
ஒரு காலத்தில் செம்மையாக வாழ்ந்திருக்கிறோம் தோழர்காள்.....! மன்னர்களின் ஆட்சியில் மாண்பும் வீரமும், ஈரமும், கொடையும், நேர்மையும், ஈகையும் கொண்டு, வந்தாரை எல்லாம் வரவேற்று உணவளித்து....யாரேனும் விருந்தினர் வராவிட்டால் சோர்ந்து போயும் இருக்கிறோம்.
காடு கழனிகளில் ஆடல் பாடலுடன் உழைத்திருக்கிறோம். பெண்டு பிள்ளைகளுடன் ஓடி ஆடி களித்திருக்கிறோம். எதிரி என்றால், போரென்றால் வேலெடுத்து.... வெற்று மார்போடு ஓடிப்போய் எம்மையும் எம் பெண்டுகளையும், ஆ நிரைகளையும் காக்க போர்ப்பரணி பூண்டிருக்கிறோம்.
உலகம் ஆ.. ஊ.. என்று காட்டுமிராண்டியாய் கத்திக் கொண்டிருந்த போது முத்தமிழில் கவி செய்தோம், கதைசெய்தோம் நாடகம் செய்தோம்....
கனக விசயரின் முடித்தலையை நெறித்து கல் கொண்டு வந்து கண்ணகிக்கு கோவில் செய்தோம்; மலைகளே இல்லாத தேசத்தில் முழுக்க முழுக்க கரும் கற்கள் கொண்டு கோவில் செய்தோம்....
கொங்குதேர் வாழ்க்கை என்று இறைவனே வந்து பாடி நெற்றிக்கண் திறந்து எரிக்கும் தருவாய்க்கு முன்பும் குற்றம் குற்றமே என்று சூளுரைத்திருக்கிறோம்....!
எப்படி மாறிப்போனது எமது வாழ்க்கை.....! எமது வாழ்வின் பொக்கிசம் எல்லாம் களைந்து கைக்கூலிகளாய், கருங்காலிகளாய் கைகட்டி வாய்பொத்தி அடிமை வாழ்வு வாழும் மனோபாவத்தை பெற்றுப் போட எம்மின் கலாச்சராத்தோடு கூடிக்கற்பழித்தது எந்த கயவனின் மூளை...!
ஒரு தடவை வரும் தேர்தல் அங்கே எழுதப்படும் விதி எம்மவரின் வாழ்க்கைகள் மீது வைத்த கருங்கல்லாய் நகரமுடியாமல் அழுந்தப் பிடித்து வைத்துக் கொண்டு வாழ்வாதாரத்தை நசுக்கி கொண்டே இருக்கிறது.
எம்மக்களுக்கு வேறு வழியில்லாமல் போனதற்கு காரணம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக நடந்த மூளைச்சலவை....திராவிட பெயர் சொல்லி எம்மக்களை மடமையாக்கி..... அவர்களின் புத்தியை விரிவாக விடாமல் அடக்கி வைத்த கொடுமை... !
ஒரு பக்கம் தேசியம் பேசும் கோமான்கள்..... மறுபக்கம் திராவிடம் பேசும் பெருமான்கள்...... இவர்களுக்கு இடையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கிடக்கிறது எம் இனம்.
கற்றவரும், அறிஞர்களுமே கூட யாரைத் தேர்ந்தெடுப்பது என்று தீர்க்கமாக சொல்ல முடியாத ஒரு அவல நிலை. 1977 வாக்கில் அரசியலுக்குள் வந்த எம்.ஜி. ஆர் ஆரம்பித்து வைத்த இலவச பார்முலா...இன்று வரை குட்டி போட்டு பேரன் பிள்ளைகள் பெற்றிருக்கிறது. அவர் சத்துணவு கொடுத்தார் இவர் முட்டை போட்டார்...... அவர் செருப்பு கொடுத்தார்..... இவர் டி.வி கொடுத்தார் அடுத்து வருபவர்கள் வாஷிங் மெசினும்.....லேப்டாப்பும் இணைய கனெக்சனும் கொடுப்பார்கள்...
பிச்சைக்காரர்களாய் நம்மை வைத்திருக்க திட்டம் தீட்டும் அரசியல்வாதிளை எல்லாம் ஓட ஓட விரட்ட என்ன யுத்தி என்று ஆராயாமல் ஒரு கூட்டம் இணையம் என்னும் நவீன ஊடகம் வரை ஏத்தி விட்டு ஆல மரத்தடியில் அமர்ந்து கொண்டு ஆடுபுலி ஆட்டம் ஆடுவது போல எக்காளித்து கேலிகள் செய்து கொண்டு இருக்கிறது.
புதிதாய் ஒரு தலைவனை அடையாளம் காணவும், உருவாக்கவும் வக்கற்ற மூளைகள் மீண்டும் ஒரு சினிமா நடிகனை நம்பிக் கொண்டு அவன் வந்தால் நன்றாக செய்வான் என்று பேசத்துணிந்து இருக்கிறது....!
யார் இந்த விசயகாந்த்.. அரசியல் செய்ய என்ன தகுதியிருக்கிறது? என்ன விதமான கொள்கைகள் இருக்கிறது? மக்களுக்கு என்ன திட்டம் இருக்கிறது? உன் பார்வையில் தமிழகம் இப்போது எப்படி இருக்கிறது..? செல்லுலாய்ட் தந்த்த புதல்வா.........சினிமாவில் நடித்ததே உன் சிறப்பா?????
எப்படி பார்த்தாலும் தி.மு.க அல்லது அ.தி.மு.க.....இந்த இரண்டு கொடுமையில ஒரு கொடுமைதான் கண்டிப்பா ஆட்சியேறும்...............என்பது உண்மை...! தயவு செய்து இந்த முறையாவது எந்த வள்ளல் ஆட்சிக்கு வந்தாலும் சரி..
நியாயமாய் எம்மவரின் வாழ்வாதாரத்தை செழிப்பாக்கும் திட்டங்களோடு நேர்மையாக ஆள்வீர்களா?????????????
தேவா. S
Comments
//
சரியான சாட்டையடி கேள்வி....
சினிமா ஜிகினா விஜயகாந்த் பற்றிய மூன்றாம் அணி பேச்சு கலகலத்து விட்டதால்
மீண்டும் அதே மு.க. அல்லது ஜெயலலிதா தான் வரப்போகிறார்கள். நிச்சயம் நம் மக்களின் மனநிலையிலோ வாழ்க்கைமுறையிலோ எந்த முன்னேற்றமும் வரும் என்ற நம்பிக்கை துளியும் இல்லை இங்கே..
இதில் டாஸ்மாக் வேற வெளங்குமா....?
நாணமில்லாமல் நம் மக்களும் வாங்கி மகிழ்வர்......
அதிலும், உங்க பிக்சர் செலக்ஷன்.. தூள் போங்க..
"எந்த பய ஆட்சிக்கு வந்தா எனகேன்னடா... பண்ணப் போறாங்க.. நா வேல செஞ்சாத்தேன்.. எனக்கு கஞ்சி.. போங்கடா.. போங்க..." ன்னு அந்த பெரியவர் சொல்ற மாதிரி இருக்குங்க.. :-)
இந்த நா........களை இனம் கண்டு கொள்ள வேண்டும்...
நியாயமாய் எம்மவரின் வாழ்வாதாரத்தை செழிப்பாக்கும் திட்டங்களோடு நேர்மையாக ஆள்வீர்களா?????????????//
இது நடக்கிற காரியமா மக்கா எல்லா அரசியல்ல எல்லா கழு.....யும் உட்டைதான் போடும்...வேற என்னத்தை சொல்ல....
இந்த நிலை மாற இன்னும் 20 வருடம் கூட ஆகலாம்
உலக நவரச நாயகன்,
மோதல்வரு: கார்த்திக்க்க்கக் ...
நான்காவது அணி!
எவரும் எதிர்பார்க்காத தேர்தல் முடிவுகள்!:
எல்லா தொகுதிகளிலும் வென்று நவரசம் ஆட்சி அமைத்ததை காணச் சகிக்காமல்
பச்சை புடவையும்,மஞ்சள் துண்டும் வனவாசம் போன பிறகு நவரச நாயகன்
மேக்கப் போடாத நடிகன் உலக முதல்வரு கார்த்திக்க்க்க்...
தினப்புருடா நிருபன்-(மன்னிக்கவும்- நிருபர்ர்ர்ர்) கவுண்டர் பெல்லுக்கு அளித்த முதல் செவ்வி
மக்களை கொள்ளை கொண்ட இந்த ஆட்சி மக்களுக்கு மட்டும் அல்ல நாய் ,குருவி நலன் பெற பாடுபடும்!,
நாய்கள் குட்டி போட ஒவ்வொரு கிராமத்திலும் பிரசவ ஆசுபத்திரி கட்டி (அதற்கு நடிகை .......பெயர் சூட்டி ) நாய்கள் பிரசவம் முடிந்து ஊட்டுக்கு திரும்பும் வரை நாய் சோப்பு முதல் நண்டு சூப்பு வரை அரசாங்கமே செலவு செய்யும்!
குருவிகள் இனிமேல் பறந்து திரிந்து குச்சி
பொறுக்கி கூடு கட்ட சிரமப்படவேண்டாம்!
அரசாங்க செலவில் பிளாஸ்டிக் குச்சிகள் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து தருவதோடு, குருவிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும்!
கடன் வழங்குவதில் முறைகேடு நடந்தால்....
நடிகை நமீதாவுடன் சேர்ந்து பெண்டு நிமிர்த்தி விடுவேன்!