
விண்ணப்பம்:
இந்த ஒரு கட்டுரையை எல்லோரும் வாசித்து விட்டு ஏன் இப்படி எழுதியிருக்கிறீர்கள்? இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்க விரும்பினால்....கட்டுரைக்கான விளக்கம் அளிக்கிறேன்.
ஏன் எழுதினாய்? என்று கேட்டால் பதில் இல்லை. ஆதாரம் கேட்டால் இல்லவே இல்லை. படிக்கும் போது இதில் ஏதாவது ஒன்று ஆமாம் சரி என்று உள்ளுக்குள் சொன்னால் சரி எனக் கொள்ளுங்கள். இல்லை என்றால் இல்லை என்று கொள்ளுங்கள். வலியுறுத்தலுக்கும் கட்டுரைக்கும் சம்பந்தமே இல்லை.
எனது யாக்கைகளை கட்டுரையாக்கும் மனோ நிலையில் அதை சந்தைப்படுத்துதலை விட.... விரும்பியவர் படிக்கட்டுமென்ற நோக்கிலும் மேலும் கிளர்ந்து எழுந்த நிலையில் எனக்குள் தோன்றியதை எழுதி வைப்பதின் மூலம் யாராவது வாசித்து விட்டு இதை இப்படி எழுதியது தவறு என்று சொல்லி கற்றுக் கொடுப்பதின் மூலம் தெரிந்து கொள்ளும் விதமாக, கற்றுக் கொள்ள ஒரு கருவியாக இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதுகிறேன்.
வாசித்துதான் ஆகவேண்டும் என்றோ நிர்பந்தங்கள் எப்போதும் வைத்தது இல்லை..ஆனால் என்னுள் தோன்றிக் கிளைத்த எண்ணங்களை எழுதி பார்க்கும் ஒரு சிறுவனாய் எழுதுகிறேன்.
புரியவில்லை என்றால் மன்னித்து விடுங்கள். திருத்தங்கள் இருந்தால் கூறுங்கள்...மண்டியிட்டு... திருத்திக் கொள்கிறேன். திருத்திக் கொள்ளுதல் எனக்கான கல்வி. அந்தக் கல்வியை மனமுவந்து தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன்.
விளக்கம்:
மரணித்த ஒரு ஆத்மா.. தடிமனற்று மீண்டும் பிறப்பெய்ய உந்து சக்திகள் குறைந்த பக்குவத்தில் இருக்கும் அந்த ஆத்மா என்ற அதிர்வு பிரபஞ்ச மூலத்தோடு கலந்து கரைந்து எதுவுவமற்றுப் போகிறது. அப்படி எல்லாமாய் மாறுவதற்கு முந்தைய இடைப்பட்ட நிலை எப்படி இருக்கும்...
இதோ...
சரேலென்று விழுந்த வெளிச்சக்காட்டுக்கு முன்பான இருண்ட நெடும் பயணத்தில் கருமையும் வெளுமையும் சொல்லவொண்ணா நிறங்களும் இட வலம் மாற்றி ஒரு சுழல் போல என்னை சுழற்றியடித்த சுழலுக்குள் நானிருந்தேன்.
உடல் தொலைத்த அந்த அற்புத கணம் ஒரு அனுபவமாய் தேங்கிக் கிடந்த ஒரு தெளிவான பிரஞை மட்டும் என்னை வழி நடத்த காற்றே இல்லாத ஒரு வெற்றிடத்தில் நீரில் நகரும் குமிழி போல நீந்திக்கொண்டிருந்தேன். நகர்தல்… நகர்தல் என்று புள்ளியற்ற இலக்குகள் அற்ற ஒரு நகர்தலற்ற நகர்வில் எப்போதும் உடைந்து விடும் என்ற ஒரு சுதியோடு என் உள்முனைப்பு இருந்து.
அது இப்போதே உடைந்தால் என்ன...மிச்சமிருக்கும்? சொச்சத்தோடு சேர்ந்தால் என்ன வாகும்? என்ற குறு குறுப்பிலும் துறு துறுப்பிலும் இருந்த நிலையை விவரிக்கும் எல்லாமே பொய்யாகி விடுமென்ற எண்ணத்தின் மிச்சமிருந்தது ஆனால் அது கூடலில் தொலைக்கும் உச்சத்தை ஒத்ததாக இருந்தது. ஒத்ததாகத்தானே அன்றி அதுவல்ல.
ம்ம்ம்ம் ….இன்னும் இன்னும் இன்னும் இன்னும் இப்போதோ, அல்லது எப்போது என்னில் ஒட்டியிருக்கும் எதோ ஒரு உள் முனைப்பு என்னை விட்டு நகரப்போகிறது. நகர்ந்த கணத்திலே ஒட்டிக்கொண்டிருக்கும் எல்லாம் ஒழியப்போகிறது என்ற ஒரு எண்ணம் மெலிதாய் இருந்தது.
உடலாய் இருந்த காலத்தில் ஏற்பட்ட அவஸ்தைகளின் சாரம் மத்திம நிலையில் ஒரு உறுத்தலாய் இருந்தது. ஒரு குணமற்ற நிறமற்ற இந்த இருப்பா இத்தனை வேசங்களிட்டது.
வேசங்களிட்டு வேசங்களிட்டு, அப்படி ஒரு தடிமன் கொடுத்த அழுத்த விளைவில் எத்தனை முறை விசையின் எதிர்விசையாய் உந்தப்பட்டு உயிர் சுழற்சி எடுத்து தடிமன் குறைக்க அனுபவப்பட்டு, அனுபவத்தை உணர்தலில் கொஞ்சம் கொஞ்சமாய் தடிமன் குறைந்து…
வேறு சில அனுபவங்களில் அகங்காரப்பட்டு தடிமன் கூடி அந்த தடிமனில் மேலும் அனுபவம் என்று சுழன்று சுழன்று சுழற்சியில் சந்கோசமும் துக்கமும் என்று ஏராளாமான இல்லாத விசயங்களைப் விவரித்துப் பார்க்க மனமும், இழுத்து கொண்டு வந்து சேர்க்க புலன்களும் என்று ஒரு ஆர்ப்பாட்ட வாழ்வு....
புல்லாகி, பூடாய், புழுவாய், மரமாகி
பல்விருகம் ஆகி, பறவையாய், பாம்பாகி,
கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்
வல் அசுரர் ஆகி, முனிவராய் தேவராய்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்....
மெய்யாகிய சத்தியமே.. எல்லா உயிராயும் எல்லாவற்றிலும் இருக்கும் சக்தியே.....உள் முனைப்பே, கோபம், காமம், பசி, உறக்கம் என்று உயிர்களின் புலன்வழிச் செயலாய் இருக்கும் மூல உண்மையே…
இந்த நான்கையும் உணரவைக்க ஆறாம் அறிவாய் இருந்து எல்லாம் விவரிக்க வைக்கும் மனிதராயும் மனிதரின் அனுபவமாயும் எல்லாமாய் இருந்து இயங்கும் பேரியக்கமே....
எல்லாம் கரைந்து... கற்பனைகள் ஒழிந்து பிறப்புகளின் அனுபவம் போதித்த அறிவில் திண்ம அறிவு அழிந்து, எல்லாம் அதுவாய், அதுவே எல்லாமுமாய் உணர்ந்து பிறப்பறுக்கும் பிஞ்ஞகனாய் அதுவே இருந்து பிறப்பாயும் அதுவே நிறைந்து, இதோ உணர்தலுக்கும், உணர்தலற்ற தன்மைக்குமிடையே ஒரு மத்திம நிலையில்....
மீண்டும் ஜனிப்பதற்கான பதிவுகளும் திடனும் எதிர் விசையும் அற்று அதுவே அதில் அழியும் அந்த கணத்தின் நெருக்கத்தில்.....
மங்கலாய் மெலிதாய் மெல்லிய விளக்கு அணையப் போவது போல் இப்போதோ, அப்போதோ, அல்லது எப்போதோ நடக்கப்போகும் அந்த நிகழ்வில் என்ன நிகழும் என்றறியாது ஒரு குறு குறுப்ப்பா ஒரு அதிர்வூற்றாய்....உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ற ஒரு ரீங்காரதோடு..உம்ம்ம்ம்ம்ம் என்ற ஓசை கவனிப்போடு....
புலன்கள் அறவே இன்றி உணர்வே புலனாக மாறி எல்லாம் உணர்தலில் உறைக்க... இதோ இதோ.. ஏதோ ஒன்று நழுவ.. ஏதோ ஒன்று..விடுபட.. இதோ... இதோ... இதோ...
வெடித்து சிதறிய
சிதறலெல்லாம் நான்...
கோடி கோடி விண்மீண் நான்
அண்ட சராசரத்தின்
அங்கமெல்லாம் நான்..
பால்வீதிகளின் பெளத்ர புருஷன் நான்
விரிந்து நெடும் பிரம்மம் நான்
ஆதி அதி மூலம் நான்
இருண்ட பாகமெல்லாம் நான்
வெளிச்சத்தில் வீற்றிருக்கும்
பொய்யெல்லாம் நான்...
பொய்யில் ஒளிந்திருக்கும்
சத்தியமெல்லாம் நான்....!
என்னை மறுக்கும்
உயிர்களின் மூலம் நன்
என்னை நேசிக்கும்
பொய்களின் மூலமும் நான்!
சக்தி நான், சக்தியின் அதிர்வு நான், அதிர்விலிருந்து வெளி வரும் சப்தம் நான், சப்தம் தாண்டிய ஒளி நான். நான் இல்லாதா இடமும் நான், இருக்கும் இடமும் நான்...."
மூலத்தில் கலந்த ஒன்று மூலமாகிப் போனது. தேடித் தேடி தேடிய பொருளும் கிடைத்த பொருளும் ஒன்றானது. பார்வை தெரிய...பார்ப்பதற்கு ஒன்றுமில்லா கேட்பதற்கு யாருமில்லா எல்லாமாகிய அது எக்காலாமும் மெளனாமாய் ஒரு சக்தி ஓட்டதில் ஓடிக் கொண்டிருக்கிறது.
கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்!
தேவா. S
Comments
(வேற என்னத்த சொல்ல)
தம்பி சேலம் தேவா சொன்ன கமெண்ட்.....! டேய் சிரிப்பு போலிஸ் .....போஸ்ட விட உன் கமெண்டுக்கு இருக்குற ஆர்வம் அதிகமா இருக்கு....ஹா..ஹா..ஹா..!
உனக்கு சுப்புடுன்னு ஒரு பெயர் வைக்கிறேண்டா தம்பி...!
நாம் அனைவரும் போய்ச்சேருவது காடு - மாப்ள
உந்தன் கற்பனைக்கில்லை ஈடு....
உந்தன் கற்பனைக்கில்லையடா ஈடு....
அடடே, உன் கட்டுரைய படிச்ச பின்னாடி எனக்குகூட எதோ எழுத வருதே!!!
இது தான் ரொம்பத் தெளிவா புரிஞ்சுதுண்ணே..
"கீதை"யோட நியூ வெர்சன் தான? ;)
இரண்டு தடவ படிச்சிட்டேன் ..!
ஆனா புரிஞ்ச மாதிரியும் இருக்கு , புரியாத மாதிரியும் இருக்கு ..
இதுக்கான கேள்வி என்னோட அடுத்த பதிவான தேவா ஸ்டைல் பதிவுல இருக்கும் ..!!
யாக்கை னா காக்கையோட அண்ணனா?
ஏன் எழுதினாய் என்று கேட்டால் பதில் இல்லை. சரி மரியாதையான ஆள் போல. நான் கேக்குறேன் ஏங்க எழுதினீங்க. மரியாதையாதான் கேக்குறேன். பதில் சொல்லவும்.(நான் சொல்லல தேவா அண்ணன் ரொம்ப ரோசமுள்ளவர். ஒருமைல கேட்டா பதில் சொல்ல மாட்டாரு)...
dheva said...
/salemdeva: சிரிப்புபோலீஸ் இதுக்கு என்ன கமெண்ட் போடுவாருன்னு ஆர்வமா இருக்கு//
தம்பி சேலம் தேவா சொன்ன கமெண்ட்.....! டேய் சிரிப்பு போலிஸ் .....போஸ்ட விட உன் கமெண்டுக்கு இருக்குற ஆர்வம் அதிகமா இருக்கு....ஹா..ஹா..ஹா..!
உனக்கு சுப்புடுன்னு ஒரு பெயர் வைக்கிறேண்டா தம்பி...!//
உங்க அன்புக்கு நன்றி அண்ணா
அப்ப ஒட்டு போடு, கமெண்ட் போடுன்னு எங்களை தொல்லைபன்றது(அய்யயோ பப்ளிக்ல உளறிட்டனோ?)
புரியவே இல்லைன்னா எப்படி திருத்தங்கள் கூற முடியும். தமாசு..
பல்விருகம் ஆகி, பறவையாய், பாம்பாகி,
கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்//
இது இதோட ரீமேக்
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியானாய்
நானாக நானில்லை என்னுமோர் நிலைதந்தாய்
பூணாரம் பூண்டவளே பொன்மகளே துர்க்கையம்மா! *
மலையமான் மகளாகி மறையோனுக்காய்த் தவமிருந்தாய்
கலையாத பக்தியுடன் ஊசிமுனைத் தவமிருந்தாய்
தலையாடும் கிழவனாகச் சிவன்வரவே நீசிரித்தாய்
பிழையான மொழிபேசும் விருத்தனையே நீசினந்தாய்
பிறழாத பணிவுடனே பணிவிடைநீ செய்திருந்தாய்
அழகான தன் தோற்றம் சிவன்காட்ட நீமகிழ்ந்தாய்
மனங்கொண்ட மணவாளன் மனம்மகிழ மணமுடித்தாய்
எனையாளும் தாய்நீயே என்றென்றும் எனைக்காப்பாய்! *
பொதுவாக ஒரு விசயத்தைப் பத்தி பெருமையா சொல்லும் போது.. இந்த செயலைச் செய்வதற்கு ஒருத்தன் பொறந்துதான் வரனும் அப்படின்னு சொல்லவோம்... ஆனால் இந்த அனுபவம் எப்படி இருந்ததுன்னு ஒருத்தன்னு சொல்லனும்னா அவன் இறந்துதான் வரனும்...
அது சாத்தியம் இல்லை இல்லையா... சோ அதுவரை.. எல்லாரும் அவங்கவங்க கற்பனையையும்..ஏற்கனவே அது பற்றி நாம படிச்சதையும் சேர்த்து வெச்சி.. இப்படி ஒரு வேளை இருக்கலாமோன்னு உருவகப்படுத்திக்கலாம்..
இப்போதைக்கு எல்லா மனிதப்பிறவிகளும் ஒரே மூலத்திலிருந்து பிரிந்தவையே.. இறந்த பின் மீண்டும் அந்த மூலத்தை அடைந்தவையே என்கிற ரீதியில் அர்த்தம் கொள்ளலாம்... அதை விளக்கவே... மீதி அத்தனையும்....
உங்கள் எழுத்து மிகவும் சுவராஸ்யமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருக்கிறது.
தெளிவா புரிஞ்சிடுச்சு....
(வேற என்னத்த சொல்ல)
///
டபுள் ரிப்பீட்டு .....................
:-))))
////திருத்தங்கள் இருந்தால் கூறுங்கள்...மண்டியிட்டு... திருத்திக் கொள்கிறேன்.////
ஒரு சின்ன திருத்தம் தான், நல்ல கவனமா கேட்டுக்கோங்க.. அந்த மேல இருந்து நாலாவது பாராவில, மூணாவது லைன்-ல, ரெண்டாவது வார்த்தைல.... அஞ்சாவது எழுத்துல ஒரு பிழை இருக்குங்க...!!! (தேவா... நா இல்ல......) :-)))))
ஒரு மனுஷன், இவ்ளோ சீரியஸ்-ஆ பதிவு போட்டா... வந்து காமெடி பண்ணிக்கிட்டு...!! ச ச.. ரொம்ப மோசம்..!!
சிரிப்பு போலீசு கமெண்ட்சுகளுக்காகவே, இந்த பதிவை படிச்சு புரிய “முயற்சி” பண்ணினேன். :-)))