
ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை...
காற்றில் பறக்கும் இறகு போல
எங்கோ ஒரு நாள் நான்...
பறந்து போய்விடுவேன்...
நீரில் தோன்றும் ஒரு குமிழி போல
பட்டென்று என்றேனும்...
உடைந்து போய்விடுவேன்...!
கற்பூரங்கள் எரிவது எல்லாம்...
காற்றில் எரியத்தானே? அன்றி...
எரிதலில் இறுமாப்பு கொண்டு
எப்போதும் நிற்பதற்கு அல்ல...!
ஏதோ ஒரு கட்டுக்குள் சிக்கி
அச்சில் ஓடும் பூமிக்கு என்ன
கவலை யாரைப் பற்றியும்?
அது சுற்றும் வரை சுற்றும்
ஈர்ப்புகளில் ஏதேனும் பிழைத்து விட்டால்
மீண்டும் தூசுகளுக்குள் தூசாய்
தன்னை பரப்பிக் கொண்டு
மீண்டும் பரமாணுவாய் வேசமிடும்...!
காற்றும், மழையும், வெயிலும்
சுழற்சியினால் ஏற்படும் சூழ்ச்சிகளேயன்றி
அவையே சூட்சுமங்களா என்ன?
சூத்திரங்கள் அறியா அண்டவெளியின்
பரந்து விரிந்த பிரேதசங்களில்....
மனித கால் தடங்கள் எல்லாம்
மாயையின் உச்சமே...!
ஏதோ ஒரு நெருப்பு என்னை...
எரித்துப் போடும் இல்லையேல்
சிலிக்கனுக்குள் சிக்கி நான்
கால்சியங்களின் எச்சத்தை காட்டிக்
கொண்டு இல்லாத பூமியின்
சொல்லாத பாகமாகப் போகிறேன்....
விலாசமில்லாத இருப்பினிற்குள்
எங்கே இருக்கிறது எனது அடையாளம்...?
ஆகையால்...இதில்
ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது...?
தேவா. S
Comments
எரித்துப் போடும் இல்லையேல்
சிலிக்கனுக்குள் சிக்கி நான்
கால்சியங்களின் எச்சத்தை காட்டிக்
கொண்டு இல்லாத பூமியின்
சொல்லாத பாகமாகப் போகிறேன்....
விலாசமில்லாத இருப்பினிற்குள்
எங்கே இருக்கிறது எனது அடையாளம்...?////
me tooo
இருக்கும் வரை சந்தோசமாக இருந்து விட்டு செல்வோம்...ஏன் போட்டி பொறாமை தலகனம்...அங்காரம் ...திமிர்.. தற்பெருமை..எல்லாம் வாழ்கையே.... மாயை.....