Pages

Tuesday, October 26, 2010

தில்...!நீ என்னவாக விரும்புகிறாய்...? சிவ்கேரா ஒரு செமினாரில் எழுப்பி கேட்ட கேள்வி இது. நான் திரு திரு வென்று முழித்துக் கொண்டு இருந்தேன்.....என்னை விட்டு விட்டு பக்கத்தில் இருப்பவரை எழுப்பி கேட்டார்.....வாட் டூ யூ வாண்ட் டூ பிக்கேம் அ? அவர் சொன்னார்.... நான் ஒரு தொழிலதிபர் ஆக விரும்புகிறேன்.......! விடவில்லை சிவ்கேரா....இப்போது நீங்கள் அதற்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்...?

இப்போது இருவருமே திரு திருவென்று முழித்தோம்.....

தொழிலதிபர் ஆக விரும்பியவரிடம் அதற்கான திட்டமிடல் இல்லை....என்னிடமோ குறிக்கோளே இல்லை...? இருவருமே எப்படி ஜெயிக்கப் போகிறீர்கள்....? மெளனமாய் நின்றிருந்தோம்.......

குறிக்கோள் இல்லாமல் எங்கே பயணிக்கிறீர்கள்? புரிதலோடு வாழ்க்கையின் நிலையாமையை விளங்கிக் கொண்டிருக்கும் நாம் வாழும் வரை வாழ்ந்துதான் ஆக வேண்டும்......அதில் மாற்றமில்லை. இடைப்பட்ட இந்த நேரத்தில் எங்கு பயணிக்கிறோம்...என்று தெரியாமலேயே செல்வதை விட.... இன்னவாக ஆவேன்....என்ற எண்ணத்தோடு....அதற்கான செயல் திட்டத்தை அன்றாடத்தில் எப்படி கடைபிடிக்கிறோம் என்று நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டாமா? முகத்தில் அறைந்தார் யூ கேன் வின் என்ற அதிகபட்சமாக விற்பனையான புத்தகத்தை எழுதிய சிவ்கேரா.

புகழ் என்ற ஒன்றிலும் புகழ்ச்சி என்ற ஒன்றிலும் மட்டுப்பட்டு நின்றவர்கள் வாழ்வில் படுகேவலமாக தோற்று இருக்கிறார்கள். மேலும் ஒரு திறமைசாலியை 100பேர் கேவலப்படுத்தினாலும் திறமைசாலியின் திறமைகள் வெளிப்பட்டே தீரும். இந்த இடத்தில்தான் ஒரு விசயம் கவனமாக அறியப்படவேண்டும் செல்ப் எஸ்டீம் என்ற தன்னைப்பற்றிய சுய மதிப்பீடு சரியாக இருக்கிறதா என்பது உணரப்படவேண்டும். இதை சரியா புரிஞ்சுக்க தெரியலேன்னா.. ஓவர் கான்பிடென்ட் என்ற கிணத்துக்குள்ள போய் விழ வேண்டியதுதான்.

தெளிவான குறிக்கோள்கள் மேலும் அதற்கான திட்டமிடல்கள் அது நோக்கிய அன்றைய நகர்வு அதாவது.. எனது குறிக்கோளுக்காக ஒவ்வொரு தினமும் நான் என்ன செய்கிறேன்? என்பதும் முக்கியமாகிப் போகிறது. போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையில் தடைகள் ஓராயிரம் இருக்கத்தான் செய்கின்றன....

அந்த தடைகளும் சதையினை தாண்டி எலும்பினை குத்தும் வேதனையை கொடுக்கின்றது....இங்கே தானிருக்கிறது சூட்சுமம் ...சாதரணமாக இங்கே தான் துவண்டு விழுந்து சோர்ந்து விடுகிறோம்... ஆனால் மாறாக ஒரு வித திமிரும் கோபமும் இங்கேதான் வரவேண்டும்....!

எங்கே விழுகிறோமோ.. அங்கே விசுவரூபம் எடுத்தாக வேண்டும். நம்மை சிதைப்பதற்கென்றே எதிர்மறை சிந்தனையாளர்களும், சூழ் நிலைகளும் கூட விசுவரூபம் எடுக்கும்...ஆனால்....ஏய் வாழ்க்கையே.... நீ என்னை என்ன செய்து விடுவாய்...? கோடாணு கோடி மனிதர்கள் வந்தனர் சென்றனர்...! எம்மை சுற்றியிருக்கும் எல்லா உயிர்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறதெனில் எனக்கான வாழ்க்கையை மறுத்து விடுமா ? இந்த பூமியின் சுழற்சி...

என் பாதச் சுவடுகளின்
வெறித்தனமான அழுத்த ஓட்டங்களின்
விளிம்பில்..காத்திருக்கிறது...
நான் கடக்கப் போகும்..இலக்குகள்

வெளிச்சமும் இருளும்
குழப்பி கிடைத்த
மங்கலான ஒரு அந்திமம்
தந்த இருட்டின் நுனியில்
வெடித்து சிதறும்
எனக்கான சூரியக் கதிர்கள்....!

திட்டமிடலும், செயலாக்காலும் மட்டுமல்ல....தோழா.. சரியான தேர்ந்தெடுத்த நட்புகளும் நமது வெற்றியின் காரணிகள். வாழ்வில் சில பொழுது போக்குக்காகவும், நம் மூளையை சுத்திகரித்துக் கொள்ளவும்தான்...அதுவே வாழ்க்கையாகக் கொண்டால் அது பெரும் அபத்தம்.

தண்ணீரில் நடக்கும் ஒருவன் மாதத்துகு ஒரு முறை 30 நிமிடம் அதை செய்யலாம் அது வித்தை. அந்த வித்தைக்கு மரியாதையும் சன்மானமும் கிடைக்கும். ஆனால் அதுவே பிழைப்பாகுமா...? வாழ்வின் வெற்றிக்கான விதிமுறைகள் எப்பவும் எதார்த்தமானவை...அவை தப்பாமல் எல்லா நிகழ்வுகளையும், வலியையும் கடக்க வைக்கும்.

என்னிடம் நண்பர் ஒருவர் கேட்டார்.. தினமும் பதிவெழுதி விடுகிறீர்களே...அன்றாட வேலைகளுக்கு நடுவே உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்று....! நண்பரின் கூற்று தவறு நான் தினமும் பதிவுகளை வெளியிடுகிறேன்... ஆனால் தினமும் எழுதுவது கிடையாது....ஒரு வார இறுதியின் கேளிக்கைகளுக்குப் பிறகான பின்னிரவில் பெரும்பாலும் விழித்திருப்பேன்...தோன்றுவதை எல்லாம்....அப்போதே எழுதுகிறேன்......மேலும் தனித்து இருக்கும் நேரங்கள் எல்லாம்.....ஏதாவது தோன்றிக் கொண்டேதானிருக்கிறது....!

என் எழுத்துக்கான கருவை நான் பெரும்பாலும் புறத்தில் தேடுவது மிகக் குறைவு........! அதனால் என்னோடு நானிருக்கும் நிமிடங்களை வடிப்பதற்கு அதிக பிராயத்தனம் செய்வது இல்லை. சொல்லி முடித்தவுடன்....ஏற இறங்க பார்த்து விட்டு போய்விட்டார் அவர்.

பாருங்க செமயா ட்ராக் மாறி போய்ட்டேன்........ஓ.கே.....லெட்ஸ் கம் பேக்...

வாழ்வின் ஓட்டத்தில் வாள் வீசும் வீரனாய் போரடிக் கொண்டுதான் இருக்கிறோம்... ! இதில் வெற்றி பெற்றவர்கள் எல்லோருக்கும் ஒரே ஃபார்முலாதான் இருந்திருக்கிறது....

1) நேரம் தவறாமை
2) துல்லியமான இலக்கு
3) இலக்கு நோக்கிய பயணம்
4) செயல் திட்டங்களும் செயல்படுத்தலும்
5) தெளிவு

இப்படி பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். ஆசியாவின் சூப்பர் தொழிலதிபர் கலாநிதி மாறன்.....இவரது வெற்றிக்குப் பின்னால்..அரசியலும், பணபலமும் இருப்பதாக மிகைப்பட்ட பேர்கள் நினைக்கிறார்கள்...அப்படியில்லை.....கலாநிதி மாறன் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தொழிலதிபராகி இருப்பார்......காரணம்....அவருடைய பார்வையும், இன்னோவேட்டிங் ஐடியாவும், அட்டிடியூட் என்னும் மனப்பாங்கும்தான் காரணம்...........

வெற்றிக்கான ஒரு வெரி சிம்பிளான சூத்திரம்: நமக்குள்ள பாஸிட்டிவ் எண்ணங்கள வளர்த்துகிறதோட, அடுத்தவங்கள பத்தின நெகட்டிவ் தாட்ஸ மைன்டல இருந்து ரிமூவ் பண்றது.....!

ஆமாம் சார்.....ரொம்பவும் மன உறுதியோட மனசு புல்லா நம்பிக்கையோ வாள் வீசிக் கொண்டிருக்கும் போராளிதான் நானும்...

எது எப்படி இருந்தாலும் ஜெயிக்கணும்....!ஜெயிப்பேன்....!

நீங்களும்தான் பாஸ்....ஜெயிக்கணும்...ஜெயிப்பீங்க...!

ஏன்னா நமக்குள்ளே இருக்குறது சாதாரண தில் இல்ல செம தில்லு.....!


தேவா. S

29 comments:

Balaji saravana said...

குறிக்கோளே இல்லாமல் பயணிக்கும் என்னைப் போன்றவர்களுக்கு சவுக்கடி அண்ணா..
இனிமேலாவது எனக்கான பாதை தெரிவு செய்கிறேன்..

இம்சைஅரசன் பாபு.. said...

me the firstuuuuuuuuu

இம்சைஅரசன் பாபு.. said...

//வாழ்வின் ஓட்டத்தில் வாள் வீசும் வீரனாய் போரடிக் கொண்டுதான் இருக்கிறோம்... ! இதில் வெற்றி பெற்றவர்கள் எல்லோருக்கும் ஒரே ஃபார்முலாதான் இருந்திருக்கிறது....

1) நேரம் தவறாமை
2) துல்லியமான இலக்கு
3) இலக்கு நோக்கிய பயணம்
4) செயல் திட்டங்களும் செயல்படுத்தலும்
5) தெளிவு//

ரொம்ப சரியாக சொன்னீர்கள் அண்ணா ....இது என் அனுபவமும் கூட .........

அடுத்த பதிவில் அந்த வெற்றியை தக்க வைத்துகொள்ள என்ன என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்

தனி காட்டு ராஜா said...

//நீ என்னவாக விரும்புகிறாய்...?//

ஏதாவது ஒன்னு ஆகியே தான் தீர வேண்டுமா ??
நான் நானக ஆக வேண்டும் ........அதற்கு ஏதாவது வழி சொல்லுங்கள் அண்ணா....

சௌந்தர் said...

வெற்றிக்கான ஒரு வெரி சிம்பிளான சூத்திரம்: அடுத்தவங்கள பத்தின நெகட்டிவ் தாட்ஸ மைன்டல இருந்து ரிமூவ் பண்றது.....!///

இது ரொம்ப சரி இதை தான் எல்லாம் செய்யணும்

அருண் பிரசாத் said...

செம... உற்சாக ஊற்று பதிவு... கலக்கல்

எஸ்.கே said...

குறிக்கோள் இல்லாமல் வாழ்பவன் முன்னேற முடியாது! இது என் வாழ்வில் கண்டுள்ளேன். என் நண்பன் அப்படி இருந்து கஷ்டப்படுகிறான்!

வெறும்பய said...

ஓவொரு மனிதனையும் ஊக்கப்படுத்தும் பதிவு... சில சமயங்களில் நான் கூட யோசிதத்துண்டு எப்படி இந்த மனிதர் தினமும் எழுதிக்கொண்டிருக்கிறார் என்று...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நீ என்னவாக விரும்புகிறாய்...? சிவ்கேரா ஒரு செமினாரில் எழுப்பி கேட்ட கேள்வி இது. நான் திரு திரு வென்று முழித்துக் கொண்டு இருந்தேன்.....என்னை விட்டு விட்டு பக்கத்தில் இருப்பவரை எழுப்பி கேட்டார்.....வாட் டூ யூ வாண்ட் டூ பிக்கேம் அ? அவர் சொன்னார்.... நான் ஒரு தொழிலதிபர் ஆக விரும்புகிறேன்.......! விடவில்லை சிவ்கேரா....இப்போது நீங்கள் அதற்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்...?//

இது தவறாக வெளியிடப்பட்டது. நீ என்னவாக விரும்புகிறாய்...? சிவ்கேரா ஒரு செமினாரில் எழுப்பி கேட்ட கேள்வி இது. நான் திரு திரு வென்று முழித்துக் கொண்டு இருந்தேன்.....என்னை விட்டு விட்டு பக்கத்தில் இருப்பவரை எழுப்பி கேட்டார்.....வாட் டூ யூ வாண்ட் டூ பிக்கேம் அ?

அவர் இவரிடம் தான் இங்கிலீஷ் ல கேட்டுட்டு பக்கத்தில் இருப்பவரை எழுப்பி தமிழில் கேட்டார். அவர் ஒரு ஆங்கிலேயர். இவருக்கு இங்கிலீஷ் தெரியாது. அவருக்கு தமிழ் தெரியாது. அதனாலதான் ரெண்டு பேரும் திரு திரு வென்று முழித்துக் கொண்டு இருந்தனர்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெற்றிக்கான ஒரு வெரி சிம்பிளான சூத்திரம்: நமக்குள்ள பாஸிட்டிவ் எண்ணங்கள வளர்த்துகிறதோட, அடுத்தவங்கள பத்தின நெகட்டிவ் தாட்ஸ மைன்டல இருந்து ரிமூவ் பண்றது.....!//

நெகட்டிவ் தாட்ஸ மைன்டல இருந்து ரிமூவ் பண்றது....இது ஓகே. நெகடிவ் குரூப் ரத்தம் இருந்தா அதையும் ரிமூவ் பண்ணனுமா?

ப.செல்வக்குமார் said...

//இன்னவாக ஆவேன்....என்ற எண்ணத்தோடு....அதற்கான செயல் திட்டத்தை அன்றாடத்தில் எப்படி கடைபிடிக்கிறோம் //

நான்கூட ரேடியோ ஜாக்கி ஆகணும் குறிக்கோளோட அதற்க்கான செயல் திட்டத்தை கடை பிடிச்சிட்டு இருக்கேன் அண்ணா ..!!

சிறுகுடி ராம் said...

///வெற்றிக்கான ஒரு வெரி சிம்பிளான சூத்திரம்: நமக்குள்ள பாஸிட்டிவ் எண்ணங்கள வளர்த்துகிறதோட, அடுத்தவங்கள பத்தின நெகட்டிவ் தாட்ஸ மைன்டல இருந்து ரிமூவ் பண்றது.....!///

என்னோட எண்ணம்... அடுத்தவங்களப்பத்தியான எந்த தாட்ஸுமே (பாசிடிவோ / நெகடிவோ) வேண்டாம் என்பதுதான். ஜஸ்ட் எக்ஸ்பீரியென்ஸ் வாட் தே ஆர்... தட்ஸ் ஆல்.

சிறுகுடி ராம் said...

சரியா சொன்னீங்க ரமேஷ்... என் மைண்ட்ல கூட "ஓ நெகடிவ்" ரத்தம் ஓடுது... எப்பிடி ரிமூவ் பண்றது? மாப்ள, அடுத்த பதிவுல ஐடியா குடுடா...

ப.செல்வக்குமார் said...

//தெளிவான குறிக்கோள்கள் மேலும் அதற்கான திட்டமிடல்கள் அது நோக்கிய அன்றைய நகர்வு அதாவது.. எனது குறிக்கோளுக்காக ஒவ்வொரு தினமும் நான் என்ன செய்கிறேன்? என்பதும் முக்கியமாகிப் போகிறது. போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையில் தடைகள் ஓராயிரம் இருக்கத்தான் செய்கின்றன..../

நானும் யோசிக்கிறேன் .. நிச்சயம் எனது குறிக்கோளுக்காக இன்று என்ன செய்தேன் என்று தினமும் குறிப்பெடுக்க வேண்டும் ..!!

ப.செல்வக்குமார் said...

///தண்ணீரில் நடக்கும் ஒருவன் மாதத்துகு ஒரு முறை 30 நிமிடம் அதை செய்யலாம் அது வித்தை. அந்த வித்தைக்கு மரியாதையும் சன்மானமும் கிடைக்கும். ஆனால் அதுவே பிழைப்பாகுமா...? ///

இது செமையா இருக்கு அண்ணா .,

பிரியமுடன் ரமேஷ் said...

//ஏன்னா நமக்குள்ளே இருக்குறது சாதாரண தில் இல்ல செம தில்லு.....!

செம கலக்கிட்டீங்க.. இப்படி எதிர்பார்த்துதான் அந்த பின்னூட்டத்தை எழுதினேன். ஆனா அதே நேரம் நீங்க இந்த பதிவு போஸ்ட் பண்ணிட்டு இருந்திருக்கீங்க பாருங்க. என்னன்னு சொல்றது... அசத்தல் பதிவு..

VELU.G said...

//Warrior

இவன் ஜெயிக்கப் பிறந்தவன்...
//

உண்மை தான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/ஏன்னா நமக்குள்ளே இருக்குறது சாதாரண தில் இல்ல செம தில்லு.....!//

ஆமா நீங்க தில்லு துர தான்

நந்தா ஆண்டாள்மகன் said...

நண்பரே இந்த பதிவு கலக்கல்,அருமையான பதிவு.

Anonymous said...

Very Good post

தேவா said...

அண்ணா முழிச்சுகிட்டே தூங்கற என்போன்ற மனிதர்களுக்கு நிச்சயமா இது சவுக்கடிதான்.

நான் இன்னும் பல விஷயங்கள உங்ககிட்ட இருந்து கத்துக்கணும்

philosophy prabhakaran said...

நரம்புகளை முறுக்கேற்றி விட்ட பதிவு...

Rathi said...

Positive self-esteem + self-confidence=தில்

Chitra said...

என் பாதச் சுவடுகளின்
வெறித்தனமான அழுத்த ஓட்டங்களின்
விளிம்பில்..காத்திருக்கிறது...
நான் கடக்கப் போகும்..இலக்குகள்


...... நம்பிக்கையுடன் வெற்றி படிகளை கடக்க வைக்கும் பதிவு. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

LK said...

மனதிற்கு தன்னம்பிக்கையும் குறிக்கோளும் கொடுத்து விட்டால் அது உன்னை வழி நடத்தும்

சேலம் தேவா said...

உற்சாகமும்,உத்வேகமும் ஊட்டும் பதிவு..!!

dheva said...

எல்லா பதிவுகளுகும் பதில் கமெண்ட் போட டைம் கிடைக்கிறது இல்ல.... ! டைம் கிடைக்கிறப்ப போடம இருக்கிறதும் இல்ல..! சராசரியா யாரும் நினைக்க மாட்டங்க அப்டீன்ற ஒரு எண்ணம் கூட இருப்பதும் ஒரு காரணம்.

தொடர்ந்து வந்து பின்னூட்டமிட்டு எனக்கு உரம் சேர்க்கும் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் , தம்பிகளுக்கும் எனது நன்றிகள்!

sakthi said...

நீங்களும்தான் பாஸ்....ஜெயிக்கணும்...ஜெயிப்பீங்க...!

ஏன்னா நமக்குள்ளே இருக்குறது சாதாரண தில் இல்ல செம தில்லு....

வாழ்த்துக்கள் தேவ் செம தில்லுக்கு

Anonymous said...

இந்த படைப்பை படிக்கும் போதெல்லாம் மனதில் ஒரு புது உத்வேகம் பிறக்கிறது...