Skip to main content

Posts

Showing posts from March, 2010

பதிவர்களுக்கு ஒரு யோசனை....

பதிவர் சங்கம் பற்றி தீர்மானிக்கும் இந்த தருணத்தில்... நல்ல பதிவினை கொடுக்கும் பதிவர்களுக்கு பொருளாதர ரீதியாக திரட்டை நிர்வாகிகள் சன்மானங்களை கொடுப்பது பதிவர்களை ஊக்குவிப்பதோடு மட்டுமில்லாமல் புது புது படைப்பாளிகளையும் உருவாக்கும். இது பற்றி எல்லா பதிவர்களும் தங்களது கருத்துக்களை....தெரிவிக்கலாம். தேவா. S

குரு காணிக்கை!

எது நீ செய்யவில்லை...? காதலாய்...கனத்தாய்.... காமத்தை வரையறுத்தாய்....! பென்ணைடிமை பூட்டுக்களை தகர்த்தாய்! வாழ்வியல் நெறிகளை...கதைகளாய்... கரைத்து தந்தாய்....! இரும்புக்குதிரைகளை...பூட்டி... எல்லோர் மனதிலும் ஓடவிட்டாய்! மெர்க்குரி பூக்களாய்... மனிதருக்கு வழி காட்டினாய்.... உள் பார்க்கும் வித்தையினை... வார்த்தைகளாக்கி...வாசகனின் நெஞ்சுக்குள்... இறக்கி வைத்தாய்! ஞானியர்கள் வாழ்க்கைகளை.... நாவலாக்கி கையில் தந்தாய்.... சாமனியனுக்கும்... சாமதி நிலையை... சாதாரணமாய்... கற்றுக் கொடுத்தாய்! உன் மூச்சை சீராக்க...சீராக்கா... உன் வாசகனின் வாழ்க்கை... சீரானது....! உன்னுள் நீ அமிழ ....அமிழ.... உன் எழுத்துக்கள்... படிப்பவருக்கு....தீட்சை கொடுத்தது! நரை சடை முடி.... வெண்தாடி நீ கொண்டாய்.... எங்கள் வாழ்கை வெண்மையானது! இன்று உடையாரை உயிராக்கி... உலவவிட்டு விட்டு.... மரணத்திற்கு பின் என்ன என்று.... வாழ்வின் கருவை....உருவாக்கிக் கொண்டிருக்கிறாய்! மொத்தமாய்...இன்று உனை... மெளனமாய்...கரைத்துக் கொண்டிருக்கிறாய்! இறுதியாய்... எங்கள் நெஞ்சங்களில்... நீ நிறைந்து விட்டு...உன்னை ஒளிக்கப்பார்க்கிறாய்! இதற்குத் தான

ஹலோ....யார் பேசறது......?

ரொம்ப நாளாகவே.... எனக்கு இந்த தொலை பேசிகளை குறிப்பாக கைபேசிகளை அதிலும் குறிப்பாக கார்பரேட் உலகம் என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் அதை பயன் படுத்தும் விதம் பற்றி..ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற ஆவல்...அதன் விளைவுதான்.. இது..... கை பேசியில் ஒருவரை நாம் அழைக்கும் போது...இரண்டு அல்லது மூன்று ரிங்க் போனவுடன் உடனே நாம் நமது இணைப்பை துண்டிப்பது நல்லது ஏனென்றால் நாம் கூப்பிடுவது அவரது கைபேசியில் கண்டிப்பாய் அவருக்கு தெரியாமல் போக வாய்ப்பில்லை, எனவே அவர் நம்மை கண்டிப்பாய் திருப்பி அழைப்பார் அல்லவா? (உங்களிடம் இருந்து ஒளிந்து திரிபவர்களுக்கு இது செல்லாது). இதை விட்டு விட்டு எதிர் முனையில் இருப்பவர் என்ன அவசர வேலையில் இருந்தாலும் சரி எனது அழைப்பை எடுத்தே ஆக வேண்டும் என்று நினைப்பதும் அவர் எடுக்காததிற்கு நீங்கள் கோபம் கொள்வதும் சரிதானா? அதுவும் ஒருவர் அலுவலகத்தில் இருந்தால்... அழைப்பை எடுக்க முடியாத சூழ் நிலைகள் எவ்வளவோ இருக்கின்றன.....அவர் திரும்ப அழைக்கும் வரை காத்திருங்கள். சரி இது தொலைபேசியில் அழைப்பவர்களுக்கு.....தொலை பேசியில் அழைக்கப்பட்டவர் என்ன செய்ய வேண்டும்....

குருக்கத்தி ஐயா..... சித்தர் பூமி பற்றிய தொடர்.....!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மிகச்சிறிய கிராமம். இறைவனின் அருகாமையை நேரடியாய் நீங்கள் நிச்சயம் இந்த ஊரில் உணர்வீர்கள்...ஏனென்றால் மனிதர்களை விட இங்கே மரங்கள் அதிகம். ஒவ்வொருமுறையும் நான் விடுமுறைக்கு செல்லும் போதும்..ஏகாந்த வெளியில் நுழையும் ஒரு உணர்வோடு குருக்கத்தி என்னை வரவேற்று இருக்கிறது. பரபரப்பான துபாய்.....இரவும் பகலும் போட்டி போட்டு நமது வயதை வேகமாய் தள்ளிவிட...விடிவதும் பின்னர் இரவு உறங்குவதும்.... சொடுக்கிடும் வேகத்தில் நடந்து விடும் ஒரு பரபப்பானா பூமி.....மனிதர்கள்...மனிதர்கள்...வாகனங்கள்....செல் போன் அழைப்புகள்...என்று ஒரு நாள் சராசரியாய் 12 மணி நள்ளிரவுக்கு முடிவுக்கு வரும்...மீண்டும்...ஒரு அசுரனாய்..அதிகாலை 5 மணிக்கு எழுந்து கொள்ளும்... ஆமாம்... இந்த பரப்புக்கு நடுவில் நான் விமான நிலையத்தில் என் விடுமுறைக்கு ஊருக்கு செல்லவதற்காக.....விமானத்தில்...எல்லா படபடப்பும் சற்றே....குறைய.....விமானம் மேலே செல்ல செல்ல காற்றைப்போல.....மனம் லேசாகிறது...மனம் என்னை குருக்கத்திக்கு இழுத்துச்செல்கிறது.... என் பாட்டன் முப்பாட்டன் வாழ்ந்த பூமி.... தாயின் கருவறையாயும்...அதுவே..கல்லறையாயும்....

நீ இல்லாத நேரங்களில்….

நீ இல்லாத நேரங்களில்…. மெளனமான பொழுதுகளில்தான்... மனம் ஒரு குழந்தையைப்போல விழிக்கிறது.... பூக்களிலிருந்து பரவும் வாசம் போல... அத்துமீறி என்னை ஆக்கிரமிக்கிறது...காதல்.... ஒரு குழந்தையைப் போல...முரண்டு பிடித்து... மீண்டும் மீண்டும்.... உன் நினைவுகளை என்னுள் கொட்டி… மார்கழி குளிராய் மனது நிறைக்கிறது...... கரை தொடும் அலைகள் போல... ஒவ்வொரு நினைவும்... தவணை முறையில்.. நெஞ்சம் நனைக்கின்றன... ஒவ்வொரு நிமிடத்தையும் நகர வைத்து உன்னைவிட்டு நகர மறுக்கிறது... மனது! நீ இல்லாத நேரங்களில் தான்.... உன் நினைவு அதிகமாயிருக்கிறது... இன்னும் சொல்லப்போனால்... அது நீ இருப்பதை விட .... சுகமாயிருக்கிறது....! நீங்ககள் உற்று நோக்கி கவனித்து இருந்தால்...காதலிக்கும் தருணங்களில்...காதலி அருகில் இருக்கும் நேரங்கள் பெரும்பாலும் அவளது இருப்பை நமக்கு உணர்த்துவது இல்லை. மனைவியோ அல்லது காதலியோ இல்லாத போது அந்த வலி கொடுக்கும் சுகமே அலாதிதான். காத்திருக்கும் நேரங்களில் தான் காதலை உணர முடியும்... அப்போது காதல் என்பது நமக்குள் இருப்பது...அதை தூண்டும் சக்தியாகத்தான் ஒரு பெண் இருக்க முடியும் என்று..புரிந்து கொள்ள முடிந்தது. அப

கேள்விகளில்...வாழ்கிறேனோ?

வெள்ளைப் பேப்பரில்...பாலைவனத்து ஒட்டகம் போல... எப்போதும் ஊறும் என் பேனா.... உனக்காக கடிதம் எழுத திறக்கும் போது... நயகராவாய்...வார்த்தைகளை இறைப்பது எப்படி? கூட்டத்தில் இருந்தாலும் தனித்து கிடக்கும் மனது... உன் நினைவுகளோடு இருக்கும் போது.... திருவிழாவாய் குதுகலிப்பது எப்படி? ஏதோரு ஒரு உணர்வு....இருக்கும் ஒன்றை... இல்லாமல் வெளியே... காட்டிக் கொண்டு.... மெளனமாய் மனதுக்குள்... பூக்களை இறைத்து...விளையாடுவது எப்படி? வந்து விழும் வார்த்தைகள் எல்லாம்... உன் நினைவுகளுக்குள்...மூழ்கி வருவதால்... கவிதையாய் உருமாறி... காவியமாய் ஜொலிக்கிறதே...எப்படி? சாரலாய் நீ சிரிக்கும் போது.... சிதறி விழும் முத்துக்களாய்..... வெளிவரும் சப்தங்கள்... வேத மந்திரமாய்..என்னை மூர்ச்சையாக்கி... சமாதி நிலையில் தள்ளுகிறதே...எப்படி? சூட்சுமமாய் எனைத் தீண்டி...உடலற்ற.... வெட்டவெளியில்...எனைத்தள்ளிவிட்டு.. நினைவுகளால் எனை நிறைத்து.... என் நினைவுகளை நீ அறுத்து.... ஏகாந்த வெளியில் நிரந்தர...மோகத்தில் தள்ளிவிட்டு..... தூர நின்று சிரிக்கிறாயே....எப்படி? கேள்விகளால்..மனம் அறுந்து... உன் குரல் கேட்டு மீண்டும் நான் பிறந்து... இன்னு

சிவப்பு சிந்தனை....

வல்லரசு கனவோடு...இந்தியாவின் வருங்காலம்....! செல்லரித்த...கட்டைகளாய்... தெருவின் ஓரங்களில்...! 2020லாவது... ஏக்கங்கள் தீராதா.... தெருவோரம்.. பிச்சை என்னும்...தீட்டு நீங்காதா? கடல் நீரை குடி நீராய்... மாற்றும் திட்டத்தோடு... இவர்களின் கண்ணீரை நிறுத்த..ஒரு திட்டமுண்டா...! எத்தனை தலைமுறைதான்... தெருமுனையில் ஜனித்து... நடை பாதையில்... வளர்ந்து... ஒவ்வொரு சிவப்பு சிக்னலையும்... வாழ்வாதாரமாக நம்பி வழுமோ? தெருவோர அகதிகள்.... இவர்களுக்கு ஒரு இயக்கம் உண்டா? முள்கம்பி இல்லா.. வெற்றிடத்தின்... ஜன நாயக...அடிமைகள்... காக்க ஒரு கட்சி உண்டா! சமுதாய சாக்கடையின்...அடையாள புழுக்களாய்... தன் பரம்பரை சொத்தாய்... வறுமையை வாரிசுகளுக்கு...எழுதி வைக்கும்.... காம உச்சத்தின்... அடையாளமாய்... இனி ஒரு பாரதி ..வருவானா? உணவில்லா இந்த தனி மனிதர்களுக்காக .. ஜகத்தினைத்தான் அழிப்பானா? - சென்னை செல்லும் போது எல்லாம் மிகுந்த மனவருத்தத்தோடு நன் உற்று நோக்கிய விசயம் ..இந்த நடை பாதை குழந்தைகள்! ஒவ்வொரு சிக்னலிலும் நான் காத்திருக்கும் போது...என் கண்கள் கசிவது வாடிக்கையான ஒன்று! கைக்குழந்தைகளோடு பிச்சை எடுக்கும் பெண்களை நினைக

தெரு முனை

எதிர் பாரமல் உன்னை சந்தித்த தெரு முனை... சரித்திர புகழ் வாய்ந்த...இடமானது! உன் கண்களால் என் உயிர் உறிஞ்சிய ... அந்த நிமிடத்தை இது வரை நான் நகர விடவே இல்லை! *** தாவணியை இடுப்பில் சொருகிய அந்த நேரத்தில்... சமாதி என்றால் என்ன...? என்று கண நேரம் காட்டினாய்! *** ஆக்ஸிஜன் கூட நீ... உன் சுவாசகுழாய்களுக்குள்... செல்ல விரும்பி மொத்தமாய்.. உன்னிடம் வந்ததால்... நான் சுவாசத் திணறலால் ஸ்தம்பித்தேன்! *** உன் கோபம் என்னை... எரிச்சலூட்ட மறந்து... மீண்டும் மீண்டும் காதலை அல்லவா..வளர்க்கிறது! காதலோ.... அன்னம் புசிக்கும் பால் போல.. காமம் களைந்து உன் நேசத்தை மட்டுமே..ரசிக்கிறது! *** வழியோராம் உனைப் பார்த்து.. என் விழியோரம் உனைத் தேக்கி... மீண்டும் மீண்டும் செல்கிறேன்... உனை சந்தித்த தெரு முனைக்கு... நீ இல்லாமல் போனாலும்... காதாலால் எனை நிரப்ப... *** உன்னை சந்தித்த அந்த நொடி போதும்! அந்த அனுபவத்தின் சாயங்களை... என் வார்த்தைகளில் நனைத்தெடுக்க.. வந்ததெல்லாம்..கவிதைதான்! கவிதை எல்லாம் காதல்தான்! *** காதல் என்பது எல்லா காலத்திலும் உணர்வாய்த்தான் இருந்திருக்கிறது. பிரபஞ்ச சுழற்சியின் மிகப்பெரிய ஒரு உந்து சக்திய

என்னவளுக்காக.....

கவிதைக்கு கவிதை சொல்ல... எங்கு நான் வார்த்தை தேட....? கனவுகள் மெய்ப்பட்டால் ... கற்பனைக்கு வேலை இல்லை! என் இமைகளுக்குள் அகப்பட்டாய்... இதய துடிப்பாய் நீ துடித்தாய்...! உடலுக்குள் மறைந்திருக்கும்..உயிர் போல.. என்னுள்ளே நீ நிறைந்தாய்! உன்னைப் பிரித்தெடுத்து... உலகிற்கே கவிதை சொல்வேன்.. உனக்கே கவிதை என்றால்... பள்ளி செல்ல... மறுக்கும் குழந்தையாய்.... வார்த்தைகள் வர மறுத்து அடம்பிடிக்கிறதே...! மோகனப் புன்னகையால் மெளனமாய்... என்னை மூர்ச்சையாக்கி...கவிதை சொல்.... என்று சொன்னால்... விலாசம் தொலைத்த வழிப்போக்கனாய்... மொழி மறந்த மனிதானாய்.... நானல்லவோ திணறிப் போகிறேன்....! - என்னவள் என்னிடம் கவிதை கேட்ட அந்த நொடியில்... என்ன செய்வது என்றறியாமால்...விழித்த நொடியில்.. ஜனித்தது! - தேவா. S

இது ஜென்மாந்திரப் பயணம்.....

நினைவது தப்பி....செயலது நின்று சுவாசிக்க மறந்து.....உறவுகள் கலைந்து.. உண்மைக்குள் நான் போவேனோ....? இல்லை...மனதினில் மயங்கி.. உடலுக்குள் அலைந்து... மாயையில் விழுந்து...மீண்டும் உயிராய் ஜனிப்பேனோ? நிலையது மாறி .. நிலையது மாறி... பொய்யாய் வேடங்கள் புரிவேனோ.... இல்லை...சத்தியம் நோக்கிய பயணத்தில்... என்னை நானே கரைப்பேனோ விலை அது விலை அது இல்லா... சூன்யத்தில்...சுகமாய்...ஒருமித்து இருப்பேனோ? இல்லை....உடலாய் தனி என தனி என... பிரிந்து நரக நெருப்பில் வீழ்வேனோ? சிலை அது....மரமது... மலையது... என்று இறையை மட்டுப்படுத்தி அறிவேனோ? இல்லை....அது இது என்றுணரா... ஏக நித்தியானய் உணர்ந்து மறுமையில் இன்பம் துய்பேனோ? சத்தியம் சொல்கிற... நித்ய இறைவா என்னை பொய்யில் இருந்து காப்பாயோ.. இல்லை இந்த மெய்யினில் இருந்து... கேள்விகள் கேட்டு...உய்யவேண்டும் என்பாயோ? ஆரம்பிக்கத் தெரிந்த இந்தக் கவிதையை முடிக்க எனக்கு இதை முடிக்கத் தெரிவதில்லை எனபதை விட முடிக்க ஏக இறை அனுமதிக்கவில்லை என்பது தான் உண்மை........ நிலையில்லாத இந்த வாழ்வின் நிகழ்வுகள் ஏதோ ஒரு தாக்கத்தைக் கொடுக்க அந்த வீரியத்தின் வீச்சில் வந்து விழுந்த வ

மெளனத்தின் மெளனம்!

எந்த உந்துதலும் இல்லாத.... ஒரு வெற்று நாளில்.... மனதில் வார்த்தைகளே இல்லாத.... ஒரு இரவு நேரத்தில்... மெல்லிய மெளனம் ... என்னைத்தாலாட்டிய தருணத்தில் இறைவனை நான் கண்டேன்! மெளனத்தில் வலிமையினை... நிசப்தத்தில் என்னுள் அவர் ஊற்ற ஊற்ற.... நிரம்பாமல்... வெறுமையானேன்! கனமான வார்தைகளும்.. கவர்ச்சியான பேச்சுக்களும்.... வண்ணமிகு வாழ்க்கைகளும்... போலியாய் எனைப்பார்த்து சிரித்தபோது... சப்தமில்லா அந்த அனுபவம் என்னுள் என்னை மீண்டும் அமிழ்த்தியது... மீண்டும் திரும்ப விரும்பாமல்... அப்படியே நானிருக்க...எண்ணுகையில்.. மெலிதாய் எனை புறம் தள்ளி.... சராசரி வாழ்க்கையில்.... சற்று காலம் இருக்கச்சொன்னார்! பொய்யான வாழ்க்கைதான்... பொறுமையாய் வாழ்ந்து பார் என்றார்... மன அழுக்கான மனிதர்கள்தான். நீ மனமின்றி வாழ்ந்து பார் என்றார்... பணத்தைதான் போற்றுவார்... நீ பிணம் போல கிடந்து வா என்றார்...! இரைச்சலுக்கு மத்தியில் இரைச்சலில்லாமல் வாழ்ந்து என்னை.... கற்பூரம் கரைவது போல மெல்லவே கரையச்சொன்னார்....! தாகத்தில் நீராயும்... மோகத்தில் உச்சமாயும்.. வெயிலில் நிழலாயும்.... இரக்கத்தி