Pages

Friday, March 11, 2011

ஜப்பானிய அநீதி.....ஒரு கவிதாஞ்சலி!


ஒரு ஆக்ரோஷ அரக்கனாய்
கரையைச் சுவைக்க
கால் பதித்தாயா கடலே?
ஆடும் மனிதர்களுக்குப்...
பாடம் புகட்ட ஆடிக்...
களித்தாயா நிலமே...?

என்ன செய்தோம் என்றுணரும்
தருணம் முன்பே...
நிலத்தை அள்ளிக் குடித்துவிட்டு
உயிர்களை பெயர்த்தெடுக்கும்
உன் அவசரத்தின் மீதான
என் கோபத்தை எங்கே அடுக்குவேன்?

எத்தனை உயிர்கள் போனது...?
கணக்கு வழக்காய் கழித்து
அந்த நினைவுகளை மழித்துக் கொள்ளும்
காலத்திற்கு தெரியுமா
எத்தனை கனவுகளை அழித்தோமென்று?

தனிமையில் துளிர்க்கும்...
என் கண்ணீர்த் துளிகளின் வேர்களின்
மூலம் அறிந்த அண்டமே....
மூலமில்லா பிண்டம் தாங்கிய ஆதியே
எல்லாம் எடுத்துக் கொண்டு
எம் பூமியில் உயிர்களுக்கான
சந்தோசத்தையும் சாந்தியையும்
இறைத்துப் போடு; இல்லையேல்
மொத்தமாய் பூமிப் பந்தை
அகண்டவெளியில் இருந்து..
அறுத்துப் போடு....!

இன்னுமொரு முறை
கொந்தளிக்காதே கடலே...
ஆட எத்தனிக்காதே நிலமே...
உன்னை கட்டுக்குள் கொண்டு
வர யுத்திகள் அற்றுப் போயிருக்கிறோம்...
கால்கள் இருந்தால் கொடு
பிடித்து கண்ணீரால் கழுவுகிறோம்......!

ஜப்பானிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழந்த அத்துனை ஆத்மாக்களும் சாந்தியடைய எல்லாம் வல்ல ஏக இறையிடம் எனது ஆழ்ந்த தியானத்தையும், வேண்டுதலையும் சமர்ப்பிக்கிறேன்.


தேவா. S

11 comments:

தமிழ்வாசி - Prakash said...

சுனாமி அழிவு...மனம் கலங்குகிறது.

எனது வலைபூவில் இன்று:ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ

எஸ்.கே said...

அந்த உயிர்களுக்கு அஞ்சலிகள்!

Kousalya said...

மிகவும் மனதை வேதனை படுத்துகிறது . உங்களின் வேதனையை கவிதையாய் கொட்டிவிட்டீர்கள்...எனக்கு என்ன எழுதவென்றே தெரியவில்லை...

இயற்கையின் முன் நாம் எல்லாம் ஒன்றும் இல்லை என்ற எண்ணமே மேலோங்குகிறது.

பாதிப்பின் முழு விவரம் இன்னும் சரியாக தெரியவில்லை. எத்தனை உயிர்களோ...?

இறைவனிடம் வேண்டுவதை தவிர வேறு ஒன்றும் இப்போது தோன்றவில்லை.

எனது ஆழ்ந்த அஞ்சலிகள்.

Balajisaravana said...

கௌசல்யா சகோ சொன்னது போல, இறைவனிடமும் இயற்கையிடமும் தான் நம் வேண்டுதல்களை வைக்க வேண்டும். அவர்களின் ஆன்மா சாந்தியடைய எனது அஞ்சலிகளும்!..

Chitra said...

இன்னுமொரு முறை
கொந்தளிக்காதே கடலே...
ஆட எத்தனிக்காதே நிலமே...
உன்னை கட்டுக்குள் கொண்டு
வர யுத்திகள் அற்றுப் போயிருக்கிறோம்...
கால்கள் இருந்தால் கொடு
பிடித்து கண்ணீரால் கழுவுகிறோம்......!


....இந்த இயற்கை நிகழ்வுகள், மனிதனின் கட்டுக்குள் உலகம் இல்லை என்பதை நினைவு படுத்துகிறது.


இந்த தாக்கத்தில் இருந்து விடுபட நாளாகும்.
உயிரழந்த - பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் பராத்தித்துக் கொள்வோம்.

Mahi_Granny said...

என் பிரார்த்தனையும் சேர்த்துக் கொள்கிறேன்

சண்முககுமார் said...

வணக்கம் தங்கள் படைப்புகளை இந்த தளத்தில் இணைக்கவும்
தமிழ் திரட்டி

தோழி பிரஷா said...

என் பிரார்த்தனையும் சேர்த்துக் கொள்கிறேன்

சுந்தரா said...

பாதிப்புகளைப் பார்க்கையில் அத்தனை மனங்களிலும் எழுகிற ஓலத்தைக் கவிதையாக்கியிருக்கீங்க.

உயிரிழந்தவர்களுக்கு என்னுடைய அஞ்சலிகளும்!

Ahamed irshad said...

:(

இம்சைஅரசன் பாபு.. said...

மிகவும் கொடூரமான வேந்தனையான சம்பவம் ..