Skip to main content

தேடல்...18.01.2011!



















இலக்குகள் கொண்டு நகரவேண்டும் என்று லெளகீகம் போதிக்கிறது ஆனால் இலக்குகள் அற்று நகர் என்று ஆன்மீகம் போதிக்கிறது. ....எதுதான் தம்பி சரி? கேள்வியை தூக்கி வீசி விட்டு.... நண்பர் பார்த்த பார்வையில் நல்லா மாட்டினியா என்ற ஒரு தொனி இருந்தது.

சரி லெளகீகம்னா என்ன? அதைச் சொல்லுங்க முதல்ல அப்டீன்னு யாரோ தலையில தட்றாங்க.. அவுங்களுக்கு பதில சொல்லிட்டு...மேலே நகர்வோம்.

இந்த உலக வாழ்க்கை நிஜம், இங்கே நான் கோடாணு கோடி ஆண்டுகள் வாழப்போகிறேன். நான் தான் உலகத்தின் மையம், மரணம் என்பது எப்போதோ நிகழப்போகிற ஒன்று என்றும் தனக்கும் தன்னுடைய உடலுக்கும் தன்னின் கர்வத்துக்கும் நித்தம் உணவுகள் பரிமாறி விருந்து வைத்துக் கொண்டிருப்பவன் லெளகீகவாதி.

இவர்களுக்கு எல்லாம் கண்முன் தெரிவதும், காதால் கேட்பதும் உலகம். ஆமாம் எதை நம்ப வேண்டுமானால் அவர்கள் கண்களால் காணவேண்டும். சுருக்கமாக சொல்லப்போனால் இந்த பூலோக வாழ்க்கையும் பந்தங்களுமே பிரதானம் (பிராதனம்னா என்ன? அப்டீன்னு சிலருக்கு கேள்வி வருதா...சரி..சரி.. கோச்சுக்காதீங்க முக்கியம்னு அர்த்தம்.)

சரி யார் ஆன்மீகவாதி? டக்குனு எல்லோருக்கும் வர்ற பதில் அல்லது நினைவுக்காட்சி என்னன்னு எனக்கும் தெரியும் பாஸ்? காவிச்சட்டை, காவி வேஷ்டி, நெற்றி நிறைய விபூதி, கழுத்தில் ருத்ராட்சம் இல்லை எனில் வேறு ஏதாவது மாலைகள் என்று எப்போதும் எதிலும் எனக்கு பற்று இல்லை என்று கூறிக் கொண்டு சராசரி ஜனங்களிடம் எல்லாம் மாயை...ஏன் அதை நோக்கி ஓடுகிறீர்கள் அற்ப பதர்களா? என்று கேள்வி கேட்டு தன்னை உயரிய இடத்தில் வைத்து கடவுளாகவே காட்டிக் கொள்ளும் ஒரு உருவம் வந்திருக்கும், இல்லையேல் சாதராண உடையில் கிளீன் ஷேவ் செய்து கொண்டு ஆனால் மேலே சொன்ன செயல்களையெல்லாம் செய்யும் ஒருவர் உங்களுக்கு நினைவுக்கு வந்திருக்குமே....

மொத்தத்தில் ஆன்மீகவாதி என்றால் மேலே சொன்ன லெளகீகவாதிக்கு எதிரானவன், சந்தோசங்களுக்கு எதிரானவன், சும்ம தத்து பித்து என்று தத்துவ மழைகள் பொழிபவன் என்று நினைச்சுட்டீங்க சரியா?

உங்க மேலயும் தப்பு இல்லை... பாஸ்! சமுதாயம் கொடுத்திருக்கும் கற்பிதம் (ஏய்...யாருப்பா அது கூட்டத்துல எழுந்து கற்பிதம்ன என்னனு கேக்குறது...? அட.. கற்பிதம்ன பில்டப் தம்பி... )

ஆன்மீகவாதி மேலே சொன்ன மாதிரியெல்லாம் இருக்கலாம்.. ஆனால் அப்படி இருக்கவேன்டுமென்பது என்று அவர்களே தீர்மானித்துக் கொள்வதுதான். இலக்குகள் அற்று வாழவேண்டிய ஆன்மீகவாதிகள்.. தங்களுக்கென்று ஒரு அடையாளம் வைத்துக் கொண்டு வாழும் போதே தங்கள் கொள்கையில் முரண்பட்டுப் போய்விடுவதால் அவர்களை ஆன்மீகவாதிகள் என்று எப்படி ஏற்றுக் கொள்வது?

இறைவனை பிரார்த்திப்பதற்கும், இன்ன பிற விசயங்களுக்கு கட்டுப்பாடுகளும், நியதிகளும் வைத்துக் கொன்டு நித்தம் தன்னை ஒரு பிரமாண்ட புருசனாக காட்டிக் கொண்டு மனிதர்களை விட்டு விலக்கி தம்மை வைத்துக் கொண்டு..இருப்பவர்கள் இயல்பாக இருக்கிறார்களா? டக்குனு மனசாட்சி படி பதில் சொல்லுங்க பார்போம்...

ஆன்மாவை உணரும் ஒரு மனிதன் தனது லெளகீக வாழ்க்கையையும் சிறப்பாக உள்ளடக்கி அனுபவித்து வாழ்ந்து, அழவேண்டிய நேரத்தில் அழுது, சிரிக்க வேண்டிய நேரத்தில் சிரித்து, ஓட வேண்டிய நேரத்தில் ஓடி....நிற்க வேண்டிய நேரத்தில் நின்று.. வாழ்வோடு பொருந்தி வாழ்கிறான். எங்கேயும் முரண்படுவதில்லை ஆனால் முரண்படவேண்டும் என்ற நியதி வரும் போது துல்லியமாய் முரண்படுகிறான். குடும்ப வாழ்கை இவர்களுக்கு முரணானது அல்ல...மொத்தத்தில் தன்னுள் இருக்கும் சத்தியத்தினை ஒத்து வாழ்பவன் தான் ஆன்மீகவாதி.

சுருக்கமாகச் சொன்னால் லெளகீகம் ஆன்மீகவாதியின் ஒரு பகுதிதானே அன்றி அது தனித்தது இல்லை. ஒரு சிறந்த ஆன்மீகவாதிதான் தலை சிறந்த லெளகீகவாதியாக இருக்கமுடியும். வாழக் கொடுத்த வாழ்க்கையை மறுக்கும் அல்லது நிராகரித்து வாழ்க்கையில் வேசங்கள் போடுவது எப்படி இயற்கையோடு இயைந்த வாழ்க்கையாகும்? நீங்களே சொல்லுங்க?

சரி... அப்டீன்னா.. விவேகானந்தர், ரமண மகரிஷி (உதாரணம்தான் இன்னும் நிறைய பேரு இருப்பாங்க...) இவுங்க எல்லாம் பிரம்மசாரியாவே இருந்து வாழ்வின் சராசரி நிகழ்வுகளை விட்டுத் தள்ளி இருந்தாங்களே அது தப்புன்னு சொல்ற அளவுக்கு நீ பெரிய ஆளான்னு ஒரு கேள்வி வருதா? வரணும் கேள்வி வரணும்.....அதுதான் சரி....

விவேகானந்தருக்கும், ரமண மகரிஷிக்கும் அப்படி அவர்கள் இருப்பதுதான் இயற்கையான ஒரு நிகழ்வாக அதுவாகவே அமைந்திருந்தது. அதை அவர்கள் மறுக்காமல் ஏற்றுக் கொண்டனர். தங்களுக்கு வாழ்வில் ஏற்பட்ட இயல்பான நிகழ்வுகளை அப்படியே ஏற்றுக் கொண்டனர் அதற்கு ஏதுவாகவே அவர்களின் பிறப்பும் அமைந்து போய்விட்டனர். (இருவரின் வாழ்க்கை வரலாறும் படித்தால் புரியும்.. அப்படியே.. தமக்கு ஏற்பட்டவைகளோடு ஒத்து வாழ்ந்திருப்பதும் தெரியும்)

துறவறம் ஒரு வழி.... அது துறவறம் செல்ல ஏதுவான சூழலோடு பிறக்கும் குழந்தகளுக்கு..... ! இல்லறம் ஒரு வழி... அது அதற்கேற்ற பக்குவத்தோடு பிறக்கும் குழந்தைகளுக்கு...! எப்போது முரண் வருகிறது என்றால் தன்னின் உள்ளே இருக்கும் உள் முனைப்பின் படி நடந்து செயலாற்றாமல் மனதை கேட்டு செயலாற்றும் போது....இல்லறம் விதிக்கப்பட்ட மனிதன் துறவி ஆக ஆசைப்படுகிறான்.. அங்கே செருப்படி கிடைக்கிறது....

அதே போலத்தான் இல்லறம் என்ற ஒன்றின் உதவி தேவையில்லை நீங்கள் தனியாகவே போகலாம் என்று விதிக்கப்பட்ட மனிதர்கள் இல்லறத்துக்குள் வந்தாலும் மேலே சொன்னதுதான் நடக்கும்....

தஞ்சாவூரிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியே சென்னை சென்றாலும், கும்பகோணம் வழியே சென்றாலும்...அல்லது ஹெலிகாப்டரில் மூலம் சென்றாலும் இலக்கு என்னவோ.. சென்னைதான்...ஆனால் வழிமுறைகளும் அனுபவமும் வேறு...அது பயணிப்பவரின் தன்மைக்கு ஏற்றபடி தீர்மானிக்கப்படுகிறது....!

சரி யார் தீர்மானிப்பது.. நமது பயணம் எதை நோக்கி?

இந்த இரண்டு கேள்விகளும் உங்களுக்குள் எழாவிட்டாலும் பரவாயில்லை கேளுங்கள் ஆனால் எல்லா கேள்விகளுக்கும் பதில்கள் வெளியே கிடைப்பதில்ல என்பதையும் மனிதில் கொள்ளுங்கள். இவை நமக்கு நாமே கேட்டுக் கொள்ளக் கூடிய கேள்விகள். கேள்வியை சும்மா உங்களிடமே கேட்டு வையுங்கள் ஒரு நாள் இல்லை ஒரு நால் பதில் தெரியவரும். அப்படி தெரிய வரும் அன்று நாம் யாரிடமும் அந்த பதில் பற்றி தம்பட்டம் அடித்துக் கொள்ள மாட்டோம்....

இலக்கே இல்லாமல் கட்டுரை போகுதுங்களா.. சரி..! மீண்டும் விசயத்துக்கு வருவோம்...

ஆன்மீகம் ஏன் இலக்குகள் இல்லாமல் போங்கனு சொல்லுதுன்னா.

ஒட்டு மொத்த பிரபஞ்சத்தின் பகுதிதானே நீங்களும் நானும், மொத்த பிரபஞ்சமே இலக்குகள் அற்றுதான் அதன் போக்கில் நகர்ந்துகிட்டு இருக்கு. நீங்க அறிவியல் விஞ்ஞானிகிட்ட கேளுங்க இல்லை ஆன்மீகவாதிகிட்ட கேளுங்க.. பிரபஞ்சத்தின் தோற்றமும் முடிவும் இன்ஃபினிட்டி என்று சொல்லக்கூடிய முடிவுகளற்றது இதில் நாம வச்சுக்கிற இலக்குகள் எல்லாம் நோக்கங்கள் எல்லாமே... பிரபஞ்சத்தின் கண்ணோட்டத்தில் ச்சும்மா.. ச்சும்ம்மா ஒரு டீலு ஒரு மாயை...

சரி வாழணும்னு உடம்புக்குள்ள வந்துட்டோம் இப்போ என்னதான்யா பண்ணனும்..? உருவமா இருக்கோமே.. புள்ளை குட்டீக வாழ்க்கைனு இருக்கேன்னு கேக்குறீங்களா?

சரி ஒண்ணு வேணா பண்ணலாம் இலக்குனு ஒண்ணு ஃபிக்ஸ் பண்ணிட்டு அது பத்தி
கனவு கண்டுகிட்டே இருக்காம அதுக்கான செயல்களை நிகழ்காலத்தோடு தொடர்பு படுத்தி அந்த செயல்களில் லயிச்சு.... நிகழ்காலத்துலயே நிக்கலாம்....ஒண்ணு ஓண்ணா நாம செஞ்சு நம்ம இலக்குன்ற மாயையை ஒரு கட்டத்துல அடைஞ்சாலும்.. அதையும் கடந்து போய்கிட்டுதான் இருப்போம்.....

இலக்குகளை நிகழ்காலத்தோடு தொடர்பு கொடுத்திக் கொண்டு... நகர்தல்தானே நிஜமான ஒரு அறிவார்ந்த பயணமாயிருக்கும்....! இப்ப நாம இருக்குற நிலைமைக்கு நேற்றைய செயல்கள்தான் காரணம்னு சொன்னா? இன்னிக்கு செய்றதுதானே நாளைய ஃபிக்ஸ் பண்ண போகுது? ச்சும்மா ஒரு லாஜிக் வச்சு பாருங்க......

இலக்குகளும் பயணங்களும் மாறும், மாறித்தான் ஆகவேண்டும்...ஆனால் அதை எண்ணியே கற்பனையில் நிகழ்காலத்தி கோட்டை விடாம இருந்தா சரிதான்.

ரொம்ப நேரம் பேசிட்டேன்....... என்ன பண்ண சொல்றீங்க உங்க கிட்ட சொல்ற மாதிரி ஒரு வேசம் போட்டு என் மனசுக்கு நானே சொல்லறதுக்கு இப்படி ஒரு யுத்திங்க....!

பிடிச்சுருந்தா மனசுல நீங்களும் வைங்க.. இல்லேன்னா தூக்கி கடாசிட்டு போய்டுங்க....

இப்போதைக்கு கிளம்புறேங்க...



தேவா. S

Comments

ஆர்வா said…
//ஆனால் எல்லா கேள்விகளுக்கும் பதில்கள் வெளியே கிடைப்பதில்ல என்பதையும் மனிதில் கொள்ளுங்கள்//

சரியே.. எல்லா கேள்விக்கான பதிலும் நமக்குள்ளே இருக்கிறது, அதைக்கண்டுகொள்ளாதவரை அதை நாம் வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம்

வெற்றிமாறனின் திரைக்கதை நுணுக்கங்கள்
இந்தப் பதிவு விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது . பகிர்வுக்கு நன்றி
உங்கள் ஆன்மிகக் கட்டுரை எதிர்பார்த்தபடியே வெற்றி பெற்றதற்கு பாராட்டுகள் வாழ்த்துகள்.

*****

இன்றைய தேதிக்கு ஆன்மிகம் என்றால் மதம்னு ஆகிப்போய்விட்டது. பகுத்தறிவு வாதமும் அப்படியே
:)
//இலக்குகளும் பயணங்களும் மாறும், மாறித்தான் ஆகவேண்டும்...ஆனால் அதை எண்ணியே கற்பனையில் நிகழ்காலத்தி கோட்டை விடாம இருந்தா சரிதான்.//
ம்ம் ....இந்த வரிகள் அருமை அண்ணா.....
//கனவு கண்டுகிட்டே இருக்காம அதுக்கான செயல்களை நிகழ்காலத்தோடு தொடர்பு படுத்தி அந்த செயல்களில் லயிச்சு.... நிகழ்காலத்துலயே நிக்கலாம்....ஒண்ணு ஓண்ணா நாம செஞ்சு நம்ம இலக்குன்ற மாயையை ஒரு கட்டத்துல அடைஞ்சாலும்.. அதையும் கடந்து போய்கிட்டுதான் இருப்போம்.....

இலக்குகளை நிகழ்காலத்தோடு தொடர்பு கொடுத்திக் கொண்டு... நகர்தல்தானே நிஜமான ஒரு அறிவார்ந்த பயணமாயிருக்கும்....! இப்ப நாம இருக்குற நிலைமைக்கு நேற்றைய செயல்கள்தான் காரணம்னு சொன்னா? இன்னிக்கு செய்றதுதானே நாளைய ஃபிக்ஸ் பண்ண போகுது? ச்சும்மா ஒரு லாஜிக் வச்சு பாருங்க......

இலக்குகளும் பயணங்களும் மாறும், மாறித்தான் ஆகவேண்டும்...ஆனால் அதை எண்ணியே கற்பனையில் நிகழ்காலத்தி கோட்டை விடாம இருந்தா சரிதான்.//

இவை ஆன்மீகத்திற்கு மட்டுமல்ல, பொதுவான வாழ்க்கைக்கும் பொருந்தும்!
//உங்க மேலயும் தப்பு இல்லை... பாஸ்! சமுதாயம் கொடுத்திருக்கும் கற்பிதம் (ஏய்...யாருப்பா அது கூட்டத்துல எழுந்து கற்பிதம்ன என்னனு கேக்குறது...? அட.. கற்பிதம்ன பில்டப் தம்பி... )//

கற்பிதம் அப்படிங்கிறது பில்ட் அப்பா ? நீங்கள் எனது அறிவுக்கண்ணை திறந்து விட்டீர்கள் அண்ணா .. ஹி ஹி ..
//சரி யார் ஆன்மீகவாதி? டக்குனு எல்லோருக்கும் வர்ற பதில் அல்லது நினைவுக்காட்சி என்னன்னு எனக்கும் தெரியும் பாஸ்? காவிச்சட்டை, காவி வேஷ்டி, நெற்றி நிறைய விபூதி, கழுத்தில் ருத்ராட்சம் இல்லை எனில் வேறு ஏதாவது மாலைகள் என்று எப்போதும் எதிலும் எனக்கு பற்று இல்லை என்று கூறிக் கொண்டு சராசரி ஜனங்களிடம் எல்லாம் மாயை...//

கூட ஒன்றை விட்டு விட்டீர்கள் அண்ணா ....எபோளுதுமே தன்னை சுற்றி நான்கு ஐந்து பெண்கள் இருப்பார்களே ......
எல்லாம் சரி அண்ணா .. ஆன்மீக வாதியாக அதாவது நீங்க சொல்லுறது மாதிரி ஆன்மாவை உணர்வதால் அதாவது ஆன்மீக வாதியோ இல்ல இல்லறத்துல இருக்குரவரோ ஆன்மாவை உணர்வதால் என்ன பயன் ?
ஆன்மீகத்திற்கு மட்டுமல்ல, பொதுவான வாழ்க்கைக்குமான கட்டுரை. ஒரு இலக்கோட அழகா சொல்லியிருக்கிங்க.
//ஒரு சிறந்த ஆன்மீகவாதிதான் தலை சிறந்த லெளகீகவாதியாக இருக்கமுடியும்.//
It's True
//என்ன பண்ண சொல்றீங்க உங்க கிட்ட சொல்ற மாதிரி ஒரு வேசம் போட்டு என் மனசுக்கு நானே சொல்லறதுக்கு இப்படி ஒரு யுத்திங்க....!//
Yes, it is the right way to develope ourselves

ஒரு ஆன்மீகப் பயணியை இன்னொரு ஆன்மீகப் பயணியால்தான் அறிய முடியும். :)
//பிடிச்சுருந்தா மனசுல நீங்களும் வைங்க.. இல்லேன்னா தூக்கி கடாசிட்டு போய்டுங்க....//

கரிக்கிட்டு..
THOPPITHOPPI said…
//சரி வாழணும்னு உடம்புக்குள்ள வந்துட்டோம்///


///இப்ப நாம இருக்குற நிலைமைக்கு நேற்றைய செயல்கள்தான் காரணம்னு சொன்னா? இன்னிக்கு செய்றதுதானே நாளைய ஃபிக்ஸ் பண்ண போகுது? //


ரொம்ப உள்ள போய்ட்டிங்க,

கல்யாணம் ஆகிடுச்சா?
ஒரு சூப்பர் பன்ச் லைனோடு ஆரம்பித்துக் கூறவந்த விசயங்களை எல்லாம் அப்படியே அசால்ட்டாக அள்ளித் தெளித்திருக்கும் கட்டுரை.

நன்றி & வாழ்த்துகள் தேவா சார்.
dheva said…
தொப்பி தொப்பி..@ கட்டுரையை விட்டுவிட்டு... கட்டுரையாளனை ஆராய்றீங்களே பாஸ்.....


கல்யாணம் ஆறதுக்கும் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?
VELU.G said…
தமிழ்மணம் விருதுக்கு வாழ்த்துக்கள் தேவா.
•••••

இங்கே எனக்கு ஒரு சந்தேகம்.

தன்னை உணர்ந்த ஞானிகள் என்று சொல்பவர்கள் அதாவது ஞானமடைந்தவர்கள் (கௌதம புத்தர் முதல் கொண்டு இன்று இருக்கும் ஜக்கி வாசுதேவ் வரைக்கும்) மக்களை நல்வழிபடுத்த வேண்டும் என்று கிளம்பிவிடுகிறார்களே?. தன்னை உணர்ந்தவனுக்கு இங்கே என்ன வேலை. எதற்காக மக்களை திருத்துகிறேன் என்று கிளம்புகிறார்கள். புத்தரிடம் இருந்து கிளம்பிய யாரும் ஒரு ராமசாமியாகவோ, குப்புசாமியாக(அவர்கள் அவர்களாக) ஞானமடைவதில்லை. எல்லோரும் புத்தராக வேண்டும். எல்லோருக்கும் யார் குருவோ அவர்கள் மாதிரியே ஆகவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்கள். நான் அவர்களின் சீடன் என்று சொல்லி பெருமைப்படுகிறார்கள், அவர்கள் சொல்வதை கிரகித்து அதை தத்துவமாக வைத்து அதையே வாழ்க்கையாகவும் கொள்கிறார்கள். இதுதான் தன்னை உணர்தலா?. இப்படி ஒரு கூட்டத்தை வைத்திருக்கத்தான் இவர்கள் தன்னை உணர்ந்தார்களா?.

தன்னை உணர்ந்த ஞானிகள் மக்களை விட்டு விலகி செல்லமாட்டார்களா?

புரியவில்லையே தேவா?
\\இலக்குகளை நிகழ்காலத்தோடு தொடர்பு கொடுத்திக் கொண்டு... நகர்தல்தானே நிஜமான ஒரு அறிவார்ந்த பயணமாயிருக்கும்....!

இலக்குகளும் பயணங்களும் மாறும், மாறித்தான் ஆகவேண்டும்...ஆனால் அதை எண்ணியே கற்பனையில் நிகழ்காலத்தி கோட்டை விடாம இருந்தா சரிதான்.\\

தேவா, தங்களின் கட்டுரைகள் பலவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கச் சொன்னால் இந்தக்கட்டுரையைத்தான் தேர்ந்தெடுப்பேன்.

நிறைவாக இருக்கிறது...
Chitra said…
சிந்திக்க நிறைய விஷயங்கள் இருக்குது....
Kousalya Raj said…
முந்தைய தேடல் பதிவுகளுக்கும் இதுக்கும் எழுத்தில் கொஞ்சம் வித்தியாசம் உணருகிறேன்.

ரொம்ப ஈசியா 'இது தாங்க ஆன்மிகம் பற்றிய எனது தேடல்' அப்படின்னு போகிற போக்கில் சொல்லிட்டு போற மாதிரியான ஒரு எழுத்து நடை. மிக கச்சிதமாக மனதில் வந்து உட்கார்ந்து விட்டது...

யாருக்கு எது தேவையோ அதை எடுத்து கொள்ளலாம்...அது நம் விருப்பம்.

வழக்கம் போல் நானும் பாடம் பயின்று கொண்டிருக்கிறேன்...

நன்றி.
ஹேமா said…
பயணங்கள் மாறினாலும் இலக்குகள் மாறக்கூடாதுதானே தேவா !
மிக அருமையான கட்டுறை தேவா சார். எழுத்துகளிள் உங்கள் ஆன்மிக அனுபவம் மிளிர்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். வாசிக்க காத்து கொண்டு இருக்கிறேன்.

(படிக்காம கமெண்ட் போடறது ரொம்ப ஈஸியா இருக்கே.. :). கட்டுரை ரொம்ப பெருசு. அப்புறம படிச்சி கமெண்ட் போடறேன்.)
dheva said…
கோ.வி. கண்ணன்....வாழ்த்துக்களுக்கு நன்றிகள்

உண்மைதான் கண்ணன்.. ஆன்மீகம் என்பது மதத்தோடு சேர்த்துதான் பார்க்கப்படுகிறது.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த