று ஆராய முற்பட்ட அந்த கணத்தில் ஏதோ ஒரு பேருண்மையின் அறியப்படாத சூத்திரத்தின் சுவடுகளை சுமந்து கொண்டிருந்த அந்த சிற்றுயிரின் அடர்த்தியில் நான் என்னை மறந்த பொழுதில்.....//

எறும்புகிட்ட பேசுனீங்களா. ஐயோ ஐயோ..
//என்னை நானே மயங்கச் செய்து......சப்தமிட்டு சிரிக்க....கோபமிட்டு கொக்கரிக்க.. திட்டமிட்டு பொருள் சேர்க்க...வெட்கமின்றி அறியா காமம் செய்ய......இதோ வந்து விட்டேன்...!//

இதுதானே வாழ்கையை அழைத்து செல்கிறது ..!!
அய்யோ அய்யோ அய்யோ....

எறும்பு கூடலாம் பேசுறாரே! சீக்கிரம் இவரை எங்கயாவது சேர்த்து ஆகணும்
//சட்டென பருமனான வாழ்க்கை ரோலரை என் மீது ஏற்றி இறக்கும் பொழுதினை எதார்த்தம், உண்மை என்று சொல்லி எனக்காக பரிதாபப்படும் சக ஜன கூட்டங்களின் கூற்றுகள் எல்லாம் பொய்யா இல்லை மெய்யா என்று தெரியாமலேயே என் தேகம் நசுங்கிப் போகிறதே//

ரோடு ரோலர் ஏறுச்சா ..........அய்யோ....கைல.......கால்ல எதவது அடி பட்டுத அண்ணா............உடனே ஆஸ்பத்திரி போய் கட்டு போட்ருங்கோ........இல்லை என்றால் செப்டிக் ஆகிவிடும்
அருமையான பகிர்வு ..
//எனக்குள் பற்றி பரவியிருக்கும் இந்த இறுக்கத்தின் மூலம் என்ன? அவ்வப்போது வந்து தொண்டை அடைத்து கண்களில் கண்ணீர் நிறைத்து கலக்கமாய் நெஞ்சை பிசைந்து ஏதோ ஒன்று செய்கிறதே அது என்ன? கருவினில் இருந்த பொழுதுகள் முற்றிலுமாய் மறந்து போனாலும் எப்போதாவது இருளின் ஆளுமைக்குள் நிற்கும் போது சட்டென்று ஏதோ ஒரு அனுபவம் சாட்டையை சரெலென்று சொடுக்கிவிட்டது போல உடம்பு அதிர்கிறதே அது என்ன?//

ஊர் புல்லா கடன் வாங்கினா பயத்துல இப்படித்தான் நடக்கும்
Anonymous said…
மீ பிரசன்ட் அப்புறம் எஸ்கேப் :)
dheva said…
அழுத்தமான கருத்தை சொன்ன்னா கூட..... அசால்டா கும்மியடிக்க என் தம்பிகளுக்கு நிகர் தம்பிகள்தான்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
dheva said…
அதுவும் சிரிப்பு போலிஸ் இருக்கானே.. நான் ஒண்ணும் சொல்லமாட்டேன்.. என் பதிவுகளுக்கு எல்லாம் பஞ்ச் கமெண்ட் அவன் தான்.. .. ஊருக்கு வந்த உடனே. உன்னதாண்டா முதல்ல பார்பேன்....சரியா...அம்புட்டு பாசம்...(கொய்யாலே இருடி வந்து வச்சுகிறேன்...)
Unknown said…
///ஆபத்தான வளைவுகளுக்குள் பயணப்படுவது உங்களுக்கு சிரமமிருந்தால்... இப்போதே திரும்பிச் செல்வது உத்தமம்///

எவ்வளவோ பதிவுகள் படிச்சாச்சு.. இதையையும் படிச்சுடலாம்.. :-))))
நான் கூட இது மாதிரி தனியா யோசிப்பேன். ஆனால் எல்லாவற்றையும் யோசிச்சு முடிக்கிறப்ப பதில் கிடைக்காம மிச்சம் இருக்கிறது இனம் புரியாத பயம்தான்! அதை போக்க மீண்டும் பழைய வாழ்க்கைக்கே செல்கிறேன்!
//என்னை நானே மயங்கச் செய்து//

நீங்க என்ன அவ்வளவு அழகா
//dheva said...

அதுவும் சிரிப்பு போலிஸ் இருக்கானே.. நான் ஒண்ணும் சொல்லமாட்டேன்.. என் பதிவுகளுக்கு எல்லாம் பஞ்ச் கமெண்ட் அவன் தான்.. .. ஊருக்கு வந்த உடனே. உன்னதாண்டா முதல்ல பார்பேன்....சரியா...அம்புட்டு பாசம்...(கொய்யாலே இருடி வந்து வச்சுகிறேன்...)
//

me the paavam
ஆபத்தான வளைவுகளுக்குள் பயணப்படுவது உங்களுக்கு சிரமமாயிருந்தால்
... இப்போதே திரும்பிச் செல்வது உத்தமம்.


//


என்ன சொல்லலையே...
உங்க கட்டுரைய படிச்சுட்டு இறுக்கமா வந்தா நம்ம சிரிப்பு போலீஸ் நம்மள வெடிச்சு சிரிக்க வைக்கறார்.
///ஆபத்தான வளைவுகளுக்குள் பயணப்படுவது உங்களுக்கு சிரமமாயிருந்தால்
... இப்போதே திரும்பிச் செல்வது உத்தமம். ////

அம்புட்டு நல்லவரா நீங்க... சொல்லவே இல்ல.. :D :D

ஏனுங்கோ... இந்த ஊட்டி, கொடைக்கானல் ரோடு மாதிரி...யாங்க??? :-)))
ஆரம்பமே அசத்தல் போங்க.... :D :D :D
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
//ஜெயந்தி said...

உங்க கட்டுரைய படிச்சுட்டு இறுக்கமா வந்தா நம்ம சிரிப்பு போலீஸ் நம்மள வெடிச்சு சிரிக்க வைக்கறார்//

Thanks
உலகத்தமிழன் அண்ணண் விஜய டி.ஆர் தம்பி மாதிரி தாடி வச்சுரிகிங்க "FaceBook photo" - ல.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...