Skip to main content

சுயம்...!
























திக்குகளற்ற வெளியில்
நினைவுகளற்ற சுகத்தில்
விரவிக்கிடக்கும் ஆசைகளை
கர்ண கொடூரமாய் தகர்க்கின்றன
நிகழ்கால முரண்பாடுகள்...!

உறவுக்குள் சிக்கியதில்
பாசங்கள் என்ற பாசாங்கு
விளங்கியதின் பின்னணியில்
பறந்து குவியும் காகிதங்களின்
பெயர்கள் பணமென்றறிந்தேன்...!

சத்தியங்கள் பொசுக்கப்படும்
ஒரு உலகத்தில்..
தர்மங்களின் நாயகனாய்
என்னை வரித்துக் கொண்டதில்
காயங்களுக்குள் அகப்பட்டு
ஆழ்ந்து கிடக்கிறது என் ஆன்மா!

எப்போதும் மேய்ப்பது போல
இன்றும் மேய்த்து மேய்த்து
களைத்துப் போயிருக்கிறேன்..
அடங்கா மனமென்னும்...
மாயப் பிசாசை..!

அடங்கும் பொழுதுகளில்
ஆர்ப்பரிக்கும் மனிதக் கூட்டம்
ஆழ்ந்துறங்கும் அர்த்த ராத்திரிகளில்
சுடலையில் அமர்ந்த சிவனாய்...
என்னை எரிக்கும் நித்திரைகள்
எரித்து...எங்கோ ஒரு ஏகாந்தத்தில்
இல்லாமல் இருக்கிறேன் நான்...!


தேவா. S

Comments

க ரா said…
anna epadi irukinga :)
ஆழமான அர்த்தங்கள் கொண்ட கவிதை நண்பரே... வெகு சிலரால் மட்டுமே புரிந்துக்கொள்ள இயலும்...
//பாசங்கள் என்ற பாசங்கு
விளங்கியதின் பின்ணனியில்
பறந்து குவியும் காதிகங்களின்
பெயர்கள் பணமென்றறிந்தேன்...!//

அருமை தேவா.

//காயங்களுக்குள் அகப்பட்டு
ஆழ்ந்து கிடக்கிறது என் ஆன்மா!//

உடல் தான் காயப்படும். இங்க ஆன்மா காயப் படுகிறது. குட் இமேஜினேஷன்.

//மேய்த்து மேய்த்து
களைத்துப் போயிருக்கிறேன்..
அடங்கா மனமென்னும்...//

சே.. உண்மை.

//அர்த்த ராத்திரிகளில்
சுடலையில் அமர்ந்த சிவனாய்...
என்னை எரிக்கும் நித்திரைகள்
எரித்து...எங்கோ ஒரு ஏகாந்தத்தில்
இல்லாமல் இருக்கிறேன் நான்...!//

சூப்பர் தேவா. வாழ்த்துகள்.
Chitra said…
எப்போதும் மேய்ப்பது போல
இன்றும் மேய்த்து மேய்த்து
களைத்துப் போயிருக்கிறேன்..
அடங்கா மனமென்னும்...
மாயப் பிசாசை..!

...... This is one of your best!
பாராட்டுக்கள்!
//திக்குகளற்ற வெளியில்
நினைவுகளற்ற சுகத்தில்
விரவிக்கிடக்கும் ஆசைகளை//

மாப்ள, இங்க ஒரு முரண்பாடு இருப்பது போன்று எனக்கு தோன்றுகிறதே!

அதாவது, நினைவுகளற்ற சுகத்தில் ஆசைகள் எவ்விதம் விரவிக்கிடக்கும்? விளக்கவும். ஹிஹி...
இந்த பதிவில், நம்ம தலைவரு ஃபோட்டோ சூப்பரா இருக்கு.
Anonymous said…
லௌகீக வட்டத்துக்குள் வாழ்ந்து கொண்டு அவ்வப்போது வட்டத்தை தாண்டிக் குதித்து பிரபஞ்சத்தின் துளியாய், மனவெளியில் பிரம்மாண்டமாய், ஏதுமற்ற இருப்பாய், தெறித்து விழும் கீற்றின் ஒளியாய் உணருகிறேன் இதை!
இப்புரிதலுக்கு அப்பாற்பட்டும் நிற்கும் என்பதும் திண்ணம் தானே அண்ணா?!
//

philosophy prabhakaran
December 9, 2010 3:39 AM

ஆழமான அர்த்தங்கள் கொண்ட கவிதை நண்பரே///
எவ்ளோ ஆழம் இருக்கும்?
@
சுபத்ரா

எங்க அண்ணா எழுதினதுக்கு அர்த்தம் சொல்லுங்க பாப்போம்?
nis said…
அர்த்தங்கள் கனமாக உள்ளது .
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) December 9, 2010 8:14 AM
@
சுபத்ரா

எங்க அண்ணா எழுதினதுக்கு அர்த்தம் சொல்லுங்க பாப்போம்?////

யோவ் அவங்க இந்த ப்ளாக் பக்கம் வருவது உனக்கு பிடிக்கலையா...?
dheva said…
சிறுகுடி ராமு..@ நினைவுகளற்று போயிருக்கும் அந்த ஒரு ஏகாந்தத்தில்...லயித்துக் கிடக்க வேண்டும்....என்ற ஆசை ஸ்தூலதில் இருக்கும் போது இருக்கும்...ஆனால்.. எல்லாமுமாய் இருக்கும் அந்த சத்தியத்தில்..ஆசைகள் இருக்காது....ஏனென்றால்....நீயே.. எல்லாமாகிறாய்.....அங்கே பிரித்தெடுக்க வேறு ஒரு வஸ்து ஏது...?

அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்ட்டா!
dheva said…
இராமசாமி கண்ணன்...@ நல்லா இருகேன்பா.. !
dheva said…
பிஃளாசபி பிரபாகரன்...@ புரிதல் எல்லோருக்கும் வரும்..ஆனால் மிகைப்பட்ட மனம் உள் திரும்ப விரும்புவதில்லை. அகம் நோக்கிய பயணத்திற்கு பதிலாக எப்போதும் புறத்தில் ஓடும்.. மனதின் பின்னால் ஓடுவது வசதியாகி போய்விட்டது....அவ்வளவுதான்...!

உங்களின் புரிதலுக்கு நன்றிகள்...!
dheva said…
சுபத்ரா..@ ஆழாம வாங்கியிருக்கீங்க கவிதைய..!
dheva said…
சித்ரா..@ வழக்கம் போல நீங்கள் உற்சாக டானிக் கொடுத்து இருக்கீங்க.. நன்றிகள்...!
dheva said…
பாலாஜி..@ தம்பி.....


ம்ம்ம்ம் சொல்ல ஒண்ணுமில்லை.. விளங்கியமையில் மயங்கி நிற்கிறேன்...!
dheva said…
ரமேஷ்...& செளந்தர்... @ சரி ரைட்டு...

ஏன் தம்பி யாராச்சு ஒருத்தர் ரெண்டு பேரு படிக்கலாம்னு துணிச்சலா வந்த அவுங்களையும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !
dheva said…
nis @ ம்ம்ம் சரிங்க
Kousalya Raj said…
//உறவுக்குள் சிக்கியதில்
பாசங்கள் என்ற பாசாங்கு
விளங்கியதின் பின்னணியில்
பறந்து குவியும் காகிதங்களின்
பெயர்கள் பணமென்றறிந்தேன்...!//

வரிகளின் அழுத்தம் படிப்பவர்களின் மனதையும் தாக்குவதை உணரமுடிகிறது இந்த கவிதையில்....

வெளிக்காட்ட முடியாத ஆதங்கம், கோபம் வார்த்தைகளாய்...காயப்பட்டது ஆன்மா என்றாலும் வலிக்கவே செய்யும்...

சித்ரா சொன்னதுபோல் சிறந்த பல பதிவுகளில் மிக சிறந்தது இதுவே...!

:)
VELU.G said…
//எப்போதும் மேய்ப்பது போல
இன்றும் மேய்த்து மேய்த்து
களைத்துப் போயிருக்கிறேன்..
அடங்கா மனமென்னும்...
மாயப் பிசாசை..!
//

அருமையான வரிகள்


மனதை அடக்கும் வழிதெரியாமல் தான் அலைகிறோம் காலந்தோறும்
sakthi said…
அர்த்தம் பொதிந்த கவிதை ::)))
ஆஹா மாப்பு! ஏதோ, ஒரு ஆர்வக்கோளாருல கேள்விய கேட்டுப்புட்டேன்... ஆனா அதுக்கு நீ குடுத்த வெளக்கத்துக்கு அர்த்தத்த, நான் எந்த டிக்ஷ்னரில போயி தேடுறது.... ஆள விடுப்பா சாமியோவ்...
Anonymous said…
அடங்கா மனமென்னும்...
மாயப் பிசாசை.//
இதை பில்லி சூனியம் வைக்க முடியாதோ
வினோ said…
அண்ணா சகோ சித்ரா கமெண்ட் ரீபிட்.

உலகின் விசயங்கள் உள்வாங்கி, தன் நிலையோடு யோசிக்க, வெளிப்படும் கோவம், இயலைமை என்று இப்படி பல பரிமாணங்கள் எடுக்கும் ஆன்மா திரும்பவம் உள்ளே சென்று பாசாங்கு செய்ய முடியாமல் தவிக்கும்...

அங்கே ஓர் போராட்டம் என்றும் நடக்கும்... சரியா?
SASIKUMAR said…
does aanmaa get experience?if so what is the reaction called? pls exp. dheva---- good post
i hope you do not mean my question based on material....
Paul said…
கவிதை மிகவும் நன்றி..!! ஒவ்வொரு வரிகளுமே..!!
சூப்பர்... வாழ்த்துகள்.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த