Pages

Wednesday, October 27, 2010

ஹார்மோன் செய்யும் கலகம் தானடா......பதிவு தொடர் II !

கொஞ்சம் பிரேக் வேணும்னுதான் விட்டேன்.. இந்த தொடருக்கு...ஏன்ன்னு கேக்குறீங்களா? ஏன் எதுக்குன்னு தெரிஞ்சா நாம ஏன் இப்படி இருக்கோம்...தோணிச்சு அவ்ளோதான்...! ஆனா ரொம்ப ஷார்ப்பாவும் இதுல ஒரு விசயம் கண்டிப்பா போய் சேரணும்னு மனசு சொல்லிக்கிட்டே இருக்கு. சரி அது என்ன விசயம்...? யாருக்கு தெரியும் திட்டம் போட்டா பாஸ் எல்லாம் நடக்குது ஹா.. ஹா..ஹா...போற போக்குல எங்கயாச்சும் அதுவா கிடைக்கும்... !

அத அப்போ பாக்கலாம்.. ! இப்போ....ஹார்மோன் செய்யும் கலகத்தை பாருங்க.....

கடந்த பதிவின் முடிவில்....

" ப்ளீஸ் டோண்ட் கீப் த போன் டவுன்...ப்ளீஸ்....டோண்ட் டிஸ்கனெக்ட் த லைன்....ஸ்பீக் வித் மீ.... ப்ளீஸ்…. ப்ளீஸ் … ப்ளீஸ்" என்று அழுகையும் கெஞ்சலுமாய் என்னிடம் பேசிய குரல்.....தன்னுடைய பெயர் கவிதா என்று அறிமுகப்படுத்திக் கொண்டது..........

திடுக்கிடலோடு....அவள் சொல்வதை கேட்க ஆரம்பித்த எனக்கு தலை சுற்றியது.....!

இனி..(ச்சே மெகா சீரியல் பாக்குறது எப்படி உதவுது பாருங்க...)

யெஸ்.. சொல்லுங்க.. என்ன வேணும் உங்களுக்கு? நான் போனை வைக்கலை சொல்லுங்க என்று கேட்டேன்....(இந்த இடத்துல அசலா எம்.ஜி.ஆர் படத்துல கதாநாயகிக்கு ஆறுதல் சொல்லி வீரம் காட்டுவார்ல அதே ஹீரோத்தனம்.....) அதற்கு மறுமுனையில்....அந்தப் பெண்...சார் நான் குயின் மேரீஸ்ல பர்ஸ்ட் இயர் படிக்கிறேன்.. (நல்ல கவனிங்க.. என்ன மேஜர்னு சொல்லல..பதட்டத்திலயும் அம்புட்டு தெளிவு)....

என்னை தேர்ட் இயர் ஸ் டூ டண்ட்ஸ் ரேக்கிங் பண்றாங்க.. ஒரு யெலோ பேஜஸ் எடுத்து ஒரு நம்பர் ச்சூஸ் பண்ணி அதுக்கு கால் பண்ண சொன்னாங்க அதுல உங்க ஹோட்டல் நம்பர் வந்துடுச்சு... !

எனக்கு ரொம்ப பயமா இருக்கு...இப்போ நீங்க ஃபோன வச்சுட்டா.. வேற நம்பர் கொடுத்து பேச சொல்லுவாங்க..ப்ளீஸ்..ப்ளீஸ்... ப்ளீஸ்… உங்க குரல கேட்டா நீங்க ரொம்ப நல்லவர் மாதிரி இருக்கு ( எப்படி போகுது பாருங்க கதை!!!!!) சோ.. பேசுங்க..... , சிணுங்கலோடு கூடிய ஒரு மெல்லிய சோகத்தோடு அந்த பெண் பேசியிருக்காவிட்டாலும் என் மனது அப்படி கற்பனை செய்து கொண்டது.

கொஞ்ச நேரம் நான் சமாளித்து பேசினேன்.. பிறகு ஒரு நன்றி நவிழலுடன் அந்தப் பெண் தொலைபேசி இணைப்பை துண்டித்த பொழுதில் கூட என் மூளையின் புட்டமன், இன்சுலா பகுதிகள் ரொம்ப நல்ல பிள்ளையை போல நடந்து கொண்டன...அதற்கு காரணம்... அது மதிய உணவு நேரமாயிருந்ததால்...வயிற்றில் சுமந்த அமிலம் அதை ஒரு எரிச்சலோடு குடல்களுக்குள் பரவவிட்டு அதற்கு பெயர் பசி என்று மனதுக்குள் சொன்னது.

சாப்பிட போன ரிசப்சனிஷ்ட்ஸ் மற்றும் டெலி போன் ஆப்பரேட்டர் எல்லாம் திரும்பி வர....அவர்களை விட்டு விட்டு...ரெஸ்டரண்டுக்குள் நுழைந்தேன் நான்! வயிறு பசிக்கும் போது மனிதன் துடி துடித்துப் போகிறான். செரித்து இரத்ததுக்குள் சக்தியாய் மாறி பரவிய உணவுப் பொருட்கள் உடலின் பல்வேறு இயக்கத்துக்கும் அந்த சக்தியை செலவழித்து மீண்டும் உடல் இயங்க சக்தி குறைவு ஏற்படும் போது உடலின் இயக்கம் சீராக இல்லாமல் தளர்ந்து போக மீண்டும் சக்தி வேண்டி வயிற்றில் உணவினை செரிக்கவேண்டி சுரக்கப்படும் அமிலத்தன்மை ஒரு வித வலி போன்ற எரிச்சலை உண்டாக்குகிறது. அதுதான் பசி. பசியின் தேவை..உடலுக்கான சக்தி...உடலின் சக்தியின் தேவை உயிர் வாழல்.

இப்படி சுற்றி வளைத்து பார்த்தால் நமது எல்லா தேவைகளின் மூலமும் உயிர்வாழல் என்ற ஒரு புள்ளியில் வந்து நிற்கும் ஆனால் உயிர் என்றால் என்ன என்று ஒரு கண நேரம் கூட நாம் சிந்தித்து பார்ப்பது கிடையாது. சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மனித அகந்தை தப்பாமல் சொல்லிக் கொடுக்கிறது. இந்த அகந்தைதான்....மாயா!

சாப்பிட்டு முடித்து மீண்டும் ஹோட்டல் லாபிக்கு வரும் வரை நான் நார்மலாகத்தான் இருந்தேன் அதாவது டெலிபோன் ஆப்பரேட்டர் கனகா என்னை அழைக்கும் வரை.....

" சார் ... தேர் வாஸ் எ கால் ஃபார் யூ ஃப்ரம்... மிஸ். கவிதா ஃப்ரம் க்யூன் மேரிஸ்....அன்ட் சி செட் ஷி வில் கால்யூ பேக் இன் 20 மினிட்ஸ்.........."

கவிதா மீண்டும் எனக்கு கால் பண்ணி இருக்கா திரும்ப 20 மினிட்ஸ்ல எனக்கு கால் பண்ணுவான்னு கனகா சொல்லி முடித்த வார்த்தைகள் என் கதுகளின் வழியே பயணப்பட்டு மூளையினுள் சென்று உறங்கிக் கொண்டிருந்த....மூளையின் பகுதிகளை தட்டியெழுப்பிய கணத்தில் டெஸ்டோஸ்டிரானும், ஈஸ்ட்ரோஜனும் எனக்குள் பொங்கிப் பரவ...

அந்த பரவல் கொடுத்த சுகத்தில் லயிப்பில் இரத்த ஓட்டம் வேகமாக....இதயத்தின் இரத்த வரத்து அதிகரித்து லப்...டப் அதிகமாக.....மூச்சின் இயக்கம் அசாதரணமாய் மாறி சூடாக கண்களுக்குள் இரத்தம் ஏற...எல்லாம் சேர்ந்து ஒரு அவஸ்தையை நெஞ்சிலோ அல்லது தொண்டையிலோ கொடுக்க.........இதோ...இதோ தொலை பேசி அழைப்பில் எனக்காக கவிதா காத்திருப்பதாக சொன்ன 45 வயது ஆன டெலி போன் ஆப்பரேட்டர் கனக கடந்த இரண்டு வருடங்களில் அன்று மிக அழகாய் என் கண்களுக்குத் தெரிந்தார்.....

ஒரு பதட்டோதோடு தொலைபேசியை காதருகே காதலோடு (டெஸ்டோஸ்டிரான், ஈஸ்ட்ரோஜன் வேலையேதான்....) கொண்டு சென்று.. என் ஹலோவை சுகமாய் பரவவிட்டதற்கு பதிலாய்... ஹலோ...ஐயம் கவிதா ஹியர்.. என்று அவள் சொல்லி முடித்ததுதான் உலகின் தலை சிறந்த வாக்கியமாக அந்த கணத்தில் எனக்குப் பட்டது.....தொடர்ந்தது அந்த இசைக்கச்சேரி...

" தேங்க்யூ சோ மச் தேவா.. யூ ஆர் சச் எ கிரேட் பெர்சன்... எனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. சப்போஸ்.. நீங்க என்கிட்ட பேசாம இருந்திருந்தீங்கன்னா. வேற யாருக்காச்சும் போன் பண்ண சொல்லி நான் நல்லா மாட்டியிருப்பேங்க.... " என்று இசைத்து விட்டு.....அப்புறம் உங்கள பத்தி சொல்லுங்க... என்று கேட்டது...."

“ மொழியற்ற மனிதனாய்
திசையற்ற பறவையாய்
ஓசைகள் அற்ற உலகமாய்
எனக்குள் இருந்த அமைதியில்
பேசுவது எப்படி? "

திக்கித் திணறி தமிழ் எனக்குள் தடம் புரண்டது...ஆங்கிலமோ ஒரு மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தது....! ஏதோ பேசினேன்.. என்னவென்று மூளையில் ஏறவில்லை....ஆனால்.. கடைசியாக அவள் சொன்னது மட்டும் உள்ளுக்குள் அச்சாய் பதிந்து போயிருந்தது....

"ஈவ்னிங் காலேஜ் முடிஞ்சு வந்து நான் உங்களுக்கு ஒரு 6 மணிக்கு கால் பண்றேன்.." சொல்லி விட்டு அவள் துண்டித்த தொலைபேசி இணைப்போடு... உலகத்தோடான எனது தொடர்பு அறுந்தது போயிருந்தது

ஓ.. மை.. காட்..........வாட் இஸ் திஸ்.... யார் இவள் ஏன்? இப்படி.....

மனம் என்னை கேட்காமல் எங்கேயோ பறந்து கொண்டிருந்தது... நானோ கோபமாய் மெதுவாய் நகர்ந்து கொண்டிருந்த கடிகாரத்தை முறைத்தவனாய்.. லாபியில் இருந்த சோபாவில் போய் விழுந்தேன்.. 6 மணிக்கான அவளது மறு தொலைபேசியை எதிர் நோக்கியவனாய்....

(காத்திருங்கள்...காதலுக்காக)


தேவா. S

31 comments:

ஜீவன்பென்னி said...

ஹார்மோன் செய்யுற கலகத்துல கூட உங்க மேட்டர கலந்துடுறீங்களே. கவிதா பேரே கவிதையாயில்ல இருக்கு. 6 மணிக்கு நானும் வெய்ட்டிங். உடம்பு பூரா மச்சம் போல. எங்க இருந்தாலும் சும்மாவே இருக்க மாட்டீங்க போல. நீங்க சும்மாவே இருந்தாலும் தானா வந்துரும் போல. செமயா இருக்கு ப்லோ.

சௌந்தர் said...

உங்க குரல கேட்டா நீங்க ரொம்ப நல்லவர் மாதிரி இருக்கு/////

இன்னும் எத்தனை பேர் ஏமார்ந்து போவார்களோ????

dheva said...

ஜீவன் பென்னி.. @ உன் மனசுல இருக்குற நீ கமெண்டா வந்து இருக்கு....

செளந்தர்...@ உன் மனசுல இருக்குற நீ கமெண்டா வந்து இருக்கு

நமக்கு ஒண்ணும் சம்பந்தம் இல்லப்பு.....!

Anonymous said...

காதல் கலவையில் முக்கி எங்கள காத்திருப்பின் கொடியில் இப்படி காய விடுறீங்களே அண்ணா!
செம சூப்பர்!

கருடன் said...

@தேவா

ஏன் மாப்ஸ்!! நீ சொல்றத பார்த்தா அது சரியான கடலை பார்ட்டியா இருக்கும் போல?? ஒரு வாட்டு பேசினாங்கலாம் அதுலே இவரு நல்லவரு தெரிஞ்சி போச்சாம்... இதுல வேற மறுபடி கால் பண்ணி பேசினாங்கலாம்... இவினிங் வேற கூப்பிடறேன் சொன்னாங்களாம்... என்னா மாப்பு கலர் கலரா ரீல் சுத்தர?? நீ சொல்ற லவ் ஸ்டோரி எல்லாம் பொய்!! இந்த உலகத்துல எந்த லவ் பண்ற பொண்ணு கால் பண்ணி இருக்கு? ஒன்லி மிஸ்டு கால்ஸ்!!!

இம்சைஅரசன் பாபு.. said...

//ப்ளீஸ் டோண்ட் கீப் த போன் டவுன்...ப்ளீஸ்....டோண்ட் டிஸ்கனெக்ட் த லைன்....ஸ்பீக் வித் மீ.... ப்ளீஸ்…. ப்ளீஸ் … ப்ளீஸ்
சார் ... தேர் வாஸ் எ கால் ஃபார் யூ ஃப்ரம்... மிஸ். கவிதா ஃப்ரம் க்யூன் மேரிஸ்....அன்ட் சி செட் ஷி வில் கால்யூ பேக் இன் 20 மினிட்ஸ்.........."
தேங்க்யூ சோ மச் தேவா.. யூ ஆர் சச் எ கிரேட் பெர்சன்.
ஓ.. மை.. காட்..........வாட் இஸ் திஸ்....//

தேவா அண்ணா மேல உள்ள வரிகள் புரியவே இல்லை ..........இது என்னது
மத்தது எல்லாம் புரியுது ...........
கொஞ்சம் ப்ளீஸ் .........

கருடன் said...

@தேவா

அது சரி ஏன் நீலதாமரை ஹீரோயின் போட்டோ? அப்பொ நீதான் அந்த ஹீரோவா??

கருடன் said...

@தேவா

// வயிறு பசிக்கும் போது மனிதன் துடி துடித்துப் போகிறான். செரித்து இரத்ததுக்குள் சக்தியாய் மாறி பரவிய உணவுப் பொருட்கள் உடலின் பல்வேறு இயக்கத்துக்கும் அந்த சக்தியை செலவழித்து மீண்டும் உடல் இயங்க சக்தி குறைவு ஏற்படும் போது உடலின் இயக்கம் சீராக இல்லாமல் தளர்ந்து போக மீண்டும் சக்தி வேண்டி வயிற்றில் உணவினை செரிக்கவேண்டி சுரக்கப்படும் அமிலத்தன்மை ஒரு வித வலி போன்ற எரிச்சலை உண்டாக்குகிறது. அதுதான் பசி. பசியின் தேவை..உடலுக்கான சக்தி...உடலின் சக்தியின் தேவை உயிர் வாழல்.

இப்படி சுற்றி வளைத்து பார்த்தால் நமது எல்லா தேவைகளின் மூலமும் உயிர்வாழல் என்ற ஒரு புள்ளியில் வந்து நிற்கும் ஆனால் உயிர் என்றால் என்ன என்று ஒரு கண நேரம் கூட நாம் சிந்தித்து பார்ப்பது கிடையாது. சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மனித அகந்தை தப்பாமல் சொல்லிக் கொடுக்கிறது. இந்த அகந்தைதான்....மாயா!//

லாரி ஓட்டரவன கொண்டு போய் விமானம் ஓட்ட விட்டா இப்படி தான் கியர் எங்க ஸ்டேரிங் வீல் எங்க தேடுவான்...

(லவ் ஸ்டோரி நடுவுல யார் இப்பொ தத்துவம் கேட்டா??)

செல்வா said...

பசி பத்தி சொன்னது அருமையா இருக்கு அண்ணா .,

// கடந்த இரண்டு வருடங்களில் அன்று மிக அழகாய் என் கண்களுக்குத் தெரிந்தார்.....///

அடாடா , என்னமா என்னை ஊத்துறீங்க .. ஆனா உண்மைலேயே படிக்கரக்கு அருமையா இருக்கு..!! இந்த மாதிரி பதட்டம் சில சமயங்களில் எல்லோருக்கும் வருவதுதானே ..!

dheva said...

//லாரி ஓட்டரவன கொண்டு போய் விமானம் ஓட்ட விட்டா இப்படி தான் கியர் எங்க ஸ்டேரிங் வீல் எங்க தேடுவான்...

(லவ் ஸ்டோரி நடுவுல யார் இப்பொ தத்துவம் கேட்டா??) //


டெரர்... @ செம. மாப்ஸ் செம.....ROFL!

dheva said...

பாலாஜி சரவணா@ தம்பி காயப்போட்டு எடுத்து அயன் பண்ணி வைக்கிறேன் வா.. ஈவ்னிங் எந்திரன் படத்துக்கு போகலாம்...

படுவா ராஸ்கோலு பிச்சு புடுவேன் பிச்சு...லவ் கிவ்வுனு அலைஞ்சீங்கன்னா.... !

dheva said...

இம்சை..@ யாரு இம்சை அரசன்னு பேரு வச்சது........

நீ இம்சை சக்கரவர்த்தி....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

திக்கித் திணறி தமிழ் எனக்குள் தடம் புரண்டது///

சரக்கு ரயில்ல போனீங்களா?

...ஆங்கிலமோ ஒரு மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தது....!//

ஏதாச்சும் ஐஸ் கிரீம், சாக்கலேட் வாங்கி கொடுத்து அழுகையை நிப்பாட்டலாம்ல...

ஏதோ பேசினேன்.. என்னவென்று மூளையில் ஏறவில்லை....//

மூளை இருந்தாத்தான ஏறும்?

ஆனால்.. கடைசியாக அவள் சொன்னது மட்டும் உள்ளுக்குள் அச்சாய் பதிந்து போயிருந்தது....

செருப்பு பிஞ்சுடும்ன்னு சொன்னாளா?

dheva said...

//ஆனா உண்மைலேயே படிக்கரக்கு அருமையா இருக்கு..!! //

அது எல்லாம் சரி.. படிக்கரக்குன்னா என்னா தம்பி???

dheva said...

சிரிப்பு போலிஸ்...@

கொய்யால.. யாரு யாருகிட்டயோ அட வரைக்கும் வாங்கிட்டு வந்து இங்க வந்து ஆதங்கத்த கொட்டுறான் பாருங்க..! அடிக்கடி வாங்குவியா தம்பி....!

dheva said...

இன்டியன் ஆர்மி ..........ப்ளீஸ் ... கம் அண்ட் சேவ் மீ..........

தம்பி சிரிப்பு போலிஸ் அராஜகம் தாங்க முடியல.....!

செல்வா said...

//அது எல்லாம் சரி.. படிக்கரக்குன்னா என்னா தம்பி???///

படிக்கரக்கு என்பது ஒரு தமிழ் வார்த்தையாகும் , மேலும் அது பொருள் பொதிந்த வார்த்தை என வராலாற்று மன்னிக்கவும் மொழியியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு எடுத்துக்காட்டு கீழே தரப்பட்டுள்ளது..!!

ஒரு ஊர்ல ஒரு யானை இருந்துச்சாம். அந்த யானைக்கு நாலு கால் இருந்துச்சாம் . அப்போ ஒரு ரயில் போயிட்டு இருந்துச்சாம் . அதனால பாட்டி வடை சுட்டாங்களாம். இத பார்த்த சத்தியராஜ் படம் நடிச்சாராம். இதனால கடல்ல அலை வந்துச்சாம். அதனால தைப்பொங்கல் வந்துச்சாம். அப்புறம் அமாவாசை வந்ததால நிலா வரலியாம் . அப்புறம் வாத்தியார் வந்து ஒண்ணு இரண்டு பாத்து வரைக்கும் சொல்லிக்கொடுத்தாராம். அம்ம்பானி போன் வித்தாராம்.அதனால இந்த வார்த்தைய கண்டுபிடிசாங்கலாம்.!

சௌந்தர் said...

ஓ.. மை.. காட்..........வாட் இஸ் திஸ்.... யார் இவள் ஏன்? இப்படி...../////

ohhhhhhhhhhhhhhhhhhhhhhhh

ரெண்டு நாளா இவர் எங்கும் இல்லை சாட் offline இருக்கு எப்போதும் போன் பேசிட்டு இருக்கார் போல

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இன்டியன் ஆர்மி ..........ப்ளீஸ் ... கம் அண்ட் சேவ் மீ..........

தம்பி சிரிப்பு போலிஸ் அராஜகம் தாங்க முடியல.....! //

ஹா ஹா ஹா (நம்பியார் சிரிப்பு)

வினோ said...

அண்ணே, காதல் தத்துவம்ன்னு ஒரே mixing இருக்கு

Chitra said...

மனதில் ஒரு ஒரு புயலே அடிச்சிருக்கு போல.... நல்லா எழுதுறீங்க...

Riyas said...

நீலத்தாமர படம் பார்த்தாச்சு போல..

dheva said...

ரியாஸ்..@ நீலத் தமரையா... எனக்கு தெரியாது தம்பி.. சும்மா அப்டியே கதைக்கு சூட் ஆகுற மாதிரி போட்டோ தேடிடு இருந்தேன்....யார இருந்தா நமக்கு என்னப்பா...! ஒரு வேளை கவிதா இது மாதிரி இருப்பாங்கன்னு நினைக்கிறியா...? ஹா..ஹா..ஹா...!

அருண் பிரசாத் said...

எனக்கு மட்டும் இப்படி தப்பி கூட ராங்கால் வர்றது இல்லை :(

அவ்வ்வ்வ்வ்வ்

ஜெயந்த் கிருஷ்ணா said...

naan inke thaan irukken..

'பரிவை' சே.குமார் said...

செம சூப்பர்!

அன்பரசன் said...

படத்துல இருக்குற புள்ள யாருங்க?

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//ஏன் எதுக்குன்னு தெரிஞ்சா நாம ஏன் இப்படி இருக்கோம்...தோணிச்சு அவ்ளோதான்...!////

ஆரம்பத்திலயே... இப்படி எல்லாம் அறிவா கேள்வி கேக்க கூடாது.. :D

///யாருக்கு தெரியும் திட்டம் போட்டா பாஸ் எல்லாம் நடக்குது ஹா.. ஹா..ஹா...போற போக்குல எங்கயாச்சும் அதுவா கிடைக்கும்... !///

சரி அது ரைட்ட்டட்டு..... உங்களுக்கு கிடைச்சுதாங்க?? :-)))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///ஒரு பதட்டோதோடு தொலைபேசியை காதருகே காதலோடு (டெஸ்டோஸ்டிரான், ஈஸ்ட்ரோஜன் வேலையேதான்....) ///

ஹ்ம்ம் கும்ம்.. இவுக விடுற ஜொள்ளுக்கு...(சயின்ஸ்-சயே இழுக்குறாங்க....) :D :D :D

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//ஓ.. மை.. காட்..........வாட் இஸ் திஸ்.... யார் இவள் ஏன்? இப்படி.....///

அதே அதே தான்.......ஓ மை காட்... வாட் இஸ் திஸ்....யார் இந்த தேவா...?? ஏன்?? ஏன் இப்புடி?? :-))))
அப்போ நான் வர்ட்டா...!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//ஓ.. மை.. காட்..........வாட் இஸ் திஸ்.... யார் இவள் ஏன்? இப்படி.....///

அதே அதே தான்... ஓ மை காட்... வாட் இஸ் திஸ்....யார் இந்த தேவா...?? ஏன்?? ஏன் இப்புடி?? :-))))
அப்போ நான் வர்ட்டா...!!