
உன்னிடம் நானும் என்னிடம் நீயும் இதுவரை காதலை சொன்னதில்லை. காதல் என்ற வார்த்தைக்குள் சிக்காமல் உன்னோடு பழகத்தொடங்கி இன்றோடு மூன்றாண்டுகளைக் கடந்துவிட்டோம் என்ற நினைவின் பின்னணியில் வெளிப்பட்ட நீண்ட பெருமூச்சோடு....நடந்து கொண்டிருக்கிறேன்...ஒரு அதிகாலை ஆள் அரவமற்ற ஒற்றையடிப் பாதையில்.....
இந்தக் கணம் வரை எந்த முரண்களும் இல்லாமல் நேசித்தலைப் பிரதானமாகக் கொண்டு நாம் சிரித்ததும் சிரிக்கையில் பேசியதும் பேசுகையில் கவிதை சொன்னதும் அதைக் காட்சிகளாய் வர்ணித்ததும் கைகட்டிக் கைக்கு எட்டாத் தொலைவுகளில் உடல் உரசா ஆனால் உள்ளம் உரசிய நடைகளில் எல்லாம் எதைப் பயின்றோம்? காதலா? இல்லை நட்பா இல்லை இந்த இரண்டும் தொலைந்து போன இடத்தில் முளைத்த புதிதான வேறு எதுவோவா?
ஞானத்தின் உச்சம் பெண்களிடமிருந்து வருகையில் அதை அதீத வேகத்தில் ஓர் ஆண் வாங்கிக் கொள்ள வேண்டும். அதற்காக நான் வெகுகாலம் தவமிருந்தேன்... நீ தவம் கலைத்தாய் வரம் கொடுத்தாய்... தாகத்தில் பருகும் நீர் போல இருகரம் குவித்து மொத்த நீரையும் உள்வாங்கிக் கொள்வது போல சிந்தாமல் சிதறாமல் உன்னை என்னுள் நிறைத்துப் போட்டேன். நிறைந்து போனேன். ஒரு அடர்த்தியான அமிலம் போல என்னை கரைத்துப் போட்டாய்... எனக்குள் கனவுக்கடைகளை வேக வேகமாய்த் திறந்து போட்டாய்...!
கலர்க்கலராய் நீ பேசிய கவிதைகளும் கவிதைகளை உச்சரித்த உனது பாவங்களும் ஒன்று சேர்ந்து என்னை மூர்ச்சையாக்கிப் போட்டு முன்னூறு கதைகள் பேசியது உனக்குத் தெரியுமா? தெரியாதா? என்று எனக்குத் தெரியாது. ஒரு முறை பேச்சு வாக்கில் ஐ லவ் யூ என்று சொன்ன மறு கணத்தில் உன் முகத்தில் உற்சாகமும் ஒரு சாந்தமுமாய் வெளிப்பட்ட உணர்வுக்கு உதவுவது போல வந்து விழுந்த வார்த்தைகள் சொல்லாமல் இருக்கும் எல்லாம் சுகமானது என்று எனக்குள் ஒரு பால பாடத்தை நடத்தி விட்டு... போரில் வென்ற இருமாப்பின்றி வெறுமனே நகர்ந்து செல்லும் அரசனைப் போல அடுத்த வாக்கியத்துக்குள் நுழைந்து வேறு விசயத்துக்குச் சாதரணமாய் திரும்பி விட்டன...
ஆனால்... தேக்கிவைத்த உணர்வுகளோடு நேசித்தலைச் சொல்லாமலேயே நேசிக்கும் வித்தையை எனக்கு கற்றுக் கொடுத்த குரு நீ என்பதும் உனக்குத் தெரியாது. மெளனங்களால் பேசும் மொழியை உன்னிடம் இருந்து நான் கற்றுக் கொண்டதும் தெரியாது. பகிராமல் ஒரு பயணம் செய்வதில் சராசரியான எனக்கு இருந்த சிரமங்களில் தலையாயது எனக்காக நீ ஒரு நாள் அழுத போது உன்னைத் தொட்டு ஆறுதல் சொல்ல முடியாமல் நான் தடுமாறியது, அன்று என் கலக்கம் புரிந்து ஆறுதலுக்காய்த் தொடுதலில் தவறு இல்லை. செயல்களை விட நோக்கங்களில் தான் இருக்கிறது தவறும் சரியும் என்று நீ சொன்ன இடத்தில் தெளிவாய்ப் புரிந்து போனது வாழ்க்கையும் வாழ்வியல் முறைகளும் உறவுகளும்...
திருமணமும் பந்தமும் மட்டுமே உறவுகளை வரையறுத்துப் போட்டு ஒரு கட்டுக்குள் நிறுத்தி வைத்து விடுகின்றன என்ற ஒரு பேச்சினூடே திருமணம் என்பது வாழ்வியல் தேவை ஆனால் அதுவே வாழ்வியல் இல்லை. காமம் வரைமுறைக்குள் இருக்க வேண்டும் என்றுதான் திருமணம் அதில் தவறுகள் இல்லை. ஆனால் காதல் வரைமுறைக்குள் இருக்க வேண்டும் என்று மனிதர்கள் எண்ணுவதில்தான் முரண்பாடுகள் இருக்கின்றன. காமத்தைக் கட்டுக்குள்ளும் காதலை விரித்து பேரன்பு நோக்கம் கூடிய பார்வையில் நோக்கி வாழும் போதுதானே வாழ்வின் ஓட்டத்தில் இருக்கும் ஜீவன்அறியப்படும்.
உடல் சார்ந்த காமம் கட்டுக்குள்ளும் அங்கே ஒருத்தனுக்கு ஒருத்தி மாண்பும், மனம் சார்ந்த காதல் அன்பே சிவமாய் விரிந்து பரந்தும் இருத்தலில் தானே மனிதனுள் இருக்கும் எல்லாச் சக்கரங்களும் விழிக்கும், அவன் உடலென்னும் தோட்டத்தில் எல்லாப் பூக்களும் பூத்துச் சிரிக்கும். தடுக்க வேண்டியதைத் தடுத்து அனுமதிக்க வேண்டியதை அனுமதித்து வாழும் வாழ்க்கையை நடத்திச் செல்வது ஒரு கலை. ஆனால் மனிதர்கள் தடுக்க வேண்டியதை அனுமதித்தும் அனுமதிக்க வேண்டியதைத் தடுத்தும் ஒரு குழப்பத்தில்தான் பெரும்பாலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
உதாரணமாகக் காமத்தை நேர்மையாக அறியவேண்டும். இவர்கள் திருட்டுத்தனமாய் அதை அடக்கி அடக்கியே....அதை அறிவதைத் தவிர்த்துப் பேசுவதைத் தவிர்த்து... இப்போது அறிதல் இல்லாமல் புரிதல் இல்லாமல் பார்க்கும் பொருளில் எல்லாம் காமம் வெளிப்பட்டுச் சீரழித்துக் கொண்டிருக்கிறது. கடவுளும் அப்படித்தான்...அறிதலும் புரிதலும் இல்லாமல் முரண்பட்டுப் போயிருக்கிறது...
நான் பேசிக் கொண்டிருந்தேன்....
என்னைத் தடுக்காமல் நீ அவற்றை எல்லாம் வாங்கிக் கொண்டு கண்களால் ஒரு உணர்வை எனக்குள் பாய்ச்சிவிட்டு அந்தப் பாய்ச்சல் பரப்பிய சந்தோச அலைகளை என்னுள் பரவவிட்டு நான் லயித்துக் கண்மூடி அதை அனுபவித்த நொடியில் என் உள்ளங்கை பற்றி மேலும் நீ பரவவிட்ட அதிர்வுகளில் சுத்தமான அன்பு இருந்ததைச் சூடாக உணர முடிந்தது.....
தட்சிணாமூர்த்தி தத்துவம் போல இருந்ததை இருந்தது போல இருந்து காட்டி இன்று வரை தொடரும் உன்னோடான உறவு நட்பில்லை, காதலுமில்லை அது ஒரு குரு சிஷ்யன் உறவு.....
ஆமாம் நீ என் ஞான குரு என்று உன்னிடம் சொன்னதை என்னிடம் நீயும் திருப்பி சொன்னாய்.......
தொடர்ந்து கொண்டிருக்கிறது.....நமது பயணம்....
உடல்தாண்டி உணர்வுகளாயும் தொடரட்டும் என்று நீ சொன்னதையே நானும் சொல்லி இந்தக் கட்டுரையையும் உனக்கே சமர்ப்பித்து........
இதோ நடந்து கொண்டே இருக்கிறேன்......என் ஒற்றையடிப் பாதையில்......மெளனத்தில் நிறைந்திருந்த சப்தமான உன் நினைவுகளோடு....
அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்ட்டா...!
(இன்னும் சுவாசிப்போம்.....)
தேவா. S
Comments
சூப்பர் சார் ... NICE FEEL...........
dheva2000: hi sasi
me: சுவாசமே காதலாக....(தொகுப்பு:6
intha topic eppavum naan padikkirathu illa
ungal mel enaaku kobamum poraaamyuim athikarithu vidum
dheva2000: hahahaha
me: ithellaam munbeh eluthi vaithirunthaatha?
முற்றிலும் உண்மை அண்ணா ....ரொம்பநாளைக்கு அப்புறம் புரியும் படியான பதிவு (எனக்கு அண்ணா புரிஞ்சது ....)
வாய்ப்பே இல்ல அண்ணா . ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு .. இந்த வரிகளில் சொல்லப்பட்ட விசயங்களைக் கற்பனை செய்யும் போதே ஹய்யோ ..!!
nice dheva sir
ஆமா...நீங்க மட்டும்தான் பேசிட்டு இருந்தீங்க
உண்மைதான் தேவா, காதல்/நட்பு போன்ற வார்த்தைகளால் இதை விளக்கமுடியாது......!
ஆங்கிலத்தில் சொல்லி ஆட்டத்தில் இருந்து விலக படுகிறீர்கள்
//காமத்தைக் கட்டுக்குள்ளும் காதலை விரித்து பேரன்பு நோக்கம் கூடிய பார்வையில் நோக்கி வாழும் போதுதானே வாழ்வின் ஓட்டத்தில் இருக்கும் ஜீவன்அறியப்படும்.//
மிகச் சிறப்பான உங்கள் புரிதல் எங்களுக்கும் தந்து உய்விக்கிறீர்கள் அண்ணே!
ஒவ்வொரு வரியிலும் உங்க உணர்வுகளை.. வெளிப்படுத்த ஒரு போர் வீரனாய்... நீங்க உபயோகிக்கும் எழுத்து ஆயுதம்..
எண்ணங்களை எல்லாம் எழுத்தாய் ....எல்லாவற்றையும் உணர்ந்து எழுதி
காதல், காமம், நட்பு, குரு ஸ்தானம்..... ஹ்ம்ம்ம்...அத்தனையும் அதனதன் போக்கில் விவரித்த விதம்... மனதை தொடுவதாய் இருக்கு..!
தொடரட்டும் உங்கள் புரிதலும்... போர் முரசும்...!! :-))
ஒவ்வொரு வரியும் ஓராயிரம் அர்த்தம் சொல்கிறது...
மிகவும் ரசித்தேன்...
சில உணர்வுகளை உணர்ந்தவர்களால் மட்டுமே முழுமையாக உணர முடியும்!//
அதே! அதே! :-)
காதலை யெண்ணிக் களிக்கின்றேன்; --அமு
தூற்றினை யொத்த இதழ்களும் --நில
வூறித் ததும்பும் விழிகளும் --பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் --இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் -- எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே -இங்கொர்
விண்ணவ னாகப் புரியுமே! --இந்தக் (காற்று)
நீயென தின்னுயிர் கண்ணம்மா! --எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் --துயர்
போயின, போயின துன்பங்கள் --நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே --என்றன்
வாயினி லேயமு தூறுதே --கண்ணம்
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே --உயிர்த்
தீயினி லேவளர் சோதியே! -என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக் (காற்று)
* அறிவுமதி
இந்த உறவுக்கு என்ன பெயர் வேண்டுமானலும் வைத்துக் கொள்ளலாம்... காதல் என்றோ, நட்பு என்றோ.. ஆனால், புரிதலில் என்று ஓர் புள்ளியில் இணைந்து இருக்கும்...
அருமையான கவிதை வரிகள்!!