
ஒரு வெற்று வானமும்
சப்தங்களற்ற தனிமையும்
ஒரு சில்லென்ற காற்றுக்குள்
எனை நிறைத்துப் போட
எதுவுமற்று எல்லா திசைகளிலும்
அலைகிறேன் நான்!
என்னுள் இருந்த…
சித்தாந்தங்களின் சிதறலில்
உயிர்த்துக் கொண்ட …
உணர்வுகள் கொடுத்த சிறகுகள்..
தூக்கிச் செல்கின்றன..எட்டப்படாத…
உயரங்களில் இருக்கும்
ஏதோ ஒரு உண்மைக்கு…!
சப்தங்கள் தொலைத்த கணத்தில்…
சிலிர்த்தெழுந்த ஒரு…
சிருங்கார நாதம் என்னுள்
பற்றிப் பரவிய பொழுதில்…
கரைந்தே போகிறேன்...
காற்றின் திசைகளுக்குள்…!
மெளனமாய் என்னுள் இருந்து
பரவும் அதிர்வுகளோடு
ஒரு பஞ்சு போல மிதந்து மிதந்து
செல்லும் எதார்த்தத்தில்
நகரும் என் காலத்திற்கோ
நிறமுமில்லை..குணமுமில்லை!
தேவா. S
Comments
////////////////////
அண்ணே த்ரீ ரோசஸ் ட்ரை பண்ணுங்க நிறம், சுவை, திடம் மூணுமே இருக்கு, திரிஷாவே சொல்லிட்டாங்க....
விதி எனும் புயல் காற்றில்
வீழ்ந்தெல்லாம் வீணாக!
நல்லவேளை சொன்னீங்க. இந்த பன்னிக்குட்டி இது கதைன்னு சொல்லி என்னை ஏமாத்திட்டாரு..
சப்தங்கள் தொலைந்த கணங்கள் எட்டாத உயரத்தில் பரவும்போது காலத்தின் நிறம், வெறுமையின் அதிர்வுகளில் ஒளிர்கிறதே......!
/////////////////////////////
பன்னிக்குட்டி சார், எது சொல்றதா இருந்தாலும் டமில்-ல சொல்லுங்க, அப்பத்தேன் எங்களுக்கும் புரியும்....
பதிவும் புரியலை, கமெண்ட்டும் புரியலை என்னாங்கடா நடக்கிது இங்க.
பரவும் அதிர்வுகளோடு
ஒரு பஞ்சு போல மிதந்து மிதந்து
செல்லும் எதார்த்தத்தில்
நகரும் என் காலத்திற்கோ
நிறமுமில்லை..குணமுமில்லை!//
ஆகா... அருமை அருமை பிரமாதம்.... செம வரிகள்....
இந்த மாதிரி எவனாவது போட்டீங்க வந்து அடிப்பேன்... முதல்ல அர்த்தத்தை சொல்லுங்கய்யா
பன்னிக்குட்டி ராம்சாமி said...
சப்தங்கள் தொலைந்த கணங்கள் எட்டாத உயரத்தில் பரவும்போது காலத்தின் நிறம், வெறுமையின் அதிர்வுகளில் ஒளிர்கிறதே......!
/////////////////////////////
பன்னிக்குட்டி சார், எது சொல்றதா இருந்தாலும் டமில்-ல சொல்லுங்க, அப்பத்தேன் எங்களுக்கும் புரியும்....
பதிவும் புரியலை, கமெண்ட்டும் புரியலை என்னாங்கடா நடக்கிது இங்க.///
அப்பாடா, எனக்கும் கொரிய மொழி வருதுப்பா... இனி இருக்கு எல்லாத்துக்கும்.......
Labels: கவிதை
நல்லவேளை சொன்னீங்க. இந்த பன்னிக்குட்டி இது கதைன்னு சொல்லி என்னை ஏமாத்திட்டாரு..///
கதைதான்யா, கமென்ட்டப் பாரு, எழுதியிருக்கேன்
பரவும் அதிர்வுகளோடு
ஒரு பஞ்சு போல மிதந்து மிதந்து
செல்லும் எதார்த்தத்தில்
நகரும் என் காலத்திற்கோ
நிறமுமில்லை..குணமுமில்லை//
வரிகள் ஒவ்வொன்றும் அழகான ரசனை...
தொடருங்கள்.......
இது என்ன காலம் குளிர் காலமா?//
அண்ணே இங்கதான் இருக்கீங்களா?
எனக்கு இதுக்கே நாக்கு தள்ளுது, எப்பிடிய்யா பாம்பாட்டி சித்தர் மாதிரி இப்பிடி எழுதுறீங்க....
ஒரு ஒப்பன் சவால் உங்களால் சென்னை தமிழில் ஒரு கானா பாட்டு எழுத முடியுமா??? முன்னாடி தேவாவின் தேனிசையில் வாழ்க்கையின் சகல கருத்துக்களையும் உள்ளடக்கி பாடல்கள் வருமே அதே போல்....ஹா ஹா ஹா!
ஏதென புரியாமல்
மதி கலங்கி வழி தேடி
ஓடினேன் முன் நின்றது
வெறுமை மட்டுமே!
அடப்பாவிகளா.. எழுதுறேன்.. வெயிட் பண்ணு ...ஹா.. ஹா..ஹா..!
நித்தம் ஒன்றென செய்த போதும்
திருப்தி வந்ததில்லை எனக்கு
இன்றுதான் இறுதியென
முடிவெடுத்து ஆரம்பித்தேன்
விதமாய் விதமாய் செய்தேன்
கொலை எனும் கலையை
ரத்தம் பார்த்த பின்தான் என்
சித்தம் சிறிது அடங்கியது
துடிதுடிக்கும் குரலை கேட்டபின்
சொன்னது என் மனம்
இன்னும் வேண்டும் எனக்கு
புது அனுபவம்....
எங்கென தெரியாமல்
ஏதென புரியாமல்
மதி கலங்கி வழி தேடி
ஓடினேன் முன் நின்றது
வெறுமை மட்டுமே!
/////////////////////////////
நாசமாப்போச்சு நல்லா இருந்த மனுஷன் உங்க பதிவ படிச்சிட்டு இப்படி கமெண்டு போடுறாரு...ஆனா தேவா அண்ணாச்சி இந்த பாவம் எல்லாம் உங்கள சும்மா விடாது...
25
////////////////////////
ஹ்க்கூம் ஊரே தீப்புடுச்சி எறிஞ்சிக்கிட்டு இருக்கு இவருக்கு ”25” ரொம்ப முக்கியம்...
மீ தி 31!
தகப்பன் திருத்திக் கொடுத்த மொழி
தன்னார்வம் கொண்டு செவ்வனே நான் பயின்ற மொழி
தமிழ்தான் இது புரிகிறது- பலமுறை படித்தும்
தலையில் ஏற மறுக்கிறது இதன் பொருள்!!
தகப்பன் திருத்திக் கொடுத்த மொழி
தன்னார்வம் கொண்டு செவ்வனே நான் பயின்ற மொழி
தமிழ்தான் இது புரிகிறது- பலமுறை படித்தும்
தலையில் ஏற மறுக்கிறது இதன் பொருள்!//
கோவை ஆவி.....@ அச்சச்சோ.........ஹா.. ஹா..ஹா.. செம பாஸ் ஏன் இப்டி....எல்லாம் ஹா ஹா ஹா..!
செல்லும் எதார்த்தத்தில்
நகரும் என் காலத்திற்கோ
நிறமுமில்லை..குணமுமில்லை! /
உண்மைதான் அண்ணா...
வாழ்வின் ஒரு வெளி பயணிக்கும் போது, இவைகள் இருப்பதில்லை...
//எங்கென தெரியாமல்
ஏதென புரியாமல்
மதி கலங்கி வழி தேடி
ஓடினேன் முன் நின்றது
வெறுமை மட்டுமே!//
அண்ணா.. எப்படி இப்படில்லாம்????? கலக்கல் :-)
I loved it.
பரவும் அதிர்வுகளோடு
ஒரு பஞ்சு போல மிதந்து மிதந்து
செல்லும் எதார்த்தத்தில்
நகரும் என் காலத்திற்கோ
நிறமுமில்லை..குணமுமில்லை!
நிறைய சிந்திக்க வைக்கின்றன இவ்வரிகள்!