Skip to main content

காலம்...!


ஒரு வெற்று வானமும்
சப்தங்களற்ற தனிமையும்
ஒரு சில்லென்ற காற்றுக்குள்
எனை நிறைத்துப் போட
எதுவுமற்று எல்லா திசைகளிலும்
அலைகிறேன் நான்!

என்னுள் இருந்த…
சித்தாந்தங்களின் சிதறலில்
உயிர்த்துக் கொண்ட …
உணர்வுகள் கொடுத்த சிறகுகள்..
தூக்கிச் செல்கின்றன..எட்டப்படாத…
உயரங்களில் இருக்கும்
ஏதோ ஒரு உண்மைக்கு…!

சப்தங்கள் தொலைத்த கணத்தில்…
சிலிர்த்தெழுந்த ஒரு…
சிருங்கார நாதம் என்னுள்
பற்றிப் பரவிய பொழுதில்…
கரைந்தே போகிறேன்...
காற்றின் திசைகளுக்குள்…!

மெளனமாய் என்னுள் இருந்து
பரவும் அதிர்வுகளோடு
ஒரு பஞ்சு போல மிதந்து மிதந்து
செல்லும் எதார்த்தத்தில்
நகரும் என் காலத்திற்கோ
நிறமுமில்லை..குணமுமில்லை!


தேவா. S

Comments

காற்றின் திசைகளுக்கு வெறுமையின் அதிர்வுகள் புரியாதோ? காலத்தின் நிறமோ வெறுமையில் கரைந்து விட்டதே?
வெறுமையின் குணமோ திசைகளில்லா காலச்சுவடுகளை மௌனமாகத் தேடித் திரியும்போது காலத்தின் குணம் எப்படித் தெரியும்?
dheva said…
பன்னிக்குட்டி.@ நீயாயாயாயாயாயயாயாயயய...........??????????என்ன மறுபடியும் ஐசியுக்கு தூக்குங்கடா........ஊர்ஸ் உன் தெறம பயலுகளுக்கு தெரியல மாப்ஸ்!
நீங்கள் எழுதிய பாட்டின் அர்த்தத்தை கூறிவிட்டு, பரிசினைப் பெற்றுச் செல்லலாம்..
நொடிகள் போல கணங்கள் சென்றால் யுகங்கள் கூட நிமிடங்களாகலாம்!
சப்தங்கள் தொலைந்த கணங்கள் எட்டாத உயரத்தில் பரவும்போது காலத்தின் நிறம், வெறுமையின் அதிர்வுகளில் ஒளிர்கிறதே......!
நிறமுமில்லை..குணமுமில்லை!
////////////////////

அண்ணே த்ரீ ரோசஸ் ட்ரை பண்ணுங்க நிறம், சுவை, திடம் மூணுமே இருக்கு, திரிஷாவே சொல்லிட்டாங்க....
கொஞ்சம் புரிஞ்சது கொஞ்சம் புரியல ..!!!
காலமெனும் தேரில் ஏறி வாழ்க்கையெனும் ஊஞ்சல் ஆடினேன்
விதி எனும் புயல் காற்றில்
வீழ்ந்தெல்லாம் வீணாக!
Labels: கவிதை

நல்லவேளை சொன்னீங்க. இந்த பன்னிக்குட்டி இது கதைன்னு சொல்லி என்னை ஏமாத்திட்டாரு..
பன்னிக்குட்டி ராம்சாமி said...
சப்தங்கள் தொலைந்த கணங்கள் எட்டாத உயரத்தில் பரவும்போது காலத்தின் நிறம், வெறுமையின் அதிர்வுகளில் ஒளிர்கிறதே......!
/////////////////////////////


பன்னிக்குட்டி சார், எது சொல்றதா இருந்தாலும் டமில்-ல சொல்லுங்க, அப்பத்தேன் எங்களுக்கும் புரியும்....

பதிவும் புரியலை, கமெண்ட்டும் புரியலை என்னாங்கடா நடக்கிது இங்க.
இது என்ன காலம் குளிர் காலமா?
//மெளனமாய் என்னுள் இருந்து
பரவும் அதிர்வுகளோடு
ஒரு பஞ்சு போல மிதந்து மிதந்து
செல்லும் எதார்த்தத்தில்
நகரும் என் காலத்திற்கோ
நிறமுமில்லை..குணமுமில்லை!//

ஆகா... அருமை அருமை பிரமாதம்.... செம வரிகள்....


இந்த மாதிரி எவனாவது போட்டீங்க வந்து அடிப்பேன்... முதல்ல அர்த்தத்தை சொல்லுங்கய்யா
வெற்று வானத்தின் சப்தங்கள், தனிமையைக் காலத்தின் வெறுமையை நோக்கி பரவும் பொழுதில், காற்றின் திசைகள் அதிர்ந்து மௌனம் கலைகின்றன.
தேவா அண்ணே ஆயிரம் தான் சொல்லுங்க, மெய்யாலுமே உங்கள், குறிப்பாக இந்த விமர்சனம் சத்தியமா எனக்கு படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது....
////Phantom Mohan said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
சப்தங்கள் தொலைந்த கணங்கள் எட்டாத உயரத்தில் பரவும்போது காலத்தின் நிறம், வெறுமையின் அதிர்வுகளில் ஒளிர்கிறதே......!
/////////////////////////////


பன்னிக்குட்டி சார், எது சொல்றதா இருந்தாலும் டமில்-ல சொல்லுங்க, அப்பத்தேன் எங்களுக்கும் புரியும்....

பதிவும் புரியலை, கமெண்ட்டும் புரியலை என்னாங்கடா நடக்கிது இங்க.///

அப்பாடா, எனக்கும் கொரிய மொழி வருதுப்பா... இனி இருக்கு எல்லாத்துக்கும்.......
dheva said…
அடப்பாவிகளா..............சரி விளையாடுங்க..........!
////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Labels: கவிதை

நல்லவேளை சொன்னீங்க. இந்த பன்னிக்குட்டி இது கதைன்னு சொல்லி என்னை ஏமாத்திட்டாரு..///

கதைதான்யா, கமென்ட்டப் பாரு, எழுதியிருக்கேன்
//மெளனமாய் என்னுள் இருந்து
பரவும் அதிர்வுகளோடு
ஒரு பஞ்சு போல மிதந்து மிதந்து
செல்லும் எதார்த்தத்தில்
நகரும் என் காலத்திற்கோ
நிறமுமில்லை..குணமுமில்லை//

வரிகள் ஒவ்வொன்றும் அழகான ரசனை...

தொடருங்கள்.......
//Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இது என்ன காலம் குளிர் காலமா?//

அண்ணே இங்கதான் இருக்கீங்களா?
இனி இது போன்றதொரு படைப்பு தங்கள் வலையில் வந்தால், உங்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்....தமிழ் மொழியை இவ்வாறு கையாண்டதற்க்காக.

எனக்கு இதுக்கே நாக்கு தள்ளுது, எப்பிடிய்யா பாம்பாட்டி சித்தர் மாதிரி இப்பிடி எழுதுறீங்க....

ஒரு ஒப்பன் சவால் உங்களால் சென்னை தமிழில் ஒரு கானா பாட்டு எழுத முடியுமா??? முன்னாடி தேவாவின் தேனிசையில் வாழ்க்கையின் சகல கருத்துக்களையும் உள்ளடக்கி பாடல்கள் வருமே அதே போல்....ஹா ஹா ஹா!
எங்கென தெரியாமல்
ஏதென புரியாமல்
மதி கலங்கி வழி தேடி
ஓடினேன் முன் நின்றது
வெறுமை மட்டுமே!
dheva said…
எஸ்.கே..@கலக்குறீங்க...!
நாலு கமென்ட்டு இப்பிடி போட்டதுக்கே வயித்த என்னமோ பண்ணுது, நான் விடுதலை வாங்கிக்கிறேம்பா.....!
dheva said…
//ஒரு ஒப்பன் சவால் உங்களால் சென்னை தமிழில் ஒரு கானா பாட்டு எழுத முடியுமா??? முன்னாடி தேவாவின் தேனிசையில் வாழ்க்கையின் சகல கருத்துக்களையும் உள்ளடக்கி பாடல்கள் வருமே அதே போல்....ஹா ஹா ஹா!//

அடப்பாவிகளா.. எழுதுறேன்.. வெயிட் பண்ணு ...ஹா.. ஹா..ஹா..!
சைக்கோ

நித்தம் ஒன்றென செய்த போதும்
திருப்தி வந்ததில்லை எனக்கு
இன்றுதான் இறுதியென
முடிவெடுத்து ஆரம்பித்தேன்

விதமாய் விதமாய் செய்தேன்
கொலை எனும் கலையை
ரத்தம் பார்த்த பின்தான் என்
சித்தம் சிறிது அடங்கியது

துடிதுடிக்கும் குரலை கேட்டபின்
சொன்னது என் மனம்
இன்னும் வேண்டும் எனக்கு
புது அனுபவம்....
எஸ்.கே said...
எங்கென தெரியாமல்
ஏதென புரியாமல்
மதி கலங்கி வழி தேடி
ஓடினேன் முன் நின்றது
வெறுமை மட்டுமே!

/////////////////////////////

நாசமாப்போச்சு நல்லா இருந்த மனுஷன் உங்க பதிவ படிச்சிட்டு இப்படி கமெண்டு போடுறாரு...ஆனா தேவா அண்ணாச்சி இந்த பாவம் எல்லாம் உங்கள சும்மா விடாது...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
25
////////////////////////

ஹ்க்கூம் ஊரே தீப்புடுச்சி எறிஞ்சிக்கிட்டு இருக்கு இவருக்கு ”25” ரொம்ப முக்கியம்...

மீ தி 31!
Unknown said…
நிறம் , மனம், குணம் இம்மூன்றும் இருந்தால்தான் மனிதனோ ..
aavee said…
தாய் சொல்லித் தந்த மொழி
தகப்பன் திருத்திக் கொடுத்த மொழி
தன்னார்வம் கொண்டு செவ்வனே நான் பயின்ற மொழி
தமிழ்தான் இது புரிகிறது- பலமுறை படித்தும்
தலையில் ஏற மறுக்கிறது இதன் பொருள்!!
எல்லாம் படிச்ச புள்ளைகள கமெண்ட்ஸ் போட்டு இருக்கு .........இருமு அடிக்கிற எடத்துல ஈ க்கு என்ன வேலை ......(என்னை சொன்னேன் )
dheva said…
//தாய் சொல்லித் தந்த மொழி
தகப்பன் திருத்திக் கொடுத்த மொழி
தன்னார்வம் கொண்டு செவ்வனே நான் பயின்ற மொழி
தமிழ்தான் இது புரிகிறது- பலமுறை படித்தும்
தலையில் ஏற மறுக்கிறது இதன் பொருள்!//

கோவை ஆவி.....@ அச்சச்சோ.........ஹா.. ஹா..ஹா.. செம பாஸ் ஏன் இப்டி....எல்லாம் ஹா ஹா ஹா..!
வினோ said…
/ ஒரு பஞ்சு போல மிதந்து மிதந்து
செல்லும் எதார்த்தத்தில்
நகரும் என் காலத்திற்கோ
நிறமுமில்லை..குணமுமில்லை! /

உண்மைதான் அண்ணா...

வாழ்வின் ஒரு வெளி பயணிக்கும் போது, இவைகள் இருப்பதில்லை...
Anonymous said…
CLASSIC !!!!!!!!1
நிசப்தத்தில் நாம் பல உணர்வுகளை அறியலாம். வெளியில் மட்டுமல்ல மனமும் நிசப்தத்தில் ஆழ வேண்டும். அந்த கணம் உங்களின் ஆழமான தேடல் உயிர்பெறுகிறது.
ஆழ் மனத்தேடல் உயிர்பெறுகிறது
@ எஸ்.கே.

//எங்கென தெரியாமல்
ஏதென புரியாமல்
மதி கலங்கி வழி தேடி
ஓடினேன் முன் நின்றது
வெறுமை மட்டுமே!//

அண்ணா.. எப்படி இப்படில்லாம்????? கலக்கல் :-)
I loved it.
Anonymous said…
வரித்துக் கொண்டயாவும் அரைவினாடி சிதறலில் அர்த்தமற்றுப் போய் வெறுமைக் குடியேறும் எண்ணக் கூடு!
Unknown said…
கவித கவித
மெளனமாய் என்னுள் இருந்து
பரவும் அதிர்வுகளோடு
ஒரு பஞ்சு போல மிதந்து மிதந்து
செல்லும் எதார்த்தத்தில்
நகரும் என் காலத்திற்கோ
நிறமுமில்லை..குணமுமில்லை!

நிறைய சிந்திக்க வைக்கின்றன இவ்வரிகள்!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த