Skip to main content

ஹாய்.....03.11.2010!























வாழ்த்துக்களும் பண்டிகைகளும் மனிதர்கள் தமக்குத்தாமே படைத்துக் கொண்டதின் பின்ணனியில் ஒரு கூட்டு வாழ்க்கையின் முக்கியத்துவம் இருக்கிறது.அதனால்தான் நாடு கடந்து மொழி கடந்து இனம் கடந்து விழாக்கள் எப்போதும் மனித வாழ்வின் அங்கமாகவே இருக்கிறது.

எப்படி வேண்டுமானாலும் மனிதன் தன்னை பிரித்துக் கொள்ளட்டும்.தத்துவங்களின் பெயரால், சித்தாந்தங்களின் பெயரால், கொள்கைகளின் பெயரால் முரண்பட்டு கிடக்கட்டும் ஆனால் கொண்டாட்டங்களையும், விழாக்களையும் விரும்பாத மனிதன் இருக்க முடியாது.

பல வகையில் நம்மை சுத்திகரித்துக் கொள்ளவும் புத்துணர்வூட்டிக் கொள்ளவும் எல்லா சராசரி நிகழ்வுகளில் இருந்தும் விடுவித்துக் கொண்டு ஒரு பட்டாம் பூச்சியாய் சிறகடிக்கவும் பண்டிகைகள் மறைமுக காரணியாகின்றன.

எந்த ஒரு பண்டிகையாக இருக்கட்டும் கொண்டாடுவதற்காக ஒரு காரணத்தை நாம் சொல்லிக் கொள்கிறோமே தவிர அதனால் கிடைக்கும் மகிழ்ச்சியும் தோழமையும், ஒருவரை ஒருவர் பரஸ்பரம் வாழ்த்திக் கொள்வதில் கிடைக்கும் நிறைவும் வேறு எந்த வகையிலும் ஈட்டப்பட முடியாத ஒன்று.

சமீபத்திலிருப்பது தீபாவளியாயிருந்தாலும் எல்லா பண்டிகைகளையும் ஒரு ஈடுபாட்டோடு நோக்கி, ஏன்? எதற்கு என்ற அர்த்த விவாதங்களை தூக்கி கடாசி விட்டு நம்மை சுத்திகரித்துக் கொள்வது அவசியமாகிறது. எல்லோரும் சந்தோசப்படும் போது ஒரு வித நேர்மறையான அலையியக்கம் தன்னிச்சையாக நடைபெறுகிறது....மேலும் ஒருமித்த சந்தோசம் என்ற ஒரு காஸ்மிக் மைண்ட் இருக்கும் போது ஏற்படும் ஒத்ததிர்வுகளால் பிரபஞ்சத்தில் மாற்றங்கள் ஏற்படுகிறது.....(ஆமாம்... பட்டர் பிளை தியரி மாதிரிதான்..)

நமது ஒவ்வொரு எண்ணமும் நேரடியாகவோ மறைமுகமாகவோ நமக்கு பரிசளிக்கப்படுகிறது. இப்போ முடிவு பண்ணுங்கள் என்ன மாதிரியான எண்ணங்களை நாம் நமக்குள் விதைப்பது என்று.....நான் யாரையோ பார்த்து பொறாமைப் பட்டால் என்னைப் பார்த்தும் ஒருவன் பொறாமைபடுவான்...! நான் யாரையாவது வாழ்த்தினால் என்னையும் ஒருவன் வாழ்த்துவான்....! ஆமாம் நாமதான் முடிவு பண்றோம் நமக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை தேவை என்று....!

பணம் இருந்தால் சந்தோசம் கிடைக்கும் என்று நம்பும் மனிதம் மனம்...., சந்தோசமாக இருந்தால் பணம் வரும் என்று ஏன் நம்ப மறுக்கிறது? நான் சொல்கிறேன்.. நீங்கள் சந்தோசமாக ...உச்சகட்ட மகிழ்ச்சியாக வாழ்க்கையைப் பாருங்கள்....உங்களுக்கு தேவையான பணம் மட்டுமில்லை, மனிதர்களும் சூழ்நிலைகளும் வரும்....! அது எப்டிய்யா?? இது என்ன மோடி மஸ்தான் வேலையானு பகுத்தறிவோடு கேக்குறீங்களா.....?

சந்தோசமா இருக்கும் போது செய்யுற வேலைய ஆர்வமா செய்வோம்....! செய்யமுடியாத வேலையையும் செய்ய துணிவோம்...! ஆனந்தமா இருக்குற நாம நம்ம ஆனந்தத்த மத்தவங்களுக்கு பறிமாற்றம் செய்வோம்.....

அவுங்க அதுக்கு என்ன செய்வாங்க.....? முடிஞ்சவரைக்கும் நம்மள நேசிப்பாங்க...இப்டி சுத்தி சுத்தி எல்லாமே சாதகமா ஆன பின்னால....கிடைக்கப்போறது வெற்றிதானே? .வெற்றி என்ன கொடுக்கும்.......அத நான் சொல்லமாட்டேன்... உங்களுக்கே தெரியும்....(மோடி மஸ்தான் வேலை இல்லேல்ல...!!!!!!!)

சரிங்க...நவம்பர் 5 தீபாவளி கொண்டாடுற எல்லோரும்....வீட்ல அம்மா, அப்பா, அக்கா, தம்பிங்க, தங்கசிங்க, அண்ணன், தாத்தா, பாட்டிங்க, குட்டீஸ் இன்னும் எல்லா உயிரான உறவுகளுக்கு எல்லாம் என் ப்ரியமான வாழ்த்துக்களை சேர்த்துடுங்க.

இந்த பண்டிகையில் உலகம் பூரா உறவுகள் இருக்குது அப்டீன்றதே ரொம்ப நெகிழ்ச்சியா இருக்குங்க....! தனியா வந்து தனியா போகப் போற வாழ்க்கைக்கு நடுவுல....ஒரு பெரிய பூந்தோட்டத்த கடந்து செல்ற ஒரு உணர்வு இருக்கு....! அன்பும் நேசமும்தானுங்களே பெரிய விசயம்.

அப்புறம் ஒரு விசயம், எந்த பண்டிகை கொண்டாடினாலும் மறக்காம நம்ம ஈழத்து இரத்த பந்தங்களை மறந்துடாதீங்க....! எல்லோரும் அது பத்தி கண்டிப்பா வீட்ல பேசுங்க... நினைவு கூர்ந்து உங்க வேண்டுதல்களின் போது, ஈழத்திலும் மற்றும் புலம் பெயர்ந்து வாழும் எல்லா உறவுகளுக்கும் வலு சேர வேண்டும் அவர்கள் வாழ்க்கை தீபச்சுடராய் ஒளிர வேண்டும்னு ஜஸ்ட் வேண்டிக்கோங்க.....ப்ளீஸ் மனசார இதை செய்ங்க....! சரீங்களா?

கடந்த வாரத்தில் நிறைய மின்னஞ்சல்கள் வந்தன அதில் மிக முக்கியமான விசயம் ஒண்ணு எல்லோரும் சொல்லியிருந்தது.....

" தினமும் பதிவுகள் போடுவதால் வாசிக்க நேரமும் அதை ரியலைஸ் பண்ண டைமும் இல்லை அதனால் போதிய இடைவெளி கொடுங்க" ன்னு கேட்டு இருந்தாங்க!

இது பற்றி ஏற்கனவே எங்க ஊர் வலைப்பதிவர் தமிழ் அமுதன் (கண்ணாடி) என்கிட்ட சொல்லியிருந்தாங்க....! கூட்டிக் கழிச்சு பாத்து... வாரத்துக்கு இரண்டு (புதன் & சனிகிழமைகள்) பதிவுகள் பப்ளிஷ் பண்ணுவோம்னு முடிவும் பண்ணிட்டேன்.... (அப்பாடா சாமி ஆள வுடுடானு சில அன்பான உள்ளங்கள் நினைக்கும்.. அந்த சந்தோசத்துக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்ங்க....)

நிறைய புது பதிவர்கள் அட்டகாசமா பட்டைய கிளப்புற அதே நேரத்தில்.....செமயா குறுக்கு வழில கூட்டத்த சேத்துகிட்டு அட்டூழியமும் அழிச்சாட்டியமும் நடக்குது....எப்டி பாத்துகிட்டு சும்மா போறது.....

தேசத்தின் ஜனாதிபதியையும், பிரதம மந்திரியையும், முதலமைச்சரையும் விமர்சிக்க சுதந்திரம் உள்ள தேசத்தில்.....சக பதிவர்களை உரிமையாக சுட்டிக்காட்ட முடியாதா என்ன? முடியும்தானே......?????

சரி ரொம்ப பெரிய ஹாய் சொல்லிட்டேன்.....! தீபாவளிய செமயா சந்தோசமா பட்டய கிளப்புற மதிரி கொண்டாடுங்க..........அன்பும் சந்தோசமும்...எங்கும் பரவட்டும்.......


கேட்ச் யூ ஆல் லேட்டர்...............!


அப்போ வர்ர்ர்ர்ட்ட்ட்டா!


தேவா. S

Comments

உங்களுக்கும் உங்கள குடும்பத்துக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். அது சரி தீபாவளி வாழ்த்துக்களைக் கூட தமிழ்ல சொல்ல மாட்டீங்களா? நம்ம மக்கள் பாவம். எதோ கொஞ்சம் படிச்சவன்னால எனக்கு புரியுது...
//இது பற்றி ஏற்கனவே எங்க ஊர் வலைப்பதிவர் தமிழ் அமுதன் (கண்ணாடி) என்கிட்ட சொல்லியிருந்தாங்க....! கூட்டிக் கழிச்சு பாத்து... வாரத்துக்கு இரண்டு (புதன் & சனிகிழமைகள்) பதிவுகள் பப்ளிஷ் பண்ணுவோம்னு முடிவும் பண்ணிட்டேன்.//
எல்லோரும் எந்திருச்சி நின்னு ஜோரா கை தட்டுங்க ....................
உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் 10,000 ரூபாய்க்கு பட்டாசு வாங்கியாச்சா..?
தீபாவளி நல் வாழ்த்துக்கள்.............குறிப்பா குட்டிஸ்க்கு ...............மற்றும் குடும்பத்தினருக்கு
தேசத்தின் ஜனாதிபதியையும், பிரதம மந்திரியையும், முதலமைச்சரையும் விமர்சிக்க சுதந்திரம் உள்ள தேசத்தில்.....சக பதிவர்களை உரிமையாக சுட்டிக்காட்ட முடியாத என்ன? முடியும்தானே......////

என்ன பதிவர்கள் பற்றி விமர்சனம் வர போகிறதா..?
தீபாவளி வாழ்த்துக்கள் மாப்ஸ்..

இனிமே வாரத்துல ரெண்டு பதிவுதானா? ஏன் மாப்ள இப்டி பண்ணிப்புட்டீங்க? சரி, பரவால்ல... தமிழ் அமுதன் (கண்ணாடி) மற்றும் உன்னிடம் கேட்டுக்கிட்டவுங்களுக்காக ஒத்துக்கிறேன்... ஆல் தி பெஸ்ட்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீப ஒளி எங்கும் பொங்கட்டும்.
//இப்போ முடிவு பண்ணுங்கள் என்ன மாதிரியான எண்ணங்களை நாம் நமக்குள் விதைப்பது என்று.....நான் யாரையோ பார்த்து பொறாமை பட்டால் என்னைப்பார்த்தும் ஒருவன் பொறாமைபடுவான்...! நான் யாரையாவது வாழ்த்தினால் என்னையும் ஒருவன் வாழ்த்துவான்....! ஆமாம் நாமதான் முடிவு பண்றோம் நமக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை தேவை என்று....!/

நேர்மறையான எண்ணங்களே நமக்கு வேண்டும் அண்ணா . அதே சமயம் என்னைப் பொறுத்த வரை பொறாமை கொள்வதில் தவறு இல்லை என்றே கருதுகிறேன் .. பொறாமையால் அடுத்தவரின் வளர்ச்சியை நாம் கட்டுப்படுத்த நினைக்கும் வரை . பொறமை என்பது அடுத்தவரின் வளர்ச்சியை விட நமது வளர்ச்சி அதிகமாக இருக்க வேண்டும் அதற்காக நாம் வளரவேண்டும் என்ற எண்ணம் வளர்ந்தால் வரவேற்க்கத்தக்கதே .. அதைவிடுத்து அடுத்தவரின் வளர்ச்சியை குறைத்து நான் பெரியவன் என்ற எண்ணம் வருமேயானால் அது தவறானதே ..!!
@தேவா

//இது பற்றி ஏற்கனவே எங்க ஊர் வலைப்பதிவர் தமிழ் அமுதன் (கண்ணாடி) என்கிட்ட சொல்லியிருந்தாங்க....!//

சாமி சத்தியமா சொல்லு.... நான் உனக்கு போன் பண்ணி... சரிரிரிரி சரிரிரிரி... நீ போன் பண்ண அப்பொ கேப் விட்டு பதிவு போடு சொல்லல??? அப்பொ ஏன் போனிலும் மிரட்டல் வந்தது சொல்லல??
எல்லோருக்கும் இனிய இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ..!!
அப்புறம் சத்தம் இல்லாம பட்டாசு வெடிக்க விரும்புவோர் கோமாளியைத் தொடர்புகொள்ளவும் ..!!
@இம்சை

//செமயா குறுக்கு வழில கூட்டத்த சேத்துகிட்டு அட்டுழியமும் அழிச்சாட்டியமும் நடக்குது....எப்டி பாத்துகிட்டு சும்மா போறது.....//

மக்கா நம்மள தான் சொல்றாரு.... வா ஓடி போய்டலாம்...

@தேவா

சொம்பு தூக்க தனியா ஆளுங்க இருக்காங்க மாப்ஸ்!! அதே மாதிரி போட்டு தள்ள ஒரு டீம் இருக்கு மாப்ஸ் (நாங்க இல்லை நாங்க இல்லை). நீங்க எல்லாம் அன்பு மட்டும் ஆயுதமா எடுத்து உலக பூந்தோட்டமா வச்சிகோங்க. போர்களத்த நாங்க... ச்சீ... அவங்க பாத்துபாங்க... என்னயா சொல்ற பட்டா டீல் ஓகேவா?? அங்க பாரு அதுக்குள்ள வெளியூர் கத்தி எடுக்கறான்...
அண்ணே... புதன், சனி கிழமைகள் வேண்டாம்... திங்கள், வியாழன் போடுங்கள்.... சனிகிழமைகளில் வாரவிடுமுறை வருவதாலும் மறுநாளும் லீவ் என்பதாலும் பதிவை படிக்க தவறும் வாய்ப்பு உண்டு


உங்களுக்கு உங்கள் குடும்பத்திற்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
வாரத்துக்கு இரண்டு (புதன் & சனிகிழமைகள்)பதிவுகள் பப்ளிஷ் பண்ணுவோம்னு முடிவும் பண்ணிட்டேன்.... '////

நா எப்பவும் திங்கள் and வியாழன் என்று வைத்துள்ளேன்.
Anonymous said…
அண்ணனுக்கும் அண்ணனின் அன்புக்களுக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.. :)
Unknown said…
வாழ்த்துக்கள் தேவா .. உங்கள் கருத்துக்களுக்கு என் ஆதரவும் ..
Kousalya Raj said…
//ஈழத்திலும் மற்றும் புலம் பெயர்ந்து வாழும் எல்லா உறவுகளுக்கும் வலு சேர வேண்டும் அவர்கள் வாழ்க்கை தீபச்சுடராய் ஒளிர வேண்டும்னு ஜஸ்ட் வேண்டிக்கோங்க.....ப்ளீஸ் மனசார இதை செய்ங்க....! சரீங்களா?//


சரி. நிச்சயம் நம் உறவுகளை இந்த தீப திரு நாளில் நினைத்து அவர்களுக்காக வேண்டுவது நம் கடமை. அன்பு ஒன்றே ஆனந்தம்... பிறருக்காக வேண்டுவதும் வேண்ட சொல்வதும் நல்ல பண்பு...

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Anonymous said…
பணம் இருந்தால் சந்தோசம் கிடைக்கும் என்று நம்பும் மனிதம் மனம்...., சந்தோசமாக இருந்தால் பணம் வரும் என்று ஏன் நம்ப மறுக்கிறது? ///

அருமையான வரிகள்
என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
உங்களுக்கும் உங்கள குடும்பத்துக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
dheva said…
அருண்..@ திங்கள்... & வெள்ளி ட்ரை பண்றேன் பா! நன்றிகள்!
//எந்த ஒரு பண்டிகையாக இருக்கட்டும் கொண்டாடுவதற்காக ஒரு காரணத்தை நாம் சொல்லிக் கொள்கிறோமே தவிர அதனால் கிடைக்கும் மகிழ்ச்சியும் தோழமையும், ஒருவரை ஒருவர் பரஸ்பரம் வாழ்த்திக் கொள்வதில் கிடைக்கும் நிறைவும் வேறு எந்த வகையிலும் ஈட்டப்பட முடியாத ஒன்று.//

அப்ப பட்டாசு கொளுத்திட வேண்டியதுதான்.
அண்ணே தீபாவளி வாழ்த்துன்னு பர்ஸ்ட்டுலேயே சொல்லியிருக்கக் கூடாதா? ஏதோ மப்புல இருந்ததால அப்பிடியே புல்லா படிச்சிட்டேன், இல்லேன்னா என்னாகுறது?
உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!
///.....செமயா குறுக்கு வழில கூட்டத்த சேத்துகிட்டு அட்டூழியமும் அழிச்சாட்டியமும் நடக்குது....எப்டி பாத்துகிட்டு சும்மா போறது.....///

அண்ணன் நம்மலத்தான் குறி வெக்கிறாரு, சட்டுப்புட்டுன்னு எடத்த காலி பண்ணுவோம்!
//வாரத்துக்கு இரண்டு (புதன் & சனிகிழமைகள்) பதிவுகள் பப்ளிஷ் பண்ணுவோம்னு முடிவும் பண்ணிட்டேன்.... (அப்பாடா சாமி ஆள வுடுடானு சில அன்பான உள்ளங்கள் நினைக்கும்.. அந்த சந்தோசத்துக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்ங்க....) //

ஹிஹிஹி... மைன்ட் வாய்ஸ் எல்லாம் நல்லாஆஆ கேட்ச் பண்றீகளே..... :-)))))
// எந்த பண்டிகை கொண்டாடினாலும் மறக்காம நம்ம ஈழத்து இரத்த பந்தங்களை மறந்துடாதீங்க....! எல்லோரும் அது பத்தி கண்டிப்பா வீட்ல பேசுங்க...//


ஆமாம்..! தேவா கடந்த காலங்களை விட தற்போது தமிழக மக்களிடம் ஈழத்து உறவுகள் மீதான அக்கரை குறைகிறதோ என்ற அச்சம் உண்டாகிறது..! அரசியல் வாதிகள் சோரம் போய் இருக்கலாம் ஆனால் நம்மை போன்றோர் சோர்ந்து போய் விட கூடாது. குறைந்த பட்சம் நம் குழந்தைகளிடமாவது ஈழ சகோதரர்கள் மீதான அன்புணர்வை ஊட்டி வளர்க்க வேண்டும்..!
அப்புறம் ஒக்க ஸ்மால் டவுட்டு..........சார் ரொம்ப நேரமா அந்த பக்கமே திரும்பி நிக்கிறீங்க....
ப்ளாக் பிக்சர சொன்னேன்... இனி ரெண்டே ரெண்டு பதிவு தானாம்..........இப்பிடி திரும்புங்க.....
ப்ளீஸ்...!!! :-))))

தேவா.. உங்க ப்ளாக் பிக்சருக்கு... ஒரு கமெண்ட்...

நா வாரியர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......ஒரு தரம் பதிவு எழுதிட்டா...
என் பதிவ நானே திரும்பி பாக்க மாட்டேன்.. அப்டியா..??? :D :D :D
(ஆத்தா நா இல்ல.. நா இல்ல...)
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்...........
தீபாவளி வாழ்த்துகள்..
dheva said…
செளந்தர் @ வெடி இங்க வெடிக்க முடியாது அதனால மத்தாப்பு, சங்கு சக்கரம், புஸ்வானம், சாட்டை....எல்லாம் வாங்கியாச்சு....வாங்கியாச்சு...!
dheva said…
பன்னிக்குட்டி @ அட நீங்க இல்ல பங்காளி.. சும்மா இருங்க...ஆமா!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
Mahi_Granny said…
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் தேவா
பண்டிகைகள் ஒரு கூட்டு வாழ்வுக்கு முன்னோடி... ஒருமைப்பாட்டிற்கு ஒரு அடையாளம். வாழ்த்துக்கள். தீபாவளி வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றீ.
Chitra said…
தினமும் பதிவுகள் போடுவதால் வாசிக்க நேரமும் அதை ரியலைஸ் பண்ண டைமும் இல்லை அதனால் போதிய இடைவெளி கொடுங்க" ன்னு கேட்டு இருந்தாங்க!



....... Righttu!!

HAPPY DEEPAVALI!!! :-)
nis said…
என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Bibiliobibuli said…
//ஈழத்திலும் மற்றும் புலம் பெயர்ந்து வாழும் எல்லா உறவுகளுக்கும் வலு சேர வேண்டும் அவர்கள் வாழ்க்கை தீபச்சுடராய் ஒளிர வேண்டும்னு ஜஸ்ட் வேண்டிக்கோங்க..//

முதலில் ஈழத்து உறவுகளை நினைவு கூர்ந்ததிற்கு நன்றி. ஆனாலும் இது, " ஜஸ்ட் வேண்டிக்கோங்க.." GREAT ESCAPE ங்கோ. தமிழகத்தமிழர்கள் ஜஸ்ட் வேண்டிகிட்டா (யாருகிட்டக்க....) மட்டும் போதாதுங்கோ, யோசிங்கோ. உங்கள் எழுத்தைப் படிப்பவர்களை அதை யோசிக்க வைங்கோ.
dheva said…
ரதி...@ ஈழம் பற்றி ஜஸ்ட் நினைக்க சொன்னதற்கு பின்னால் எஸ்கேப் என்று ஒன்றும் இல்லை தோழி....எல்லா வகையிலும் உதவமால் போய்விட்ட இயலாமையில் குறைந்த பட்சம் அவர்களை நினைக்க வைக்கும் முயற்சி......தான் சகோதரி.....!

யாரிடமும் வேண்டத் தேவையில்லை...மனதில் நினனத்தல்....அந்த நினைப்பு வேதனையை கொடுத்தால் வேதனையையில் இருந்து தீர்வாக்கான...கோபமும் கோபத்திலிருந்து செயலும் பிறந்து விடாதா என்ற ஆதங்கமும்தான்....


என்னுடைய முந்தைய பதிவுக்கான சுட்டு இது....நேரம் கிடைக்கும் போது வாசித்துப் பாருங்கள்....சகோதரி...!

http://maruthupaandi.blogspot.com/2010/05/iii.html

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த