
ஒரு மழை நாளில்
உதட்டில் பொருத்திய
முதல் சிகரெட்டோடு
உள்ளே பரவிய நிக்கோடின்
துகள்கள் மூளையின் செல்களை
கலைத்துப் போட்டிருந்தன...!
பற்றியிழுக்கையில்
பரவசமாய் உள்ளே சென்ற
புகையினூடே உண்டான
முதல் பரவசத்தில்...
முரண்கள் பட்டுப் போயிருந்தன!
உள்ளே பரவி சூடான
நினைவுகளை தெளித்து விட்டு
வெளியே பெய்த மழையை
வேடிக்கையாய் பார்த்து
சிரித்தது வெள்ளை சிகரெட்...!
அழுந்த புகைத்தேனா
இல்லை ஆழமாய் சுகித்தேனா
என்றறியாமல் தடுமாறிய...
வேளையில் எங்கிருந்து...
எட்டிப் பார்த்தது உன் நினைவுகள்..?
உள்ளிழுத்து வெளிவிட்டு
வெளிவிட்டு உள்ளிழுத்து
மொத்தாமாய் செத்துப் போயிருந்த
நிக்கோடின் குச்சியின்....
மிச்சத்தில் புகைத்தலின்றி
மிகைத்து கிடந்த உன் நினைவுகளுடன்
தனித்து கிடந்த என்னை
வேடிக்கையாய் கேலி செய்து
சிரித்தது.. வெளியே பெய்த மழை...!
தேவா. S
Comments
உதட்டில் பொருத்திய
முதல் சிகரெட்டோடு
உள்ளே பரவிய நிக்கோடின்
துகள்கள் மூளையின் செல்களை
கலைத்துப் போட்டிருந்தன...!///
ச்சே ச்சே கெட்ட பையன்
வேடிக்கையாய் கேலி செய்து
சிரித்தது.. வெளியே பெய்த மழை...!////
எல்லா காதலர்களையும் ஏளனம் செய்கிறதே.....!இந்த ............
மிகைத்து கிடந்த உன் நினைவுகளுடன்
தனித்து கிடந்த என்னை
வேடிக்கையாய் கேலி செய்து
சிரித்தது.. வெளியே பெய்த மழை...!//
அந்தச் சூழலைக் கண்முன்னால் கொண்டுவந்துவிட்டது இந்த வரிகள்......நிஜமாவே தம் அடிச்ச மாதிரி ஒரு ஃபீல்....ஹி ஹி ஹி :))
அருமை ...
வெளிவிட்டு உள்ளிழுத்து
மொத்தாமாய் செத்துப் போயிருந்த
நிக்கோடின் குச்சியின்....//
அடடா ..! கவிதை நல்லா இருக்கு அண்ணா .. ஆனா என்ன சொல்ல வரீங்க அப்படின்னு வழக்கம் போல புரியல .!! ஹி ஹி ..
தனித்து கிடந்த என்னை
வேடிக்கையாய் கேலி செய்து
சிரித்தது.. வெளியே பெய்த மழை...!////////////
எல்லாம் காதல் பாஸ்!!
எட்டிப் பார்த்தது உன் நினைவுகள்..?//
//தனித்து கிடந்த என்னை
வேடிக்கையாய் கேலி செய்து
சிரித்தது.. வெளியே பெய்த மழை...!//
தனித்து கிடந்த என்னை
வேடிக்கையாய் கேலி செய்து
சிரித்தது.. வெளியே பெய்த மழை...!//
நல்லா இருக்குங்க. ரொம்பவே ரசித்தேன்.
புதிய சொல்லாடல் தேவா!!!!