Pages

Friday, March 4, 2011

அடுத்தது.....அ.தி.மு.கவா?????


கடந்த ஐந்தாண்டு கால தமிழக ஆட்சியினைத் திரும்பிப் பார்க்கும் போது ஒரு வித மலைப்பும் விரக்தியும் ஒரு சேர வருவதை யாராலும் தடுக்க முடியாது. நடுநிலை நோக்காளர்கள் தி.மு.கவின் தனிப்பட்ட சில செயல் திட்டங்களை மறுத்தும் எதிர்த்தும் பேச முடியாத அதே நேரத்தில் தனது கட்சியினை வளர்த்துக் கொள்ளவும், கட்சியின் உள் கட்டமைப்பிற்குள் உறவுகளை முழுக்க முழுக்க நிரப்பி வைத்துக் கொண்டதும், முதுமை காரணமாக ஒரு முழுமையான ஒரு தொலை நோக்கு பார்வையை தி.மு.க தலைமை தொலைத்து விட்டு காங்கிரசுக்கு கொடி பிடித்ததும் ஒரு வித எரிச்சலை நமக்குள் பரவவிட்டிருப்பது தவிர்க்க முடியாத விசயமாய்ப் போய்விட்டது.

ஈழப்பிரச்சினையில் தமிழனத்தின் தலைவர் என்றர் வாசகத்தை தமது இலச்சினையில் பொறித்து வைத்துக் கொண்டு போர்ப்பரணி பாடிய தலைவர் தமது பதவியை பேணிக் காத்துக் கொள்ள கடித போக்குவரத்துக்கள் மத்திய அரசுக்கு நடத்தியதும், ஈழத்தில் தமிழனை கொன்று குவித்துக் கொண்டிருந்த பொழுதுகளில் சலனமற்று மெரினாவில் சினிமாத்தனமான உண்ணா விரதங்கள் இருந்ததும் தி.மு.க தலைமை மீது இருந்த மதிப்பினை தமிழர்கள் மத்தியில் சரித்துப் போட்டது என்பது உறுதியான விடயம்.

எல்லா கொள்கைகளையும் காற்றில் பறக்கவிட்டு விட்டு, இந்திய தேசத்தின் ஒற்றுமையை பேணிக்காத்து இந்தியர்களை ஒருமிக்க தவறிய கிழட்டு காங்கிரஸ்......தன் கோரப்பல்லினை பழிவாங்கும் விதமாக தமிழர்கள் மீது பதித்து இரத்தம் உறிஞ்சிய போதெல்லாம் அவர்களுக்கு கவரி வீசிய காவலனாய் கூட்டணி தர்மத்தை தக்கவைத்துக் கொள்ள சொந்த பிள்ளைகளின் உயிரைக் குடிக்கும் நிகழ்வுகளுக்கு உடன் போன தி.மு.க அரசினை ஒரு தமிழின துரோகியாய் பார்க்கும் பாவம் தமிழ் மக்களிடம் தன்னை மீறி தோன்றியதும் உண்மை.

ராசாவின் ஸ்பெக்ட்ரம் ஊழல், அதில் கனிமொழியின் தலையீடு, ஈழத்தில் நடத்தப்பட்ட படுகொலைகள், மீனவர்கள் தொடர் படுகொலைகள் இவைகளின் முன்னால் கலர் டி.வியும்... இலவச வீடுகளும்.... ஒரு ரூபாய் அரிசியும் பஸ்பமாய் மறைந்துதான் போயின.

விரக்தியில் இருந்த தமிழனுக்கு யார்தான் மாற்று என்று பார்க்கும் போது எதிரணியில் இருக்கும் அம்மையாரோ...கடந்த ஐந்து வருடத்தை விடுமுறையிலேயே கழித்திருந்தார் மேலும்...ஒரு திடமான அரசியல் முடிவோ அல்லது... போராட்டங்களோ நடத்தப் பெறாதவராக.., சூழ்நிலைகளின் பொருட்டு அறிக்கைகளும் போராட்டங்களும் என அவர் செய்தது எல்லாமே செயற்கைத்தனமாகவே இருந்தது. புரட்சித்தலைவருக்குப் பிறகு கட்சியில் அம்மையாரைத் தவிர வேறு யாரும் குறிப்பிடத்தக்க அளவில் ஒரு தலைவராக இல்லை என்பதும் எல்லோரும் அறிந்ததே..!

எம்.ஜி.ஆரின் காலத்தில் எம்.ஜி.ஆரை அடுத்து இமிடியெட் தலைவர்கள் என்று அ.தி.மு.கவில் குறிப்பிட்டு சொல்லும் படி நிறைய பேர்கள் அவரது காலத்தில் இருந்ததும் இப்போது இல்லாமல் இருப்பதும்.....இரு வேறுபட்ட தலைமைகளின் வித்தியாசத்தை காட்டும் அதே நேரத்தில்......ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையும், மிக திடமான முடிவுகளும் எப்போதுமே வசீகரமானவை.

இந்த இரு கட்சிகளையும் தாண்டி விஜயகாந்தும் ஒரு சிறந்த ஓட்டு வங்கியை வைத்திருக்கும் ஒரு வளர்ந்து வரும் தலைவராக ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்... மேலும் கடந்த தேர்தல்களில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.கவின் எதிர் ஓட்டுக்களை அழகாக எடுத்துச் சென்றவர் என்றாலும்....அதை வைத்து அவரால் எதுவும் செய்ய முடியாததோடு...... அது வலுவான தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு உதவும் வகையிலேயே இருந்தது.

வரப்போகும் தேர்தலில் விஜயகாந்த் தனித்தும், அ.தி.மு.க தனித்தும் போட்டியிட்டு இருந்தால் தி.மு.கவின் வெற்றி வாய்ப்பு வேறு வழியின்றி பிரகாசமாய்தான் இருந்திருக்கும்... ஆனால் மிக முக்கிய காய் நகர்த்தலாய் அ.தி.மு.கவின் தலைமை...விஜயகாந்தோடு கூட்டணி வைத்து அதுவும் 41 இடங்களை அவர்களுக்கு ஒதுக்கி இருக்கும் இந்த சூழல் எல்லாவற்றையும் நொறுக்கிப் போட்டிருப்பதும், தி.மு.கவையும் அதன் கூட்டணி கட்சிகளின் உறக்கத்தையும் கெடுத்துதானிருக்கும்.

கனவுகளைத் தேக்கி வைத்திருந்த தி.மு.க கனவிலும் கூட நினைத்திருக்காது அ.தி.மு.க இப்படி ஒரு கூட்டணி வைக்கப்போகிறது என்று....

காங்கிரஸ் என்ற மண் குதிரை வரப்போகும் தேர்தலில் தமிழகத்தில் தவிடு பொடி ஆகப் போவதும், தமிழர்களுக்கு தொடர்ச்சியாக இழைத்த அநீதிகளுக்கான பலனை தி.மு.க பெறப்போவதும், சாதுர்ய அரசியல் ஒத்துப் போதலுக்கான பலனை விஜயகாந்தும் ஜெயலலிதாவும் பெறப்போவதும் யாராலும் தடுக்க முடியாத ஒன்று.....

எல்லாம் சரியாகத்தான் நிகழ்கிறது....எம் மக்களும் வாக்குகள் அளித்து விட்டு காத்திருக்கத்தான் போகிறார்கள்....! வரப்போகும் புது ஆட்சியாவது.....எம் மக்களுக்கு இலவச திட்டங்களை மட்டும் அறிவித்துக் கொண்டிருக்காமல் சூழலையும் உணர்ந்து நல்வழி காட்டுமா?

தேர்தல் நேர்மையாக நடக்கும் பட்சத்தில் இதைத்தான் சொல்ல வேண்டும் வேறு வழியில்லை.....

ம்ம்ம்....வெல்கம் பேக் அ.தி.மு.க....!


தேவா. S

28 comments:

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அரசியல் புரியாத எனக்கே... புரிகிற மாதிரி..

எளிமையா...
தெளிவா...
அதே நேரம் அழுத்தமா...
சொல்லிருக்கீங்க.. :-)))

Chitra said...

வரப்போகும் புது ஆட்சியாவது.....எம் மக்களுக்கு இலவச திட்டங்களை மட்டும் அறிவித்துக் கொண்டிருக்காமல் சூழலையும் உணர்ந்து நல்வழி காட்டுமா?


...keep dreaming!

நந்தா ஆண்டாள்மகன் said...

அருமையான வார்த்தைகள் நண்பரே!! உங்கள் வாக்கு பலிக்கட்டும்..

இராமசாமி said...

ம்ம்ம்.. பாக்கலாம் :) இலவசங்கள் கொடுத்தது தப்புதான்.. இருந்தாலும் நல்ல காரியங்கள நடந்திருக்குல்ல... என்னமோ போங்க...

இராமசாமி said...

ம்ம்ம்....வெல்கம் பேக் அ.தி.மு.க....!
‍‍‍
கனவு கான்பது ஒவ்வொருவரின் உரிமைதான்.. கனவு கானுங்கள்

Anonymous said...

காங்கிரசின் கைப்பொம்மையாக தி மு க இருந்து பெரும் பழியைச் சுமந்துள்ளது.மற்ற தமிழினத் தலைவர்கள் முக்கியமாக அய்யா நெடுமாறன் வைகோவின் சுய நலத்தால் கலைஞருடன் சேர்ந்து போராடாமல் போனது ஈழத் தமிழர்களின் பேரழிவிற்கு முக்கிய காரணம். முழுச்சர்வாதிகாரியாகி தமிழகத்தை ஒட்டு மொத்தமாக அம்மையார் விலை பேசி விடுவார் என்பதும் கவணிக்கத் தக்கது.இருக்கும் அணிகளில் தி மு க வே பரவாயில்லை என்பது ஏழை எளியவர்களின் கணிப்பு. வசதி படைத்தவர்கள் தாம் மற்றவற்றைப் பற்றிக் கவலைப் படுகின்றார்கள்.இலவசங்களைக் கிண்டல் செய்கின்றார்கள்.ஆனால் அத்துனை பேரும் இலவசங்களை அனுபவிக்கும் அநியாயம் நடந்து கொண்டுதான் உள்ளது.

சௌந்தர் said...

தமிழ்நாட்டில் ஒரு அரசு எந்த நலன் செய்தாலும் அதை மறந்து அடுத்த கட்சிக்கு வாக்கு அளிப்பது தவறான ஒரு முறையாகும....இப்படி இருப்பதால் தான் ஜெயலளித்தா எந்த போராட்டம் செய்யாமல் இருந்து வந்தார் எப்படி இருந்தாலும் ஆட்சி மாற்றம் வரும்....இப்படி செய்தால் அ தி மு க வந்து நல்லது செய்து விடுமா அவர்கள் மனதில் வந்துவிடும் இந்த மக்களுக்கு என்ன நல்லது செய்தாலும் இவர்கள் ஆட்சி மாற்றம் செய்து விடுவார்கள் பின்பு ஏன் இவர்களுக்கு நம் சலுகைகள் வழங்க வேண்டும் என தோன்றாதா...

இப்படி இரு கட்சிகளை மாற்றி மாற்றி ஆட்சிகட்டிலில் அமரவைப்பதை மக்கள் யோசிக்க வேண்டும்

Anonymous said...

ஈழத்தமிழர்கள் கொல்லப்படும்போது தீக்குளித்து இறந்த முத்துக்குமார் உட்பட்ட உணர்வுமிக்கத் தமிழர்களின் தியாகங்களுக்காக தி மு க காங்கிரஸ் தோற்கடிக்கப்படவேணும். இல்லை என்றால் நாம் தமிழர் எங்கிறதை விட மனிதன் என்றே சொல்லிக்கொள்ள முடியாது.

Dharan said...

ஒரு ஈழத்தமிழனின் ஆசைதான் உங்கள் பதிவில் தெரிகிறது. பார்ப்போம் காலம் எல்லாவற்றிர்க்கும் பதில் சொல்லும். எப்படி ஒரு ராசீவ்காந்திக்காக, ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதை ஏற்க முடியாதோ அதெமாதி ஈழத்தமிழர்களுக்காக, திமுக தமிழ்நாட்டில் தோற்கடிக்படுவதை ஏற்கமுடியவில்லை. ஈழ அரசியலில் பல முட்டாள்த்தனமான‌ அரசியல் முடிவுகள் எடுக்கும் போது திமுகவை கேட்டா எடுத்தார்கள்? பிறகு எதெற்கு கூப்பாடு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யாருக்கும் குறைந்த பட்ச மரியாதை கூட கொடுக்கத் தயங்கும் அம்மையார் அரசியலில் இன்னும் இருப்பதே தமிழகத்தின் அவமானச் சின்னம். அவர் மீண்டும் ஆட்சிக்கு வருவது ஜனநாயகத்திற்கு மட்டுமல்ல, தொழில் வளர்ச்சிக்கும் கேடுதான். ஆட்சிகள் மாறி மாறி வருவதும் ஒருவர் போட்ட திட்டங்களை மற்றவர் நிறுத்துவதுமாய், தமிழகத்தின் தலைவிதி இவர்கள் விளையாட்டுப் பொம்மையாய் சிதைந்து கொண்டிருக்கிறது.

சில நேரங்களில் சில கேடுகளைத் தெரிந்தே ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கும். இந்திய ஜனநாயகம், அதை நமக்கு நிரந்தரமாக்கிக் கொண்டிருக்கிறது. வேறு எதுவும் சொல்வதற்கில்லை!

அஹோரி said...

நல்ல கருத்து.
விஷ விதைகளை தூவும் அல்லக்கை பதிவர்களுக்கு நடுவில் ஒரு நல்ல பதிவு. ஜெயலலிதாவின் திட முடிவும் , நிர்வாக திறமையும் கருணாநிதிக்கு இன்னும் ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் வராது. அரசு ஊழியனுங்களும் அவனது குடும்பமும் திருந்த வேண்டிய காலம் இது.

Anonymous said...

//ஒரு ஈழத்தமிழனின் ஆசைதான் உங்கள் பதிவில் தெரிகிறது. பார்ப்போம் காலம் எல்லாவற்றிர்க்கும் பதில் சொல்லும். எப்படி ஒரு ராசீவ்காந்திக்காக, ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதை ஏற்க முடியாதோ அதெமாதி ஈழத்தமிழர்களுக்காக, திமுக தமிழ்நாட்டில் தோற்கடிக்படுவதை ஏற்கமுடியவில்லை. ஈழ அரசியலில் பல முட்டாள்த்தனமான‌ அரசியல் முடிவுகள் எடுக்கும் போது திமுகவை கேட்டா எடுத்தார்கள்? பிறகு எதெற்கு கூப்பாடு?//

ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்தால் மட்டும் தி மு க தோற்க வேண்டும் என்றில்லை. தி மு க முற்றுமுழுதான குடும்ப அரசியல். ஒரு கூட்டமே ஆட்டையை போட்டுக்கொண்டிருக்கு. தி மு க கட்சி அரசியல் கட்சி எங்கிறதை கடந்து மிகப் பெரிய சுரண்டல் நிறுவனம். இது தொடர்ந்தால் அதற்கு பெயர் மக்களாட்சியாக இருக்காது மன்னராட்சியாகவே இருக்கும். ஜெ ஒண்ணும் யோக்கியமான பொம்பள கிடையாது எங்கிறது உலகத்துக்கே தெரியும். ஆனா அதவுட கேவலமானது தி மு க. இந்த இரண்டு கட்சிகள விட வேறொருவன முதல்வனாக்க வக்கில்லாத மக்கள் எல்லாத்தையும் விடக் கேவலமானவங்க. அதனால அம்மாவுக்கு ஓட்டுப் போடுறது ஒன்னும் தப்பில்ல. பின்னாடி அம்மா காங்கிரஸ் கூட கூட்டு சேரலாம். சேந்து மிச்ச ஈழத்தமிழன் கழுத்தையும் அறுக்கலாம். ஆனா தி மு கா தோற்கடிக்கப்படவேணும். இவங்க இனி ஆட்சிக்கு வரக்கூடாது.

ரஹீம் கஸாலி said...

ஜெயா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மட்டும் பாலாறும் தேனாறுமா ஓடப்போகுது. அப்போதும் இதே நிலைதான். யார் வென்றாலும் தோற்கப்போவது ஜனங்களும், ஜனநாயகமும்தான் . பண்ணிக்குட்டியாரின் பண்ணிக்குட்டியாரின் கருத்தோடு நான் ஒத்துப்போகிறேன்.

எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு
விஜயகாந்த் vs ஜெயலலிதா =மக்களின் மறதி

கே. ஆர்.விஜயன் said...

ஜெயலலிதாவிடம் குறைகள் இல்லாமல் இல்லை. இருந்தாலும் சில நாட்டு நலனுக்குகான நடவடிக்கைகளை மிகவும் துணிவோடு எடுப்பது கலைரிடம் இல்லாத ஒன்று. அம்மாவின் ஆட்சி மலரவேண்டியது காலத்தின் கட்டாயம். ஏனென்றால் சில குப்பைகளை அகற்ற துணிவான ஆள் தேவை.

prakash said...

//எப்படி ஒரு ராசீவ்காந்திக்காக, ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதை ஏற்க முடியாதோ அதெமாதி ஈழத்தமிழர்களுக்காக, திமுக தமிழ்நாட்டில் தோற்கடிக்படுவதை ஏற்கமுடியவில்லை. ஈழ அரசியலில் பல முட்டாள்த்தனமான‌ அரசியல் முடிவுகள் எடுக்கும் போது திமுகவை கேட்டா எடுத்தார்கள்? பிறகு எதெற்கு கூப்பாடு?//
WELL SAID... SENSIBLE.

Anonymous said...

ஈழப் பிரச்சினைக்காக தி.மு.க தோற்க வேண்டும் என்றால் அதே காரணத்திற்காக, ஜெ. தலைமையிலான அ.தி.மு.க வும் தோற்கத்தான் வேண்டும்.

இலவச திட்டங்களுக்காக கருணாந்தி ஒழிக்கப்பட வேண்டும் என்றால், இலவசங்களின் ஊற்றுக் கண அ.தி.மு.க வும், ரேஷன் பொருட்களை வீட்டிற்கே கொண்டு வந்து தருவதாக வாக்களித்திருக்கும் விஜயகாந்த்தும் ஒழிக்கப்பட வேண்டியவர்களே.

குடும்ப அரசியல் ஒழிக என்றால் தே.மு.தி.க வில் கூட்டணிப் பேச்சு வார்த்தைக்கு கூட மனைவியும், மைத்துனரும், கொழுந்தியாள் கணவரும், அக்காள் கணவரும் தானே செல்கிறார்கள்? அ.தி.மு.க விலும் உடன்பிறவா சகோதரியின் ஒட்டுமொத்த குடும்பமும் தானே ஊடுறுவியிருக்கிறது!

மற்றபடி தமிழகத்தின் நலன் பற்றிய ஆட்சிமுறை பற்றி பொதுவாக விமர்சித்தால், கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகப் பெரிய தொழிற்புரட்சியும், சாலை, மேம்பாலங்கள் போன்ற கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத மிகப் பெரிய உட்கட்டமைப்பு வசதிகளும், அனைத்து மக்களுக்கும் பசிப்பட்டினி இல்லாத, வன்முறையற்ற வாழ்க்கைக்கான உத்தரவாதமும் அளிக்கப்பட்டிருக்கின்றன.

இதற்கெல்லாம் தான் சி.என்.என் அவார்டு கூட கிடைத்திருக்கிறது. குஜராத்துக்கு கூட மூன்றாம் இடம் தான். இந்த ஆட்சி மீண்டும் மலர்ந்தால் செயல்படுத்தப் பட்டு முக்கால் வாசியில் நின்று கொண்டிருக்கும் மின் உற்பத்தி திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப் பட்டு தமிழகம் வளமாக இருக்கும்.

நிலவு said...

http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_6489.html - ஷோபா சக்திக்கு சில 'அ' கலாச்சார‌ கேள்விகள்

படித்துப் பார்த்து பதில் சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

இம்சைஅரசன் பாபு.. said...

நமது வெற்றியயை நாளைய சரித்திரம் சொல்லும் ..இப்படை தோற்கின் எப்படை வெல்லும் ...

என் பாசத்திற்குரிய அன்பு பதிவர்களே ...தங்க தலைவி ..தானைய தலைவி ..புரட்ச்சி தலைவி,ஏழைகளின் விடிவெள்ளி ..டாக்டர் ,அம்மா ஜெ.ஜெயலலிதா வெற்றி பெறுவார்கள் என்பதை ..இரு கரம கூப்பி வணக்கங்களுடன் உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன் ...

இம்சைஅரசன் பாபு.. said...

இவர் (தி மு க )ஆட்ச்சிக்கு வந்தாலும் ..வராவிட்டாலும் மின்சாரம 2012 தானாகவே வந்துவிடும் ..என் இன்னொரு தலைவர் வாஜ்பாய் கொண்டு வந்த திட்டம் ..கூடங்குளம் அணு மின் நிலையம் ..மின்சார சப்ப்ளை தொடங்கி விடும் ..என்பதை இத தருணத்தில் சொல்லி கொள்கிற்றேன் ...

இம்சைஅரசன் பாபு.. said...

ஆமா ஈழ ப்றேச்ச்சனைக்கு ..கடுமையாக உண்ணாவிரதம் இருந்த ஆள் இவர் அல்லவே ..காவேரி நீர் தமிழ் நாட்டுக்கு கொண்டுவந்தது இவர் அல்லவே ...கேரளா நீர் பங்கு கேட்டு சண்டை இட்டு ..முல்லை பெரியார் அணையின் நீர் மட்டத்தை உயர்த்தியது இவர் அல்லவே ...?து ..து ..ச்சீ ..து ..

இம்சைஅரசன் பாபு.. said...

இன்று தேவா அண்ணா ப்ளாக் இல இருந்து கூறுகிறேன் ..எல்லோரும் கேட்டு கொள்ளுங்கள் ..சென்னை முழுவதும் எங்கள் கொட்டை என்ற கூறிய தி மு க ..போன தேர்தலில் மண்ணை கவ்வியது ..இந்த வாடியும் அதே கதி தான் ...ஹி ..ஹி ..

இம்சைஅரசன் பாபு.. said...

//யாருக்கும் குறைந்த பட்ச மரியாதை கூட கொடுக்கத் தயங்கும் அம்மையார் அரசியலில் இன்னும் இருப்பதே தமிழகத்தின் அவமானச் சின்னம். அவர் மீண்டும் ஆட்சிக்கு வருவது ஜனநாயகத்திற்கு மட்டுமல்ல, தொழில் வளர்ச்சிக்கும் கேடுதான்.//

ஆமா ..ஆமா ..தொழில் வளர்ச்சி தமிழ் நாட்டில் பிச்சு கிட்டு போகுது பன்னி ...கடந்த நாலு வருடமாக மின்வெட்டு ரெண்டு மணிநேரம் முதல் ..நாலு மணி நேரம் வரை ...தொழில் வளர்ச்சி அபாரம் ....

போய் பாருங்க திருப்பூர் ..கோவை ..எல்லாம் சூப்பர் ..தொழில் வளர்ச்சி ...சிறு தொழில் முழுவதும் நசுக்கி ..வெளி நாடு கம்பெனிக்கு தடை இல்ல மின்சாரம் வழங்கி ...சூப்பர் தொழில் வளர்ச்சி ..

ஹையோ ....இப்படிதொழில் இருந்தா அருமை அருமை ..

இம்சைஅரசன் பாபு.. said...

கச்ச்சதீவை தாரை வார்த்து சிங்களனுக்கு கொடுத்து ..இன்று மீனவர்களின் உயிரை பாதுகாத்தா ..கலிங்கர் பல நூறு ஆண்டு காலம் வாழ்ந்து இன்னும் பல பேர் தாலியை அறுப்பார் என்பதை இத தருணத்தில் உங்களுக்கு நினைவு கூறுகிறேன் ...

இம்சைஅரசன் பாபு.. said...

//யாருக்கும் குறைந்த பட்ச மரியாதை கூட கொடுக்கத் தயங்கும் அம்மையார் அரசியலில் இன்னும் இருப்பதே தமிழகத்தின் அவமானச் சின்னம். //

ஆமா ..மக்கா ..பண்டாரம் .பரதேசிகள் நாட்டை ஆளுகின்றன என்று கூறி கொண்டு ..அவர்கள் கூட கூட்டணி வைத்து மந்திரி பதவி வாங்குவதும் ...ஒரு அவமான சின்னம் தான் ...

இம்சைஅரசன் பாபு.. said...

//குடும்ப அரசியல் ஒழிக என்றால் தே.மு.தி.க வில் கூட்டணிப் பேச்சு வார்த்தைக்கு கூட மனைவியும், மைத்துனரும், கொழுந்தியாள் கணவரும், அக்காள் கணவரும் தானே செல்கிறார்கள்? //

ஆமா ..ஆமா ..ஒரு கொழுந்தியாள் ..ஒரு மைத்துனன் ...ஒரு மனைவி ..

இங்கே அப்படியா ..மூன்று மனைவி ..மூன்று மனைவியின் மகன் ,மகள்கள் ...அவர்களின் பேரன்கள் பேத்திகள் ..அவர்களின் மைத்துனங்கள் ...ஸ் ஸ் ப ..ப ..எழுத முடியல ...

ரஹீம் கஸாலி said...

ஹலோ...தேவா. உங்களின் இந்த பதிவு இப்போது வேறொரு தளத்தில் பார்த்தேன். அதுவும் உங்கள் தளம்தானா? கீழே இருக்கும் சுட்டியில் பாருங்கள்
http://www.anburaja.in/2011/03/blog-post_3533.html

Dharan said...

//Anonymous said...
//ஒரு ஈழத்தமிழனின் ஆசைதான் உங்கள் பதிவில் தெரிகிறது. பார்ப்போம் காலம் எல்லாவற்றிர்க்கும் பதில் சொல்லும். எப்படி ஒரு ராசீவ்காந்திக்காக, ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதை ஏற்க முடியாதோ அதெமாதி ஈழத்தமிழர்களுக்காக, திமுக தமிழ்நாட்டில் தோற்கடிக்படுவதை ஏற்கமுடியவில்லை. ஈழ அரசியலில் பல முட்டாள்த்தனமான‌ அரசியல் முடிவுகள் எடுக்கும் போது திமுகவை கேட்டா எடுத்தார்கள்? பிறகு எதெற்கு கூப்பாடு?//

ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்தால் மட்டும் தி மு க தோற்க வேண்டும் என்றில்லை. தி மு க முற்றுமுழுதான குடும்ப அரசியல். ஒரு கூட்டமே ஆட்டையை போட்டுக்கொண்டிருக்கு. தி மு க கட்சி அரசியல் கட்சி எங்கிறதை கடந்து மிகப் பெரிய சுரண்டல் நிறுவனம். இது தொடர்ந்தால் அதற்கு பெயர் மக்களாட்சியாக இருக்காது மன்னராட்சியாகவே இருக்கும். ஜெ ஒண்ணும் யோக்கியமான பொம்பள கிடையாது எங்கிறது உலகத்துக்கே தெரியும். ஆனா அதவுட கேவலமானது தி மு க. இந்த இரண்டு கட்சிகள விட வேறொருவன முதல்வனாக்க வக்கில்லாத மக்கள் எல்லாத்தையும் விடக் கேவலமானவங்க. அதனால அம்மாவுக்கு ஓட்டுப் போடுறது ஒன்னும் தப்பில்ல. பின்னாடி அம்மா காங்கிரஸ் கூட கூட்டு சேரலாம். சேந்து மிச்ச ஈழத்தமிழன் கழுத்தையும் அறுக்கலாம். ஆனா தி மு கா தோற்கடிக்கப்படவேணும். இவங்க இனி ஆட்சிக்கு வரக்கூடாது.
March 5, 2011 11:56 AM//


உங்கள் அறிவின் தெளிவு உங்கள் பதிலில் தெரிகிறது.

வாரிசு அரசியல் என்பது உலகமெங்கும் உள்ளது. சிறந்த உதாரணம் நேரு குடும்பம். எம்ஜிர் ருக்கு பிள்ளைகள் இல்லை அவ்வளவுதான். விசயகாந்த் குடும்பம் இல்லையா? சசிகலா குடும்பம் இல்லையா?

காஷ்மீர் அப்துல்லா யார்?

போப்பா போப்பா..சரியான காமெடி பீஸா இருக்கியே!!

Jayadev Das said...

நான் திருடாம ஒழுக்கமா இருப்பேன்னு இந்த தி.மு.க. காரப் பயலுக ஒருபோதும் சொல்லப் போவதில்லை. விஜய காந்த் குடும்ப ஆட்சி நடத்தட்டும், ஜெயலலிதா சசிக் கலாவுக்கு வாரி கொடுக்கட்டும், அதுக்காக உங்களை நல்லாட்சி நடத்த வேண்டாம்னு யாராச்சும் தடுத்து நிருத்தினாங்களா? அவங்க அயோக்கியர்களாகவே இருக்கிறார்கள் என்றுதானே உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப் பட்டது, நீங்களும், கிடைத்தவரை சுருட்டிக் கொண்டு போகத்தானே பார்க்கிறீர்கள்? நீங்க கொடுக்கும் இலவசங்கள் மக்கள் நலனுக்காக அல்ல, நீங்கள் அடிக்கும் கொள்ளையைப் பார்த்து வாய் மூடி நிற்க, அதுவும் மட்டரகமான பொருட்கள். ஒரு ரூபாய் அரிசியை நீங்களே உண்பீர்களா? Color தொலைக் காட்சி ஒரு வருடத்தில் பணால். தமிழக பொருளாதாரம் அதல பாதாளத்தில். ஒரிசாவை விடக் kevalamaana ஆட்சி. ungal kollai yenraikkuththaan nirkkum?