
திக்குகளற்ற வெளியில்
நினைவுகளற்ற சுகத்தில்
விரவிக்கிடக்கும் ஆசைகளை
கர்ண கொடூரமாய் தகர்க்கின்றன
நிகழ்கால முரண்பாடுகள்...!
உறவுக்குள் சிக்கியதில்
பாசங்கள் என்ற பாசாங்கு
விளங்கியதின் பின்னணியில்
பறந்து குவியும் காகிதங்களின்
பெயர்கள் பணமென்றறிந்தேன்...!
சத்தியங்கள் பொசுக்கப்படும்
ஒரு உலகத்தில்..
தர்மங்களின் நாயகனாய்
என்னை வரித்துக் கொண்டதில்
காயங்களுக்குள் அகப்பட்டு
ஆழ்ந்து கிடக்கிறது என் ஆன்மா!
எப்போதும் மேய்ப்பது போல
இன்றும் மேய்த்து மேய்த்து
களைத்துப் போயிருக்கிறேன்..
அடங்கா மனமென்னும்...
மாயப் பிசாசை..!
அடங்கும் பொழுதுகளில்
ஆர்ப்பரிக்கும் மனிதக் கூட்டம்
ஆழ்ந்துறங்கும் அர்த்த ராத்திரிகளில்
சுடலையில் அமர்ந்த சிவனாய்...
என்னை எரிக்கும் நித்திரைகள்
எரித்து...எங்கோ ஒரு ஏகாந்தத்தில்
இல்லாமல் இருக்கிறேன் நான்...!
தேவா. S
Comments
விளங்கியதின் பின்ணனியில்
பறந்து குவியும் காதிகங்களின்
பெயர்கள் பணமென்றறிந்தேன்...!//
அருமை தேவா.
//காயங்களுக்குள் அகப்பட்டு
ஆழ்ந்து கிடக்கிறது என் ஆன்மா!//
உடல் தான் காயப்படும். இங்க ஆன்மா காயப் படுகிறது. குட் இமேஜினேஷன்.
//மேய்த்து மேய்த்து
களைத்துப் போயிருக்கிறேன்..
அடங்கா மனமென்னும்...//
சே.. உண்மை.
//அர்த்த ராத்திரிகளில்
சுடலையில் அமர்ந்த சிவனாய்...
என்னை எரிக்கும் நித்திரைகள்
எரித்து...எங்கோ ஒரு ஏகாந்தத்தில்
இல்லாமல் இருக்கிறேன் நான்...!//
சூப்பர் தேவா. வாழ்த்துகள்.
இன்றும் மேய்த்து மேய்த்து
களைத்துப் போயிருக்கிறேன்..
அடங்கா மனமென்னும்...
மாயப் பிசாசை..!
...... This is one of your best!
பாராட்டுக்கள்!
நினைவுகளற்ற சுகத்தில்
விரவிக்கிடக்கும் ஆசைகளை//
மாப்ள, இங்க ஒரு முரண்பாடு இருப்பது போன்று எனக்கு தோன்றுகிறதே!
அதாவது, நினைவுகளற்ற சுகத்தில் ஆசைகள் எவ்விதம் விரவிக்கிடக்கும்? விளக்கவும். ஹிஹி...
இப்புரிதலுக்கு அப்பாற்பட்டும் நிற்கும் என்பதும் திண்ணம் தானே அண்ணா?!
philosophy prabhakaran
December 9, 2010 3:39 AM
ஆழமான அர்த்தங்கள் கொண்ட கவிதை நண்பரே///
எவ்ளோ ஆழம் இருக்கும்?
சுபத்ரா
எங்க அண்ணா எழுதினதுக்கு அர்த்தம் சொல்லுங்க பாப்போம்?
@
சுபத்ரா
எங்க அண்ணா எழுதினதுக்கு அர்த்தம் சொல்லுங்க பாப்போம்?////
யோவ் அவங்க இந்த ப்ளாக் பக்கம் வருவது உனக்கு பிடிக்கலையா...?
அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்ட்டா!
உங்களின் புரிதலுக்கு நன்றிகள்...!
ம்ம்ம்ம் சொல்ல ஒண்ணுமில்லை.. விளங்கியமையில் மயங்கி நிற்கிறேன்...!
ஏன் தம்பி யாராச்சு ஒருத்தர் ரெண்டு பேரு படிக்கலாம்னு துணிச்சலா வந்த அவுங்களையும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !
பாசங்கள் என்ற பாசாங்கு
விளங்கியதின் பின்னணியில்
பறந்து குவியும் காகிதங்களின்
பெயர்கள் பணமென்றறிந்தேன்...!//
வரிகளின் அழுத்தம் படிப்பவர்களின் மனதையும் தாக்குவதை உணரமுடிகிறது இந்த கவிதையில்....
வெளிக்காட்ட முடியாத ஆதங்கம், கோபம் வார்த்தைகளாய்...காயப்பட்டது ஆன்மா என்றாலும் வலிக்கவே செய்யும்...
சித்ரா சொன்னதுபோல் சிறந்த பல பதிவுகளில் மிக சிறந்தது இதுவே...!
:)
இன்றும் மேய்த்து மேய்த்து
களைத்துப் போயிருக்கிறேன்..
அடங்கா மனமென்னும்...
மாயப் பிசாசை..!
//
அருமையான வரிகள்
மனதை அடக்கும் வழிதெரியாமல் தான் அலைகிறோம் காலந்தோறும்
மாயப் பிசாசை.//
இதை பில்லி சூனியம் வைக்க முடியாதோ
உலகின் விசயங்கள் உள்வாங்கி, தன் நிலையோடு யோசிக்க, வெளிப்படும் கோவம், இயலைமை என்று இப்படி பல பரிமாணங்கள் எடுக்கும் ஆன்மா திரும்பவம் உள்ளே சென்று பாசாங்கு செய்ய முடியாமல் தவிக்கும்...
அங்கே ஓர் போராட்டம் என்றும் நடக்கும்... சரியா?
i hope you do not mean my question based on material....