Skip to main content

வரம்....!














ஞாபகங்களின் ஆளுமையில்
வந்து விழும் நினைவுகளில்
நிறைந்திருக்கும் உணர்வுகளில்
ஆனந்தக் கனவுகளில்
வெட்கி நிற்கிறது உன்னிடம்
நான் சொல்ல மறந்த காதல்...!

தொலை தூர புள்ளியாய்
நகரும் உன் நகர்வில் லயித்து
உன்னைப்பற்றிய கனவுகளில்
நினைவுகளை செரித்து செரித்து
படைத்துக் கொண்டிருக்கிறேன்
உனக்கான ஒரு கவிதையை....!

எப்போதோ பெய்தாலும்
தவறாமல் நெஞ்சு நிறைக்கும்
ஒரு வானம் பார்த்த மழையாய்
காதலை கொட்டி நிறைக்கிறது
ஆசையாய் நீ பரவவிட்டுச் சென்ற...
அடர்த்தியான அந்த கடைசிப் பார்வை....!

என் மனக்கிளைகளில்
அமர்ந்திருக்கும் அத்தனை
எண்ணக் குயில்களும் இசைக்கும்.....
இசையில் தப்பாமல் ஒளிந்திருக்கிறது
உனக்கான ஒரு காதல் ராகம்....!

அழுந்த பெய்யாத மழைக்குப்
பின்னான மண்ணின் வாசம் போல
விரவிக்கிடக்கும் உணர்வுகள்
கண் சிமிட்டி சிரிக்கின்றன
எனக்குள் இருக்கும் உனக்கான
கம்பீரக் காதலைப் பார்த்து...!

ஒரு மரமும் அதன் நிழலும்
கொஞ்சலோடு பேசிச் சிரித்து
எனைக் கேலி செய்த பொழுதில்
கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தில்
கிறுக்கத் தொடங்கியிருந்தேன்....
என் காதலின் கன பரிமாணங்களை....!

எப்படிப் பார்த்தாலும் ஒரு மனிதனுக்குள் இருக்கும் பச்சையம், அந்த உயிர்ப்புத் தன்மையின் மூல முடிச்சு காதல். காதல் இல்லை எனக்குள் என்று சொல்லும் மனிதர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நலம். காதல் என்ற வார்த்தையின் கற்பிதங்கள் பலவாறு மனித மூளைகளுக்குள் பதியப்பட்டு இருப்பதால் அறிவின் படி நிலைக்கேற்ப, ஏற்பட்ட அனுபவத்திற்கேற்ப ஒரு புரிதல் கிடைக்கும். காதல் சம்பந்தப்பட்ட ஒரு மிஸ்டிக் நினைவுகள் வருவது எப்போது என்று கொஞ்ச ஆராய்ந்து பார்த்தால்....

அது பெரும்பாலும் தனிமையில்தான் தனது ராஜாங்கத்தை நடத்துகிறது.....ஆமாம் தனிமை தவம் அல்ல....அது வரம்....!



தேவா. S

Comments

Jeyamaran said…
அண்ணா அட்டகாசமான கவிதை இருங்க இதை அண்ணி போட்டுகுடுகிறேன் :)......
Jeyamaran said…
சங்கத்து பேர எழுத மறந்துட்டோம் இப்படிக்கு குடும்பத்துல குண்டுவைபோர் சங்கம்

உறுப்பினர்கள்
ஜெயமாறன்
ரசிகன் சௌந்தர்
கோமாளி செல்வா
வெறும்பய ஸ்ரீகிருஷ்ணா ஜெயந்த்
Jeyamaran said…
அடடா இந்த சங்கத்து தலைவர் நீங்கன்னு தெரியாம பஞ்சாயத்து பண்ணிட்டோம்
by...
குடும்பத்துல குண்டுவைபோர் சங்கம்
//ஞாபகங்களின் ஆளுமையில்
வந்து விழும் நினைவுகளில்
நிறைந்திருக்கும் உணர்வுகளில்
ஆனந்தக் கனவுகளில்
வெட்கி நிற்கிறது உன்னிடம்
நான் சொல்ல மறந்த காதல்...!//

இதுதானோ சுகமான சுமைகள்.

//தொலை தூர புள்ளியாய்
நகரும் உன் நகர்வில் லயித்து
உன்னைப்பற்றிய கனவுகளில்
நினைவுகளை செரித்து செரித்து
படைத்துக் கொண்டிருக்கிறேன்
உனக்கான ஒரு கவிதையை....!//

அருகில் இருந்தாலும் வரும், தூரத்தில் இருந்தாலும் வரும்.

//என் மனக்கிளைகளில்
அமர்ந்திருக்கும் அத்தனை
எண்ணக் குயில்களும் இசைக்கும்.....
இசையில் தப்பாமல் ஒளிந்திருக்கிறது
உனக்கான ஒரு காதல் ராகம்....!//

இதுதாண்ணே நான் ஸ்டாப் கொண்டாட்டம்.
//அழுந்த பெய்யாத மழைக்குப்
பின்னான மண்ணின் வாசம் போல
விரவிக்கிடக்கும் உணர்வுகள்
கண் சிமிட்டி சிரிக்கின்றன
எனக்குள் இருக்கும் உனக்கான
கம்பீரக் காதலைப் பார்த்து...!//

நினைவுகள் ஊற்றாய் பெருகும் போது மெலிதாய் வரும் புன்சிரிப்பு.
"மரநிழலும் மரமும்
கொஞ்சி பேசி"

அருமையான வரிகள் நண்பரே

வாங்களேன் என் வதம் பார்க்க
http://marumlogam.blogspot.com/2010/11/blog-post_10.html
அது பெரும்பாலும் தனிமையில்தான் தனது ராஜாங்கத்தை நடத்துகிறது.....ஆமாம் தனிமை தவம் அல்ல....அது வரம்....!

//


சரியாக சொன்னீர்கள் அண்ணா... தனிமை அனுபவிக்க தெரிந்தவனுக்கு மட்டும் தான் வரம்... வேறுத்தொதுக்குபவனுக்கு தனிமை என்றுமே சாபம் தான்...

தனிமையின் நினைவுகள் சுமையுடன் கூடிய சுகமான சுகந்தம்...
//ஒரு மரமும் அதன் நிழலும்
கொஞ்சலோடு பேசிச் சிரித்து
எனைக் கேலி செய்த பொழுதில்
கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தில்
கிறுக்கத் தொடங்கியிருந்தேன்....
என் காதலின் கன பரிமாணங்களை....!//

நினைக்க ஆரம்பித்த நொடியினிலே பல வண்ணம் கொள்ளும்... எழுதி முடிக்க முடியா கனங்கள்.
நோட்டுப் புத்தகத்தில்
கிறுக்கத் தொடங்கியிருந்தேன்....
என் காதலின் கன பரிமாணங்களை....!///

அந்த நோட்டுப் புத்தகத்தில் எழுதிய கவிதை தான் இதுவா..?
எதோ புரியுற மாதிரி இருக்கு ஆனா புரியல ..........
@தேவா

ரைட்டுங்க மாப்ஸ்!! கவிதை நல்லா இருக்கு. எனக்கும் ஒரு ப்ளாக் இருக்கு அதை போய் தூசி தட்டரேன்... :))
//
நோட்டுப் புத்தகத்தில்
கிறுக்கத் தொடங்கியிருந்தேன்....
என் காதலின் கன பரிமாணங்களை....!///

அந்த நோட்டுப் புத்தகத்தில் எழுதிய கவிதை தான் இதுவா..? //
சௌந்தர் அது அந்த முறைச்சி பார்த்த பல பரிமாணங்கள்
dheva said…
இம்சை அரசன் பாபு...@ தம்பி.. புரியலையா..???? அடக் கடவுளே.....நான் என்ன பண்ணட்டும்....!
dheva said…
செளந்தர்..@ யெஸ் யெஸ்..அதே கவிதைதான்...!
dheva said…
டெரர்...@ மாப்ஸ் ...கவிதை எழுத போறியா???????? ப்ளீஸ் சொல்லிட்டு செய்...பல பேரை போர்ல மண்டியிடச் செய்த வீரன் நீ.....உனக்குள் கவிதையா....கிரேட்...சீக்கிரம்..சீக்கிரம்..சீக்கிரம்...!
dheva said…
ஜெயமாறன்...@ தம்பி இந்த கவிதை எழுதின பின்னால ஸ்பெல்லிங் செக் பண்ணி கொடுத்ததே..அண்ணிதான்...(இது எப்டி இருக்கு....????)
//என் மனக்கிளைகளில்
அமர்ந்திருக்கும் அத்தனை
எண்ணக் குயில்களும் இசைக்கும்.....
இசையில் தப்பாமல் ஒளிந்திருக்கிறது
உனக்கான ஒரு காதல் ராகம்....!//

இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா .,!! இத நான் ஒரே தடவைல புரிஞ்சிக்கிட்டேன் .. கவிதைன்னு நினைச்சதுமே சரி கொஞ்சம் நின்னு நிதானிச்சு படிக்கணும் அப்படின்னு இப்பத்தான் படிச்சேன் .. இப்படி நல்லா இருக்குனு தெரிஞ்சிருந்தா முதல்லையே வந்து வடை வாங்கிருப்பேன் ..!!
//ஞாபகங்களின் ஆளுமையில்
வந்து விழும் நினைவுகளில்
நிறைந்திருக்கும் உணர்வுகளில்
ஆனந்தக் கனவுகளில்
வெட்கி நிற்கிறது உன்னிடம்
நான் சொல்ல மறந்த காதல்...!//

அங்க போய் ஏன் மறந்தீங்க? ஒரு பேப்பர்லயாவது எழுதி வச்சிட்டு போயிருக்கலாமே?
//தொலை தூர புள்ளியாய்
நகரும் உன் நகர்வில் லயித்து
உன்னைப்பற்றிய கனவுகளில்
நினைவுகளை செரித்து செரித்து
படைத்துக் கொண்டிருக்கிறேன்
உனக்கான ஒரு கவிதையை....!//

தொலைவுல போனாதான் கவிதை வருது. பக்கத்துல இருந்தா மொக்கை பிகர் அப்டிங்கிறீங்களா?

செரித்து செரித்துஜீரணிக்க முடியாத பிகரா. செரிக்க டைம் ஆகுமா?
//என் மனக்கிளைகளில்
அமர்ந்திருக்கும் அத்தனை
எண்ணக் குயில்களும்//

அப்ப காக்கா?
////நிறைந்திருக்கும் உணர்வுகளில்
ஆனந்தக் கனவுகளில்
வெட்கி நிற்கிறது உன்னிடம்
நான் சொல்ல மறந்த காதல்...!////

சொல்லாத காதலின் வலி மனதை அரித்துத் தின்றுவிடும்!
///தொலை தூர புள்ளியாய்
நகரும் உன் நகர்வில் லயித்து
உன்னைப்பற்றிய கனவுகளில்
நினைவுகளை செரித்து செரித்து
படைத்துக் கொண்டிருக்கிறேன்
உனக்கான ஒரு கவிதையை....!///

ஆஹா... ரொம்பச் சரி, காதல் கவிதைகளின் மூலம் எப்போதும் பழைய காதலே!
////என் மனக்கிளைகளில்
அமர்ந்திருக்கும் அத்தனை
எண்ணக் குயில்களும் இசைக்கும்.....
இசையில் தப்பாமல் ஒளிந்திருக்கிறது
உனக்கான ஒரு காதல் ராகம்....!////

அடடா.... காதல் ராகமும் கன்னித்தமிழும் ஒன்று சேர்ந்ததுவோ..... (இது இந்திரன் சந்திரன் படத்தில் வரும் பாடல்)
////காதல் சம்பந்தப்பட்ட ஒரு மிஸ்டிக் நினைவுகள் வருவது எப்போது என்று கொஞ்ச ஆராய்ந்து பார்த்தால்....

அது பெரும்பாலும் தனிமையில்தான் தனது ராஜாங்கத்தை நடத்துகிறது.....ஆமாம் தனிமை தவம் அல்ல....அது வரம்....!////

அல்டிமேட் ஊர்ஸ்.... தனிமையின் இனம்புரியா நினைவுகள்..... உணர்வுகள் காதலின் ஒரு அங்கம்!
RVS said…
//நினைவுகளை செரித்து செரித்து
படைத்துக் கொண்டிருக்கிறேன்
உனக்கான ஒரு கவிதையை.//
நினைவு செரிமானம் ஆச்சா? நல்லா வந்திருக்கு..
கோபப்படலைன்னா ஒரு சின்ன சஜ்ஜஷன். ஏன் எல்லா தலைப்புகளிலும் "......." வக்கிறீங்க. அது கொஞ்சம் இழுக்கறா மாதிரி இருக்கு.
நன்றி ;-)
Anonymous said…
ஒரு அருமையான காதல் வெளிப்பாடு..
சூப்பர் அண்ணா..
NaSo said…
சொல்லாத காதல் எல்லோருக்கும் உண்டு அண்ணா.
Unknown said…
//எப்போதோ பெய்தாலும்
தவறாமல் நெஞ்சு நிறைக்கும்
ஒரு வானம் பார்த்த மழையாய்//
Unknown said…
//அழுந்த பெய்யாத மழைக்குப்//
அழுந்த ???
TOP 10 ல இருக்குறதா கேள்விப்பட்டேன்..., வாழ்த்துக்கள்...
ஆழ்மனக் காதலின் வெளிப்பாடாய் கவிதை. மிக அருமை பாஸ் . இணைந்து இருக்கும் நேரத்தை விட தனிமையில் தனது ராஜாங்கத்தை நடத்தும்
//ஒரு மனிதனுக்குள் இருக்கும் பச்சையம், அந்த உயிர்ப்புத் தன்மையின் மூல முடிச்சு காதல். //

காதலும் ஒரு முறை வந்து போகும் உயிர் போன்றது.

நம் கண்முன்னே நாம் தூக்கில் தொங்கும் நிலையை உணருவோம்
நம் காதலியிடம் நம் காதலை சொல்லும் போது.
@பன்னிக்குட்டி ராம்சாமி

//சொல்லாத காதலின் வலி மனதை அரித்துத் தின்றுவிடும்!//

நான் வேணும்னா Pest Control போன் பண்ணவா?

//ஆஹா... ரொம்பச் சரி, காதல் கவிதைகளின் மூலம் எப்போதும் பழைய காதலே!//

அப்பொ இப்பொ இருக்க காதலியை நீங்க மதிக்க மாட்டிங்க?? Mrs.தேவா & Mrs.ராம்ஸ் பூரி கட்டை ரெடி பண்ணுங்க.

//அடடா.... காதல் ராகமும் கன்னித்தமிழும் ஒன்று சேர்ந்ததுவோ..... (இது இந்திரன் சந்திரன் படத்தில் வரும் பாடல்)//

ஏன் நீங்க வேணும்னா சொந்தமா ஒரு படம் எடுத்து ஒரு பாட்டு பாடி அதை இங்க சொல்லுங்களேன்...

//அல்டிமேட் ஊர்ஸ்.... தனிமையின் இனம்புரியா நினைவுகள்..... உணர்வுகள் காதலின் ஒரு அங்கம்!//

இதை மட்டும் நம்ம ப்ளாக்ல வச்சி பேசிக்கலாம்...

(மவனே இப்படி கவிஞனா மாறி வீண போற உன்னை திருத்தி நல்ல மொக்கைய மாத்தரேன்... இது சிரிப்பு போலீஸ் ப்ளாக் மேல ஆணை...)
@ நாகராஜசோழன் MA

//சொல்லாத காதல் எல்லோருக்கும் உண்டு அண்ணா.//

அப்பா நாகராஜா நீ வேற புதுசா ஆரம்பிக்காத. தயவு செஞ்சி போய் உன் காதல சொல்லிட்டு வந்துடு.... அவளுக்கு கல்யாணமாகி இருந்தாலும் சரி... :))
காதலைப்பற்றி எத்தனை கவிதை, கதை வந்தாலும் காதல் தீராது இல்ல.
S Maharajan said…
//ஒரு மரமும் அதன் நிழலும்
கொஞ்சலோடு பேசிச் சிரித்து//

உவமை!

கிறுக்கத் தொடங்கியிருந்தேன்....
என் காதலின் கன பரிமாணங்களை....!

கவிதை!
//அழுந்த பெய்யாத மழைக்குப்
பின்னான மண்ணின் வாசம் போல
விரவிக்கிடக்கும் உணர்வுகள்
கண் சிமிட்டி சிரிக்கின்றன
எனக்குள் இருக்கும் உனக்கான
கம்பீரக் காதலைப் பார்த்து...!
//

கவிதையில் காதல் ஊற்றாய்...
நல்லா சொல்லியிருக்கீங்க... இன்னும் முதல் காதலை மறக்கவில்லை என்பது பனித்துளியாய் கவிதையில்...
பிரமாதம் தல
தேவா பல முறை இங்கு வந்துள்ளேன். ஒலிக்கும் பாடல் தனிப்பட்ட முறையில் சந்தோஷமாயிருந்தாலும் இப்பக்கூட குழந்தைகள் அப்படியே இருக்கட்டும் என்று என்னை நகர்த்திவிட்டார்கள். ஓலியின் தரம் அற்புதம்.

தொட்ர்கின்றேன்.
vimalanperali said…
கவிதை நல்லாயிருக்கு.வாழ்த்துக்கள்.
நான் இதுவரை என்னோடைய எந்த பதிவையும் வந்து படியுங்கள் என்று யாரையும் அழைத்தது இல்லை . ஆனால் என்னுடைய , சாதி = எய்ட்ஸ் (part- 1) பதிவை படிக்க தாழ்மையுடன் அழைக்கிறேன் . நேரம் இருந்தால் வாருங்கள் நண்பரே .

http://rockzsrajesh.blogspot.com/2010/11/1.html

பணிவுடன் ,
ராக்ஸ் . . . .

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...