Skip to main content

எனக்கு ரஜினி பிடிக்கும்....!

















எனக்கு ரஜினி பிடிக்கும். எனக்கு ரஜினி பிடிக்கும். எனக்கு ரஜினி பிடிக்கும். எனக்கு மட்டுமல்ல என்னைப் போல கோடாணு கோடி பேருக்குப் பிடிக்கும். ஏன் பிடிக்கும் என்று கேட்கும் நாக்குகளுக்கு வார்த்தைகளை கொடுத்த மூளைகள் எல்லாம் மனிதர்கள் ஜனித்த பிண்டங்களுக்கு உரியதா? இல்லை இரும்பில் வார்த்தெடுத்து இயக்கங்கள் கொடுக்கப்பட்டதா?

ஒரு மனிதனைப் பிடிக்க ஓராயிரம் காரணம் தேவையில்லை. இது மனம் சம்பந்தப்பட்ட விசயம். அறிவுகளின் செழுமையில் சில வக்கிர குரல்கள் தன்னின் சப்தங்களை உயர்த்தி ரஜினியை ஏன் இப்படி சீராட்டுகிறார்கள்? தமிழகம் ஏன் தடம் புரண்டு கொண்டு இருக்கிறது? அவர் ஒரு சுயநலவாதி, எந்த போராட்டத்தில் ஈடு பட்டார்? அவரின் தாடி ஏன் நரைத்திருக்கிறது, தலையில் முடியற்று விக் வைத்து நடிக்கிறார் என்றெல்லாம் சொல்லி தம்மின் கேவலமான மனோநிலைகளை வெளிப்படுத்தி தாமெல்லாம் பைத்தியக்காரர்கள் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அடக் கேவலங்களே! எமக்கு ரஜினையைப் பிடிப்பதில் உமக்கு என்ன சிரமம்? முவ்வேளையும் நீவீர் உண்ணும் சோற்றுப் பருக்கைகளை வயிற்றுக்குச் செல்ல விடாமலா நாங்கள் தடுத்தோம். ஒரு மனிதன் இன்னொரு மனிதனை நேசிக்க வேண்டுமெனில் நீசர்களின் வரலாற்றில் அந்த மனிதர் எங்காவது தெருவில் அமர்ந்து போராடியிருக்க வேண்டும். இல்லையே அரசியல் செய்து மீடியாக்களின் முன் தன்னைப் பற்றி மற்றவர்களை பேச வைத்திருக்க வேண்டும். இல்லையேல் பெரும் தலைவராய் இருக்க வேண்டும்.

இப்படி எல்லாம் இல்லாமல் சக மனிதனை ஒரு நடிகனை நேசித்து விடவே கூடாது. திரையில் யாம் பார்த்த ஒரு நடிகனுக்கு உடல்நிலை சரியில்லை என்பதை கண்டு நாங்கள் கலங்கினால் உமக்கு ஏளனம்??? கிண்டல், கேலி.......

வெட்கங்கெட்ட தேசத்தில் வெறிநாய்களை எல்லாம் தலைவர்களாக்கி ஆட்சி போகத்தில் அமர அனுமதி கொடுத்து விடுவீர்கள். அண்டை தேசத்தில் தமிழனின் உயிரை எல்லாம் சூறையாட துணை போன தேசிய கட்சிகளுக்கு எல்லாம் வெட்கங்கள் அற்று போய் ஓட்டுப் போட்டு வாழ்க ஒழிக என்று கத்துவீர்கள்? ஆனால் தான் ரசித்த தான் நேசித்த ஒரு நடிகன் உடல் நலம் குன்றிப் போய் நா தழு தழுத்து பேசும் வேளையிலும் கூட நான் காசு வாங்கிக் கொண்டுதான் நடிக்கிறேன் என்னை ஏன் இவ்வளவு சீராட்டுகிறீர்கள் என்று தன் மனசாட்சிப் படி பேசினால் அவரை ஏசுவீர்கள்?

தமிழத்தை காக்க வந்த தேவ தூதுவர்களுக்கு உங்களின் மூளைகளை கசக்கிக் கொண்டு உலக தத்துவ நூல்களை எல்லாம் வாசித்து விவாதி விட்டு நீங்கள் கொடி பிடியுங்கள், கோஷமிடுங்கள், உண்ணாவிரதம் இருங்கள் யாரும் தடை சொல்லவில்லை ஆனால் எம்மைப் போன்ற மனிதாபிமானமுள்ள மனிதர்களை தான் நேசித்த மனிதரின் நலனுக்காக இரண்டு சொட்டு கண்ணீர் விட விடுங்கள்.

உங்களின் டப்பாங்குத்து ஆட்டத்தை எல்லாம் எமது சோகமான நேரத்தில் போடக்கூடாது என்ற அடிப்படை மனித நேயம் அற்றுப் போன மரப்பாச்சி பொம்மைகளே...! உமது வீட்டிலும் ஒரு சோகம் வரும் அப்பொது யாரேனும் மத்தளம் வாசித்து ஆடுவார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனை நேசிக்க அறிவும் ஆராய்ச்சியும் தேவையில்லை ஜடங்களே...! தான் நேசிக்கும் அந்த மனிதன் அடுத்தவருக்கு தொந்தரவு அற்றவராக தமக்குப் பிடித்தவராக இருந்தால் மட்டும் போதும்....! ரஜினி வயாதாகியும் நடித்துக் கொண்டிருப்பதால் உமது மாத சம்பளத்தில் ஏதேனும் பிடித்துக் கொள்கிறார்களா? இல்லை நீவீர் சோற்றை அள்ளி வாயில் வைக்கும் போது வலக்கை வாய்க்குச் செல்லாமல் காதுக்கு செல்கிறதா? எது உமது பிரச்சினை?

உமது பிரச்சினையெல்லாம் ஆழ்மனதில் உமக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மை என்று கருதிக் கொள்ளலாம் என்று பார்த்தால் இது அதையும் மீறி உம்மை பிரபலப்படுத்த நீவீர் செய்யும் தெருக்கூத்து என்பதும் தெளிவாய் புரிகிறது.

ஒரு மனிதனுக்கு முடியாவிட்டால், உடல்நலன் குன்றியிருந்தால் பதறக் கூட வேண்டாம் ஆனால் ஒரு வருத்தம் கூட இல்லாமல் அந்த மனிதனை விமர்சிப்பது எல்லாம் மானிடப் பதர்கள் எனக் கொள்ளலாமா? எங்கே இருந்து முளைக்கிறது உமக்கு கேவல கொம்புகள்? காலம் எல்லாவற்றையும் செதுக்கிப் போட்டு விடும்.. என்ற சிற்றறிவு கூட அற்றுப் போய் ரஜினியைப் பற்றி தாறுமாறாய் விமர்சிக்கும் ஒரு போக்கிற்கும், மனிதர்களுக்கும் இந்த கட்டுரை கடும் கண்டனங்களை ஆழமாகப் பதிந்து....

ரஜினி என்னும் ஒரு மனித நேயம் கொண்ட மனிதன் எல்லா உடல் நலக் குறைவுகளிலும் இருந்து விடுபட்டு வெளிவந்து தன் குடும்பத்தாரோடும், தன்னை நேசிக்கும் ரசிக்கும் மனிதர்களுக்கு நடுவே நீ டூடி வாழ்க என்று ஏக இறையிடம் எமது பிரார்த்தனைகளையும் மானசீகமாக சமர்ப்பிக்கிறது.

தேவா. S


Comments

நலம் பெற பிரார்த்தனைகள்.
Anonymous said…
nalla maatukku thaan oru soodu. intha janmanagal ellam maname illamal biranthirukindrana. Eppodhum puratchi vaadham endra peyaeil karththu sollum punnakukal manitha banbai kalatti vaiththu vittu varththai vanmuraiyilum, karuthu solrennu vegu janaththai muttl endru koovuvathile thaan athi puthtisali thanaththai kattuvaargal
Kousalya Raj said…
அடிப்படை மனித நேயம் கூட இல்லாத மனித பதர்கள்...! தங்களுக்கு பாபுலர் கிடைக்கணும் என்று எதை வேண்டும் என்றாலும் பேசுவார்கள் எழுதுவார்கள்.

உங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சரியான சாட்டை அடி போல் இருக்கிறது. நன்றிகள்.

அவர் நன்முறையில் பூரண குணமடைந்து திரும்பி வர என் பிராத்தனைகளும் !!
வினோ said…
/ ஒரு மனிதனுக்கு முடியாவிட்டால், உடல்நலன் குன்றியிருந்தால் பதறக் கூட வேண்டாம் ஆனால் ஒரு வருத்தம் கூட இல்லாமல் அந்த மனிதனை விமர்சிப்பது எல்லாம் மானிடப் பதர்கள் எனக் கொள்ளலாமா? /

அண்ணா உண்மை தான்... அவர்கள் எல்லாம் பதர்கள் தான்... அவர் நலம் பெற பிரார்த்தனைகள்...
//அதையும் மீறி உம்மை பிரபலப்படுத்த நீவீர் செய்யும் தெருக்கூத்து என்பதும் தெளிவாய் புரிகிறது.//

this is the reason nothing else
Anonymous said…
சரியான சாட்டை அடி.
நலம் பெற வேண்டும் - ரசிகன்.
Anonymous said…
well said ... did u read the one by laooon....tharani..... idiotic person.... just amessage for these so called knowledgeable persons.... leave rajini&his fans.... we know to take care of ourselves...... talivar will be back s
Angel said…
அருமையான பதிவு .எனக்கும் அவரை பிடிக்கும் .
இப்ப இன்னும் இன்னும் அதிகமா ..சீக்கிரம் சுகம் பெற பிரார்த்திக்கிறேன் .
pozhuthupoku said…
அவர் நலம் பெற வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.. ஆனால் உங்களை போன்ற ரசிக பெருமக்கள் என்று அவரது படத்தை ரசிக்க மட்டும் செய்துவிட்டு அவருக்கு சொம்பு தூக்கும் வேலையை நிறுத்துகீறீர்களோ அன்றே உங்களை மற்றவர் கலாய்ப்பது நிற்கும்.. இதுவே அனைவரும் விரும்புவது...
//ஒரு மனிதன் இன்னொரு மனிதனை நேசிக்க அறிவும் ஆராய்ச்சியும் தேவையில்லை ஜடங்களே...! //

...ரொம்ப சரியா சொன்னிங்க..!

//தான் நேசிக்கும் அந்த மனிதன் அடுத்தவருக்கு தொந்தரவு அற்றவராக தமக்குப் பிடித்தவராக இருந்தால் மட்டும் போதும்....! //

...முற்றிலும் உண்மை..!

//ரஜினி வயாதாகியும் நடித்துக் கொண்டிருப்பதால் உமது மாத சம்பளத்தில் ஏதேனும் பிடித்துக் கொள்கிறார்களா? இல்லை நீவீர் சோற்றை அள்ளி வாயில் வைக்கும் போது வலக்கை வாய்க்குச் செல்லாமல் காதுக்கு செல்கிறதா? எது உமது பிரச்சினை?//

...நல்லாக் கேளுங்கங்க.. எவ்ளோ நக்கலா, தேவை இல்லாத விமர்சனம் பண்றாங்க.. எரிச்சலா வருது அதை எல்லாம் பார்த்தா..

ஓவர் ஆக்டிங் பண்ணாம... ஒழுங்கா தான் உண்டு தன் வேளை உண்டுன்னு இருக்கற.. ரஜினி.. உடல் நலம் சரி ஆகி.. நீண்ட நாள் ஆயுளோடு இருக்கணும்னு.. மனதார வேண்டிக்கிறேன்..!!
இன்னும் பல்லாண்டு காலம் வாழ்க ரஜினி ...
ஒரு உண்மையான பதிவு ..உங்கள் கருத்துகள் மிக அருமை....தலைவரை விமர்சிக்கும் பதர்களுக்கு ஒரு பெரிய சவுக்கடி ...
Unknown said…
மாப்ள உண்மைதான்....சீக்கிரத்துல எழுந்து வருவார் விஸ்வரூபத்துடன் நன்றி!

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...