Skip to main content

நானென்று யாருமில்லை...!

















எனக்குள்ளே தேடல்
ஒன்றிருந்தது...!
சற்று முன் தான்...
மனமென்ற ஒன்று ஒழிந்து...
அது நிரந்தரமாய் நின்று போனது!

எனக்குள்ளே காதலென்ற
ஒன்று உணர்வாயிருந்தது
சற்று முன் தான் அதை
சட சடவென்று உடைத்துப் போட்டேன்!

எனக்கு காதலியென்றொருத்தி
கற்பனையில் வீற்றிருந்தாள்
சற்று முன் தான்.. அவளை
என் ஞானத்தால் எரித்துப் போட்டேன்...!

இப்படி உறவென்றும், நட்பென்றும்
அறிவென்றும், கடவுளென்றும், கல்வியென்றும்
கூடிக் கிடந்த குப்பைகளெல்லாம்
ஒவ்வொன்றாய் அழித்தே விட்டு
எச்சமாயிருந்தது ஒன்றை
நான் உற்று நோக்க....
பல்லிளித்துக் கொண்டு
என்னைப் பார்த்து சிரித்தது...
ஜென்மங்களாய் தொடர்ந்த
அகங்காரம்...
ஒரே வீச்சில் அதையும்
கொன்றே போட்டேன்.....!!!!

நானென்ற யாருமில்லை...
இப்போது!

தேவா. S

Comments

Mohamed Faaique said…
ஏன் அண்ணா இந்த கொலை வெறி... ஏதாவது ஒன்றையாவது விட்டு வைக்க இருந்தது,.....
Harini Resh said…
எல்லாம் கலைந்த பின் நானொன்றும் இல்லை
அருமை அண்ணா
நல்ல கவிதை தேவா
வாழ்த்துக்கள்.

.

.
உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்... நன்றி... சுட்டி இதோ... http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_05.html